Thursday, 19 January 2012

சின்ன வீட்டை அழகாக்குவது எப்படி?

நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம் என்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்.

சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது.

தொங்கும் கண்ணாடிகள்

கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.

வண்ணத்திற்கேற்ற வால்பேப்பர்

வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும்.

சீலிங்கும், சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத்தை அதிகமாக்கி காட்டும்.

சிறிய அறையில் ஜன்னல் இல்லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவதோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும்.

உயரமான அலமாரி அவசியம்

சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரியில் அனைத்தையும் அடுக்குவது போல உள்ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.

புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். அவை பழமையை பறைசாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment