Wednesday 11 January 2012

இயேசு நாதர் மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்தாரா?


'டைக்கானிக்' புகழ் ஜேம்ஸ் கேமரூன் இயேசு கிறிஸ்து பற்றி ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். படத்தின் பெயர் 'தி லாஸ்ட் டோம்ப் ஆஃப் ஜீஸஸ்'. இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து 3 வது நாளில் உயிர்த்தெழவில்லை என்ற கருத்தை இந்தப் படம் தெரிவிக்கிறது.

இந்தக் கருத்து மற்றவர்களுக்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு இது பழமையான கருத்து.

இயேசு நாதர் 3 ஆம் நாள் உயிர் பெற்று எழவில்லை என்ற முஸ்லிம்களின் கருத்தோடு ஒத்துப் போகும் ஜேம்ஸ் கேருனோடு - இயேசு நாதர் இறந்து போய் விட்டார்.: அவருடைய சடலம் 1980- ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலம் நகரில் கண்டு பிடிக்கப்பட்டது என்ற கருத்தில் முஸ்லிம்கள் ஒத்துப் போகத் தயாரில்லை. - முஸ்லிம்கள் மட்டுமல்ல.. இஸ்ரேல் நாட்டு தொல்பொருள் ஆய்வாளருமான அமோஸ் கிளாரனும் 'இயேசு நாதரின் சடலம்' என்ற கேமரூனின் கதையை நம்ப மறுக்கிறார்.

ஜேம்ஸ் கேமரூனும் கிறித்தவர்களும் இயேசு நாதர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதில் முரண்படுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ இயேசு நாதர் என்றழைக்கப்படும் ஈஸா நபி - கொல்லப்படவும் இல்லை, மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இது குறித்து குர்ஆன் பேசுவதைக் கேளுங்கள்.



'இறைவனின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையில் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாக கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.'
-குர்ஆன் (4 : 157,158)

இயேசு நாதருக்கு மனைவி

மக்களில்லை. அவருக்கு திருமணம் கூட நடக்கவில்லை என்று கிறித்தவர்கள் காலம் காலமாக நம்பி வந்தனர். இதற்கு மாறாக இயேசு நாதருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு என்று முஸ்லிம்கள் சொல்லி வந்தனர். முஸ்லிம்களின் சொல்லை உண்மைப்படுத்துவதில் இயேசுநாதருக்கு மேரி மேக்தலின் என்ற மனைவி உண்டு. ஜீடா என்ற மகனும் இயேசுவுக்கு உண்டு என்ற உண்மை தொல்பொருள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டன. இதுபோல் இயேசுநாதர் கொல்லப்படவில்லை. ஆள்மாறாட்டம் நடந்தது என்ற திருக்குர்ஆனின் உண்மை வெகு விரைவில் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: உணர்வு வார இதழ்

No comments:

Post a Comment