Friday, 13 January 2012

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்!...

 

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்
 
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும்.
 ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங்
கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் சோதனையும், 1521 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

பிரசவ கால ஆலோசனைகள்
சிருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத்துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்றை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கு ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைகள் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மானை அருளுகிற & அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி & ஒரு தவம்!

உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மழலை உலகின் ஜனத் தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக்காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது!

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!” என்று சொல்லப்படுவது உண்டல்லவா! & இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண்டாடப்படும்போது தான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம் பெறுகின்றன! கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான். குழந்தையின் நிலையும் அமைகிறது.
இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணாமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல & அமைந்து விடுகிற & அந்தத் தாயைப் போற்றுகிறோம்; அத்தெய்வத்தின் பொறுமைக்கு & தர்மத்துக்கு & சகிப்புத்தன்மைக்கு & அன்புக்கு & அருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.
வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச்சட்டம் ஆட்சி செலுத்துகிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக்கொடுக்கும் உரிமை, ஆண் & பெண் எனும் மகத்தான மெய்ப்பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக & இயங்கும் அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும் அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண் & பெண் என்கிற தூண்டுதலின் கூட்டுறவு தான் வாழ்வு; அதுவேதான் அவனி.
மெய்தான் : புவனமே சக்தி சிவம் வடிவமானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா? ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வரம்புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக் கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.

பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்:
ஆண்&பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது.

“காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும், காதலியும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என்றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற&காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஓர் அறவழிப் பண்பாடாகும்!

இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்க விருக்கிற அடிகளாரின் குரலையும், விஞ்ஞான ரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங்களின் புதிர்களும் அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.”
இயற்கையின் இயல்பான, தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண்-, பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு ‘திருமணம்’ என்கிற சடங்கும் ‘முதல் இரவு’ என்கிற விழாவும் இன்றியமையாத பாதுகாப்பாக இனிமை கொண்ட எச்சரிக்கையாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிறாள் ‘தாய்’ என்னும் மகாசக்தி. அந்த மகாசக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே ‘குழந்தை’ எனும் ‘புதுமை’ பொலிகிறது!

“குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.” என்று மொழிந்த ஆசிய ஜோதியான நேருஜியின் சொற்களை நாம் எப்போதுமே மறந்து விட முடியாது. ‘இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!’ என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிருக்கும் உடைத்தானது குழந்தை உலகம்.

இந்த இருபதாம் நூற்றாண்டை ‘குழந்தைகளின் நூற்றாண்டு’ எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் கே அவர்கள்.

‘குழந்தை’ என்கிற ஒரு தவத்தை ஓர் அன்பை ஒரு மந்திரத்தை ஓர் அற்புதத்தை, ‘பிள்ளைக்கனியமுது’ எனவும் ‘பேசும் பொற் சித்திரம்’ என்றும் ‘ஆடிவரும் தேன்’ எனவும் போற்றிப் புகழ்ந்திடும் தண்ணளியும், மோன புளகிதமும் பாரதி ஒருவனுக்கே சொந்தம்.

இந்த மகோன்னத நிலைக்கு ஆதாரமாக விளங்கும் ‘தாய்’ தன்னுடைய பேறுகாலக் கண்டங்களைத் தாண்டி குழந்தையைப் பெற்றெடுத்த, ‘புனர்ஜன்மம்’ பெறுவதற்குள், அவள் முன்னே தலைவிரித்தாடும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? அவள் கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலும் அவள் கண்காணித்துப் பேண வேண்டிய குறிப்புரைகள் ஒன்றல்ல&இரண்டல்லவே!

‘விதி’ யின் முன் பணயம் வைத்து, பெண் என்பவள் தாயாக உயர்ந்து ஒரு சமூக அந்தஸ்தைப் பெறும் ஓர் அதிர்ஷ்டவசமான நல்வாய்ப்புக்கு முதற்காரணமாகிறது குழந்தை. இக்குழந்தையின் மூலமாக ஆணும், பெண்ணும், தந்தையும் தாயும் ஆகி, ஒரு சமுதாய மதிப்புப் பெறும் பாக்கியத்தையும் அடைகின்றனர்.

‘கருத்தரிப்பு’ என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு ‘பிரசவம்’ என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது.இத்தகைய மனநிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்யணிக்கலாம்.

பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை. ஒரு நிகழ்ச்சி. ஒரு விடிபொழுது!

No comments:

Post a Comment