Thursday, 19 January 2012

பான்பராக்கில் பல்லிவால்…………..

    காட்டுப்பல்லிவால் + கழுதை மூத்திரம் + கடுக்காய் = பான்பராக்
    உங்கள் நலன் உங்கள் கையில் பான்பராக் பயன்படுத்துவோர் கவனிக்க பான்பராக்கில் பல்லிவால்
     கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள சுங்கச்சாவடி (செக்போஸ்ட்)யில் விரைவாக வந்த சரக்குந்து (லாரி) ஒன்று அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது. கடத்தல் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று சரக்குந்தில் உள்ள மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது கேரளக்காடுகளில் உள்ள மரங்களிலிருக்கும் பெரியபல்லிகள் பாடம் செய்யபட்ட மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். கேரள வனப்பாதுகாப்புச் சட்டப்படி காட்டுப்பல்லிகளைக் கடத்துவது குற்றம் என்பதால் சரக்குந்து ஓட்டுநர் அதிகாரிகளால் தகுந்த முறையில் விசாரணை செய்யப்பட்டார்.விசாரணையின்போது அறியப்பட்ட செய்திகள் வனத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியுறச் செய்தது. பான்பராக்கில் போதை ஏறுவதற்கு, டுபாக்கோவோடு மரப்பல்லியினுடைய வால் பெருமளவில் அரைத்துப் பொடியாக்கப்பட்டு, காயவைக்கப்பட்டு, பான்பராக்கோடு கலக்கப்படுகிறது. இச்செய்தியினைப் பற்றி கேரளாவில் புகழ்பெற்ற இதழான மலையாள மனோரமா, பான்பராக்கில் பல்லிவால் கலக்கப்படுவதால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைப்பற்றி பொதுமக்களை எச்சரித்து அதிர்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தது. மேலும் அடையாறு புற்றுநோய் நிலையத் (கேன்சர் இன்ஸ்டிடியூட்) தைச்சேர்ந்த நிபுணர்கள் வெண்சுருட்டைக் (சிகரெட்) காட்டிலும் பான்பராக்கினால்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம் என்றும் பான்பராக் போடுபவர்களின் வாய், தொண்டை மற்றும் வயிற்றுப்பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.
     நன்றி
    கன்ஸ்யூமர் டுடே” சூன் 98

No comments:

Post a Comment