Monday, 31 August 2015

உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் தமிழ்நாட்டில் உள்ள ஒர் உலக அதிசய மாணவி விசாலினி !!

tamilnaattil ulaga adhisaya maanavi1சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு (Intelligence Quotient) 90லிருந்து 110 வரை இருக்கும். மன வளர்ச்சி குன்றியோருக்கு 90-க்கு குறைவாக இருக்கும். அதிக பட்சமாக பாப் பாடகி மடோனாவுக்கு 140, மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸுக்கு 160, தத்துவ மேதை பேகன்க்கு 200, இஸ்ரேல் நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெடன்யஹுக்கு 180, தென்கொரியாவின் கிம் யூங் யங்குக்கு (Kim Ung Yung) 210 ஐகியூ லெவல் உள்ளது. ஆனால் திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது மாணவி விசாலினியின் IQ 225. இதன் மூலம் விசாலினி, உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் (The Highest IQ in the World) என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆகிறார்.
விசாலினியின் இந்த நுண்ணறிவு திறன் சாதனை, கின்னஸ் சாதனைக்கு தகுதி உடையது ஆகும். ஆனால் கின்னஸ்சில் இடம் பெறுவதற்கு 14 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். விசாலினிக்கு அப்போது 12 வயது தான் என்பதால் இன்னும் கின்னஸ்சில் இடம் பெறவில்லை. இனி விசாலினி மற்றும் அவரது தாயார் திருமதி. சேதுராகமாலிகா அவர்களுடன் ஒரு நேர்க்காணல்..
உங்களைப்பற்றி..
விசாலினி: நான் பாளையங்கோட்டையில் உள்ள ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். அப்பா கல்யாண குமாரசாமி, எலெக்ட்ரிகல் காண்டிராக்டர்; அம்மா சேதுராகமாலிகா, அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளாராக இருந்தவர். எனக்கு IQ 225 இருப்பது தெரிய வந்ததும் என்னை கவனிப்பதற்காக அம்மா அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டார்.


உங்களின் பெற்றோரின் பங்களிப்பு..

விசாலினி: என் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால்தான் சிறு வயதிலிருந்தே ஞாபக சக்தியை வளர்த்துக் கொண்டேன். எந்த ஒரு சிறிய விஷயத்தையும் நுணுக்கமாக சிந்தித்து செயல்படுவேன். எனக்குப் புரியாத விடயங்களை ஏன், எப்படி என யாரிடமும் தயங்கமால் உடனே கேட்டு தெளிவு பெறுவேன். தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதில் எனக்கு தனி ஆர்வமுண்டு.

என்னென்ன சாதனைகள் படைத்திருக்கிறீர்கள்?
விசாலினி: அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, சர்வதேச அளவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பிற்காக, சி.சி.என்.ஏ., (CISCO Certified Network Associate) மற்றும் சி.சி.என்.பி., (CISCO Certified Network Professional) தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளை நான் பத்து வயதிலேயே எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்காக சிஸ்கோ நிறுவனம் எனக்கு The Youngest CCNA World Record Holder என்ற சான்றிதழ் வழங்கியுள்ளது.
(இத்தேர்வில் பாகிஸ்தானில் உள்ள 12 வயது மாணவர் இரிடிசா ஹைதரின் (Irtiza Hider) சாதனையை விசாலினி பத்து வயதில் முறியடித்துள்ளார்.)
பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் ஐ.டி.பி., மற்றும் இ.எஸ்.ஓ.பி., (Employee Stock Ownership Plan) தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், IELTS (International English Language Testing System) தேர்வை, 11 வயதில் எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் நான் The Youngest IELTS in the World என்ற சாதனையும் படைத்துள்ளேன். (இத்தேர்வில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, 12 வயது மாணவி சிடாரா அக்பரின் சாதனையை விசாலினி, 11 வயதில் முறியடித்துள்ளார்.)
நெதர்லாந்து நாட்டின் பிரபல நிறுவனம் EXIN நடத்திய Cloud Computing தேர்வில் 1,000க்கு 1,000 மதிப்பெண் பெற்றிருக்கின்றேன். மேலும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் MCP (Microsoft Certified Professional), ORACLE நிறுவனத்தின் OCNP (Oracle Certified Network Professional) சிஸ்கோ நிறுவனத்தின் சி.சி.என்.ஏ. செக்யூரிட்டி போன்ற சர்வதேச சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றேன்.
சென்னை, டெல்லி  பெங்களூர், போபால், திருநெல்வேலி போன்ற பல இடங்களில் நடந்த பல  சர்வதேச கருத்தரங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றேன். சமீபத்தில் இலண்டனில் உள்ள ஒரு நிறுவனம் சர்வதேச கருத்தரங்கத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கலந்துகொள்ள இயலவில்லை. தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெட்வொர்க்கிங் சம்பந்தமாக பாடமும் நடத்தி வருகிறேன்.
எனது அறிவாற்றலைக் கண்ட பள்ளி நிர்வாகம் இரண்டு முறை ‘டபுள் புரமோஷன்’ கொடுத்துள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில அனுமதி வழங்கினர்.

எதிர்கால லட்சியம்:
விசாலினி: தற்போது, சிஸ்கோ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு படித்து வருகிறேன். சொந்தமாக நெட்வொர்க்கிங் நிறுவனம் தொடங்கி CEO ஆவதே என் இலட்சியம்.

விசாலினியின் பிறப்பு பற்றி விசாலினி அம்மா சேதுராகமாலிகா ..
சேதுராகமாலிகா: மே 23, 2000 அன்று எனக்கு குறைப்பிரசவத்தில் தான் விசாலினி பிறந்தாள். அப்போது அவளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து கவனித்தனர். மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்து வந்த விசாலினிக்கு சோதனை அதோடு முடிந்துவிடவில்லை. குழந்தையால் பேச முடியாது என டாக்டர்கள் அடுத்த குண்டை தூக்கிப் போட்டனர். நானும் எனது கணவரும் மிகவும் சோர்வடைந்து விட்டோம். பிறகு அறுவை சிகிச்சை செய்து அக்குறைப்பாடு சரிசெய்யப்பட்டு விட்டது. அன்று மருத்துவமனையில் சோதனை மேல் சோதனை சந்தித்த விசாலினி தான் இன்று உலக அரங்கில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறாள்.
விசாலினியின் நுண்ணறிவுத் திறனை எப்படி கண்டுபிடித்தீர்கள்?
சேதுராகமாலிகா: குழந்தைகள் நலச்சிறப்பு மருத்துவர் ராஜேஸ், மதுரை உளவியல் மருத்துவர் நம்மாழ்வார் ஆகியோர் தான் விசாலினி மற்றவர்களிடமிருந்து நுண்ணறிவுத் திறனில் மேம்பட்டவள் என கண்டுபிடித்தார்கள். Binet-Kamat என்ற நுண்ணறிவு திறன் சோதனை மூலம் பரிசோதித்தபோது IQ 225இருப்பது தெரியவந்தது. இது அசாதாரணமானது என்பதால் எனக்கு பிடித்தமான வானொலி அறிவிப்பாளர் பணியையும் விட்டுவிட்டு அவளை கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
அரசுத் தரப்பில் உதவிகள் கிடைக்கின்றனவா?
சேதுராகமாலிகா: திருப்திகரமான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. நாங்கள் நடுத்தர குடும்பம் என்பதால், என் மகள் மேலும் மேலும் படித்து சாதனை படைப்பதற்கு போதிய உதவியை, உரிய நேரத்தில் செய்யமுடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. ஒரு தேர்வுக்கு மட்டும் பயிற்சிக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் சேர்ந்து பல இலட்ச ரூபாய் செலவாகிறது.
அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
சேதுராகமாலிகா: எனது மகள் உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் உடையவள் என்கிற சாதனைப் படைத்திருக்கிறாள். அதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அரசாங்க தரப்பில் எனது மகள் விசாலினியை அழைத்து பாராட்டவில்லை. அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இரிடிசா ஹைதர் என்கிற என்கிற 12 வயது சிறுவன், CCNA தேர்வில் வெற்றி பெற்றதும், அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஹைதரை ‘பாகிஸ்தானின் பெருமை’ (PRIDE OF PAKISTHAN) என்று ராணுவ இணையதளத்தில் பெருமைப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவனின் கல்விச் செலவு, சர்வதேச தேர்வுகளுக்கான செலவு அனைத்தையும் அந்நாட்டு அரசே ஏற்கிறது. அந்தச் சாதனையை 10 வயதில் முறியடித்துள்ள என் மகள் விசாலினியை மத்திய அரசு, ‘இந்தியாவின் பெருமை’ என்று அங்கீகரிக்க வேண்டும் அல்லது நம் மாநில அரசாவது ‘தமிழ் நாட்டின் பெருமை’ என்று அங்கீகரிக்க வேண்டும்.
CCNA தேர்வுக்காக இல்லாவிட்டாலும் நுண்ணறிவு திறன் சாதனைக்காகக் கூட விசாலினியை மத்திய, மாநில அரசுகள் கெளரவப்படுத்தலாமே? அவ்வாறு அரசாங்கம் என் மகளை ஊக்கப்படுத்தி வழிநடத்தினால் இந்தியாவிற்கு இன்னும் பல பெருமைகள் சேர்ப்பாள். இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 5 ஆம் தேதி, காலை 11 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுடன் டெல்லியில் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அப்போது, மாணவி விசாலினியுடன் பேசுகின்றார். விசாலினிக்கு மோடி பாராட்டு தெரிக்க உள்ளார். விசாலினி இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகிறார். 

விசாலினியை தொடர்புகொள்ள: goldengirlvisalini@gmail.com

சிறந்த திறமைகள் இருந்து இதுபோன்ற திறமைசாலிகளை நாம் பெருமளவில் அங்கீகரிப்பதில்லை.அப்படி அங்கீகரித்தால் தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கின்ற புத்திசாலிகளாலும், திறமைசாலிகளாலும் இந்தியாவையே பெரும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது கவனிக்க தக்க ஒன்று..

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

முஸ்லிம் ஏழை பெண் சகோதரிகளுக்கு வாங்கி கொடு சமுதாயமே!!

Image result for முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் முஸ்லிம் ஏழைகளுக்காக இப்படி சங்கம் இருப்பதே பலருக்கு 99.99999 %தெரியாது!!!
கொண்டு சேருங்கள் !!
ரூ 10 ஆயிரம் இல்லாததால் விபச்சாரம் செய்ததாக ஒரு சகோதரி கூறியபோது என்
மனம் வெடித்துவிட்டது பல நாள் தூக்கம் வராமல் இதே நினைப்பாக வருந்தியது உண்டு.
இதுபற்றி விழிப்புணர்வு கொடுக்காதது நம் சமுதாயத்தின் தவறே!!!
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் (MWAS)
ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கி அவர்களுக்கு உதவும்பொருட்டு கர்நாடக நவாப் அவர்களால் “முகம்மதியன் கோஷா விதவை சாரிட்டி” என்ற பெயரில் 1.10.1892 ல் ஒரு சங்கம் துவங்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் “முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்” என்று மாற்றியமைக்கப்பட்டது.இச்சங்கம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் (ம) அலுவல்சாரா சம்பள அலுவலர் (கர்நாடக உதவிதொகைகள்) (Pay master Carnatic stipends & Collector of Madras) அவர்களை தலைவராகவும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (ம) அலுவல்சாரா உதவி சம்பள அலுவலர் (கர்நாடக உதவித்தொகைகள்) (Assitant Pay Master Carnatic Stipends & PA (G) to the Collector of Madras) துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.
மேற்படி முஸ்லிம் மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களின் சந்தா தொகையையும் பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையையும் சேர்த்து தணிக்கை செய்தப்பின் எவ்வளவு தொகை வருகிறதோ அதில் பாதித்தொகையை (50 சதவீதம்) அரசு மானியமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட அரசாணை(நிலை)எண் 406 பொதுத் (அரசியல்) துறை நாள்1.8.1991 ல் சங்கங்கள் பதிவுச்சட்டம் XXI of 1860 ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் அரசாணை (நிலை) எண் 77பிவ,மிபிவ(ம)சிந (எஸ்1) துறை, நாள் 11.12.2001 ன் படி ஒவ்வொரு ஆண்டும் மேற்படி சங்கம் வசூலிக்கும் மொத்ததொகைக்கு இணையான தொகையை மானியமாக வழங்கிட அரசு உத்திரவிட்டுள்ளது.
மேற்படி சங்க அமைப்பினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சங்கங்களின் பதிவுச்சட்டதின் கீழ் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்ற பெயரில் துவங்கிட அரசு ஆணை நிலை எண் 14, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்23.4.2007 ல் உத்திரவிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இச்சங்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவரை பதவி வழித் தலைவராகவும், திட்ட அலுவலர்,மகளிர் திட்டம்(மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணையம்-DRDA) அவர்களை பதவி வழி உப தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்சிறுபான்மையினர் நல அலுவலரை அமைப்பாளர்/பொருளாளராகவும், முக்கியமான மற்றும் தலைசிறந்த உள்ளூர் மக்களிடயே இருந்து மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்பட்டு, பின்னர் சங்கத்தின் பொதுகுழு கூட்டத்தில் உறுபினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கெளரவச் செயலாளர் ஒருவர், கெளரவ இணைச் செயலாளர் இருவர் ,மற்றும் உறுப்பினர்கள் மூவர் ஆகியோரைக் கொண்டு இயங்கி வருகிறது.
இச்சங்கத்தின் நோக்கங்கள் பின்வருமாறு :
1)ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு உதவி செய்தல் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மற்றும் சங்கத்தின் நிதிநிளைகேற்ப வேறு வகையில் உதவி புரிதல்
2) ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு கைவினைப் பொருள்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறு தொழில் துவக்க உதவிடல் .
3) ஆதரவற்ற முஸ்லிம் விதவைகள் மற்றும் வயதானவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல் .
4) ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தி மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்தல்.
5) தையல்,பூ வேலைபாடுகள் மற்றும் காலணிகள் செய்வது குறித்த பயிற்சிகள் அளித்து எழிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிரின் வாழ்க்கைத் தரம் மேம்படச் செய்தல்.
6) மிகவும் எளிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிருக்கு மத்திய மற்றும் இதர மாநில அரசுகளிடமிருந்து சலுகைகள்/ உதவிதொகைகள் கிடைக்க வழி வகை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரச் செய்தல்.
7) வியாபாரம், தொழில் மற்றும் கல்வித் துறையில் முஸ்லிம் மகளிர் சங்க உருபினர்களுக்கு உதவி செய்து அவர்களை அத்துறையில் தேர்ச்சி பெறச் செய்தல்.
8) சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் (TAMCO) மூலம் தேவையான பெண்களுக்கு சிறிய வியாபாரம் துவக்கக் கடனுதவி அளித்தல்.
9) பொதுவாக கஷ்டப்படும் முஸ்லிம் பெண்களுக்கு சங்கம் தகுதியானவர்கள் என்று நினைத்தால் அவர்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உதவி புரிதல்.
இச்சங்கங்களை துவங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 இலட்சம் வீதம் விதைத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சங்க வளர்ச்சிக்காக இச்காங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் ஆண்டிற்கு அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் இணைமானியமாக அரசால் 1:1 என்ற விகிதாசாரத்தில் 2011-2012 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டது. 2012-2013 ஆம் ஆண்டு முதல் அரசால் ஒப்பளிக்கப்பட்டு வந்த இணைமானியத் தொகை 1: 2 என்ற விகிதாசாரத்தில் ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிக பட்சம் ஆண்டிற்கு ரூபாய் 20 இலட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Friday, 28 August 2015

ஸ்மார்ட்சிட்டி (SMART CITY) திட்டத்திற்கான நகரங்களின் பட்டியலில் 12 தமிழக நகரங்கள் தேர்வு !!

ஸ்மார்ட்சிட்டி அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பட்டியலை மத்திய அரசு இன்று  வெளியிட்டுள்ளது. இவற்றில் துாத்துக்குடி உட்பட தமிழகத்தின் 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் கனவுத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பரிந்துரை செய்யப்பட்ட 98 நகரங்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12, மகாராஷ்டிராவில் 10, மத்திய பிரதேசத்தில் 7, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை, கோவை, சென்னை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட உள்ளது.

ஸ்மார்ட்சிட்டி நகரங்களின் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பேசுகையில, புதிதாக வரும் ஸ்மார்ட் சிட்டி 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி, போன் செய்தால் வீடு தேடி வரும் மருந்து, மாத்திரைகள், எங்கு சென்றாலும் வை-ஃபை எனப்படும் வயர்லெஸ் இண்டர்நெட் கனெக்டிவிட்டி, நல்ல சாலை வசதிகள், செம்மையான போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பான சாக்கடை மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி, வீடுகளுக்கே வந்து குப்பைகளை எடுத்துச் செல்லும் டோர் டூ டோர் கார்பேஜ் வசதி போன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கும் என தெரிவித்தார். 

ஸ்மார்ட்சிட்டிக்கு ஸ்மார்ட் மக்கள் தேவை. இந்த திட்டத்தை முன்னேற்ற மக்களின் முழு ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை என கூறினார். புதிதாக அமைய உள்ள ஸ்மார்ட்சிட்டியில் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, மாசுபாடற்ற காற்று, போக்குவரத்து வளர்ச்சி, நகரின் தனித்தன்மையை வளர்த்தல் உள்ளிட்டவை அவற்றில் அடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

IN ENGLISH..
Urban Development Minister Venkaiah Naidu on Thursday urged local and international investors to put their money on the Smart City Mission, assuring them that it was a safe bet.
Mr. Naidu unveiled a list of 98 cities with Uttar Pradesh taking the largest share of developing 13 smart cities followed by Tamil Nadu, which qualified to develop 12.
“Both national and international investors are looking for opportunities in the backdrop of the recent financial crisis,” said Mr. Naidu. “People are searching for safe investments. I offer smart cities as the safest investment because land is going to be there, structures are going to be there, so the returns are assured.”
With an aim to achieve “inclusive growth”, the Smart City Mission promotes integrated city planning, where the government’s policies such as Swachh Bharat Mission and Atal Mission for Rejuvenation and Urban Transformation complement each other.
Taking a tough stance over the delay of project approvals at the State-level, Mr. Naidu said the new parameters set by the Ministry have created a “perform or perish” situation where municipal councils “cannot afford to miss this opportunity of recasting the country’s urban landscape”. The Ministry will impose fines on States that violate the timeline of 60 days of finalising the projects.
“I held three consultations with the Ministry of Civil Aviation, Defence Ministry and the Ministry of Environment,” Mr. Naidu said.
Of the 98 cities and towns that five years down will graduate into smart cities, 24 are capital cities, another 24 are business and industrial centres, 18 are culture and tourism influenced areas, five are port cities and three are education and health care hubs.

Thursday, 27 August 2015

GSAT-6 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. !!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட GSLV-D6 ராக்கெட் மூலம், GSAT-6 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 117 கிலோகிராம் எடைகொண்ட இந்த செயற்கைகோள், இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது

இஸ்ரோ விண்ணில் ஏவிய 25 ஆவது தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஆகும்.

9 ஆவது முறையாக பயன்படுத்தப்படும் GSLV ராக்கெட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரியோஜெனிக் என்ஜின் பொறுத்தப்பட்டு ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் முதல் முறையாக விரித்து மடங்கக்கூடிய ஆண்டனா பயன்படுத்தப்பட்டுள்ளது.இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.

ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 170 கிலோமீட்டரும் அதிகபட்சம் 35,975 கிலோமீட்டரும் கொண்ட தற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு, அதன்பிறகு அதிலுள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  


Tuesday, 25 August 2015

இந்திய பங்குசந்தையின் இவ்வளவு சரிவு ஏன் ? ஒரு சிறப்பு பார்வை....

உலகம் முழுவதுமே கடந்த திங்கட்கிழமையை ‘‘கருப்பு திங்கட்கிழமை’’ என்று பெயர் சூட்டியது. அந்த அளவுக்கு இந்தியா உள்பட பல நாடுகளின் பங்குசந்தை பெரும் சரிவை கண்டது. இதனால் பெருமளவில் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டது. ‘‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும்’’ என்பதுபோல, இதற்கெல்லாம் மூலகாரணம் சீனாவின் பணமான யுவானின் மதிப்பு குறைந்ததும், சீனாவின் பங்குகள் 9 சதவீதம் சரிந்ததும்தான், அது என்னவோ தெரியவில்லை. இதுவரை 10 முறை பங்குமார்க்கெட் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதில், 7 முறை திங்கட்கிழமைகளில்தான் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால்தான் திங்கட்கிழமை என்றாலே பங்குமார்க்கெட்டில் பரபரப்பான நிலை நிலவும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பங்குவிலை உயர்ந்தால், அந்த நிறுவனம் வளர்ச்சிபெற்றதாக கருதப்படும். அதுபோலத்தான், பங்குசந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் குறியீட்டு எண் ஏற்ற இறக்கத்தை பொருத்துத்தான், பங்குசந்தையின் நிலைமை கணக்கிடப்படுகிறது.

சென்செக்ஸ் என்பது இந்திய பங்குசந்தையின் பழமைவாய்ந்த குறியீடு ஆகும். பல துறைகளிலும் உள்ள 30 பெரிய நிறுவனங்களுடைய பங்குகளின் மார்க்கெட் மதிப்பை வைத்தே சென்செக்ஸ் எண் மதிப்பிடப்படுகிறது. இதுபோல, நிப்டி என்பது தேசிய பங்குசந்தையின் குறியீடு ஆகும். இந்தியாவில் உள்ள 23 துறைகளைச் சேர்ந்த 50 நிறுவன பங்குகளின் பங்குவிலை ஏற்ற, இறக்கத்தை வைத்து நிப்டி எண் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குசந்தையில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் சிறப்பாக இருந்தால், இன்று பங்குமார்க்கெட் காளையின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவார்கள். இப்போதுபோல பங்குமார்க்கெட் சரிந்தால், கரடியின் பிடியில் மார்க்கெட் சிக்கித்தவிக்கிறது என்பார்கள். இப்போது பங்குமார்க்கெட்டை கரடி அதள பாதாளத்துக்கு கீழே இழுத்துவிட்டது.

2009 ஜனவரி 9–ந்தேதியன்று உலக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிகண்ட நேரத்தில்தான் பங்கு மார்க்கெட் 6.2 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதம்வரை வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த திங்கட்கிழமையன்று 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 சதவீதம் அதாவது, சென்செக்ஸ் 1,625 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25,742 என்ற புள்ளியில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.


இந்திய பங்குசந்தையின் இவ்வளவு சரிவு ஏன் ?

பங்குசந்தைகள் இந்தளவுக்கு சரிய சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.


1. உலகின் பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆசிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது. 


2. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (ரூ.66.48-ஆக) கடுமையாக சரிந்துள்ளது.


3. நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி குறையும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடி தெரிவித்துள்ளது. 


4. நாட்டின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.3 சதவீதம் மட்டுமே உள்ளது. மதிப்பீட்டில் 23.13 பில்லியன் டாலராக இருக்கிறது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் 12.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


5. கச்சா எண்‌ணெய் உற்பத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் சரிவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவிலேயே இருக்கின்றன.


இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 


7 லட்சம் கோடி இழப்பு: பங்குசந்தையில் இன்று ஒரேநாளில் ஏற்பட்ட சரிவால் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களின் பங்குக‌ளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குசந்‌தை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சரிவு இது. 


ரகுராம் ராஜன் கருத்து: இதுப்பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்: உலகளவில் இத்தகைய சூழல் நிலவுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலராக உள்ளது, தேவைப்பட்டால் இது பயன்படுத்தப்படும். பங்குசந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும். பணவீக்கம் சரிவு போன்ற விஷயங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.


அருண் ஜெட்லி கருத்து: உலகில் எங்காவது ஒரு சில நாடுகளில் ஏற்படும் பிரச்னை மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா, இதுபோன்ற சவால்களை நிறைய எதிர்கொண்டு வருகிறது. இந்த சரிவு தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இது மாறும். குறிப்பாக பருவமழையால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பங்குசந்தைகளை உற்று நோக்கி கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார். பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் அதேநேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 66.65 ஆக நிலை கொண்டிருந்தது. நேற்றும் வீழ்ச்சி தொடர்ந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு, 45 டாலருக்கும் கீழே போய் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கும் நிலையில், பொது மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையும். இதுபோல, தங்கம் விலை உயர்ந்துகொண்டே போவதால் தங்கத்தின் தேவை குறையும். இந்த இரு பொருட்களையுமே இந்தியா இறக்குமதி செய்வதால், அன்னிய செலாவணி மிச்சமாகும். மொத்தத்தில், ஏற்றுமதிக்கு அதிக லாபம் கிடைக்கும், இறக்குமதிக்கு அதிக செலவை சந்திக்க நேரிடும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் செலவாகும். வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்துக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும். இதுபோல, ஒருசில தாக்கங்களை வைத்து திருப்தி அடைந்துவிடமுடியாது. பொருளாதாரத்தைக் காப்பாற்ற கரடியின் பிடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கியும், மத்திய அரசாங்கமும் துரித நடவடிக்கை எடுக்கத்தொடங்கிவிட்டது. இதன் பலன் அடுத்த சில நாட்களில்தான் தெரியும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

சென்னை மாநகராட்சி அசிங்காரச் சென்னைஆகிவிட்ட அவலம்!! ஒரு சிறப்பு பார்வை..

உலகின் முதல் மாநகராட்சி  இலண்டன் தோற்றுவிக்கபட்ட பின் இரண்டாவதாக துவக்கப்பட்ட மாநகராட்சியும் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்று பெருமையை கொண்ட Corporation of Madras  என்று அழைக்கப்படும் இன்றைய சென்னை மாநகராட்சி. 1688 ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னை நகராண்மைக் கழகம் என்ற பெயரிலும், இந்திய விடுதலைக்கு பின் Corporation of Madras என்ற பெயரிலும் தற்பொழுது Corporation of Chennai என்ற பெயரில் சென்னை மாநகராட்சி இயங்கி வருகின்றது. 10 சதுர மைலுக்கு தனது ஆளுமையை செலுத்த ஆரம்பிக்கபட்ட சென்னை மாநகராட்சி பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று 426 சதுர கிலோமீட்ட‌ர்களை (164 சதுர மையிலை) நிர்வகிக்கின்றது. மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக 200 வார்டுகளாகவும்(Ward) 15 மண்டலங்களாக‌வும் (Zone) பிரிக்கப்பட்டு, ஆறு நிலை குழுக்களாகவும் ஒவ்வொரு வார்டுக்கு ஒரு தனி குழு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாநகராட்சியில் கீழ் 16  துறைகள் இயங்குகின்றது  ஒவ்வொரு துறையும் தனிப்பட்ட‌ அதிகாரிகளின் கீழ் இயங்குகின்றது.
 சென்னையை பொறுத்தவரை  திடக்கழிவுகளை (குப்பைகளை) அகற்றும் பணி “மேற்பார்வை பொறியாளர்” தலைமையின் கீழ் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை என்ற துறையினரால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
சென்னை மாநகராட்சியின் அறிக்கையின்படி நாள் ஒன்றுக்கு 4500 மெட்ரிக் டன் குப்பை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படுவதாகவும். தனி நபர்கள் நாள் ஒன்றுக்கு 700 கிராம் என்ற விகிதத்திலும் கட்டிட மற்றும் திடக்கழிவு 700 மெட்ரிக் டன் என்ற விகிதத்தில் உருவாக்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் எட்டு குப்பை மாற்று நிலையங்கள், முன்று விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 4000  மெட்ரிக் டன் வரை கையாளப்படுகின்றது. 11,184 நிரந்தர ஊழியர்களும் 567 தற்காலிக ஊழியர்களும் இந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற பொழுதிலும் தற்பொழுது உள்ள கணக்கின்படி மேலும் 1520 பணியாளர்கள் தேவைப்படுவதாக மாநகராட்சி தெரிவிக்கின்றது.  நாள் ஒன்றுக்கு 4000 டன் கழிவுகள் மட்டும் தான் கையாளப்படுகின்றன என்பதின் முலம் மீதி உள்ள 500 டன் கழிவுகள் அகற்றப்படவில்லை என்பதினை மாநகராட்சியின் தகவல்களே தெரிவிக்கின்றன.
29THMETAL_767869g

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 12 மண்டலகளில் மட்டுமே மாநகராட்சி கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர் முன்று மண்டலங்களில் (9, 10 & 13) தனியார் நிறுவனமான M/s. Ramky Enviro Engineers Ltd பணிகளை மேற்கோள்கின்றன.

திடக்கழிவுகளின் உற்பத்தியாகும் இடங்கள், பொருட்கள் மற்றும் பிரிக்கப்படும் வகைகளை பற்றி சற்று விரிவாக காண்போம் : –
கழிவுகள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள்சதவிகிதம்
குடியிருப்புகள்68%
வணிக வளாகங்கள்14%
உணவகங்கள், விடுதிகள், திருமனமண்டபங்கள், பள்ளிகள் மற்றவைகள்11%
சந்தைகள்4%
மருத்துவமனைகள்3%
மொத்தம்100%

Composition of Waste: -
Composition%to total by Weight
Paper8.38%
Rags3.11%
Organic Matter51.34%
Plastics7.48%
Metals0.19%
Rubber & Leather0.19%
Inert26.01%
Glass0.29%
Coconut2.48%
Wood0.50%
Bones0.01%

Chemical Analysis of Solid Waste: -
Items%Value
Moisture content47%
Ph Value6.20% – 8.10%
Volatile matter at 55042.62%
Carbon24.72%
Nitrogen content0.88%
Phosphorous as P2O20.44%
Potassium as K2O0.89%
C/N Ratio29.25%
Calorific Value in Kj/kg2594

சென்னை நகரில் இருந்து அகற்றப்படும் அனைத்து கழிவுகளும் இரண்டு பகுதிகளில் பிரித்து கொட்டப்படுகின்றன ஒன்று வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியிலும் மற்றொன்று தென்சென்னை பகுதியில் உள்ள பெருங்குடி பகுதியில். கொடுங்கையூர் பகுதியில் உள்ள திடக்கழிவு கிடங்கு கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றது,  இதன் பரப்பளவு 200 ஏக்கர் நாள் ஒன்றுக்கு 2100 முதல் 2300 டன் வரை கையாளப்படுகின்றது. இந்த கிடங்கு இருக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் அமைந்து இருக்கின்றன. இந்த திடக்கழிவு கிடங்கின் ஆயுள் முப்பது ஆண்டு காலம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ளது.
03THDUMP_PHOTO_137962f
பெருங்குடி பகுதியில் உள்ள திடக்கழிவு கிடங்கு 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது கடந்த 25 ஆண்டு காலமாக இந்த கிடங்கு பயன்பாட்டில் உள்ளது மேலும் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 2400 டன் வரையான திடக்கழிவுகள் இங்கு கையாளப்படுகின்றது, தற்பொழுது இந்த கிடங்கில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் உருவாகி உள்ளது.

இந்த இரண்டு கிடங்குகள் மட்டும் அல்லாமல் சில சிறிய அளவில் கழிவுகளை சேகரிக்கும் இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன. இவை மட்டுமின்றி மேலும் இரண்டு திடக்கழிவு கிடங்கு அமைக்க பரிசீலனையில் உள்ளது.  ஒன்று 67 ஏக்கர் நிலப்பரப்பில் மீஞ்சூரிலும் மற்றொன்று கூத்தம்பாகத்தில் 100 ஏக்கர் நிலபரப்பிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள இரண்டு கிடங்குகளுமே இந்த ஆண்டுடன் தனது ஆயுட் காலங்களை பூர்த்தி செய்ய இருக்கின்றன. இரண்டு கிடங்குகளிலுமே கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன், கழிவுகள் சரியான முறையில் கையாளப்படாததால் அடிக்கடி தீ விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை தீவிபத்து ஏற்படும் பொழுது அதை கையாளும் வகையில் தீயணைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை எனத்தெரிகின்றது, மழை வந்து தீ அணைந்தால் தான் உண்டு, அல்லது அதுவாகவே எரிந்து நின்றால் தான் உண்டு என்ற நிலையே நீடிக்கின்றது. இந்த மாதத்தில் கூட தாம்பரம் கிடங்கில் ஏற்பட்ட தீயை மழை வந்து தான் அணைத்தது.
Kodungaiyur-dumpyard

சென்னையில் உள்ள இந்த இரண்டு பெரிய  கிடங்குகள் மட்டுமல்லாமல் சென்னையை சுற்றி பல இடங்களில் திடக்கழிவு கிடங்குகள் உள்ளன.

ஆலந்தூர்20.46 ஏக்கர்
பல்லவபுரம்20.16 ஏக்கர்
தாம்பரம்19.27 ஏக்கர்
பம்மல்6.86 ஏக்கர்
அனகாபுத்தூர்4.44 ஏக்கர்
உள்ளகரம் (புழுதிவாக்கம்)4.26 ஏக்கர்
அம்பத்தூர்42.35 ஏக்கர்
ஆவடி22 ஏக்கர்
கத்திவாக்கம்4.56 ஏக்கர்
மாதவரம்15 ஏக்கர்
திருவற்றியூர்29.65 ஏக்கர்
திருவேற்காடு4.30 ஏக்கர்
பூந்தமல்லி5.95 ஏக்கர்
மதுரவாயில்6.18 ஏக்கர்
வளசரவாக்கம்5.77 ஏக்கர்
மணலி5.30 ஏக்கர்
பயன்பாட்டில் உள்ள கிடங்குளை விரிவுபடுத்தவும் மேலும் பல கிடங்குகளை அமைக்கவும் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1) வெங்கடாபுரம் – 50 ஏக்கர்
2) நல்லூர் – 55 ஏக்கர்
3) புஞ்சை- புழுதிவாக்கம் – 25 ஏக்கர்
4) வெங்கல் – 30 ஏக்கர்
5) மணலி – 5.5 + 4.93 ஏக்கர் (விரிவாக்கம்)
6) சாந்தங்காடு – 12 ஏக்கர்7) வடபெரும்பக்கம் – 4.7 ஏக்கர்
8) பம்மல் – 2 ஏக்கர்
9) கோலடி – 10.2 ஏக்கர் (புறம்போக்கு நிலம்).

திடக்கழிவுகள் தற்பொழுது முன்று தொழில்நுட்ப முறையில் கையாளப்படுகின்றன.
1) முழுவதுமாக எரிப்பது (Combustion) பெருமளவிற்கு கையாளப்படும் முறை
2) வளிமயமாக்கல் (வாயுவாக மாற்றுவது (Gasification) 20 விழுக்காடு
3) உரமாக்கும் முறை(Composting). மிகச்சிறிய அளவிலும் நடைபெற்று வருகின்றது
திடக்கழிவு கிடங்குகளில் இருக்கும் கழிவுகளை எரிப்பதன் முலமாக அருகில் குடியிருக்கும் மக்க‌ளுக்கு தொண்டை,முக்கு எரிச்சல்,  இதயம், சுவாசக் கோளாறுகள், நுரையிரல் தொடர்பான நோய்களும் ஆஸ்துமா, ஒவ்வாமை (அலர்ஜி), வீக்கம், கிருமி நோய் தொற்றுகள், இரத்த சோகை, இரத்தம் தொடர்பான‌ நோய்களும், பொதுவாகவே நோய் எதிர்ப்பு சத்தி குறைபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இவைகள் மட்டுமின்றி நச்சுப்பூச்சிகள் உற்பத்தி ஆகும் இடமாகவும் மழைகாலங்களில் டெங்கு, காலரா போன்ற தோற்று நோய்களின் பிறப்பிடமாகவும் இந்த கிடங்குகள் மாறிவிடுகின்றன.
திடக்கழிவு கிடங்குகளின் நிலம், நீர், காற்று என அணைத்து சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பிறப்பிடமாக மாற்றப்பட்டு உள்ளது. சில நேரங்களில் மீத்தேன் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் வாயு பரவலும் இந்த கிடங்குகளில் நடக்கின்றன. கார்பன்-டை-ஆக்ஸ்சைடை விட 21 மடங்கு மோசமான விளைவுகள் ஏற்படுத்த கூடியது மீத்தேன் வாயு (UN ESCAP (2007)) . திடக்கழிவுகள் உலகம் முழுவதும் 7.5 முதல் 10 கோடி டன் வரையிலான கர்பன்டை ஆக்ஸ்சைட் வாயுவை உற்பத்தி செய்வதாக IPPCC Intergovernmental Panel of Climate Change என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் திடக்கழிவுகளை கையாள தேசிய அளவில் எந்த ஒரு கொள்கையோ, அறிவியல், தொழில்நுட்ப முறையோ சமந்தபட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதனை அண்மையில்தெற்காசிய அளவில் நடந்த ஒரு சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திடக்கழிவுகளை அழிப்பதற்கு incineration எனப்படும் எரியூட்டல் போன்றவைகளை தடை செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் நோய்கள், சுற்றுசூழல் மாசுகள், நீர்நிலைக் கேடுகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வையும், போராட்டங்களையும் மாணவர்கள், மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 25 கிமீ சுற்றளவில் எந்தவொரு திடக்கழிவு இடும் கிடங்குகள் அமைக்கப்படக் கூடாது என்ற நடைமுறையை கொண்டு வரவேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையில் சாலையோரங்களில் சேர்கின்ற தூசுகள், மண்கள், மணல்களை சிறப்பு எந்திரம் வைத்து உறிஞ்சி எடுத்து, அவற்றை தரம் பிரித்து கடுமானப் பணிகள் போன்றவைக்குத் தேவையான உட்பொருளாக பயன்படுத்தும் நடைமுறை வெளிநாடுகளில் உள்ளன. இதனையும் மாநகராட்சி செய்யலாம். இவ்வாறு கழிவுகளையும் கசடுகளையும் தரம்பிரித்து பயன்படுத்துவதால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய்கள் வருவாயே கிடைக்கும்.

மாநகர திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பின் வரும் அமைச்சகம், துறைகள் தான் பொறுப்புகள் வகிக்கின்றன  :-
1) சுற்றுசூழல் மற்றும் வனத்துறை ( Ministry of Environment and Forests (MoEF)).
2) ஊரக வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Urban Development (MoUD).
3) மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் (Central and State Pollution Control Boards).
4) ஊரக வளர்ச்சி துறை (Department of Urban Development)
5) முறைப்படுத்தப்பட்ட & முறைப்படுத்தபடாத தனியார் அமைப்புகள் (Private Formal and Informal Sector).
6) ஊரக உள்ளாட்சி துறைகள் (Urban Local Bodies).
7) வேளாண்மை துறை (State Level Nodal Agency).
இத்தனை துறைகளும், அமைச்சகங்களுக்கு கீழ் இந்த பணி வந்தாலும் இன்னும் சென்னை திடக்கழிவு மேலாண்மை முன்னேறாமல் , பின்னோக்கி சென்று கொண்டே இருக்கின்றது
Garbage
சந்திரன் முதல் செவ்வாய் வரை ராக்கெட் விட்டதாகவும், உலக தரம் வாய்ந்த அணு உலைகளை வைத்து உள்ளதாக பெருமை கொண்டு வல்லரசு கனவு காணும் நமது நாட்டில் தான் இன்றும் மனிதர்களை வைத்தே மனித கழிவுகளை அகற்றும் பணியை எவ்வித பாதுகாப்பான உபகரணங்கள் இன்றி சென்னை மாநகராட்சி 4,5,6,8,10 &13 மண்டலங்களில் 69 பணியாளர்களை நாள் ஒன்றுக்கு 297 ரூபாய் கூலி வேலைக்கு வைத்து உள்ளது.  இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கி இறப்பது அன்றாட செய்தியாகி விட்டது.  திடக்கழிவுகளை சரியான முறையில் கையாளாமல் சென்னையில் உள்ள‌ ஆறுகளான கூவம், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் திடக்கழிவுகள் கொட்டபடுகின்றன. மேலும் சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் NH 45 மதுரவாயல் முதல் – செம்பரம்பாக்கம் ஏரி வரை சாலையின் இரு பக்கங்களிலும் பல இடங்களில் திடக்கழிவுகள் இருப்பதை பார்க்க முடிகின்றது. ஆறுகள் சுற்றுசூழல் சீர்கேட்டின் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சென்னையைச்  சுற்றி இருந்த நீர்நிலைகளான‌ ஏரிகள், குளங்களில் திடக்கழிவுகளை கொட்டி மேலும் கழிவு நீர்களை கலக்கச் செய்து நீர் நிலைகளைப் பாழடைந்த நிலைக்கு தள்ளியும்,  பல நீர்நிலைகள் அழிக்கப்பட்டும் உள்ளது.
      வளரும் நாடுகளில் 20-50% நிதியினை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம்(Swachh Bharat Abhiyan) என்ற இயக்கத்தினை 2014 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூய்மைப்படுத்துவதற்காக துவக்கியது, ஐந்து ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயத்துள்ளது. ஆனால் மோடியும், அவரது அமைச்சர்களும் விளம்பரங்களுக்காக மட்டும் துடைப்பத்தோடு வந்து நின்றதோடு சரி, இன்று வரை இந்த திட்டத்தின் கீழ் விளம்பரங்களுக்காக மட்டும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதேயொழிய உருப்படியாக எந்த ஒரு வேலையையும் மத்திய அரசு செய்யவில்லை.
     
கடந்த காலங்களில் சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்று பல திட்டங்களை பல கோடி செலவுகள் செய்தது மாநில அரசு, அதன் மூலம் குடிசைப் பகுதிகள் அடிக்கடி எரிந்து(எரிக்கப்பட்டு) அப்பகுதி மக்கள் செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டதும் தான் மிச்சம், ஆனால் சென்னை கழிவுகள் நிறைந்த நகரமாக தான் காணப்படுகின்றது, அதே போல‌Vision 2023 திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு என்ற பகுதியில் பக்கம் 15 –இல் கூறி இருப்பது (open defecation free and garbage free environment)என்று  மேலும் இந்த திட்டத்திற்காக இரண்டு லட்சம் கோடி முதலீடு (பக்கம் 27) செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது . பல இலட்சகோடிகளில் பணிகள் மேற்கொள்வதை போல் தெரிந்தாலும் உண்மையில் சில கோடிகள் கூட சரியான செயலுக்கு செலவிடப்படாமல் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளதுடன், இதில் பல ஊழல்களும் நடந்துள்ளன. தூய்மையான இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில், 61- வது இடத்தில் சென்னை இருக்கின்றது. நமது அண்டை மாநிலத்தின் தலைநகரங்கள் எல்லாம் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்ற போது சென்னை 61-வது இடத்தில் இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
 நன்றி  : இராசன் காந்தி,இளந்தமிழகம் இயக்கம்.
மேலும் படிக்க…
http://ebtc.eu/pdf/111031_SNA_Snapshot_Waste-management-in-India.pdf