4. உடலை நல்லடக்கம் செய்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட நபருடைய பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God) - Education is foremost to shape a person's character in life. - Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator. - Nothing can change a person but the person itself. If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Wednesday, 28 February 2018
அரபு நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர என்ன வழிமுறை?
4. உடலை நல்லடக்கம் செய்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட நபருடைய பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
Tuesday, 27 February 2018
Review of Padma Shri Actress Sridevi Murdered in Dubai Hotel ?
Looks like Indian media is more interested in getting Sridevi's Body released than in letting investigations getting completed. Procedures in such accidental cases are very normal. Based on the findings and results of the police procedures and post-mortem report, prosecutors will decide on the next step. However, the public and the media should be aware that the law in such incidents require certain and very particular law enforcement procedures that has to be carried out prior to issuing a written approval to have the body of the late Indian actress or any other deceased’s body released. Primarily and principally speaking, the family’s privacy must be respected and secondly, the authorities’ procedures and efforts must also be respected. This incident, is being treated like all other similar incident, since Dubai’s law enforcement officers and organisations treat all cases and involved individuals in the same manner ... law enforcement procedures are practiced and applied justly and equally on all individuals present on the land of the UAE,
Even when it is more than evident now that her death was not natural. They are all eagerly waiting to relay scenes of her last journey inter pressed with stock shots of songs and scenes from her hit movies. After all, this is a big spectacle that will get them huge TRPs. Hence this indirect pressure on authorities in Dubai to get her Body released soonest. No news channel is interested in finding out the truth it seems.
My friend is doctor, He troubled by the way in which actress Sridevi's death was announced. His view..
1. Nobody has told us she was intoxicated enough to be drowned in a bath tub. Was blood alcohol level done? If so, it should be declared to the public what it was and if it was high enough to cause accidental drowning.
2. Another possibility is that she could have slipped and hurt her head in bath tub and lost her consciousness. That can explain drowning even if she was not heavily under influence of alcohol.
3. Why did her husband suppress the fact that she was drowned in bath tub and call it "cardiac arrest" which is a ridiculous way of saying she died because "heart heart stopped". It may be noted that cardiac arrest is due to a predisposing cause and it has been revealed Sridevi had no prior heart condition that could cause a "cardiac arrest".
4. What happened in the 15 minutes Bonney Kapoor spent with Sridevi before she went to take a bath?
As always, we may not know everything that happened but at least public should be reassured there was no foul play.
Tons of contradictory statements & irrelevant theories only misleading the prime motive & cause in the preliminary investigation for entertainment masala ! we have to summarize there are 2 versions.
First version is of Mr Boney Kapoor.
Second version is of hotel authorities. Some questions to be answered
1. Why did Sridevi stay for 3 days even after her family left ?
2. If Sridevi was drunk why did her husband insist they go out for dinner as he should have known the circumstances and told her to take rest.
3. What surprises us is why Mr. Kapoor called his friend and not the doctor. Where as these kind of hotels do have round the clock doctor on a call. All started at 5.30 pm and called the police at at 9 pm lost the precious time of around 3 hours. What was Boney Kapoor doing from 6 pm to 9 pm.
4. See all CCTV footage who came to meet Sridevi for 3 days.
5. Did something happen which upset Boney Kapoor ?. Even if a person is drunk no sane person dies with drowning
7. Was it a sinister act which no one knows ? Boney Kapoor can only answer the truth.
8. Its like the Arushi murder case where till now no one knows who killed her as only her parents know the truth. 8. The mystery remains
I’m a great fan of her from my childhood days. She is the only actress who has acted as a daughter and heroine with many big actors in Tamil film industry. Nobody can replace her. This will be a big void which nobody can replace in near future. Anyhow, we lost a great Beauty Queen actress, "Sridevi's sudden passing away has left us in deep shock. Can't imagine how such a bubbly person, a wonderful actor, is no more. She has left a void in the industry that cannot be filled. whose agony pain cannot be measured/felt.
By : M.Ajmal Khan.
Sunday, 25 February 2018
பாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள அறையில் முதியவர்கள் பிணக்குவியல் !!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி.20 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.
இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் முதியோர்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவதாக வந்த தகவலையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அந்த இல்லத்தில் வயதானவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுகின்றனர். ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.
அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர்.
பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. மர்மமான முறையில் ஒருநாளைக்கு 2 அல்லது 3 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 50க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களின் உடல்களையும் அவர்கள் புதைக்கவோ, எரிக்கவோ இல்லை. சுவற்றில் அவற்றை பதப்படுத்தி வைத்து அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் அந்த தொகுதி எம்.எல்.ஏ சுந்தரிடம் விசாரிக்கையில் அவர் தெரிவித்ததாவது, "எனக்கு இதுகுறித்து 3 வருடங்களுக்கு முன்னதாகவே தெரியும். இங்குள்ள சிலருக்கும், அந்த இல்லத்தில் ஏதோ நடக்கிறது என்று தெரியும். ஆனால் இதை வெளிக்கொண்டுவர நாங்கள் முயற்சி செய்தோம். ஆளும் கட்சியின் சில முட்டுக்கட்டைகளால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை" என தெரிவித்தார்.
ஒரு பக்கம் என்னடானா Mother theresa லெவெலுக்கு இவுரு சேவை செஞ்ச மாறி இருக்கு, இன்னொரு பக்கம் எதோ Nazis லெவெலுக்கு திட்டமிட்டு ஆயிரக்கணக்கான கொலை பண்ணிட்ட மாறி சொல்றாங்க..அரசு விசாரிச்சு உடனே உண்மையை கண்டுபுடிக்கணும்... ஆனா இத காரணமா வெச்சு எப்ப எத வெச்சு மத துவேஷத்த தமிழ்நாட்டுல தூண்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்குற RSS/BJP சமூக வலைதலங்கள்ள ரொம்ப கூவிட்டு இருக்குதுங்க இந்த வாரம்...
வழக்கம் போல அறிவார்ந்த தமிழ் சமுகம் அவுனுங்கள துப்பிட்டு அடுத்து போவட்டும்.
மனிதனை சேவிப்பவர்களின் பணி தொடரட்டும்..
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ...
பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”
நூல்:திர்மிதி
தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.
அரசு சரியான உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை, தமிழக அரசு CBCID கொண்டு சென்று , பாதாள அறையைத் திறந்து சோதனை செய்ய வேண்டும்.அப்போதுதான் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தவறு எந்தப் பக்கம் இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
விடை வேண்டும் விரைவில் ...
Friday, 23 February 2018
Civil Land Surveyor Job Interview Questions & Answers !!
இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா !!
தற்காலம் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படம் அனைவருக்கும் தெரியும். அதனை வரைந்தவர் இந்த பாஷ்யம் எனும் ஆர்யா. சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கிறொமல்லவா, அங்கு வானுயர எழும்பியிருக்கும் கொடிமரத்தையும் பார்த்திருக்கலாம். இந்த கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த இந்த மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. அதிலும் அவர் நம் மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்ககூடியது. அல்லவா?
சேரங்குளத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தார் பாஷ்யம். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த ஏ.ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர். மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொைலையினால் ஆவேசம் கொண்டார். நீடாமங்கலம் சென்று அங்கு நடந்த காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்டார். தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி பூண்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மன்னார்குடியில் முடித்தபின் திருச்சி சென்று தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் படித்த நூல்கள் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களே அதிகம். இங்கிலாந்திலிருந்து ‘சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. காங்கிரசார் அதனை கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்று போராடினர். சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம். முதல்வர் சாரநாதன் காட்டிய கருணையால் அவர் படிப்பு இடையூறு இன்றி தொடர்ந்தது. எனினும் தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. பயங்கரவாத அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. புதுச்சேரி சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். பாரதமாதா சங்கம் போன்ற சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சேரங்குளத்துக்குத் திரும்பிய பாஷ்யம் ஏதாவது செய்யத் துடித்தார். அப்போது கவர்னர் மார்ஷ் பாங்சின் என்பவர் சிதம்பரத்துக்கு வருவதாக செய்தி கிடைத்தது. பாஷ்யம் சிதம்பரம் சென்றார். கவர்னர் கலந்து கொண்ட கூட்டத்திற்குச் சென்று அவரைச் சுட முயன்று, முடியாமல் போய்விட்டது. தஞ்சை திரும்பி தனது நண்பர் டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார். டாக்டர் அவர் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இதுபோன்ற செயல்களை விடுத்து மகாத்மாவைப் பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.
மதுரையில் ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டி சில நண்பர்களுடன் முயன்றார். அதில் தோல்வியடைந்து போலீசில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளானார். இவரது நண்பருக்கு ஏழாண்டு சிறை, இவர் மீது எந்த ஆதாரமும் இல்லையென விடுதலையானார். 1931இல் சென்னை சென்று தமையனார் வீட்டில் தங்கினார். போலீஸ் கண்காணிப்பு இருந்தும், இவர் கதர் அணிந்து கதர் துணி விற்பனை செய்தார். அந்நிய துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாய் துணிக்கடைக்காரர்கள் இவர் மீது எச்சிலை உமிழ்ந்தார்கள், சிகரெட்டால் சுட்டார்கள், தலையில் கள்ளுப்பானையைப் போட்டு உடைத்தார்கள். ஜவஹர்லால் நேரு ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாரானார்.
1932 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய தேசிய மூவண்ணக் கொடியன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரம் குறுக்களவு 3 அடி உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சுழலும் விளக்கின் வெளிச்சம் படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு அதில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி சாமர்த்தியமாக ஓடி தப்பிவிட்டார். காலையில் ஒரே பரபரப்பு. கோட்டையில் ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் அந்நிய துணிகளை விற்கும் பிரம்மாண்டமான கடைகளில் துணிகள் அடிக்கடி தீப்பற்றி எரிவதாக புகார்கள் வந்தன. அவைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி தீ விபத்து நடந்த கடைகளுக்கு பாஷ்யமும் அவரது நண்பர்களும் போய்வந்ததும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாஷ்யம் அப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர்ஹைதர் கான், சி.எஸ்.சுப்பிரமணியம், புதுச்சேரி சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. பாஷ்யம் எனும் மீன்குட்டிக்கு நீந்துவதற்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். புகுந்து விளையாடினார். இவர் ஓர் ஓவியர். நிறைய படங்களை வரைந்து வைத்திருந்தார். அப்படித்தான் மகாகவி பாரதி படத்தையும் வரைந்தார், அது பின்நாளில் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1945இல் முழு நேர ஓவியரானார், “ஆர்யா” எனும் புனைபெயரைத் தாங்கிக் கொண்டார். மகாத்மா, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். இவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். வாழ்க வீரர் பாஷ்யம் எனும் ஆர்யாவின் புகழ்!
or reload the browser