Sunday, 27 February 2022

Medical education why fall inadequate in India !!

Bachelor of Medicine and Bachelor of Surgery popularized as MBBS are considered to be the most prestigious professional courses in the country. Every other student in the country aspires to become a doctor. The affordable fee of Rs. 10000 annually in the central government funded medical institutions AIIMS is a major attraction. For All India Quota the annual fee ranges between 50,000 to 2, 00,000 for eligible MBBS students. Bachelor of Medicine and Bachelor of Surgery popularized as MBBS are considered to be the most prestigious professional courses in the country. Every other student in the country aspires to become a doctor. The affordable fee of Rs. 10000 annually in the central government funded medical institutions AIIMS is a major attraction. For All India Quota the annual fee ranges between 50,000 to 2, 00,000 for eligible MBBS students.

Medical studies in India in the top medical colleges offer ample of advantages to the students. There are several top MBBS colleges in India where you are going to learn a lot and have a successful career ahead.

The following are the various benefits of studying medicine in India:

  1. The country has top-ranked medical institutions in the country that will teach you medicine using the best teachers in the country.
  2. India offers a good number of the suffering patients where you can study various medical complications. This will widen your base of understanding medicine.
  3. MBBS education in India is all about making you practice in real medical emergencies which are a good prospect for many students.
  4. Since, India is your motherland; you will feel happy in being associated with a medical college of the country.
  5. You will never feel away from your country, family, friends, and your favourite food.
  6. There is no need to qualify the NMC Screening Test or the FMGE exam which lessens your burden further.
  7. You are given your license to practice as soon as you graduate with your MBBS degree.
  8. If you grab a government medical college of the country, your fee is going to be a negligible amount.
  9. You can easily complete your MBBS study in India within a budget of 3-5 lakhs.
  10. You will get an opportunity to be a part of many international and national conferences while pursuing MBBS in India.
  11. It will be easy for you to apply for jobs and even for part-time work in some private medical college since you will be graduated from a renowned medical college of the country.
  12. It will be easy for you to prepare for the postgraduate examinations for higher studies after you complete your MBBS.
  13. Medical curriculum followed in the country is same in all the medical colleges, be it government or private.

Open the wide opportunities for yourself after the successful completion of MBBS in India

  1. After the successful awarding of the MBBS degree, you can go for a list of professional possibilities for medical graduates approved by the National Medical Commission (NMC).
  2. You can go for job opportunities within the clinical enterprise and unleash the growth opportunities.
  3. There are various hospitals that you can go for an internship with to gain the medical level of experience.
  4. You can study for the postgraduate courses and study for the PG NEET examinations to specialize in the various medical streams.
  5. Several medical colleges offer you the PG courses.
  6. Students can also go for PG courses abroad and apply to various medical universities in the world.
  7. This is one of the best options to go for MBBS abroad and pursue quality education and clinical profession.

What is the Major Difference in Doing MBBS in India and MBBS Abroad?

  1. The course duration: all the medical universities outside India have an academic curriculum that for 6 years comprises of 5 years of theoretical study and one year of internship. For MBBS in India, this curriculum is for 5.5 years which 4.5 years of study and one year of internship.
  2. The course fee: Indian government colleges do not charge for a hefty fee structure as compared to the Indian private medical colleges. As for the medical colleges abroad, they do not ask for donations and the academic fee per year is less than that of the Indian private medical institutions.
  3. The reputation: not many of the Indian medical colleges are listed in the top medical colleges ranking in the world. Even AIIMS, Delhi, India’s top medical college is not there in the top 100 medical colleges in the world. In such a situation, it is better to be associated with a medical college abroad than going to a private medical institution.
  4. Personality development: living outside India will inculcate a good personality within you owing to the global exposure that you will receive. You will become more learned and experienced when you study MBBS abroad as compared to India.
  5. The NMC Screening Test: if you want to return after your MBBS abroad to India, you will have to appear for the NMC Screening Test also called as the FMGE to obtain the license for practicing medicine in India. When you study from any medical college in India, you are provided with a license after your graduation without any need for sitting for an examination.
  6. The global exposure: when you go to studying medicine abroad, you will meet a lot of new people from different countries and you learn their culture as well. This helps in providing you a global exposure for better personality development.
  7. Clinical knowledge: India has a growing population and so the hospitals are flooded with patients every single day. You will indeed get a good level of clinical knowledge while studying and practicing in India, but you can get into new researches and development whilst studying MBBS abroad.
  8. World-class infrastructure: except a few medical colleges of the country, medical facilities in India lack basic infrastructure. If you go for MBBS abroad, you will get to indulge in quality education that too with world-class state of the art infrastructure medical universities.
  9. Global reputation: it is always better to go and study in universities that have a global reputation in the world. MBBS in Abroad offers you several advantages to indulge on a global degree.
  10. Family and Friends: with MBBS in India, you will be living in the country and can meet your parents, family, and friends on special occasions. You will also not miss the Indian food and the feel the vibe of living in your own country.
  11. The NEET exam: for pursuing MBBS in India, you need to score good marks and top ranks to get a seat into the top medical college of the country. For this, you have to appear for the NEET exam too.


The National Medical Commission’s website shows 43,310 MBBS seats available in 284 government medical colleges in India, and 41,065 MBBS seats in 269 private medical colleges. This means only about half of the already meager seats are in affordable government colleges. And there’s a massive difference in the cost of studying in “small countries”, When compared to private colleges in India. While 8.70 lakh candidates cleared NEET-UG in 2021, there were only 88,120 undergraduate seats in medical colleges in India as of December.

 The seats of the medical colleges are increasing gradually but if the govt increases it like that of engineering the quality of doctors would be as same as the quality of engineers which most of the private engineering colleges are producing so keeping in mind the quality of doctor the govt is taking adequate steps. We all have to agree that there is a huge shortage of doctors in our country but the problem which has been the prime reason behind this shortage is not the number of seats but also the doctors going abroad, the government spends almost more than 50 lakhs on each doctor in a government college and the fees which it charges is like peanuts in front of the actual fee and what some do in return they go abroad do the services for other countries, pay taxes there, I m not saying that you should not go abroad but there is a saying that when there is a fire in your house use your bucket of water for your own purpose. So, the doctors should stay in our motherland and first give their services here and then if the doctors are inadequate number then should go abroad, and the government also has to play a huge role in this they have to increase the salaries of doctors so that they can easily stay here and have a quality of life and the parents of students should also keep in mind that yes doctors and engineers or maybe some few professions have got more respect in our society but this is due to us BCS we gave them more imp than other, so. Every profession should be given its due respect whether it be sports, music, or anything else many people are of the opinion that doctors from private medical colleges are not up to the mark as compared to government medical colleges, but this is not the absolute truth since just as money can buy seats in private certain other factors known to everyone can get you a seat in a govt medical college. Hence, there can be academically weak students from both places. Some students from private colleges I know have done extremely well, managing to get postgraduation abroad as well as good placements. It is important to remember I know this that irrespective of the degree a doctor has very rarely will he take responsibility to manage a patient unless he is absolutely sure about his capabilities. Many of these doctors who own nursing homes etc, usually call another doctor for another opinion in complicated cases, and rarely will a surgeon operate on a patient without an expert assistant whom he can rely on, this is very common, in serious life-threatening cases usually every doctor sees to it. That the best doctor sees the patient. For routine issues, it is the responsibility of the patient also to choose his doctor carefully.


Career options for MBBS India produce 88120 MBBS every year, 20000 Foreign Medical Graduates come to India every year. Even if only 16% clear the Foreign Medical Graduates exam that still makes the number of qualified and licensed MBBS doctors produced yearly at 70200. The government which is the largest employer has 1750 vacancies every year for MBBS to work in Primary Health Centres. An about similar number are employed yearly by various Government agencies like railways, ESI, PSUs, army, and other institutions. This leaves 66700 MBBS doctors looking for jobs every year. Some of them will join post-graduation, but even with the increased number of seats still about 35000 MBBS doctors yearly who are unemployed. Since the number of PG seats was limited to about half the current strength up to 2 years ago there is a backlog of previous years which adds to this number which is visible in the 1 lac MBBS doctors appearing for the NEET PG entrance exam every year. These 35000 plus the backlog do join some private hospitals as resident doctors for a few months to a few years but this is not a career option. There is no career in being a resident doctor however good in clinical skills you may be. It is not as if it is a permanent job with a regular pay scale and yearly increments and stock options. Ultimately after some time, you are expected to move on. This is where a problem arises. Those who are left without a post-graduation, have tried multiple attempts to crack the NEET PG, done residents' jobs for 3 years or so, and are not beneficiaries of any reservation so have not got any Government Job, are the ones who are most vulnerable. Already about 27 -28 years of age and expected by their families and friends to be “settled” they are adrift with no sense of direction. Some try to go abroad to seek greener pastures. Setting up a practice is easier said than done. To set up a GP practice in a city is no longer a financially viable option for them. Costs are prohibitive in cities and the GP space in suburbs, small towns, and villages is firmly occupied by entrenched Government approved quacks and cross paths. The turf war among specialists has to lead to a situation where despite being a graduate in medicine and surgery the MBBS can neither practice medicine nor surgery, obstetrics, ENT, Eye, or any other field which today is defined as a specialty. Unfortunately, our courts have contributed their might to creating this mess. Unfortunately, this weakest segment of our profession is the one that is least heard in the innumerable conferences and meetings of professional associations. Is it not our responsibility as seniors to secure the professional needs of your youngsters. 

Just imagine, by simply increasing no. of seats, they start taking students of even low marks in NEET who are incompatible to bear the stresses of medical college life (those who are in med schools know what kind of stress I'm talking about). This would lead to havoc creating average and below-average doctors that would directly put the life of patients and the healthcare of our nation in dangerous hands.

We did not have our first and foremost demand as the creation of more regular posts for MBBS doctors to serve in our country. We cry hoarse about the dearth of doctors but are loathe to provide them as a career option as doctors to the community. National Medical Commission (NMC) was to take the scarcity of MBBS seats seriously, in order to provide enough opportunities for every student who aspires to medical education in India.


MBBS in India Open The Door To Endless Success

Prefer India MBBS from the top Medical Universities in India for a career with unlimited growth opportunities. For successful MBBS aspirants, following are the major job profiles:

  1. Doctors
  2. Physician
  3. Junior doctors
  4. Junior Surgeons
  5. Researcher
  6. Scientist
  7. Medical Professor or Lecturer

General Areas for the Employment are listed below:

  1. Hospitals
  2. Health Centres
  3. Laboratories
  4. Medical Colleges
  5. Biomedical Companies
  6. Nursing Homes
  7. Pharmaceutical and Biotechnology Companies

Wednesday, 23 February 2022

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியால் கமலுக்கு வந்த சோதனை மேல் சோதனை !!


கமல் ஹாசன் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு திரை உலகில் சகாப்தம் படைத்த நல்ல மனிதர் மேலும் திரையில் நம்மையெல்லாம் பலவித நடிப்புகளின் மூலம் திறன் பட செயல்பட்டு நமக்கு சந்தோசம், நல்ல தகவல் மேலும் நல்ல மோகம், தாகம் போன்ற பலவற்றை நடிப்பின் மூலம் வழங்கியவர் நீடுடி வாழ்க நடிப்புடன் என்றென்றும் மத சார்பற்ற நடிகனாக தமிழகத்தில் நேர்மையாளர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம்.. இங்கு வெற்றி பெற திருடர்களாய் இருக்க வேண்டும்.. ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்.. சாதி, மத பிரச்னைகளை தூண்டி விடுபவர்களாக இருக்க வேண்டும். குண்டர்களை கட்சி தொண்டர்களாக வைத்து இருக்க வேண்டும்.போலி மதவாதிகளாக இருக்க வேண்டும். டாஸ்மாக்கை எதிர்ப்பது போல் சீன் காமித்து விட்டு பின்னால் சாராய ஆலை நடத்த வேண்டும்.மொத்தத்தில் உண்மைக்கு புறம்பான எல்லாவிதமான காரியத்திலும் ஈடுபட வேண்டும்.. அது கமலால் பண்ண முடியாது.அதனால் அவரால் ஒரு காலத்திலும் அரசியலில் வெற்றிபெற முடியாது.

ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வருகிறார் என்றால் வரட்டும். அவர் எம் ஜி ஆரை போலத்தான் இருக்கவேண்டும் என்றோ அல்லது அவரை போன்று வெற்றி பெற்று கொண்டே இருக்கவேண்டும் என்றோ நிர்பந்தமில்லை

எம்ஜிஆருக்கு ஏழைகளுக்கு உதவும் எண்ணம் என்ற நீண்ட நெடுங்காலமாக இருந்து இருக்கிறது. அது எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. சரியான நேரத்தில் அவர் இருந்த நிலையில் நன்றாக அவர் பயன் படுத்திக் கொண்டார்.

அவரை விரும்பிய கோடானுகோடி மக்கள் அவரை ஏற்றனர். அது எப்படி எல்லாருக்கும் பொருந்தும் ? இன்று கமல் அரசியலில் நுழைந்து வெற்றிபெறாத பலரின் பட்டியலில் சேர்ந்து இருக்கிறார் அவ்வளவுதான் அவரது கட்சியை அவர் நடத்துவது அவரது கட்சியினர் அவரை தொடர்வது என்பது அவரவர் விருப்பம் அவரை அரசியலை விட்டு வெளியே போகசொல்வதற்கு நாம் யார்?

அரசியலும் குறிப்பாக தமிழ்நாட்டு இன்றைய அரசியலும். கமல்ஹாசன் நடிகர், அரசியலில் திடீர் நுழைவு, தனிப்பட்ட வாழ்விலும் ஒன்றும் முன்னுதாரணமாக ஒன்றுமில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய ஆர்வமென்று கூறி அரசியலில் நுழைந்தார். ஆனால் இந்த தமிழ்நாட்டு அரசியல் சாக்கடை காவிரி, கங்கை ஆறுகளாலும் சுத்தப்படாது. மக்களுக்கு மனமாற்றம் ஏற்ப்பட்டு இந்த அவல நிலையை அவர்களாகவே மாற்றினால் மட்டுமே நல்லவர்கள் அரசியலில் ஈடுபட முடியும்.

அவர் இன்னும் கொஞ்சம் நாள் அதாவது அவரது உடலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் வரைஅவரது கட்சியினர் விரும்பினால் அரசியலில் இருக்கட்டுமே அவர் பற்றி கவலைப்பட நாம் யார்?

எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டான்சர், துணை நடிகன், வில்லன் பிறகு கதாநாயகன் ஆகி, தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர் என்று பன்முக திறமையால் இந்திய சினிமாவின் ஐகான் என்று சொல்லப்படும் அளவுக்கு உச்சம் தொட்டு, அதன்பின் அரசியலில் இறங்கி கேவலப்படணும்னு இருக்கு. சீனியர் சிட்டிசன் என்ற கேட்டகிரியில் 69 வயதில் நிம்மதியாக இருக்க முடியலைன்னா ஏதாவது மக்களுக்கு சமூகத்துக்கு நல்லது செய்யணும்னா காடு மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதைவிட்டு கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர் ஆகலாம்னு இறங்குனா இதுதான் கதி. எம்.ஜி.ஆர். மாதிரி அரசியலில் வெற்றிக்கொடி நாட்ட முயன்ற சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கருணாஸ் போன்றவர்கள், மூக்கறுபட்டு முகவரி இழந்து போனதை யாரும் மறக்க முடியாது.இவரு நண்பர் சிரஞ்சீவியை பார்த்தாவது 
அவர் உணர்ந்திருக்கணும்

அரசியலோ, சினிமாவோ, நோக்கம் பணம் சம்பாதிப்பதே. சினிமாவுல நடிக்கறதுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர் இருப்பார். அரசியலில் இவரே ஆல் இன் ஆல். முதலீடு போடாத முதலாளி. இந்தாள நம்பி யராவது நன்கொடை குடுப்பாங்களா. வெல்லப் பிள்ளையாரையே கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யும் டெக்னிக் இங்க வொர்க் அவுட் ஆகாது. 

மக்கள் நலத்திட்டங்களை தன்னால் இயன்ற அளவு செய்யலாம் அரசியல் கட்சிகளோடு சேராமல் தனி அறக்கட்டளைகள் ஏற்படுத்தி சட்டப்படியான பாதுகாப்போடு நல்ல செயல்களை செய்யலாம் நல்ல கலைகனுக்கு அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Wednesday, 9 February 2022

பெண்களின் ஆடை பற்றிய இஸ்லாமிய சட்டங்கள் !! ஒரு பார்வை..




1. இஸ்லாமிய ஆடையைப் பொறுத்தவரை திருமணம் செய்வது தடையில்லாத அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் மறைக்கும் விதத்தில் உடம்பு முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பெண் தனக்கு திருமணம் செய்யத்தடை செய்யப் பட்டவர்கள் முன் இரண்டு கைகள், முகம், கால் (பாதம் வரை) ஆகியவற்றைத்தவிர மற்ற உறுப்புக் களை திறந்துவைப்பது கூடாது.  

2. ஆடை உடம்பை நன்றாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உடலின் நிறம் வெளிப்படும் விதத்தில் மெல்லிய ஆடையாக இருக்கக்கூடாது.

3. உடலின் அங்க அவயங்கள் வெளிப்படும் விதத்தில் இறுக்கமான ஆடையாகவும் இருக்கக்கூடாது.

”என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஹதீஸில் வந்துள்ள நிர்வாண ஆடை என்பது பெண் தன் உடம்பு முழுவதும் மறைக்காத ஆடையை அணியும்போது அவள் நிர்வாணமானவளாகவே கருதப்படுவாள். உடம்பு தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையை அணிவது அல்லது உடற்கட்டு தெரியும் விதத்தில் இறுக்கமான ஆடையை அணிவது, இடுப்பு, கை தோள்புஜம் போன்றவற்றின் உடற்கட்டு வெளியில் காணப்படும் விதத்தில் ஆடைகள் அமைவதைத்தான் இந்தஹதீஸ் குறிப்பிடுகிறது.

பெண்களின் ஆடை என்பது அவளுடைய மேனி முழுவதும் மறைக்கக் கூடியதாகவும், உடலின் உட்பகுதி யையும், உடலின் கனமான பகுதியை வெளிப்படுத்தாதது மாகவும், விசாலமான ஆடையாக இருக்கவேண்டும். (ஃபத்வா தொ.22ழூ ழூ146)

4. ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ”ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 22ழூ ழூ148ல் கூறுகிறார்:


ஆண்களுக்குத் தகுதியான ஆடையையும், பெண்களுக்கத் தகுதியான ஆடையையும் வைத்துத்தான் ஆண், பெண் ஆடை களைப் பிரித்துக் காட்டமுடியும். ஆண்களும் பெண் களும் அவரவருக்குக் கட்டளையிடப்பட்ட ஆடையை அணிவதுதான் அவர்களுக்குப் பொருத்தமானதாகும். பெண்கள் தங்கள் மேனியை வெளியே காட்டாமல் மறைத்து பர்தா அணிந்து வெளியில் செல்வதுதான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளையாகும். எனவே தான் பெண்கள் சப்தத்தை உயர்த்தி பாங்கு, தல்பியா சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளில் ஏறுவதும், ஆண் களைப்போன்று இரண்டு துண்டு துணிகளை மட்டும் அணிந்திருப்பதும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஹஜ்ஜின்போது ஆண்கள் தலையை திறந்திருப்ப தும், வழக்கமான ஆடையை அணியாமலிருப்பதும் அவர்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பைஜாமா, தொப்பி, காலுறை போன்றவற்றை அணிவது கூடாது. அதே நேரத்தில் பெண்கள் அவர் களின் வழக்கமான ஆடையில் எதையும் அணிவது தடை செய்யப்படவில்லை. காரணம் அவள் தன் உடல் முழுவ தையும் மறைத்து பர்தா அணியுமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள். அதற்கு மாற்றம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படாது.

ஆனால், அவள் தன் முகத்தை திரையால் மறைப் பதும் உறுப்புகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள காலுறைகளை அணிவதும் அவளுக்கு அவசியமில்லை. என்று கூறிவிட்டு அவள் அன்னிய ஆண்களை விட்டும் தன் முகத்தை முகமூடி அல்லாததைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். ஆண்களிலிருந்து பெண்களும், பெண் களிலிருந்து ஆண்களும் பிரித்தறியக்கூடிய விதத்தில் ஆடை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டால் பெண்கள் தங்கள் உடம்பை முழுவதுமாக மறைத்து பர்தா அணியவேண்டும் என்ற உண்மை புரிந்துவிடும்.

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமா கவும் ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந் தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5. பெண்கள் வெளியில் செல்லும்போது அணிகின்ற ஆடைகள் பார்வையைக் கவரக்கூடிய அலங்காரங் களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதன் மூலம் அவள் தன் அலங்காரத்தை வெளிப் படுத்திச்செல்லும் பெண்களின் பட்டியலில் இடம் பெற நேரிடும்.



பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்: 33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)



ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்த் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.
அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அப+உபைதா போன்றோர் கூறுகின்றனர்.

ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)


பர்தாவின் பலன்கள்..

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்
.


நாம் ஒரு நபரிடம் இரண்டு வகையில் பழகுவோம்.

ஒன்று அவரது நல்ல குணம், பண்புகள் சார்ந்து, மற்றொன்று அவரது உடல் கவர்ச்சி சார்ந்து. உடல் கவர்ச்சி சார்ந்து பழகும் உறவுகள் தான் நம்மை தீய பாதையில் செல்ல, கெட்ட செயல்களில் ஈடுபட வழிநடத்துகிறது.

இவ்வகையில் காணும் போது பர்தா அணிவது ஒரு பெண்ணிடம் கவர்ச்சியின்றி, அவரது அகம் சார்ந்து மட்டுமே ஒரு நல்லுறவில் இணைய உதவும் கருவியாக இருக்கிறது



பர்தா அணிவது ஒருவகையில் நல்லது என்று தான் நான் கூறுவேன். 

இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்த கங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!

1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)

2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)

3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் துவைஜிரி)

4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.



பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்துவிட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்துவிட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.

எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலம்க்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்ததில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும்போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொது வான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனை களுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கை களைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.

இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ள வர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற் றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களி லிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக் கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப் பார்த்து விடாதே!

 தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

NEET PG மற்றும் FMGE இரண்டையும் சேர்த்து ஒரே தேர்வாக NEXT நடத்தப்படவுள்ளது

 மருத்துவ கல்லூரி இலவசம் என்பது தமிழ்நாட்டிலேயே இல்லாதபோது வெளிநாட்டில் எங்கனம் சாத்தியம்…

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தால் கூட குறைந்தபட்ச தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுதி கட்டணம் மாதாந்திர மெஸ் செலவு, நூலகம், தேர்வுக்கட்டணம், புத்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன அரசாங்கம் மருத்துவ சீட்டு மட்டுமே இலவசமாக தரும் மற்ற அனைத்து செலவுகளும் உங்களுடையது தான்…

உலகத்தில் அதிக நாடுகளில் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன…குறிப்பாக இந்திய மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்து படிக்கும் நாடுகள் ரஷ்யா சைனா சென்ட்ரல் அமெரிக்கா பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் நேப்பாள் போன்ற நாடுகள்…

இதில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் மருத்துவம் பயில ஓராண்டு அந்த வட்டார மொழி பயில வேண்டியது அவசியமாகிறது. காரணம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள நோயாளிகளை சிகிச்சை அளிக்க அணுகும் போது அங்கு உள்ள நோயாளிகளுடன் பேச வட்டார மொழி அவசியமாகிறது. மேலும் அங்குள்ள விரிவுரையாளர்களுக்கு அவர்களின் தாய்மொழியை தவிர ஆங்கிலம் சற்று சிரமம் தான்…

பிலிப்பைன்ஸில் ஆங்கிலம் பயிற்று மொழி மற்றும் வட்டார மொழியாக இருந்து வருகிறது. ஆனால் இங்கு நேரடியாக எம்பிபிஎஸ்(MD) சேர முடியாது முதலாண்டு BS கல்வி பயில வேண்டும் அதன் பின்பு NMAT(National medical admission test) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த NMAT தேர்வு என்பது ஏறக்குறைய இந்தியாவிலுள்ள நீட் போன்ற தேர்வுக்கு சமமானது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே MD மருத்துவ படிப்பில் சேர முடியும்(MBBS).

பங்களாதேஷில் இந்தி மற்றும் பெங்காலி மொழிகள் வட்டார மொழிகளாக இருந்து வருகின்றன அங்கு பயிற்று மொழி ஆங்கிலம் மற்றும் பெங்காலி ஆகியவை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதே மருத்துவக் கல்லூரி நடைமுறைகள் தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன. ஏறக்குறைய இந்திய மருத்துவ புத்தகங்கள் தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளைப் போன்று இந்திய உணவு கிடைக்கும் பிரச்சனை இங்கு இருக்காது. இந்திய உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். ரஷ்யா சீனாவை போன்று அதிக குளிர் இருக்காது. இந்த ஊரின் சீதோசன நிலை வட இந்தியாவை ஒத்திருக்கும். மேலும் இந்தியாவில் ஏற்படும் நோய்களைப் போலவே இங்கு உள்ள மக்களுக்கும் அதே சீதோஷண நோய்கள் தான் உண்டாகும் என்பதால் பயிற்சி மருத்துவம் பயில எளிதாக இருக்கும். மேலும் அவசர சூழ்நிலைகளில் பேருந்து, ரயில், விமானம் ஆகியவை மூலம் இந்தியாவிற்கு வந்து செல்வதும் எளிது. இதனால் போக்குவரத்து கட்டணமும் மற்ற நாடுகளை விட குறைவாகவே செலவு பிடிக்கும். கொல்கத்தாவிலிருந்து பங்களாதேஷ் செல்ல கட்டணம் மிகக் குறைவு.

மேலும் நீங்கள் கேட்டது இலவச மருத்துவ கல்வி தொடர்பானது…மேற்கூறிய இந்த அனைத்து நாடுகளிலுமே சுமார் 15 லிருந்து 50 லட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியது.

இதில் பங்களாதேஷில் மட்டும் சார்க் (SAARC) நாடுகள் கூட்டமைப்பிலள்ள நாடுகளின் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதன்படி இந்திய மாணவர்களுக்கு அவர்களின் பத்தாவது, 12வது மற்றும் நீட் ஆகிய தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றதை கணக்கில் கொண்டு அங்கு குறைந்த செலவில் மருத்துவம் படிக்க இடம் வழங்கப்படுகிறது. இது ஏறக்குறைய இந்தியாவில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆகும் செலவை ஒத்திருக்கும்.

ஒரு கூடுதலான தகவல்…

2022ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ படிப்பு முடித்தவுடன் NEXT (National exit test) தேர்வை எதிர்கொள்ள வேண்டும். FMGE தேர்வு என்பது 2021 பிறகு வெளிநாட்டில் மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது. NEET PG மற்றும் FMGE இரண்டையும் சேர்த்து ஒரே தேர்வாக NEXT நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை 2022கு பிறகு இங்குள்ள மருத்துவ மாணவர்களும் எதிர் கொண்டாகவேண்டும். ஆக உலகத்தில் நீங்கள் எங்கு மருத்துவம் படித்தாலும் ஒரு மருத்துவராக இந்தியாவில் பதிவு பெற இந்த NEXT தேர்வை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே வெளிநாட்டில் மருத்துவம் பற்றி கவலைப்பட வேண்டாம். காரணம் 2022 பிறகு இங்கு சென்னை அரசு கல்லூரியில் படித்த மருத்துவரும் வெளிநாட்டில் கல்வி பயின்ற ஒரு மருத்துவ மாணவரும் ஒன்றாக NEXT தேர்வு எழுதுவர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் இந்திய மருத்துவராக பதிவு பெற இயலும். இந்த தேர்வில் குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஒரு மருத்துவராக பதிவு பெற தகுதியானவர். இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் MS MD போன்ற முதுநிலை கல்வி பயில கல்லூரிகளில் இடம் வழங்கப்படும்.

நாட்டில் தற்போது செயல்முறையில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை (MCI) கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மசோதாவில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) தேர்வை எழுத வேண்டும்; இதில் வெற்றி பெறுபவர்கள்தான் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய முடியும். ‘நெக்ஸ்ட்’ தேர்வு மதிப்பெண் மட்டுமே மருத்துவ முதுநிலைப் படிப்பில் அனுமதிப்பதற்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். சென்ற வாரம் இந்தப் புதிய மசோதாவின் நகல் எரிக்கும் போராட்டத்தைத் தேசம் முழுவதும் நடத்தினர்.

இதுவரை, எம்பிபிஎஸ் மாணவர்கள் நான்கரை வருடக் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெற்றதும், ஓர் ஆண்டு காலம் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவராகப் பணிபுரியலாம் என்னும் நடைமுறை இருந்தது. அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியாக ‘நீட்-பிஜி’ தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இப்போதுள்ள வழக்கம்.

புதிய நடைமுறை

இப்போதைய அறிவிப்பின்படி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர், முதல் மூன்றரை ஆண்டுகள் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். இந்தியா முழுவதும் நடத்தப்படும் ‘நெக்ஸ்ட்’ பொதுத்தேர்வை இறுதி ஆண்டில் எழுத வேண்டும். இதுவரை வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் ‘எஃப்எம்ஜிஇ’ தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றிபெற்றால்தான் இந்தியாவில் பயிற்சி மருத்துவராகவும், அதன் பிறகு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்ற முடியும். இந்தப் புதிய மசோதாவின்படி இனி அவர்களும் ‘நெக்ஸ்ட்’ பொதுத்தேர்வையே எழுத வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும் இனி ‘நெக்ஸ்ட்’ தேர்வுதான்.மருத்துவ மாணவர்கள் முதலாண்டு தொடங்கி இறுதி ஆண்டு வரை எல்லாப் பாடங்களையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்பதைச் சோதிப்பதும், திறமையான மருத்துவர்களை உருவாக்குவதும், இந்தியாவில் உருவாகும் எல்லா மருத்துவர்களின் செயல்திறனும் ஒன்றுபோல் இருக்கவும், உலக அளவில் நம் மருத்துவர்களின் தரத்தை உயர்த்துவதும் இந்தத் தேர்வின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. எம்பிபிஎஸ் படிப்பில் நான்கரை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 24 தாள்கள் இருக்கின்றன. இறுதி ஆண்டில் நான்கு பாடங்களுக்கு 7 தாள்கள். அனைத்துப் பாடத் தேர்வுகளிலும் எழுத்து, செய்முறை, வாய்மொழித் தேர்வுகள் உண்டு. தற்போதைய அறிவிப்பில், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் 24 தாள்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது இறுதி ஆண்டுக்கான நான்கு பாடங்களிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுமா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. 24 தாள்களையும் இணைத்த தேர்வாக இருந்தால், அது மாணவர்களுக்குப் பெரிய சுமையாகவும் தண்டனையாகவும் அமையும். இறுதி ஆண்டின் நான்கு பாடங்களுக்கு மட்டும் என்றால், அதன் மூலம் ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பின் தரத்தை உறுதிசெய்யவும் முடியாது; மேம்படுத்தவும் முடியாது.

பறிபோகும் கல்வி உரிமை

அடுத்து 2, 5, 10 மதிப்பெண் கேள்விகள், வழக்கமான தேர்வுமுறைப்படி இருக்குமா அல்லது கொடுத்த பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளாக இருக்குமா என்பதையும் இந்த மசோதா தெளிவுபடுத்தவில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கும் முதுநிலைப் படிப்புக்கும் பொதுவானது ‘நெக்ஸ்ட்’ தேர்வு என்கிறது மத்திய அரசு. இது அவசியமில்லாதது. காரணம், எம்பிபிஎஸ் முடித்த எல்லோருமே முதுநிலைப் படிப்புக்குச் செல்ல விரும்புவதில்லை; அப்படியே விரும்பினாலும் எல்லோருக்கும் அங்கு இடம் இல்லை. அதனால், பலரும் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றதும் தனியார் மருத்துவராகவோ, அரசு மருத்துவராகவோ பணிக்குச் சென்றுவிடுவர். தற்போதுள்ள தேர்வுமுறையில், இவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, விரும்பும்போது ‘நீட்-பிஜி’ தேர்வு எழுதி முதுநிலைப் படிப்பில் சேர்ந்துகொள்ள முடியும். ஆனால், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் அதற்கான வாய்ப்பு இல்லை. மருத்துவராவதற்கும் முதுநிலைப் படிப்புக்கும் ‘நெக்ஸ்ட்’ மதிப்பெண்தான் முக்கியம் என்றாகிவிட்டால், முதலாண்டில் இருந்தே மாணவர்கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்குத் தயாராவார்கள். அப்போது முதல் மூன்றரை ஆண்டு பாடங்களை முழுமனதுடன் படிக்க மாட்டார்கள். இது மாணவர்களின் தரத்தைக் குறைக்கும்.

‘நெக்ஸ்ட்’ தேர்வுமுறை மருத்துவ மாணவர் களுக்குச் சுமையாகும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்குத் தனிப் பயிற்சிகள் தேவைப்படும். அப்போது இதற்கெனத் தனியார் பயிற்சி மையங்கள் உருவாகும். அவற்றில் பயிற்சி பெறுவதற்குப் பல லட்சங்கள் தேவைப்படும். எம்பிபிஎஸ் பட்டம் பெறுவதற்கே பல ஆண்டுகள் ஆகும். இதனால், விளிம்புநிலை மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதே எட்டாக் கனி ஆகிவிடும்; அடித்தட்டுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையும். அப்போது சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகிவிடும்.

மக்கள்நல அரசின் கடமை

இந்தியாவில் 460-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு இருக்கும் எல்லா மருத்துவக் கல்லூரிகளின் தரமும் ஒன்றல்ல. நாட்டில் பல மருத்துவக் கல்லூரிகளில் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் இல்லை; திறமையான ஆசிரியர்களும் இல்லை; தரமான பரிசோதனைக் கருவிகள், ஆய்வுக்கூடம் மற்றும் நூலக வசதிகள் இல்லை. இருக்கும் பேராசிரியர்களுக்கும் மருத்துவமனைப் பணிகளே அதிகம் என்பதால், அவர்கள் எம்பிபிஎஸ் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில்லை; உதவிப் பேராசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் அல்லது முதுகலை படிக்கும் மாணவர்கள்தான் வகுப்பு நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை ஒன்றுபடுத்தாமல் மாணவர்களின் தரம் மட்டும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பது நகை முரண்.

ஆகவே, பல நிலைகளில் தெளிவில்லாத இந்த மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரப்படக் கூடாது. மருத்துவர்களின் கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டும், இன்னும் நன்றாக ஆலோசித்தும், தேர்வுமுறைகளைத் தெளிவுபடுத்தி, மாணவர்களின் கல்வி உரிமை பறிபோகாத அளவுக்கு இதை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்....மேலும் இந்த நெக்ஸ்ட் தேர்வு பற்றி தமிழ்நாட்டில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை…

எனக்கு தெரிந்த வகையில் உள்ள தகவல்களை இங்கே கூறியிருக்கிறேன். நன்றி…

  நன்றி  : டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர்.

Monday, 7 February 2022

ரிக் வேதத்தில் பெண்களின் தலைமுக்காடு ( ஹிஜாப் & அபாயா) மானத்தின் அடையாளம்!!







ஹிஜாப் என்பது ஒரு அடிமைத்தனம் என்று என்னும் சகோதர சகோதரிகளுக்கு அது ஓர் கேடயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் சில சகோதரர்கள் ஹிஜாப் நீங்கள் வெளியே செல்லும்போது போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அவர்களின் புரிதலே தவறு என்று கூறுகின்றேன். அச்சகோதரர்கள் முதலில் அதனைப் பற்றி புரிந்து, அறிந்து தெளிவு பெறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண் , பெண் விஷயத்தில் இஸ்லாத்தின் வலிமையே இறைவன் ஏற்படுத்திய கட்டமைப்பு , ஒழுக்க அரண் , சமூக அரண் தோண்றி மறையும் மனித இனம் அவனை முழுமையாக அறியாத அறியாமை சமூகத்தால் இறைவனின் ஏற்பாட்டை . நபிகளாரின் உயரிய வழிகாட்டுதலை அறிய முடியாது . திருக்குர்ஆனை , நபிகளாரின் சுன்னாவை முழுமையாக படித்து அதன் முக்கியத்துவத்தை புரிந்தால் மட்டுமே ஹிஜாப்பின் முக்கியத்துவம் , பெண்களுக்கு எவ்வளவிற்கு அது கேடயமாக உள்ளது என்பது தெரியும் . தன் மானம் ஒழுக்கம் இவைகளுக்கு இந்த ஆடையே சிறந்தது என பெண் இனம் தேர்வு செய்யும் பொழுது அதை தடுக்க நீங்கள் யார் ??? நான் யார் அவர்களின் உரிமையில் அவர்களின் ஆடை தேர்வில் மூக்கை நுனைக்க நீங்கள் யார் ??? நான் யார் ஒர் இறையை ஏற்றுக் கொண்ட எந்த இஸ்லாமிய பெண்ணும் அந்த இறை கட்டளையை , ஒழுக்க கட்டமைப்பை , தூக்கி எறிய மாட்டார்கள் .

அடிப்படை வாதிகள் என எதையப்பா சொல்கிறீர்ககள்? 
உடலை மறைத்து ஆடை அணிவது அடிப்படைவாதமா? 
வேடுவர்ப்போல அரை நிர்வாணம் முற்போக்கா?

ஹிஜாப் ஒரு மத உடை இல்லை அது ஒரு ஒழுக்கமான ,கண்ணியமான உடை.அவுத்துப் போட்டு வந்தால் தானே உங்களுக்கெல்லாம் ஜொல்லு வடிக்கலாம்.அதனால்தான் இந்தபோராட்டம்.பெண்கள்ஆடைக்குறப்பை பேசுவதை விட ஆண்கள்தானே அதிகம் பேசுகிறீர்கள்.

மேலை நாடுகளில் ஆடை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத நாடுகளில் கூட பெண்கள் ஹிஜாப், புர்க்கா ,பர்தா, ஹபாயாஅணிகிறார்கள்.

சற்று யோசியுங்கள் ஆண்கள் சபையில் உடுத்தும் பெரும்பான்மையான உடை கோட் சூட் இது கிருத்துவ கோட்பாட்டைக் கொண்ட நபர்கள் ஹிஜாபை போன்றே முழுமையாக தங்கள் உடலை மறைத்துக்கொள்ள பயன்படுத்தியவை மேற்கிந்திய கலாச்சாரத்தில் இதை யாரேனும் எதிர்த்தால் அவர்களை எப்படி கேளிக்கையாக நாம் பார்ப்போம் என்று அனைவருக்கும் தெரிந்ததே!


இஸ்லாமிய பெண்கள் சீருடை துணியில் ஹிஜாபை பயன்படுத்தி தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்வதால் யாருக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டு விடப் போகிறது ?

அவர்கள் கல்வி கற்பதிலும் மற்றவர்கள் கல்வி கற்பதிலும் இது எங்கு தடங்கல் ஏற்படுகிறது?


காமப் பசியில் அலையும் சில கல்வி அதிகாரிகளுக்கும் சில ஆசிரியர்களும் சில மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்



பெண்கள் அரைகுறை ஆடையை அணிந்து சென்றால் தான் விபரீதம் ஏற்படும் கல்வி கற்பதிலும் தடை ஏற்படும் கவனம் திசை திரும்பும்



ஹிஜாப் & அபாயா அணியக் கூடாது என்று சொல்லும் ஹிந்து சகோதரர்களுக்கு சமர்பணம் இந்து மதம் போதிக்கும் பெண்ணின் ஆடை


ரிக் வேதம் புத்தகம் 8 வேதவரி 33 மந்திரம் 19 :


பிரம்மன் உன்னை ஒரு பெண்ணாக படைத்துவிட்டார். அதனால் உன் பார்வையை தாழ்த்திக் கொள்; நேராகப் பார்க்காதே; உன் பாதங்களை இணைத்துக் கொள்; உன் ஆடைகள் எதை மறைக்கின்றனவோ அந்த உறுப்புக்களை நீ வெளிக்காட்டாதே; முக்காடு அணிந்துக் கொள்.




உங்கள் வேதத்தில் உள்ளபடியே நாங்கள் ஆடை அணிகிறோம். உங்கள் வேதத்தை நீங்களே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.



தலைமுக்காடு என்ன தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றா?


இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நாடு. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மத அடையாளத்தை பேணுவதற்கும், சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், உடுத்துவதற்கும் சுதந்திரத்தை நமது அரசியலமைப்பு வழங்கியுள்ளது.

நல்லவற்றை உண்பது, தூயவற்றைக் குடிப்பது, உடுத்துவது போன்றவற்றை ஒருவர் தடை செய்தால் அல்லது கட்டாயப்படுத்தினால், அது முதலில் மனித குலத்துக்கு எதிரான குற்றமும் இந்தியச் சட்டப்படி குற்றமும் ஆகும்

தலைமுக்காட்டை இழிவாகக் கருதுவது உண்மையில் முஸ்லிம்களின் அடையாளத்தின் மீதான தாக்குதல். தலைமுக்காடு அணிவது முஸ்லிம் பெண்களின் மத உரிமை மட்டுமல்ல, அரசியலமைப்பு உரிமையும் அடிப்படை உரிமையும் ஆகும்.


தலைமுக்காடு என்ன தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றா?

ஒரு தலைமுக்காடு எவ்வாறு வகுப்பறையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்?

ஒரு பெண் தலைமுக்காடு அணிவதால் மற்றவர்களுக்கு அது எவ்வாறு தாழ்வை ஏற்படுத்தும்?

தலைமுக்காடு அணிதல் என்பது முஸ்லிம் பெண்களின் அடையாளம். அதை அவள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறாள். இத்தனை ஆண்டுகாலம் இஸ்லாமிய மாணவிகள் தலைமுக்காடு அணிந்து வருகின்றனர். அதனால் எந்தக் கேடும் யாருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்றைக்கு அந்த அடையாளம் உங்களுக்கு சட்டவிரோதமாகத் தெரிகிறதோ.

ஆனால் ஒரு முஸ்லிம் பெண் தான் எப்போதும் பேணவேண்டிய தலைமுக்காடு மட்டும் உங்களுக்கு மத அடையாளமாகத் தெரிகிறதோ.

சீக்கியர்களின் தலைப்பாகை அவர்களுக்கு எப்படி முக்கியமோ, இந்துப் பெண்களின் தாலிக் கயிறு அவர்களுக்கு எப்படி முக்கியமோ, அது போன்று முஸ்லிம் பெண்களின் தலைமுக்காடு அவர்களுக்கு முக்கியம். மானத்தின் அடையாளம், மகத்துவத்தின் சின்னம்.

நீதி மன்றங்கள் உண்மையைச் சொல்ல யோசிக்கலாம். பிரதமர் வாய்மூடி இருக்கலாம். காவல்துறை கடமையைச் செய்ய மறுக்கலாம். ஆனால் உண்மை ஒரு போதும் தூங்காது. சிலகாலம் நீங்கள் மேலோங்கலாம். ஆனால் எப்போதுமே நீங்கள்தான் மேலோங்கியிருப்பீர்கள் என்று எண்ணி விடாதீர் .

எதை விதைக்கிறாயோ அதுவே திரும்ப வரும்.மதம் வெறியாவது மனித இனத்திற்கு கேடு.மனித வாழ்வியலை நெறிப்படுத்த மட்டுமே ‌மதம் அதில் யாருடையது உயர்வு என்றால் நாட்டில் கலவரம் தான் வரும்.

உயிர் போனாலும் எங்கள் ஆடை குறைக்க மாட்டோம் நாங்கள் உண்ணதமான பெண்கள்..

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.


பெண்ணினத்தின் பாதுகாப்புக்கே ஹிஜாப் !!




 நாடு எங்கே போகிறது.... மிகவும் பயமாக இருக்கிறது.

ஆன்மீகம் என்பது 

1.தன்னை அறிதல். 

2.தன்னை போலவே பிற உயிர்களும் என்று உணர்தல்.

3.மற்ற உயிர்களுக்கு உதவுதல்.

இதை விட்டு விட்டு காட்டு மிராண்டிகள் போல......

தயவுசெய்து  அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்காதீர்கள்.

தனித்தனியாக இருப்பது நல்லது...

இரண்டும் சேர்ந்தால் அது விசமாக மாறி விடும்.


முஸ்லிம்கள் வேண்டுமென்றே இந்தியாவில் மட்டும் தான் ஹிஜாப் அணிகிறார்களா.? இல்லை. உலகம் முழுவதும் அணிகிறார்கள்.

முஸ்லிம்கள் பள்ளி கூடத்தில் மட்டும் தான் ஹிஜாப் அணிகிறார்களா.?இல்லை. அதையும் தாண்டி வேலை பார்க்கும் நிறுவனம், சந்தைக்கு போகும் போது, வீட்டே விட்டு வெளியே வந்தாலே அணிகிறார்கள்.


பெண்கள் தங்கள் உடல் அழகை மறைத்துக் கொள்ள ஒழுக்கம் பேணுவதற்காக அணியப்படுவது தான் ஹிஜாப் அது மத அடையாளமே அல்ல. ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆடை முறை ஆனால் காவி வர்ணத்தில்  இதுபோல ஏதாவது ஒரு கருத்து இருக்கிறதா? மத அடையாளம் அல்லாத ஒரு கருத்து சொல்ல முடியுமா?

ஹிஜாப் முஸ்லிம்கள் பின்பற்றும் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம். அவர்கள் 1400 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

ஆனால் நீங்கள் அணிகின்ற காவி துண்டு எல்லா நாட்டிலும் அணிவதும் கிடையாது, எல்லா நேரத்திலும் அணிவதும் கிடையாது, அதை நம்பிக்கை அடிப்படையில் போடுவதும் கிடையாது.

இது முழுக்க முழுக்க கலவரம் ஏற்படுத்த போடப்படும் ஒரு விதை. எனவே இந்து சமூகம் இந்தியா வழங்கியுள்ள அனைத்து மத நம்பிக்கையை பாதுகாக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாக இந்து என்ற பெயரில் வரும் கோமாளிகளை ஓரங்கட்டி, ஹிஜாப்பிற்கு வலுவாக நிற்க வேண்டிய காலம். இந்த நாடு எல்லோரும் அமைதியாக இருந்தால் மட்டுமே, அமைதி என்பது சாத்தியம். ஒருவரை துன்புறுத்தி அடக்கி ஆள நினைத்தால் அங்கு அமைதி குலைந்து விடும். எனவே இந்து பொதுமக்கள் வெளிப்படையாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பிற்கு ஆதரவு அளிக்க வேண்டிய நேரம் இது.



ஹிஜாப்ஏன்?

மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நன்மை, தீமை, நியாயம், அநியாயம், சக மனிதர்களோடு கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற பலவும் அங்கு கற்பிக்கப்பட்டால்தான் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள். இங்கு தந்தையை விட தாயின் தாக்கமே மிக அதிகம் என்பதை நாம் அறிவோம். இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில் இருந்து அவள் திசைதிருப்பப்பட்டால் அங்கு நடைபெறும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மேலும் சமூகத்தில் ஆண் பெண் இரு பாலாரும் கல்வி, தொழில், வணிகம் போன்ற விடயங்களில் அன்றாடம் கலந்துறவாடுவது என்பது தவிர்க்க முடியாததாகும். அப்போது அவர்களுக்கு இடையே அமைந்த பரஸ்பர கவர்ச்சி அவர்களின் செயல்பாட்டில் இருந்து திசை திருப்பாமல் இருப்பது முக்கியமாகும். இவைபோன்ற பல விடயங்களையும் கருத்திற்கொண்டே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஹிஜாப் என்றால் என்ன? எதற்கு?

தாய்மை என்ற உலகிலேயே உயர்ந்த விலைமதிக்கமுடியாத பதவியை அவளுக்கு வழங்குவதற்காகவும் அப்பதவியை அவள் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவும் அதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை சமைத்திடவும் அடித்தளமிடுவதே ஹிஜாப்!


இளைய சமுதாயத்தை மதத்தின் பெயரால் சீரழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

படிப்பு அறிவு அற்றகாலத்தில் மக்கள் செய்த அதே தவறை இளைய தலைமுறைக்கு இந்த சமுக விரோதிகள் கற்றுக் கொடுக்கிறார்கள் இதன் சூட்சமத்தை தன் சுயபுத்தியைக் கொண்டும் படிப்பு அறிவைக்கொண்டும் நன்கு அறியவேண்டும்.

அரசியல் சூழ்ச்சியில் சிக்கி தவிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை சட்ட சிந்தியுங்கள் மக்களே!!

விரைவில் தமிழகத்தில் பரவினாலும் பரவ வாய்ப்புண்டு ஏனென்றால் சாதிவெறி முன்பைவிட இப்போது அறிய அதிகரித்துக்கொண்டே வருகிறது 2000 காலகட்டத்தில் இருந்ததைவிட 2022 காலகட்டம் சாதிவெறி மிக்கதாக இருக்கிறது அதனால் கர்நாடகத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.

நம் காலத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்துவிட்டோம். வருங்காலத்தில் அந்த ஒற்றுமை விரைவில் சீர்குலைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு அச்சம் வருகிறது. தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்பதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிறந்த தாய் தந்தையிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும் தன் பிள்ளை வெளியே செல்லும்போதோ அல்லது  பாடசாலைக்கு சொல்லும் போது எப்படிப்பட்ட உடைகளை அணிந்தால் அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பு என்று?

அரசியல் செய்வதற்கு எவ்வளவு விசயம் உள்ளது ஆனால் இந்த கூட்டம் ஆடையிலும் மதத்திலும் அரசியல் செய்கிறது என்ன ஆடை அணிந்து கொள்வது என்ற ஊறிமை அவர்களுக்கு உண்டு ஹிஜாப் எவ்வளவு காலமாக பின்பற்றி வரும் மரபு என்பதை அறிந்து கொள்ளுங்கள்


மனிதம் காப்போம்.

மனிதம் வளர்ப்போம்.

ஒற்றுமையே பலம்ஜெய்ஹிந்த்.


ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

Sunday, 6 February 2022

Women Can Perform Umrah without Mahram!!



Islam is a beautiful religion whose foundations are based on mercy and compassion which advise us to protect the weak and vulnerable. Islam is the first and only religion that declares the rights of women 1400 years ago when women are considered nothing but a piece of flesh. Islam teaches us to honor the women, protect their dignity and reputation and that’s the reason why our beloved Prophet PBUH forbids women to travel alone Even for the virtuous voyage of hajj without the male who can protect them. The great intention behind this prohibition is the safety and protection of women, accompanied by reputable and elder Muslim men. Every woman who intends to perform the sacred obligation of Umrah needs a trusted and blood-related man with whom she is allowed to travel according to the Islamic rules and that man in Islam is known as Mahram.


Who is Mahram?

Mahram or unmarriageable kin is a person with whom women cannot marry otherwise considered haram, as well as the people from whom purdah is not mandatory, are mahram for women. Marriage with mahram is permanently unlawful. The list of mahrams is established in three ways: mahram by kinship (qarabah), foster relationship (radha’a), and relationship through marriage (Shriya). Allah SWT summed up the mahrams in the following verse of the Quran:

“And state to the believer women to diminish of their vision and guard their private parts and not expose their beautification except that which (necessarily) appears thereof, and to wrap their headcovers over their chest and not expose their beautification except to their husbands, fathers, father of her husband, their sons, son of their husband, their brothers, son of their brothers, their sister's son, women that which their right hands possess or those male attendants having no physical desire or children who are not yet aware of the private aspects of women. And let them not stamp their feet to make known what they obscure of their beautification. And turn to Allah in penitence, all of you, O believers that you might succeed”.

Mahram is a Muslim male relative with whom a woman is permanently forbidden to marry because of blood relations, ties through marriage, or breastfeeding. Other than a husband, several other relations are also Mahram such as father, brother, son, grandson, grandfather, nephew, uncle, father-in-law, son-in-law, step-father, step-son, and any other male with whom she shared a mother’s milk are Mahram according to the Shari’ah. The stipulation of Mahram is based on the following hadith reported by Abu Huraira that Allah’s Messenger said;

“It is not lawful for a woman who believes in Allah and the Hereafter to undertake a day’s voyage except in the company of Mahram”. For women, Mahram can fall into one of the following categories.
Mahram through Blood: This includes all those relative men with whom she shares blood relation including father, brother, son, grandfather, grandson, nephew, and uncle.
Mahram through Marriage: When a woman gets married along with its blood-related mahrams she gets some new relations which are also mahram for her. These relations include husband, father-in-law, son-in-law, stepfather, and stepson.

Mahram through Fosterage: All the Mahram through blood relations is also considered mahram through foster relation as well. This can be observed with the following hadith narrated by Ibn Abbas, Allah’s Apostle said about the daughter of Hamza R.A.

“I am not lawfully allowed to marry her, as adoptive relations are treated like blood relations. She is the daughter of my foster brother”.

According to Imam Abu Hanifa, a foster mother is someone who has breastfed her child within a certain time period of two and a half years than the child’s foster relative such as foster-father, foster-uncle, foster-grandfather all will be considered mahrams.

Age of the Mahram:

According to the three most authentic schools of thought Hanafi, Maliki, and Shafi, there is no particular restriction about the age of Mahram. He doesn’t have to have reached the age of puberty but a woman should choose the mahram for the journey who must be old enough to provide her sufficient care and protection. Though above mention kids are her mahram they’re unable to protect and provide care for what she needs as a woman during the journey so taking little boys is not recommended at all. On the flip side, the Hanbali School of thought specifies that males must have to reach the age of puberty to be considered a mahram.

Women above the age of 45:

According to the current Saudi rules and regulations, women under the age of 45 are not permitted to travel alone with the mahram. However, if she is over the age of 45, permitted to travel with an organized group of pilgrims without a designated mahram. But she must have to submit the permission letter from her husband or any other mahram who authorize her to travel alone with the group.

There are some particular instances when it is not allowed for women to leave the Saudi Kingdom without a mahram. In the rule of thumb, how her visa is issued. If her visa is issued under the name of her mahram then she is not permitted to leave Saudi Arabia without that mahram. This can usually happen in instances when flights are scheduled differently or she and her mahram are planning to leave for two different destinations. According to Saudi rules, the minimum age for mahram is 17 years to accompany any blood-related women. Keep in mind that the mahram you’re landing within Saudi Arabia should also be there when you leave the country.

Umrah for women who have no Mahram:

If a woman doesn’t have a husband, either widow or divorced neither she has any living mahram relatives does she need to go to perform hajj or Umrah? Though Hajj is the pillar of Islam and mandatory for every Muslim man and woman those women who have the ability physically, mentally, and financially but doesn’t have any mahram do not need to go for hajj and Umrah. There is no sin on her if she doesn’t go. In case she went to Umrah without a mahram it is haram and sinful rather than the blessed journey.

There are other ways she can earn blessings of Allah, if she cannot do one act of worship she is able to do many others and strive hard in those acts of worship that she can easily do. If a person wants to do an act of worship but is unable to do it because of some lawful excuse, he or she will be granted the reward of one who does it. Anas ibn Malik reported that Messenger of Allah when came back from the battle of Tabook and drew closer to Madinah He SAWW said, “In Madinah, there’re some people who, whenever you marched or cross a valley, were with you”
.




Why Mahram is required for Umrah?

Umrah is a minor pilgrimage that every Muslim whether men or women wants to perform at least once. But according to Islamic rules and regulations, there are certain things that women must have to follow before the sacred journey, and these rules are made for the betterment of women. Islam is a religion that defines each and every aspect of life to prevent any kind of irregularities in society or in the world but only a few can understand this. Islam gives respect to women and defines what kind of lifestyle a woman has to adopt. According to Islamic values, she needs to stick to certain ethical standards. These rules are made to protect her dignity and respect. They must cover their body part when going outside in order to prevent men from being urged to immoral acts. It is better for a woman to be cautious as Islam gives high status and are not consider women the weaker gender. The restriction is to honor, protect and give special care for women.

Kinds of Mahram:

Mahram by Blood: These include
Your ascendants: parents, grandparents, and great grandparents
Your descendants: children, grandchildren, and great-grandchildren
Descendant of your parents: sister, brother, half-sister, half-brother children of your sister and brother.
Your father’s brothers and sisters. Also your father’s half-brothers and sisters, mother’s brothers and sisters are including half-sisters and brothers.

Mahram by Marriage: These include
Husband and wife are mahrams for each other
Ascendants of husband/wife: parents, grandparents, and great grandparents.
Descendants of husband/wife: daughter-in-law, son-in-law, husband/wife of your grandchildren.
Ancestors of your husband/wife: father’s wife, mother’s husband, husband of grandmother, wife of grandfather.
Decedents of your husband: stepdaughter and stepson

Mahram by Breastfeeding: These include
A woman is a mahram for men who breastfed him within the age of 2.5 years
All the children who are breastfed by the woman


Is mahram required for Umrah?

There are two answers from scholars on this issue of whether a woman is allowed to go on Umrah without being accompanied by a mahram.
The woman is not permitted to travel without a mahram: Even she is traveling for a sacred purpose; still, she is not allowed to travel without a mahram. It is the opinion held by scholars from Imam Abu Hanifah and Imam Ahmad bin Hanbal School. Their claim is based on the absolute understanding of many narrations from Allah’s Apostle PBUH. He SAWW said,

“It is not permissible for a woman who believes in Allah and the Day of Judgement to make a journey of one day and night unless she is accompanied by a mahram”.

It is reported by Hazrat Ibn Abbas R.A that Prophet SAWW said,

“No, the male is allowed to be alone with a woman except in the presence of her mahram. No woman is permitted to travel alone except in the company of a mahram”. A man asked Holy Prophet, “I have been enrolled for such and such expedition, and my wife left for the annual pilgrimage. He SAWW said, “Go and perform hajj with your wife”.

The woman is permitted to travel without a mahram: This opinion is held by scholars from Imam Shafi and Imam Malik school of thought by the most contemporary scholars. These scholars are of the view that illah (effective reason) why women were not permitted to travel without a mahram in the past was because of the safety issues and if she fulfills the conditions that permit her to travel safely, the prohibition is lifted. To support this ruling they refer to the Prophet’s saying, narrated by Adiy Ibn Hatem RA.

“And if you live a long life, you will surely see women traveling from Hira till they Tawaf the Kabah, fearing no one except Allah”.

Therefore, a woman is allowed to travel alone if she fulfills the following criteria:
If she has trustworthy companions throughout the journey till her return, she is allowed to travel without her mahram.
If she ensures that her journey is safe and she will not meet any harassment or chaos which can jeopardize her safety, she is allowed to travel alone.

Saudi Rules for women traveling without mahram: 
According to the current Saudi rules and regulations, no women under the age of 45 are allowed to travel alone without mahram. However, if she is over the age of 45 can go to perform alone, without a mahram. But she needs proof (No Objection Certificate) that her mahram allowed her to travel with an organized group or family.

Collection & Prepared by M.Ajmal Khan.