Wednesday, 27 August 2008

திருமணம் என்ற சடங்கு உலகின் பழமை வாய்ந்தது !!


Image result for திருமண வாழ்க்கைசமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள்.

`ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு பாலுறவுப் புணர்ச்சியிலும் அதனைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

குறிப்பிட்ட வயதில் பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்வதற்காக திருமணம் என்ற சடங்கு ஏற்படுத்தப்பட்டது.

முன்பெல்லாம் தங்கள் ஊரிலேயே சுற்றியிருக்கும் உறவினர்களை நேரில் அழைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தி வைத்தனர் பெரியவர்கள்.

பின்னாளில் உறவினர்கள் வேறுவேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை அழைப்பதற்காக உருவான அழைப்பிதழ்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகி விட்டது. திருமணம் என்றாலே அழைப்பிதழ் கட்டாயம் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறவினர்களுக்கும் அனுப்பப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.

பாலுறவுப் புணர்ச்சியை முறையாகக் கையாள்வதற்காகவே நாகரீக சமுதாயம் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையும் நிர்ணயித்து தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.

விவரம் தெரியாத வயதில், குழந்தைப் பருவ திருமணங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில மாநிலங்களில், ஏதாவது ஒன்றிரண்டு குழந்தை திருமண சம்பவங்கள் பற்றி அறிகிறோம். காலப்போக்கில் அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு விடும்

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

தன்னிடம் மனைவி, அடங்கி, பயந்து நடக்கவேண்டும் என்று நினைக்கும் கணவனும்; கணவன் தன்னை மட்டுமே கவனிக்கவேண்டும், தனக்காக மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் மனைவியும்; நிம்மதியான, சிறப்பான, முழுமையான குடும்ப வாழ்க்கை வாழ இயலாது ! முழுமையான குடும்ப வாழ்க்கைக்கு!!!
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும் , மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும் போது, அவர்களே சிறந்த தம்பதி ஆகின்றனர்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 23 August 2008

இஸ்லாம் கூறும் சுவர்க்கம் பற்றிய சிறப்பு பார்வை...

"அல்லாஹ்வின் கிருபையினால் நீங்கள் எந்த சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் ? அதை அடைவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா ? (அ) இல்லையா ? இன்ஷா அல்லாஹ் அதை அடைவதற்காக நாம் முயற்சிப்போமாக... ஆமீன் !
"சொர்க்கத்திற்கான திறவுகோல் 🔑சாவி🔑 கீழ் உள்ளது.

"முதலாவது சொர்க்கம்"
ஜன்னத்துல் பிர்தௌஸ் 
🍂
1. போதும் என்ற மனம் கொண்டவர்கள்
2. தினம் பாவமன்னிப்பு, தவ்பா செய்பவர்கள்
3. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்
4. பொறாமையை விட்டு நீங்கி கொள்பவர்கள்.

"இரண்டாவது சொர்க்கம்"
🍂 தாருல் ஸலாம் 🍂
1. அனாதைகளை ஆதரிப்பவர்கள்
2. விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்
3. சாலம் சொல்பவர்கள்
4. முஸ்லிம்களின் தேவைய அறிந்து உதவி செய்பவர்கள்


"மூன்றாவது சொர்க்கம்"
🍂 ஜன்னத் அத்ன் 🍂
1. பேச்சை குறைப்பவர்கள்
2. தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்
3. உணவு குறைவாக உண்பவர்கள்
4. மக்களின் தொடர்புகளை குறைவாக உள்ளவர்கள் (தனிமையில் இறை
வணக்கம் செய்பவர்கள்)."நான்காவது சொர்க்கம்"
🍂 ஜன்னத்துன் னயீம் 🍂
1. தானம், தர்மம் செய்பவர்கள்
2. நன்றி செலுத்துபவர்கள்
3. சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்
4. நற்குணம் உடையவர்கள்.


"ஐந்தாவது சொர்க்கம்"
🍂 தாருல் குல்து 🍂
1. தீட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்
2.அடுத்தவர்களை கேவளப்படுத்தாதவர்கள்
3.யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்
4. எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.

"ஆறாவது சொர்க்கம்"
🍂 தாருல் ரைய்யான் 🍂
1. பள்ளிவாசலை கட்டுபவர்கள்
2. தொழுகையைத் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்
3. துவா மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்
4. மார்க்கக்கல்வியை வழுங்குபவர்கள்.

"ஏழாவது சொர்க்கம்"
🍂 மக்அது சித்துகின் 🍂
1. நோயாளிகளை விசாரிப்பவர்கள்
2. ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்
3. கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் கொடுப்பவர்கள்
4. வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பவர்கள்."எட்டாவது சொர்க்கம்"
🍂 ஜன்னத்துல் மஃவா 🍂
 விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்
2. பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்
3. அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்
4. ஆலிம் மற்றும் அறிஞர்களை சங்கைபடுத்துபவர்கள்..


தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Wednesday, 20 August 2008

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில்எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
சென்னையில்  எனது பேராசிரியர் திரு. குப்புசாமி அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை...
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.

சோடியம்: 
உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
=================
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
==
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
=====
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
====
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
=======
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
==========
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
=======
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
*********************************
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
அருமை நண்பர்களே !...
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 19 August 2008

உங்களுக்கு என்ன நோய்?

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி? : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி? : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி? : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ் : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி? : நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ் : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி? : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ் : அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி? : உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி? : கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ் : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி? : சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ் :வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி? : நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ் :  பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி? : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்து போகும். பாதங்களை சரிவர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ் : தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி? :கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ் : கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி? :இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ் : இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி? : ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக் காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ் :  உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி? :சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ் : உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்து ஆலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி? : பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ் :  தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி? :வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ் : ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி? :உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ் :  நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

-----நன்றி--- Kumutham sinegithi

Sunday, 17 August 2008

Engineering Drawing and its Use.

Engineers are confronted with the task of communicating the design, development and structures of machines to manufacturers and builders. The shape and size of various parts of a machine and its structure must be recorded on plane sheets in a systematic way for communication. The pictorial view of the object does not carry all the details, especially the inner details and correct shape of complicated parts. Different methods, therefore, are implied for describing the exact shape based on the ‘projectors’ drawn by engineers.     


Principle of Projection

If straight lines are drawn from various points on the contour of an object to meet a plane, the object is said to be projected on that plane. The figure formed by joining, in correct sequence, the points at which these lines meet the plane, is called the projection of the object. The lines from the object to the plane are called projectors.

Projection on a Single Plane

ProjectionIf straight lines are drawn from the various points on the contour of an object to meet a plane, the figure obtained on the plane is called the Projection of the object. The object is said to be projected on the plane. In other words, we can say that the projection of an object on a plane is the shadow of the object on the plane showing each and every edge line of the object. The imaginary lines drawn from the object to the plane are called projectors or projection lines. The plane on which the projection of the object is taken is called plane of projection. Suppose an object is placed in front of a screen and light thrown on the object (assuming the light rays to be parallel to each other and perpendicular to the screen) then a true shadow of the object is obtained on the screen. This shadow is the projection on the object on the plane of screen showing the contour line of the object.    

Types of Projections

Classification of ProjectionThe projections are classified according to the method of taking the projection on the plane. A classification of projection is shown below:

Factors on Which Type of Projection Depends

Different views of an object can be drawn by projections. Thus every drawing of an object will have four things on which projection depends
            (a) Object,
            (b) Projectors,
            (c) Plane of projection, and
 (d) Observer’s eye or station point.

Methods of Projection

In engineering drawing following four methods of projection are commonly used, these are:
(a) Isometric projection
(b) Oblique projection
(c) Perspective projection
(d)  Orthographic projection
In the above methods (a), (b) and (c) represent the object by a pictorial view as an observer sees it. In these methods of projection a three dimensional object is represented on a projection plane by one view only. While in the orthographic projection an object is represented by two or three views on the mutual perpendicular projection planes. Each projection view represents two dimensions of an object. For the complete description of the three dimensional object, at least two or three views are required. Orthographic projection comes under the category of ‘Non-Pictorial Drawing’.

Orthographic Projections

View from Parallel ProjectionThe word orthographic means straight description. The straight description here stands for the parallel projectors from the object to infinity. If a perpendicular picture plane is inserted between the projectors, a picture is formed having the same shape and size as that of the object. If an observer at position ‘A’  moves to infinity, the projectors to his eyes becomes parallel to the object and he observes the same shape and size as that of the object. The view so formed is known as the orthographic projection. Similarly, the parallel projectors shall form the pictures on the respective picture planes from the positions B and C. Usually two views are sufficient for simple objects, but the help of three or more views is necessary for complicated objects. These picture planes are mutually perpendicular to each other and are known as ‘Principal Planes’ of projectors, named Horizontal Plane (HP), Vertical Plane (VP) and Profile Plane (PP).

Methods of Orthographic Projection

The two methods of projections are:
(a) First angle projections
(b) Third angle projections

Four QuadrantsFigure 3shows four quadrants formed by the intersection of horizontal and vertical planes. The intersecting line of the planes is called the co-ordinate axis. The revolving direction of the horizontal plane shows that quadrants I andIIIare  ”open” but II and IV quadrants become “closed” when the horizontal plane coincides with the vertical plane. It is obvious that the closed quadrant has no use for the purpose of projectors as the views taken on these will overlap. 


Four QuadrantsFirst Angle Projections. This method of projection is popular in Europe, especially in Britain. Bureau of Indian Standard has also recommended it now. Figure 4 shows an object placed in the first quadrant. Parallel projectors in the direction ‘A’, from the object, forms a picture on the vertical plane (VP) which is known as Front View or Front Elevation. Similarly, parallel projectors from the direction of ‘B’ forms the picture on the horizontal plane (HP), known as Top View or Plan. A mutually perpendicular plane to both HP and VP, known as profile plane (PP) also receives projectors from the object from the direction C. The view on the profile plane is known as Side View or Side Elevation. The three planes containing the views are then opened on a plane. The symbol of first angle is shown in below.

First Angle Projection 
First Angle Projection
Three View of a Plane.

                     Three Views on a Plane
Symbol of First Angle Projection


Symbol for First Angle Projection

Although two or three views are enough to reveal an object, the projectors from six directions of the object in the first angle are shown, if necessary. The views are to be shown symmetrically. The view from the top (Direction B) placed underneath. The view from the front (Direction A) is placed in the centre. The view from the left side (Direction C) is placed on the right side of view A. The view from the right side (Direction D) is placed on the left side. The view from the bottom (direction E) is placed on the top as “E” view. The view from the rear (Direction F) may be placed on the right or left side of C or D views.

First Angle Projection 

First Angle Projection

Object in a Transparent BoxThird Angle Projections. This system of projection is known as the American system. The object is placed in the 3rd quadrant. The planes are imagined to be made of transparent material, say a glass box. The front wall of the box is assumed to be hinged to the other walls as shown in the figure. The parallel projectors in all the six directions form respective views on the walls of the box serving as picture planes. The hinged walls of the box are opened and laid down on a plane. The placement of various views are in a systematic way. The view from the top is placed above the Front View (FV). The view from the right hand side is placed on the right side of FV. The view from left hand side is placed on the left side of FV. The view from bottom is placed underneath the FV. The view from the rear may be placed on the right or the left of the side views. The symbol for the third angle is given below.

Object in Transparent View.

Layout of Various Views
Layout of Various Views..


Symbol for Third Angle Projection

Symbol of First Angle Projection

Comparison of First Angle Projection and Third Angle Projection method

Sl No.
First Angle Projection Method
Third Angle Projection Method
1
The object is kept in the first quadrant.
The object is assumed to be kept in the third quadrant.
2
The object lies between the observer and the plane of projection.
The plane of projection lies between the observer and the object.
3
The plane of projection is assumed to be non- transparent.
The plane of projection is assumed to be  transparent
4
In this method, when the views are drawn in their relative positions, Plan (Top view) comes below the elevation (Front view), the view of the object as observed from the left- side is drawn to the right of elevation.
In this method, when the views are drawn in their relative positions, Plan comes above the elevation, left hand side view is drawn to the left hand side of the elevation.
5
This method of projection is now recommended by the “Bureau of Indian Standards” from 1991.
This method of projection is used in U.S.A and also in other countries.

Friday, 15 August 2008

ஷபே பராத் என்றழைக்கப்படும் பராத் இரவு பற்றிய சிறப்பு பார்வை..

ஷபே பராத் என்றழைக்கப்படும் பராத் இரவு ரமலான் மாதம் வருவதற்கு சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும். 

பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.

அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.

அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும்,  அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.

பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.

நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.

அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.

உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.

நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?

ஒவ்வொரு குடும்பங்களிலும் மறைந்த தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் கத்தம் பாத்திஹா ஓதி, படையல்கள் படைத்து அதை தப்ருக் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்! இது எங்கிருந்து வந்தது! சகோதரர்களே சிந்தியுங்கள்
3 காபிர்களின் சமுதாய வழிமுறைகள் தான் இது (காபிர்கள், நசாராக்கள், மற்றும் சீன மதத்தினர்கள்)

சிலை வணங்கிகள்
பண்டிகைகளின் போது காபிர்கள் மறைந்த தங்கள் தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் பூஜை ஓதி, படையல்கள் படைத்து அதை பிரசாதம் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்!

நஸாராக்கள் –  மண்ணரை திருவிழா
நஸாராக்கள் மண்ணரை திருவிழாவின் போது மறைந்த தங்கள் தந்தை, தாயார், பாட்டன், பாட்டிகள், குழந்தைகளின் ஞாபகமாக அன்றைய தினம் வீடுகளில் மதகுருமார்களை அழைத்து ஜெப-பூஜை ஓதி, படையல்கள் படைத்து அதை ஜெப-பிரசாதம் என்று சொல்லி அனைவருக்கும் கொடுப்பார்கள்!

மேலே கண்ட பித்அத்-ஆன செயலை இஸ்லாத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறானா?
அல்லது நபிகள் (ஸல்) இந்த பராத் இரவை சொல்லித் தந்தார்களா? அவர்கள் கொண்டாடினார்களா?
கீழே உள்ளதை சற்று படியுங்கள்.
 அல்லாஹ் கூறுகிறான்
‘அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(யான) தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா?’ என அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் அஷ்ஷுரா:21)
 நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்:-
எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) நூல்-முஸ்லிம்)

‘எனது வழிமுறையையும், நேர்வழி நடப்போரான எனது கலீபாக்களின் வழி முறையையும் எடுத்து நடப்பதுடன் அவைகளை கடவாய்ப் பற்களால் கவ்விப்பிடித்துக் கொள்ளுங்கள்! 
புதுமையான காரியங்கள் அனைத்தையும் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அபூதாவூது)

இந்த பராத் நாளில் முஸ்லிம்களின் கீழ்கண்ட வழிமுறைகளை காணுங்கள் இது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறையா?
அல்லது
ஷைத்தானின் வழிமுறையா? என்பதை தாங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்!
பாத்திஹா என்ற பூஜை ஓதுவது
படையல் வைப்பது, அதில் பரக்கத் பொழியும் என்று நினைப்பது
மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றில் அலங்கார விளக்குகளை எரிப்பது, ஏன் கப்ருஸ்தானிலும் கூட அலங்கார விளக்குகளை எரிப்பது, இது கப்ருகளில் உறங்கிக் கொண்டிருப் பவர்களுக்கு நாம் செய்யும் நன்மையா?
படையலில் வைக்கப்படும் பொருட்களின் பட்டியல்
தாத்தா பீடி குடித்ததன் நினைவாக – பீடி கட்டுகள் வைப்பது
அப்பா புகையிலை சாப்பிட்டதன் நினைவாக – புகையிலை வைப்பது
அன்றைய தினம் இறந்த ஆவிகள் வீடுகளுக்கு வருவதாகவம் ஆசீர்வாதம் செய்வதாகவும் எண்ணிக்கொண்டு கண்விழித்து பிரார்ததணை செய்வது! இது நபிமார்கள் காட்டித்தந்த வழியா?
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80)
(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22)

இறந்தவர்களுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு பிடித்தமானவைகளை படையல் இடுவது சீன மக்களின் மூட நம்பிக்கை இதை பின்பற்றலாமா?

சகோதர சகோதரரிகளே! அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்!!
மேலும் “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியல் (நடக்கக்)கண்டோமோ! அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்.  என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (திருக்குர்ஆன் அல்பகரா 2-170)

அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும் மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக்கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக்கொள்ளச் செய்தது எது? (திருக்குர்ஆன் அல்பகரா 2-175)
கீழே உள்ளதை கவனியுங்கள் சகோதரர்களே!

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:

  1. சதக்கத்துல் ஜாரியா
  2. பலன் தரும் கல்வி
  3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
இதற்கான விளக்கம் இதோ கீழே தருகிறேன்
1. ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

2. இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

3. மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.
மார்க்கத்தில் புதுமைகளை புகுத்துபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை இறைவன் மன்னிக்கிறான். நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்.’-குர்ஆன் 5 : 3
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.  (அலி (ரழி) நூல்கள்-அபூதாவூது, நஸயீ.)

நீங்கள் நஷ்டவாளியாகலாமா?
அல்லாஹ் கூறுகிறான்,
“செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)
நீங்கள் யாருக்கு கட்டுப்படவேண்டும்?
‘இறைவனுக்கும் இத்தூதருக்கும கட்டுப்படுங்கள். இதனால் அருள் செய்யப் படுவீர்கள்.’-குர்ஆன் 3 : 132

உங்கள் முன் ஒரு திருக்குர்ஆனின் அத்தியாத்தை எடுத்து வைக்கிறேன் படியுங்கள் வெற்றிபெறுங்கள்!

ஸுரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)  
 அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
 (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹ் செய்வீராக (87-1)
 அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான் (87-2)
 மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றை பெறுவதற்கு) நேர்வழி காட்டினான் (87-3)
 அன்றியும் அவனே (கால்நடைகளுக்கென) மேய்சலுக்குரிய வற்றையும் வெளியாக்கினான் (87-4)
 பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான் (87-5)
 (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக்கொடுப்போம், அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்! (87-6)
 அல்லாஹ் நாடியதை அல்லாமல் – நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான் (87-7)
 அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம் (87-8)
 ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக! (87-9)
 (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான் (87-10)
ஆனால் துர்பாக்கியமுயடையவனோ, அதை விடட்டு விலகிக் கொள்வான் (87-11)
 அவன்தான் பெரும் நெருப்பில் புகுவான் (87-12)
 பின்னர் அதில் அவன் மறிக்கவும் மாட்டான்! வாழவும் மாட்டான் (87-13)
தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (87-14)
 மேலும் அவன் தன் இறைவனுடைய நாமத்ததை துதித்தக்கொண்டும் தொழுதுகொண்டும் இருப்பான் (87-15)
 எனினும் நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள் (87-16)
 ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும், என்றும் நிலைத்திருப்பதும் ஆகும் (87-17)
 நிச்சயம் இது முந்திய ஆகமங்களிலும் (87-18)
 இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது (87-19)
 நிச்சயமாக நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இதை செய்வது தங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது! அறிந்துக்கொள்ளுங்கள் இதிலிருந்து விலகுபவர் தன்னை இஸ்லாத்திலிருந்தும் அல்லாஹ்விடமிருந்தும் தூர விலகி வழிகேட்டில் விழுந்தவர்போலாவார்!
எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) நூல்-முஸ்லிம்)
ஜிஹாது என்றவுடன் ஆயுதத்தை ஏந்துவதுதான் தங்களுக்கு நினைவுவரும் அப்படியல்ல (ஒரு நாட்டின் சார்பாக நின்று ராணுவத்தின் உதவியுடன் போருக்கு ஆயத்தமானால் தான் ஆயுதம் ஏந்தவேண்டும் மாறாக பொதுமக்களை துன்புறுத்த தீவிரவாதிகள் போல் எக்காரணம் கொண்டும் ஆயுதத்தை ஏந்தக்கூடாது) இங்கு ஜிஹாது என்று கூறப்படுவது பித்அத்-ஐ வெறுப்பது அதை தடுப்பது அப்போது வரும் சோதனைகளை பொறுத்துக் கொள்வதுதான்
உங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உண்மையில் பாசம் நேசம் மற்றும் மரியாதை இருந்தால் இந்த ஷபே பராத் இரவை புறக்கணியுங்கள்! இல்லையெனில் உங்களுக்க கீழ்கண்ட கதிதான்! (கீழ்கண்டதை தாங்கள் பெற்றுக்கொண்டால் (இன்ஷா அல்லாஹ்) முடிந்தது உங்கள் சுவனப்பாதையின் கனவு)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.  (அலி (ரழி) நூல்கள்-அபூதாவூது, நஸயீ). 

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.