Friday, 27 February 2009

கட் ஆஃப் மார்க் என்றால் என்ன?



கலந்தாய்வின் போது கட் ஆஃப் மார்க் அடிப்படையில் தான் சீட் ஒதுக்கபடும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கு இந்த கட் ஆஃப் மார்க் பற்றிய ஞானம் இல்லை தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.
எதனை கொண்டு கட் ஆஃப் மார்க் கணக்கிடப்படுகின்றது.



 பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வின் போது கட் ஆஃப்மதிப்பென்கள் அடிப்படையில் தான் சேர்க்கைகள் நடைபெறும் என்று நாம் அனைவரும்கேள்விபட்டு இருப்போம்அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்க வேண்டும் என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் எடுத்து இருக்க வேண்டும் அந்த கல்லூரியில் சேர்வது என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் தேவை இந்த‌ கல்லூரியில் சேர்வது என்றால் இவ்வளவு கட்ஆஃப் மார்க் வேண்டும் என்றேல்லாம் கூறுவதை நாம் கேட்டு இருப்போம்அனால் கட் ஆஃப்மார்க் என்றால் என்ன என்பதையும் அதை எப்படி கணக்கிடுவது என்பதையும் நம்மில்பலரும் அறிந்தது இல்லை.

அதை பற்றிய அறை குறை அறிவில் நாம் அதை எப்படி கணக்கிடுகின்றோம் என்றால் ஒருகுறிப்பிட்ட 3 பாடத்தில் நாம் எடுத்துள்ள மதிப்பென்களை கூட்டி 3 ஆல் வகுத்து வரும்விடையை தான் நாம்மில் பலர் கட் ஆஃப் என்று நினைத்து வைத்துள்ளோம்.

நாம் பொறியியல் கலந்தாய்விற்க்கு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் அதன்கட் ஆஃப் மார்க் கணிதம்இயற்பியல் மற்றும் வேதியலில் மாணவர்கள் எடுக்கும்மதிபென்கள் அடிப்படையில் கணக்கிடபடும்இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால்உயிரியல்வேதியல் மற்றும் இயற்பியலில் மாணவர்கள் எடுக்கும் மதிபென்கள்அடிப்படையில் கணக்கிடபடும்.

எப்படி கணக்கிடுவது?

நாம் பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேர இருக்கின்றோம் கீழ் குறிப்பிட்டமதிப்பென்கள் தான் நாம் பெற்றுள்ளோம் என்று கருதி கொள்ளவும்.
பாடம்
மதிப்பென்
கணிதம்
189 / 200
வேதியல்
185 / 200
இயற்பியல்
180 / 200
உயிரியல்
190 / 200

இதனுடைய கட் ஆஃப் மார்க்கை எப்படி கணக்கிடுவது என்பதை நாம் அறிவோம்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல பொறியியல் கலந்தாய்வில் கணிதம்வேதியியல் மற்றும்இயற்பியலின் மதிப்பென்களை கொண்டே கட் ஆஃப் மார்க் கணகிடபடும்.

நம்முடைய கணக்கு மதிப்பென்னை 2 ஆல் வகுத்து இயற்பியல் மற்றும் வேதியியலின்மதிப்பென்களை தனித்தனியே 4 ஆல் வகுத்து வரும் விடைகளை கூட்டினால் நம்முடையகட் ஆஃப் மதிப்பென் வரும்.

கணக்கு               :                        189 / 2 = 94.5
இயற்பியல்             :                       180 / 4 = 45
வேதியல்                  :                       185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க்     :                       94.5 + 45 + 46.2    =          185.7

இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால் கணிதத்திற்க்கு பதில் உயிரியலை வைத்துகணக்கிட வேண்டும்.

உயிரியல்       :        190 / 2 = 95.     
இயற்பியல்              :                       180 / 4 = 45.
வேதியல்                  :                       185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க்     :                       95 + 45 + 46.2       =          186.2

தமிழக பொறியியல் மற்றும் மருத்துவ‌ கலந்தாய்வு கட் ஆஃப் மதிப்பென்னைகணக்கிடுவது எப்படி என்று புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்


இது தமிழகத்தில் நடத்தபடும் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கட் ஆஃப்மதிப்பென் கணக்கிடும் முறை மற்ற தேர்வுகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் கட் ஆஃப்மதிப்பென் கணகிடும் முறை மறுபடலாம்.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான் 

கடவுளின் அவதாரமா? இல்லை கபடவேடமிடும் செப்படி வித்தைக்காரனா?இந்த புட்டர்த்தி சாய்பாபா !!


சாய்பாபா கடவுளின் அவதாரமாக சொல்லிக்கொண்டு செய்யும் அற்புதங்கள் அனைத்தும் தந்திர வேலைகளேஎன்று பகுத்திறவு இயக்கத்தினர் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.மேலும் சாய்பாபா ஒரு கீழ்த்தரமானபாலியல் குற்றவாளி என்பதும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.தனது பாலியல் இச்சைகளுக்குஅவர் ஆசிரமம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுவர்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும்ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.சாய்பாபாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களே கொடூரமாககொலை செய்யப்பட்டதும் உண்டு.

இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.இக்குற்றச்சாட்டுகள்பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால் (BBC) ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டு கோடிக்கணக்கானமக்களை சென்றடைந்துள்ளன.அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பெரியார் திராவிடர் கழகம்வெளியிட்டுள்ள ஒளிப்பட தொகுப்பை கீழ்காணும் சுட்டிகளில் காணலாம்.

ou tube : Sai Baba Tricks Completely Exposed, Satya sai baba fraud, Sai Baba's magic trick
you tube : Sai Baba: Deceiving the Gullible: http://www.youtube.com/watch?v=eTPDc5c36S8
you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.



இது தவிர சாய்பாபா பணத்தின் மீது பேராசை கொண்டவர் என்பதும்அம்பலமாகியுள்ளது.தனது பக்தர்களை தாராளமாக ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்யதூண்டும் பாபா பக்தர்கள் தங்களது சொத்துக்களை ஆசிரமத்துக்கு தானமாக அளிப்பதையும்ஊக்குவிக்கிறார்.அவ்வாறு விசயவாடாவை சேர்ந்த ஒரு மூதாட்டி அவர் இறந்தபின் அவரதுவீடு பாபாவின் ஆசிரமத்துக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது 55 -வது வயதில்உயில் எழுதி வைத்த பாவத்திற்காக உயிருடன் இருக்குபோதே வீட்டை பாபாவின்ஆசிரமத்திடம் பறி கொடுத்த பரிதாபத்தை கீழே உள்ள சுட்டியில் காணலாம்.

ஆக கொலைக்கஞ்சா கொடியவர்களின் ஆசிரமத்தின் தலைவர்தெருவோரத்தில் வித்தைகாட்டி பிழைக்கும் செப்படி வித்தைக்காரனின் தந்திர வேலைகளை அற்புதங்கள் போன்றுசெய்துகாட்டி ஏய்க்கும் ஒரு மோசடி பேர்வழிபேராசை கொண்ட ஒரு பணப்பேய் கடவுளின்அவதாரமாக இருக்க முடியுமா.

சாய்பாபாவின் மோசடிகளை யூடுயூபில் காட்சிகளாகக் காண இங்கே சொடுக்குக!
you tube : sai baba








you tube : Sai Baba: Deceiving the Gullible:


you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.



you tube : Sai Baba - is he cheating?

சாய்பாபாவை கடவுளின் அவதாரமாக நம்புவோரிடம் நாம் கேட்க விரும்பும் சிலகேள்விகள்.
சாய்பாபா தங்கத்தாலான கடவுள் சிலையை (லிங்கம்வாயிலிருந்து அல்லதுவயிற்றிலிருந்து எடுக்கிறார்.அவரே படைத்த ஒரு பொருள் போல் அதை பக்தர்கள் என்றபேரில் கூடியிருக்கும் ஆட்டு மந்தையிடம் காட்டி கை தட்டல் பெறுகிறார்காற்றில் கையைசுழற்றி தங்க சங்கிலி வரவழைக்கிறார்.வெறும் கையால் தங்க மோதிரத்தைதருவிக்கிறார்.இவையெல்லாம் உண்மையென்றால்,வெறும் காற்றிலிருந்தும் தனதுவயிற்றிலிருந்தும் இவ்வளவு செல்வங்களை படைக்க வல்ல சாய்பாபா இப்படி தங்ககட்டிகளை படைத்து இந்தியாவின் உள்நாட்டு,வெளிநாட்டு கடன் அத்தனையும்அடைத்துவிடலாமே.ஏன் செய்யவில்லை.
தங்கத்தையே வரவழைக்க வல்லவர் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது ஏன்.

தனது தள்ளாமையையும் மூப்பையும் சமாளிக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து வரும்,சமயங்களில் சக்கர நாற்காலியில் வரும் , பாபா பக்தர்களின் குறைகளை தீர்த்து விடுவார்என்பதை நம்ப முடியுமாஎண்ணிப்பாரீர்.

நமக்கு தெரிந்த இந்த உண்மைகள் நாட்டின் முதன்மருக்கும் மாநில முதல்வர்களுக்கும்தெரியும்தானேஅப்படியிருந்தும் அவர்கள் பாபாவை பணிந்து நிற்பதேன்.இந்த கேள்விக்குவிடை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.மேற்கண்ட இந்து நாளிதழின்செய்தியிலேயே இதற்கு விடை இருக்கிறது.
அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரும் புள்ளிகளின் பட்டியல். 

பார்த்துவிட்டீர்களா நண்பர்களே.இப்போது சொல்லுங்கள்சாய்பாபாகடவுளின் அவதாரமாஇல்லை செப்படி வித்தையால் ஊரை,அல்ல,உலகை ஏய்க்கும் கயவனா.

கொல்லர் பட்டறையில் தங்க நகை உருவாகும்.மனிதனின் வயிற்றில் என்னஉருவாகும்.சாய்பாபா வயிற்றில் தங்கம் உருவாகிறதென்றால் பெரும் பொருட்செலவில்கோலார் தங்க வயலில் தேடுவதற்கு பதிலாக சாய்பாபாவை வைத்து வேண்டிய அளவுக்குதங்கத்தை தேடிகொள்ளலாமேஇந்திய அரசுக்கு இந்த யோசனையை நீங்கள் ஏன்தெரிவிக்கவில்லை.

சாய்பாபா கடவுளின் அவதாரம் என்றால் 50 களில் துள்ளி திரிந்த அவர் கடந்த சிலபலஆண்டுகளாக தள்ளாமையால் தடுமாறுவது ஏன்.

1.நாட்டின் முதன்மர்.மன்மோகன்.
2.ஆந்திர முதல்வர்.
3.கர்நாடக முதல்வர்.
4.தமிழக துணை முதல்வர்.(பெரியார் இல்லாதது வசதியாக போய்விட்டது .)
5.அண்மையில் மகராட்டிர முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான்.
6.ஆந்திர ஆளுநர்.
7.பஞ்சாப் ஆளுநர்.
8.திரிபுரா ஆளுநர்.
9.டாட்டா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாட்டா.
10.டி.வி.எசு.நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்.


இப்படி பெரும்புள்ளிகள் ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏன் ஒன்று கூடவேண்டும்ஓரிருபிரபலங்கள் போதாதாஉண்மையில்ஆட்சியில்இருப்போருக்கும்,உயர்அதிகாரிகளுக்கும்,பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான வேலைகளை செவ்வனே முடித்து தரும் தரகுவேலையைத்தான் பெரும்பாலான சாமியார்கள் செய்து வருகிறார்கள்அந்தவகையில்தாங்கள் வேலைகளை சாதித்து கொள்வதற்காகவே பெரும்புள்ளிகள் மடங்களையும்ஆசிரமங்களையும் தேடி வருகின்றனர்.அப்படிப்பட்ட தரகர்களின் முன்னணி வரிசையில்உள்ளவர்கள்தான் சாய்பாபாவும் அவரது அல்லக்கைகளும்.இத்தகைய விழாக்கள் அவர்கள்கூடுவதற்கான ஒரு வாய்ப்பு,ஒரு சாக்கு.
அதனால்தான் பாபா போன்றோரின் குற்றவியல்பொருளாதாரபாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட அரசுகள் உடந்தையாக உள்ளன.ஆசிரமத்தில் கொலையே நடந்தாலும்முதல்வர்கள் தொழுது வணங்கும் பாபா மீதோ அவரது அடிவருடிகள் மீதோ முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு துணிவு வருமா என்று எண்ணிப்பாருங்கள்.
 
இப்படியான பின்னணியில்தான் சாய்பாபா அப்பழுக்கற்றவர் போல் நடித்து கடவுளின்அவதாரம் என்று நாடகமாட முடிகிறது.பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெறாதவரைபாபாக்களுக்கு கொண்டாட்டம்தான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்