Thursday 4 January 2018

ரஜினியின் அரசியலால் தமிழர்களைப் பார்த்து சிரிக்கும் அவலம்!! ஒரு தமிழக மக்கள் பார்வை...

Related image
தமிழர்களை பிற மொழியாளர்களை ஆள விட்டதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழினம் மிகப் பெரும் பேரழிவுகளை சந்தித்தித்துள்ளது என்பதால்தான் எங்கள் தாய் நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டு கொள்ளைபோயின போய்க்கொண்டுள்ளன எனவே எங்கள் தாய்த்திருநாட்டை தமிழ் உணர்வு கொண்ட ஒரு பச்சை தமிழன் ஆண்டால்தான் தமிழன் இனிமேலாவது படுகுழியிலிருந்து மீண்டு வரமுடியும் எங்கள் மொழியும் பாதுகாக்கப்படும்.

என்னை வாழ வைத்த, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய, இப்போதும் நான் வரவில்லையென்றால், என் மனசாட்சியே என்னை கொல்லும். என்கிறார் ரஜினி.........
சென்னையில் வெள்ளம் வந்து, மக்களெல்லாம் தத்தளித்த போது வராத மனசாட்சி.....,
கலாச்சாரத்தை பறிகொடுத்த தமிழனின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வராத மனசாட்சி......,
கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினையில் வராத மனசாட்சி....,
பூக்க தொடங்கியபோதே உதிர்ந்த அனிதாவின் மரணத்தில் வராத மனசாட்சி....,
விவசாயி, டெல்லியில் நிர்வாணமாய் கிடந்தபோது வராத மனசாட்சி....,
காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டா விவசாயிகள் செத்து மடிந்தபோது வராத மனசாட்சி....,
தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது வராத மனசாட்சி...
இப்படி தன்னை வளர்த்தி அழகுபார்த்த, தமிழக மக்களின் துன்பத்திலெல்லாம் வராத மனசாட்சி,
இப்போது திடீரென்று வந்திருக்கிறதென்றால் உங்கள் மனசாட்சியையே சந்தேகிக்க தோன்றுகிறது ??



சென்னை வெள்ளத்தின்போது, சாமானிய மக்களுடன் சேர்ந்து, அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், ஏன், இளையராஜா போன்ற உங்கள் திரை உலகத்தை சேந்தவர்களும் கூட, ஜாதி மதம் பார்க்காமல், அதே மனசாட்சியோடு, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தபோது, உங்கள் மனசாட்சி மாடியில் நின்று வேடிக்கை பார்த்ததே தவிர, வேறெதுவும் செய்ய காணோம்....


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுகூட, தலையில் முக்காடு போட்டு, அமர்ந்திருந்த, கார்த்தி, சூர்யா, லாரன்ஸ் மற்றும் மலையாளியான நயன்தாரா போன்றவர்களுக்கு மத்தியில் உங்களை தேடுவது முட்டாள்தனம் என்றாலும், பத்திரிகைகளில் உங்கள் அறிக்கையை தேடினோம்... ஊஹூம், ஒன்றையும் காணோம்....
இப்படி தமிழனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத உங்களைவிட, தன்னை வாழவைத்த மக்களின் உணர்வுகளுக்காக, இரவு முழுவதும் முக்காடு போட்டு, தூங்காமல் அமர்ந்திருந்த நயன்தாரா சிறந்தவர் என்கிறேன் நான்.... தமிழகத்திற்கு நல்ல ஒரு ஆளுமையுள்ள தலைவன் வேண்டும்தான், ஆனால் நிச்சயமாக அது நீங்கள் இல்லை....


கருத்து தெரிவிக்கும் நண்பர்கள் ரஜினி நல்லவர் கரெக்ட் நல்லவர் அவர் மட்டும் தான் அவர் கூட வர போகிறவர்கள் யார் யார் இங்கிருந்தே இவர் பாபா முத்திரையால் திருநெல்வேலியில் நடக்கும் கஷ்டங்கள் தீர்த்துவிடுவாரா இல்லை அரசு அதிகாரிகள் விடுவார்களா இல்லை இவர் நாயுடு போன்று கம்ப்யூட்டர் விஷயம் தெரிந்தாலும் பரவாயில்லை இவரிடம் கஞ்சாவை பற்றி கேட்டால் விளக்குவார் ஆள்வதர்க்கு தகுதி வேணும் இது சினிமா இல்லை இவர் 100 பேரை அடிப்பார் அது இங்கே நடக்காது என்னை கேட்டால் : இது இவருக்கு தள்ளாத வயதில் வந்த பொல்லாத ஆசை "' என தோணுகிறது.


பாஜகவின் ஏஜென்ட் ரஜினி.....


ரஜினிக்கும் ராஜபக்ஷே மகனுக்கும், பாஜகவுக்கும் முக்கோண காதல் உள்ளது ரஜினி இதனை மறுப்பாரா?.. ரஜினி கட்சிக்கு நிதி அளிப்பது யார் ?..
இது ஒன்றும் கேட்கக்கூடாது கேள்வியல்ல...
ரஜினி பதில் சொல்லியே ஆகவேண்டும்..

ராஜபக்ஷேயின் மகன் ரஜினியின் படம் வெற்றியடைய வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை.ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேஷத்தை வாழ்த்தி பேசியுள்ளார். ராஜபக்ஷே மகனின் வாழ்த்து, பாஜகவின் பின்புலம், ரஜினியின் ஆன்மீக அரசியல், ஆகியவை அடங்கிய " முக்கோண காதல் " , ரஜினி ஜெயிக்காவிட்டாலும் , 20 % வாக்கு வாங்கினால் கூட , தமிழகத்தை ஒரு காலத்தில் சின்னாபின்னமாக்கி விடும்...
தமிழகம் , ஜாதி மத கலவரம் இல்லா வளரும் மாநிலம்... தமிழகம், கர்நாடகம், மஹா ஆகிய மாநிலங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்றன... மஹா மற்றும் கர்நாடகாவை காங்கிரஸ் வளர்த்தது... தமிழகத்தை திராவிட கட்சிகள் வளர்த்தன... இப்போது குஜராத் முன்னேறவேண்டும் என்று, தான் ஆளும் மஹா மாநிலத்திலேயே கலவரம் வந்தால் கூட பாஜக கவலை படாது....கர்நாடகாவில் ஜெயித்தால், கர்நாடகாவையும் சீர்குலைத்துவிடும்... இதுதவிர தமிழகம் மீது வேறு ஒரு கண்... ஆக, ரஜினி என்ற சக்தியை வளரவிடுவது, நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டு கொள்வதற்கு சமம்.

மக்கள் திலகம் போல இதுவரை அள்ளி கொடுத்தவர் என்ற பெயர் இல்லை என்றாலும் மக்களுக்கு இதுவரை எதுவும் கிள்ளி கூட போட்டதில்லை. மது விலக்கு பற்றி இவருடைய நிலை என்ன என்று கூட எங்கும் பேசியதே இல்லை. பெரும்பாலும் மக்கள் இவர் அரசியலில் இப்போது வருவதற்கு ஆதரவு தராததற்கு காரணம் இவர் வேறு மாநிலத்தை சார்ந்தவர் என்பதல்ல, நாற்பது ஆண்டுகள் வீட்டுக்கு மட்டும் உழைத்துவிட்டு எந்த மக்கள் பிரச்சினைகளை பற்றியும் கண்டுகொள்ளாமல், பெரும் தலைகள் ஆட்டம் போட்டபோதெல்லாம் எதிர்த்து எதையும் பேசாமல், இப்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உண்டானதை உணர்ந்து நானும் அரசியலில் குதிக்கிறேன் என்று சொல்வதனால்தான்.

மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் ஓடிவந்து மக்களுக்காக போராட மாட்டேன், ஆனால் நேரடியாக எனக்கு முதல்வர் பதவி மட்டும் வேண்டும், இப்படி தான் காமராசர் செய்தாரா, ஒரு தன்னிகரற்ற தலைவனை பதவிக்காக அரசியலுக்கு வருபவர்களோடு ஒப்பிட வேண்டாம், உன்னுடைய வழியை உணராதவன் உனக்கு தலைவனாக இருக்க கூடாது அப்படி இருந்தால் அது உன்னை வாழ வைக்காது. தனுஷ், ஐஸ்வர்யா, இப்படி பலர் வரிசைகட்டி நின்றுகொண்டு தான் இருக்கிறார்கள், இதுவும் வாரிசு அரசியல் தான், போக போக உங்களுக்கே புரியும்.

ரஜினி மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார், அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் தவறவிட்டு விட்டார், தற்போது அவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை, ஆனால் ஊடகங்கள் பலம் இருக்கிறது, ஜெ அவர்களின் அராஜக ஆட்சி அதன் காரணமாக மக்களின் எதிர்ப்பு, அந்த சந்தர்ப்பத்தில் ரஜினி கொடுத்த குரல் பயன் கிடைத்தது, ஆனால் அடுத்த தேர்தலில் ரஜினியின் குரல் எடுபடவில்லை, மொழி அடிப்படையில் அவர் மீது தாக்குதல் நிச்சயம் தொடுப்பார்கள், அதை நாம் தடுக்க முடியாது, அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டிய சாமர்த்தியம் அவருக்கு வேண்டும், அது தான் அரசியல், ஏதோ சிலரின் பின்புலத்தை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக உள்ளே வந்து எல்லாம் ஜெயித்துவிட முடியாது,மேலும் ரசனி பார்ப்பன பாசிச RSSன் கைக்கூலியாகவே தமிழ் நாட்டை ஆளத்துடிக்கிறார்.அதன் மூலம் தமிழினத்தின் வேர்களை அழித்து தமிழினத்தின் அடையாளம் சுத்தமாக அடையாளம் தெரியாமல் ஆக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிச RSS க்கு துனைபோகிறார் இந்த ரசனிகாந்தன் கெயிக்குவாடு, இல்லாவிட்டால் இவர் தமிழ்நாட்டை ஆள அவசியம் என்ன வந்தது??

ரஜினி சொல்லி விட்டால், 
தமிழர்கள் அனைவரும்காவி உடுத்துவார்களா ? 
இறைவனை போற்றுவார்களா ? 
ஆஸ்ரமம் சென்று சன்யாசிகளிடம் ஆசி பெறுவார்களா ?
 ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால், வேண்டா வெறுப்பாக இவரைத் தொடர்வர் ஆனால் மற்றவர்கள் ?? 




தமிழ் நாட்டில் அரசியல் செய்ய பொறுமையும், சகிப்புத்தன்மையும், திட்டமிடுதலும், தந்திரமும், சாமர்த்தியமும், கோடானு கோடி பணமும், உண்மையை மறைத்தலும், அவசியம் ரஜினிபால் தாக்குபிடிக்க முடியுமா ?? எதிரிகள் அல்ல, இவரிடம் உள்ளவர்களே இவர் உணராது இவருக்கு குழி பரிப்பர். ஏனெனில் அரசியல் அப்படி தடுக்கும் சாமர்த்தியம் உண்டா ?? 
ஆன்மீகம் ஒரு யுக்தி, அவ்வளவே நான் மேலடுக்கிய மற்ற வித்தைகளே ஒரு அரசியல்வாதியை தமிழ் நாட்டில் வெற்றி பெற செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இவர் இமயம் விரைவார் அல்லது வேறு காரணம் சொல்லுவார். கட்சி ஆரம்பிக்க மாட்டார். களம் காண மாட்டார். ஏனெனில் தன்னால் முடியாது என்பது அவருக்கே தெரியும் தன்னை நம்பியிருந்தால் 20 வருடம் முன்பே கட்சி ஆரம்பித்து களம் கண்டிருப்பார். தற்போதைய அறிவிப்பு வெறும் கண் துடைப்பு.மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டைப் பார்த்து சிரிக்கிறாங்களாம். உண்மை சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கிறவனை தலையில் தூக்கிவச்சுக்கிட்டு ஆடுவதை பார்த்து சிரிக்கிறார்கள். சிவாஜி கணேசனுக்கு கூட பெற்ருத்தராத பத்ம பூஷன் விருதை ரஜினிகாந்துக்கு பரிந்துரைத்த தமிழக அரசைப்பார்த்து சிரிக்கிறார்கள். சொந்த மண்ணின் திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியாமல் எப்பவுமே யாரவது வெளியில் இருந்து வந்து நமக்கு தலைமை தாங்குவார்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் தமிழர்களைப்பார்த்து சிரிக்கிறார்கள். ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறான் "தமிழ் மக்களுடைய தரம் இவ்வளவு தாழ்ந்து விட்டது" என்று. அந்த தமிழ்மக்கள் கொடுத்த ஆதரவில்தான் இன்று  சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறான்.தரம் தாழ்ந்த அந்த தமிழ் நாட்டில்தான் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இதையெல்லாம் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். அழகான தமிழை சினிமாவில் கொசசை படுத்தியது மட்டும் இல்லாமல்,பொது மேடையில் கூட தமிழை சரியாக பேசத்தெரியாதவன் பின்னே தமிழ்மக்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து தமிழகத்தை விட்டு வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம்.


தரனியை ஆண்ட தமிழனே தரம்கெட்டுப் போய்விடாதே.!

வந்தவனெல்லாம் ஆள்வது அழகல்ல எம் இனத்திற்கே இழுக்கு என்பதை எப்போது உணரப்போகின்றாய்..???

கர்நாடகவில் கட்சி தொடங்குவேன் என்று சொன்ன தமிழனையே அடித்து நொறுக்கினார்கள் இது அல்லவோ இன உணர்வு,


இங்கு அப்படியா தமிழனையே கேவலமாக பேசி தமிழர்களை செருப்பாய் மிதிக்கும் ஈனர்களின் கால்களில் விழுந்துகிடக்கின்றாய்.

எங்கே போனது உனது வீரம்.?? எங்கே போனது உணர்வு..??? எங்கே போனது தன்மானம்.???


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

1 comment: