Thursday, 7 November 2013

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பட்டியல்..!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்ற மருத்துவக்கல்லூரிகளின் பெயர் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

அதன் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எம்.பி.பி.எஸ். (M.B.B.S) மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்றுதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்றுள்ள அரசு & தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளின் பெயர்ப் பட்டியலை இந்திய மருத்துவக் கவுன்சில் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் பெற்றுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் பெயர் பட்டியல்..!

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி (சி.எம்.சி.),

கோவை பி.எஸ்.ஜிமருத்துவக்கல்லூரி

பெருந்துறை .ஆர்.டிமருத்துவ கல்லூரி

கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி

மேல்மருவத்தூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி

காஞ்சிபுரம் -  கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரி

திருச்சி - சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மாங்காடு - ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி

பெரம்பலூர் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி

பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி

சேலம்அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி

சென்னை மாதா மருத்துவக் கல்லூரி

கோயம்புத்தூர் - கற்பகம் மருத்துவக் கல்லூரி

ஆகிய தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு...!

திருவள்ளூர் மாவட்டம்குன்னவலம் கிராமத்தில் உள்ள டி.டிமருத்துவக்கல்லூரிக்கு 20112012, 20122013, 20132014 ஆகிய கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

201314 கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள்அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் பெயர் விபரங்களை இந்திய மருத்துவ கவுன்சிலின் இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment