Saturday, 14 January 2012

நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்! ...


· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.

· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.

· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.

· தினசரி நடப்பது அவசியம்.

· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.

· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.

உடற்பயிற்சி : நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.


No comments:

Post a Comment