முன்னுரை:-
சமீபத்தில் வெளிவந்த பத்மாவதி என்ற திரைப்படம், பல சர்ச்சைகளை சுமந்து வந்திருப்பதை அறிவோம். இப்படத்தில் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து ஓய்ந்த பின்னரே வெளியானது இத்திரைப்படத்திற்கு கூடுதல் விளம்பரங்களை செலவில்லாமல் தேடித்தந்தது.
மேலும், அப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச்சேர்ந்த தனிநபரை இழிவுபடுத்தியதாகவும் கூக்குரல்கள் எழுந்தன. குரல் எழுப்பியவர்கள் குறிப்பிட்டதோ ரஜபுத்திர ராணியான பத்மாவதியை. ஆனால், திரைப்பட குழுவினர் திட்டமிட்டு தாக்கியதோ இசுலாமிய சுல்தானான அலாவுதீன் கில்ஜியை தான்.
யார் இந்த "அலாவுதீன் கில்ஜி ? இவரது உண்மை வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இக்கட்டுரை.
உண்மை வரலாறு......
கில்ஜி என்பது ஒரு பாரசீக மொழி வார்த்தையாகும். இது ஒரு வம்சத்தை குறிக்கிறது. டெல்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம். இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன்கில்ஜி என்பவர் ஆவார்.இவரின் மருமகன் தான் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள "அலாவுதீன் கில்ஜி".
இவர்கள் இன்றைய துருக்கி நாட்டைச் பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். 1290 முதல் 1320 வரை தெற்கு ஆசியா முழுவதும் பரவியிருந்த ஓர் மிகப்பெரிய அரசு தான் கில்ஜி வம்ச அரசு.
ஆட்சி :
அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில், மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தியாவின் மீதான மங்கோலியர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் வலிமையுடன் இருந்த, மங்கோலியர்களின் கொடூர தாக்குதல்களிலிருந்து தனது அரசை காத்துக்கொள்ள வடமேற்கு எல்லைப்பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படைகளை நிறுத்தினார்.
மங்கோலியர்களுக்கு எதிராக,
1298ல் ’சலந்தரில்’ நடந்த போரிலும்,
1299ல் கில்லியில் நடந்த போரிலும்,
1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும்,
1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்ஜி வெற்றி பெற்றார்.
தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது டெல்லி அரசை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார். மங்கோலியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானிஸ்தானை டெல்லி அரசுடன் இணைத்துக் கொண்டார்.
இம்முயற்சி நடைபெறாமல் இருந்திருந்தால், ஒருங்கிணைந்த இந்திய தேசம் இன்று வரை கூட மங்கோலியர்களின் காலணியாதிக்க நாடாக இருந்திருக்கக்கூடும்.
மேலும், இன்றைய இந்திய தேசம் சிதறுண்டு சிறுசிறு ராஜ்ஜியங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்ததைக்கண்டு, அனைத்தையும் இணைக்க பாடுபட்டார். அவரது இவ்விருப்பத்திற்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்த அரசர்களை போர் மூலம் வெற்றி கொண்டார்.
இப்படியாக "ஆப்கானிஸ்தான்முதல்மதுரை" வரை தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்தினார். கில்ஜியின் பெயரை கேட்டாலே, மற்ற அரசர்கள் அஞ்சி நடுங்கும் மாபெரும் சுல்தானாக வலம் வந்தார்.
அதாவது உலக வரைபடத்தில், கில்ஜி ஆட்சியின் எல்லைகளான ஹெராத் நகருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்கோடு வரைந்தாலே அது 4300 கிலோமீட்டர்தொலைவை விஞ்சும்.
பொருளாதாரத்தில் சீர்திருத்தம்:
சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளராக திகழ்ந்தார். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வளுவான, நிலையான படையாணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ்சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார்.
கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.
உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை :
அலாவுதீன் கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். அரசுக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளும் அரசால் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை.
தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் #லஞ்சம் பெறுவதை தடுத்து நிறுத்தினார். விவசாயத் தொழில் செய்யும் மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைகள் :
அலாவுதீன் கில்ஜி கி.பி.1250 ஆம் ஆண்டு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற ஊரில் பிறந்தார். அலாவுதீன் கில்ஜி முறையாக சில திருமணங்களை செய்து கொண்டவர். அவருடைய முதல் மனைவி, அவருடைய மாமா ஜலாலுதீன் கில்ஜியின் மகளாவார். இவருக்கு நான்கு மகன்கள்.
1. ஷிஹாபுதீன் உமர், 2.குதுபுதீன் முபாரக், 3. கிஸ்ர் கான், 4. ஷாதி கான். ஆகியோரே அவர்கள்.
உண்மை வரலாற்றை புரட்டி பார்த்தோமேயானால், அலாவுதீன் கில்ஜி பெண்களுக்காக அல்லது மாற்றாரின் மனைவியரை கவர்வதற்காகப் படை திரட்டினார் என்றோ, போர் புரிந்தார் என்றோ அல்லது அந்தப்புர அழகிகளை வைத்திருந்தாா் என்றோ எவ்வித வரலாற்று குறிப்புகளும் இல்லை. மாறாக, பல்வேறு வரலாற்று திரிப்புகள் மட்டுமே உள்ளது.
பத்மாவதி (எ) சித்தூர் பத்மினி...
அலாவுதீன் கில்ஜி வென்ற பல நாடுகளுள் ஒன்று, சித்தூர் எனப்படும் சித்தோர்கார். இதற்கு மேவார் எனும் பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அரசராக ராவல் ரத்தன்சென் என்பவர் இருந்தார். இவரது மனைவிகளுள் ஒருவர் பத்மாவதி என்னும் பத்மினி. அந்நாட்டின் பட்டத்து ராணியாக இவரே இருந்தார். இவர், கந்தர்வேசன் என்ற குறுநில மன்னர் ஒருவரின் மகளாவார். இவர்கள் ரஜபுத்திர வம்சத்தினர் ஆவர். மேவார் தேசம், ரஜபுத்திர கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபு வழி பழக்க வழக்கங்களை பின்பற்றும் நாடாக விளங்கிற்று.
இந்நிலையில் அலாவுதீன் கில்ஜி, ஜனவரி 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்தது. ஒரு கட்டத்தில் முற்றிய போர், மேவார் கோட்டையை முற்றுகையிடுவதற்கு வழிவகுத்தது. கோட்டையை திறந்துகொண்டு வெளியே வந்த படைகள், கில்ஜி படையுடன் போரிட்டது. மிகக் கடுமையாக நடைபெற்ற போரில், மேவார் நாட்டு அரசர் ராவல் ரத்தன்சென் மற்றும் தளபதிகள் அனைவரும் வீர மரணம் அடைந்தனர்.
இதனை அறிந்த பட்டத்து ராணி பத்மினி உட்பட மற்ற ராணிகளும் அன்றைய ரஜபுத்திர (சத்திரிய) குல வழக்கப்படி உடன்கட்டை ஏறுதல்( தீக்குளிப்பு) எனப்படும் புனித தற்கொலைசெய்துகொண்டனர்
என்பதுதான் உண்மையான வரலாறு.
இதைவிடுத்து அலாவுதீன் கில்ஜி பத்மாவதி மீது காதல் கொண்டதால் மேவார் மீது படையெடுத்தார் என்பது முற்றிலும் தவறாகும்.
இதேபோல, ராணி பத்மாவதி அவர்களும் அலாவுதீன் கில்ஜி மீது, காதல் கொண்டதாகவும், அவருடன் சமரச உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தார் என கூறப்படும் கூற்றுகளும் கட்டுக்கதைகளைத்தவிர வேறில்லை. பற்பல வரலாற்று திரிப்புகளில் இதுவும் ஒன்று..! அப்படி நம்புவது ராணி பத்மாவதி அவர்களின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போலாகிவிடும்.
அலாவுதீன் கில்ஜியின்இறப்பு
அலாவுதீன் கில்ஜி 1316ல் இறந்தார். அவரது மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், டெல்லி குதுப்மினார் வளாகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்ஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஒரு நினைவு மண்டபத்தை கட்டியெழுப்பினார். மேலும், அலாவுதீன் கில்ஜியின் நினைவாக ஒரு இசுலாமிய கல்வி நிறுவனத்தையும் (மத்ரஸா) நிறுவினார்.
அலாவுதீன் கில்ஜியின் இறப்புக்குப்பின், அவருக்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்யலாயின. இதில், விஜயநகர பேரரசும் அடங்கும்.
முடிவுரை
அலாவுதீன் கில்ஜி மேவார் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக, மங்கோலியர்கள் ,ரந்தம்பூர் (ராஜஸ்தான்), குஜராத் ஆகியவற்றின் மீதும்,
மேவாருக்கு பின், மாளவம், மந்து , தாரா, சந்தோரி, மார்வார், ஜலோர், தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம், போசள நாடு, மதுரை, விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி நாடு ஆகியவற்றின் மீதும் போர் தொடுத்துள்ளார்.
ஒருவேளை, கில்ஜி பெண்கள் மீது மோகம் கொண்டு படைதிரட்டி போர் புரியக்கூடியவராகவே இருந்தாரேயானால், ஒவ்வொரு போரிலும் அவரின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பார்.
ஆனால், மேற்கூறியவற்றில் ராணி பத்மாவதியைத்தவிர வேறு எந்த நாட்டின் அரசியை கவர்வதற்கும் போர் தொடுத்ததாக வரலாறு கூறவில்லை. இவ்விசயத்தில், வரலாற்று திரிப்பாளர்களும் கவனக்குறைவாக இருந்துள்ளனர் எனலாம்.
ஏனெனில், வரலாற்று திரிப்பாளர்களின் நோக்கம் "இசுலாமியர்களுக்கு எதிராக ரஜபுத்திரர்களை தூண்டிவிடுவதாக" இருந்திருக்க வேண்டும் என மட்டுமே பொருள் கொள்ள முடிகிறது. அலாவுதீன் கில்ஜியின் மீதும் இசுலாமியர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்த எண்ணியவர்கள் இறுதியில் தங்கள் முதுகில் தாங்களே குத்திக்கொண்டதை போல, ராணி பத்மாவதியின் புகழுக்குதான் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இறுதியில் "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற சொல்லாடலுக்கு ஏற்பவே வரலாற்று திரிப்பாளர்களின் முடிவும் அமைந்துவிட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.
கில்ஜியின் தந்திரம் . திறன், நிர்வாகம் இவற்றில் அறிவு இல்லை என்றால் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பில் தனது ஆட்சியை நீடிக்க முடியாது. அந்த அந்த நிலப்பரப்பில் பல மொழியும் பல கலாசாரத்தையும் கொண்ட மக்களிடம் தன் அதிகாரத்தை செலுத்த அந்த பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற பிரதிநிதிகளை கொன்டே நிர்வாகித்தார். அன்றைய நிலையில் அவர் அறிந்த மொழி ஆப் ககன் மொழியும் அரபியும் தான் - இந்திய நூறுக்கணக்கான மொழி தெரியாது - ஆனால் அதை பேசும் போது கண், முக பாவனையை வைத்தே அதில் உள்ள உண்மை பொருள் அறியும் ஆற்றல் இருந்ததால் ஏமாற்றும் மொழிபெயர்ப எளர் இல்லை. இதனால் தான் காது வழி செய்தியாக கண்டதை கூறி சென்றனர் நிர்வாக ஆவணம் தவிர வேறு ஆவணம் இல்லாமல் கற்பனையும் கனவுகளையும் காதையாக்கி பின் உண்மை போல சித்தரிக்கின்றனர் - நான்கு வர்னத்தார் முறையில் ஒரு கடைசிவர்ண சூத்திர மன்னன் மேல் சூடும் பாமாலை இப்படி தான் இருக்க முடியும்'
ஆதாரம்- Alaudeen Khilji the Saviour of Hinduism., Encyclopedia Britannica., Wikipedia., etc.,
தொகுப்பு: மு .அஜ்மல் கான்.