Thursday, 30 July 2009

ஏழை முஸ்லிம்களுக்கு வறுமையில் இருந்து மீள நிதியுதவி செய்யும் 'பைத்துல்மால் !! ஒரு தவகல்..

தமிழகத்தில் உள்ள 'பைத்துல் மால்' எனும் ஏழைகள் நிதியம், பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தல், கல்வியில் முன்னேற்றுதல், திருமணம், மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல் ஆகிய பணியில் ஈடுபட்டு வருகிறது.ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் முக்கிய முஸ்லிம் பிரமுகர், ஆலிம் எனப்படும் மதகுரு ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு இந்த பைத்துல்மால்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் வரவு, செலவு கணக்குகளை முறைப்படி பேண வேண்டும்.தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பைத்துல்மால்கள் எனும் ஏழைகள் நிதியம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியம் மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படுகின்றன.

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைத்துல்மால்கள் பிரசித்தம்.
85 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்புக்கு மேல்பொருட்கள், பணம் வைத்திருக்கும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் இரண்டரை சதவீதம் ஜகாத் எனும் ஏழை வரி வழங்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் 5 கட்டாயக் கடமைகளில் ஒன்று. ஜகாத் தொகையை கூட்டுசேர்ந்து வசூலிக்கப் பட்டு, தேவையான ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய வழிமுறை. 

இதன்படி, தமிழகத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பைத்துமால் கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பைத்துல்மால்களில் அரசி டமிருந்து உதவித் தொகை கிடைக்கப் பெறாத முதியோர், விதவைகளுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பைத்துல்மாலின் நிதி நிலைமைக் கேற்ப ரூ.500 முதல் ஆயிரம்வரை மாத ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பைத்துல்மால்கள் மூலம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியம் பெற்று பயனடைகின்றனர்.

இதுதவிர, கல்வி உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம்வரை மாணவரின் படிப்புக்கேற்ப நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதேபோல, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பைத்துல்மால்களை உருவாக்கி ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டுள்ள காங் கிரஸ் கட்சி பிரமுகர் எஸ்.எம்.இதாய துல்லா, இதுகுறித்து 'தி இந்து' விடம் கூறியதாவது:
ஜகாத் எனும் ஏழை வரியை கூட்டுசேர்ந்து, குர்-ஆனில் தெரிவித்துள்ளபடி தேவையுடைய ஏழைகளுக்கு வழங்கவேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நடைமுறைப்படி ஜகாத் தொகையை ஏழைகளுக்கு வழங் காமல் அவரவர் விரும்பிய நபர்களுக்கு வழங்கி வந்தனர்.

ஜகாத் எப்படி, யாருக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் அவ்வாறு செய்து வந்தனர். அவர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை நடை முறைகளில் இருந்து உரிய ஆதா ரங்களுடன் விளக்கம் அளித்து 'பைத்துல்மால்' எனும் ஏழைக ளுக்கான நிதியம் உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.



தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் மொஹல்லாக்கள் (பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள்) உள்ளன. ஆனால், இதில் 15 சதவீதம் அளவுக்கே பைத்துல்மால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மொஹல்லாக்களிலும் பைத்துல்மால்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற லட்சி யத்தை நோக்கி செயலாற்றி வருகிறோம்.
முஸ்லிம்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வறுமையில் வாடும் பலர் வட்டிக்கு கடன் பெற்று தொழில் தொடங்குவது, மருத்துவம், கல்வி, திருமணம் ஆகியவற்றுக்காக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும், கல்லாமை, இல் லாமை, இயலாமை ஆகியவற்றை நீக்கவும் பைத்துல்மால்கள் உதவியாக உள்ளன.
வசதிபடைத்த முஸ்லிம்கள் முறைப்படி ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு அந்தந்த பகுதியில் அமைந்துள்ள பைத்துல் மால்களுக்கு வழங்கினால், மிகவும் வறுமையில் வாழும் பல ஆயிரம் முஸ்லிம்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும் ...

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு , அஜ்மல் கான்.

Wednesday, 29 July 2009

More Prayers Less Worries.....

Many times in life we pray, but we don't receive specific answers to our prayers. There are many reason why we do not get our payers answered. And in the result we feel sick, broken, disappointed and defeated.
I think it is very important to understand that why our payers are unanswered and how to get answers to our prayers.

And your Lord said, 'Pray to Me, I shall acknowledge your call. Undoubtedly those who are too proud to worship Me, soon will enter the Hell despised. Surah Al-Mu'min : Ayat 60

It is reported that Ibrâhîm Bin Adham (Allâh have mercy on him) once passed through the market of Basrah. People gathered around him and asked:
"O Abû Ishâq, Allâh the Exalted says in his Book. ‘Call on me, I will answer your prayers’, but we have been calling on Him for a long time and He does not answer our prayers."

 Ibrâhîm replied,
"O people of Basrah, your hearts have died in respect to ten things:

First, you know Allâh but you do not give Him His rights;

Second, you have read Allâh’s Book (Quran) but you do not act by it;

Third, you claim to love Allâh’s Messenger – Allâh’s peace and blessings be upon him – yet you abandon his Sunnah (life style of Prophet Muhammad Peace Be Upon Him);

Fourth, you claim to be enemies to Shaytân (Satan) but you conform to [his ways];

Fifth, you say you love Paradise yet you do not work for it;

Sixth, you say you fear The Fire yet you put yourselves closer to it [by sinning];

Seventh, you say death is true but you do not prepare for it;

Eighth, you busy yourselves with the faults of others and disregard your own;

Ninth, you consume the favors of your Lord but are not grateful for them; 

And tenth, you bury your dead but take no lesson from them."

Many times it happens that Allah doesn't answers our prayers because we don't have a relationship with Allah (God).
First we have a strong relationship with Allah (God), then follow His commend and seek direction from Allah in every matter of life. Our will should obey His will. After developing a bond with Allah we feel comfortable while we come to Allah for our needs and concerns. 
Prayer is not a magic button to escape that process. By compelling us to make an effort, Allah (God) gives us the means to truly grow and learn by sufferings. Allah answers all prayer, sometimes the answer is "no" I have a better plan for you, sometimes it is "not yet", and other times the answer is "yes". But most of the time we do not understand His intentions, His will and teachings due to our limited wisdom knowledge.
We must be sincere to Allah. If we become serious about a relationship with God, then we understand that God is always teaching us.
Payer is a natural part of relationship with Allah.

Don't panic just pray: 
Allah answer our every prayer but not in the way that we hope. Firm faith is what is required in prayer. Allah (God) hears the prayers of everyone. When someone does not receive an immediate, favorable answer from Allah (God), he or she then assumes that Allah (God) either didn't hear the prayer or doesn't care to answer. We must have trust on Allah's integrity, His compassion, love, wisdom. Allah always gives us what is better for us. Allah answers different prayers in different ways,  He is aware of what is the best for us.
Think positive let every thought affirm that you have the answer to your prayer. Allah (God) is always there for your call (prayer). The lines are open. Toll-Free. Pick up the phone today.

Tuesday, 21 July 2009

மனித அறிவியல் நிலையற்றது....

மனித அறிவியல் நிலையற்றது. தான் கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் மாறிக் கொண்டே இருப்பதுதான் இந்த மனித அறிவியல். இதன் வளர்ச்சி உயர்ந்து கொண்டிருப்பது உண்மையென்றாலும், அது மனித வர்க்கம் அழியும் வரை அதன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கும்.

ஆனால், இவ் அண்டத்தின் அறிவியல் வளர்ச்சியடைகிறது என்பது உண்மையென்றால் அதுதான் இல்லை. இவ் அண்டத்தின் அறிவியல் என்றென்றும் நிலையானது. அதன் வளர்ச்சி முழுமையடைந்த ஒன்றாகும். இதை மனிதன் தன்னுடைய அறிவிற்கு ஏற்ப சிருக சிருக முயன்று அறிவியலின் ஒவ்வொரு கட்டத்தை தாண்டி மேல் நோக்கி முன்னேறி வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றான்.

ஒவ்வொரு மனித அறிவியல் கண்டுபிடிப்புகளும், அதற்கு முன் உள்ளவைகளைக் காட்டிலும் உயர்தரத்திலும், இலகுவாக பயன்படுத்தும் விதத்திலுமே அமையப்பட்டிருக்கும். ஆனால், அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் இவ் அண்டத்தில் என்றென்றும் உள்ளவைகளைக் கொண்டே கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

இதைப்போன்றே இறைவன் என்பவன் நிலையானவன். அவன் எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்பட்டவனல்ல. ஆனால், மனிதர்கள் அந்த இறைவனை அறிவதற்காண அறிவு வளர்ச்சி முழுமைப் பெற்றவர்களாக இல்லை. இதை மக்கள்தான் சரியாக உணர்ந்து புரிந்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக மனிதன் வாழக்கூடிய உலகத்தைப்பற்றி இஸ்லாமிய மார்க்கம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.


2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான், (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

பூமி விரிப்பாக என்பதை அக்கால மக்கள் தங்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப விரிப்பு என்பதன் விளக்கமாக ஒரு விரிப்பு எப்படி தட்டையாக உள்ளதோ அதைப்போன்றுதான் இந்த உலகமும் தட்டையாக உள்ளது என்று புரிந்துக் கொண்டனர்.

ஆனால், கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் அறிவுத்திறன் வளர்ச்சியின் விளைவாக உலகம் தட்டையாக இல்லாமல் உருண்டையாக இருப்பதைக் கண்டறிந்தவுடன், விரிப்பு என்பதற்கான அர்த்தத்தை ஆராய்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர்களின் அறிவிற்கு புலப்பட்டது என்னவென்றால் வாழ்விடம் என்ற பொருளை கண்டறிந்தனர்.

இந்த அர்த்தத்தைக் கொண்டு மற்றைய கோள்களை ஆராயும் பொழுது அது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லை. இந்த பூமி மட்டுமே மக்கள் வாழ்வதற்கு தகுந்ததாக உள்ளது. எனவே இறைவனின் கூற்றுப்படி விரிப்பு என்பதன் பொருள் வாழ்விடம் என்பதாகும் என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

எப்படி முழுமையடைந்த அறிவியலை மனித அறிவியல் கண்டறிந்துக் கொண்டு உள்ளதோ, அதைப்போலவே முழுமையடைந்த மதம் அல்லது மார்க்கத்தை மக்கள் தங்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப தெளிவாக விளங்கியபடி உள்ளனர்.

அதனால் சகோதரர்களே... அறிவியல் எப்படி ஆராய்ச்சிக்கு உட்பட்டதோ, அதேப்போன்றுதான் மார்க்கமும் (மதம்) ஆராய்ச்சிற்கு உட்பட்டது. மார்க்கத்தையும் ஆராயுங்கள். அதன் நன்மையான கருத்துக்களை புரிந்துக் கொள்ள முயலுங்கள். வெற்றி உங்களுக்கே.

Friday, 17 July 2009

தூங்க மாநகரம் புனித மக்கா வை பற்றிய சிறப்பு பார்வை...


இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும்மக்கா வை பற்றி தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள வேண்டிய பதிப்பு இதனை படித்து மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

மக்கா நகரின் அந்தஸ்து மற்றும் பாத்திரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். முதல் மனிதர்,முதல் நபி ஆதம்,(அலை) அவர்கள் இறைவனின் கோபத்தால் பூவுலகில் இறக்கப்பட்ட இடம இன்று வரை சர்சையில்தான் இருக்கிறது.அதேநேரத்தில் மனித இன வரலாற்றை ஆராய்ந்த ஆராய்ச்சி வல்லுனர்கள ஜி.யு.போப், கால்டுவெல்,போன்றவரகள் எல்லா மதத்தினராலும் ஒருங்கே சொல்லும்முதல் மனிதர் ஆதம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும இடையேயிருந்த முதல் கடல்கோளால் அழிந்து போன ," லெமூரியா" கண்டத்தில் தோன்றியதாகக்கூறுகிறது. ஆதாரமில்லாத சில இஸ்லாமிய நூல்களில் ஆதம் நபி இந்துஸ்தானிலிருந்து ஹஜ் செய்ததாகவும், ஜித்தா(பாட்டி)வில் தோன்றிய அவ்வாவை(தாய்) அரfa (அறிந்துகொண்ட) திடலில் சந்தித்துக்கொண்டதாகக்கூறப்படுகிறது .

1) முதல் மனிதர் ஆதம் 
அவர்களின் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும்....

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்...

3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது...

4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.... 

5) நூஹ் நபி காலத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணுள் புதைந்தும்

6) ஆதம் அவர்களுக்கு பலாயிரம் ஆண்டுகளுக்கு பின் தோண்றிய இப்றாகிம் நபி மூலம் இறைவன் இந்த மக்காவை முஸ்லிம்களின் தலமையகமாக ஆக்க நாடுகிறான்...

7) இப்றாகிம் நபியுடைய மனைவி ஹாஜர் அவர்களையும் அவர்களது மகன் கைகுழந்தையாக இருந்த இஸ்மாயில் அவர்களையும் இறைவன் மக்காவில் விட்டுவிட்டு சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறான்..

8) ஆள் நடமாட்டம் இன்றி இருக்கும் மக்கா பாலைவனத்தில் இறைவனின் கட்டளைகினங்கி மனைவி, பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறார் மனைவியும் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து

9) இபுறாகிம் நபி கொடுத்து சென்ற உணவும் தீர்ந்து தொண்டை வரண்டு கைக்குழந்தை இஸ்மாயில் கதறி அழ தண்ணீர் தேடி அருகில் இருந்த இரு குன்றுகளுக்கிடையே மாறி மாறி ஓடுகிறார் அவரது தாய் ஹாஜர் அவர்கள்

10) உதவிகிட்ட வில்லை, குழந்தையின் அழுகுறளும் அடங்கியது பதறிய திரும்பிய தாய்க்கு அங்கு இறைவனின் அற்புத அதிசயம் காட்சி அளித்தது.. குழந்தைக்கு அருகில் நீரூற்று உருவாகி குழந்தையின் வாயை தொட்டுருந்தது...

11) தண்ணீரையும், அங்கு கிடைத்த பேரீச்சைகளையும் கொண்டு போதுமாக்கி கொண்டனர் அந்த தாயும், மகனும்...

12) அப்பொழுது அவ்வழியாக வந்த அரபி மொழி பேசும் நாடோடி கூட்டம் தண்ணீர் இருப்பதை அறிந்து அங்கயே இருப்பிடம் அமைக்க அந்த தாயிடம் அனுமதி கேட்கிறது.....

13) அன்னை ஹாஜர் அவர்களும் சில நிபந்தனை அளிக்க அவர்கள் ஏற்று கட்டுபட்டு அங்கு இருப்பிடங்களை அமைத்து அது இறைவன் நாட்டபடி ஊராகிறது..

14. பின் இறைவன் முதல் மனிதரால் கட்டபட்ட முதல் இறையில்லம் இருந்த இடத்தில் அந்த ஆலயத்தை மீண்டும் எழுப்ப நாடிகிறான்..

15) இப்றாகிம் நபிக்கு கட்டளையிட அவர் மீண்டும் மக்கா திரும்பி தன் மகன் இஸ்மாயில் அவர்களுடன் இணைந்து அல்லாஹ் அறிவித்த இடத்தில் பழைய ஆலயத்தை அதன் அடிதளத்தில் இருந்து மீண்டும்

16) இப்றாகிம் நபிக்கு இறைவன் சோதனையாக தன் மகனை அறுத்து பலியிட கனவை கொடுக்க... அதுவே இறை ஆணை என்று தன் மகனை அறுத்து பழியிட முனைகிறார் மகனும் உடன்படுகிறார்... 

மகனை அறுக்க கத்தியுடன் செல்லும் தந்தையை திசை திருப்ப சைத்தான் நாடுகிறான் அவரது மனசை மாற்ற முயற்ச்சிகிறான் ஆனால் அந்த இடத்தில் கல்லை எறிந்து தன் மனசை ஒரு நிலைபடுத்தி மகனை அறுக்க ஆயத்தமாகிவிட்டார்..
ஆனால் நரபலி விரும்பாத கருனை இறைவன் அதை சோதனை என தெளிவுபடுத்தி தனக்காக ஆட்டை அறுத்து இறைவழியில் செலவிட

17) தந்தைக்கு பின் மகனும் இறைவனின் தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டு அங்கே இஸ்லாம்

18) அவர்களது காலத்துக்கு பின் அங்குள்ள மக்கள் அவர்களது போதனையின் படி அங்கு இஸ்லாத்துடன் வாழ்ந்தனர்...

19) பல நூற்றாண்டுகள் கடந்தன பல நபிமார்கள் கடந்தனர்... மக்காவில் மனித இனம் பல்கி பெறுகியது கூடவே குழப்பமும், பெருகியது..

20) அங்கு அறியாமை காலத்து பழக்கம் மெல்ல மெல்ல நூதனமாக நுழைய தொடங்கியது...

21) சிலை வணக்கம் ஆரம்பமானது, விபச்சாரம், குடி, கொலை அநாகரீகமான செயல் பல்கி

22) உலகில் முதல் மனிதர், முதல் இறை தூதர், ஆதம் அவர்கள் ஆரமித்த பிரச்சாரம் அதே இடத்தில் இறுதி தூதரை கொண்டு இறைவன் இஸ்லாத்தை நிறைவாக்க நாடிகிறான்.. ஆம் முகமது நபி(ஸல்) பிறக்கிறார்கள்...

23) அவரது 40 வது வயதில் இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுகிறான்...

24) 63 வயதில் மரணித்த முகமது நபி (ஸல்) இறைவன் நாடிய மிகப்பெரிய வேலைகளை செய்ந்து முடிக்க எடுத்து கொண்ட காலம் வெறும் 23 ஆண்டுகள்... அதிலும் 10 ஆண்டுகள் ஒடுக்கபட்டே கழி்ந்தது... மீதம் உள்ள 13 ஆண்டுகள் போதிய தூக்கம், ஒய்வு, உணவு, இன்றி ஓயாது உழைத்து இறைவன் கொடுத்த வேலைகளை செவ்வனே செய்ந்து முடித்தார்கள்... ஆம் உலகம் முழுவதும் இஸ்லாத்தை எத்தி

25) இஸ்லாம் ஆரம்பம் ஆன இடத்திலயே முற்று பெற்றது... ஆம் மக்காவில் ஆரம்பம் ஆகி அங்கயே முற்றும் பெற்றது... அங்கு இப்றாகிம் நபி போதனைக்கு பிறகு தோன்றிய சிலை வணக்கம், தீய பழக்கவழக்கம் முகமது நபி ஸல் அவர்களால் அழித்து இஸ்லாம் இறுதியாக மறுசீரமைக்கபட்டது...

26) இப்றாகிம் நபியின் தியாகங்கள் இறைவனால் ஹஜ் கிரிகளாக்கபட்டது..
அங்கு இறைவனின் மன்னிப்பையும், நன் மரணத்தையும் மட்டுமே நாடி வெள்ளை உடையணிந்து வருபவர்களுக்கு பெரும் நன்மாரயம் இறைவனால் கிடைக்க

27) அங்கு இப்றாகிம் நபியின் மனைவி அண்ணை ஹாஜர் அவர்கள் இரு குன்றுகளுக்கிடையே ஓடியது போன்று அந்த கஷ்டத்தை நினைவு கூற அதே குன்றுகளுகிடைய ஓட ஹாஜிகளுக்கு கடமையாக்க பட்டது.... தன் மகனையும் இறைவனுக்காக பலி கொடுக்க நாடிய மாபெரும் இறை விசுவாசத்தை நினைவு கூறும் பொருட்டு குர்பானி கடமையாக்கபட்டது....

சைத்தானின் எண்ணங்களை கற்களை கொண்டு எறிந்து மனசை கட்டுபடுத்திய அந்த கனத்த இதயத்தை நினைவு கூற கல் எறிந்த அதே இடத்தில் கல் எறிய முஸ்லிம்களுக்கு கடமையாக்கபட்டுள்ளது...
சுப்ஹானல்லாஹ்...

28) மக்கா உலகம் அழியும் வரை இறைவனால் பாதுகாக்கபடும் நகரமாக இறைவனாலயே அறிவிக்கபட்ட இடம்..
அங்கு நன்மை செய்தாலும் கூலி பன் மடங்கு, தீமை புரிந்தால் அதற்கு கேடான கூலியும் பன்மடங்காகும்..

29) மேலும் உலக முடிவு நாளின் அடையாளமாக வர இருக்கும் கொடியவன் தஜ்ஜால் மக்காவினுல் நுழைய சக்தி பெறமாட்டான் என்பது இறைவனின் வாக்கு...

30) உலகின் முதல் ஆலயம் மக்கா ஹரம். இரண்டாவது ஆலயம் பாலஸ்தீனில் உள்ள மஸ்ஜித் அக்ஸாவாகும்....
இவையே மக்கா வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயங்களாகும்...

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 10 July 2009

Only Five ways to survive in South Korea !!!

A lesson in keeping up with the Koreans: Last Month I joined Samsung Engineering Group in Saudi Arabia (MENA Division). I learned the style during Lot of Team Buildings.


1. Eat Kimchi (and enjoy it). Kimchi aka the most famous side dish in Korea. A meal is not a meal, unless it's complete with rice and kimchi. Breakfast, lunch and dinner.  Let's be honest, kimchi does to Koreans what garlic does to Americans and Italians, seeps through your pores and makes you smell like you just walked out of a kimchi factory.When you first come to Korea, you're like, "YUCK, what is this stuff?" After six months, if you are craving it before lunch, and purchasing it to silently chow down on in your own home... the damage has been done (rightfully so). I would be lying if I said I didn't like kimchi, but surely it was an acquired taste and I did not love it instantly. However, I can attest to the fact that one of my most recent status updates on facebook read, "When one of your Korean friends sends you home with a tub full of kimchi, you're just like... WINNING!" Enough said.

2. Learn to answer four important questions accordingly.

A. How old are you?- This is most always the first question you will be asked in Korea.  It may seem strange at first, as you are used to a friendly, "how are you?" The truth is, that in Korea, hierarchy is super important down to how you greet someone (a formal hello to your elders, and a less formal way for people of the same age or younger). 

B. Do you have a boyfriend/girlfriend?- Take it from me, lie. If you don't have a boyfriend/girlfriend, just say you DO. Surely, if you say no, the follow question will be a surprised WHY and as it seems, Koreans (women especially) just cannot understand the logic behind, "I don't want one,"(there MUST be something wrong with you). It's becoming much more common in western culture for women, especially, to focus on themselves and it's truly okay to be happy alone or even to be PICKY about who you want to settle into a relationship with, but in Korea, it seems that it's just merely about not being alone.  It's guaranteed from the day you mention you are single, you will NEED a boyfriend, and they will take it upon their selves to remind you of this on a weekly basis.

C. Do you like Korean food/kimchi? It's not surprising that of the first four questions a Korean will ask you, one of the most important involves kimchi. Plan to answer accordingly (and by accordingly I mean, yes, you love kimchi) even if you secretly want to gag when you are in sitting at the same table as someone eating kimchi, you actually "really enjoy" it. They will be so impressed and you are instantly on the waygook A list. If you can eat kimchi and learn to enjoy it you will be just fine in Korea. Which brings me to the next question... 


D. Can you drink soju?  Koreans ask this question like it's some HUGE accomplishment if you say yes. They will then proceed to ask you HOW MANY BOTTLES you can drink. Soju is not just a drink, it's a part of a lifestyle and that lifestyle is just Korean culture in general.  Soju is rough, I won't lie... nothing worse than a soju hangover.  However, what's surprising to me is how impressed they are if you say yes.  Is it not understood that in America, England, etc we drink other forms of hard liquor that far surpass the toxicity of soju?  Perhaps we should instead challenge them back, "can YOU drink tequilla? Forget drinking soju and passing out on streets, drink tequilla and take off all your clothes. Hell, our country even made a song about it. See- Tequilla makes her clothes fall off. Perhaps Psy's next song should be "Soju makes him sleep on the sidewalk." Just kidding. But, if you can drink soju, you should attempt to (at least at work functions).  Your Korean coworkers will love nothing more than to drink soju with you, even if it's just a bit and you will surely inch your way up on the social ladder.


3. Use Chopsticks. Everyone who lives in Korea should learn to use chopsticks.  If you're not going to give it a go, why move to Korea? If you don't want to partake in the cultural experience and living styles of Koreans, then, go home. [We as foreigners have all been in this situation : You're sitting somewhere, frustrated & irritated while TRYING to master this  art, when suddenly you notice a little 5 year old Korean child. The child is blatantly staring you in the face, wondering, where on earth you come from and why you look so different. You are staring back, shamed by the fact that a five year old's fine motor skills seem to be far superior to yours. They use chopsticks like a champ, while you, once getting the chopsticks close to your face, have actually lost all the food that you were originally gripping. As you look down at the empty chopsticks and back to the child's face... you see them smiling & hear their evil villain voice ringing in your head, "Mwahahaha, stupid waygook."] You know what they say, "Practice makes perfect." Surely you will never forget how to use a fork, however, if you are of any ethnicity other than Korean, and you own one fork, or better, none, you're surely learning the Asian way. My fellow way gookin, we have all had our moment when we realized we had finally mastered the chopsticks. It's like a breath of fresh air... "I CAN DO IT!" Usually when you realize you've become talented in this area, you start challenging yourself and your friends. What can you pick up with your chopsticks? A single grain of rice? GOT IT. A napkin? No problem. Smiley cold soup noodles... well, that's just irritating and difficult. If you can do this, you are half Korean. If you have sat in your apartment and tried to pick up books, papers, laundry, plates, etc with your chopsticks... well, then you're just a foreigner who is entertained by their new talent (me).


4. Embrace the Korean language to the best of your ability: No one is saying that you need to go spend ridiculous amounts of money taking Korean classes in order to effectively communicate with Koreans. In fact, it's not necessary, you WILL find ways to communicate and the majority of Koreans will be able to help you in some way or another even if their English is minimal. However, take advantage of your Korean counterparts... let them teach you here and there. If you are a teacher, learn from your students, keep your ears open, you will pick things up.  Take it upon yourself to learn how to at least read and write Hangul. It will make your life here a hell of a lot easier. I taught myself in two days at this website.  Things you should learn to say in Korean- My name is, I'm from, nice to meet you (works wonders when you run into your students' parents on the street), i don't know, be quiet and sit down (if you are a teacher), can i have water (beer/anything else), go straight, turn left, turn right (for taxi purposes), thank you, where is the bathroom (or any other place).  Surprisingly all of these phrases are fairly easy to master and will all go a long way. Surely, it never hurts to pick up a language exchange, however, females beware, usually men around the same age are interested in more than just a language exchange and then you've got a stage 5 clinger on your hands who know no English other than - "so beautiful," BARF.


5.Do not fear the subway: The subway is a beautiful thing, master it. A foreigner could probably write a full on book about adventures on  the subway in South Korea. Hopefully someone has and hopefully the chapters are full of intriguing stories about adjummas racing their carted goods around, hikers in matching outfits, and old men puking up soju remains in the corners.  As a foreigner who never used a subway in her life, the thought of finding my way through these massive subway stations without getting lost, gave me anxiety.  After a while, you realize, that it is literally impossible to get lost using the subway, but sometimes it IS hard to survive. First impressions: it's massive although easily navigable; people are like vultures trying to get seats (in fact, I can attest to the fact that I have seen old ladies sneer and gloat upon winning a two foot dash to an open seat); adjummas (old ladies) and adjushis (old men) literally have no problem throwing some punches or left elbows in order to get you out of their way (no shame); people fall asleep in the most awkward ways; staring contests are frequent and never ending, and there are times when you're literally too close for comfort and filing for harassment would be justified based on the amount of people who are actually touching your ass. Spooning has never been so unpleasant. At first you may feel intimidated. Learn how to push back. Don't take shit. You will probably get pushed around MORE than others because you are a foreigner in their country (this is especially true of the older generation).  However, don't be fooled, occasionally you will see the elderly push around younger Koreans as well, and you will catch their surprising glances of disbelief. This stuff just wouldn't fly in New York City without people throwing punches but for some reason some of these people think they are justified. Just roll your eyes and carry on, there are bigger battles to be fought. Don't be afraid to fall asleep (all the while, missing your stop) unless you have somewhere important to be. Take advantage of the corner seats. What's worse than being stuffed between one person and a brass bar? Being stuffed between two people in giant winter coats. Stare back in the face of judgement. Some days it will piss you off beyond belief when someone is staring you straight in the face without looking away, but you can stare back, or start waving frantically/pretend to die/do something really studied. Some of my friends and I have taken the opportunity to draw more attention to ourselves, this includes sitting across from each other and making obnoxious gestures before getting off together, riding the subway with vampire fangs in our mouths and smiling at people, or singing Christmas carols aloud. Embrace the attention instead of being anger by it. The subway is an entire obstacle in itself, and although some days it can be irritating, other days you will love the entertainment, and you will always love the convenience.





It took me a year, but I have truly mastered this place.  All humor aside, after all the time I've spent here, I can say that I have really immersed myself in another culture and learned from it. I really made it a point to "keep up" with the Koreans by throwing myself into as many new situations as possible, trying everything, learning the language, and making Korean friends.  Anyone who is considering taking the leap to move to a completely different place, I say, go for it. You will not regret it and the things you learn about yourself and others will stay with you forever. I have a very special appreciation for Korea, Korean culture, and Korean people. Rock on, Korea.

Tuesday, 7 July 2009

பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் 1,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் !!


சமீபத்தில் இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிராமங்களிலோ, நகரங்களிலோ எருமை மாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறதுஇதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள பசுக்களும், காளைகளும், எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசமாகவும் , தோலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும்இதன் ஆபத்தை உணர்ந்த கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.

ஆந்திராவில் விவசாயிகளின் பரிதாப நிலையால் மாடுகளை 
அடிமாட்டு விலைக்கு விற்கும் பாவத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை தமிழகத்துக்கு வரும் முன் தடுக்க முதல்வர் மாடுகளைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்தோ , தமிழகம் வழியாகவோ மாடுகள் கொண்டு செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்

அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த .தி.மு.., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து வருகிறது. மட்டப்பாறைப்பட்டி ஊரார் செல்வம், தவளவீரன்பட்டி முக்கியஸ்தர் ராமசாமி, சீரங்கன், வேலுச்சாமி, அணியாப்பூர் செல்வம் மற்றும் 54 ஊர்களைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று பகல் 2 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு எருமை கிடா பலியிடும் பூஜை நடந்தது. வீரப்பூர் ஜமீன்தார் சவுந்திரபாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அரிவாள் பூஜை நடந்தது. பகல் 2.45 மணிக்கு ஜமீன்தார் சவுந்திரபாண்டியனின் எருமைகிடா முதலில் பலியிட, தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமை கிடாக்கள் பட்டியிலிருந்து ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டதுவழியில் நின்ற வாலிபர்கள் தங்களிடமிருந்த உருட்டுக் கட்டையால் எருமை கிடாக்களை தாக்கினர்.

பின்னர் எருமைகிடாக்கள் பலியிடத்துக்கு கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டன. கோவில் முன் தோண்டப்பட்ட குழியில் பலியிடப்பட்ட எருமைகிடாக்கள் போடப்பட்டன. வேண்டுதல் உள்ள பக்தர்கள், எருமைகிடாக்களின் தலையிலிருந்து வடியும் ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கோவிலை சுற்றிவந்து குழிக்குள் எருமைகிடாக்களின் தலையை போட்டனர். பக்தர்கள் உப்பு வாங்கி சென்று குழியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வரை தொடர்ந்து ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி:-தின மலர்

நேர்த்திக் கடனுக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட எருமைகளை யாருக்கும் பயன்படாமல் குழியில் போட்டு புதைத்ததுதான் மனதுக்கு நெருடலாக இருந்தது. இந்த இறைச்சியை பதப்படுத்தி தேவையுள்ள வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் தரவும்.

இதே போன்று முஸ்லிம்களிடத்திலும் ஹஜ் பெருநாளன்று கோடிக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் உலகம் முழுவதும் அறுக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாளன்று வெட்டப்படும் அனைத்து உயிர்களையும் பதப்படுத்திஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா நாடுகள், இந்தோனேஷியா போன்ற வறிய நாடுகளுக்கு சவூதி அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. இது போன்ற ஒரு வழி முறையை நமது அரசாங்கமோ அல்லது இந்து மக்களோ ஏன் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ இதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் அந்த உயிர்கள் உரிய வறியவரைச் சென்றடையுமல்லவா?

'பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ இறைவனை சென்றடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறை அச்சமே இறைவனை சென்றடையும்.'
-குர்ஆன் 22:37

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .