Saturday, 29 March 2014

மதுரை திருமங்கலத்தில் ரூட்செட் வழங்கும் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி (Free Employment Course)முகாம்!! ஒரு தவகல்..


rudset institute free  entrepreneur training courses in Thirumangalamரூட்செட்  பெருங்குடி-மதுரை இயங்கிவரும்  வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் ஆகும்.இப்பயிற்சி நிலையாமானது உடனடி வேலை வழங்கும் அல்லது தொழில்முனைவோர் ஆவதற்கான பல பயிற்சி வகுப்புகளை,குறுகிய கால வகுப்புகளாக(5 நாள் முதல் 1 மாதம் வரை) நடத்தி வருகிறது. 


தற்போது அளிக்கப்படும் பயிற்சிகள்
நவீன முறையில் ஆடு வளர்ப்பு
அழகுக்கலை பயிற்சி(பெண்களுக்கு)
எம்ராய்டரி மற்றும் பேப்ரிக் பெயின்டிங்
காளான் வளர்ப்பு
செல்போன் பயிற்சி
சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
போட்டோ விடியோகிராபி
பால்பண்ணை பராமரிப்பு
டிரைவாஷ்(நவீன முறையில்)
குறிப்பு: மேற்கண்ட புகைப்படம் நீண்ட நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது,ஆகவே பயிற்சி வகுப்புகள் மாறி இருக்கலாம்.சரியான வகுப்பு மற்றும் நேர அட்டவணைக்கு ,பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.

 கட்டணம்,தங்குமிடம்,உணவு அனைத்தும் இலவசம்! 

இந்த பயிற்சி வகுப்புகளின் சிறப்பு அம்சமே ,இந்த பயிற்சி முற்றிலும் இலவசம்(பயிற்சி!கட்டணம்,தங்குமிடம்,உணவு அனைத்தும் இலவசம்) ,மறைமுகக் கட்டணங்கள் ஏதும் இல்லை.மேலும் இந்த எல்லா பயிற்சிகளும் இன்ற நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ,எளிய மற்றும் உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் பயிற்சிகள்.
பயிற்சி முடிந்த உடன் இதே தொழிலை தொடங்குவதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை,எனக்குத் தெரிந்தவரை இப்பயிற்சி வகுப்புகளை கனரா வங்கியே நடத்துவதால் அவர்களிடம்  குறிப்பிட்ட இத்தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறவும் வாய்ப்பு உள்ளது.
இந்த அருமையான வாய்ப்பை , எல்லோரும், குறிப்பாக கிராமப்புற மற்றும் அடித்தட்டு மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வேலைவாய்ப்பினையும் ,தொழில் முனைவோராகவும் முன்னேற வேண்டும்
அலுவலகம்
ரூட்செட் பயிற்சி நிலையம்
விமான நிலையச் சாலை
பெருங்குடி-மதுரை
தொடர்பு எண்கள் : 73585 56656,96262 46671
பெருங்குடி ,நமது திருமங்கலம் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளது நீங்கள் அறிந்ததே.இப் பெருங்குடி பயிற்சி நிலையத்திற்குச் செல்ல திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில்( 45 நிமிடங்களுக்கு ஒருமுறை என நினைக்கிறேன்) ,அரசுப்பேருந்து (பேருந்து எண்: 37பி) செல்கிறது. இவ்வண்டியில் ஏறி ,பெருங்குடி நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் சென்றால் குறிப்பிட்ட இப்பயிற்சி நிலையத்தை அடையளாம்!

தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

IN ENGLISH..

Rudset is the perunkudi-Madurai based employment training institute offers various courses that offers immediate job opportunity and entrepreneur training.
Some of the courses offered by this institute
Sheep farming
Beautician training(For women)
Embroidery and fabric painting
Mushroom Farming
cellphone service training
CCTV installation and repair
Photo videography
Poultry management
Drywash
All these training are completely free(No course fees,free food,free accommodation will be provided).And there will be chances of getting loans as it was managed by the Canara Bank.As of you know,Perunkudi located very nearer to Thirumangalam and there will be frequent buses from Tirumangalam to perunkudi(Local Bus number 37b)
Address
RudSet Insitute
Airport Road,
Perunkudi
Madurai
Contact Numbers: 73585 56656,6262 46671.

Prepared  by : A.Thaiyuba ajmal .

Friday, 28 March 2014

உலகின் முதன் முதலில் ஏ டிஎம்(ATM) தோன்றிய வரலாற்று பார்வை ...

உலகின் முதல் ATM கிமு 2500ம் ஆண்டுவாக்கில், எகிப்து மற்றும் மெசபடோமியா நாடுகளில் வரிகள் வசூலிக்கும் முறையை எளிதாக்குவதற்காக,  வெள்ளி மற்றும் தங்கத்தாலான நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.பணம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில், கோயில்கள் தான் வங்கிகளாக செயல்பட்டன. கோயில்கள் புனிதமான இடம் என்று கருதப்பட்டதால், அங்கு கொள்ளைகள் நடக்காது என்பதில் மக்கள் உறுதியுடன் இருந்தனர்.பணத்தை கடன் கொடுக்கும் முறை எப்போது தொடங்கியது தெரியுமா? கிமு 1750ம் ஆண்டுகளில் பாபிலோனிய கோயில்களின் மதகுருக்கள், பணத்தை கடனாக அளிக்கத் தொடங்கினர்.

முதன்முதலாக, தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுடனும் தொடங்கப்பட்ட வங்கி, பாங்கா மாண்டே டீ பாஸ்ட்சி டீ சீனா. கிபி 1472ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்த வங்கி இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.காகிதத்தால் ஆன பணத்தை முதன்முதலில் சீனர்கள் தான் அறிமுகப்படுத்தினர். 910ம் ஆண்டு காகித பணம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை உலகுக்கு தெரியப்படுத்தியவர், மார்க்கோ போலோ.

உலகின் முதல் கிரிடிட் கார்டு, டினர்ஸ் கிளப் கார்டு.  1949ம் ஆண்டு ஃபிராங்க் மெக்நமாரா என்பவர் இந்த கார்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
எந்த நேரத்தில் பணம் எடுத்து கொள்ளவும், வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் இன்று ATM  களின் பங்கு அன்றாட வாழ்வில் முக்கியமானது. நகரங்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களில்ATM கள் புழக்கத்திற்கு வந்து வங்கிகளுக்கு அருகே மட்டுமின்றி வணிக அங்காடிகள், ரயில், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் உள்ளது. இன்று அன்டார்டிகாவிலும் ஒரே ஒரு ATM இருக்கிறது. உலகின் தென்கோடி ATM இதுவே ஆகும். 

ATM கண்டு பிடித்தர் ஜான் ஷெபர்ட் பாரன். உலகின் முதல் ATMபார்க்லேஸ் (Barclays) வங்கியால் 1967 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட்டவுன் (Enfield Town) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. ஜான் ஷெபர்ட் பாரன் (John Sheperd Barron) கண்டுபிடித்த ATMஇயந்திரத்தை பற்றி அவர் கூறும்போது, காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தின் இயங்குமுறையை அடிப்படையாக கொண்டேATM இயந்திரத்தை கண்டுபிடித்தாக கூறுகிறார். அப்போது PIN எண்ணை உள்ளீடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முதலில் ஆறு எண்களை கொண்டு PIN எண்ணை உபயோகிக்கலாம் என நினைத்த அவர் மனைவி நான்கு எண்களுக்கு மேல் தன்னால் நினைவில் வைத்து கொள்ள முடியாது என சொன்னதால் ஷெபர்ட் நான்கு எண்களை ATM இயந்திரத்திற்கு PIN எண்ணாக வைத்தார். அதுவே இன்று உலக அளவில் எல்லா ATM இயந்திரங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. முதல் முதலில் ATM இயந்திரத்தை உபயோகப்படுத்தி பணம் எடுத்தவர். இங்கிலாந்து தொலைக் காட்சி நாடக நடிகர் ரெக் வார்னி(Reg Varney). ஒரு முறை உபயோகித்தால், 10 பவுண்ட் நோட்டு ஒன்றை மட்டுமே மெல்லிய காகித பையில் வைத்து கொடுத்தது இந்த முதல்ATM இயந்திரம்.

உலகின் முதல் 'பிட்காயின்'- டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் திறப்பு..

கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றி கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமை யிடமாகக் கொண்டு செய ல்படும் பிட்காயினிகாஸ் நிறுவன மும், நெவேடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் நிறுவனமும் இதனைச் செயல்படுத்துகின்றன.

வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.


 பிட் காயின் என்றால் என்ன?
பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களை பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப் படுகிறது.

பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்!
ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும். சாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.tamizhankural.com
இந்தியாவில் முதல் அஞ்சலகம் ஏடிஎம் சென்னையில் திறப்பு..

இந்தியாவின் முதலாவது அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னையில் திறக்கப்பட்டது. தியாகராயர் நகரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. வங்கிகளும் அஞ்சல் துறையும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் பெரிதும் மாற்றம் கண்டன. பெண்களுக்கென்றே தனியாக பாரதிய மகிளா வங்கியையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அஞ்சல் துறைகளில் மாற்றம் செய்திட அஞ்சலக ஏடிஎம் அமைத்திடும் பனி நடந்து வந்தது. இப்பணி முழுவதும் நிறைவுற்றநிலையில் நாட்டிலேயே முதல் அஞ்சலக ஏடிஎம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூருகையில்:-  நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மையங்களில் ஐ.டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்ப வசதிக்காக ரூ.4 ஆயிரத்து 909 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் . 

Tuesday, 25 March 2014

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் ஏர்வாடி பாதுஷாநாயகம் பற்றிய வரலாற்று பார்வை...

தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணம், பௌத்திர மாணிக்கப் பட்டணம், காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன. 


தமிழகத்தில் முதல் பள்ளி வாசல்..
தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சி குத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப் பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.

பிறப்பு..
சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.

சமயப் பிரச்சாரம்.. 
மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினர்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

இந்திய வருகை..
முதல் கட்டமாக கி.பி.1163-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து கி.பி.1185 ம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். 

இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப் பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.
இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

இறப்பு:

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் 1207ம் ஆண்டில் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏர்வாடி தர்கா..
மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. 

மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில்சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (ஒலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அழத்தாகிர் (ஒலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.


நோய் தீர்க்கும் தலம்  : ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது என்கிறது வரலாறு. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார்.  மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.சந்தனக்கூடு திருவிழா: சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன என்பது அங்குள்ள முல்லாகளின்  கூற்று. ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். 


இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள்,வரலாற்று முனைவர்கள்  ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பணிவுன்புடன் கேட்டு கொள்கிறேன்.

References:
1.ஷேக் ஜியாவுதீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் (அரபி)
2.மு.முத்தலிபு (காரைக்குடி )
3ஹுஸைனி S.A.Q. The History of the Pandiyan country
4.சுல்தான் சையது இப்ராஹிம் வெளியிட்ட நாணயங்கள்.
5.காதிர் உசேன்கான், South India Musalmans. Madras:1910
6.வண்ணக் களஞ்சிய புலவர், ‘தீன் விளக்கம்’ காப்பியம்.
7.தாரா சந்து, Influence of Islam on Indian culture. Allahabad:1936
8 ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) 
*
நன்றி: குர்ஆனின் குரல் (ஆகஸ்ட், 1997)
           மு.முத்தலிபு (காரைக்குடி )
           மௌலவி  சாகுல் ஹமீது ,ஏர்வாடி தர்ஹா.

ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Monday, 24 March 2014

பழமை வாய்ந்த‌ உதயகிரிக் கோட்டை !! ஒரு சிறப்பு பார்வை...

கன்னியாகுமரி தமிழ்நாட்டின் தென்கோடி மூன்று‌பக்கமும் கடல் சூழ்ந்த  கடைசி நகரம்உலக புகழ்ப்பெற்றசுற்று‌லா நகரம்கன்னியாகுமரியை சுற்றிவிவேகானந்தர் பாறை,காந்திமண்டபம்திருவள்ளுவர்சிலைபகவதி அம்மன் கோவில்வட்டக்கோட்டை,சுசிந்தரம்அய்யா வைகுந்தர் பாதைபத்மநாபபுரம்அரண்மனைதேங்காய் பட்டினம் கடற்கரைகோதையார்அணைக்கட்டுபேச்சிப்பாறை அணைக்கட்டுமுட்டம்,திருவட்டாறு‌ ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகியமுக்கிய சுற்று‌லா தலங்கள் உள்ளன.
கன்னியாகுமரியில் 3 கடல்கள் சங்கமிக்கும் காட்சியும்,ஒரே நாளில் சூரியன் மறைவதையு‌ம்சந்திரன்எழுவதையும் காண்பது‌ கிடைக்ககாத அரிய காட்சிகள்.
இங்குதான் உள்ளது  410 ஆண்டுகள்  பழமை வாய்ந்த‌உதயகிரிக் கோட்டைநாகர்கோவிலிருந்து‌ 14 கிலோமீட்டர் தூரத்தில்  திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்து‌ள்ள புலியூர்குறிச்சியில்உள்ளது‌.

திருவிதாங்கூர் அரசர்கள் பத்மநாபபுரத்தைதலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலத்தில்,இக்கோட்டை அவர்களுக்கு முக்கிய படைநிலை களமாகஅமைந்திருந்தது‌.  கி.பி. 1600-ம் ஆண்டு இந்த கோட்டைகட்டப்பட்டதாகவும்பின்னர் பேரரசர் ராஜராஜ சோழன்படையெடுப்பால் பாதிக்கோட்டை அழிந்து‌போனதாகவும்வரலாறு‌கள் கூறு‌கின்றன.

வேநாடு மன்னர் மார்த்தாண்டவர்மா 1729 ம் ஆண்டுஇந்தக் கோட்டையை புது‌ப்பித்து‌க் கட்டியுள்ளார்

90ஏக்கர் பரப்பளவில் அமைந்து‌ள்ள இந்த கோட்டையைமுன்னின்று‌ கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார்இந்தக் கோட்டைக்குள் 200 அடி உயரமலைக்குன்று‌ ஒன்று‌ அமைந்து‌ள்ளது‌.

முழுவது‌ம் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டைதில்லாணைக் கோட்டை என்று‌ம் அழைக்கப்படுகிறது‌.இந்தக் கோட்டைக்குள் து‌ப்பாக்கி வார்ப்படம் செய்யும்உலை ஒன்று‌ உள்ளது‌மன்னர் காலத்தில் இங்குது‌ப்பாக்கிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது‌.
மன்னர் மார்த்தாண்டவர்மா பத்மநாபபுரத்தில்மிகப்பெரிய அரண்மனையை கட்டியது‌டன்திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலையும்புதுப்‌பித்து‌ அமைத்து‌ள்ளார்.

இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வபடைகள் 19 ம் நூற்றாண்டு இடைப்பகுதியில் நிறு‌த்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது‌கோட்டையினு‌ள்அமைந்த தூப்பாக்கி வார்ப்பட தொழிற்சாலையில்கண்டெடுக்கப்பட்ட 16  அடி நீள து‌ப்பாக்கியைஅங்கிருந்து‌ எடுத்து‌ச் செல்ல முடியாமல் பல ஆண்டுகள்வீரர்கள் தவித்ததாக கதைகள் உண்டு.

பின்னர்1200 வீரர்கள் மற்று‌ம் 19 யானைகளின்உதவியுடன் அங்கிருந்து‌ எடுத்து‌ச் செல்லப்பட்டதாகவும்கூறப்படுகிறது‌.

இந்தக்கோட்டையை பல ஆண்டுகள் முன்னின்று‌ கட்டியதளபதி டி லனோய்தனது‌ வாழ்நாளின் பெரும்பகுதியைஇந்தக் கோட்டையில் தான் கழித்து‌ள்ளார்.

கோட்டையினு‌ள் பழைய மாதா கோவில் போன்று‌அமைந்த ஒரு கட்டிடம் இடிந்த நிலையில் உள்ளது‌.இங்கு தான் தளபதி டி லனோய் அவரது‌ மனைவிமகன்ஆகியோரது‌ கல்லறைகள் உள்ளன.

கோட்டையினைச் சுற்றிவரும்போது‌ஒரு அமைதியானசூழல் இருப்பதை காணலாம்விசித்தரமான தனிமைஉணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது‌.கோட்டையினு‌ள் பெரிய அரண்மனையோகோவிலோஇல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அளப்பரிய பணிகளைமன்னர் மார்த்தாண்டவர்மாவும்தளபதி டி லனோயும்திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர்இந்த கோட்டைஉருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதிஉருவானது‌மன்னரால் பொன்மனை அணையும்,கால்வாயும் உருவாக்கப்பட்டதால்,  விளை நிலங்கள்செழித்து‌ கன்னியாகுமரியை வளமாக்கின.
http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ee/Udayakiri_fort5.jpg
இந்தக் கோட்டை ஒரு காலத்தில்கைதிகளை காவலில்வைத்திருக்கும்களமாகவும் விளங்கியுள்ளது‌.திப்புசுல்தானு‌க்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனிபோரிட்டபோது‌ பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்தியகம்பெனி இங்கு பாது‌காப்பாக வைத்திருந்ததாககூறப்படுகிறது‌.

தளபதி டி லனோய்மன்னர் மார்தாண்டவர்மாவிற்கு 37ஆண்டுகள் நம்பிக்கையான படைத்தளபதியாகவும்,நண்பராகவும்இருந்தார்.

திருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்காலபோர்த்தந்திரங்களை இவர்தான் பயிற்சி அளித்தார்.தனது‌ 62 வயதில் மரணம் எய்தினார்இவருடையகல்லறையின் மேல் தமிழிலு‌ம் லத்தீன் மொழியிலு‌ம்இவரைப் பற்றிய விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர்கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினைகண்டுபிடித்து‌ள்ளனர்அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌பத்மநாபபுரம் அரண்மனைக்கு ரகசியமாக செல்லு‌ம்வகையில் அமைந்து‌ள்ளது‌.

கோட்டை தற்போது‌ தமிழக வனத்து‌றையின்கட்டுப்பாட்டில் உள்ளது‌வனத்து‌றை சார்பில்அமைந்து‌ள்ள மீன் காட்சியகமும்பூங்காக்களும்சுற்று‌லாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்அமைந்து‌ள்ளன.

இந்தக்கோட்டையை புது‌ப்பிப்பதற்காக தமிழ்நாடு அரசு 7லட்ச ரூபாய் செலவு செய்து‌ள்ளது‌சுற்று‌லா பயணிகள்அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய ஒரு இடம்உதயகிரி கோட்டையாகும்.

இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க...

http://upload.wikimedia.org/wikipedia/commons/f/fa/Udayakiri_fort8.jpg மேலே நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு.  ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும்ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும்இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது.  நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு. காட்டு பகுதியையும்மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும்கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும்இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது.  நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு. காட்டு பகுதியையும்மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும்கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .

நுழைவு கட்டணம் 10 ரூபாயும்ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும்வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் ,இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா)!