Friday, 23 November 2018

பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணி !!

பொதுவாக இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது வரும் காலங்களில் பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று சிந்தித்து செயல்படுவதுதான் அரசு மற்றும் அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணியாக இருக்க முடியும்..!
Related imageதற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் செய்திகளின் மூலம் பல விஷயங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன.
மின் கம்பங்கள் மொத்தமாக சரிந்து பெருவாரியான இடங்களில் இன்று வரை மின்சாரம் திரும்பவில்லை.
குடிசை வேய்ந்த வீடுகள், ஓடு பரத்திய வீட்டின் கூரைகள் புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
விவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்துள்ளன.
மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன..!
இவற்றில் மின்சாரக் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுத்துறை செயல்படுகிறது.
இதற்கிடையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநிலமெங்குமிருந்து செல்லும் நிவாரணப் பொருட்கள் தன்னார்வலர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்..?
இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று என்று மார்தட்டிக் கொள்ளும் நம் கண்களை இந்தப் புயல் திறந்துள்ளது எனலாம். எத்தனை எத்தனை மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி ஒண்டுக் குடிசையில் வாழ்கின்றனர் என்பதைப் பார்க்கும் நமக்கு வளர்ச்சியின் அளவுகோல் என்ன என்பதில் சந்தேகம் வருகிறது..!
தங்களது இருப்பிடங்களை இழந்த மக்கள் இனி என்ன செய்வார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி மேற்கூரையை வேய்ந்து தங்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவார்கள். நாமும் அவர்களை மறந்து விடுவோம்..!
அவர்கள் உழைப்பெல்லாம் வட்டி கட்டியே சரியாய்ப் போகும். காலங்காலமாக குடிசைகளிலேயே அவரகள் காலம் கழியும். அரசு கொடுக்கும் சிறிய தொகை அவர்களின் அன்றைய பிரச்சினையை மட்டுமே தீர்க்கும்..!
இந்த சூழலில் அரசு நெடுங்கால திட்டம் ஒன்றை வகுப்பது அவசியமாகிறது. புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வீடு திட்டத்தை முழுமையாக புயல் பாதித்த இடங்களில் குடிசைக்கு மாற்றான வீடுகள் கட்டிக் கொடுக்க செயல்படுத்த வேண்டும்.
நாட்டு மக்களை அதுவும் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை கைதூக்கி விடுவதுதான் அரசின் பணி. அதை இந்தப் பேரிடரால் வீடிழந்து நிற்பவர்களுக்கு உடனடியாகச் செய்வதே தலையாய பணியாக இருக்க முடியும்..!

புயல் பாதித்த பகுதியில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் பலர் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை முன்வைத்தனர். வெகுசிலர் அப்படி கட்டிக் கொடுக்க வீடு ஒன்றுக்கு என்ன செலவு ஆகும் என்றும் கேட்டனர்.
குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பது என்பது அரசால் முடியாத காரியமல்ல. மாநில அரசின் திட்டம் மத்திய அரசின் திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதிகளுக்கு அந்த நிதியை திருப்பி விட்டாலே போதும். மேலும் இதற்கான நிதிகளை பெரு நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்தும் பெறலாம்.
அதென்ன சமூக மேம்பாட்டு நிதி..? பெரு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சமூக மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும் என்பது சட்டம். அதைப் பல நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் எதையாவது சமூகப்பணிகள் என்ற பேரில் செய்து கணக்குக் காட்டி விடுகின்றனர். ஆனால் அந்த நிதி முழுவதையும் அரசே அவர்களிடம் வாங்கியோ அல்லது அவர்களிடமே அவரவர் பங்குக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தாலே போதுமானது.
ஒரு வீடு என்பது கழிவறை வசதிகளுடன் 186 சதுர அடியில் கட்ட முடியும். அதற்கான உத்தேச மதிப்பீடு ₹.2லட்சம் ஆகும்.
கிராமந்தோறும் பாதிக்கப்பட்ட குடிசைகளைக் கணக்கெடுத்து அவரவர் இடங்களில் இந்த வீடுகளைக் கட்டிக் கொடுக்க பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்.
வாழ்வாதாரங்களையும் வாழ்வையும் இழந்து நிற்கும் அம்மக்களுக்கு காலத்தால் செய்யும் இது போன்ற நிரந்தரத் தீர்வளிக்கும் செயல்பாடுகள் மூலமே வாழ்வளிக்க முடியும் என்பது நமது நம்பிக்கை..!
செய்வார்களா..?

HB பென்சில் என்றால் என்ன? ஒரு தவகல் !!

ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது.
கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார்.
No automatic alt text available.நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது.

முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன்  அஜ்வத் மஹதி HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை.
நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது.
கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து கொண்டேன்.
பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள். கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது.
இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற களிமண்ணையும் கிராபைட்டுடன் கலக்கிறார்கள்.
இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும்.
H என்பது பென்சிலில் இருக்கும் hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது.
HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள்.
HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.
BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.
1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.
6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.
H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.
இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால் வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.
இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம். 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 19 November 2018

உலக கழிப்பறை தினம் !! ஒரு சிறப்பு பார்வை..

இன்று நவம்பர் 19 உலக கழிப்பறை தினம், உலகத்தில் இதெற்கெல்லாம் தினம் வைப்பார்களா? என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் தயவு செய்து இதனை படியுங்கள்..
Image may contain: text that says "Sorld toilet day"இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கழிப்பறை இன்றி இயங்கி வருகின்றன. ஒரு சாதாரண கழிப்பறை இவ்வளவு பிரச்னையா என்பவர்களுக்கு இன்னமும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. 
உலக அளவில் ஒரு நாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போகின்றன. உலக அளவில் ஆறில் ஒரு பெண் குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திவிடுகிறது. 1 பில்லியன் மக்கள் இன்றளவும் திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த சூழல் ஏன் என்று பார்த்தால் போதிய சுற்றுச்சூழல் வசதியை அந்த நாட்டு அரசுகள் ஏற்படுத்தி தராததும், கழிப்பறை பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாததும் தான்.
இந்த விழிப்புணர்வு இல்லாததால் திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி 50 கொடிய நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் இந்த பிரச்னை ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிதாக எடுத்து கொள்ளப்படுகிறது. யுனிசெஃப் சர்வேயின் படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வுகள், புள்ளி விவரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அன்றாட வாழ்வில் இந்தியாவில், ஏன் தமிழகத்தில் உள்ள ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளை பார்ப்போம், ஒருவர் தனது வேலை நிமித்தமாக 60 கிமீ தொலைவு பயணிக்கிறார் என்றால் அவர் தனது வீட்டில் கழிப்பறையை பயன்படுத்தினால் அவர் சென்று சேரும் இடத்தில் இருக்கும் கழிப்பறையைதான் அடுத்து பயன்படுத்தும் நிலை உள்ளது. பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலைய கழிப்பறைகளிலும் சுத்தம் என்பது எவ்வளவு ரூபாய் என்று கேட்கும் அளவில் இருக்கிறது. இது ஒரு ஆணுக்கு என்றாலே வருத்தமான விஷயம். இதுவே ஒரு பெண் என்றால் இன்னமும் மோசம், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவரோ அல்லது மாதவிடாய் நேரங்களில் உள்ள பெண்களோ நிச்சயம் கழிப்பறையை பயன்படுத்தாமல்தான் அவதிப்படுகிறார்கள். வேறுவழியில்லாமல் இந்த கழிவறைகளை பயன்படுத்துபவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.
கிராமங்களில் திறந்தவெளிதான் நிரந்தர கழிப்பறை என்ற சூழல் இருக்கும் போது, ஆண்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழிப்பறையை பயன்படுத்த முடியாமலும், பெண்கள் விடியற்காலை மற்றும் இரவு இருட்டிய பின்பே திறந்த வெளியில் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் கிராமத்தில் என்றால், நகரத்தில் வேறு பிரச்னை. நெரிசல் மிகுந்த சாலையில் ஒருவர் தனது இயற்கை உபாதையை கழிக்க வேண்டுமெனில், அவர் குறைந்த பட்சம் பேருந்தில் 20 நிமிட பயணத்தை மேற்கொண்டால் தான் முடியும் என்ற சூழல் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது.
படிப்பு வரவில்லை, பாடம் கடினமாக உள்ளது என்று பள்ளியை விட்டு நிற்பது கூட தவறு. எப்படியாவது படிப்பை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற சூழலில் இந்தியாவில் குழந்தைகள் கழிப்பறை வசதியில்லாமல் படிப்பை நிறுத்தினால் என்ன நியாயம்? இந்தியா பொருளாதார தன்னிறைவு பெற்ற நாடு, உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம், இந்தியாவை வல்லரசாக்குவோம் என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் நாம் இது போன்ற விஷயங்களையும் மறந்து விடுகிறோம்.
மேக் இன் இந்தியா எனும் போது முதலில் இந்தியாவில் கழிப்பறைகளை தயாரிக்க திட்டமிடுங்கள், தூய்மை இந்தியா என்று கங்கையை சுத்தம் செய்யும் நேரத்தில் சில கழிப்பறைகளை கட்டி மட்டும் கொடுங்கள் அவர்கள் சுத்தம் செய்து கொள்வார்கள் என்று இந்தியாவில் ஒருவன் பொதுக்கழிப்பறைக்குள் தயக்கமின்றி செல்வதும், கழிப்பறை இல்லாத வீடுகளே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகிறதோ அன்று தான் இந்தியா தூய்மையாகும். ஆகவே 
 கழிப்பறை கட்டுங்கள் இந்தியா தூய்மையாகும்! 
டாய்லெட் குறும்படம் https://www.youtube.com/watch?v=oJ7PbRDbShg

Friday, 16 November 2018

The Middle East's top 25 Oil & Gas EPC contractors !!!




1 Petrofac, (UK) - http://www.petrofac.com
2 Samsung Engineering (South Korea) -
http://www.samsungengineering.co.kr
3 NPCC (UAE) - 
http://www.npcc.ae
4 Fluor (USA) - http://www.fluor.com
5 Hyundai Heavy (South Korea) - http://english.hhi.co.kr
6 Saipem (Italy) -
www.saipem.com
7 KBR (USA) - www.kbr.com
8 Hyundai E&C (South Korea) - http://en.hdec.kr
9 McDermott International (USA) - http://www.mcdermott.com
10 JGC CORP (Japan) - http://www.jgc.co.jp/en/
11 Kentz (UK) - http://www.kentz.com
12 Bechtel (USA) - http://www.bechtel.com
13 Maire Tecnimont (Italy) - http://www.mairetecnimont.com
14 Foster Wheeler (UK) - http://www.fwc.com/
15 Chiyoda Corporation (Japan) - http://www.chiyoda-corp.com/en/
16 Worley Parsons (Australia) - http://www.worleyparsons.com
17 Jacobs Engineering (USA) - http://www.jacobs.com
18 CH2M HILL (USA) - http://www.ch2m.com
19 Leighton Offshore (Malaysia) - http://www.leightonoffshore.com
20 SNC-LAVALIN (Canada) - http://www.snclavalin.com
21 Larsen & Toubro (India) - http://www.larsentoubro.com
22 Target Engineering (UAE) - http://www.target.ae/
23 Wood Group - (UK - Scotland) - http://www.woodgroup.com
24 SK E&C (South Korea) - http://www.skec.com/
25 Lamprell (UAE) - http://www.lamprell.com/


The list includes companies belonging to the following countries:

USA: 6
UK: 4
South Korea: 4
UAE: 3
Italy: 2
Japan: 2
Australia: 1
Canada: 1
India: 1
Malaysia: 1

புயல் கரையை கடந்துவிடும்!! இன்னும் எத்தனை உயிர்களை இந்த ஆணவ சாதி தின்னப்போகிறது ?

Image may contain: one or more people
திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை.
ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த மகள் சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, 'சாதி பிரச்சினை வரும்' எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு 'பெண் கேட்டு'ள்ளார்.
அதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
ஓசூர் பேருந்து நிலையம் அருகே 'ரகசியமாக' வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் - சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.
முதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ''காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்''என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் - சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.
இதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், 'எதுக்கு இந்த பக்கம்?' என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ''ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்''என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர் கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் - சுவாதியை அடித்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, 'பிரிந்து போய்விடுமாறு' மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.
அம்பேத்கர் டி -ஷர்ட்
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை. சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
நந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி - ஷர்ட் துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, 'சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.
இதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் - சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரிந்துகொள்ள முடியவில்லை
இந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.
சாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 'ஒற்றுமை அவசியம்' என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.
என்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும்? எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது? எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும்? புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள்? மனசாட்சி உள்ள மனிதர்களால் தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌ சாதாரணமாக கடந்து போக முடிகிறது?
இத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், 'தலித் தலைவர்களால்' ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? எதையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.
எதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.
எங்கிருந்து வருகிறது வெறி?
சாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார். 'பொசுக்'னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்? பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.
ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல் புரட்டி போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.
புயலை விட சாதி கோரமானது

Saturday, 10 November 2018

எது கெடும் ?

Image may contain: text
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
*11) நாடாத நட்பும் கெடும்.*
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
*41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு
நன்றி

Friday, 2 November 2018

அறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி தமிழ் !!

Image may contain: 1 person"தமிழ் அறிவியல் படிப்புகளுக்கு உகந்த மொழி என்பது அவரவர் கற்பனை; உகந்ததாக வேண்டும் என்பது நமது விருப்பு; ஆனால் தற்போது உகந்ததாக இல்லை என்பதே உண்மை. இப்போதுள்ள அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை வடிவமைத்து முடிக்கும்போது அறிவியல் பல்லாயிரம் தொலைவு சென்றிருக்கும். அறிவியலின் ஆழம் தெரியாதவர்களே தமிழ் அறிவியலைப் படிப்பிக்க ஏற்ற மொழி என்று கூறுகின்றனர்." என்கிறார் ஒரு மருத்துவத்துறைப் பேராசிரியர்.
அறிவியலின் ஆழம் தெரியாமல் சொல்லவில்லை நாங்கள். அறிவியலின் ஆழத்தைத் தெரிந்துதான் சொல்லுகிறோம்.
அறிவியலைத் தமிழில் கற்பிக்கும்போது ஆங்கிலத்தில் உள்ள எல்லாக் கலைச்சொற்களையும் தமிழில் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்கும்போது அவசியமான இடங்களில் ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே கையாளலாம் என்பதுதான் எங்கள் முடிவு. தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடநூல்கள் புழக்கத்தில் உள்ளன என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.
ஆங்கில மொழியில் உள்ள அறிவியலானது ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற பல மொழி கலைச்சொற்களையும் அது உள்வாங்கி இருக்கிறது என்பதைத்தான் நாம் அறிகிறோம்.

ஆங்கிலவழிக் கல்வியால் பாடப் பொருளை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள முடிவதில்லை. படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களையும் விஞ்ஞானிகளையும் ஆங்கில வழிக் கல்வியால் உருவாக்க முடிவதில்லை. ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் ஆங்கிலவழிக் கல்வியால் துறைசார் அறிவை ஆழமாகப் பெற முடிவதில்லை. புரிந்துகொள்ள முடிவதில்லை. பல மாணவர்களை விசாரித்த பொழுது இந்த உண்மை வெளிப்பட்டது.
தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே பாடப் பொருளை நன்கு விளங்கி உள்வாங்கிக்கொள்ள முடியும். படைப்பாற்றல் மிக்க விஞ்ஞானிகளையும் ஆய்வாளர்களையும் உருவாக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கில வழியில் கற்பிக்கிறார்கள் என்பது பெயரளவுக்குத்தான். எல்லா பேராசிரியர்களும் வகுப்புகளில் பாடம் எடுக்கிற பொழுது தமிழில்தான் விளக்கி சொல்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் மட்டுமே ஆங்கிலக் கலைச்சொற்கள். விளக்கங்களை தமிழில்தான் கொடுக்கிறார்கள்.
தமிழில் பாடநூல்கள் இல்லை என்பது மட்டுமே ஒரு குறை.

ADVANTAGES OF STUDYING PIPING ENGINEERING/TECHNICAL COURSE?

Piping course can be said to be a job oriented course. It helps one become industry ready. Usually, piping courses are pursued by students after they complete graduation in Engineering. But not all engineering graduates may take up this course. For example- Computer Engineering graduates. Piping course just won’t suit this branch! So, for which branches is piping course tailor made for? Those branches are- Mechanical Engineering and Chemical Engineering! In this article, I will explain to you why doing piping course after Mechanical/Chemical Engineering will let you flourish!Every course has its advantages and disadvantages.

And also This entirely depends on what kind of lifestyle and job nature you would prefer in your workspace.If you are a hard working person and prefer a very stable career then manufacturing would be right choice.But the career growth is very slow and salary levels ranges are low when it is not a OEM company.The salary always depends on the no of years of experience and not on the skill sets you posses.This is hard reality .But if you want a better career growth i would suggest design field as your salary increases with the skill sets you develop.And if the company you work gets projects from overseas there are chances for you for a overseas trip as well.The working environment is also like software company when you are pursuing a career in design.


Piping and HVAC has a good scope in middle east only but salary levels are not good in India.


If you want to stay in India and want a good career with salary package then career in product design in Automotive or Aerospace field is best choice.


If you are looking for a right place to pursue training in design then i would suggest Element6 Technologies. Element 6 is a Bangalore based engineering services company focusing on Automotive and Aerospace sectors helping product development for reputed OEM companies. They will train you on product design with domain based training and not only on software training like other institutes.After training placements are assured and they can crack any interview after training .They take very few students per batch and admission is only through interview.


Trainer plays a key role in how a student get prepared for a job.I have seen many institute use previous batch students as trainers.Even if there are trainers they have no industrial experience or they dont have relevant experience in that job. So,the students who get trained by them under perform during interviews.But Element 6 have working professionals from industry as full time trainers.They hand hold the entire training period and make them industry ready.The training is very extensive and within 6 months they become competent enough to attend interviews which are meant for 1–2 years.


Apart from technical they focus more on softskill and personality developemnt training along with live projects and industrial visits a.So,Students get a real time work experience in the training and they are ready to work from day 1 when they are put in work environment.


Detail engineering in piping projects consists of the engineering, design, detail and layout of process and utility equipment, piping and instrumentation. This three-day course provides participants with the background required to design, engineer and complete piping assignments.


This course should be of interest to people employed in any area that piping is present (Refinery, Chemical, Power, Pulp and Paper, Utility etc.) The course introduces engineers, designers and construction personnel to the various procedures involved in the development and engineering of Piping and Instrumentation Diagrams (P & ID’s), Equipment Plot Plans, and Piping Arrangements. Additional material shall cover pipe sizing, pump calculations and piping stress analysis.


Traditionally, there has been little formal training in this area and design decisions often have to be made based on practical considerations without formulae or code reinforcement. Completing piping drawings take up the majority of man-hours in the design of a process plant.


Each participant will receive a copy of the book, Detail Engineering and Layout of Piping Systems


Course RequirementsThe instructor requests that each participant brings his/her laptop to class.


You Will Learn To - Produce pipe sizing calculations and complete pressure drop calculations

- Select and size pumps and equipment

- Prepare equipment specifications and drawings

- Interpret piping specifications, instrumentation and process control

- Specify piping components, valves and fittings, piping hangers and supports

- Perform a static piping stress analysis


OutlinePlease click HERE to view the course outline.


Who Should Attend - Piping engineering and design personnel wishing to expand their knowledge of piping and instrumentation

- Engineers, designers, CAD operators and draftspersons in the piping field

- Practicing engineers and designers who may have experience in related disciplines and wish to expand their knowledge of the piping area

- Piping fabricators, contractors and suppliers wishing to understand the relationship of manufacture and fabrication to the design, layout and construction of piping systems

 Please  check  following sample institute link ..


https://www.astsglobal.com/oil-gas-piping-engg-design.php


Prepared  & Written by M.Ajmal Khan.

Thursday, 1 November 2018

Piping design is one of the best career options for Mechanical Engineers !!






Dear Mechanical Engineers,

I want to tell you why piping design is one of the best career options for mechanical engineers who just passed out from College.


When a student pass out from engineering college after completing Mechanical Engineering, there is a very big confusion facing him, where to go ? The first option for most of the students from middle class families is to get a job immediately via campus interview. Many such students eventually get selected in Campus interview and pursue jobs totally different from their field of study. Many students of Mechanical, Civil, electrical , Instrumentation and Chemical engineering branches are hired by IT companies for coding work. They happily join these companies and start learning coding soon, so what they learned as basics in their field of study becomes waste.

Some students go for doing higher education in India and abroad and later land up with MNC’s outside India, never to return. Some students join their family business and run the same or go for MBA course. Do to lack of guidance and research opportunities, many students migrate to metro cities and start searching for jobs, our metro cities like Mumbai, Delhi, Bangalore etc are overcrowded with engineers now days. These students are not employable and land up in low paying jobs.

Most of the engineering colleges in our country do not counsel their students what to do and where to go after completing their degree. The basic reason is the lack of knowledge of faculty members who has only bookish knowledge and never care to guide the students. The worst part is that students don’t know what to do and where to go after completing degree, most of them land up in wrong jobs and spoil their career.

Each and every student who complete their mechanical engineering degree has unique qualities, some are good designers, some can be good in marketing, others in research and development, but these students never know their strength and weakness. Thus a brilliant mechanical engineer with aptitude in design end up working as marketing executive selling industrial valves and end us as poor marketing engineering. A mechanical engineer with aptitude in marketing end up as a production and quality control engineer and end up in job which he don’t like. After marriage and settlement, they are unable to change their profession and work in fields which are not suitable for them.

So, what is the solution ?

As soon as a student pass out from engineering college doing any degree, he/she must be given a rating certificate based on his or her skills. A team of experts must evaluate his/her personal and professional skills and given him a certificate – stating which filed the candidate will shine in his/her career. The rating must be done by an independent agency and this must be made mandatory. After this rating is done, no student will ever have any confusion in his life, which field he will shine best in his/her career, sooner or later in life.


The use of Piping has become a prime source in recent times, as they are needed in big petrochemical plants or oil & gas piping industry as well. Hence, a considerable experience is required to handle these piping based structures and the engineers having an apt knowledge are preferred in the industry. The Piping Design and Drafting online training course will acquaint the candidates about the knowledge of design and drafting principles and implementing them successfully. This can help the candidates to get better job prospects and achieve heights.


Many Institute offers the Piping Design and Drafting online training program to attain the benchmark of the industry and let the candidates have a deeper knowledge about the concepts needed in Piping Engineering. The expert trainers will help the candidates know more about Piping industry and the role of Engineers in it along with the following: 

Preparation of Isometric drawings
Bill of Materials
Piping layouts
Computer Aided Drafting


The course equips the candidates with the skills needed to become an efficient Piping Engineering. The aspirants may join for other online courses under CAD/CAM that include the courses like AutoCAD and SP3D SmartPlant online training.

Course Contents Introduction to industry
Role of mechanical draughtsman in various fields of industry
Development of drafting skills and basics of engineering drawing
Guidelines of various process plants and their drafting requirements
Basic fundamentals and concepts of piping design and drafting
Preparation of Isometric drawings and Bill of Material
Basics of plot plan development
Detailing of Pipe Rack and YArd piping
Guidelines of equipment used in process plant
Development of equipment & piping layouts
Preparation of nozzle orientation
Basic study of selected manufacturing processes
Guidelines to preparation of as built drawings
Overview of international codes and standards
Computer Aided Drafting
Basic information about welding, inspection & testing



Smart Plant “ 3D (SP3D) is a modeling software used in the engineering sector for pipe designing. Multisoft Virtual Academy conducts SP3D online training for engineering candidates with an interest in the CAD domain and aspiring to establish a career in pipe designing. This SP3D training builds the skills required for executing detailed designing projects in power plants, petrochemical setups, oil and gas industry, and food and beverage manufacturing units etc.


After completing this Smart Plant “ 3D online training, participants will gain proficiency in piping and structural modeling. Individuals will additionally become adept with the following:
WEBS items, Templates, and style rules
Space management and control points
Piping hierarchy, piping routing and piping placing
Isometric drawing extraction
Grid/Coordinate System
Equipment placing


 Student candidates will also understand how to identify nozzle orientation; execute solid and structure modeling; and create designs for structure components like slabs, walls, ladders, handrails etc.

1. Introduction • SmartPlant 3D Introduction • Templates/Session Files • Filters (Database query) • Views • Common Toolbar • Selecting Objects • Surface Style Rules • WBS Items • Common Toolbar • Space management • Inserting Reference Files • Placing Control Points • Interference Detection

2. Piping • Piping Hierarchy • Route Pipes • Inserting Components • Routing a Sloped Pipe • Routing Pipes from the P&ID • Placing Instruments • Placing Piping Specialty Items • Placing Taps • Inserting Splits • Manipulating Views • Creating Spools • Sequencing Objects • Creating Isometric Drawings Smart Plant - 3D (SP3D) Instructor-led

3. Equipment • Equipment General Overview • Placing Equipment • Placing Equipment Component • Equipment Positioning Relationships • Placing Equipment Shapes • Equipment Nozzle\Ports • Inserting • Manipulating Equipment • Solid Modeling intro

4. Structure • Placing Grids/Coordinate systems • Linear Member System • Copy/Paste Mambers • Structure Modelling • Slabs • Walls • Stair/Ladders/Handrails • Footing • Equipment Foundations

5. Structure • Placement of supports • Hangers, Spring • Guide, Rest • Making special pipe support


Prepared by : M.Ajmal Khan