Sunday, 21 June 2015

மிகச்சிறந்த வழிகாட்டிநமது அப்பா மட்டுமே!



என் அப்பா....
அருமையான அன்பான அப்பா ..,
உண்மையில் அவங்கள என் வாழ்கையில் ரொம்ப மிஸ் பண்றன்.
என் இறைவன் தந்த அருட்கொடை அவங்க பத்தி சொல்ல இந்த யுகம் போதாது.என் முதல் ஹீரோ அவங்கதான்..

 நான் விழுகின்ற பொது எல்லாம் தன் தோள் தந்து உயர்த்தியவர்ஒருத்தனுடைய வாழ்க்கையில். நமக்கு ஒரு பொக்கிஷம்

சின்ன வயதில் அப்பா தான்
முதல் ஹீரோ ... அப்பா என்ன
செய்தாலும் நன்றாக
கவனித்து வைத்து அதையே
ரிபீட் செய்வதுதான் என்
ஹீரோயிசம் .... ரிமோட் கார்
அப்பா ... சைக்கிள் வேணும்
அப்பா ... ரிப்போர்ட் கார்டு
அப்பா ....


என்று சுற்றிய என் அப்பா
உலகம் எப்போ எங்கே எப்படி
சற்று மாறியது..... ஹை
ஸ்கூல் , பிரெண்ட்ஸ்,
ட்யுஷன், மேட்ச், தியேட்டர் ,
காலேஜ் என்று மற்ற எல்லாம்
முதல் சீட் எடுக்க எப்படியும்
பாக் சீட்டில் இருக்கும் அப்பா
வேறு எங்கும் போய் விட
மாட்டார் என்னும்
மெத்தனமாயிருக்கும்
என்றுதான் நினைக்கிறேன்...
அப்படி ஓடும் போது



                                                                                   அப்பாவின் கண்ணில் தெரிந்த
Image result for அப்பா


ஒரு அக்கறையின் பரிதவிப்பு
என்னவோ நான் ரொம்ப
வளர்ந்து பெரிவனானதை
போல பெருமை பட வைத்தது!!

வேலை சேர்ந்து பெரிய
மனிதனாய் உணர்ந்த பின், என்
பையன் அவன் சம்பளத்தில்
வாங்கி தந்த ஷர்ட் , என்
பையன் அவன் பைக்ல
என்னை கூட்டிட்டு போனான்
என்று அப்பா பெருமையாக
சொன்ன போது அதை என்
சாதனையாக நினைத்தேன்...
அப்பாவை வைத்து முதல்
ரைட் போன பைக் பின்னே
ஏனோ ரொம்ப பிசியாகி
விட்டது அப்பாவின்
மென்மையான புன்னகையை
கடந்து கொண்டே .... என்
திருமணம் முடிந்த போது
அப்பாவின் கண்ணில் தெரிந்த
பெருமிதம் என்னவோ
அப்பாவையே காக்கும்
தலைவனாய் என்னை உணர
வைத்தது.....



ஆனால் அப்பா இன்றைக்கு
என் குழந்தையை பார்க்கும்
போது தான் புரிகிறது ....
தோளில் சுமக்க வேண்டிய
காலத்தில் தோளில் சுமந்தும்,
கை பிடித்து அழைத்து
செல்லும் நேரத்தில் கையை
பிடித்தும், அந்த கையை உதறி
விட்டு நான் ஓட எத்தனித்த
தருணத்தில் மனம்
பரிதவித்தாலும்
நம்பிக்கையோடு என் கையை
விட்டு என்னை பெரியவனாய்
உணர செய்ததும் , எனக்கான
வாழ்க்கை அமைந்த போது
எட்டி நின்று அதை வாழ்த்தி
நான் பெருமை அடைய
செய்ததும் , என்
வாழ்க்கையின் எல்லா
நேரங்களிலும் எந்த
எதிர்பார்ப்பும் இன்றி நான்
அறியாமலே என்னை
அரவணைத்து என்னை
தலைவனாக உணர செய்ததும்



அப்பா தான்...
இப்பொழுது தோன்றுகிறது
இன்னும் கொஞ்சம்
நெருக்கமாக அப்பா
அணைப்புக்குள் இருந்து
இருக்கலாமோ !

ன்னை மட்டுமே உலகமென்று நினைக்கும் என் உலகம் அப்பாஎன் அப்பா எனக்கு அப்பா இல்லை ஒரு நல்ல நண்பர்.என் உயிர்.சந்தோச சுமைதாங்கி.
அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரியைப் போல தெரியும் ஒரு உறவு அப்பா

எங்கட அப்பாவ மிஸ் பன்றன் .அப்பா எனக்கா வேன்டி எல்லாமே செய்து இருக்கிறார் ஆனா நாந்தான் பகத்தில இல்ல அதுதான் எனக்கு சரியான கவலை


என்னுடைய அப்பா என்னை எப்படி அரைவனைத்து வளர்த்தார் என்பதை நான் அப்பாவாக ஆன பிறகு தெறிஞ்ஞைகிட்டேன்.


அப்பா எனும் வார்த்தையில் கூட எத்தனையோ இன்பம்

சின்னக் குழந்தையில் நம்மை எப்படி வளர்த்தார்களோ அதேபோல் அவர்களுக்கு வயதானால் நம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்


மிகச்சிறந்த வழிகாட்டி! நம்மில் நல்ல எண்ணங்களை விதைப்பது நமது அப்பா மட்டுமே!


இவ் உலகில் தாய் தந்தையர்கலுக் நாம் கொடுக்கும் அன்பும் பாசமும் தான் நாளை மருமையில் நமக்கு கிடைப்பது சுவர்கம்


எனது உண்மையான ரொல் மாடல்,,உலக சரித்திரம் சொல்லி தந்தவர் என் அப்பா ,இப்போது என்னுடன் அவர் இல்லாத குறைதான் ,,,,,,



பாசத்துக்கு சொந்தகாரர்நான் என்னையே பயில என்னை பயிறுவித்த ஓர் கல்வி கூடம் அப்பா.....


அப்பா, ஏலா(செல்லமா) சாப்பிடடியா? என்று கேட்க! அந்த அன்பு பாசம் அப்பாவுக்கு பிறகு கிடைக்கவில்லை.நான் செய்கின்றன ஒவ்வொரு நல்ல விஷியங்களும் காரணம் என் அப்பா நாளை என் தலை முரையும் சொல்லும் என் அப்பா என்று நலமாக வாழ்வாராக


 நான் செய்கின்ற ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் காரணம் என் அப்பா.நாளை என் தலை முறையும் சொல்லும்!!!!


ஆக்கம் மற்றும் தொகுப்பு  :  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment