Friday, 29 July 2016

இஸ்லாமிய கணவன்மார்களுக்கு சிறந்த 100 அறிவுரைகள்!!

கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள் பார்க்க மறவாதிர்கள்இதை ஆழ்ந்து முழுமையாகப் படிக்க குறைந்தது பத்து நிமிடம் ஆகலாம்.நம் வாழ்க்கை சீர்திருத்தத்துக்காக முழுமையாக படித்துணருங்கள்.


01) மனைவியை சந்திக்கும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.
02) வீட்டினுள் நுழையும்போது சலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். சலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.
03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.
04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.
05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.
06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.
08) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்னைகளை மறக்கடியுங்கள்.
10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.
11) பிள்ளைகளைப் பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.
12) இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.
14) குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.
15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)
16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.
17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..
18) திருமணம் முடித்தபின் தன் மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தன் கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.
19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.
20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.
21) அழகாக காட்சியளியுங்கள். சுத்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.
23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.
24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன. நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்).
25) தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடந்து கொள்ளாதீர். நபியவர்கள் கூறினார்கள் “நான் என் மனைவியருக்கு மிகச் சிறந்தவன்”.
26) அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவள் முன்னிலையில் செய்ய வேண்டாம்.
27) அவளுக்கு அறிவுரை வழங்கும்போது தனிமையில் அறிவுரை வழங்குங்ககள். பிறர் முன்னிலையில் அவளது குறைகளை எடுத்துக்கூறாதீர்கள். அனைவரிடமும் குறைகள் உண்டு. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
28) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.
29) அதிர்ச்சியூட்டக்கூடிய சந்தோஷங்களை கொடுங்கள். அவளுக்கு மிக விருப்பமான ஒன்றை செய்யலாம்.
30) உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் அவளிடம் ஆலோசனை கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
31) எப்போதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியில், கடைத்தெருவில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் அதே போன்று அவளுக்கும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.
32) அவ்வப்போது அவளுக்கு உணவுகளை ஊட்டியும் விடுங்கள்.
33) உங்களுக்கு இருக்கும் அந்தஸ்தில் அவளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குதிரையில் அவளையும் உட்கார வைக்கலாம். அது அவளது உள்ளத்தை குளிரவைக்கும்.
34) உங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவு வேண்டாம். அதன் விளைவு கொடியது.
35) எல்லா நல்ல விஷயங்களிலும் அவளைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டைச் செயலிலும் காட்டுங்கள்.
36) அவளது குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்திருங்கள். அவர்களை மதித்துப் பழகுங்கள்.
37) அவளது குடும்பத்தார் முன்னிலையில் அவளைப் பாராட்டிப் பேசுங்கள்.
38) அவள் தனக்கு கிடைத்த அருட்கொடை என்பதாக அவளுக்கு உறுதிப்படுத்துங்கள்.
39) இருவரும் அவ்வப்போது பரிசுகளை, அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம். பரிசுகள் அன்பை வளர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
40) முக்கியமாக இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். புரிந்துணர்வு தவறும் போதே பிரச்சினை உருவாகிறது.
41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.
42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.
43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவற்றின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.
44) வீட்டை விட்டு வெளியே போகும்போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும்போது என்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.
46) இருவரும் ஒருவருக்கொருவர் இறைவனுக்கு இணங்கிவாழும் (இபாதத்) விஷயத்தில் உதவி ஒத்தாசையாய் இருங்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக).
47) முடிந்த வரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்.
49) வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்கள், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதற்காக நம் மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.
50) நம் உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியாவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
51) அடிக்கடி (தலைவலி தராத) நல்ல வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள். நல்ல வாசனையை பெண் விரும்புவாள்
52) காலையில், மாலையில், இரவு வேளைகளில் பற்களை துலக்கவும். குறைந்த பட்சம் இருமுறையாவது துலக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மனைவியன் பக்கத்தில் சென்று பேசும் போது வாய் துர்நாற்றம் வீசாது.
53) தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சகல விதத்திலும் சுத்தமாக இருங்கள். முக்கியமாக நாற்பது நாட்களுக்கு ஒருமுறையேனும் மர்ம உறுப்பு, அக்குள் ஆகியவற்றிலுள்ள முடிகளை அகற்றி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
54) நீங்கள் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். ((மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள் : நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளையும் அணியச்செய்வதும், அவளது முகத்தில் அறையாமல் இருப்பதும், அவளை இழிவு படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர அவளை வெளியிடங்களில் எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்காமல் இருப்பதும் கணவனின் கடமை என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.)
55) அறியாமைக்கால நடைமுறை போன்று அவளை மாதவிடாய் காலங்களில் அன்றாட கூட்டுப்பணிகளில் ஒதுக்கி விட வேண்டாம்.
56) மனைவி ஆசையோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு தன்னை நெருங்கும் போது நீங்கள் எப்படிப்பட்ட களைப்பில் அசதியில் இருப்பினும், உங்களின் பிரச்சினையை அறியாத அந்த அழகிய மனைவியின் ஆசைக்கு கொஞ்ச நேரம் ஈடு கொடுங்கள்.
57) தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி கண்ட பிறகு தான் ஓய்வெடுக்க வேண்டும். அவளின் ஆசையை நிறைவு செய்யும் போது ஏற்படும் சுகம் கணவனுக்கு அதிகமாக இருக்கும். எனவே, முதலில் அவளின் தேவையை பூர்தி செய்ய வேண்டும்
58) “பிஸ்மில்லாஹ்” சொல்லி எல்லா விஷயங்களையும் ஆரம்பியுங்கள். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதுகூட ‘பிஸ்மில்லாஹ்”வுடன் சேர்த்து அதற்கான துஆவையும் ஓதிக்கொள்ளலாம். அதனால் பிறக்கும் குழந்தை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்படுகிறது.
59) உங்கள் மனைவியின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மற்றும் அவளுடைய குடும்பத்தாரைப்பற்றி குறைவாகவும் ஏளனமாகவும் பேசாதீர்கள். அவ்வாறு தவறு ஏதாவதை சுட்டிக்காட்ட வேண்டுமாயின் அதனை பக்குவமாக எடுத்து அன்பாக விளக்கிக்கொடுங்கள்.
60) உங்கள் குடும்பத்தாரிடம் அவளைப் பற்றி பெருமையாக பேசுங்கள்.அதனால் உங்களது குடும்பத்தினர் அவளை மதிப்பார்கள். அவளைப் பற்றி அவர்களிடம் ஏளனமாக பேசும்போது அவர்கள் அவளை மதிக்கத் தவறுவார்கள்.
61) வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். மாதம் ஒரு முறை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இஸ்லாம் அனுமதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.
62) வாரம் ஒரு முறை தனியாக வெளியில் சென்று அவளோடு மனம் விட்டுப் பேசுங்கள்.
63) மனைவிக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் ஏனைய பொருட்களை அவளுடன்
சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
64) வெளியில் சென்று இரவில் நேரம் தாமதம் ஆகாமல் வீட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். பொதுவாக மனைவி தன் கணவன் வீட்டுக்கு வரும்வரை சாப்பிடாமல் காத்துக்கொண்டிருப்பாள். இதுவே கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.
65) தனக்கு பிடித்ததுதான் அவளுக்கும் பிடிக்கும் என்று எண்ணாதீர்கள். அவளுக்கும் ஆசைகள் பல இருக்கும். அதனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இருவருக்கும் பிடித்திருப்பது ஒன்றென்றால் அது நீஙகள் செய்த பாக்கியம்.
66) திருமணத்தின் பின்னுள்ள வாழ்க்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவது வழக்கம். அதில் நீங்கள்தான் வெல்ல வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இருவருமே வாழ்க்கையில் தோற்று விடுவீர்கள். அதனால் அவளது கருத்து பிழை என்ற போதிலும் மௌனமாக இருந்து பின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அந்த விஷயத்தைப்பற்றி மறைமுகமாக உங்களின் கருத்தை தெரிவியுங்கள். ஏனென்றால் பெண்கள் பொதுவாக அனைத்திலும் தான் செய்வதுதான் சரி என்று எண்ணும் இயல்பு. உடையவர்கள். அதனை நேரடியாக சொன்னால் சில சமயங்களில் கோபம் அதிகமாகும். அதன் விளைவு விவாகரத்துவரைகூட செல்லலாம்.
67) வெளியில் நீங்கள் எவ்வாறான பிரச்சினைகளை சந்தித்தாலும் வீடு திரும்பும் போது அழகிய புன்னகையோடு சலாம் சொல்லி விட்டிற்குள் நுழையுங்கள். கைகளை பற்றிப்பிடியுங்கள்.
68) திருமணம் முடித்த பின் மனைவியின் விஷயத்தில் மட்டுமல்லாது அவளது குடும்ப விஷயங்களிலும் பொறுப்பாக செயல்படுவது சிறந்தது.
69) உங்களால் முடிந்தால் வீடு திரும்பும்போது மனைவிக்கென்று ஏதாவது அவள் விரும்பிய உணவை அல்லது பானத்தை வாங்கிச்செல்லுங்கள்.
70) வாரத்திற்கு ஒருமுறையேனும் வெளியில் சென்று சாப்பிடுங்கள்.
71) அவளுடைய ஆசைகளை மறுக்காமல் கேளுங்கள். அதில் தவறு இருப்பின் உடனே கூறாமல் சற்று தாமதமாக்கி எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அதை சுட்டிக்காட்டுங்கள்.
72) மனைவியோடு பேசுவதற்காக நேரம் ஒதுக்குங்கள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு டீவியை பார்த்து பிறகு தூங்குவது கூடவே கூடாது. மனைவியிடம் அன்பாக பேச வேண்டும். அவ்வப்போது உடல் நலம் போன்றவற்றை விசாரிக்கவும்.
73) மனைவி தலைவலி, இடுப்புவலி, கால் வலி போன்ற நோய்களோடு இருக்கும் போது தனது ஆசையை பூர்த்தி செய்தாகவே வேண்டும் என்று எண்ணலாகாது. மாறாக அவளின் நோய்க்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஊதாரணமாக, தலைவலி என்றால் தலையை சற்று பிடித்து விடலாம்.
74) மனைவியோடு சில சில மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடலாம். “நபி (ஸல்) தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோடு விளையாடுவார்கள். இரு முறை ஓட்டப் பந்தயமும் நடந்தது”
75) தனது வருமானத்தைப் பற்றியும், அதிலிருந்து தான் செலவளிப்பதன் விவரம் பற்றியும் மனைவியிடம் பகிர்ந்துகொள்வது சிறந்தது. உங்கள் மனைவி ஸாலிஹாண (நல்ல) ஒருவராக இருந்தால் அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுவாள்.
76) நீங்கள் வெளிநாட்டிலும், மனைவி தாய் நாட்டிலும் இருந்தால் அவளோடு பேசுவதற்காக கணினியை பயன்படுத்துவது வழக்கம். அப்போது பேஸ்புக், டுவிட்டர், யாகு சட், போன்ற சமுக வலையமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் போக வேண்டாம் என்று அன்பாகக் கட்டளையிடுங்கள்.
77) மனைவியிடம் நம் நண்பர்களான பிற ஆண்களைப் பற்றி புகழ்ந்து, வர்ணித்து பேசாமல் இருப்பது மிக முக்கியமாகும். அதன் விளைவாக அன்பு அந்தப் பக்கம் திரும்பலாம். இதன் விளைவு கணவனுக்கே எதிராகலாம். இது குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.
78) அவளுடைய குறைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம். முக்கியமாக உடலுறவுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும் கூறாதீர்கள். உடலுறவில் அவளுக்கு இருக்கும் குறைபாடுகளை நண்பர்களிடம் ஏன் பெற்றோர்களிடமும் கூறவேண்டாம். அது அவளுக்கு செய்யும் மிகவும் கேவலமான துரோகமாகும்.அதற்கான ஆலோசனைகளை இருவருமாக சேர்ந்து மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளலாமே.
79) நீங்கள் கேட்கும் பயான்கள், ஹதீஸ்கள், நபித்தோழர்களின் வரலாறுகள், நல்ல விஷயங்கள் போன்ற அறிவுரைகளை அவளுக்கும் கூறுங்கள். முழுக்க முழுக்க மார்க்க அறிவுரைகளை ஆவலுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
80) முறையாக மனைவியை மற்றவர்களிடத்திலிருந்து மறைத்துக் கொள்ளுங்கள்.
81) இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட அழகிய ஆடைகளை அணியவையுங்கள், வாங்கி கொடுங்கள்.
82) திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட மஹ்ரமான ஆண்களோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் அனுமதிக்கலாகாது. இதில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
83) பெரிய தவறுகளுக்காக மட்டும் விசாரணை நடத்துங்கள். சிறு சிறு தவறுகளை இனிமேலும் செய்ய வேண்டாம் என்று பாசத்தோடு சொல்லுங்கள்.
84) பெண்கள் அதிகமாக நோய்வாய்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அடிக்கடி பலவீனம்ஏற்படும்போது ‘உனக்கு ஒரே நோய்தான், நோயாலயா ஒன்ன பெத்தாங்க” என்று எரிச்சலடையக்கூடாது. பாசத்தோடு அவளுக்கு தேவையான மருந்தை கொடுக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
85) ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அதற்கு பகராக இதுதான் சரி என்பதை அவள் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
86) உணவில் உப்பு அதிகம் என்றாலோ ருசி இல்லை என்றாலோ மனைவியை திட்டாதீர்கள். அதனை நீங்கள் உண்டு முடியுங்கள். உறங்கப்போகும்போது அவளிடம் அந்த உணவின் நிலை பற்றி கூறி மறந்து விடுங்கள். பின் அவள் அதனைப்பற்றி கேட்கும் போது ‘இருந்த போதிலும் என் மனைவி சமைத்தது நன்றாகத்தான் இருந்தது” என்ன்ற வார்த்தை அவளை ஆறுதல் படுத்தலாம். அடுத்த முறை மிகவும் ருசியாக சமைக்க முயற்சி செய்வாள்.
87) அவளுடைய ஆசைகளை அல்லது உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.
88) இரகசியமான முறையில் அவளின் பிரச்சினையை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
89) திருமணமான பின்பு மனைவியிடத்தில் தான் எதிர்பார்ப்பது இல்லையெனில் அதற்காக வருந்த வேண்டாம். அதனை அவளிடம் நல்லமுறையில் வேண்டுகோள் விடுங்கள். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வாள். அப்போதும் அவளால் முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமையோடு இருங்கள்.
90) தான் ஏதாவது தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொண்டு அவளிடம் வருத்தம் தெரிவியுங்கள். நிச்சயமாக அவளுடைய அன்பு அதிகரிக்கும்.
91) முந்திய காலங்களில் செய்த தவறுகளை அவளிடம் சுட்டிக்காட்ட வேண்டாம்.
92) மனைவி கோபமடையும் வேளை கணவன் அமைதியை கையாள வேண்டும் தானாகவே அவள் அமைதியாவாள்.
93) மனைவி கணவனைவிட அதிகமாகப் படித்திருக்கலாம், குறைவாகவும் படித்திருக்கலாம் .அவளுக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி நம்மிடம் கேட்கும் போது “உனக்கு இது கூட தெரியாதா?” என்றெல்லாம் அவளை இழிவு படுத்தாமல் முறையாக அவளை நெருங்கி அன்பாக விளக்கலாமே. அதனால் அவள் நம் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்கும்.
94) திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் மனைவிக்கும் கணவனின் தாய், சகோதரி ஆகியோர் இடையே பிரச்சினை வருவது சகஜம். அச்சந்தர்ப்பத்தில் கணவன் தன் தாய், சகோதரிகளின் பக்கம் மாத்திரம் சாய்ந்து பேசுவது முறையல்ல. நம்மை நம்பி வந்தவளே நம்மனைவி. அதனால் இரு தரப்பினருக்கும் நடுவராக நின்று பிரச்சினையை தீர்த்து வைப்பது அவசியமாகும். எத்தரப்பில் தவறு இருக்கிறதோ அதை அவர்களுக்கு உணர்த்தி இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்கி வைப்பது கணவன் மீது கட்டாய கடமையாகும். அதற்கான ஆற்றலை கணவன் பெற்றிருப்பது அவசியமாகும்.
95) விருந்துகளுக்கு அழைப்பு வந்தால் மனைவியையும் அழைத்துச் செல்லலாம். முக்கியமாக உங்களது குடும்ப விருந்துகளுக்கு கட்டாயமாக அவளையும் சேர்த்து அழைத்துச் செல்லலாமே. உங்களது குடும்பம் அவளை மதிக்க அது காரணமாக அமையும்.
96) வசதி படைத்தவர்கள் திருமணம் முடித்த பின் தம் குடும்பத்துடனோ, மனைவியின் குடும்பத்துடனோ ஒன்றாக வாழாமல் தனியாக ஒரு வீட்டை அமைத்துக்கொள்வது பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சிறந்தது. “விட்டு, விட்டு சந்தியுங்கள் அன்பை வளர்த்துக்கொள்ளலாம்” எனும் முதுமொழிக்கேற்ப ஒரு தனி வீட்டில் இருந்து அவர்களை விட்டு, விட்டு சந்தித்து நிரந்தரமாக பாசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியுமல்லவா!
97) பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பன்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன்முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். எனவே இவ்வாறான நற்குணங்களை மனைவியிடமிருந்து பிறக்கச் செய்வது கணவனின் கடமையல்லவா!
98) மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது “விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்” என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
99) அல்லாஹ் ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.”யா அல்லாஹ்! எனது மனைவி, குழந்தை ஆகியோரில் எனக்கு கண்குளிர்ச்சியை தருவாயாக”, எனவே இந்த துஆவை நித்தமும் கேட்க நாம் தவறிவிடக் கூடாது.மனைவியை பார்க்கும் போது நமக்கு மனசந்தோஷம் கிடைக்க வேண்டும். மனைவியின் அழகு என்பது நிறத்தில் ஏற்பட்டது அல்ல.அவளை பார்க்கும் போது தனிப்பெரும் இன்பம் கிடைக்குமானால் அதுவே நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகு.
100) இறுதியாக மிக முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன், திருமண பந்தத்தில் இணையும் பெண்கள் இறுதிவரை குறிப்பிட்ட கணவனுடனேயே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு கணவன் தான் நேசிக்க வேண்டிய ஒரேயொரு பெண் தனது மனைவியாவாள். மாறாக அவன் கள்ளக் காதலிகளுடன் தொடர்ப்பு வைத்திருப்பது தனது மனைவிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
எப்போது அவன் கள்ளக்காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வானோ அப்போதே வாழ்வில் அவனது நிம்மதியை இழந்து விடுகிறான்.தன்னை நம்பி வரக்கூடிய பெண்ணுடன் இறுதிவரை வாழ்பவனே உண்மையான மனிதன். பொதுவாக பெண்கள் இலகுவில் ஒருவரை விரும்ப மாட்டார்கள், விரும்பினால் இறுதிவரை அவருடனேயே வாழவேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.ஆண்கள் அவ்வாறல்ல விவாகம் செய்த ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இன்னொருத்தியை விவாகம் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். விவாகரத்து செய்வது ஆகுமான ஒரு காரியம் தான். ஆனாலும் விவாகரத்து செய்யப்படக்கூடிய பெண்களது வாழ்க்கையின் நிலை என்ன ? அவர்களது பெற்றோர், சகோதரர்களது படும் பாடு ஆகியவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.இந்நிலை உங்கள் சகோதரி அல்லது மகளுக்கு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன என்பதை காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு ஆண்களும் சிந்திக்க வேண்டும்.


*ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே*
. *ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.*
*கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது.*
*அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசனைகளை இங்கே தருகிறோம்*.
*அல்லாஹ் உங்களின் வாழ்க்கையை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக.

ஆக்கம் மற்றும் தொகுப்பு :அ.தையுபா அஜ்மல்.

Wednesday, 27 July 2016

RADNUS DOWNLOADING SOFTWARE !!

எந்த ஒரு பாடலாக இருந்தாலும் சில வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் !!
இன்டர்நெட் இன்றி சினிமா துறையில் பேசும் படங்கள் வந்த நாள் முதல் தற்போது உள்ள படங்கள் வரை எந்த படத்தின் பாடலாக இருந்தாலும்  இன்டர்நெட் உதவி இன்றியும்,CD & DVD யின் உதவி இன்றியும் எஒரே நொடியில் இன்டர்நெட் இன்றி DOWNLOAD செய்ய முடியும் ...!

மேலும்  RDS SONGS Downloading software நம்மால் பாடல்களை பதிவிறக்கம் செய்து Memory card ,CD & DVD ,Cellphone,Pendrive இவைகளில் பாடல்களை ஏற்றி கொடுக்கலாம்
இந்த சாப்ட்வேர் ஐ உபயோகிக்கும் முறை அனைத்தும் Single Windows ல் செய்து முடித்து விடலாம்
இந்த சாப்ட்வேர் இல் நாம் பாடல்களை டவுன்லோடு செய்ய இந்த முறைகளை பயன்படுத்தி டவுன்லோடு செய்யலாம்
1.படத்தின் பெயா்
2.பாடலின் முதல் வாா்தை
3.நடிகாின் பெயரை வைத்து
4.பாடலை எழுதியவர் பெயரை வைத்து 
5.இசையமைப்பாளர் பெயரை வைத்து 
6.பாடல்களை பாடியவா்களின் பெயரை வைத்து
7.படம் வந்த வருடத்தை வைத்து
இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பாடல்களை உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்
இது மட்டும் இல்லாமல்
1.தனி தனி நடிகா்களின் ஹிட்ஸ்
2.தனி தனி இசையமைப்பாளர் ஹிட்ஸ்
3.மெலோடி பாடல்கள்
4.சோக பாடல்கள்
5.குத்து பாடல்கள்
6.மோட்டிவேஸன் பாடல்கள்
7.பஸ் ஸ்பெஷல்
8.காா் ஸ்பெஷல்
9.பக்தி பாடல்கள்
10.பாடகா்கள ஹிட்ஸ் இப்படி பல வெரைட்டி பாடல்களை மொத்தமாகவும் பதிவிரக்கம் செய்யலாம்
மேலும் விபரங்களுக்கு 
உங்களை தொடா்பு கொள்ள
Vks.எழில், பாண்டிச்சேரி
போன் :8122273311

Saturday, 23 July 2016

முளையிலேயே கிள்ளவேண்டிய குழந்தைகளின்பிடிவாதம் !!


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!
தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’
- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.
‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
உஷார் மம்மீஸ் உஷார்!
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..
குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.
நன்றி - விகடன் பொக்கிஷம் மம்மீஸ் கிளப்.

Thursday, 21 July 2016

சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த பியுஷ் மனுஷ் !! ஒரு விழிப்புனர்வு பார்வை..

இயற்கை ஆர்வலரான பியுஷ் மனுஷ்சேலத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா காலத்தில் ராஜஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர். பியூஷ் மனுஷின் இயற் பெயர் பியூஷ் சேத்தியா. வட நாட்டு சாதியின் பெயரை குறிப்பதால், சேத்தியா என்பதை எடுத்துவிட்டு, மனுஷ் என்று தன் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டார்.அவர் திடீரென முளைத்த சமூகப் போராளி கிடையாது. கல்லூரியில் படிக்கும்போதே கல்லூரி படிப்பின் தரம் மற்றும் கட்டணத்தை எதிர்த்து, கல்லூரி வளாகத்திலுள்ள மகளிர் கழிவறையின் முன்னமர்ந்து போராட்டம் செய்தவர். அதன்பின் நடைபெற்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். போராட்ட குணத்தை இயல்பிலேயே பெற்றிருப்பவர். 

இவர் விவசாயம், நீர் நிலைகள், இயற்கை காய்கறி, பழங்கள், இயற்கை
எரிபொருள் என சுற்றுப்புறச் சூழல் மீது அதிக அன்பும், கவனமும், அக்கறையும் கொண்டுள்ளவர். திடீரென கைதாகி சிறையில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு, பின் பலரின் தூண்டுதலின் காரணத்தால் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியாகியுள்ளார்  • சேலம் சிட்டிசன் ஃபாரம் என்ற அமைப்பை தொடங்கி. சில இயற்கை மற்றும் சுற்றுசூழல் மீது ஆர்வம் கொண்ட நபர்கள் இணைத்துக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு முதல் நிறைய நல்ல காரியங்கள் செய்து வருகிறார் 

  • தர்மபுரியில் உள்ள கஞ்சமலை எனும் இடத்தில நடந்துவந்த சட்டவிரோதமான தொழில்களை எதிர்த்து, பலர் இணைந்து நடத்தும் கூட்டுறவு காடு திட்டத்தை துவங்கி, ஏறத்தாழ 1,30,000 மரக்கன்றுகளை பல ஏக்கர் நிலப்பரப்பில் நட்டு ஓர் காட்டியே உருவாக்க கருவாக இருந்துள்ளார் 

  • இயற்கை மீது கொண்ட காதல் மற்றும், மனித நேயம் கொண்ட நெஞ்சத்தின் காரணத்தால் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் பியுஷின் உழைப்பால் உருவாகின. மேலும், மூங்கில், தேனீ, காளான் வளர்ப்பிலும் தொழில்களை உருவாக்கி இளைய சமுதாயத்திற்கு ஓர் முன்னோடியாக திகழ்கிறார் .

  • கன்னங்குறுச்சி எனும் இடத்தில் அமைந்தயுள்ள மூக்கனேரியை அரசின் எந்த உதவியின் இல்லாமல், மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட 50 லட்ச ரூபாய் கொண்டு மீட்டெடுத்து, ஓர் நீராதாரமாய் மாற்றியுள்ளார்.

  • கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஏறத்தாழ 35 கண்டைனர் மூலமாக நிவாரண பொருட்களை சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கு சேலம் மக்கள் பெரும் உதவி செய்துள்ளனர்.

  • கவுத்தி மற்றும் கல்வராயன் என்ற இரண்டு மலைகளின் அடியில் இரும்பு கிடைக்கும் என மலைகளை வெடித்து இரும்பு எடுக்க முயன்ற நிறுவனத்தை விரட்டி, CNN-IBN-ன் 2015-க்கான சிறந்த இந்தியன் எனும் விருதை வென்றுள்ளார்.

  • சேலத்தில் மட்டுமே மூக்கனேறி, அம்மாபேட்டை, குடுகள், இஸ்மாயில்கான் எனும் நான்கு ஏரிகள் மற்றும் அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி எனும் இரண்டு குளங்களை சுத்தம் செய்து மீட்டெடுத்து நல்ல நீர் ஆதராமாக மாற்றியுள்ளார் 

இந்திய அரசியல் சட்டம் வழங்கும் பேச்சுரிமைக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் மக்களிடம் பிரசாரம் செய்த பியுஷ் சேத்தியா மீது தேசத்துரோக வழக்கு தொடர்வது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இவ்வளவுக்கும் ஜனவரி 26ஆம் தேதிதான் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அன்றுதான் பியுஷ் கைது செய்யப்பட்டார் என்பதை நாம் பொருத்திப் பார்க்க தவறக்கூடாது.

இது பியுஷ் சேத்தியா என்ற தனிமனிதர் மீது ஏவப்படும் ஆயுதம் அல்ல. இந்திய மக்களுக்காகவும், இயற்கை மற்றும் சூழலை பாதுகாக்கவும் போராடும் அனைவருக்கும் அரசு விடுக்கும் அச்சுறுத்தல்.

இதை உணர்ந்து, இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது சூழல் குறித்த ஆர்வம் கொண்ட அனைவரது கடமை.

ஒரு தனி மனிதனால் இப்படி செய்ய முடியும் என்றால் தமிழக அரசு ஏன் செய்ய முடியாது.கடந்த 50 வருடங்களாக சென்னை கூவம் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதிகள் யாருடைய பெயரில் சென்று சேர்ந்தது. தமிழக மக்களே தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி குறைந்தது 100 கோடி ரூபாய் என்னவானது என்று அறிந்து கொள்ள முற்படுங்கள்!!


இவரை  (பியுஷ் மனுஷ்டன் ) தொடர்பு கொள்ள: 9443248582

இவரை பற்றி மேலும் அறிய..


https://www.youtube.com/watch?v=MmC3vUrcwrU

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Sunday, 17 July 2016

கல்வி முறை மற்றும்சமூக மாற்றம் பற்றிய அப்பா திரைப்படம் !! ஒரு சிறப்பு ஆய்வு..

நான் என் குழந்தை மற்றும் கணவருடன் சேர்ந்து அவரின் இந்த அரையாண்டு விடுமுறையில் பார்த்த ஒரு நல்ல படம் என்றே கூறலாம். கல்வி முறை குறித்து அறிவு தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிற சூழலில் சமான்ய மக்களிடம் அழுத்தமான பரப்புரையை அப்பா படக்குழு செய்திருக்கிறது. இயக்குனர் சமுத்திரக்கனி பாராட்டுதலுக்குரியவர். சமூக கொடுமைகளை எதிர்ப்பதற்காக, எங்கிருந்தோ அன்னா அசாரே போன்ற தலைவர்களும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இளைஞர் பட்டாளம் புரட்சி செய்வது போன்ற அபத்தமான கற்பனை இத்திரைப்படத்தில் இல்லை. அடித்தட்டு மக்களின் முகத்துடன், குணத்துடன், கோபத்துடன் நடுத்தர வயது கதாநாயகன் வருகிறார்.

சமூக மாற்றம் என்பது கல்வி முறை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதை இத்திரைப்படம் அழகாக சொல்லியிருக்கிறது. சாதி, பிற்போக்குத்தனம், மக்களின் அறியாமை இவை மூன்றும் எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆக,சமூக மாற்றம் குறித்து எந்த வித உணர்வும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இன்றைய கல்வி முறை மிகத் தெளிவாக இருக்கிறது. பெரியாரையும் படி, மார்க்ஸையும் படி, ஆனால் மனப்பாடம் செய்து கொள். அவ்வளவுதான். எதற்கும் பயிற்சி எடு முயற்சி எடு.முழுமையடைந்து விடாதே இதுதான் இன்றைய கல்விச் சூழல்.

பள்ளிக்கூடங்களில் மழலைகளுக்குத் தரும் அலங்கார வேலைகள் குழந்தைகளின் புத்தாக்கத்திறனை வெளிப்படுத்தவா அல்லது வணிக நிறுவனங்களுடன் தனியார் பள்ளிகள் போடும் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவா என்கிற கேள்வியை இத்திரைப்படம் எழுப்புகிறது. முழுமையாக வணிக வளாகங்களாக மாறிப் போன நமது கல்வி வளாகங்களைப் பார் என்று அப்பா திரைப்படம் நமக்கு உரக்கச் சொல்கிறது.

சமூக மாற்றம் குறித்து சிந்திக்க கூடாது,தன் முன்னேற்றம் என்பதில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும்,இந்த கல்வி பந்தயத்தில் தன் மகன் எப்படியாவது வெற்றிப் பெறுகிற குதிரையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம் தம்பி ராமையாவிற்கு. மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் மக்கள் கை தட்டி சிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அந்த கோமாளியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தை பார்வையாளர்கள் சுய விமர்சனத்துடன் ஏற்கிறார்கள்.ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சமுத்திரக்கனி.

அது மட்டுமல்ல, பேராசை பிடித்த தம்பி ராமையாவின் வீட்டில் சங்கராச்சாரியார் படம் மாட்டப்பட்டிருப்பதை இரண்டு முறை காண்பித்திருக்கிறார் இயக்குனர். அந்த காட்சிகளின் மூலம் மறைமுகமாக ஒரு நுட்பமான அரசியலை பேச விழைகிறார்.

சமுத்திரகனியின் மகன் நட்பு கொள்ளும் இசுலாமியப் பெண் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடித்திருக்கிறார். ஏழை குடும்பத்துப் பெண்ணாக வரும் அவர்,எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களை பாலினமோ,மதமோ பெரிய அளவில் கட்டுபடுத்துவதில்லை.மனித திரளுடன் கலப்பதையே சமான்யர்கள் விரும்புகிறார்கள் என்கிற உண்மையை அந்த கதாபாத்திரம் காண்பிக்கிறது.

தம்பிராமையா, தனது மகன் வசதி வாய்ப்பு இல்லாத சராசரி பெண்ணை காதலிக்கிறான் என்று நினைத்து பேசும் வசனங்கள் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இல்லாதவர்கள் என்றால்,இயலாதவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் எப்படியும் பேசலாம் என்கிற உடைமைச் சமூக மனநிலையை அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.

அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரு இடத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒழுக்க நெறிகளுக்கு முன்னுதாரணமாக மதநூல்களை மட்டுமே உபதேசித்து வந்த திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த காட்சி நல்ல துவக்கம்.

படத்தில் எழுந்து நின்று பாராட்ட வேண்டிய அம்சம் படத்தின் இறுதி பத்து நிமிடங்கள். உறைவிடப் பள்ளிகளின் உண்மை முகம் என்ன என்பதை பகிரங்கமாக காண்பிக்கிறது. ஆசிரியர்களும்,அலுவலர்களும் இருக்க வேண்டிய கல்வி வளாகம் அடியாட்களும்,வியாபரிகளும் உலவக் கூடிய இடமாக இருக்கிறது என்பதை மிகையில்லாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கல்வி வளாகங்கள்,திருமண மண்டபங்கள்,மருத்துவ மனைகள் இவை அனைத்தும் யாரோ ஒரு தொழிலதிபர் வசம் இருக்கிறது. திருமண மண்பங்கள் எப்படி ஒரு தொழிலோ அது போல்தான் கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் மிகப்பெரிய வணிகச் சந்தை. இன்னும் சொல்லப்போனால் கல்விதான் இன்று மிகப்பெரிய வியாபரச் சந்தை. கல்வி நிறுவனம் நடத்தும் யாருக்கும் கல்வி குறித்தோ குழந்தை நலன் குறித்தோ எந்த வித அக்கறையும் அறிவும் கிடையாது. அப்படிபட்டவர்கள் கையில்தான் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை பள்ளிக்கூடங்களை கடுமையாக சாடியிருக்கிறது இத்திரைப்படம். கல்வி என்றாலே கற்பித்தல் என்கிற நிலை மாறி வெறும் படித்தல்,படித்தல், படித்தல் என்கிற நிலை வந்து விட்டது. எதையும் கேட்காமல், எதை பற்றியும் சிந்திக்காமல் படித்துக் கொண்டே இரு என்பதுதான் இது போன்ற பள்ளிகளின் தாராக மந்திரம்.

பயிற்றுவிப்பது (coaching) மட்டுமே ஆசிரியர் பணி. சொல்லிக் கொடுப்பது (teaching) கிடையாது. தேர்வு நடத்துவதும், அதை திருத்துவதும், மீண்டும் எழுத வைப்பது மட்டுமே இன்றைய ஆசிரியர்களின் பணி. இதில் யார் சிறந்தவர்கள் ? எந்த பள்ளி சிறந்த பள்ளி ? என்பதை வைத்துதான் தமிழகத்தின் முன்ணனி பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. பெற்றோர்களின் பேராசை இது போன்ற பள்ளிகளுக்கு மூலதனமாக அமைகிறது.

கல்வி வளாகத்தில் மாணவர்கள் இறந்துவிட்டால் அல்லது பாதிக்கப்பட்டு விட்டால்,கல்வி வளாகம் எப்படி வினையாற்றுகிறது? .அந்த செய்தியை எப்படி திரித்து பேசுகிறது ? என்கிற உண்மையை அம்பலமாக்குகிறது அப்பா. இந்த காட்சியில் கல்லூரி வளாகங்களில் அடிப்படை வசதி கேட்டு போராடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கல்லூரி துணைவேந்தர்கள் நம் கண்முன்னால் வந்து போகிறார்கள். 15 மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதன்மையான பல்கலை கழகத்தில் போராடிய மாணவர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

சமூகத்தின் அவலங்களை மாற்றக்கூடிய, அழிக்கக்கூடிய, ஆற்றல் பெற்றவர்களாய் மாணவர்களை உருவாக்கக்கூடிய கடமை கல்விமுறைக்கு உண்டு. ஆனால்,நடக்கிற அனைத்து அவலங்களுக்கும் உடந்தையாக இருக்கக்கூடிய அல்லது பலியாகக்கூடிய ஜீவன்களாக மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது இன்றைய அமைப்பு. இந்த அவலத்தைதான் தோலூரித்துக்காட்டுகிறது அப்பா.

கல்வுி முறையில் மாற்றம் வேண்டும் என்கிற நவீன தத்துவத்தை பேசும் இயக்குனர், பெண் மகப்பேறு விசயத்தில் கற்காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். என்னதான் நவீன காலம் வந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும், வலியை தாங்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை அறிவுரையாக கூறுகிறார். மாணவர்களின் எதிர்காலத்தை அறிவுப்பூர்வமாக அணுகும் சமுத்திரக்கனி அவர்கள், பெண்கள் விசயத்தில் ஏன் இவ்வளவு பழமைவாதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை?.

பெண் ஒரு சக உயிர் என்று பாடம் எடுக்கும் சமுத்திரக்கனி,அந்த பெண்ணிற்கு தன் பிள்ளைப் பேற்றை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்பதையும் உணர வேண்டும். இந்த ஒரு அபத்தமான சிந்தனையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அப்பா தமிழ் சமூகம் கொண்டாடப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Saturday, 16 July 2016

வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால் !!

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

சமுதாயத்திலிருந்து வட்டியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் மர்க்கஸ்களில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தி மக்களை பெரும்பாவமான வட்டியிலிருந்து மீட்கும் பணியினை இவ்வமைப்பு செய்து வருகிறது.தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் ஜமாத் நிர்வாகிகளும் கண்டிப்பாக இந்த பைத்துல்மால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்..!!
ஒரு கடுத்த புஸ்த்தகமும், ஒரு சந்தூக்கும், கபர்ஸ்த்தானையும் மட்டும் முதலீடாக வைத்துக் கொண்டு....
கல்யாணம் செய்து வைப்பதும், மைய்யத்து வந்தால் அடக்கம் செய்வதும், பஞ்சாயத்தில்... பொதுமக்களிடம் ஏதாவது அபராதத் தொகை விதித்து வசூலிப்பதும்...
விருந்து வீடுகளுக்கு சென்று வயிற்றை நிறைப்பதும் மட்டும் ஜமாத்தார்களின் வேலையாகி விடாது..!
உள்ளூர் மக்களின் மீதும் அக்கரை கொள்ள வேண்டும்.
அவர்களை கந்து வட்டி கொடுமையிலிருந்தும் மீட்க்க முயற்சி செய்ய வேண்டும்.
வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமையாகும்..!
எனவே தங்கள் ஊரிலும் இது போன்ற பைத்துல்மால் ஏற்படுத்திட, அரசு சலுகைகளையும் பெற்றிட...
வரும் 30ம் தேதி... இந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ளவும்..!
இந்த தகவலை காணும்.. இளைஞர்கள், சமுதாய சொந்தங்கள் உங்கள் ஊர் ஜமாத் நிர்வாகிகளிடம் உடனடியாக இதை தெரிவிக்கவும்..!!
அதுவே இதை படிப்பவர்களின் கட்டாய கடமையாகும்...!
(காரணம்: முகநூல், Whatsapp, போன்ற சமூக ஊடகங்கள் பல ஊர் ஜமாத்தார்களிடமும் இருப்பதில்லை. இது தொடர்பாக பத்திரிகை விளம்பரங்களும் நாம் செய்திடவில்லை)
தென் மாவட்டத்தினர் அவசியம் உங்கள் ஜமாத்தாரை இதில் வந்து கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.


அன்பான... பைத்துல்மால் சொந்தங்களே!

அருளாளன் அல்லாஹ்வின் கட்டளைப்படி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி,
தமிழகத்தில் இதுவரை சுமார் "1,400" ஜகாத் & வட்டியில்லாக்கடன் வழங்கும் பைத்துல்மால்கள் (இஸ்லாமிய உள்ளூர் ஜமாத் வங்கிச் சேவை) செயல்பட்டு வருகின்றன.
இந்த பைத்துல் மால்களை ஒருங்கிணைப்பது மற்றும் பைத்துல்மால்கள் இல்லாத ஊர்களில் புதிய பைத்துல்மால்களை ஆரம்பிப்பது சம்பந்தமாக,
பைத்துல்மால் ஆலோசகரும், தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பிரமுகருமாகிய...
அல்ஹாஜ் SM.ஹிதாயதுல்லா அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்ஸா அல்லாஹ்! வரும் 30.7.2016 (சனி) அன்று மதுரையில் "தென் மாவட்ட பைத்துல்மால்களின் கருத்தரங்கம்" நடைபெறவுள்ளது.
எனவே... இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு
பைத்துல்மால் நிர்வாகிகள், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள்,
தங்களது பெயர், ஊர், மாவட்டம், செல் நம்பர் ஆகியவற்றை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..!
தனி நபர்கள் யாரும் எங்களை தொடர்பு கொண்டு கடன் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்..
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. உங்கள் ஊர் ஜமாத் நிர்வாகத்தின் காதுகளுக்கு இந்த தகவலை கொண்டு சென்றால் போதும்..!
அப்போதுதான் உங்கள் பகுதியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வட்டியில்லாமல் கடன் கிடைக்க கூடும்..
இதில் மாவட்டம் தோறும் தமிழக அரசு மூலமாகவும் மானிய நிதி கிடைக்கும்.
மேலும் விபரங்கள் அறிய... தொடர்புக்கு: 9840040067, (ஹிதாயத்துல்லா)
மற்றும்...
9363013894,
9344101150,
9789283744,
9443191276,
9443005494.
தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Friday, 15 July 2016

பாஸ்போர்ட் எடுப்பது எப்படி? பாஸ்போர்ட் எடுக்க உதவும் வழிமுறை!! ஒரு தவகல்...

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
3 பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
4பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப்
பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm 
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்
குறிப்பு: பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி, அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் பார்க்கலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
விசா பெற வழிகாட்டும் இனையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

தொகுப்பு: அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 12 July 2016

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி பற்றி படிக்க படிக்க ஆச்சர்யத்தின் எல்லைக்கே போன செய்தி!! ஒரு சிறப்பு பார்வை..

Image result for பொருளாதார சீர்திருத்தம்25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இன்னிக்கு வரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறதுங்கிறது நம்முடைய அறியாமைன்னு நினைச்சுக்கனும், அதனால நாம நம்மள மாத்திக்க வேண்டிய சூழலுக்கு நெருங்கிகிட்டு இருக்கோம்.
கீழே சொல்லப்பட்டுள்ள கருத்தில் மாற்றுக் கருத்துக்கள் நமக்கு நிச்சயமா இருக்கத்தான் செய்யும். ஆனா சொல்லப்பட்டுள்ள செய்தியை ஆராய்ஞ்சு பாக்கும்போது பல விஷயங்களில் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்த‍ை உருவாக்கும் என்று நம்பத்தான் வேண்டியுள்ளது..
1998 ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. Film industry photo industry ல் இப்போ ஃபிலிம்களே கிடையாது..
ஃபிலிம் மற்றும் பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் இந்தப்பதிவு மூலம் சொல்லப்படுது.
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? இப்படி பலதரப்பட்ட தொழில்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உலகளவிலே காணாமலேயே போய்டுச்சு. எதை எல்லாம் நாம இதுக்கு மேல புதுசா எதுவம் வராதுன்னு நினைச்சோமோ அது எல்லாமே மாறி மாறி பழசு எல்லாம் காணாமலேயே போய்க்கிட்டு இருக்கு..
எதனால ? ஏன் இப்படின்னு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்ப்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இவைங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது... கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar' ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: நமக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வோம்? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்போம்...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ நம்ம கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் ஈசியா செஞ்சு கொடுத்தா ? நம்முடைய சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Section னோட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, அப்படீங்கற நிறுவனம் இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்குப்படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க இனி யாருக்கு டீ போட்டுக் கொடுப்பாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ல இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts' ன்னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா ஒட்டுமொத்த ஆட்டோ மோட்டிவ் சம்பந்தப்பட்ட எல்லா நேரடியான, மறை முகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..நம்ம செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல நம்ம முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நாம போகவேண்டிய எடத்துக்கு அழகா கொண்டு போய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நாம காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நாம நெனைச்சா..? நம்‍மோட நினைப்பை மத்திக்கனும்... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்ஃபோன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருந்தா ஓக்கே. இல்லன்னா கூகுள்ல தேடும்போது அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ. 
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே நம்ம முகத்தை scan செஞ்சு நம்ம மூடு என்னன்னு சொல்லுது...2020ல நாம பொய் சொல்றோமா இல்ல உண்மைய சொல்றோமானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. நம்ம செல் ஃபோன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, நம்மளோட கண்ணை ஸ்கேன் பண்ணும். நம்மளோட ரத்த மாதிரியை ஆராயும். நம்ம மூச்சு காத்தை அலசும். நம்ம உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் சாதாரணமா விஷயமா மாறிடும்.
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும். மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்! புரிஞ்சு நடத்துக்கனும்..
இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது...

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  : மு. அஜ்மல்  கான்.