Thursday, 20 January 2011

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்தமையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காகமையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Saturday, 8 January 2011

கம்ப்யூட்டர் ஆணா அல்லது பெண்ணா ? ருசிகர தகவல்!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் கணினி வகுப்பு நடத்தி கொண்டிருக்கும் போது திடிரென்று மாணவன் ஒருவன் எழுந்து, கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா என்று கேட்டான்.

 அந்த ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை. மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும் , மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிருபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார்.

இந்த  இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும், மாணவர்கள் அனைவரும்,'கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா???

மாணவியர்கள்  கூறிய விடை:

  • கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை , 'பவர் ஆன்' செய்தல் வேண்டும்.
  • ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன , இருந்தாலும் கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.
  • கம்ப்யூட்டர்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்சனைகளாக அமைகின்றன.
  • ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்...'ஐயோ.. சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே'...என்று!
இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர்.

கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா.......? 


  • கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
  • ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
  • நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதிந்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
  • ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே , தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.உலகத்தில் பெண்தானே போற்றப்படுகிறது . எனவே நாங்கள் இதையும் பெண்களுக்கே கொடுக்கிறோம் காரணம் கணிணியியல் தான் (மதர்போட் என்று உள்ளது )

இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் பெண் தான் என்று மாணவர்கள் முடிவு கூறினர்.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் அனுமானம் என்னவோ....?

Wednesday, 5 January 2011

தமிழன் ஆதிகால அணிகலன்கள் Vs தற்கால அணிகலன்கள் !! ஒரு வரலாற்று பார்வை..

நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது.அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தா விடினும் நமது முன்னோர்கள் ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து வந்தார்கள் என்று அறிகின்ற போது அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாகத் தான் உள்ளது.

தமிழர்கள் அணிந்துவந்த ஆதிகால அணிகளின் (நகைகளின்) பெயர்கள் கீழ்கண்டவாறு.


1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.  

2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள் கொந்திக்காய்

5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி

9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.

அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்திலும்  அதிகம்  நமது ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து  வருகின்றனர் .
ஆனால் இந்த காலத்தில் அணிகளின் (நகைகளின்) பெயர்கள் கீழ்கண்டவாறு..

1.கம்மல் 
2. கடுக்கன் 
3. தோடு 
4. ஜிமிக்கி
 5. குண்டலம் 
6. வளையம்
 7. மாட்டல் 
8. நெத்திச்சுட்டி, 
9. நெத்திபட்டம்,
 10. ராக்கடி, 
11. ஓலை, 
12. பாம்படம்,
 13. சூரியன், 
14. சந்திரன், 
15.ஜடநாகம்,
16. சுங்கு, 
17. லோலாக்கு, 
18. புல்லாக்கு, 
19. மூக்குத்தி, 
20. பேசரி, 
21. அட்டிகை,
 22. ஹாரம் ,
23. சங்கிலி, 
24. முறுக்குச்சங்கிலி, 
25. மைனர்சங்கிலி , 
26. மாலை, 
27. முத்துமாலை, 
28. மணிமாலை, 
29. காசுமாலை,
30. கல்லுமாலை, 
31. கங்கணம், 
32. பதக்கம், 
33. புலி நகம், 
34. வளையல், \
35. கல்வளையல் 
36. காப்பு, 
37. மோதிரம், 
38. நெலி மோதிரம், 
39. வங்கி மோதிரம், 
40. வைர மோதிரம்,
 41. ஒட்டியானம், 
42. அர்னாகயிறு, 
43. அரஞ்சாங்கயிறு, 
44. கொலுசு, 
45. கால்காப்பு, 
46. சலங்கை, 
47. சிலம்பு, 
48. தண்டை, 
49. மிஞ்ஜி, 
50. மெட்டி.

இதெல்லாம் டூப்பு.... தாலி தான் டாப்பு... என்னங்க இப்படி எங்கோ கேட்ட மாதிரி இருக்கா....ஆங்....அதே அதே, கந்தசாமியின் இன்ஸ்பிரேஷன் தான் நல்லாயிருக்கா!.


அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தா விடினும் நமது முன்னோர்கள் ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து வந்தார்கள் என்று அறிகின்ற போது அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாகத் தான் உள்ளது.ஆனால் இந்த காலத்தில் அதுவும் இதையெல்லாம் போட்டுக்கொண்டு தைரியமா வெளியில் போய் வர முடியுமா? ஒரு குண்டு மணி நகையை வாங்க போனாலே அதை நூறு வாட்டி தொட்டு தொட்டு சரி பார்த்துக் கொண்டு ரொம்ப உசாராய் இருந்தாத் தான் அத்தோடு வீடு போய் சேர முடியும், என்ன நான் சொல்றது சரி தானுங்க .

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Saturday, 1 January 2011

டிஜிட்ட‌ல் கேம‌ரா.....


‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் 2011 புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.


. உங்க‌ளுக்கென‌வோ அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிச‌ளிக்க‌வென‌வோ டிஜிட்ட‌ல் கேம‌ரா வாங்க‌ நீங்க‌ள் உத்தேசித்துக் கொண்டிருந்தால் கீழ்க‌ண்ட‌ ஐந்து விட‌ய‌ங்க‌ளை க‌ருத்தில் கொள்ள‌வும்.

1. எந்த‌ கேம‌ரா வாங்க வேண்டும்? SLR or Compact Point and Shoot?
லென்சுக‌ளை தேவைக்கேற்ப்ப‌ க‌ழ‌ற்றி மாட்டி, அவ‌ற்றை சுழ‌ற்றி சுழ‌ற்றி சூம் செய்து மிக‌க்க‌றாறாக‌ போட்டோ எடுக்கும் ப‌ர‌ம்ப‌ரை நீங்க‌ள் என்றால் SLR (Single-Lens Reflex) என‌ப்ப‌டும் கேம‌ரா உங்க‌ளுக்குத் த‌கும். க‌லியாண‌ வீடுக‌ளில் ஏற்கன‌வே உங்க‌ளுக்கு அறிமுக‌மாகியிருக்கும் எட்டிப்பார்க்கும் பிளாஷ் லைட்டுக‌ளோடு கூட‌ வ‌ரும் மிக‌ப்பெரிய‌ சைசு கேம‌ராக்க‌ள் தான் இந்த‌ SLR கேம‌ராக்க‌ள். கோபால் போல‌ ஐநூறு, ஆயிர‌ம் டால‌ர்க‌ளென‌ போட்டோ எடுக்கும் ஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR-க‌ள் ஓகே. என் போன்ற‌ எடுத்தான் க‌வுத்தான்க‌ளுக்கு நூறுடால‌ர் அளவில் கிடைக்கும் பாயிண்ட் அன்ட் சூட்டுக‌ள் எவ்வ‌ள‌வோ மேல்.

2.பேட்ட‌ரி வ‌கை
டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க‌ளில் கிடைக்கும் AA போன்ற‌ அல்க‌லைன் பேட்ட‌ரிக‌ள் பய‌ன்ப‌டுத்தும் கேமாராக்க‌ள் எப்போதுமே என‌க்கு பிடித்த‌தில்லை. லித்திய‌ம் அயான் என‌ப்ப‌டும் ரீசார்ஞ் செய்ய‌க்கூடிய‌ பேட்ட‌ரிக‌ள்
கொண்ட‌வை என‌து பிடித்த‌ம். இஷ்ட‌த்துக்கும் பேட்ட‌ரிக‌ள் ப‌ற்றிய‌ ப‌ட்ஜெட் ப‌ய‌மின்றி ப‌ட‌ம் சுட்டுத்த‌ள்ள‌லாம். மின் இணைப்பே இல்லாத இட‌ங்க‌ளுக்கு சாகச‌ப் ப‌ய‌ணம் சென்று "நிஜ‌ம்" பிடிப்போருக்கு அல்க‌லைன்க‌ள் உத‌வ‌லாம்.

3. அந்த‌ MP க‌ணக்கு
5 MP‍யே டூம‌ச்சாம். அதனால் 12.1 megapixel, 14 megapixelப‌ற்றி யெல்லாம் நீங்க‌ள் ரொம்ப‌ க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை.உங்க‌ள் ப‌ட்ஜெட்டுக்கு எது செட்டாகுதோ அது ந‌ல்ல‌து.ஆனால் வாழ்வின் அற்புத‌மான‌ த‌ருண‌ங்க‌ளை resolution மிக‌க் குறைந்த‌ செல்போன் கேம‌ராக்க‌ளில் எடுத்து வீணாக்கி விடாதீர்க‌ள். 4x6 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 540x360 pixels வேண்டும். 8 x 10 பிரிண்ட் போட‌ குறைந்த‌து 900x720 pixels வேண்டும். அதுபோல‌ உண்மையிலேயே டெல‌ஸ்கோப்பு போல‌ நீண்டு நீண்டு சூம் செய்யும் ஆப்டிக்க‌ல் சூம் அதிக‌ம் இருப்ப‌து ந‌ம‌க்கு கேம‌ராவில் தேவையான‌ விச‌ய‌ம் தான். ஆனால் வெறும் ப‌ட‌த்தை ம‌ட்டும் சூம் செய்து போக‌ப்போக‌ மோச‌மான‌ த‌ர‌ம் த‌ரும் டிஜிட்ட‌ல் சூம் ப‌ற்றி ரொம்ப‌ க‌வ‌னிக்க‌ தேவையில்லை.

4. கூட‌வே ஒட்டி வ‌ருவ‌ன‌
எடுக்கும் போட்டோக்க‌ளை சேமித்து வைக்க‌ குறைந்த‌து 2GB அல்ல‌து 4GB மெம‌ரி கார்டாவ‌து இருப்ப‌து அவ‌சிய‌ம். கேம‌ராவோடு எவ்வ‌ள‌வு மெமெரி வ‌ருகிற‌துவென‌ விசாரியுங்க‌ள். அப்ப‌டியே உங்க‌ள் கேம‌ராவை பாதுகாக்க‌ ஒரு கேசும் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்தால் இன்னும் அருமை. HD video ரெக்கார்டிங், HDMI output இதெல்லாம் கேம‌ராவின் விலையை கூட்டும் ச‌மாசார‌ங்க‌ள்.

5.க‌ண்டு ர‌சிக்க‌
எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ளை பெரிய‌ திரையில் பார்வையிட‌ உங்க‌ளிட‌மோ அல்ல‌து நீங்க‌ள் ப‌ரிச‌ளிக்க‌விருக்கும் ந‌ண்ப‌ரிட‌மோ ஒரு மேஜைக்க‌ணிணியோ அல்ல‌து ம‌டிக்க‌ணிணியோ இருப்ப‌து அவசிய‌ம். அல்ல‌து ஒரு http://ajmal-mahdee.blogspot.com/2010/12/blog-post_29.html


இருப்ப‌து அவ‌சிய‌ம். வீடுக‌ளில் கணிணி/போட்டோ பிரேம் இல்லாதோர் கூட‌ தாங்க‌ள் எடுத்த‌ டிஜிட்ட‌ல் போட்டோக்களை அச்சிட்டு வ‌ழ‌ங்க‌‌ சென்னையில் http://www.konicacolorlab.com போன்ற‌ த‌ள‌ங்க‌ள் உள்ள்ன‌ . பெங்க‌ளூர்கார‌ர்க‌ள் http://www.picsquare.com முய‌ன்று பார்க்கலாம்

எனது டிஜிட்ட‌ல் கேம‌ரா அபிமான‌ பிராண்டுக‌ள்: க‌னான் (Canon) ம‌ற்றும் நிக்கான் (Nikon)