Sunday 8 January 2012

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !

குர்ஆனும் இந்து மத வேதங்களும் !
ஒரு கதையை எடுத்துக் கொண்டாலே அதன் நடையை வைத்து இது சுஜாதா, இது பாலகுமாரன், இது தமிழ்வாணன் என்று கண்டு பிடித்து விடுவோம்.ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சில நியதிகள் இறைவன் கொடுத்த வேதங்களிலும் ஆங்காங்கே தென்படும்.இது போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.

1.' மாருத்பிஹி ராக்னா ஆஹாஹி'
'அக்னியின் ரகசியம் பாலைவன மக்களுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்டது'
1 : 19 : 1-9 -ரிக் வேதம்

இவை ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள சுலோகங்கள். இந்த சுலோகமானது திரும்ப திரும்ப ஒன்பது இடங்களில் தொடராக இடம் பெறுகிறது.

'ஃபபி அய்யி ஆலாயி ரப்பிகும் மாது கத்திபான்'
'உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்'
55 : 13 - குர்ஆன்

குர்ஆனிலும் மேலே குறிப்பிட்ட வசனம் 'அர்ரஹ்மான' என்ற அத்தியாயத்தில் திரும்ப திரும்ப 31 இடங்களில் வருகிறது.

2).'வைலுய் யௌமயிதில் லில்மகத்திபீன்'
'பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடுதான்'
77 : 15, 19, 24,28 - குர்ஆன்

மேற்கண்ட வசனம் குர்ஆனில் ஒரே அத்தியாயத்தில் பத்து தடவை திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'நா பான்ற மன்யசி ஷாம் ஜயக அத்ஹித் அனு அஸ்'
10 : 133 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் ஐந்து இடங்களில் திரும்பத் திரும்ப வருகிறது.

3). 'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி உள்ளோம். படிப்பினை பெறுவோர் எவரும் உண்டா?'
54 : 17 , 22, 32, 40

சந்திரன் என்ற அத்தியாயத்தில் மேற் சொன்ன வசனம் நான்கு இடங்களில் திரும்ப திரும்ப வருவதைப் பார்க்கிறோம்.

'கஷ்மி தேவயா ஹவிஷ வித்ஹெம் '
12 அத்தியாயம், யஜீர் வேதம்

மேற் கண்ட சுலோகம் யஜீர் வேதத்தில் ஒன்பது இடங்களில் திரும்ப திரும்ப வருகிறது.

'விட்டான்மி அஸ்யரோதசி'
1 : 105 - ரிக் வேதம்

மேற்கண்ட சுலோகம் ரிக் வேதத்தில் பதினெட்டு இடங்களில் தொடர்ச்சியாக வருகிறது.

குர்ஆன் மூல மொழியில் இருப்பது போல் இந்துக்களின் ஆதி கிரந்தங்களும் ஓரளவுக்கு மூல மொழியில் இருப்பதால் இந்த ஒற்றுமையைக் காண முடிகிறது. ஏசுவக்கு அருளப்பட்ட பைபிள் மூல மொழியான அராமிக்கிலும், யூதர்களின் வேதமான தோரா மூல மொழியான ஹீப்ரூவிலும் இன்று இருந்திருக்குமானால் குர்ஆன், பைபிள், தோரா, இந்து மத வேதங்கள் அனைத்தும் ஒரே நடையிலும் ஒரே கருத்தையும் கூறுவதைக் கண்டிருப்போம்.

துரதிர்ஷ்ட வசமாக அந்த வேதங்களெல்லாம் புரோகிதர்களால் மாற்றப் பட்டு விட்டது. அதே போல் ஆதி கிரந்தங்களான ரிக், யஜீர், சாம,அதர்வண வேதங்களிலும் வர்ணாசிரமக் கொள்கைகள் ஆங்காங்கே புகுத்தப் பட்டு விட்டது. 'வேதங்களில் சாதி' என்ற தலைப்பில் தங்கமணியும் இது சம்பந்தமாக விரிவாக விளக்கி இருந்தார். இத்தகைய இடைச் செருகல்களை வேதங்களைத் தொகுத்த வியாசரோ அல்லது இந்து மதத்தை இடையில் சீர் செய்த ஆதி சங்கரர் காலத்திலோ யாராவது ஏற்றி இருக்கக் கூடும். இது பற்றிய உண்மையை இறைவனே அறிவான்.

கல்கி அவதாரம்

1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி வந்து விட்டார் என்று பண்டிட் வேத பிரகாஷ் உபாத்யா 'கல்கி அவதார்' என்ற நூலிலே மிகவும் விரிவாக அலசி இருக்கிறார். இவர் இதற்காக வைக்கும் எட்டு ஆதாரங்களை என்னுடைய முந்தய 'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற பதிவில் விரிவாக விளக்கி இருக்கிறேன்.

வெறும் வாய் வார்த்தையாக இதை இவர் கூறவில்லை. வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் ஆராய்ந்து அந்த விபரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தொகுத்துதான் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்நூலை அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து எட்டு பண்டிதர்கள் பார்வையிட்டு ஆதாரபூர்வமான செய்திகளையே தொகுத்து வழங்கியுள்ளார் என்று கூறி மதிப்புரை வழங்கி தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

'இறைவனின் தூதராகவும் தூதர்களில் முத்திரை (இறுதி) யாகவும் முகம்மது இருக்கிறார்'
33 : 40 - குர்ஆன்.

இரண்டு வேதங்களுமே முகமது நபி இறுதித் தூதர் என்று ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக விளக்குகின்றன.

'ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரத பெயர் முகமது ஆகும். அந்த அரபு மகா தேவரை (வானவர் போன்றவரை) 'பஞ்சஹவ்யா' விலும் கங்கை நீரிலும் நீராட்டி (அவரது அனைத்து பாவங்களையும் கழுவி) மனமார்ந்த பெரு மதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.நான் உமக்குக் கீழ்படிகிறேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபு வாசியே! நீர் தான் சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையை திரட்டி உள்ளீர். நீர் மிவேச்ச நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர்.நீர் அந்த மேலான பரம் பொருளின் மீது பக்தி கொண்டவருமே அவனின் அம்சமுமாய் இருக்கின்றீர். நான் உமது அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக் கொள்ளும்.'

3 : 3 : 5 - 8 பவிஷ்ய புராணம்

இறைவனே மிக அறிந்தவன்.

தகவல் உதவிக்கு நன்றி-ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

No comments:

Post a Comment