Friday, 31 July 2015

டாக்டர் A.P.J. (அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் ) அப்துல் கலாம் நினைவுகளைப் போற்றி ஒரு தொகுப்பு!!

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் (2002 ஜுலை 25-ஆம் தேதி நாட்டின் 11-ஆவது  குடியரசு முன்னாள் தலைவர் 
 அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பொழுது மாணவர் மத்தியில் மாரடைப்பால் காலமானார்.


அய்யா அப்துல் கலாமின் நூலகம்




கலாம் எழுதிய புத்தகங்கள்

  1. Turning Points; A journey through challenges2012
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
  4. Ignited Minds : Unleashing the Power WithinINDIA ; வைகிங், 2002.
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
  6. MissionINDIA (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்

  1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
  2. ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ பீ ஜே அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
  3. A. P. J. Abdul Kalam: The Visionary ofINDIA கே பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
  4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட்,2008 இயக்கியது.
  5. The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ்,2008.
  6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.

தன் சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.  இதை மாற்றிக் கொள்ளும்படி பலரும் கூறிய பின்பும் அவர்களிடம் அன்பாக மறுத்த விட்டார் கலாம்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவரான அப்துல் கலாம் சைவ உணவையே உட்கொண்டார்.  காரணம் திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த பொழுது ஹாஸ்டலில் சைவ உணவிற்கு கட்டணம் ரூபாய் 14 , அசைவ உணவிற்கு ரூபாய் 18 .  கலாமின் தந்தை வறுமையின் காரணமாக சைவ உணவைச்  சாப்பிடச்சொன்னதாக,  கலாமே குடியரசுத்தலைவராக பதவியேற்பதற்கு முன்னால் தன்னிலையை நண்பரிடம் விளக்கிக் கூறியிருக்கிறார்.

பொருளாதார சமநிலை இல்லாததால் உலகில் வன்முறை ஏற்படக் காரணம்.

திருக்குறள் 100 குறளுக்கு மட்டும் அப்துல் கலாம் விளக்கம் எழுதி இருக்கிறார்.  அதை அவசியம் நூலாக வெளியிட வேண்டும் என்பது ஆவலாக  இருந்திருக்கிறது.


                                               அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர்...

விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.

400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சசி.  அது ஒரு வானிவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை”- என்று சொன்னவர் அப்துல் கலாம்.  எப்போதுமே அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!


“கனவு என்பது உங்கள் தூக்கத்தில்  வருவது அல்ல...
உங்களைத் தூங்கவிடாமல் செய்வது”

                                    போகலமோ கலாம்?

படகோட்டி  யின்மகனே!  பாரதவிஞ்  ஞான
உடலாகிப்  போனவனே!  ஓய்ந்தாய்!  -  நடமாடா
தூங்காக்  கனவுகளில்  தூளியெமை  இட்டுவிட்டு
நீபோக  லமோ  கலாம்?






                           கலைஞர் இரங்கல்



கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து 
மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;
மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று! 
அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல் 
அமைதிகாக்கும் கேடயமாய் ஆவதற்கும் 
ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை 
அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும் 
மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு 
மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும். 
அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே 
அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே 
அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து 
அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும். 


இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும் உரிய அப்துல் கலாம் அவர்களை இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.



















கலங்கரை விளக்கம் சாய்ந்ததது

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
                                           
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர் .





திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு படித்தபோது சக மாணவர்கள், பேராசிரியர்களுடன் அப்துல் கலாம் எடுத்துக்கொண்ட புகைப்படம்.   இதில் சிவப்பு  வட்டமிட்டவர் அப்துல் கலாம்.(அக்டோபர் 151931 - ஜூலை 272015) மேல் வரிசையில் வட்டமிட்டு காட்டப்பட்டவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா (எஸ். ரங்கராஜன் மே 31935 - பெப்ரவரி 272008)



அறிவியல் ஹீரோ

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.




உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.

ஏவுகணை அவசியம்

‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.
ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.

இசைப்பதும் ரசிப்பதும்
                                      
உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.

வாருங்கள் இளையோரே

‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.

நிறைவேறாத கனவு

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.
அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.




‘இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்’
இந்தியா வல்லரசாகும் காலம் வரும்...
கலாமே...!
உன் கனவு நனவாகும் 2020 களில்...
உன்னையே எண்ணியே வாழ்கிறோம்...!

தொகுப்பு  : அ .தையுபா  அஜ்மல் 

Tuesday, 28 July 2015

APJ.அப்துல் கலாம் பற்றியஒரு சிறப்பு பார்வை ....

.
1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில்  பிறந்தவர்.அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

அறிவியல் துறையில் ராக்கெட் தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த கலாமின் சாதனை  மிகப்பெரியது.  அது தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த விலையிலான ஸ்டென்ட்களை பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து  தயாரித்தார் .இதற்கு, 'கலாம் - ராஜு ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது.  இது வெளிச்சந்தையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் 7,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்தனர்.



இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 

கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்-
நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது சோனியாகாந்தியும் கருணாநிதியும் தான் இருக்க முடியும்.2007 ல்நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட விரும்பியபொழுது அன்றைய ஆளும்கட்சியான காங்கிரசின் தலைமைபீடமான சோனியாகாந்தியினால் தடுக்கப்பட்டு இந்திராகாந்தி குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமே வேலை பார்த்த பிரதீபாபட்டேல் என்ற மகாராஸ்டிரா பெண்மணிக்கு கொடுக்கபட்டது.
திமுக நினைத்திருந்தால் அன்று காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அப்துல்கலாமை முன்னிறுத்தி இருக்க முடியும்.ஆனால் குடும்ப நலன்களுக்கு முன் நாடாவது கொள்கையாவது..
நாட்டைபற்றி வாய் கிழிய மேடை போட்டு பேசும் மற்றகட்சிகள் அப்துல்கலாமை விட எந்த விதத்தில் பிரதீபா பட்டீல் உயர்ந்தவர் என்று போராடாமல் சொந்த அரசியல் லாபங்களுக்காக அப்துல் கலாம் மீது சோனியாவிற்கு இருந்த வன்மம் நிறைவேற பிரதீபா பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழகத்தில் கோவையில் 2010ல் நடைபெற்ற உலக செம்மொழி
தமிழ்மாநாட்டிற்கு சிறந்த மொழிஅறிஞரும் பார் போற்றும் தமிழரான அப்துல்கலாமை அழைத்து கவுரவிக்காமல் வேண்டுமென்றே அவமதித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
அது மட்டுமின்றி 2012 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மீண்டும் அப்துல்கலாம் பெயர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சிலரால் பேசப்பட்டபட்டபொழுது..
"கலாம் என்றாலே கலகம்" என்று பொருள் உள்ளது அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதி கிடைப்பதை தடுத்தவர் கருணாநிதி.

2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம்,
 பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.


வாங்கிய விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்,
இந்தியா 2012எழுச்சி,
 தீபங்கள்அப்புறம் பிறந்தது 
ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

என் கருத்து :

இந்த நூற்றாண்டில் கிடைத்த அறிய மாமனிதர், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உரக்க கூறியவர், ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி பதவியை பெருமைக்குரியதாய் மாற்றியவர் என்றால் அது அப்துல் கலாம் அவர்கள் தான். அமெரிக்காவின் கண்ணிலேயே மண்ணை தூவிவிட்டு அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி வெற்றி கொண்ட வெற்றி நாயகன், பதவி இழந்தபின்னும் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிகாக உழைத்தவர்.

ஜனாப் டாக்டர் ..பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன்.எனக்கு மட்டும் அல்ல, தமிழகத்திற்கு மட்டும் அல்ல,இந்தியாவிற்கு மட்டும் அல்ல... உலகில் யார் எல்லாம் அன்பையும் அமைதியையும்... நேசித்தார்களோ ...விரும்பினர்களோ ......அவர்கள் அனைவருக்கும் இழப்பே.......கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தார்களுக்கும் , இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் . (எந்த ஒரு ஆத்மாவும் அதன் இறுதி நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவோ, பிந்தவோ படாது. அதை கைப்பற்றுவேன்என இறைவன் கூறுவதாக அல்குர்ஆன் கூறுகிறது) அந்த அடிப்படையில் இறைவன் அவரின்   ஆத்மாவை அல்லா கைப்பற்றி விட்டான்.


இன்றைய அவரது இழப்பு அணைத்து முஸ்லிம்களுக்கும் நம் பாரத இந்திய திருநாட்டிற்கும், அறிவு சார்ந்த உலகத்திற்கும் பேரிழப்பு. அவர் ஒரு ஆலமரம் அறிவுதேடலுக்காக அவரிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் அவரது சொல்லை செயலாகவும் செயலை சரித்திரமாகவும் மாற்றும் அவரது தலைமையின் கீழ் இயங்கிய பல குழுவினருக்கும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஒரு இந்தியர்.... ஒரு ஒழுக்கமான தமிழன். இந்திய ஜனாதிபதியாக இருந்தபொழுது அரசு செலவுகளை குறைத்தும், ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும் , மாணவ மாணவியர்களிடம் அன்பை காட்டியவரும்,அரசியலில் நேர்மை , தூய்மை என்று இருந்தவரும் தான் Dr. APJ அப்துல்கலாம். அணு விஞ்ஞானி, ஒப்பற்ற ஆசிரியர், வாழ்க்கை முழுதும் கல்விப்பணி செய்த அறிவியல் மேதை. கனவு காணுங்கள் அதுதான் உங்களை உயர்விக்கும்,என மாணவர்களை வழி நடத்திய மகான் மர்ஹும் கலாம் அவர்களின் மறைவு அனைத்து இந்திய மக்களுக்கும் ஓர் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. இன்னா லில்லாஹி இன்னா லிஐஹி ராஜிஊன் எல்லாம் வல்ல இறைவன் அவரின் குற்றங்கள், குறைகள் , பிழைகள் யாவற்றையும் மன்னித்து அவரின் மண்ணறையை சுவன பூங்காவனமாக மாற்றி, இம்மை,மறுமை என ஈருலகிலும் வெற்றி பெற்றவராக ஆக்கி வைப்பானாக ஆமீன் !!   

  ஆக்கம் மற்றும்  & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .