Wednesday, 25 January 2012

கேசினோக்கள்(CASINO) மூலம் இந்தியாவுக்குள் வரும் தீவிரவாத பணம்!! ஒரு தவகல்..


இந்தியாவின் சூதாட்ட தலைநகரம் என்றால் அது கோவா தான். இங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் பல சாதாரண ஹோட்டல்களிலும் ஏராளமான கேசினாக்கள் உள்ளன. மேலும் கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதற்கெனவே மிதக்கும் கேசினோக்களும் இயங்குகின்றன.  

டாலக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு (casinos) வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.



இந்தியாவை பொறுத்தவரை கேமப்ளிங் என்ற வார்த்தையையே பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேம்ப்ளிங் விளையாட விரும்பினால், கோவாவில் உள்ள கேசினோ ராயலுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை. அதுமட்டுமல்லாமல் இது தான் இந்தியாவில் இருக்கக் கூடிய ஓரே மிதக்கும் கேசினோ.
கேசினோ ராயல் அமைந்திருக்கும் கப்பல், கடலில் தன்னுடைய பிரயாணத்தை தொடங்கிய உடனேயே அனைத்து கேம்ப்ளிங் விளையாட்டுகளும் களைகட்ட தொடங்கி விடும்.
அதோடு இங்கு பெரும்புள்ளிகளுக்கென தனியறையும் இருக்கிறது.
கேசினோ ராயலின் கேளிக்கைகள் வெறும் கேம்ப்ளிங் விளையாட்டுகளுடன் முடிந்துவிடாது. இந்தக் கப்பலில் உள்ள சைனா கார்டன் என்ற உணவகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. அதோடு இந்த உணவகத்தில் நடத்தப்படும் ரஷ்ய குழுவினரின் பெல்லி நடன நிகழ்ச்சி அட்டகாசத்தின் உச்சம்.
கேசினோ ராயலுக்குள் நுழைவதற்கு ஒரு இணை 4000 ரூபாய்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு மது மற்றும் உணவுடன், 3000 மதிப்புள்ள திரும்பப்பெற இயலாத கூப்பன் ஒன்று தருவார்கள்.
அதை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். குறிப்பாக தொடக்க நிலை கேம்ப்ளர்களுக்கென்று பிரத்தியேகமாக எளிமையான விளையாட்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அனுபவ கேம்ப்ளர்கள் ஸ்லாட் மெஷின்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.
மேலும் இங்கு குழந்தைகளோடு வரும் பயணிகள் கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால் உங்கள் குழந்தைகள் தூங்குவதற்கும், விளையாடுவதற்கும் இங்கு தனிப்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே ஜோடியாக நீங்கள் உங்கள் நேரத்தை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு இங்கு வரும் நட்சத்திர தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
எப்படி பார்த்தாலும் உங்களுடைய மாலை நேரம் முழுவதும் கேளிக்கையும், கொண்டாட்டமுமாக கழியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்து போய் விடுவீர்கள்.


இதைத் தவிர சிக்கிம் மாநிலத்திலும் ஏரளமான கேசினோக்கள் உள்ளன. கோவா, சிக்கிமில் தான் சூதாட்ட விடுதிகளை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகாவ் பகுதி தான் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் போனது. அடுத்த இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.

ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால், இந்த நாடுகளை விட இந்தியாவில் சூதாடுவது 'சீப்' ஆகிவிட்டது. இதனால், கோவா மற்றும் சிக்கிமை நோக்கி வரும் வெளிநாட்டு சூதாட்டப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

ஆனால், இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் பணத்தை கண்காணித்து வரும் மத்திய அரசின் நிதித்துறையின் உளவு அமைப்பான Financial Intelligence Unit (FIU), சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புகளும், இந்த கேசினோக்கள் மூலமாக நாட்டுக்குள் பணம் அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டில் கேசினோக்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு பணத்தில் 7,006 பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை (Suspicious Transactions) என எப்ஐயு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதலே இந்திய கேசினோக்கள் அன்னிய செலவாணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீன் கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க Financial Action Task Force என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் இந்திய உளவுப் பிரிவுகளும் நிதித்துறை உளவு அமைப்பும் இணைந்து இந்தியாவுக்குள் வரும் அன்னிய செலவாணியை கண்காணித்து வருகின்றன.

இந்த அமைப்புகள் கடந்த ஓராண்டில் மட்டும் 7,006 சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிமாற்றங்களை கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மேலும் கண்காணிக்க வசதியாக, இது தொடர்பாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
English summary
Indicating signs of possible funds related to crime and terror trickling into the Indian casino sector, a government report has said that more than 7,000 instances of suspicious transactions have been detected in the elite gaming business during the last financial year. A total of 7,006 Suspicious Transaction Reports (STRs) during the 2010-11 fiscal have been reported by the casino business and allied payment operators to the Financial Intelligence Unit (FIU), an enforcement agency under the Union Finance Ministry. The casino business in the country was brought under anti-money laundering laws in 2009 and the operators primarily provide slot machines and electronic games to customers.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment