Monday, 30 July 2012

வாழ்வில் திருமணம் தரும் நறுமணமா ? -ஒரு இஸ்லாமிய பார்வை....


வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்" என்று ஒரு பழமொழி உண்டு.
 இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது
 உண்மையாகவே இருக்கின்றது.சொந்த வீட்டையாவது கட்டி 
முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், 
திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா?
"ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது மற்றொரு
முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான்.

ஆனால், பிரமச்சரியம் கலங்கிய நீர்க் குட்டிக்கு நிகரானது. அதாவது, பழத்தின்
உள்ளே வாழும் வண்டுபோலானது. ஆனால், மணம் முடிப்பவனோ தேனிக்கு
நிகரானவன். அவன் தனக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறான். எனவே, ஒரு
 மனிதன் தனித்து வாழ்வதை விட மண முடித்து வாழ்வது சிறப்பு என்று
 சான்றோர் கூறுவார்.

இவ்வாறு திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிய போதிலும்
நமது மார்க்கக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, இறைவன் மனிதனை
 மிக மேலான வடிவத்தில் படைத்து, அவனை தன் பிரதிநிதியாக்கி, அவன்
மீது தன் அருட்கொடைகளை அனைத்தையும் வாரி வழங்கினான்.
 மனிதனுடைய நலனுக்காக மனித குளத்தை வாழ வைப்பதற்காக
அவனின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதற்காக அழகின் திருவுருவாக,
 அன்பின் இருப்பிடமாக பெண்ணையும் தோற்றுவித்தான்.
அதனால்தான், பெண்மை அழகானது, மேலானது என்று ஆங்கில கவிஞன்
மில்டன் வாயாரப் புகழ்கின்றான். நம் தமிழ் மொழியிலும் ‘பெண்’ எனும்
 சொல்லுக்கு ‘அழகு’ எனும் பொருள் இருப்பதை காணலாம். இல்லறம்
எனும் பூஞ்சோலையில் பிரதானமாக ஐவகை நறுமணங்கள் வீசுகின்றன
என்று உளவியல் மேதை சங்கைக் குரிய இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்கள் தனது ஒப்பற்ற இலக்கியமான இஹ்யாவுலூமித்தீனில்
வரைந்திருக்கின்றார்கள்.


1. மக்கட் செல்வம்
2. புலனிச்சை அடக்குதல்
3. மகிழ்ச்சி
4. குடும்பச் சுமை குறைதல்
5. நிர்வாகம் கற்றல் என்பனவாகும்.

1. செல்வத்தில் சிறந்த செல்வம் விலைமதிக்க முடியாத குழந்தைச் செல்வமாகும்.
 ஒரு மனிதனின் அமல்கள் (நற் செயல்கள்) அவனது மரணத்துடன்
 முடிந்துவிடுகின்றனவென்றாலும் அவன் செய்த நித்தியா தருமம்,
பயன் தரும் கல்வி, துஆச் செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றும் மரணத்தின்
 பின் அவனது அமல்களாக பயன் தருகின்றன என்ற நபிமொழி வழியாய் தமக்காக
 துஆச் செய்யும் குழந்தைகளை விட்டு செல்வதற்கு இத்திருமணம்
துணை செய்கின்றது.

2. திருமணம் கண்ணையும் கற்பையும் காக்கும் கோட்டை. அது நம்மைத்
தவறில் செல்லவிடாது தடுக்கும் அரண். "திருமணம் புரிந்தவர் தமது அற வாழ்வில்
ஒரு பகுதியை காத்துக் கொள்கிறார். இனி, அவர் எஞ்சியிருக்கும் பகுதியில்
 இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளட்டும்" என நம் பெருமானார் ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

3. திருமணத்தால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தன் மனைவியுடன்
கனிவாய்ப் பேசும்பொழுது மனம் மகிழ்வடைகிறது. மனம் எப்பொழுதும்
ஒரு நிலையிலிருப்பதில்லை. அது சிலவேளை குழம்பிப் போகும்.
அவ்வேளை தன் கனிவான பெண்ணுடன் கலந்துறவாடும் போது அளவிலா
ஆனந்தம் பெரும். எனவேதான் முத்தகீன்களெனும் பக்திமான்கள் மார்க்கம்
அனுமதித்திருக்கும் மகிழ்ச்சிகளிலும் ஈடுபடுவது அவசியமாகின்றது
என்கின்றனர். இக்கருத்தையே இறைவனும் தன் திருமறையில்
 "லியஸ்குன இலைஹா" அவளிடம் அமைதி பெரும் பொருட்டே துனைவியைப்
படைத்ததாக திருவுளமாகிறான்.

4. திருமணத்தால் குடும்பப்பாரம் குறைகிறது. சமைப்பது, பெருக்குவது, விரிப்பது,
துலக்குவது, வாழ்க்கைத் தேவைகளுக்கு இன்றியமையாத சாமான்களை சேகரிப்பது,
இலலத்தின் பாதுகாப்பு போன்ற காரியங்களிலிருந்து ஆண்களுக்கு விடுதலை
கிடைக்கிறது. ஒரு கணவன் வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும்
மேற்கொள்கையில் அவனின் பொன்னான நேரங்கள் அதிலேயே கழித்துவிடும்.
சமுதாய தொண்டு புரிவதற்கோ, கற்றபடி அமல செய்வதற்கோ சந்தர்ப்பம்
வைக்காமல் போய்விடும். இவ்வகையில் அவன் தனக்கொரு வாழ்க்கைத்
துணைவியைத் தேர்ந்தேடுப்பத்தின் மூலமே வெற்றி பெற முடியும்.

5. திருமணம், நிர்வாகத் திறமையினைக் கற்பித்துக் கொடுக்கிறது. தலைமை
பதவிக்கு நம்மை தயார் செய்கிறது. மனைவிக்கு செலுத்தவேண்டிய
கடமைகளில் கண்ணுங்கருத்துமாய் இருந்தாலும் அவள் பண்பறிந்து நடத்தலும்,
 அவளிழைக்கும் துன்பங்களை சகித்தலும், தம் மக்களுக்கு ஒழுக்கம் கற்பித்தலும்,
 அவர்களை சன்மார்க்க வழிநடத்த முயற்சித்தலும், அவர்களுக்காக தர்ம வழி நின்று
 பொருளீட்டலும் மகத்தான நிர்வாகங்கலாகும். நீங்கள் ஒவ்வொருவரும்
 நிர்வாவிகள், உங்கள் நிர்வாகம் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

" ஸாலிஹான நற்குனமுள்ள மனைவி சாபத்திற்குரிய துன்யாவைச் சார்ந்தவள்
 அல்ல, அவள் உனக்கு பரலோக காரியங்களில் துணை செய்பவளாவாள்" என்று
மகான் அபூமுச்லிம் தாரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருளுகிறார்கள்.
"ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதன்" எங்கள் இறைவனே! இகத்திலும்
எங்களுக்கு நன்மையைத் தந்தருள்வாயாக! எனும் இப்பிரார்த்தனையில்
கூறப்பட்டிருக்கும் ‘ஹஸனா’ எனும் பதத்திற்கு நற்குணமுள்ள மனைவி
 என்று மகான் கஃபுல் கர்ழி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பொருள்
 செய்திருக்கிறார்கள்.

"உங்களில் ஒவ்வொருவரும் நன்றியுணர்ச்சியுள்ள இதயத்தையும் தியானத்தில்
நிலைத்திருக்கும் நாவையும் பரலோக காரியங்களில் துணை நிற்கும்
நட்குனமுள்ள மனைவியையும் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக!" என்பது
நபிமொழியாகும்."ஒருவன் தன் மனைவிக்காக செலவிடுவது தர்மம்.
அவர் அவளின் வாயின்பால் உயர்த்தும் ஒவ்வொரு கவளத்திற்கும்
 நன்மை நல்கப்படும்" என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். திருமணம் புரிவது அவசியம் என்பது
தெளிவாகிவிட்டது. இனி, நாம் தேர்ந்தெடுக்கும் மணமகள் மார்க்க ஒழுக்கம்,
 குணம், அழகு, குழந்தை பெறும் தகுதி, வம்சம் இவைகளை கவனித்தல்
அவசியமாகும். மனமகளின் குண, நலன்களை கவனியாது அழகையே
 பிரதானமானதாக கவனிப்பதில் அநேக கெடுதிகள் விளைகின்றன.

மனைவி ஒழுக்கமற்றிருப்பின் கணவன் மனநிம்மதியற்று துன்பப் புயலில்
 துவண்டு தவிக்கும் பலரைப் பார்க்கலாம். தீய குணமுடைய மனைவியால்
 குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுவதையும் காணலாம். இப்பிரச்சினைகள்
 நிகழாதிருக்கவே மனுக்குல மகுடம் மா நபி திலகம் ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதற்கு என்ன கூறினார்கள் தெரியுமா?
 "ஒரு ஆடவர் அழகுக்காக, பொருளுக்காக, குடும்பத்திற்காக, சன்மார்க்க
ஒழுக்கங்களுக்காக ஓர் பெண்ணை மணந்து கொள்வதுண்டு. ஆனால்,
நீர் சன்மார்க்க ஒழுக்கமும் பண்புடையவளையே தேர்ந்தெடுத்துக்
கொள்வாயாக" எனக் கூறினார்கள். (நூல்: இப்னுஹிப்பான்)

"பெருமைக்காகப் பெண் கொள்வோருக்கு அல்லாஹ் இழிவையே தருகிறான்.
 பொருளுக்காக மண முடிப்போர்க்கு வறுமையை அதிகரிக்கிறான். அவளின்
அழகுக்காக மணமுடிப்போருக்கு தாழ்வையே தருகிறான். ஆனால்,
தன் பார்வையைக் கட்டுப்படுத்தி தன் கற்பையும் காத்துக் கொல்வதற்காகவும்,
சுற்றத்தாரை தழுவி நடப்பதற்காகவும் மண மன முடிப்பவர்க்கு அல்லாஹ்
அவளில் அவருக்கு நிம்மதி, சந்தோஷத்தையும், அவரில் அவளுக்கு நிம்மதி,
 சந்தோஷத்தையும் அளிக்கிறான்" என்று நம் பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தபரானி)
உங்கள் சிந்தனைக்கு ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டலாம் என
விரும்புகின்றேன். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபா
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு நாள் நள்ளிரவில் நகர சுற்றி
வருகையில் குடிசை ஒன்றில் இருவர் பேசிக் கொள்ளும் சப்தம் கலீபா
அவர்களின் காதில் விழுந்தது. இவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று
கவனிக்கையில், இப்பாலில் சற்று நீர் கலந்து விற்பனை செய்தால்
கூடுதலான இலாபம் கிட்டும் என்று தாய் கூற, கலீபா அவர்கள்
 கண்டுபிடித்துவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று மகள் கூறினாள்.

இந்நேரத்தில் கலீபா அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கவா போகிறார்?
என்று மீண்டும் தாய் கூற, அதற்கு மகள் இல்லை தாயே! கலீபா அவர்கள்
 நம்மை பார்க்கா விட்டாலும் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்
கொண்டிருக்கிறான் அல்லவா! எனப் பதிலளித்தால். இச்சம்பாஷனை
 கலீபா உமர் ரலியல்ல்ஹு அன்ஹு அவர்களை பெரிதும் கவர்ந்தது.
 குடிசையில் வாழும் இளம் பெண்ணின் இறை பக்தியையும், நற்குண
 சீலத்தையும் நினைத்து பூரிப்படைந்தார்கள்.
பொழுது புலர்ந்ததும் தாயும் மகளும் கலீபா அவர்களின் தர்பாருக்கு
அழைத்து வரப்பட்டார்கள். கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள், தம் புதல்வர் ஆஸிமை அழைத்து இப்பெண்ணின் நற்குணத்தையும்
 இறைபக்தியையும் பாராட்டி, இப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு
பணித்தார்கள். புதல்வரும் சம்மதம் தெரிவிக்க, தாயும் மகளும்
மனமகிழ்ந்தார்கள். திருமணமும் நடந்தேறியது. பிற்காலத்தில் இத்தம்பதிகளின்
 வழித்தோன்றலாகவே உலகம் போற்றும் உத்தமர் சங்கைக் குரிய உமர் இப்னு
 அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவதரித்தார்கள்
 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொகுப்பு :மு.அஜ்மல் கான் .

ஜகாத் வருடா வருடம் வழங்க வேண்டுமா ? ஏன்? -ஒரு இஸ்லாமிய பார்வை




ஒரே பொருளுக்கு வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்.....

'ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்பட வில்லை. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என ஒரு ஹதீஸை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்' என சவால் விட்டுப் பேசி வருகிறார்கள்.

ஒரு லட்சம் என சவால் விட்டுப் பேசி விட்டதால் அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாக அர்த்தமாகிவிடாது. வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு ஹதீஸை எடுத்துக் காட்டியப் பின்பும் அதனைப் பலவீனம் எனக் கூற காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களின் போலித் தனத்தை காட்டுகிறது.


ஜகாத் கொடுங்கள்!..

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ) (البقرة:110)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஜகாத்தை வழங்குங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயம் அல்லாஹ் பார்க்கிறான். (2:110)

தொழுகையைப் பற்றிக் கூறப்படும் வசனங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே கூறப்படுகிறது. 
ஆனால், எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற அளவு காலம் பற்றி குறிப்பிடாமல், ஜகாத் கொடுங்கள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனினும், ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்), எவ்வளவு வழங்க வேண்டும், (சதவிகிதம்) எப்போது வழங்க வேண்டும் ஆகிய அனைத்திற்கும் இறைத்தூதர் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். 

அளவு நிர்ணயம்...

ஒருவன் மீது ஜகாத் கடமையாவதற்கான செல்வத்தின் உச்ச வரம்பை நிஸாப் என்று கூறப்படும். வெள்ளி, விளைபொருள், கால்நடை ஆகிய ஒவ்வொன்றிற்கும் நிஸாபை தீர்மானித்து தெளிவுபடுத்திய நபி மொழிகள் ஏராளம். அவற்றில் சில!


 1459- عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ  رضى الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ e  قَالَ « لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ »رواه البخاري

"ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை. ஐந்து ஊக்கியாக்களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில் ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1459)

'வஸக்' என்பது அறுபது ஸாவ் ஆகும். ஒரு ஸாவ் என்பது 2.156 கி.கிராம். இதன்படி ஐந்து வஸக் என்பது 5 x 60 x 2.156 = 646.8 கி.கிராம். அதாவது விளை பொருளில் ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) சுமார் 650 கிலோ ஆகும்.

'ஊக்கிய' என்பது 40 திர்ஹங்களாகும். ஒரு திர்ஹம் என்பது சுமார் 2.975 கிராம். 
ஐந்து ஊக்கிய என்பது:
5 x 40 x 2.975 = 595 கிராம்.

இதன்படி, வெள்ளியில் ஜகாத் கடமையாவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) 595 கிராம் ஆகும். 
(யூசுப் கர்ழாவி அவர்கள் எழுதிய 'ஃபிக்கு ஜகாத்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட நவீன கால அளவுகளாகும் இவை. அளவுகள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இவ்வளவின் விபரத்தை பதிவு செய்துள்ளார்.) விளைபொருள் 650 கிலோவுக்கும் வெள்ளி 595 கிராமிற்கும் குறைவாக ஒருவனிடம் இருந்தால் அப்போது ஜகாத் கடமையில்லை. இந்த அளவும், இதைவிட கூடுதலாகவும் ஒருவனிடம் இருந்தால் அப்போது அவன் மீது ஜகாத் கடமையாகும்.

ஆடு, மாடு ஆகியவற்றில் ஜகாத் கடமையாவதற்கான குறைந்தபட்ச அளவினை (நிஸாபை) விவரிக்கும் நபி மொழிகள் ஏராளம் உண்டு. அதனை இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதனை இங்கு குறிப்பிட வில்லை.

எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும்?

ஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.

1483 عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ - رضى الله عنه عَنِ النَّبِىِّ e  قَالَ « فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ » رواه البخاري.
"மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)

1454- أَنَّ أَنَساً حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه كَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ « هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِى فَرَضَ رَسُولُ اللَّهِ e عَلَى الْمُسْلِمِينَ ، وَالَّتِى أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ ، فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا ، وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ....... ، وَفِى الرِّقَةِ رُبْعُ الْعُشْرِ ، فَإِنْ لَمْ تَكُنْ إِلاَّ تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا شَىْءٌ ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا » .رواه البخاري 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
.... வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளன் நாடினாலே தவிர ஜகாத் இல்லை.' என்று இருந்தது (புகாரி:1454)

எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்?

மேற்கண்ட வெவ்வேறு நபிமொழிகளில், பல்வேறு பொருட்களின் ஜகாத்திற்கான நிஸாப், மற்றும் எத்தனை சதவிகிதம் வழங்கப்பட வேண்டும் என்ற விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எப்போது வழங்க வேண்டும் என்பதற்கான விளக்கம் வேறோரு நபிமொழியில் அளிக்கப்பட்டுள்ளது. 

قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحارث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري من غاضرة قيس قال قال النبيe  ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولا يعطي الهرمة ولا الدرنة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من وسط أموالكم فإن الله لم يسألكم خيره ولم يأمركم بشره ( رواه أبو داود )

"மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்துவிட்டார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை மட்டும் வணங்குவது, தன் செல்வத்திலிருந்து மன விரும்பி ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்து வருவது ..." என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூத், தப்ரானி, பைஹகி, புகாரி யின் தாரீக் அல் கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி.)

இந்நபி மொழியினை ஹதீஸ் கலை வல்லுனர்கள், குறிப்பாக இப்னு முலக்கின் அவர்களும், சமீபகால பேரறிஞர் அல்பானி போன்ற பலரும் ஸஹீஹ் எனக் கூறுகின்றனர். ஹஸன் என்ற தரத்தைவிடவும் சிறந்தது என சிலர் ஏற்றுள்ளனர்.

ثم كان مانقلت العامة عن رسول الله e  في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة (الرسالة)

"கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்." (அர்ரிஸாலா)

ஒவ்வொரு வருடமும் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்பதை இந்த சான்றுகள் உறுதி செய்கின்றன. 

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டாமா?

1. இறைவன் ஜகாத் கொடு என்று கூறுகிறான்.
2. ஒருவரிடம் நிஸாப் அளவு செல்வம் இருந்தால் அவர் ஒவ்வொரு வருடமும் தன் செல்வத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் ஜகாத் வழங்க வேண்டும் என இறைத்தூதர் கூறியுள்ளார்கள். 

இச்சான்றுகளின் அடிப்படையில், ஒருவனிடம் நிஸாப் அளவு செல்வம் இருக்கும் காலமெல்லாம் அவன், தன் வசமுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் வருடா வருடம் ஜகாத் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இறைத்தூதருடன் வாழ்ந்த நபித்தோழர்கள், ஹதீஸ் கலையின் அறிஞர்கள், (அவசியப்படும் போது மாபெரும் இமாம் என இவர்கள் கூறிக் கொள்ளும்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக் ஆகியோர் சுருக்கமாகச் சொல்வதானால் உலகமே இவ்வாறுதான் புரிந்து கொண்டுள்ளது. எனவே, இதற்கு மாற்றமாக, ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என யார் கூறி னாலும், அவர் தன் கருத்துக்கு சான்றுகள் தரவேண்டும். 

'ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும்' என இறைவன் கூறியதாகவோ, இறைத்தூதர் கூறியதாகவோ ஒரு சான்று கூட தராமல், தான் புரிந்து கொண்டது போல்தான் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் எனப்பேசி வருவது அறிவுடையோர் கருத்தாக இருக்க முடியாது.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

ரமலானின் மூன்று பகுதிகள்....


புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகைகடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,
நோன்பு நோற்றல்குர்ஆன் ஓதுதல்இறைவனை நினைவு கூர்தல்தர்மம் செய்தல்,சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றதுரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள்பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து,பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.
இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல்அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டுஅதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால்இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றதுஇந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்'எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191.
முதலாவது பத்து.....
மேற்கொண்ட ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு 
முதலாவது பத்து நாட்களில்,அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர்பொருள்இதர செல்வங்கள்கல்விஅறிவுஆற்றல்கள்திறமைகள்பார்வைசெவிபுலன்நுகர்தல்உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்எனும்இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாதுஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.
இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டுகல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டுஉடல் அழகுவலிமைதிறமைஆற்றல்கள்அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம்ஈமான் (இறைநம்பிக்கைமற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.

இரண்டாவது பத்து ...
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள்சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்துஅவற்றைப் பற்றி மனம் வருந்திமீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்எனவே (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப)வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)
ம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்துமனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால்மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாதுநிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.
"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்என்று ஜிப்ரீல் (அலைஅவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறதுஇதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:
"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்கூறினார்கள்நாங்கள் அவ்வாறு சென்றோம்அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்என்றனர்இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்என்றனர்மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம்அதற்கு நபி (ஸல்அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலைவந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்தூரமாகட்டும்"என்றார்கள்நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்தூரமாகட்டும்என்றார்கள்நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்துயார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்தூரமாகட்டும்என்றார்கள்நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்ஹாகிம்).

மூன்றாவது பத்து.....
மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில்முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.
அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்.அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறுதோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாகஅனுபவிப்பதற்கெனஅவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.
திண்ணமாகநரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக!அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர்அங்குகுளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிரஅவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து)வாழ்ந்தனர்மட்டுமின்றிநம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர்ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம்எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)
நபிமொழி
"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்ஓதினார்கள்பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்)ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும்(நரகவாசிகளின் நிலைஎப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.றிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீநஸயீஇப்னுமாஜா
நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும்.அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்கூறினார்கள்.றிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரிமுஸ்லிம்திர்மிதீ
நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்
றிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரிமுஸ்லிம்திர்மிதீ
இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும்,மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல்செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.
மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:
முஃமின்களேஉங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரகநெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும்அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்இருக்கின்றனர்அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.
உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன்பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்நபி (ஸல்அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்துநமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும்நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே!நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கியவழங்கிடும் கருணையாளன் அவனேகஷ்டங்கள்,நோய்கள்துயரங்கள்சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனேஎன்றும்அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள்குறைகள்பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனேஎன்றும் முறையாக உள்ளத்தால் நம்பிஎல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும்மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாது காப்பும் தேடவேண்டும்.
எங்கள் இறைவனேஎங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாகமறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாகஇன்னும் எங்களை (நரகநெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)
அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும்அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும்.இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம்.எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும்அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான்பார்க்க (97 :3)
அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான்.ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும்அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும்நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.
நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா?அதற்காக முறையாக நபி(ஸல்வழியில் முயன்றுள்ளோமாஅதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமாஎன்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும்இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்நபி (ஸல்அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள்பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள்பிறகு சொன்னார்கள்நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன்பிறகு நடுப்பத்தில் இருந்தேன்பிறகு எனது கனவில் வானவர் தோன்றி,அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார்உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள்மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி(ஸல்அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல்நாம் முயல வேண்டும்இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும்நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தானஇந்த 'இஃதிகாப்இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.
நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம்அல்லாஹ்வே நன்கறிவான்ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள்காலணிகள்அணிகலன்கள்வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்படலைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது.அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாதுஇம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றிகடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள்நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பிஅந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
நபி(ஸல்அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும்நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.அறிவிப்பவர்ஆயிஷா (ரலிநூல்முஸ்லிம்.
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்இரவை (அல்லாஹ்வைத் தொழுதுஉயிர்ப்பிப்பார்கள்அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். றிவிப்பவர்ஆயிஷா(ரலிநூல்கள்புகாரிமுஸ்லிம்.
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பதுஎன்று வினவினேன்அதற்கு நபி(ஸல்அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்இறைவா நீ மன்னிப்பவன்மன்னிப்பையே விரும்புபவன்எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)அறிவிப்பாளர்ஆயிஷா (ரலி), நூல்திர்மிதிநஸயீஇப்னுமாஜாஅஹமத்.
இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!
அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.