Wednesday 2 March 2022

ஜாமீன் (Bail)என்றால் என்ன? எப்படி வாங்குவது?

 


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

குற்றவியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தற்காலிகமாக விடுவிப்பதை பிணை அல்லது ஜாமீன் (Bail) எனக் கூறலாம். குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன், 2 பேர் உத்தரவாதம் அளித்து வெளியே அழைத்து வருவது ஜாமீன். அதன்பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

இடைக்கால ஜாமீன் என்றால் என்ன?

இடைக்கால ஜாமீன் என்பது முன்ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும்போது, இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஏதாவதொரு பிரச்சனையில் அல்லது எதிராளிகள் பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் ஒரு பொய்யான வழக்கு ஒன்றை தொடர்ந்து, அந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன்கோரி முறையிடலாம். சி.ஆர்.பிசி சட்டப்பிரிவு 438-ன்படி அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

முன்ஜாமீன் வழங்கும்போது ஒரு சில நிபந்தனைகள் ஜாமீன்கோரியவருக்கு நீதிமன்றம் விதிக்கும். அந்த நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காதபோது அல்லது மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும். புகார்தாரர் அல்லது விசாரணை தரப்பு முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையிட்டு, அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால், முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யும்.

முன்ஜாமீனில் இருக்கும்போது, ரெகுலர் ஜாமீன் எடுக்க வேண்டுமா?

ஏற்கனவே முன்ஜாமீனில் இருப்பவர்கள், நீதிமன்ற நடைமுறைகள் தொடரும் வரை வழக்கமான ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்யத்தேவையில்லை. நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்யாதபோது மட்டுமே இது பொருந்தும். சில வழக்குகளில் முன்ஜாமீன் மட்டுமே போதுமானது.

விசாரணைக் கைதியை அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கலாம்?

குற்றவியல் சட்டம் 436 ஏ-ன்படி விசாரணைக் கைதி நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் அதிகபட்ச தண்டனையில் பாதி காலம் சிறையில் இருந்திருந்தால், நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியும். ஒருவேளை, வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைப்போக எஞ்சிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தை செய்திருந்தால், ஜாமீன் கிடைக்குமா?

கிடைக்கும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்கும். அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

ஜாமீன் கிடைக்கக்கூடிய வழக்குகளில் ஜாமீனுக்கு முறையிட வேண்டுமா?

ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கு என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன்கேட்டு முறையிட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடிய வழக்காக இருந்தால், குற்றம்சாட்டப்பவர் நீதிமன்றத்தை அணுக தேவையில்லை. காவல்துறை அதிகாரியே ஜாமீன் வழங்கலாம்.

ஜாமீன் எப்போது வழங்கப்படாது?

தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இருந்தால் ஜாமீன் வழங்கப்படாது. குற்றம்சாட்டபட்டவர் வெளியே சென்றால், வழக்கு தொடர்ந்தவருக்கு ஆபத்து விளைவிப்பார், சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற நிலை இருந்தால், ஏற்கனவே ஏதேனும் ஒரு வழக்கில் தூக்குதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், 7 ஆண்டுகள் அதற்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்திருந்தால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்கப்படாது.

ஜாமீன் ரத்து:

ஜாமீனை எந்த நேரமும் ரத்து செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திடம் உள்ளது. ஜாமீன் பெற்றவர் வழக்கில் இருந்து விடுதலை அடைந்ததுபோல் நடந்து கொள்ளக்கூடாது. வழக்கு தொடர்ந்தவரை மிரட்டுவது, சாட்சிகளை கலைப்பது அல்லது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஜாமின் ரத்து செய்யப்படும். குற்றவியல் சட்டப்பிரிவு 437(5), 4399(2) ஆகிய பிரிவுகளின்படி ஜாமீனை ரத்து செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

உக்ரெயின் போர் : ரஷ்யாவுக்கு தற்போதுள்ள நேட்டோ மற்றும் உக்ரேனுடன் பிரச்னை என்ன?



சோவியத் ஒன்றியம் என்ற பரந்த சாம்ராஜ்யம் இருந்த காலத்தில், அதற்குள்தான் கட்டுண்டு கிடந்தது இந்த உக்ரெயின்..

ஆனால் அது உடைந்தபோது, கட்டை அறுத்துக் கொணடு, வெளியே வந்து விட்டது உக்ரெயின். ரஷ்யாவுக்கு அடுத்ததாக,பூகோள ரீதியாக, சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய நாடு உக்ரெயின்தான்.பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடம், (6,03,628 சதுர கிலோமீட்டர்) .கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இங்கு மக்கள் தொகை 4.13 கோடி. பொருளாதாரத்தில் வளரும் நாடு !. மனித ஆற்றல் வளர்ச்சியில், உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது.வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது.

ஏன் இந்த நாட்டைச் சொந்தங் கொண்டாட வல்லரசுகள் ஆர்வம் காட்டுகின்றன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.


நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது
.


க்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.எனினும், நேட்டோவுடன் 
க்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன. தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' 
க்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.


நேட்டோ கடந்த காலத்தில் என்ன செய்தது?


2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 
க்ரேனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, யுக்ரேனின் தெற்கு கிரைமிய தீபகற்பத்தை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது. கிழக்கு யுக்ரேனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய தமது ஆதரவு பிரிவினைவாதிகளையும் ரஷ்யா ஆதரித்தது.

அந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடவில்லை. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ அதன் படைகளை முதல் முறையாக நிலைநிறுத்தி எதிர்வினையாற்றியது. இந்த படைகள் நேட்டோவின் பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், அந்த நிலைமையை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த நேசப் படைகளின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளன.

க்ரேனுக்கு நேட்டோ அளித்த வாக்குறுதிகள் என்ன?

நேட்டோவின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. எனினும், க்ரேனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் நேட்டோ கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, யுக்ரேனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது. இது தவிர, அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை யுக்ரேனுக்கு பிற நேட்டோ நாடுகள் அனுப்பவும் அனுமதித்துள்ளது.

க்ரேனுக்கு குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் போலந்திற்கு கூடுதலாக 350 துருப்புக்களையும், எஸ்டோனியாவுக்கு 900 கூடுதல் துருப்புக்களை அனுப்பி தமது பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது பிரிட்டன்.

இது தவிர, தெற்கு ஐரோப்பாவுக்கு பிரிட்டன் விமானப்படையின் மேலதிக போர் விமானங்களையும் கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ போர்க்கப்பல்களுக்கு உதவியாக கடற்படை கண்காணிப்பு கப்பல்களையும் பிரிட்டன் அனுப்பியிருக்கிறது.

க்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால், ஆயத்த நிலையில் இருக்குமாறும் 1,000 துருப்புக்களுக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தும், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

ருமேனியாவில் நேட்டோ போர்க் குழுவை வழிநடத்துவதற்காக அங்கு தமது படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் விவரங்களை விரிவாக பட்டியலிட இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று நேட்டோ கூறியிருக்கிறது.


உக்ரெயின் நாட்டு மக்கள் நிலைப்பாடு என்ன?


இவர்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு தாவ ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்பதே கேள்விக்குறியாகிய பின்னர், அவர்களது ஆளுமைக்குள் வாழ இவர்கள் பின்னிற்கிறார்கள்..

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி,கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யாதன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.ஆனால் மீண்டும் சிறைப்பட உக்ரெயின் தயாராக இல்லை.


ரஷ்யா எதைப் பற்றி கவலைப்படுகிறது?


மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் நேட்டோ அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது.இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

இன்றையநிலை :கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மால்டோ, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


என் கருத்து :

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால்,இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.இதில் சீனா தலையிடுவது தேவையற்ற ஓர் இணைப்பு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்னொரு ஜனநாயக நாடான உக்ரைனனுக்கு ஆதரவு தராமல் பத்திரிக்கை சுதந்திரம் கூட இல்லாத சர்வாதிகார நாடான ரஷ்யாவிற்கு மற்ற கூட்டாளி சர்வாதிகளான சீனா வடகொரியா பெலாரஸ் உடன் சேர்ந்து வால்பிடிப்பது வெட்கக்கேடு. நண்பனாய் இருந்தாலும் தவறு செய்தால் தவறு என முகத்திற்கு நேர் சொல்பவன்தான் உண்மை நண்பன் இந்தியா வரலாற்று பிழை செய்வதை நினைத்து ஒரு இந்தியனாய் ஒரு மனிதனாய் வெட்கி தலைகுணிகிறேன் யாரும் அனு ஆயுதம் வைத்திருக்க வேண்டாமென தன்னிடம் இருந்த கடைசி அணு ஆயுதத்தையும் 1995 இல் ரஷ்யாவிற்கு தந்த நாடு உக்ரெயின் இந்தியாவின் மனிதம் எங்கே போனது. உலகம் சர்வாதிகளிடம் போனாலும் பரவாயில்லை தன் தோலை காத்துக்கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலமே இந்தியாவின் நிலையில் உள்ளது.

உக்ரைன் ராணுவம் கேரளா மாணவர்களை அடித்து மோசமாக நடத்த காரணம் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நடு நிலை வகித்ததே காரணம் . இது பல இடங்களில் செய்தியாக வந்துள்ளது . போலந்து எல்லையில் உக்ரைன் ராணுவம் இது போல் நடந்து கொண்டுள்ளது . எல்லா இடங்களிலும் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் மற்றும் ஐரோப்பியருக்கு முன்னுரிமை . ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு மனித இனத்தில் கணக்கில் வராது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடு நிலை . இது சரியான முடிவே . கடந்த பல வருடங்களாக பல முக்கிய விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலையும் , பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையும் தான் உக்ரைன் எடுத்துள்ளது . பொக்ரான் அணு சோதனைக்கு எதிர்ப்பு , காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கண்டனம், பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து உதவியது என பல்வேறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல இக்கட்டான நேரங்களில் இந்தியாவுக்கு உதவியது ரஷ்யாதான் . உக்ரைன் நாட்டு மக்களிலேயே பலர் ரஷ்யாவுக்கு ஆதரவு . இது அவர்கள் பிரச்சனை . இதில் இந்தியா ஏன் உக்ரைன் நாட்டை ஆதரிக்க வேண்டும் ? அமெரிக்காவின் பேச்சை கேட்டு ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன் அதிபர் தன்னுடைய தலையில் தானே மண்ணை அல்லி போட்டு கொண்டுள்ளார் .இவரது பிடிவாதத்தால் அப்பாவி மக்கள் துன்ப படுகிறார்கள் .தாய் நாடு ரஷ்யாவுடன் சண்டை போட்டு கொண்டு சாட்சிக்காரன் நீண்ட தூரத்தில் உள்ள அமெரிக்கா சொல் பேசி கேட்டு ஆடினால் பாதிப்பு யாருக்கு வரும். இதை உக்ரைன் அதிபர் புரிந்து கொள்ளவில்லை.

அமெரிக்க ஐரோப்பிய தலைவர்கள், ரஷ்யாவின் எல்லையை ஒரு மேற்குலக பாதுகாப்பு அரணாக மாற்றி வருவது. மிகப் பெரிய தவறு.இவர்களது படைகள் உக்ரெயினில் குவிக்கப்பட்டுள்ளன.

உக்ரெயின் எவ்வளவு பலப்படுத்தப்டுகிறதோ, அந்த அளவுக்கு மேலாக ரஷ்யா தன் இராணுவ பலத்தை, கிழக்கு உக்ரெயின் எல்லையில் அதிகரிப்பது நிச்சயம்.. யுத்தம் மிக மோசமான இரத்தக் களரியை உண்டுபண்ணும் என்பதை எவராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்குமான உறவு இதனால் நஞ்சூட்டப்படும்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இந்த பிரச்சனையில் பூகோள அரசியலும் சற்று உள்ளது. உக்ரைன் NATOவுடன் கூட்டு சேர்ந்தால் அமெரிக்க கடற்படை கருங்கடலில் கடை திறந்துவிடும். இது ரஷ்ய கருப்பு கடல் கடற்படைக்கு (Black sea fleet) நேரடி எதிர்ப்பாக அமைந்து விடும். ரஸ்யாவுக்கு நேரடி கடல் பாதை இல்லாததால் இருக்கும் பாதையில் அந்நிய சக்திகள் குறுக்கிடுவதை விரும்பவில்லை. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளமைதான். மோதல் முற்றி போர் மூண்டால், அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாக அவதானித்து வருகின்றன.

தவறு எங்கிருந்து வருகிறது , எப்படியான அனர்த்தங்கள் நிகழப் போகின்றன என்பது உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும்..
.

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு .அஜ்மல் கான்.