Sunday 8 January 2012

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம்!..

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம்!
நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது. அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம். யாரும் காணாதபடிக்கு இப்பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன். மனிதர்களை விட உயர்ந்த தன்மை கொண்டவனைத்தான் நாமும் இறைவன் என்று வணங்க முடியும்.அந்த இறைவன் தன்னை வணங்குவதற்காக முதல் ஆலயத்தை உலகில் நிர்மாணிக்கிறான். முதன் முதலாக ஆதாம் மூலமாக உலகில் கட்டப் பட்ட முதல் இறை இல்லமான கஃபாவை நோக்கி உலக மக்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும்'
3 : 96 - குர்ஆன்

இக்கட்டிடம் நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தால் சிதிலமடைந்தது. அதன் பிறகு ஆபரஹாம் இறைக் கட்டளைப் படி அந்த பாலைவனத்தைக் கண்டு பிடித்து தனது மனைவியையும் தனது மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார். இறைவனின்அற்புதமாக என்றும் (இன்றும்) வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்பட்டபின் அந்த பாலைவனம் ஊராக மாறியது. அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனும் மறுபடியும் கட்டினார்கள். இநத ஸம்ஸம் நீரூற்று இன்று வரை வற்றாமல் ஹஜ்பயணம் செய்பவரிலிருந்து உள்ளூர் மக்கள் வரை பல கோடி பேரின் தண்ணீர தேவையைப் பூர்த்தியாக்குகிறது. இது இறைவனின் அருட்கொடைதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப் பட்ட இந்த தொன்மையான ஆலயத்தை முன்னோக்கியே அதிகமான இறைத் தூதர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் வணங்கியிருக்கின்றார்கள்.



மக்காவில் இருக்கும் ஆதி இறை இல்லமான கஃபாவை பல வேதங்களும் சிறப்பித்துச் சொல்கின்றன. இந்த இறை இல்லத்திற்கு பல பெயர்களை குர்ஆனிலும், முகமது நபியின் வாக்குகளிலும் ஆங்காங்கே பல இடங்களில் கோடிட்டுக் காட்டப் படுகின்றன. அவைகள் பின்வருமாறு: கஃபா, கஃபதுல்லா, பைத்துல்லாஹ், பைத்துல் ஹரம், பைத்துல்அதீக், பைத்துல் மஃமூர், மஸ்ஜிதுல் ஹராம் என்று பல பெயர்களில் குறிப்பிடப் படுகிறது.

இதே கஃபாவை இந்து மத வேதங்களும் பல இடங்களில் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன. அவை பின் வருமாறு : இலாஸ்பாத், இலயாஸ்பாத், நபா பிரிதிவி, நபிகமால், ஆதி புஷ்கார் திர்தா, மக்தேஷ்வர், துரா காபன் போன்றவை. இனிஇவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விரிவாக பார்ப்போம்.

1).இலாஸ்பாத்

இல் (il) இல்லய்யஃ (illiah) இலா (ila) இலாயா (ilya) - சமஸ்கிரத சொல்லான இதன் பொருளானது 'வணக்கத்திற்குரிய ஒன்று' என்பதாகும்.

(வணக்கத்திற்குரியவனை அரபியில் 'இலாஹ்' என்றும், ஹீப்ரூவில் 'எல, எலோஹ், எலோஹிம்' என்றும் அராமிக்கில் 'எல்லாய்' என்றும் கூறப்படுவதை முன்பே பார்த்தோம்.)

'பாத்' என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். இலாஸ்பாத் என்பதற்கு 'இலா' விற்குரிய இடம் - 'வணக்கத்திற்குரிய இடம்' என்றாகிறது.

Sir M. Monier Williams - தனது சமஸ்கிரத - ஆங்கில அகராதியில் 'இலாஸ்பாத்' என்பது புண்ணியஸ்தலத்தின் பெயராகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலா (ila) எனபது குறிப்பிட்ட கடவுளின் பெயர். "இலாஸ்பாத்" என்னும் போது "கடவுளுக்குரிய ஸ்தலமாகும்" என்று Griftith தன்னுடைய மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பைத்துல்லாஹ் (இறைவனின் இல்லம்) என்று அரபியில் கூறுவதையே இந்து கிரந்தங்கள் சமஸ்கிரதத்தில் "இலாஸ்பாத்" என்று கூறுகிறது.

இலயாஸ்பாத்

இலயாஸ்பாத் 'பிரதி விகா பவித்திரஸ்தான்' என்று பண்டித ஸ்ரீராம் சர்மா ஆச்சாரியர் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். 'பூலோகத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்' என்பது இதன் பொருளாகும்.

மக்தேஷ்வர்

'மக்' என்பது 'மக்கா' நகரைக் குறிக்கிறது. 'ஈஸ்வர்' என்றால் கடவுள். 'மக்தேஷ்வர்' என்றால் 'மக்காவின் கடவுள்' என்று Sir. M. Monier Williams தன் சமஸ்கிரத ஆங்கில அகராதியில் கூறுகிறார்.

நபா ப்ரதிவியா

'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

'இலாயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி'
3 : 29 : 4 - ரிக் வேதம்

'இறைவனின் இல்லமானது பூமியின் மையத்திலுள்ளது' என்று கஃபாவைக் குறித்து ரிக் வேதம் தகவல் தருகிறது.

நபிகமால் :

படைப்பினங்கள் அனைத்தையும் படைத்த ஈஸ்வரன் அதன் பிதிநிதியாக பரம்மனை நியமித்தார். எல்லா சிறப்பியல்புகளையும் பூமி பெற்ற பின்பு பிரம்மன் தன்னுடைய சிம்மாசனத்தை பூமி மீது அமைத்தார். பூமி தாவரங்களைப் பிரசவித்ததும் 'ஜம்பு துவிப்' என்ற இடத்தில் ஆகும்.

ஜ+அம்பு+துவிப் = வாழ்வு + நீர் + தீவு = நீர் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் வாழ்க்கை துவங்குகிறது.

அந்த மையப் பகுதியிலிருந்து தான் செயல் மற்றும் வழிபாடும் துவங்கியது. நபிகமால் - பூமிக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட பாறைகளாலும், கனிமப் பொருள்களாலும் அடுக்கப் பட்டதாகும். அது ஆரியர்கள் அல்லாதவர்கள் குடியிருக்கும் இடமாகவும், அறிந்து கொள்ள முடியாத இடத்திலும் இருக்கிறது. நபிக்கமால் ஒன்று கூடும் மையமாகவும் குடி நீர் (ஸம் ஸம் நீரைக் குறிக்கிறது) வழங்கும் இடமாகவும் இருக்கும்.
- ஹரிவன்ஸ் புராணா இரண்டாம் பாகம்
499 ஆம் பக்கம் - பண்டிட் ஸ்ரீராம்சர்மா வின் 'பதம புராணா' மொழி பெயர்ப்பு.

ஆதி புஷ்கார் திர்தா:

திர்தா என்றால் மிகவும் புராதன புனித ஸ்தலம் என்பதாகும். பதம் புராணாவில் நபி கமாலுக்கு இந்த சொல் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

புஷ்கார் திர்தாவிற்கு சேவை புரிவோமானால் பாவங்கள் நம்மை விட்டு மீட்கப் படுகிறது. புஷ்கார் திர்தாவிற்கு புண்ணிய யாத்திரை செல்கின்றவர்கள், நிலையான வெகுமதிக்கு தகுதியுடையவராவார். புஷ்கார் திர்தா புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிகப்பழமையானது. இங்கு சென்று நீராடுபவர்களுடைய பாவங்கள் கழுவப் பட்டு விடுகிறது.
94 அக்டோபர் - பக்கம் 96 - கல்யாண்

தரு காபன்:

சமஸ்கிரதத்தில் 'தர்' என்பதற்கு 'வனாந்திரம்' என்று பொருள் வரும். அரபு பாலைவனத்தை 'வனாந்திரம்' என்றே கூறுவர். அரபுலகை பைபிளும் வனாந்திரம் என்றே கூறுகிறது. 'காபன்' என்பது தெளிவாக கஃபாவைக் குறிக்கும் சொல்லாகும். 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள கஃபா என்ற பொருளாகிறது.

நலந்த விஷால் ஷப்த் ஷாகர் என்ற அகராதியானது 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம் என்ற பொருளைத் தருகிறது.

' ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் 'தருகாபன்' மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்தரை செய்யும்'

10 : 155 : 3 - ரிக் வேதம்

இந்து மத நண்பர்கள் ஆதி இறை இல்லத்தை முற்றிலும் மறந்தாலும் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்கள் கஃபாவுக்கு செய்யும் வணக்கத்தைப் போன்று சில கிரியைகளை இன்றும் செய்து வருகிறார்கள். முஸ்லிமகள் அந்த கஃபாவை நோக்கி தொழுதும் ஏழு முறை சுற்றி வலம் வந்தும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் கேட்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பல முறை பார்த்திருப்போம். இதே போல் இந்துக்களும் காஃபா வடிவில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் கட்டி அதில் துளசிச் செடி வைத்தும், ஊருக்கு ஒன்றிரண்டு கற்பக் கிரகம் (கோவிலினுள்) கஃபா வடிவில் சதுரமாக கட்டி அதனுள் விக்ரகங்களை வைத்தும் வணங்குகிறார்கள். அதனை வலமும் வருகிறார்கள். மேலும் திருமண விஷேஷ நாட்களில் அக்னி குண்டமும் (கஃபா வடிவில்) கட்டி அதில் அக்னி வளர்த்தும் அவைகளை வணங்கியும் வலம் வரவும் செய்கிறார்கள். இந்த பழக்கங்களெல்லாம் முன்பு கஃபாவை வணங்கி வந்ததன் தாக்கத்தினாலும் இருக்கலாம். இது விபரங்களை இறைவனே அறிவான்.

'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'

- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'

-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.


There are various places of pilgrimage in Hinduism. One of the sacred places mentioned in
1). Rigved, Bk. 3 hymn 29 verse 4 is “Ilayspad, which is situated at Nabha prathvi.”
‘Ila’ means God or Allah, and ‘spad’ means place, therefore Ilaspad means place of God. Nabha means center and prathvi mean earth. Thus this verse of the Veda prescribes pilgrimage to a place of God situated at the center of the earth.

Sanskrit-English dictionary by M. Monier Williams (Edition 2002) states that Ilaspad is “Name of a Tirtha” i.e. place of Pilgrimage – however its location is not known.

2). Rigved Bk. 3 hymn 29 verse 11
Prophet Muhammad (pbuh) is mentioned as ‘Narashansa’.
Thus we can conclude that this Ilayspad, place of pilgrimage mentioned in Rigved is Makkah.

3).Makkah is also mentioned as Ilaspad i.e. Allah’s holy place in
Rigved Book 1 hymn 128 verse 1

4).The first House (of worship)
Appointed for men
Was that at Bakka
Full of blessing and of guidance
For all kinds of beings.
(Al Quran 3:96)

‘Bacca’ is another name for Makkah and we know today that Makkah is situated at the center of the earth.

பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அருள் செய்யும் இறைவன் இப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கிறான். படைப்புகள் வேறு அதைப் படைத்தவன் வேறு. அந்த படைப்பாளனையே வணங்குவோம். இறப்புக்கு பின்பு சுவனத்தையும் அடைவோம்.

இறைவனேமிக அறிந்தவன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

No comments:

Post a Comment