பல துறைகளில் சிறந்த சேவையாற்றிய பிரமுகர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ‘பாரத ரத்னா’. இந்த விருது கடந்த 1954ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விருது கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுச் சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு எந்த துறையாக இருந்தாலும் மிகச் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கலாம் என அரசு முடிவு செய்தது. பிரதமர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு ஜனாதிபதி இந்த விருதை வழங்குகிறார். ஆண்டுக்கு அதிகபட்சமாக 3 பேருக்கு இந்த விருதை பரிந்துரை செய்யலாம். பாரத ரத்னா விருது பெறுபவர்களுக்கு அரசின் சான்றிதழ், இலை வடிவிலான ஜனாதிபதியின் பட்டய பதக்கம் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுவதில்லை.
இதுபோல், "பாரத ரத்னா' விருது பெற்ற மற்றவர்களின் பெயர், ஆண்டு விவரம் வருமாறு:
1) சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
2) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
3) சி.வி. ராமன் - 1954
4) பகவன் தாஸ் - 1955
5) விஸ்வேஸ்வரய்யா - 1955
6) ஜவாஹர்லால் நேரு - 1955
7) கோவிந்த வல்லப பந்த் - 1957
8) தோண்டோ கேசவ் கார்வே - 1958
9) பிதான் சந்திர ராய் - 1961
10) புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
11) ராஜேந்திர பிரசாத் - 1962
12) ஜாகிர் ஹுசேன் - 1963
13) பாண்டுரங்க் வாமன் கனே - 1963
14) லால் பகதூர் சாஸ்திரி - 1966
15) இந்திரா காந்தி - 1971
16) வி.வி. கிரி - 1975
17) கே. காமராஜ் - 1976
18) அன்னை தெரசா - 1980
19) ஆச்சார்ய வினோபா பாவே - 1983
20) கான் அப்துல் கஃபார் கான் - 1987
21) எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
22) பி.ஆர். அம்பேத்கர் - 1990
23) நெல்சன் மண்டேலா - 1990
24) ராஜீவ் காந்தி - 1991
25) வல்லபபாய் படேல் - 1991
26) மொரார்ஜி தேசாய் - 1991
27) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
28) ஜே.ஆர்.டி. டாடா - 1992
29) சத்யஜித் ராய் - 1992
30) குல்ஜாரிலால் நந்தா - 1997
31) அருணா ஆசப் அலி - 1997
32) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
33) எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
34) சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
35) ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
36) அமர்த்தியா சென் - 1999
37) கோபிநாத் போர்தோலோய் - 1999
38) பண்டிட் ரவிசங்கர் - 1999
39) லதா மங்கேஷ்கர் - 2001
40) உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
41) பீம்சேன் ஜோஷி - 2009
42) சி.என்.ஆர். ராவ் - 2013
43) சச்சின் டெண்டுல்கர் - 2013
44)சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா-2014
45)முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -2014
மக்கள் கருத்து..
மக்கள் கருத்து..
உயர்ந்த விருது என்றால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும், தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பலர் விரும்புகிறார்கள். அதில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமூக சேவகர்கள், நடிகை நடிகர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் போன்ற பலரும் இருக்கிறார்கள்.
அவர்களில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் கலந்தே இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்னை முற்றியதால் 2008ஆம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது கொடுப்பதை அரசு நிறுத்தி வைத்தது.
உலகம் முழுவதிலும் உயர்ந்த விருதுகள் கொடுக்கப்பட்ட போதெல்லாம், இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்றும் இவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதுபோது, மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாதது பற்றி பேசப்பட்டது. சிலருக்கு விருதுகள் அறிவிக்கும்போது எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதற்கு உதாரணம், இவ்வாண்டு விஞ்ஞானி சி.எஸ்.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே பரிசு, விருது என்பவற்றை அர்த்தம் பெற வைக்கிறது.
இந்தியாவில் இதுவரையில் 45 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருந்து விருது பெற்றவர்களும், மரணத்திற்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இதில் 13 பேருக்கு அவர்கள் இறந்தபின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மரணத்திற்குப் பிறகு விருது பெற்றிருக்க வேண்டியவர் மகாத்மா காந்தி. "பெரிய விருது' என்று அறியப்படும் பாரத் ரத்னா அவரைப் பொருத்தவரை "சிறிய விருது' என்று கருதி அவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் போலும்.
தொகுப்பு : அ.தையுப அஜ்மல்.