Tuesday, 30 November 2010

புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்...

முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1

மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.
தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.
 
The red color in fruits and vegetables shouts phytonutrients such as lycopene, ellagic acid, quercetin and hesperidin. Their phytochemical properties may be beneficial in regulating blood pressure levels, reduce tumor growth, lower bad cholesterol levels and reduce the risk of certain types of cancer. Two powerful antioxidants, vitamins A and C may aid in preventing heart disease and are beneficial for various ailments
நன்றி:tamil.oneindia.in

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஆய்வு !

 20 -ஆம் நூற்றாண்டில் எய்ட்ஸ் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம். சின்ன குழந்தை  கூட எய்ட்ஸ் என்ற வார்த்தையை கற்று வைக்கும் அளவிற்கு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. பத்திரிக்கைகள், டி.வி, சினிமா, அரசாங்க அலுவலகங்களில், நடைபாதையில் எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்களை நாம் பார்க்கலாம். அந்த அளவிற்கு இந்த உலகையே ஆட்டி படைக்கும் பேயாக இந்த எய்ட்ஸ் விளங்குகிறது. எய்ட்ஸ் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது வருந்தத்தக்க விசியமாகும். எய்ட்ஸ் பிரச்சனைக்குரிய , உயிரை குடிகக்கூடிய நோய் என்று எல்லோரும் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் , அந்நோய்  எவ்வாறு ஒருவரை தாக்கும் என்பதில் அதிக விழிப்புணர்வு அற்று இருக்கிறார்கள். 
எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.
எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.


எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.
எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார். 
அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.


யாருக்கு எய்ட்ஸ் வரும்?
இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது. 
எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?


எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)


எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்). 

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.


எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் துய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள் (தமிழக பள்ளி மாணவர்கள் அடிக்கடி எழுப்பிய கேள்விகளின் முதல் இன்டர்நெட் தொகுப்பை பார்க்க கிளிக் செய்க.)

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.


எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?


* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.


பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல. 

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும். 
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள். 
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு தெரியுமா?

உலகில் ஒரு மணி நேரத்தில் 600 நபர்கள் எச்.ஐ.வியால் பதிக்கப்படுகிறார்கள்
உலகில் ஒரு நிமிடத்தில் ஒரு குழந்தை எய்ட்ஸ் மூலம் இறக்கிறது
கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க முடியும்:- கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க வசதி தற்பொழுது அனைத்து மருத்துவ கல்லுரி மருத்துவ மனையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


எய்ட்ஸ் தெரிந்து கொள்ள வழி: 

இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எய்ட்ஸ் நோய்யின் அறிகுறிகள்: எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்யின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் ஆகும்.

தொடர்ந்து சளி, இரும்பல், காய்ச்சல் வரும்

தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும்

தோலில் தடிப்பு ஏற்படும்

எப்பொழுதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்

நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்

  எய்ட்ஸ் வந்து விட்டால்: மனம் தளராதீர்கள், தன்னம்பிக்ககையை வளர்த்துக் கொள்ளுங்கள், அமைதியாக வாழ பழகிக் கொள்ளுங்கள், மிகுந்த ஓய்வு எடுங்கள் சத்துள்ள கீழ் கண்ட உணவை உண்ணுங்கள்.

உடலை வளர்க்கும் உணவுகள்: பட்டாணி, மொச்சை, சோயா, வேர்கடலை, எல்ல பழங்கள், கீரை, காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன், பால்.

சக்தியளிக்கும் உணவுகள்: உருளைக் கிழங்கு, அரிசி, தானியம், மக்காச்சோளம், ரொட்டி, கிழங்கு, வாழைப்பழம் முதலியன.


எய்ட்ஸ்க்கு சிகிச்சை உண்டா? இல்லையா?
 தடுப்பு மருந்து இல்லை
குணப்படுத்த மருந்து கிடையாது
முடிவு மரணமே!

மருந்து உண்டு என்ற போலி விளம்பரத்தால் சொத்தை அழிக்காதீர்கள்
ஆனால் நோய்யைக் கட்டுப்படுத்தலாம்....

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

வளைகுடா வாழ்க்கையால் கடமைகளில் செய்யும் குறைபாடு...

வளைகுடா வாழ்க்கையால் பொருளாதாரம் பெருகுகிறதுவசதிகள் அதிகரிக்கின்றன; வாழ்க்கைத்தரம் உயருகிறதுமேலும் ஹஜ்உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்களைத் தம் தாய்நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமமும் பணச்செலவும் கணிசமாகக் குறைவதால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம் பயனடைகிறார்கள்அதுமட்டுமல்லாமல் இவர்களின் உறவினர்களில் பெரும்பாலோர் - குறிப்பாகப் பெற்றோர்கள்,பிள்ளைகள்உடன்பிறந்தவர்கள் மற்றும் இரத்த பந்தங்களில் அதிகமானவர்கள் மேற்சொன்ன வணக்கங்களுக்காக இங்குள்ளவர்களின் உதவியால் அழைத்து வரப்பட்டுப்  பயனடைகின்றனர் என்பதும் மறுக்க முடியாது.
ஆனால் மேற்சொன்னவற்றில் பயன்கள் மற்றும் இலாபம் இருந்தாலும்அவற்றோடு நஷ்டமும் குறைபாடுகளும் அதிகமாக இருக்கின்ற என்பதும் உண்மையாகும்அவற்றை ஒருவரியில் கூறாமல் பட்டியலிட்டுக் கூறுவது பொருத்தமாக இருக்கும்
1. பெற்றோருக்கு செய்யும் கடமைகளில் குறைபாடு

பொதுவாக 20 வயதில் வளைகுடா வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கக்கூடிய ஒரு மனிதர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள்ஆகக் குறைந்த பட்சமாக ஒரு வருடமாவது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.இந்த ஒன்று / இரண்டு வருட வாழ்க்கையில் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெரும்பாலானவற்றைச் செய்ய தவறிவிடுகிறார்இந்தக் காலங்களில் எத்தனை தலைவலிகள்வயிற்றுவலிகள்இனிப்புநீர் அதிகரிப்பால் அல்லது குறைவால் அவதிப்படுதல், மாரடைப்பு, சமீப காலங்களில் ஆட்டிப் படைத்த சிக்கன்குனியா மற்றும் இவற்றில் குறிப்பிடாத இன்னபிற வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகக்கூடிய நேரத்தில் தன் பெற்றோரை மருத்துவரிடம் கொண்டு செல்ல,பணிவிடை செய்ய என எத்தனை பேர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் எஞ்சுவது மிக மிகக்குறைவு
இதைவிடப் பெற்றோரின் மரணத்தின்பொழுதுஜனாஸாத் தொழுகை மற்றும் நல்லடக்கத்தின் பொழுது உடனிருந்தவர்கள் எத்தனை பேர்?. தனது தாயின்தந்தையின் கடைசி மூச்சினைக் காண கிடைக்கவில்லையே என எத்தனை உள்ளங்கள் ஏங்கி இருக்கும்?. அதேபோல் தனது கடைசி மூச்சுதான் பெற்ற மக்களுக்கு மத்தியில் நிகழவேண்டும் என்று எத்தனை பெற்றோர்களின் உள்ளங்கள் நினைத்திருக்கும்அதற்கெல்லாம் சாவு மணி அடிக்கிறது இந்த வளைகுடா வாழ்க்கை.
 

பெற்றோருக்கு நன்றி செலுத்துவதுஉபகாரம் புரிவது மற்றும் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல்கள் யாவை என்பது குறித்து அல்லாஹ்வின் வேதமும் நபிமொழியும் என்ன சொல்லுகின்றன என்பதைப் பார்ப்போம்

"
நாம் மனிதனுக்குதன் பெற்றோர் (இருவருக்கும் நலன் நாடுவதுபற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்.அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்அவனைச் சுமந்தாள்இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தல் இரண்டு வருடங்கள் ஆகும். ஆகவேநீ எனக்கும்உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாகஎன்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறத(அல்குர்ஆன் 31: 14). 
அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நான் நபி(ஸல்அவர்களிடம் "செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது எது?" என்று கேட்டேன்அதற்கவர்கள், "தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்டேன்அதற்கு, "பெற்றோருக்கு நன்மை செய்வதாகும்"என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி) (புகாரிமுஸ்லிம்
இப்படியாக பல்வேறு சிறப்புகளையும்மகத்துவத்தையும் பெற்றிருக்கக்கூடிய பெற்றோர்களில் ஒருவரான தாயின் சிறப்பை மேன்மைப்படுத்தி சிலாகித்துக் கூறக்கூடிய மேலும் சில நபிமொழிகளையும் காண்போம்.

ஒரு மனிதர் நபி(ஸல்அவர்களின் சமுகத்திற்கு வந்து"அல்லாஹ்வின் தூதரேஎன் அழகிய தோழமைக்கு மனிதர்களில் அதிக உரிமை பெற்றவர் யார்?" என வினவினார்அதற்கு அண்ணல் நபி(ஸல்அவர்கள், "உம் தாய்என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார்அதற்கவர்கள், "உம் தாய்என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார்.அப்பொழுதும் "உம் தாய்என அண்ணல் நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் "பின்னர் யார்?" என்றார் அப்பொழுது, "உம் தந்தைஎனக் கூறினார்கள்.
(புகாரீ: 5514)

"வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் (அவர்களின் நலன் நாடாமல் புறக்கணித்துசுவனம் செல்லாமல் போய்விட்ட மனிதன் நாசமடைவானாகபின்னர் நாசமடைவானாகபின்னர் நாசமடைவானாக!" என நபி(ஸல்அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்அறிவிப்பாளர்அபூஹூரைரா(ரலிஅவர்கள்
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் மிக தெளிவாக விளக்குகின்ற செய்தி யாதெனில்பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நன்றியுடையவர்களாக இருப்பதுமாகும்பெற்றோருக்குப் பணிவிடை செய்யக்கூடிய விஷயத்திலாவது பெற்றோருக்கு ஒருவருக்கு மேற்பட்ட மக்கள் இருந்து அவர்களில் ஒருவரோ அல்லது அதிகமானோரோ பெற்றோருடன் இருந்து மற்றவர்கள் வளைகுடா வாழ்க்கையின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அனுப்பிக் கொடுத்து ஊரில் இருக்கக்கூடிய மற்ற மக்கள் மூலம் கவனிக்கப்படுகிறார்கள் என்றால் ஓரவிற்கு ஜீரணித்துக் கொள்ளலாம்ஆனால் அடுத்து நாம் பார்க்க இருக்கின்ற பாதிப்புகள் குறித்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை
2. கணவன் மனைவிக்கும்மனைவி கணவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்

திருமணம் முடித்த எத்தனையோ வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் வயிற்றைக் கழுவ வளைகுடாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்அவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்திருமணம் முடித்த ஒரேநாளில்ஒரேவாரத்தில்ஒரேமாதத்தில் என எத்தனை சகோதர-சகோதரிகள் திருமண பந்தத்திற்கு முன்னாலேயே வளைகுடாவுக்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமில்லாமல் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கிறார்கள்கணவன்மனைவிக்கு மற்றும் மனைவிகணவருக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாக,முழுமையாக நிறைவேற்றுகின்றார்களா என்றால் அது மிக சொற்பமே
குறிப்பாகதிருமணம் முடித்த நாளிலிருந்து 20 வருடகாலம் வளைகுடாவில் வாழ்க்கைப் படகினை ஒருவர் ஓட்டியிருப்பாரேயானால் அவரது இல்லறவாழ்வின் காலம் எத்தனை எனச் சராசரியாகக் கணக்குப் பார்த்தால் அது குறைந்தபட்சம் 24 மாதமும் அதிகபட்சமாக 48 மாதமுமாகும்அதாவது 2 வருடம் முதல் 4 வருடம் மட்டுமேஇளமையில் பெறவேண்டிய சுகத்தை அடையவிடாமல் பொருள் சுகம் தடுக்கிறது
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதையாகவருடத்தில் அல்லது இரண்டு வருடத்தில் ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை நாட்டிற்குச் சென்று மனைவியிடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக்கூடியவர்கள் வளைகுடா திரும்ப வேண்டிய நாட்கள் நெருங்க நெருங்க இருவர் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஏக்கங்களை வார்த்தைகளால் கூற முடியாதுஅதனை உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவர்அடுத்து வரக்கூடிய விடுமுறை வரைக்கும் இருவருக்கும் இல்லறமென்ற நல்லறம் கிடையாதுஉள்ளத்தில் புரண்டெழும் ஏக்கங்களை எழுத்திலும் (கடிதத்திலும்), பேச்சிலும் (தொலைபேசியிலும்பறிமாறிக் கொள்ள வேண்டியதுதான்
இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் இறையச்சத்தைப் பெற்றிருக்கின்ற நல்லுள்ளம் கொண்ட சகோதரசகோதரிகளைத் தவிர மற்றவர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்நிய ஆடவர்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் வளைகுடாவில் இருக்கக்கூடிய ஆடவர்கள் அந்நியப் பெண்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக வழிதவற வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்இதற்கெல்லாம் காரணம் வளைகுடா வாழ்க்கை ஏற்படுத்திய பிரிவுதான்
கணவன்-மனைவி மத்தியில் உரிமைகள் வழங்குதல் குறித்து நபி(ஸல்அவர்களின் போதனையினை இரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறினால் இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்
அபூ ஜுஹைபா வஹப் பின் அப்தில்லாஹ்(ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி(ஸல்அவர்கள்ஸல்மான்(ரலி)அவர்களுக்கும் (அன்ஸாரியான)அபூதர்தா(ரலிஅவர்களுக்கும் மத்தியில் சகோதரத் தோழமையை ஏற்படுத்தினார்கள்.ஸல்மான்(ரலிஅவர்கள் அபூதர்தா(ரலி)வைச் சந்தித்தார்கள்அப்பொழுது (அவர் மனைவிஉம்முதர்தா(ரலி) (சாதாரண)பழைய ஆடை அணிந்திருப்பதை ஸல்மான்(ரலிஅவர்கள் பார்த்தார்கள். "உங்களது விஷயம் என்ன?(ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள்?)" என அவரிடம் ஸல்மான்(ரலிஅவர்கள் கேட்டார்கள்அதற்கு அப்பெண்மணி, "உம் சகோதரர் அபூதர்தா(ரலி)விற்கு உலக விஷயங்களின் பால் தேவையிருப்பதில்லை (அதனால் நான் என்னை அலங்கரித்துக் கொள்வதில்லை)" என்றார்கள்
பின்னர் அபூதர்தா(ரலிஅவர்கள் வந்தார்கள்ஸல்மான்(ரலி)வுக்காக உணவு தயாரித்து அவரிடம் "நீங்கள் சாப்பிடுங்கள்நான் நோன்பாளிஎனக் கூறினார்கள்உடனே ஸல்மான்(ரலிஅவர்கள், "நீங்கள் சாப்பிடாதவரை நான் சாப்பிடமாட்டேன்எனக் கூறவே அவர் (தமது நஃபில் நோன்பை முறித்துஅவருடன் சாப்பிட்டார்கள்பின்னர் இரவானதும் அபூதர்தா(ரலிஅவர்கள் (நஃபில்தொழுகைகளைத் தொழ எழுந்து நின்றார்கள்உடனே ஸல்மான்(ரலி)அவர்கள்அவரிடம் "உறங்குவீராக!" எனக் கூறினார்கள். (சிறிதுஉறங்கினார்பின்னர் (எழுந்து நஃபில்தொழ நின்றார்கள்அப்பொழுதும் ஸல்மான்(ரலிஅவர்கள் "உறங்குவீராக!" எனக் கூற அவர்கள் உறங்கிவிட்டார்கள்
இரவின் கடைசிப் பகுதி ஆனதும் ஸல்மான்(ரலிஅவர்கள்அபூதர்தா(ரலிஅவர்களிடம் "இப்பொழுது எழுவீராக!"என்றார்பின்னர் இருவரும் (நஃபில்தொழுதார்கள்பிறகு அபுதர்தா(ரலிஅவர்களிடம் ஸல்மான்(ரலிஅவர்கள் கூறினார்கள்: "உம் இரட்சகனான அல்லாஹ்விற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளனஉமது ஆன்மாவிற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளனஉம் குடும்பத்தினருக்கும் உம்மிடம் சில உரிமைகள் உள்ளனஒவ்வொரு உரிமையை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது உரிமையை வழங்குவீராக!" 
அபுதர்தா(ரலிஅவர்கள்நபி(ஸல்அவர்களிடம் வந்துஸல்மான்(ரலிஅவர்கள் கூறியதைக் கூறினார்கள்உடனே நபி(ஸல்அவர்கள் "ஸல்மான்(ரலிஉண்மை கூறிவிட்டார்எனக் கூறினார்கள்
. 
(புகாரி
மேற்கண்ட ஒரு நபிமொழிமனைவிக்குக் கணவன் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்துத் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டது
நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் திருமணம் கண் மற்றும் அபத்தை பாதுகாக்கின்றது (ஹதீஸ்). 
திருமணம் ஈமானின் பாதி (ஹதீஸ்). 
போதுமான சக்தியிருக்குமேயானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது நோன்பிருந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்). 
ஆக, திருமணமானது ஷைத்தான்களுடைய தீங்கிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக இருக்கும்பொழுது கேடயத்தைப் பயன்படுத்தக்கூடிய மனிதனும் கேடயமும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் இரண்டிற்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டுமில்லாமல் இரண்டிற்கும் எந்த நேரத்திலும் இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் வரலாம்.

3. 
குழந்தைகளுக்குச் செய்யும் பொறுப்புகளில் குறைபாடு:

குழந்தைப் பிறப்பின் காரணமாக அடையக்கூடிய தாயின் வேதனையை எத்தனை பேர்கள் கண்டிருக்கிறார்கள்குழந்தை பிறக்கின்றபோது தன்னுடன்தன்னுடைய கணவன் இல்லையே என்று எத்தனை மனைவியர் கண்ணீர் விட்டிருப்பர்தான் பெற்ற குழந்தையின் முகத்தை ஒருசில மணித்துளிகளில் எத்தனை தந்தை கண்டிருக்கிறார்தன்னுடைய குழந்தைகளின் அழகான சிரிப்பைஅழுகையைசெல்லமான கோபத்தைஉறங்கும் மற்றும் உண்ணும் பாணியினைதத்தித் தவழ்ந்து நடக்க முயலும் பொழுது தவறிவிழும் கண்கொள்ளாக் காட்சியினைமழலைப் பேச்சினை இன்னும் இதுபோன்ற சிறு சிறு இன்பங்களைக் கண்டுகளித்தவர்கள் எத்தனை பேர்
பிறந்த குழந்தை(களு)க்குத் தாயானவள்தனக்குப் பிறகு அறிமுகம் செய்யக்கூடிய இரண்டாம் நபர் யாரெனில் குழந்தையின் தந்தைஆனால் தந்தை முகம் பார்க்கும் நிலையில் விட்டுவைக்கவில்லையே இந்த வளைகுடா வாழ்க்கை
குழந்தை(களு)க்கு இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலும் பயன்தரக்கூடிய கல்வியைக் கொடுக்கக்கூடிய விஷயத்திலும் தந்தையின் பங்கு மிக மிகக் குறைவுதான்குழந்தை(கள்என்ன கற்றிருக்கிறார்கள்என்ன கற்கப் போகிறார்கள்எப்படிக் கற்கிறார்கள்கற்றுத் தரக்கூடிய ஆசிரியர்களின் நிலை என்னபள்ளி மற்றும் கல்லூரிகளின் நிலை என்னசகமாணவ மற்றும் மாணவிகளின் ஒழுக்கநிலை எவ்வாறு உள்ளதுயார் யாரோடு பழகுகிறார்கள்எந்த நல்ல விஷயங்களை வளர்த்துள்ளார்கள் அல்லது தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார்கள்என்பன போன்றவற்றை அறிந்து வைத்துள்ள தந்தையர் எத்தனை பேர்
கணவன் மனைவியாக வளைகுடாவில் குடும்பம் நடத்தக்கூடியவர்களில் கணிசமானவர்கள் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு தான் மட்டுமே இங்கே வாழ்கிறார்கள்இதனால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் வளர்ந்து நாளடைவில் பெற்றோரை மதிக்காதஎதிர்க்கக்கூடிய மக்களாய் மாறிவிடும் கொடுமையும் ஏற்படலாம்

4. 
உறவினர்கள் மற்றும் சமுதாய மக்களுக்கு

தொடர்ச்சியாக நிகழக்கூடிய மரணம்பிறப்புசுன்னத்தான திருமணங்கள்மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய இரு பெருநாள் தினங்கள்விடுமுறை நாட்கள் இன்னபிற இனிய நாட்களை உறவினர்களோடும் சமுதாயத்தோடும் பகிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்
பெற்றோர்கள்பிள்ளைகள்உடன்பிறந்தவர்கள்உறவினர்கள்அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மற்றும் சமுதாய மக்கள்மரணித்தபோது மய்யித்துகளை நேரில் கண்டவர்கள், ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டவர்கள்அடக்கம் செய்யக்கூடிய நிகழ்வுகளில் உடன் நின்றவர்கள் நம்மில் எத்தனை பேர்

5. 
வீண் விரயம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை

இயல்பாகிப்போன நடைமுறையைச் சொல்லப்போனால் நம் வீட்டுப் பெண்களும் சரிநம்முடைய குழந்தைகளும் சரி கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமாகச் செலவுகள் செய்ய பழகியிருக்கிறார்கள்ஆரம்பத்தில் கூறியதுபோன்று ஒரு குடும்பத்தின் முதலாவது நபர் வளைகுடா வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னால் இருந்த வாழ்வாதாரச் செலவுகளையும் அதற்குப் பிறகுள்ள செலவுகளையும் ஒப்பு நோக்கிக் கணக்கிட்டால் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது.

சாதாரணமாக மாதந்தோறும் ரூபாய் 3000 மாத்திரமே தன்னுடைய மனைவிமக்களுக்காக அனுப்பி கொடுத்தார் ஒரு சகோதரர்.ஊரிலுள்ள அவருடைய மனைவியும் கணவரின் சூழ்நிலை அறிந்து அந்தப் பணத்தில் மாதாந்திர செலவுகள் போக ஏறக்குறைய ரூபாய் 1000 வரையில் சேமிக்கக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அக்கம்பக்கத்திலுள்ள வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் பெற்றோர்களும் மனைவிகளும் வாழக்கூடிய ஆடம்பரமானபெருமையான,பகட்டான மற்றும் வீணான செலவுகளைக் கண்ட பின்னர் 'தானும் ஏன் அதுபோன்று வாழக்கூடாது?' என்று அந்தப் பெண்ணை எண்ண வைத்துகொஞ்சம் கொஞ்சமாக வீணான மற்றும் அனாவசியமான பொருட்களுக்கு செலவு செய்ய வைத்துள்ளது இந்த வளைகுடா வாழ்க்கை
எப்படிபட்ட நிலையென்றால் ஆடம்பர மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதின் காரணத்தால் முதலில் டெலிவிஷன் பெட்டி வீட்டில் நுழைந்ததுபிறகு டெலிபோன்மொபைல்வீடியோவீசீடீடீவீடீஆடியோவாசிங்மெசின்பிரிஜ்,மெக்ரோ ஓவன்விதவிதமான சோபாக்கள்வாட்டர் கூலரில் தொடங்கி ஏர்கண்டிஷன் பெட்டி வரை. (இந்த பட்டியலில் குறிப்பிடாத பொருள்களும் அடங்கும்). இதுபோன்ற சாதனங்கள் தன் வீட்டில் இல்லையென்றால் தன்னை மற்றவர்கள் மதிப்பற்றவராகக் கருதுவார்கள் என்ற காரணம் இதற்கெல்லாம் கற்பிக்கப்படுகிறதுஇன்னும் சொல்லப்போனால் ஷிர்க் மற்றும் பித்அத்தான செயல்களைநிகழ்ச்சிகளைசம்பவங்களைக் காரணங்காட்டி வீணான விருந்து உபசரிப்புகள் எனச் செலவுகள் வளர்ந்துக் கொண்டே செல்கின்றன.

இதனால் வருமானம் போதாக்குறை ஏற்படுகிறதுதன்னிறைவு ஏற்படுவதற்குண்டாக சாத்தியகூறுகள் மிகக் குறைவாக உள்ளதால் வளைகுடா வாழ்க்கையை விட்டு மீள முடியாத நிலையில்கம்பெனியாகப் பார்த்து, "உனக்கு வயதாகிவிட்டது.நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இனிமேல் உன்னால் உழைக்க முடியாதுஇதற்கு மேல் நீ இருக்க வேண்டாம் உன்னுடைய நாட்டிற்குத் திரும்பி சென்று விடுஎன்று அனுப்ப வேண்டும் அல்லது அல்லாஹ் காப்பாற்றட்டும் தீர்க்க முடியாத பெரும்வியாதிகள்நோய்கள் ஏற்பட்டு முடியாத நிலையில் நாட்டிற்கு திரும்பும் நாள்வரை வளைகுடா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்
வளைகுடா வாழ்க்கை வாழக்கூடிய சகோதர-சகோதரிகளின் பெரும்பாலான வீடுகளிலுள்ள உறுப்பினர்கள் வீண் விரயமான மற்றும் ஆடம்பரமான செலவுகள் அதிகரிக்கக் காரணம் என்னவெனில்வளைகுடாவில் உழைக்கக்கூடிய தகப்பனோ,கணவனோசகோதரனோ என்ன வேலை செய்கிறார்கள்என்ன கஷ்டப்படுகிறார்கள்என்றறியாததால் தனக்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை முன்னூதாரணமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்ஆனால் குடும்பத்தாருடன் தாய்நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் மேற்சொன்ன இரத்த பந்தங்கள் உழைத்துவிட்டு வீடு திரும்பும்போதுள்ள களைப்பையும் அசதியையும் வியர்வையும் நேரில் காணும்போது உழைப்பின் பயனை அறிந்து வீணான மற்றும் ஆடம்பரமான செலவுகளைச் செய்ய தயங்குவார்கள் அல்லது செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை

6. 
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின்மை

எத்தனையோ சகோதரர்கள் கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் பலவாறு கடன்களைப்பெற்றும் வளைத்து வளைத்து வீட்டினைக் கட்டி விடுகிறார்கள்எத்தனையோ குடும்பங்களில் ஆண்கள் தன் நாட்டில் இல்லாத சூழ்நிலையால் தினசரி அச்சத்திற்கும்ஆதரவிற்கும் மத்தியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் நம் குடும்பப் பெண்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே
இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பாதிப்புகள் மற்றும் குறைபாடுகள் வளைகுடா வாழ்க்கையினால் இருந்தாலும் விரிவஞ்சி முடிவிற்கு செல்ல நினைக்கிறேன்.

இத்தனைப் பாதிப்புகள் குறித்துப் பட்டியலிட்டு கூறினாலும் ஒருசில உள்ளங்கள் ஆதங்கப்படுவது எனக்கு தெரியாமலில்லை.அதாவது நாங்கள் நினைத்த மாத்திரத்தில் பத்தோஇருபதோ ரியால்களை செலவு செய்தால் மஸ்ஜித்துல் ஹரம் சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம் அதனால் ஒரு ரக்அத் தொழுகைக்கு ஒரு இலட்சம் நன்மைகள் கிடைக்கும்உம்ரா(க்கள்)மற்றும் தவாபு(கள்செய்து நன்மைகளை சம்பாதிக்கலாம்இஃதிகாப் இருந்து நன்மைகளை அதிகமதிகமாகப் பெறலாம் என்று சொல்லக்கூடியவர்களின் வாதம் சரியானதுதான்அதில் எந்த மாற்று கருத்தும் இல்லைஆனால் இந்த நற்சூழல் மக்காதாயிப் மற்றும் ஜித்தாவில் உள்ளவர்களும் அதனை சுற்றியுள்ளவர்களுக்கும் மட்டுமே தவிர சவுதி அரேபியாவிலேயே தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது வளைகுடாவில் வாழக்கூடிய அனைவருக்குமோ கிட்டக் கூடியதன்றுஎன்பதை நினைவில் கொள்ள வேண்டும்இதேபோன்றது தான் மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதும் ஜியாரத் செய்வதும்
உதாரணமாக குவைத்தில் உள்ளவர்கள் உம்ராஹஜ் மற்றும் ஜியாரத் செய்ய வேண்டும் என்றால் அதற்காக ஒரு கணிசமான பொருள் செலவும் நாட்செலவும் செய்தால்தான் பயனடைய முடியும்.

மேலும்வளைகுடாவுக்கு வந்து தவ்ஹீதைப் படித்தவர்களும் படிக்கின்றவர்களும் கூறுகின்ற கூற்று ஒன்றுண்டுஅதாவது, "நாங்கள் வளைகுடா வாழ்க்கையினால்தான் தவ்ஹீதை அறிந்து அதன்படி செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறோம் இது எங்களுக்கு வரமாக இருக்கிறதுஎன்று கூறக்கூடியவர்களுக்குவளைகுடாவில் மட்டுமல்ல நமது நாட்டிலும் தவ்ஹீதை அறிந்து கொள்ள முடியும்வளைகுடா வந்த நம் சமுதாய மக்களில் தவ்ஹீதை அறிந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்று பார்த்தால் அது வெறும் முதல் 10 சதவிகிதம் வரைதான் இருக்கக் கூடும்
வறுமையைப் போக்க வளைகுடா வந்த நம்மில் பலர்அல்ஹம்துலில்லாஹ்வறுமை போய்விட்டதுஆனால் வசதியான வாழ்க்கை நடைமுறையும் ஆடம்பரமும் அனாவசியமான செலவுகளும் நம்முள்ளும் நம் குடும்பத்தாருள்ளும் குடிபுகுந்துள்ள காரணத்தால் இதனைச் சரிகட்ட அல்லது திருப்திபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் வறுமை ஒழிந்தபிறகும் நம்மால் திரும்பி செல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றனர்அதாவது ஆற்றில் கம்பளி ஒன்று மிதந்து வந்ததைக் கண்ட நாம் அதனை எடுத்து பயனடையலாம் என்ற ஆவலில் ஆற்றில் குதித்துக் கம்பளியை பிடித்துவிட்ட பிறகுதான் தெரியவந்தது,ஆகாநாம் பிடித்தது கம்பளி அல்லமாறாகக் கரடி என்றும் அது நம்மைப் பிடித்துக் கொள்ளஅதிலிருந்து மீள முடியாத நிலையில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி கரடியிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்
ஆக இறுதியாகமுடிவாக எந்தவொரு ஆண்மகன் தன் தாய்தந்தைமனைவிமக்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் இருந்து உழைத்து உண்ணுவார்களேயானால் அதுதான் பிறந்த தாய்நாடாக இருந்தாலும் சரி அல்லது வளைகுடா நாடாக இருந்தாலும் சரி அல்லது மற்றெந்த நாடாக இருந்தாலும் சரியே அதுதான் வரமாகுமே ஒழியதான் தனியாகவோ அல்லது தன்னோடு தன் மனைவி-மக்களுடன் மாத்திரம் பெற்றோர்கள் இல்லாமல் வளைகுடா வாழ்க்கையை கழிப்பார்களேயானால் அது சாபமே சாபமே என்று கூறி என் கருத்துகளுக்கு முற்றுபுள்ளி இடுகிறேன்எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே
குறிப்புவளைகுடா வாழ்க்கை சாபம் என்று கூறக்கூடிய என்னுடைய கருத்திற்கு மாற்றமாக யாராவது வரம் என்று கருத்துச் சொல்ல அல்லது விளக்க விரும்பினால் அவர்களின் கருத்துகளை என்னோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன்என்னுடைய கவனதிற்கு வராததை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக அது அமையுமென நம்புகிறேன்.