Monday, 12 March 2012

"ஜீஷா" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்?


ஜீஷா

மனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் (The Great Pyramid of Giza) படத்திலுள்ளன. எகிப்து நாட்டின் எல்லையிலும் நைல் நதி கரையோரமாகவும் அமைந்துள்ள "ஜீஷா" எனும் மாபெரும் பிரமிட்டுக்கள் 4000 வருடம் முன்பு கட்டப்பட்டுள்ளன. மாபெரும் பிரமிட்டுக்கள் பண்டய உலகின் ஏழு உலக அதிசயங்களில் மிகவும் பழைமையானதும் இன்றய காலம்வரை அழிந்து போகாமல் நிலைத்து நிற்பதாகவும் உள்ளது.

"ஜீஷா" பிரமிட்டுக்கள் ஏன்? எதற்காக கட்டப்பட்டன என்ற வினாவிற்கு சான்றான பதில் இன்றுவரை தெரியாது. ஆனால் பிரமிட்டுக்களை கடந்த பல வருடக்கணக்கில் ஆராய்ந்து வரும் தொல்பொருள் ஆராச்சியினர் பலரும் வெளியிட்ட தகவல்கள் மனிதனின் வலுவின் மிஞ்சிய விடையமாகவுள்ளது. இவர்களின் கூற்றுப்படி பிரமிட்டுக்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட காலம் கி.மு 2560 ம் வருடத்தில் இருந்து தொடங்குகின்றது. இந்த மாபெரும் திட்டத்தினை தீட்டுவத்ற்கு மட்டும் 10 வருடம் மேலான காலத்தினையும் கட்டுவதற்கா 20 வருடங்களையும் செலவிட்டுள்ளனர் எனவும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மகா சதனையின் பின்னால் இருந்துள்ளோர் அதீத அறிவும் ஞானமும் மேலோங்கி இன்நாளில் போசப்படும் வானியல், புவியியல், பெளதீகவியல், கணக்கியல் போன்ற விடையங்களின் நிபுணர்களாக இருந்துள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இத்தனை தவல்களை விடவும் இன்றய காலத்தில்கூட சாதிக்க முடியாத மகா சாதனையின் பின்னால் கடவுள் எனும் மகா சக்தி உதவியுள்ளது என்ற முடிவுக்கு எல்லோரும் வந்துள்ளனர். (இத்தனை அற்புதங்கள் கொண்ட முடிவிற்கு மனிதனை சிந்திக்க தூண்டிய விடையங்களை கீழே தரப்பட்டுள்ள வீடியோ இணைப்பில் முழுமையாக பார்வையிடலாம்.)

மேலும் நவீன எகிப்து நாட்டின் கயிரோ நகருக்கு அண்மையாகவுள்ள பழைமையான ஜீஷா நகரம் மொத்தமாக மூன்று வெவ்வேறு பிரமிட்டுக்களை உள்ளடக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 2560 கி.மு வருடம் முன்பு கட்டப்பட்ட வேளையில் இதன் மேல்பகுதிகள் மிகவும் அழுத்தமாகவும் யொலிப்பாகவும் இருந்தபோதிலும் காலப்போக்கில் இதன் அருமை பொருமை தெரியாது மனிதனால் சிதைக்கப்பட்டுள்ளன. பழைமையான ஜீஷா நகரம் சிறந்த பண்பாடு , நாகரீகம் , கட்டுப்பாடு , மத ஒழுக்கம் , கடின உழைப்பு இவற்றின் உறைவிடமான மக்கள் கூட்டம் கொண்ட செழிப்பான நகரமாக ஆரம்பகாலத்தில் இருந்தபோதிலும் பலஆயிரம் வருடகால ஓட்டத்தின் பின்பு ஜீஷா பிரபிட்டுக்கள் மட்டுமே பாலைவனத்தில் எஞ்சியுள்ளன i.
ஜீஷா நகரம் மொத்தமாக மூன்று பிரமிட்டுக்கள் இருந்தபோதிலும் மிகவும் உயரமான மகா ஜீஷா மட்டும் கீழ்வரும் தகவல்களில் தரப்படுகின்றது.
  • ஜீஷா பிரமிட்டு மொத்தம் 13 ஏக்கர் பரப்பில் பரந்துள்ளது.
  • மகா ஜீஷா (Giza) பிரமிட்டு (படத்தில் உள்ளது) இதன் அடிப்பரப்பு 1,134 அடியாகவும் உயரம் 486 அடி (138.75 மீற்றர்) என அமைந்துள்ளது.
  • இவை ஒவ்வொன்றும் சராசரி 2.5 தொன் (5,000 இறாத்தல்) நிறை உடைய 21 இலட்சம் கற்களினால் 20 வருட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • நான்கு திசைகளில் முகம் கொண்டுள்ள பிரமிட்டின் வாசல் வடதிசையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் வாசல் 9 அடி சதுரமாக நிலத்தில் இருந்து 150 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.
  • பிரமிட்டின் வாசலில் இருந்து 324 அடி நீண்ட உள்மனை மூன்று தளங்களில் உள்ள 3மண்டபங்களுக்கு செல்கின்றது.
  • பிரமிட்டின் முதன்மை கட்டுமானத்தில் இரண்டு மில்லியன் கற்கள் ஒவ்வொன்றும் 1/50அங்குல இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளது.
  • கட்டி முடிவுற்ற காலத்தில் மிகவும் பளபளப்பாக இருந்த பிரமிட்டு 100 மைல் தொலைவிற்கு சாதாரண கண்களுக்கு புலப்படுமாறு இருந்துள்ளது.
  • கட்டிடம் முடிவுற்ற காலம்முதல் பலகாலமாக புராதன மக்களின் வணக்கத் தலமாக இருந்துள்ளது.
  • பிரமிட்டின் முக்கிய இராட்சதகல் கட்டுமானம் தவிர 115,000 மணல் உதவியுடன் பளபளபு செய்யப்பட்ட சுண்ணாம்பு கற்கள் மேலதிகமாக பாவித்துள்ளனர்.
  • மேல் கூறிய சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் 1/100 அங்குல இடை வெளியில் பொருந்த வைத்துள்ளனர்.
  • ஜீஸா பிரமிட்டு நைல் நதி கரையிலும் எகிப்து நாட்டின் எல்லையிலும் உள்ளது. ஜீஸா என்பதன் அர்த்தம் அரபு மொழியில் எல்லை என்பதாகும்.
  • கட்டுவத்ற்கு உபயோகித்த கற்களினால் 20 எம்பயர்ஸ்டேட் காட்டிடம் கட்டமுடியும் அல்லது பூமியை சுற்றிவர ஒரு நடைபாதை அமைப்பதற்கு சமம் எனவும் இதன் பிரமாண்டம் வர்ணிக்கப் படுகின்றது.
  • 3800 வருடங்களாக உலகின் உயர்ந்த கட்டிடம் என்ற இடத்தை பிடித்திருந்தது.
  • கடந்த காலங்களில் உலகின் 7 அதிசையங்களில் ஒன்றாக இருந்து வரும் பிரமிட்டுக்கள் எகிப்து நாட்டில் உள்ளன.
மேலுள்ள தகவல் தொடர்புடைய வீடியோ (youtube) காட்சி
The Great Pyramid Of Giza

No comments:

Post a Comment