Sunday, 28 September 2014

சொத்து குவித்ததாக 4 ஆண்டுகள் சிறை பெற்ற முதலாவது முதல்வர் ஜெயலலிதா!! ஒரு சிறப்பு பார்வை....

ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை பறிகொடுத்த முதலாவது முதல்வர் ஜெயலலிதா என்ற "சாதனை" படைக்கப்பட்டுள்ளது..
.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த, அ.தி.மு.க.,வை இணைத்து, முதல்வரானார் ஜெயலலிதா. அதன் பின், ராணுவ கட்டுக்கோப்போடு, அ.தி.மு.க.,வை வழி நடத்தினார்.கடந்த 2001, சட்டசபை தேர்தலின் போது, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என, நான்கு தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

தண்டனை:

ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதி இருப்பதால், நான்கு இடங்களிலும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படி தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும், தமிழகம் முழுவதும், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க.,வுக்கு, ஆதரவு திரட்டினார். அதனால், அ.தி.மு.க., 132 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.அந்த நேரத்தில், 'டான்சி' நில பேர வழக்கில், மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வராக தேர்வு செய்ததை அடுத்து, அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.ஆனால், டான்சி நில பேர வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதாவை, முதல்வராக்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது' என, 2001 செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தது. அதனால், ஜெயலலிதா உடனடியாக பதவி விலகினார். புதிய முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

விசாரணை:

கடந்த 2011 தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக, ஜெயலலிதா முதல்வரானார். இந்நிலையில், அவர் முதல் முறையாக, முதல்வராக பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, அவருக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அதனால், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, சிறை சென்றுள்ள முதல் முதல்வராகி உள்ளார். மேலும், தமிழகத்தில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பதவியை இழக்கும் இரண்டாவது நபர் இவர்.இவருக்கு முன், சுடுகாட்டு கூரை வழக்கில், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி பதவியை இழந்தார்.நேற்றைய தீர்ப்பால், ஜெயலலிதாவின் பதவி இரண்டாவது முறையாக பறிபோவதோடு, இரண்டாவது முறையாக சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி இழந்த மக்கள் பிரதிநிதிகள்:

வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, 1990 - 91 காலக்கட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ரஷீத் மசூத். எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டில், முறைகேடாக பணம் பெற்று ஒதுக்கீடு செய்த வழக்கில், டில்லி சி.பி.ஐ., கோர்ட், கடந்த ஆண்டு செப்., 19ம் தேதி, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனவே,எம்.பி., பதவியை இழந்தார்.

லாலு பிரசாத் யாதவ், 1990ல் பீகார் முதல்வராக இருந்தார். அவர் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட், 2013 அக்., 3ம் தேதி, ஐந்தாண்டு சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதனால், அவரது எம்.பி., பதவி பறிபோனது.

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, கடந்த ஏப்ரலில், எம்.பி., பதவியை இழந்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு  சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால், எம்.எல்.ஏ., மற்றும் முதல்வர் பதவியை இழந்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு   உள்ள சொத்து பற்றிய தொகுப்பு !

1    போயஸ் கார்டன், பிளாட் எண் 50, தேனாம்பேட்டை    ரூ.1,32,009
2    ஸ்ரீநகர், ஆபீசர் காலனி, ஐதராபாத், ஆந்திரா    ரூ.50,000
3    இரண்டு பார்ம் ஹவுஸ்கள், ரங்காரெட்டி தாலுகா, பஷீராபாத் கிராமம்  மற்றும் ஜெட்டிமெட்லா, ஐதராபாத்    ரூ.1,65,058.50
4    ஆந்திர மாநிலம், மெகால் தாலுகா, பஷீராபாத் கிராமத்தில் 3.15 ஏக்கர் நிலம்    ரூ.13,254.50
5    தமிழகத்தின் செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் வேளாண் நிலம்    ரூ.17,060
6    சென்னை பட்டம்மாள் சாலையில் ஜெயலலிதா, சசிகலா பெயரில் கட்டிடம்    ரூ.5,70,039
7    சென்னை சாந்தோமில் சசிகலா பெயரில் ஆர்.ஆர்.பிளாட்ஸ்    ரூ.3,13,530
8    சென்னை அண்ணா சாலையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கட்டிடம்    ரூ.98,904
9    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.22,10,919
10    சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் ஜெயலலிதா பெயரில் 1,206 ச.அடி நிலம்    ரூ.1,05,409
11    சென்னை மவுன்ட் ரோட்டில் 1,856 சதுர அடி நிலம் ஜெயலலிதா பெயரில் பதிவு    ரூ.1,05,409
12    தஞ்சாவூர் மனம்புசாவடியில் 2,400 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ. 1,57,125
13    தஞ்சாவூர் நகரில் எச்.டி.சாலையில் 51 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.1,15,315
14    தஞ்சாவூர், எச்.டி. சாலையில் காலி நிலம் வாங்கி பதிவு    ரூ.2,02,778
15    திருச்சி பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமத்தில் 3,525 சதுர அடி நிலம்    ரூ.5,85,420
16    தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரகோட்டையில் 3.23 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி பதிவு    ரூ.75,210
17    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் 5,658 சதுரஅடி நிலம்    ரூ.5,28,039
18    சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் 1,407 சதுர அடி நிலம் பதிவு    ரூ.10,20,371
19    தஞ்சை மன்னார்குடியில் உள்ள ஹரிதரநதி மேற்கில் 25,035 சதுரஅடி நிலம் வாங்கி சசிகலா பெயரில் பதிவு    ரூ.6,78,000
20    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை புனிததாமஸ் கிராமத்தில் 4,664.60 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,05,428
21    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.2,98,144
22    ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ராதிகா நகரில் 222.92 சதுர அடி மற்றும்  நிலம் டெல்லி திவான்ஹால் பகிரத்பேலஸ்    ரூ.5,57,761
23    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (பவுண்ட்ரி) நிலம்    ரூ.2,13,68,152
24    தமிழக வீட்டுவசதி கழகம் சார்பில் இளவரசிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு    ரூ   2,35,813
25    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (ஒயர்) நிலம்    ரூ.90,17,089
26    சென்னை அபிராமபுரத்தில் நிலம், கட்டிடம்    ரூ.49,02,105
27    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 11.07 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.3,18,712
28    சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபம் சுதாகரன் பெயரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.38,51,000
29    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ஜம்ஸ்கோர்ட் 1,736 சதுர அடி நிலம் வாங்கியது    ரூ.1,60,572
30    சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு சசிகலா, சுதாகரன் பங்கு வாங்கிய தொகை    ரூ.84,21,000
31    வெலகாபுரம் கிராமத்தில் 45.22 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.40,25,023.70
32    சென்னை அடுத்த நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம் பதிவு    ரூ.9,60,520
33    சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் 5,430 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,96,150
34    சென்னை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் இளவரசி பெயரில் 63.94 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.14,01,600
35    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 2.56 ஏக்கர் நிலம் பதிவு    ரூ. 1,23,910
36    வடசென்னையில் 10.7 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.4,65,000
37    சென்னை டி.டி.கே. சாலையில் 2,150 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.57,00,000
38    சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம்நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,49,770
39    சென்னை சோழிங்கநல்லூரில் நிலம்    ரூ.3,75,000
40    சென்னை அடையாறில் கட்டிடம் வீடு    ரூ.5,70,200
41    சென்னை பசுல்லா சாலையில்    ரூ.9,30,600
42    சென்னை நுங்கம்பாக்கத்தில் 4,348 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.11,36,024
43    சென்னை அடுத்த சிறுதாவூரில் 3.30 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.93,475 
44    சென்னை வெட்டுவாங்கேணியில் 1 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.3,63,120  
45    சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 640 சதுர அடி நிலம்    ரூ.2,26,130
46    சென்னை தி.நகர், முருகேஷ் சாலையில் 4,800 சதுர அடி நிலம்    ரூ.33,44,040
47    சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் 900 சதுர அடி நிலம்    ரூ.9,95,670
48    சேரகுளம் மற்றும் வள்ளாகுளம் கிராமத்தில் 53.66 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.1,21,389
49    கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16.33 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,89,202
50    திருவேங்கடநகர் காலனியில் 520 சதுர அடி வீடு    ரூ.5,75,000
51    வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கத்தில் 37 சென்ட் நிலம் பதிவு    ரூ.1,24,540 
52    சென்னை டிடிகே சாலையில் 733 ச.அடி நிலம்    ரூ.59,28,050
53    சென்னை அடுத்த பையனூர் கிராமத்தில் 22.90 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.16,17,688
54    சென்னை அரும்பாக்கத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150
55    பரமேஸ்வரி நகரில் 4,564 சதுர அடி நிலம்     ரூ.34,20,160
56    சேரகுளம் கிராமத்தில் 144.28 ஏக்கர் நிலம்    ரூ.4,52,844
57    மீராகுளம் கிராமத்தில் 42.31 ஏக்கர் நிலம்    ரூ.95,740
58    வள்ளாகுளம் கிராமத்தில் 34 ஏக்கர் நிலம்    ரூ.78,801
59    சோழிங்கநல்லூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம்    ரூ.2,86,441
60    ஊத்துக்காடு கிராமத்தில் 27.98 ஏக்கர் நிலம்    ரூ.4,51,980
61    கலவை கிராமத்தில் 6.98 ஏக்கர் நிலம்    ரூ.25,833
62    வள்ளாகுளம் கிராமத்தில் 286 ஏக்கர் நிலம்    ரூ.6,57,169
63    சேரகுளம் கிராமத்தில் 122 ஏக்கர் நிலம் பதிவு     ரூ.4,64,997
64    மீராகுளம் கிராமத்தில் 326.15 ஏக்கர் நிலம்    ரூ.5,61,935
65    சென்னை அபிபுல்லா சாலையில் 4,293 சதுர அடி கட்டிடம்    ரூ.43,56,142
66    சென்னை அபிபுல்லா சாலையில் 3,472 சதுர அடி கட்டிடம்    ரூ.59,96,346
67    சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் 106.69 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,47,698
68    வண்டம்பள்ளியில் 27.57 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,88,076
69    வண்டம்பள்ளியில் ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனம் கட்டப்பட்டதின் செலவு    ரூ.14,00,806
70    ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் கட்டுமான பணி    ரூ.57,19,800
71    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன எம்.டி. பங்களா மதிப்பு    ரூ.83,41,000
72    சென்னை லஸ் அவென்யூவில் 6,798 சதுர அடி கட்டிடம்    ரூ.65,23,176
73    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன பங்கு வாங்கியது    ரூ.18,42,000
74    சென்னை அபிராமபுரத்தில் கட்டிடம் எழுப்பியதற்கு செலவிட்ட தொகை    ரூ.76,00,000
75    கோடநாடு தேயிலை தோட்டம் வாங்கியது    ரூ.7,60,00,000 
76    நீலாங்கரையில் 11 சென்ட் நிலம் பதிவு    ரூ.7,98,945
77    நீலாங்கரையில் 13 சென்ட் நிலம் பதிவு    ரூ.9,49,995
78    அரும்பாக்கம் கிராமத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150
79    தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் 26,540 சதுர அடி கட்டிடம் வாங்கியது    ரூ.19,03,088
80    ஊத்துக்கோட்டையில் 21.82 ஏக்கர் நிலம்     ரூ.3,13,553
81    வெலகாபுரம் கிராமத்தில் 41.10 ஏக்கர்    ரூ.80,394
82    பையனூர் கிராமத்தில் 4.27 ஏக்கர் நிலம்    ரூ.10,56,880
83    கடலூரில் உள்ள இண்டி-தோஹா கெமிக்கல் நிறுவன கட்டுமான பணிக்கு    ரூ.86,91,000
84    நீலாங்கரையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.80,75,000
85    நீலாங்கரையில் சசிகலா பெயரில் 11,197 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது    ரூ.5,72,910
86    பையனூரில் வாங்கிய பங்களா புதுப்பிக்க  செலவு செய்தது    ரூ.1,25,90,261
87    ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம்    ரூ.2,13,63,457
88    வெட்டுவாங்கேணியில் உள்ள கட்டிட புதுப்பிப்பு பணிக்கு    ரூ.1,52,59,076
89    ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்ட பண்ணை வீட்டில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.6,40,33,901
90    சிறுதாவூர் பங்களா புதுப்பிக்கும் பணிக்கு    ரூ.5,40,52,298
91    சென்னை போயஸ் கார்டன் வீடு புதுப்பிக்க    ரூ.7,24,98,000
92    சென்னை ஸ்ரீராம்நகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.29,59,000
93    சோழிங்கநல்லூரில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.80,36,868
94    சென்னை பட்டம்மாள் சாலையில் உள்ள கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டியதற்கு    ரூ.8,00,000
95    சென்னை தி.நகர், பத்மநாப சாலையில் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.20,43,000
96    சென்னை அண்ணாநகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.24,83,759
97    சென்னை தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம்    ரூ.10,92,828
98    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.53,11,000
99    சென்னை அக்கரையில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.20,38,959
100    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.39,34,000
101    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.14,17,538
102    சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு    ரூ.7,58,160.50
103    சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ் தொகை    ரூ.2,42,211.50
104    இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.167.20
105    சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.771.26
106     இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.85,342.25
107     வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.1,32,221
108     ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.19,29,561.58
109    இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.3.40,527.95
110    சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ்    ரூ.1,70,570.13
111    சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.2,900.28
112     சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,889.28
113    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.20,79,885.12
114    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,095.60
115    சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.3,17,242.21 
116    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996.    ரூ.47,453.64
117    சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ்    ரூ.3,17,457.64
118    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.61,430
119    ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,760
120    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,18,198
121    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.894.00
122    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.560.55
123    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.10,75,335.64
124    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா  சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.4,59,976.22
125    ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906    ரூ.167.55
126    சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.5,46,577.50
127     ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,838.00
128    ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.13,671.80
129    கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.146.70
130     ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.10,891
131    சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.1,02,490
132    சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,02,490
133     கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.10
134     லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.18
135    மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.358.70
136    ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.2,916.61
137     அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.2,05,151.06
138    ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.3,84,760.67
139    சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.2,43,000
140    ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு    ரூ.4,01,131
141    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு    ரூ.60,435
142    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு    ரூ.2,03,424.54
143     ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ்     ரூ.1,04,000
144     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு    ரூ.4,06,106
145    ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு    ரூ.1,76,172.60
146    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.3,85,520
147     ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு    ரூ.2,56,238
148     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன்    ரூ.2,81,169
149     ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப்    ரூ.1,04,000
150     சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார்    ரூ.3,80,376
151    சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.2,99,845
152     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118
153     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118
154    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு    ரூ.3,15,537
155    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு    ரூ.5,25,132
156     வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம்    ரூ.5,05,009
157    வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு    ரூ.2,96,191.28
158    நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு    ரூ.52,271
159     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99
160     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99
161    மெடல்சிங் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ள மாருதி கார்    ரூ.2,22,485.19
162    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் மதிப்பு    ரூ.2,03,979
163     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99
164    ஜெயா பப்ளிகேஷன் நிறுவன பெயரில் வாங்கியுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் கார் மதிப்பு    ரூ.9,15,000
165    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ வேன் மதிப்பு    ரூ.2,03,979
166    ஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை    ரூ.16,03,545
167    ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,49,544
168     ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி தொகை    ரூ.5,00.000
169     சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000
170    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000
171    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000
172    கோத்தரி ஓரியண்டல் பைனான்சில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,000
173    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000
174    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000
175     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.3,00,000
176    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.30,00,000
177    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.15,00,000
178     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 29.1.98    ரூ.5,00,000
179    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.15,00,000
180    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.10,00,000
181    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 19,10.1993    ரூ.2,00,000
182    மெட்ராஸ் ஆக்சிஜன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில ஜெயலலிதா எப்.டி. தொகை    ரூ.1,00,00,000
183     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலணிகளின் மதிப்பு    ரூ.2,00,902.45
184    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 914 பட்டு சேலைகளின் மதிப்பு    ரூ.61,13,700
185    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 6,195 பிற சேலைகள் மதிப்பு    ரூ.27,08,720
186    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 2,140 பழைய சேலைகளின் மதிப்பு    ரூ.4,21,870
187    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.9,03,000
188    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 91 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.6,87,350
189     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 86 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,50,031
190    சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.9,38,460
191     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 26 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.19,30,852.10
192     சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,54,868.90
193     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 41 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.23,90,058.25
194     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 228 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.1,40,75,958
195    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 394 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.3,12,67,725
196     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு    ரூ,48,80,000
197     சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்தின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் மதிப்பு    ரூ.15,75,800
198    மெடல்கிங் நிறுவனத்தின் இயந்திர மதிப்பு    ரூ.7,69,000
199     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் இயந்திரம் கொள்முதல் செய்தது    ரூ.2,16,42,000
200     வி.என்.சுதாகரன், சத்யலட்சுமி நிச்சயதார்த்தத்தின்போது ஜெயலலிதா சார்பில் ரூ.2,95,061.50 மதிப்பு தங்கம் , ரூ.8,99,320.50 மதிப்பு வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது அதன் மொத்த மதிப்பு    ரூ.11,94,381.50
201     சென்னை தி.நகர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் பேலன்ஸ் தொகை    ரூ.21,380
202     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை    ரூ.8,60,950
203     சென்னையில் உள்ள ஆர்பிஐயில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,00,000
204    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கிய புதிய வாகனம்    ரூ.32,40,278
205     சசிகலா பெயரில் 30.4.1996ல் சென்ட்ரல் வங்கியில் பேலன்ஸ்    ரூ.17,502.98
206    திருச்சியில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பொன்நகர் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு    ரூ.6,83,235
207    சென்னை வேலி கார்ட்ன் சாலையில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.34,46,032
208    செகந்திராபாத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ஏற்பட்ட செலவு    ரூ.3,00,000
209    30.4.1996 அன்று நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி பேலன்ஸ் தொகை    ரூ.5,10,968.16
210    சேரகுளம் கிராமத்தில் வசித்த நாச்சியம்மாளிடம் வாங்கிய நிலம்    ரூ.21,830
211    1993 அக்டோபர் மாதம் இளவரசி,  மாஸ்டர் விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் பெயரில் இந்தியன் வங்கியின் ஜெயராமன் பணிகொடை மூலம் கொடுத்த தொகை டெபாசிட் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ.38,421.00 மொத்தம்    ரூ.66,44,73,573.27

சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இவை பறிமுதல் செய்யப்படுமா என்பது சில நாட்களில் தெரியும்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதிலிருந்து 160 முறை வாய்தா கோரப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் ஜெயலலிதா தரப்பிலேயே வாய்தா கோரப்பட்டுள்ளது. வாய்தா வாங்கிய தேதியும், அதற்காக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் கூறப்பட்ட காரணங்களும் வருமாறு:


கடந்த 2005 முதல் 2009 வரை பெரும்பாலான நேரங்களில் வழக்கு கோப்புகள் மாற்றம், அரசு வக்கீல் நியமனம், வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பு ஆகிய காரணங்களுக்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. 2010 முதல் வழக்கின் உச்சக்கட்ட விசாரணை தொடங்க ஆரம்பித்தது.
2005: மார்ச் 14, 28, மே 16, 25, 27, 28, ஜூன் 4, 9, 21, 22, 23, 27, 29, ஜூலை 12, 16, 22, 23, 26, 27, ஆகஸ்ட் 2, 10, 26, அக்டோபர் 10, நவம்பர் 19.
2006: ஜூன் 3, ஜூலை 29, செப்டம்பர் 2, அக்டோபர் 28, நவம்பர் 25.
2007: பிப்ரவரி 3, மார்ச் 24, ஏப்ரல் 28, ஜூலை 21, செப்டம்பர் 22, அக்டோபர் 27, டிசம்பர் 15.
2008: பிப்ரவரி 2, ஏப்ரல் 5, மே 3, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 6, 27, நவம்பர் 3, டிசம்பர் 6.
2009: ஜனவரி 3, ஏப்ரல் 4, 30, மே 25, ஜூன் 16, ஜூலை 23, ஆகஸ்ட் 27, செப்டம்பர் 5, 10, அக்டோபர் 20, டிசம்பர் 19.
2010:ஜனவரி 31ம் தேதி சொத்து வழக்கை தொடர உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி ஜெயலலிதா மனு தாக்கல். பிப்ரவரி 25ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
*  மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
*  மார்ச் 4ம் தேதி (அடுத்த நாள்) சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
*  இந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்தும், சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மார்ச் 10ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 
*  மார்ச் 19ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மறுநாளே அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.  
*  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா தரப்பில் 2010 ஏப்ரல் 8ம் தேதி ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 
*  அந்த மனு ஏப்ரல் 27ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.  
*  இந்த மனு மே 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது, நாங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதால் மனுவை வாபஸ் பெறுகிறோம் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
*  மே மாதம் குற்றப்பத்திரிகை நகலின் 3 செட்களை தனக்குத் தர வேண்டும் என்று ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
*  ஜூலை 15ம் தேதி தனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்தார். 
*  ஜூலை 27ல் தனக்கும் மொழிபெயர்ப்பு நகல் வேண்டும் என்று சுதாகரனும் தன் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 
*  இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நகல்களைத் தர உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
*  இந்த காலக்கட்டத்தில் நகல்களை அச்செடுக்கும் பணி நடைபெற்றதால் விசாரணை 5 முறை தள்ளிவைக்கப்பட்டது. 
*  அதன் பின்னர் மொழி பெயர்ப்பாளரை குறுக்கு விசாரணை செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
*  இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் நவ. 23ம் தேதி தள்ளுபடி செய்தது. 
*  இதையடுத்து, டிசம்பர் 16ம் தேதி விசாரணைக்காக சாட்சிகள் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப நவம்பர் 30ம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
*  சாட்சி விசாரணை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி ஜெயலலிதா சார்பில் 4 மனுக்கள் ஜனவரி 3ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு அன்றைய தினமே தள்ளுபடியும் ஆனது. 
*  2011 ஜனவரி 4ம் தேதி மேலும் 2 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அன்றைய தினம் ஒரு வித்தியாசமான மனு சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 
*  அந்த மனுவில், தனக்கு ஆஜராகும் வக்கீல் ஒருவரின் தந்தை காலமாகிவிட்டதால் விசாரணையை 3 வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், மனுக்கள் ஜனவரி 18ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. 
*  ஜனவரி 27ம் தேதி குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பதற்காக 6 மாதம் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தனர். 
*  அதோடு, ஒரு சில தவறுகளைக் குறிப்பிட்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந¢த மனுக்கள் ஜனவரி 29ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த தள்ளுபடி உத்தரவில் தவறு இருந்தால் மொழிபெயர்ப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 
*  இந்த உத்தரவால் குற்றவாளிகள் ஒவ்வொரு சாட்சி விசாரணையின்போதும் தவறுகள் உள்ளது என்று சொல்லி விசாரணையை இழுத்தடிப்பார்கள் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. 
*  இதையடுத்து, பிப்ரவரி 14ம் தேதி மேலும் ஒரு சாட்சியத்தில் தவறு இருப்பதாக ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிப்ரவரி 19ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. 
*  பிப்ரவரி 19ம் தேதி வழக்கை மேலும் 4 வாரங்கள் தள்ளிவைக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
*  மார்ச் 9ம் தேதி மொழிபெயர்ப்பில் தவறு உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
*  இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் விசாரணை பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டது. 
*  மொழிபெயர்ப்பு தவறு குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மொழி பெயர்ப்பில் உள்ள தவறு குறித்து 10 நாட்களுக்குள் மொழிபெயர்ப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் 20 நாட்களில் அந்த தவறுகளை சரிசெய்து தர வேண்டும் என்று கூறப்பட்டது. வழக்கு விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 
*  ஆனால், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்றும் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 
*  மே 16ம் தேதி முக்கிய சாட்சியான ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்கக்கோரி ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு ஜூன் 3ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. 
*  வக்கீலின் தந்தை காலமானதால் விசாரணையைத் தள்ளிவைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி தள்ளுபடி செய்தது. 
*  ஜூன் 6ம் தேதி சசிகலா சார்பில் பாலாஜியை விசாரிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்ய்பட்டது. அந்த மனு அன்றைய தினமே தள்ளுபடியானது. 
*  இதற்கிடையே, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வர் ஆனார். இதனால் வழக்கின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. 
*  லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் என்.டி.நாணைய்யா என்ற வக்கீல் நியமிக்கப்பட்டார். அவர், நீதிமன்றத்தில் வக்காலத்தும் தாக்கல் செய்தார். ஆனால், புதிய வக்கீல் நியமிக்கப்பட்ட விவகாரம் அரசு வக்கீலுக்கு தெரிவிக்கவில்லை. 
*  தான் புதிய வக்கீலை நியமிக்கப் போவதாகவும் அதற்கு 4 வாரம் கால அவகாசம் தர வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா ஜூன் கடைசி வாரத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 18ம் தேதிவரை கால அவகாசம் கேட்டிருந்தார்.
*  வழக்கு ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கால அவகாசம் கேட்டு மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
*  விசாரணையை நீதிபதி ஜூலை 27ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். குற்றவாளிகளிடம் கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்யும் விசாரணைக்காக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஜூலை 27ல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.


பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு இரு நாள் சம்பளம் அபராதமாக விதித்தார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, தினமும் பல மணி நேரம் பணியாற்றினார்.வழக்கு விசாரணை முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கமாக பணி செய்யும் டைப்பிஸ்டை கூட மாற்றி, தனக்கு நம்பகமானவரை, டைப்பிஸ்டாக வைத்து கொண்டார். கடைசியாக அவரே தீர்ப்பை, 'டைப்' செய்ததாக தெரிகிறது.

இவர், பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பெங்களூரு மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, ஐந்தாவது நீதிபதி இவர்.தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, கோரமங்களாவில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் சொந்த ஊர் மங்களூரு. 1985ல் வழக்கறிஞராக பணியை துவக்கிய இவர், 2002ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், தார்வாட், பெல்லாரி மற்றும் பெங்களூருவில், உயர் நீதிமன்ற (விஜிலென்ஸ் பிரிவு) பதிவாளர் உட்பட, பல நிலைகளில் பணியாற்றி உள்ளார்.அபத்தமான செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற பெயர் கொண்ட குன்ஹா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்கும்போது, அரசு தரப்பினரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், பலமுறை கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவியில் இருக்கும்போது, ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட முதலாவது அரசியல் தலைவர் ஜெயலலிதா என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

* பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கில்  சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், குற்றவாளிகள் நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உடனடியாக பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

* தசரா விடுமுறைக்காக கர்நாடகாவில் உள்ள நீதிமன்றங்களுக்கு அக்டோபர் 5ம் தேதி வரையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 6ம் தேதிதான் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும்.

* ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் அதிகபட்சமாக ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள முதலாவது அரசியல் தலைவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. 

* கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் மனு தாக்கல் செய்து குற்றவாளிகள் நான்கு பேரும் ஜாமீன் கோரலாம் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார். 

* கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்எல்ஏ அல்லது எம்.பி. மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி, தனது பதவியை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.



இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?


  • இந்தியாவிலே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட 18 ஆண்டுகளாக நீடித்து முடிவுக்கு வந்தது என்பது இதுவே முதல்முறை.
  •  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது இதுவே முதல்முறை. 
  • ஒரு வழக்கில் அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை. 
  • முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பதவி இழந்த முதலாவது முதல்வர் ஜெயலலிதா. 
  • இந்திய அளவில் நீதிமன்ற தீர்ப்பினால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளான முதலாவது அரசியல்வாதி ஜெயலலிதா.
  •  இந்தியாவிலேயே ஊழல் வழக்குகளால் 2 முறை பதவியை பறிகொடுத்தவரும் ஜெயலலிதாவே.
பதவியிழந்தவர்கள் இதுவரை...

கடந்த 2013 ஜூலை 10ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. அதில் ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தீர்ப்பு அளித்த நாளில் இருந்து அந்தப் பதவியை இழப்பார்கள் என்று நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யாய் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 3 மாத அவகாசம் அளிக்கும் பிரிவு சட்டவிரோதமானது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் சட்டமுன்வரைவு கடந்த 2013ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து சட்டமுன்வரைவு திரும்பப் பெறப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இதுவரை முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ரஷீத் மசூத் (காங்கிரஸ்), ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜெகதீஷ் சர்மா (ராஷ்டிரிய ஜனதா தளம்), டி.எம்.செல்வகணபதி (திமுக) ஆகியோர் எம்.பி. பதவியையும் பாபன்ராவ் கோலாப் (சிவசேனா) எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தனர்.

ராசியில்லாத செப்டம்பர்?

செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவுக்கு ராசியில்லாத மாதமாகவே மாறி விட்டது. கடந்த 2001ம் ஆண்டு அவர் முதல்வராக இருந்த போது, டான்சி நில மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அது நடந்தது செப்டம்பர் மாதத்தில்தான். அப்போது தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். அந்த வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 2002ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கிலும் செப்டம்பர் மாதத்திலேயே தீர்ப்பு வெளியாகி 2வது முறையாக முதல்வர் பதவியை இழந்துள்ளார். இதனால் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் மாதம் ராசியில்லாத மாதமாக அமைந்துவிட்டது என்று அதிமுகவினர் கவலையுடன் தெரிவித்தனர்.

னது  கருத்து

"தெரிந்த முடிவு தெரியாத தீர்ப்பின் தேதி" இந்த தீர்ப்பு தான் வரும் என்பது ஜெயா அம்மாவிர்க்குத்தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவர் எதிர் நோக்கியிருக்க வாய்ப்பில்லை. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக முன்னாள் முதல்வர் செல்வி J ஜெயலலிதா சிறை சென்றதால் தமிழகத்தில் அ தி மு க வினரால் ஏற்பட்ட கலவரத்தால் சேதமடைந்த பொது சொத்துக்களின் மதிப்பும்,தனியார் சொத்துக்களின் மதிப்பும், கலவரத்தின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளால் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பையும், தமிழக தலைமைச் செயலர்,உள்துறைச் செயலர்,வருவாய்த்துறைச் செயலர் மற்றும் காவல் துறைத் தலைவர் [ DGP ] ஆகியோரிடம் கேட்டறிந்து எல்லாவற்றிற்குமாக சேர்த்து இழப்பீடு அண்ணா தி மு க கட்சி வழங்கவேண்டுமென உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு உடனடியாகத் தொடர வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கும் கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் கண்டிப்பாக பதில் தரவேண்டும்.

தவறு செய்து இருந்தால் நிச்சயம் தண்டனை அனுபவித்து தான் ஆகணும்.இதில் யாருக்குமே மாற்று கருது இருக்கவே முடியாது....இந்த விசயத்தில் குற்றம் சுமத்தியவரையும் குற்றம் சாட்ட பட்டவரையும் நாம் பார்க்க வேண்டும்.

யார் திருடினாலும் திருட்டு தான்...அது எவ்வளவு அளவாக இருந்தாலும் திருட்டு தான்..கோபாலபுரம் குடும்பம் திருடர்கள் என்பதற்காக நீங்களும் திருடுவீர்களா? அதற்கு தண்டனை தர கூடாதா? கோபாலபுர குடும்பம் ஒன்றும் தப்பி விட வில்லை..எல்லார் மேலும் கேஸ் இருக்கிறது..ஒரு சிலர் ஜாமீனில் தான் சுற்றி கொண்டு இருக்கின்றனர்.

ஜெயா வாய்தா வாங்கி சுத்திகொண்டு இருந்த மாதிரி அவர்களுக்கு தான் அடுத்த அப்பு வரும்..இந்தியாவில் எத்தனயோ ஊழல், எல்லா கட்சி அரசியல் வாதியும் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் ஆட்சி, பதவி என்னும் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பி வருகின்றன. இந்த தீர்ப்பால், அதிமுக்கவுக்கு அனுதாபமே சேரும். ஏன் என்றல் ஆயிரம் கோடி, லட்சம் கோடி ஊழல் பண்ணியவரெல்லாம் சுதந்திரமாக சுற்றி திரியும்போது, ஒரு பெண்ணுக்கு இந்த கடுமையான தீர்ப்பு, சாதாரண பாமர மக்களுக்கு பாரபட்சமாக தெரியும். ஜெயலலிதா மட்டும் சுய மரியாதையை இல்லாதவராக இருந்தால், மோடியிடம் கெஞ்சி, எதாவது செய்து தப்பிக்க வாய்ப்புண்டு. அனால் செய்யவில்லை. அவர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வந்து தமிழகத்திற்கு நல்லது செய்வார் என்று நம்புவோம். 

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 


Friday, 26 September 2014

Qatar Rail Company Construct Four Rail Lines Project...

The Qatar Rail project will include four rail lines and an underground section in the centre of the capital Doha and will link stadiums for the 2022 World Cup soccer tournament to be held in the tiny Gulf state. It said the awarding of the contracts marked "a key milestone" in the development of Qatar's ambitious rail plan.Qatar Rail said construction of Phase one was scheduled to begin later this year, and expected to be completed by 2019.

Qatar Rail CEO Saad Al Muhannadi said  that “within a short period of time, Qatar Rail has signed several agreements, worth over USD 32 bn in total, to proceed with the preliminary works for the Doha Metro project and the Lusail Light Rail Transit”. Work for the Doha Metro projects is moving along as scheduled, and that for the Lusail Light Rail Transit has reached the advanced stages.
The Long Distance Passenger and Freight Rail transportation system, which will cover 350 kms in distance at a speed ranging between 220 and 350 kmph for passenger trains and nearing 120 kmph for freight trains, is currently under technical and commercial evaluation by expert consultants,” he said.

Lusail Light Rail Transit..
Al Muhannadi revealed that Qatar Rail has finalised the tunneling works for the project’s tunnels and completed over 60 percent of the structure for drilling works for its stations. Additionally, 50 percent of the structure of the bridge overseeing Al Khor and the Lusail Light Rail Transit, which is slated to be officially delivered by 2017, has been set up — the Lusail Light Rail Transit is composed of four lines extending to 30.5 km in total, among 19 km are at ground level, 10 km underground and 1 km above the ground, in addition to a 0.5-km track between two high-rises. The overall project consists of a fleet of 34 trains and 37 stations, 24 of which are on ground level, 10 underground, one located at bridge level, and two connect two high-rises.

Necessity of public transport..
Qatar Rail deputy CEO and chief programme officer Hamad El Bishri noted that 25 percent of the country’s infrastructure investments over the coming yesars would be put into Qatar Rail. “Qatar Rail’s developments are essential in Qatar’s urban fabric, consistently working to meet Qatari society’s growing needs for sustainable development; public transport has become a bare infrastructural necessity for any developed market, whereby Metro networks have largely contributed to the reduction of carbon dioxide emissions, pollution and time-wasting traffic jams,” he said.


Doha Metro
The Doha Metro network consists of four lines extended to 354 km across the Greater Doha area, connecting the city’s two central points with larger commercial and residential areas in Downtown Doha, and operating underground in busy areas, and on-and-above the ground levels in the suburbs. Moreover, the network will cover 93 stations, two of which are central and located in the city of Msheireb and Education City. The Metro lines will be distributed as follows:
- Red Line (coastal line) will traverse Wakrah City, Doha International Airport, Msheireb, Katara, The Pearl and Qatar University routes.
- Gold Line (History Line), bound from east to west, connects the airport’s northern part with Souk Waqef, Msheireb, Bin Mahmoud, Al Sadd and Al Waab
- Green Line (Education Line) trails Al Rayyan Road and connects Education City with Msheireb and Hamad Hospital.
- Blue Line (City Line) which is a semi-circular line that connects residential and commercial areas in West Bay and the northern part of Airport City with the main C-Ring Road. Additionally, the network will connect the Red, Gold, Green and Blue Lines with each other which will be implemented in two phases.

The Doha Metro project will usher in requirements of the increasing population growth in Qatar, where the Red Line-South will link Doha to Msheireb, which will be the major station and the intersection of all Metro lines. The Doha Metro Project will also operate underground in the centre of the city.
The Red Line will link Downtown Doha to the business hub area in West Bay – extending underground to reach the new Lusail city — while its Southern extension will connect Doha to the centre of Msheireb, which itself is the intersection point for all Doha Metro lines as well as its central station. The Gold Line will link  the airport to Qatar’s new national museum, Msheireb central station and the heart of Doha. Meanwhile, the Green Line will transport passengers to football stadiums that would be built in preparation for the 2022 FIFAWorld Cup.


Awarded to Samsung..
It said the awarding of the contracts marked "a key milestone" in the development of Qatar's ambitious rail planThe contracts related to Phase one comprise the Red Line North (RLN), Red Line South (RLS), Green Line (GRN) and major stations.The RLN project contract has been awarded to a consortium led by Impregilo and comprising of SK Engineering & Construction Co Ltd, and Galfar Al Misnad Engineering & Contracting, Qatar Rail said.The RLS was won by a consortium led by QDVC and including GS Engineering and Construction Corp, and AI-Darwish Engineering.The contract for the GRN was awarded to a consortium led by PORR Bau and includes the Saudi Binladin Group Company Ltd and Hamad Bin Khalid Contracting Co, the statement added.The major stations, which includes one at Msheireb and another at the Education City, was won by a consortium led by Samsung C&T Corporation and comprising Obrascon Huarte Lain (OHL) and Qatar Building Company.

Two stages...
The Doha Metro project will be conducted over two stages: the first, scheduled to be completed in 2019, entails the setting up of 37 stations – among which Msheireb Station will be the Metro network’s headquarters and the intersection point for three of its four lines (Red, Green and Gold) – covering 84 km in total length (96 km underground, 11 km above ground level, and 4 km at ground level). Al Bishri explained that Education City station would serve a double purpose, linking the Green Line to the Long Distance passenger rail in addition to its current trajectory.  The project’s second phase, extending to 152 km in total length (47 km underground, 76 km above ground level, and 29 km at ground level) and encompassing nearly 56 stations, will be delivered by 2026.
Advanced technology
“The Metro lines will operate underground in areas located in the heart of Doha. Qatar Rail will employ advanced tunnel boring machines (TBMs) using Earth Pressure Balance (EPB) technology for the tunneling works for these underground operations, whereby a circular cutting ring will break into underground surfaces, creating cylinder cavities for the tunnels,” said Al Bishri.
He said the debris of this process would then be transferred, through the tunnels, to a “dish”, as the ring moves forward and cuts through underground concrete, supported by a hydraulic functioning system. This mechanism enables not only seamless setup of underground tunnels, but proper use of the demolished concrete as a supporting layer to the tunnels’ protection shield.
Civil works of some of the 35 stations of the Doha Metro Project have been accomplished, a senior official of the Qatar Railways Company (Qatar Rail) said.


“Qatar Rail is also keen to maintain the concept of sustainability and environment friendly construction and all our contractors have four-star rating in this regard,” deputy CEO Hamad al-Bishri explained.
He was addressing the first industry awareness day for Mechanical, Electrical and Plumbing (MEP) companies that was attended by almost 300 representatives from both local and international firms.
The open meeting was aimed at getting to know the capabilities of such companies to pre-qualify for Qatar rail projects as subcontractors for the main project contractors.
“We will continue holding such meetings with both local and international companies because we need great and continuous support from all potential qualified partners to accomplish our massive project,” affirmed al-Bishri.
He said the project has multiple phases and involved a myriad of works; architectural, civil, mechanical, electrical, excavation and others. However, the project is proceeding well according to the scheduled plan
The meeting was also a good opportunity for local companies to meet their counterparts of international companies and study the possibility of forming consortiums or joint ventures. Simultaneously, Qatar Rail introduced these to both the technical and contractual requirements to be able to assume work at its project.
“There will be a link at our website for companies to upload their profiles, what they are and what they can offer and their capabilities. Then a special committee from both Qatar Rail and the Design and Billing Contractor will assess these companies and pre-qualify them for the project tenders,” said the Qatar Rail deputy CEO.
Project tenders for various related works will be offered in the first and third quarters of next year and they will be awarded in the fourth quarter for the fourth year.
The tunnel boring machines recently brought from Germany are now in the assembly phase in Doha and are expected to be operational soon. Further, all the deep excavation works are progressing well, according to Qatar Rail officials.
“The event was a good initiative to further boost the country’s economy and would reflect positively on local companies. For instance, they can introduce themselves to the global market and study possible business opportunities.”
Prepared  & Collection by : M.Ajmal Khan.