Friday, 2 May 2025

உண்மை ஒரு நாள் பல்லாக்கில் வரும்..!


1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் சொன்னது நம்ப  மருத்தார்கள். இன்று விஞ்ஞானம் சொல்லும் போது ஏற்றுக்கொள்கிறார்கள்..


யுக முடிவு நாள் உலக அழிவு நாள் நெருங்கும் போது கடைசி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் கூறிய சிறிய அடையாளங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் இன்னும் மாபெரும் 10 அடையாளங்கள் மட்டுமே இன்னும் நிகழ வில்லை. இந்த சிறு அடையாளங்களை சந்திக்கும்போது அதை மனிதர்கள் இவைகள் இயற்கையின் சீற்றம் என்கிறார்கள்.


1400 ஆண்டுகளுக்கு முன் இந்த இயற்கை சீற்றங்களை எப்படி நபி ஸல் அவர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள்.? 


எனது (நபி ஸல் அவர்கள்) மரணம்.

காலங்கள் சுருங்கும்.

குடிசைகள் கோபுரம் ஆகும்.

பாலைவனம் சோலைவனமாக மாறும்.

பின்தங்கிய நிலையில் இருந்தவர்கள் செல்வந்தார்கள் ஆவார்கள்.

100 தினார் கிடைத்தால் கூட திருப்தியடைய மாட்டார்கள்.

மகளின் தயவில் தாய் வாழ்வால்.

கொலைகள் அதிகரிக்கும்.

விபச்சாரம் பெருகும்.

உள்ளங்கையில் வைத்து உலகை பார்ப்பார்கள்.(mobile phone.) 

கடைத்தெருக்கள் நீளமாகும்.

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பார்கள்.

திடீர் மரணம் அதிகரிக்கும்.

பேச்சை வைத்து பணம் சம்பாதிப்பார்கள். (YouTube chanel) 

உயிரற்ற பொருட்கள் பேசும். ( tv, radio, mobile, toy's, )

வியாபாரம் முறை மாறும். ( Banking,)

ஆடு மெய்தவர்கள் அடுக்கு மாடியில் வாழ்வார்கள்.

செல்வம் பெருகும்.

பைதுல் முகத்திஸ் குத்ஸ் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லீம்கள் முழுமையாக வெற்றி கொள்வார்கள்.

வானம் பச்சை மஞ்சள் சிகப்பு நீளம் கலந்து பல வர்ணங்களாக காண்பீர்கள்.

உஷ்னம் அதிகரிக்கும்.

கத்தி வாள் கொண்டு யுத்தம் செய்த காலம் மாறிவிடும் மறுபடியும் கத்தி வாள் கொண்டு யுத்தம் செய்யும் காலம் வரும்.

பூகம்பம் அடுத்தடுத்து நிகழும்.

அளவுக்கு அதிகம் மழை பெய்யும்.

பூமியில் அதிக வெள்ளம் ஓடும்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். (அதற்கு அர்த்தம் இருக்கமான ஆடை அணிவது மெல்லிய ஆடை அணிவது மட்டுமல்ல தனிமையில் இருக்கும் போது தன் உடலை அடுத்தவர் பார்க்கும் படி photo video மூலம் காட்டுவதும் பொருந்தும்.)

பகலில் நல்லவனாக இருப்பவன் இரவில் தீய செயலிலும், இரவில் நல்லவர்களாக இருப்பவர்கள் பகலில் தீய செயலிலும் ஈடு படுவார்கள்.

கடின உழைப்பு போதிய வருமானம் இருக்காது.

இரவில் வேடிக்கை.

தெரிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்வது பேசுவது.

வறுமை ஏற்படும்.

தகுதி அற்றவர்கள் பதவியில் வருவார்கள்.

முஸ்லீம்களுக்கு இடையில் விரிசல் உண்டாகும்.

யூத நாசாராக்கள் 72 கூட்டங்களாக பிரிந்து இருப்பார்கள்.

முஸ்லீம்கள் 73 கூட்டங்களாக பிரிந்து செல்வார்கள்.

தொண்டை குழிக்கு கீழ் இஸ்லாம் இருக்காது.

மரணித்தவர்களை பார்த்து தனக்கும் இப்படி மரணம் வரக்கூடாதா என்று எண்ணுவார்கள்.

முஸ்லீம்கள் எண்ணிக்கை பெருகும்.

அதிகமாக பள்ளிவாசல்கள் இருக்கும் தொழுகைக்கு ஆள் இருக்காது.

முஸ்லீம் என்று வாழ அச்சம் உண்டாகும்.

முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள் ஆனால் கடல் அலையில் மிதக்கும் குச்சிகள் போல அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது இருக்கும்.

முஸ்லீங்களை தாக்க பல நாள் பசியில் இருந்து சாப்பாட்டை கண்டதும் ஓடி வரும் ஓநாய் போன்று திரண்டு வருவார்கள்.

செல்வதை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியில் இருப்பார்.

உலக ஆசை மீது ஈர்ப்பு இருக்கும்.

பகைகள் பெருகும்.

வானில் இருந்து பெரும் சத்தம் வரும்.

யூப்ரட்டிஸ் நதி (புராத் நதி) வத்தும் அதில் இருந்து தங்கம் வெளியாகும். ( அது முஸ்லீம்களுக்கு சொந்தமானது அல்ல அதை முஸ்லீம்கள் எடுக்கசொல்ல வேண்டாம். அதற்கு பல படைகள் போட்டியிடும் யுத்தம் செய்யும் அனைவரும் இறந்து விடுவார்கள் யாரும் அடைந்து கொள்ளவும் மாட்டார்கள்.)

ஒவ்வொரு அரபி வீடுகளுக்குள்ளும் பித்னா (குழப்பங்கள்) நுழையும். (Tv வந்தது அது என்றார்கள். பின்னர் mobile phone வந்தது அது என்றார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டு ஒவ்வொரு அரேபிய வீடுகளுக்குள்ளும் என்றார்கள். Tv mobile phone அரபு வீட்டுக்குள் மட்டுமல்ல உலகம் முழுதும் எல்லா வீட்டுக்குள்ளும் வந்து விட்டது. ஆகையால் அது tv mobile இல்லை நபி ஸல் அவர்கள் அது அரபிகளை குறித்து சொன்னார்கள் ஆகையால் அது என்ன என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்.

வெள்ளை நிரதவர்களும் மஞ்சள் நிரதவர்களும் முஸ்லீங்களுக்கு எதிராக யுத்தம் செய்வார்கள்.

துர்கி தலைநகரம் ஸ்தம்புல் முஸ்லீம்கள் கைவிட்டுப் போகும். 

முஸ்லீம்கள் இமாம் மஹ்தி அலை அவர்களை எதிர்பார்பார்கள்.


மாபெரும் அடையாளம் :-


இவற்றில் ஏதாவது ஒன்று நிகழ்ந்து விட்டால் பாவமன்னிப்பு என்ற வாசல் மூடப்பட்டு விடும்.  மாபெரும் முதல் அடையாளம் கண்டு பெரும் கூட்டம் இஸ்லாத்தை சத்திய மார்க்கம் என்று நம்பும். இவ்வளவு காலமும் அல்குர்ஆன் நபி அவர்கள் காட்டிய வழியை நம்பிக்கை கொள்ளாத மக்கள் மாபெரும் முதல் அடையாளங்களை கண்டபின் நம்பிக்கை கொள்வதில் பயன் இருக்காது.


மேற்கில் சூரியன் உதிக்கும்.

இமாம் மஹ்தி அலை அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

வானில் புகை மூட்டப்படும்.

மதினாவுக்கு கிழக்கே பூகம்பம், மேற்கே பூகம்பம்.

யெமனில் பாரிய தீ அரேபியர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.

மனிதர்களுடன் பேசும் ஒரு விலங்கு.

தஜ்ஜால் வெளியாகுதால்.

வானுலகுக்கு உயிருடன் அழைத்து செல்லப்பட்ட நபி ஈஸா அலை அவர்கள் மறுபடியும் பூமிக்கு உயிருடன் வந்து இரங்குவார்.

யஹ்ஜுஜ்..மஹ்ஜுஜ் கூட்டம் கூட்டமாக வெளியாகும்.

யஹ்ஜுஜ்..மஹ்ஜுஜ் கூட்டத்தார்கள் பலஸ்தீன் மலை உச்சியை அடைந்த பின் அவ்வளவும் இறந்து விடும். அந்த துருநாற்றம் உலகம் முழுதும் வீசும். அப்போது நபி ஈஸா அலை அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். வானில் இருந்து கழுகு போன்ற ஒரு வகை பறவைகள் அனுப்பப்பட்டு அவைகள் அனைத்தையும் விழுங்கி விடும்.

பூமியில் கடைசி மழை பெய்யும்.  பூமி சுத்தமாகும். பசுமையாக மாறும். ஒரு மாட்டின் பால் ஒரு ஊர் மக்கள் குடிக்கும் அளவுக்கு இருக்கும். ஒரு மாதுளை பழம் பெரும் கூட்டம் சாப்பிடும் அளவுக்கு பெரும் கணிகள் தரும். 

நபி ஈஸா அலை அவர்கள் பூமியில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்து மரனிப்பார்கள்.

முதலாவது சூர் எனும் சங்கு குழல் ஊதப்படும். தென்றல் போன்ற சுகமான காற்று அதில் நல்ல மனிதர்கள் இறந்து போவார்கள்.

இரண்டாம் சூர் குழல் சங்கு ஊதப்படும். அதில் மலைகள் ஒன்றோடு ஒன்று மோதி தவிடு பொடியாக மாறி பூமியில் உள்ள அத்தனை ஜீவராசிக்களும் இறந்து விடும். பூமி தரைமட்டம் ஆக்கப்படும். 

 ஒரு முட்டையை பூமியில் ஒரு மூலையில் இருந்து உருட்டி விட்டால் அடுத்த மூலைவரைக்கும் உருண்டு செல்லும் அளவுக்கு பூமி தரைமட்டமாக இருக்கும். 

மூன்றாம் சூர் குழல் சங்கு ஊதப்படும் வரைக்கும் பூமியில் எதுவும் நிகளாது. மூன்றாம் சூர் ஊத்தப்பட்ட பின்னர் பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் இறுதி தீர்ப்பு நாளில் எழுப்பப்பட்டு விசாரணைக்கு கொண்டுவரப்படுவார்கள்...

அந்த நாள் அதி பயங்கரமான நாளாகவே இருக்கும்..

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..!!


No comments:

Post a Comment