Tuesday, 27 November 2007

என் துபாய் கணவா!! திரும்பி வந்துவிடு அர்த்தம் புரிந்து வாழலாம்..

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுதுகாத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... 

மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...


 மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... 
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் ! கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் ! 

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... 

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய் கெஞ்சுவதும்... 
மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்... இடைகிள்ளி... 

நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...


என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய் திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து... தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.. பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா! தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு! விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா..


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday, 25 November 2007

துபாயில் டிராகன் மார்ட் (Dragon Mart) ஷாப்பிங் மால்!!




dr1துபாயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டிராகன் மார்ட் (Dragon Mart). துபாய்க்கு வெளியில், ஏறத்தாழ 40 கி.மீ தூரத்தில் இண்டர் நேஷனல் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டிட அமைப்பே டிராகன் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது ஒரு வியப்பாகத் தானிருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஷோ ரூம், 2500 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் என பறந்து விரிந்து காணப் படுகிறது. இதன் மொத்த நீளம் 1.2 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் பிரமாண்டத்தை. இது 2004ல் கட்டி முடிக்கப் பட்டது.

dr3
அனைத்துமே சைனாப் பொருட்களின் விற்பனை நிலையங்கள். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் அதி நவீன கண்டுபிடிப்புகள். உண்மையில் தொழில் நுட்பச் சந்தையில் சைனா நம்மை பின் தள்ளி எங்கோ சென்று விட்டது எனலாம்..
dr4dr5
ஏதோ சைனாவே துபாயை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது போல மௌனமாக தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான கடைகள் அனைத்திலும் சைனா முகங்கள் தான்.
வழக்கம் போல் அங்கும் ஆளாளுக்கு வேறு பாடு காட்டப் படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
நாம் கொஞ்சம் அதிகமாக விவரங்கள் கேட்டால், ஒருவித அலட்சியப் போக்கு அவர்களிடம் காணப் படுகிறது அதே வேளை ஒரு அரபியோ, வெள்ளையரோ கேட்டால் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை கலந்த வரவேற்பு, கனிவான பேச்சுக்கள் எல்லாம்.
20131120_125703
அனைத்து கடைகளையும் பார்த்து முடிக்க நிச்சயமாக ஒரு நாள் போதாது தான். இடை இடையே Food Court எனும் சாப்பாட்டு கடைகள் வேறு. என்ன விலை தான் கொஞ்சம், கொஞ்சமென்ன அதிகமாகவே இருக்கிறது.
இங்கு கடை விரித்திருக்கும், வேலை பார்க்கும் சைனாக் காரர்களுக்கு அருகிலேயே அருமையான வில்லாக்கள், பல மாடி கட்டிடங்கள் சகல வசதிகளுடன் அமைத்திருக்கிறார்கள். இன்னும் இதை விரிவாக்கும் பணியும் நடந்து வருகிறது. டிராகன் மார்ட் இரண்டு, 175,000 sq.m பரப்பளவில் இதன் அருகிலே ஓமன் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஹைப்பர் மார்க்கெட், திரையரங்கங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள், மொத்த, சில்லரை வளாகங்கள் என பிரமாண்டமாக அமைக்கப் படுகின்றன.
டேய்ரா, ரசீதியா போன்ற இடங்களில் இருந்து இங்கு போய் வர RTA பஸ் வசதியும் உண்டு. என்னால் பாதியளவு கூட பார்க்க முடியவில்லை. இன்னொரு தடவை செல்ல வேண்டும்.


20131120_114056[1]மொபைல் கடைகள் பாதிக்கு மேல் ஆக்ரமித்திருக்கின்றன. அதி நவீன செல் போன்கள் கடைக்கு கடை குவித்திருக்கிறார்கள்.பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. வண்ண சர விளக்குகள், மின் சாதனங்கள், துணி வகைகள், இயந்திரங்கள் என தனித் தனி பிரிவாக அமைத்திருக்கிறார்கள். எங்கும் சைனா மயம். எதை வாங்குவது என்று தெரியாத அளவுக்கு பொருட்கள் குவிந்து கிடைக்கின்றன. என்ன சட்டைப்பையை கொஞ்சம் நிறைத்து செல்ல வேண்டும் அவ்வளவு தான். நம்மைப் போல் விஸிட்டில் வருபவர்கள் காசை எண்ணித் தான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அனைத்து கடைகளிலும் பேரம் உண்டு. கண்ணை மூடிக் கொண்டு சொன்ன விலைக்கு வாங்கி விடாதீர்கள். நன்றாக பேரம் பேசி வாங்குங்கள். ஒரு பொருளுக்கு கடைக்கு கடை விலை கூட குறைய இருக்கிறது. கவனம். ஆனால் வெளி மார்க்கெட்டை விட இங்கு விலை கம்மி தான். மொத்தமாக வாங்குபவர்களுக்கு இன்னும் சௌகரியம்.
துபாய், சார்ஜா போன்ற இடங்களில் உள்ள சிறு வியாபாரிகளும் இங்கிருந்து தான் பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். எதிலும் பிரமாண்டங்கள் எனும் வரிசையில் இந்த டிராகன் மார்ட்டுக்கும் ஒரு இடம் உண்டு.

Thursday, 8 November 2007

Method of Statement For Installation &Testing of Refrigeration Pipes..

TABLE OF CONTENTS


1.        Scope of Work………………………………………………………………………Page No
2.        Reference……………………………………………………………………………Page No
3         Responsibilities......................................................................................................Page No
4.        Control Measures………..………………………………………………..……  Page No               
5.        Sequence of Activities………………………………………………………………..Page No
6.       Attachment……………………………………………………………………………Page No
  
            * JSA (Job Safety Analysis)
            * SATIP
            * SAIC
                        



1.               Scope of Work


1.1  This method statement explains the installation Of the refrigerant copper pipes, (including supports installation, pipes and fittings installation), & pressure testing, vacuuming and charging of refrigerant system.

2.            Reference Documents


2.1  Approved Drawings

2.2  Manufacturer’s Catalogues, Vendor Drawing
2.3   General Specifications for HVAC System
2.4  Material Submission for HVAC Equipment/Materials
                                     

3.            Responsibilities


3.1  Mechanical / HVAC Engineer
    
·         He shall be overall responsible for the complete activity including, but not  limited to:

3.1.1 Assigning workman crew
3.1.2 Sequence of activities to be carried out for the work as per this Method
         Statement.
3.1.3 Stage inspection & surveillance
3.1.4 Notification to client engineer for inspection and daily commissioning activities.
3.1.5 Provide day to day guidance and delegate works as necessary.
3.1.6 Ensure that the equipment and tools required for carrying out the test are
         available, maintained and  used in safe manner.
3.1.7 Produce all necessary records for the confirmation of testing works completed
         and pass to QC inspector as required.

3.2 Mechanical/HVAC Supervisor

·         He shall be overall responsible for the activity including, but not limited to:

3.2.1      Assigning worksman crew.
3.2.2      Sequence of activities to be carried out for the work.
3.2.3      Ensure the quality levels are maintained.
3.2.4      Ensure that the equipment and tools required for carrying out the test are
available, maintained and used in safe manner.

                        3.3  QA/QC Inspector
                             
                         3.3.1 Maintain records of quality control ckeck sheets / report formats for the site
                                  Tests and inspection.
                         3.3.2 Carry out surveillance so as to ensure that the personel are working i accor-
                                   Dance with the approved standards.
                          3.3.3 Assurances of approved methods are being used for testing and material
                           receipt inspection.
                           3.3.4 Verification of material approval and vendor certification.

4.               Control Measures

4.1  Quality Control

4.1.1      Ensure availability of latest released for construction drawings and specifications.
4.1.2      Ensure the tools/equipment used for testing & commissioning purpose is calibrated and certificates available.

4.2  Safety

4.2.1      All equipment and accessories have been certified for their capacity
And integrity.
4.2.2      Safety and risk assessment shall be performed for every job or task,
which has the potential for harm.
4.2.3      All personnel are issued with Personal Protective Equipment.
4.2.4      Provide hand gloves and educate workers for safe operation.
4.2.5      Always keep the gas cylinder in vertical position.
4.2.6      Always keep fire extinguisher during brazing.


5.            Sequence of Activities


5.1 Installation Procedure
                  
                    5.1.1 Check approval of working drawings.
                    5.1.2 Check size and route of piping for laying refrigerant pipe as per
                             approved drawing.
                    5.1.3 Install the supports for pipe and check the levels.
                    5.1.4 Clean thoroughly the outer face of the pipe and inner face of pipes
                             & fittings by air blowing or brushing.
                    5.1.5 Prior to copper joint brazing all cuts ends and particularly those
                             immediately upstream of devices should be completely de-burred
                             and any distortion in bore diameter shall be rectified.  
                   5.1.6 Install the refrigerant pipe care should be taken to ensure that flow
                            and regulating devices (filter/drier, sight glass, solenoid valves,
                            isolation valves (only for large capacity units) are installed correctly
                            with respected to flow of direction.
                   5.1.7 Flush the entire pipe system with nitrogen gas at 150~200psig to
                            remove all debris inside the pipe.
                   5.1.8 Carry out the pressure test by using Nitrogen gas at 250 psi for
                            24 Hrs. for check the leakage and soap solution will be applied in case
                            of leak.
                   5.1.9 Record the readings in the pressure test report.
                   5.1.10 Provide pipe insulation and cladding for external refrigerant pipe with
                              the specified insulation material.
                   5.1.11 Vacuum the system to 29 in. HG for 24hrs.
                   5.1.12 Break the vacuum using refrigerant, raise pressure to zero (0) then
                              vacuum again for 24hrs.
                   5.1.13 Charge the system with refrigerant up to its standing pressure
                              (operation pressure).
                   5.1.14 System is ready for start-up, commissioning and record the data.
                            

    6.    Attachment

·         JSA (Job Safety Analysis)
·         SATIP-K-001-07 (Refrigerant Piping)
·         SAIC-K-4025 (Refrigerant Handling, Storage and Preservation/Refrigerant Receiving Inspection)
·         SAIC-K-4026 (Refrigerant Piping (Copper), Fittings and Support Lay-Out Inspection)
·         SAIC-K-4027 (Air Moving/Cooling Valve and Apparatus Arrangement Installation Inspection)
·         SATR-K-4003 (Refrigerant Piping Pressure Test)

·         SATR-K-4004 (Refrigerant Piping Vacuum Testing)