கொரனா வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது......அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும் பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகி விட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்.......இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள் இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது......
Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God) - Education is foremost to shape a person's character in life. - Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator. - Nothing can change a person but the person itself. If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Friday, 24 April 2020
வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? நேர்மையான ஓர் அலசல் !
அவை ஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு.....வேலையிழந்தோர் பல லட்சம் ......
இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...
1. மது..
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்... உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகார்ர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்... வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...
இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...
2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்... மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.
3. நூறுநாள் வேலை..
இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை... ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...
4. இலவசங்கள்...
அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..
5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை...
இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது... சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்த்தாக சொல்லுவார்கள்..
தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் ...... 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்...
இதுதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன் வேலைகளுக்கும்...
நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை... சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில் 30% கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்...
கடைசியாக..
நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை...
கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , இன்னும், கருப்புகள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்...
ஆம்..
தமிழன்என்றோர்இனமுண்டுதனியே அவனுக்கோர்குணமுண்டு
உண்மைதான்..
No comments:
Post a Comment