Friday, 30 August 2013

மதுரை அருகே 586.86 ஏக்கரில் துணைக்கோள் நகரம் (satellitte city) !!


மதுரை விமான நிலையம் அருகே 586.86 ஏக்கரில் துணைக்கோள் நகரம் (satellitte city) அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் இன்று அவர் ஒரு அறிக்கையை அவர் வாசித்தார் அதில் கூறியுள்ளதாவது: மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 19,500 மனைகள் ஒதுக்கீடு இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு 586 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, எல்லைகள் பிரிக்கப்பட்டு, பிளாட் வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மையப்பகுதியில் 35-50 ஏக்கர் வரை பெரிய மைதானங்கள் அமைகின்றன. எச்.ஐ.ஜி., பிரிவில் 260 பிளாட்டுகள், எம்.ஐ.ஜி., - 1 ல் 460, எம்.ஐ.ஜி., 2ல் 1,660, எல்.ஐ.ஜி., ல் 3,325, இ.டபிள்யு.எஸ்.,ல் 5985 பிளாட்டுகள் அமைகின்றன.இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், இங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உருவாக்கப்படும்.. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் 2015 செப்.,ல் துவங்கும் . இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்றார்.

IN ENGLISH..
The satellite township in the outskirts of the city, proposed by the state government a couple of months ago will take shape soon, as work on the project has commenced.

"Tenders have been invited and work has begun for constructing 448 houses to be built in an area of 23 acres in the first phase," said R Murugaiha Pandian, chairman of Tamil Nadu Housing Board (TNHB) who conducted an inspection at the site for the township in Thoppur near Madurai airport.

The satellite township was announced by chief minister J Jayalalithaa in the state assembly on April 4. The township envisages 19,500 residential plots in an area of 586.86 acres at Thoppur and Uchapatti villages, about 15 km from Madurai.

Of the total plots, 14,300 houses would be allotted to low income group families, while 2,500 houses would be allotted to middle income group and 750 houses for high income group people. In addition, 1,950 plots are earmarked for people from economically weak background.

The government had set aside Rs 120 crore for providing basic amenities like drinking water, roads, drainage, streetlights, rainwater harvesting structures and parks in the project. The state government has sanctioned Rs 69 crore as the first instalment to carry out the project through TNHB. 


While the work has begun for construction of the first phase of the houses, a layout has been prepared for 1,000 more houses in an area of 50 acres and TNHB is about to get approval from the local planning authority of Madurai. Efforts are on to commence development of housing plots in the remaining land, housing board officials said.

The township was planned in the outskirts in a bid to reduce congestion in the ever-growing city. Madurai, after the expansion of the corporation limits last year, has a population of about 15 lakh. In addition to congestion for living space, the city also reels under heavy traffic chaos thanks to mounting vehicular population.

Thursday, 22 August 2013

வானவியல் (Astronomy) பற்றிய படிப்பு !! ஒரு சிறப்பு பார்வை...


வானவியல் எனப்படும் அஸ்ட்ரானமி மிகவும் பழமையானதும் பலரையும் பெரிதும் கவரும் துறையாகவும் விளங்குகிறது.

புவியின் வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள ஆகாயம் தொடர்புடைய அம்சங்கள் மற்றும் பொருட்களைப் பற்றி படிப்பதே வானவியல் எனப்படுகிறது. பிரபஞ்சம் தொடர்பான அறிவியல் பிரிவான இத்துறையில் பிரபஞ்சத்தின் இயக்கம், இயற்கை அமைப்புகள், வரலாறு, விண்வெளி தொடர்புடைய சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், செயற்கைக் கோள்கள், விண்கற்கள், பால் வீதிகள் போன்றவற்றைப் பற்றி படிக்கப்படுகிறது.

இயற்பியலின் ஒரு உபபிரிவாகக் கருதப்படும் வானவியலில் அஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோமெட்டீயராலஜி, அஸ்ட்ரோபயாலஜி, அஸ்ட்ரோஜியாலஜி, அஸ்ட்ரோமெட்ரி, காஸ்மாலஜி போன்ற உட்பிரிவுகள் உள்ளன. பிரபஞ்சம் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர இந்த அனைத்துத் துறைகளும் இணைந்து உதவுகின்றன. பிரபஞ்சம் பற்றிய புதிர்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் இவற்றை விடுவிக்க விரும்புபவர்களுக்குமான நம்பிக்கை தரும் துறையாக வானவியல் திகழ்கிறது.

உலகில் ஒவ்வொரு நாடும் அணு சோதனையில் ஈடுபட்டு வருவதால் வானவியல் துறை வல்லுனர்களுக்கான சார்புத் தேவையும் அதிகரித்து வருகிறது. இத் துறையை தொழில்நுட்ப அளவில் படிக்கும் போது அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமி, தியரிடிகல் அஸ்ட்ரோபிசிக்ஸ் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமியில் டெலஸ்கோப், பைனாகுலர், கேமரா, வெறும் கண்களால் ஆகாயம் தொடர்புடையவற்றைப் பார்த்து அறிந்து தகவல்களைச் சேகரிக்க வேண்டும். இதனை கருவிகளை வடிவமைக்கவும், நிர்வகிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

தியரிடிகல் அஸ்ட்ரானமியில் தகவல்களை கம்ப்யூட்டர் உதவியுடன் அலசி ஆராய்ந்து விளக்கங்களைத் தருகின்றனர். இது முழுக்க முழுக்க ஆராய்ச்சி அம்சங்களுடனும் அலசல்களுடனும் திகழும் துறையாக உள்ளது.

யாருக்குப் பொருந்தும்?
பொது இயற்பியலில் திறனுடையவர்களே இத்துறைக்குப் பொருத்தமானவர்கள். இது ஒரு பரந்து பட்ட துறையாகும். இதில் உபகரணங்களைக் கட்டும் குழுக்கள், கணிதத் திறன் மற்றும் இயற்பியல் சிந்தனை கொண்ட தியரிடிகல் குழுக்கள் என்று பரந்த பணிகள் உள்ளன.

இத் துறையில் ஈடுபட புரொகிராமிங் திறமைகளும் கேள்விகளுக்கான விடைகளை விடாது தேடும் குணமும் கட்டாயம் தேவைப்படும். எந்தப் பிரிவு அஸ்ட்ரானமியில் ஈடுபடுகிறோம் என்பதைப் பொறுத்தே இத் துறையில் பணி எதிர்காலம் உறுதியாகிறது. இன்ஸ்ட்ரூமென்டேஷன் அஸ்ட்ரானமியில் ஈடுபட விரும்புபவர்கள் அஸ்ட்ரானமியில் பொறியியல் புலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தகுதிகள்
இத்துறையில் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளே அதிகம் என்பதால் முழுமையான வானவியலாளராக உருவாக கட்டாயம் ஆராய்ச்சிப் படிப்பே தேவைப்படுகிறது.

இத்துறையில் இணைந்திட விரும்புபவர்கள் பிளஸ் 2வை அறிவியல் புலத்தில் இயற்பியல் மற்றும் கணிதம் எடுத்துப் படித்திருப்பது அவசியம். தியரிடிகல் அல்லது அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமி துறையில் இணைய விரும்புபவர்கள் பிளஸ் 2வுக்குப் பின் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அஸ்ட்ரானமி துறையில் பட்டப்படிப்பை கிட்டத்தட்ட எந்தப் பல்கலைக்கழகமும் தருவதில்லை.

எனவே இயற்பியலில் மேஜர்/ஹானர்ஸ் படிப்பை கணிதத் துணைப் பாடத்துடன் படித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்பை முடித்த பின் பிஎச்.டி., படிப்பைத் தொடருவதன் மூலமாக விண்வெளி ஆய்வில் விண்வெளியாளராகவோ அறிவியலறிஞராகவோ ஆய்வாளராகவோ மாறலாம்.

இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது எக்ஸ்பெரிமெண்டல் அஸ்ட்ரானமியில் இணைய பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடித்தவர்கள் ஆராய்ச்சியாளராக இணையலாம்.

அடிப்படையில் இத்துறையில் இணைய விரும்புபவருக்கு துறை மீதான உற்சாகம், ஆர்வம், கவனிக்கும் தன்மை ஆகியவை அவசியம். சராசரிக்கும் அதிகமான புத்திசாலித்தனம், கற்பனை வளம், பொறுமை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் திறன்களும் தேவைப்படுகின்றன. நெடுநேரமும் முறையற்ற கால அவகாசத்திலும் பணி புரிய வேண்டியுள்ளது. குழுவாகப் பணியாற்ற நேரிடுவதால் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்களும் தேவை.

பயணம் செய்வதும் நெடுநேரம் பணி புரிவதும் இதில் தவிர்க்க முடியாது. ஆய்வு தவிர விரிவுரையாளராகப் பணியாற்றுவதும் இதில்
இயலும். அரசு தொடர்புடைய பாதுகாப்புப் படை, விண்வெளி ஆராய்ச்சி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவை தவிர ஆராய்ச்சி சோதனைக் கூடங்கள், அப்சர்வேடரிகள், கோளகங்கள், அறிவியல்பூங்காக்கள் ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

ஐ.எஸ்.ஆர்.ஓ., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், விண்வெளி இயற்பியல் ஆய்வகங்கள் ஆகியவற்றிலும் சவாலான பணிகள் கிடைக்கின்றன.அனுபவம், திறன் ஆகியவற்றைப் பொறுத்து சிறப்பான சம்பளமும் ஒருவர் இதில் பெற முடிகிறது.

துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள்

Aryabhatta Research Institute of Observational Sciences (A.R.I.E.S.), Nainital ( Uttarakhand )
Manora Peak , Nainital ( Nainital Dist. ) 263129

Cochin University of Science and Technology : Department of Atmospheric Sciences, Kochi ( Kerala )
Cochin University of Science and Technology, Kochi (Ernakulam Dist.) 682022

Harish Chandra Research Institute, Allahabad (Uttar Pradesh)
Chhatnag Road, Jhusi , Allahabad (Allahabad Dist.) 211019

Indian Institute of Astrophysics, Bangalore (Karnataka)
II Block, Koramangala , Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560034

Indian Institute of Science (I.I.Sc.) : Department of Physics,
Bangalore (Karnataka)

Indian Institute of Science, Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560012

Inter University Centre for Astronomy and Astrophysics (I.U.C.A.A.),
Pune (Maharashtra) Post Bag 4, Ganeshkhind, Pune University Campus,
Pune (Pune Dist.) 411007

National Centre for Radio Astrophysics (N.C.R.A.), Pune (Maharashtra )

Tata Institute of Fundamental Research, Pune University Campus, Post Bag 3, Ganeshkhind , Pune ( Pune Dist. ) 411007

Osmania University: College of Science, Hyderabad (Andhra Pradesh) Osmania University, Administrative Building,
Hyderabad (Hyderabad Dist.) 500007

Physical Research Laboratory (P.R.L.), Ahmedabad (Gujarat)
Navrangpura, Ahmedabad (Ahmedabad Dist.) 380009

Raman Research Institute, Bangalore (Karnataka)
C.V. Raman Avenue, Sadashivanagar,
Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560080


Astronomy course on weekends in chennai...

Chennai: Tamilnadu Science and Technology Centre will organize an astronomy course, on four weekends, from June 21. A press release said the classes would be conducted between 3 p.m. And 6 p.m. At the B.M. Birla Planetarium, Periyar Science and Technology Centre, Gandhi Mandapam Road. Basic concepts in astronomy and astrophysics such as cosmology, galaxies, celestial coordinate systems, solar system, studies on the Moon would be taught. It would have practical observational sessions for observing stars, planets, deep sky objects and the sun, using modern telescopes. Those desirous of participating should register at the Planetarium. Since only 60 persons can be accommodated in the course the organizers will admit students on first come first served basis. For details, call 24410025. — Special Correspondent

http://study.taaza.com/study/bachelors-in-astronomy-course-colleges-tamilnadu
http://targetstudy.com/colleges/msc-astronomy-degree-colleges-in-tamil-nadu.html

www.ifa.hawaii.edu/gradprog/undergrad_classes.shtml
http://www.studyastronomy.com/courses.php?id=1

ஆக்கம் & தொகுப்பு : .மு.அஜ்மல் கான்.

Wednesday, 21 August 2013

உலக வெப்ப மயமாதல்!!! ஒரு சிறப்பு பார்வை...

தற்போது அமெரிக்காவைத் தாக்கி கடும் சேதம் ஏற்படுத்திய சாண்டி சூறாவளியே உலக வெப்ப மயமாதலின் மோசமான விளைவால்தான் என்கிறார்கள். இந்த உலக வெப்ப மயமாதல் என்றால்தான் என்ன? இது பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்காக இதோ ஒரு சுருக்கமான விளக்கம்.

லக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு,ஓராண்டில் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர்; 30 கோடி பேர் உடல்நிலை பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.பெட்ரோல், டீசல், காஸ் அதிகம் பயன்படுத்துவதால், பிரிஜ், "ஏசி' போன்ற நவீன சாதனங்களால் கரியமில வாயு அதிகம்வெளிப்படுகிறது. இது தான் பூமியை சூடாக்குகிறது. பூமி சூடானால், அதில் வானிலை மற்றும் சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.அதிக வெயில், அதிக மழை, வெள்ளம், சூறாவளி என்று கண்டபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமி வெப்பமாவதால், பனிமலைகள் உருகுகின்றன. அதனால், அதன் தண்ணீர் காட்டாறாக பரவுகிறது. அதனால், வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடலில் சேருவதால் கடலும் பொங்குகிறது. இது மட்டுமல்ல, பனிமலைகள் உருகி விடுவதால், எதிர்காலத்தில் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால், வறட்சி ஏற்பட்டு பட்டினி அதிகரிக்கும். பல நோய்கள் பரவும். ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவர்.இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடி பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையில் பாதிக்கப்படுவர்; எட்டு கோடி பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர்.ஆப்ரிக்க, வங்க தேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில் தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள் தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆப்ரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக  வெப்ப மயமாதல், இயற்கை விவசாயம், மின் வாகனங்களைப் பயன்படுத்துவது, சுனாமி ஏன்  வருகிறது போன்ற மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்த வேண்டிய விசயங்களில் நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஈடுபட்டு உள்ளேன். இவற்றை பற்றி விளக்க அறிக்கைகளை நானே என் செலவில் அச்சிட்டு விநியோகித்து உள்ளேன். அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முதலில் இந்த உலக வெப்ப மயமாதலுக்கு மரம் நடுவது பற்றி. 
குளிர் சாதன மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் க்ளோரோ ப்ளுரோ கார்பன்களும் (CFCs)  மோட்டார் வாகனங்கள் வீடு மற்றும் தொழிற் சாலைகளில் எரிபொருள்  எரிப்பதால் வெளிப்படும் கரிய மில வாயு(CO2), விவசாய மற்றும் தொழிற்சாலை சார்ந்த நடவடிக்கைகளால் வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) , நிலக்கரி , இயற்கை வாயு மற்றும் பெட்ரோலிய  எண்ணெய் உற்பத்தி மற்றும் போக்குவரவால் வெளியேறும்  மீத்தேன்(CH4) ஆகிய  பசுமை இல்ல வாயுக்கள் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.(Green House effect).

 உலக வெப்பம் அடைவைத் தடுக்க சூரியனில் இருந்து பூமியில் விழும் ஒளியானது மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பி வைக்கப் பட வேண்டும். ஆனால் இந்த முன் சொன்ன பசுமை இல்ல வாயுக்கள் கண்ணுக்கு தெரிந்த ஒளிக் கதிர்களை விண்வெளிக்கே மீண்டும் திருப்பி அனுப்பும் அதே வேளையில் கண்ணுக்குத் தெரியாத அக சிவப்பு ஒளிக் கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகின்றன. இந்த கண்ணுக்குத் தெரியாத ஒளியால் உலகம் வெப்ப மயமாகிறது.இந்த வெப்ப மயதினால் பனிக் கட்டிகள் உருகியிருப்பதை சமீபத்திய செயற்கை கோள்  படங்கள் தெரிவிக்கின்றன.

பசுமை இல்ல வாயுக்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கரிய மில வாயுவை செயற்கை முறையில் அகற்ற பல ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. இது கண்டுபிடிக்கப் படும் முதல் தொழில் நுட்பத்திற்கு    மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதன் மூலமாவது இத்தைகைய தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்குமா என்று பார்ப்போம்

செயற்கை முறை ஆய்வுகள் ஒரு புறமிருக்க கரிய மில வாயு அகற்றும் இயற்கையின் சிறந்த ஆயுதமான மரங்களை நடுவோம். கரிய மில வாயுவை பெருமளவு அகற்றி வெப்ப மயமாதலைத் தடுப்போம்

இந்த மரம் நடுவதோடு  பெட்ரோலியப் பொருட்களின் பயன் பாட்டை குறைப்பது, மாற்று சக்திகளைப் பயன் படுத்துவது, மறு சுழற்சி உண்டாக்கும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்வது , மறு சுழற்சி செய்வது எல்லாமே இன்றையத் தேவைகள். உணர்ந்து செயல் படுவோம்.புவி வெப்ப மயமாதலால் காரணமாக கடல் மட்டம் 22 மீட்டர் அதிகரிக்கும்உலக வெப்ப மயமாதல் காரணமாக கடல் மட்டம் 22 மீட்டர் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெப்பநிலை தற்போது இருப்பதை விட 2 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உலக வெப்பமயமாதலின் அளவு வேறுபடும் போது கடல் மட்டத்தின் அளவு 5 முதல் 40 மீட்டர் வரை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்  .


பெரியார் தாசன் (டாக்டர் அப்துல்லாஹ்) அவர்கள் பற்றிய சிறப்பு பார்வை..சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21ம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R.B.C.C.C. பள்ளியில் தமது ஆரம்ப கல்வியை கற்ற அவர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971ல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார் சாதீய இழிவுகளையும், சமூக கொடுமைகளையும் கண்டித்து எழுதினார், பேசினார். அவர் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார்தாசனாக மாறினார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றினார். அவரிடம் நகைச்சுவை உணர்வு நிரம்ப காணப்பட்டது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ நிபுணர் என்பதோடு அவர் ஒரு நடிகராகவும் திகழ்ந்தார்.


 பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் நடித்து சமூக அவலங்களை எடுத்துக் காட்டினார். மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். ஏராளமானோருக்கு சிகிட்சை அளித்துள்ளார். அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார்தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தர்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இந்துக்களின் ஆன்மீக குருவாக தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார்தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார்.


இந்து மத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொண்டார். மக்காவில் வைத்து இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ், உடனே உம்ரா என்ற புனித கடமையையும் நிறைவேற்றினார். முஸ்லிமான பிறகு அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் -.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.


சேசாசலம் (பெரியார் தாசன்) இஸ்லாத்தில் இணைந்தது எப்படி?


இஸ்லாத்தை தழுவிய உடன் ரியாதில்  செய்தியாளர்களுக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பேராசிரியர் பெரியார்தாசன்) மக்கள் உரிமைக்கு அளித்த பிரத்யோக பேட்டியின் முக்கிய பகுதிகளை இங்கே அளிக்கிறோம். 


மக்கள் உரிமை : ஆரம்ப காலத்தில் இந்துவாக, நாத்தீகராக, பௌத்தராக பல்வேறு கோணங்களில் முன்னிறுத்தப்பட்ட தாங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணம் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : நாத்தீகராவதற்கு முன்னர் (16 வயதுக்கு முன்பு) ஒரு சைவக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டேன். தினமும் 3 மணி நேரம் பிள்ளையார் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்தவன். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை பொருள் புரியாமலேயே சிறுவயதிலேயே மனனம் செய்து வைத்திருந்தேன். இவை எல்லாமே உடைந்தது எப்போது என்றால் நான் புது முக வகுப்பில் கல்லூரியில் சேர்ந்த போது தந்தை பெரியார் நான் பயின்ற கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதி அதனை என் ஆசிரியர் குமரவேலன் அவர்களிடம் காட்டினேன். அவரும் அதனைப் படித்து விட்டு இந்த கவிதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சேசாஷலம் என்ற உனது பெயரை போட்டுள்ளாயே இது ஐயர் பெயர் போன்று அல்லவா உள்ளது. ஏதாவது புனைப் பெயர் வைக்கலாமே என்றார். நான் உடனே எதுவும் யோசிக்காமல் பெரியார் தாசன் என்று எழுதினேன். அன்று பெரியார் தாசன் என்று பெயரிட்ட போது என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப்போட்டு என்று பக்திப் பழம் போன்று காட்சி தந்தேன்.

பின்னர் பெரியாருடன் பழகி, நூற்களைப் படித்து, நாத்திகத்தில் படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டு பின்னர் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் விளங்குகின்ற கடவுள் மறுப்பாளனாக எல்லா மதங்களையும் விமர்சிப்பவனாக அறியப்பட்டது எல்லாம் தாங்கள் அறிந்ததே.

அதன் பிறகு அம்பேத்கரின் எழுத்துக்களை படித்தபின் புத்தரும் அவரது தர;மமும் என்ற பெயரில் அவர் கடைசியாக எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டேன். செட்யு+ல்ட் இன மக்களுடன் பழகினேன். பவுத்தம் தான் சரியான வழி என்றெண்ணி புத்த மதத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். சித்தார்த்தன் என்று பெயர் மாற்றத்தை கெஜட்டிலும் பதிவு செய்து கொண்டேன்.

2000 ஆவது ஆண்டில் எனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது இந்த நிலையில் நாம் எல்லாம் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு அந்த திருப்புமுனை பெரிதும் காரணமாக இருந்தது. நண்பர் ராஜகிரி தாவூத் பாட்சா அழைப்பின் பெயரில் அபுதாபி வந்தேன். அப்போது எனது வகுப்பு தோழர் என்னுடன் ஆரம்ப பள்ளி முதல் 11 வரை படித்த நண்பர் சிராஜ்தீனை சந்தித்தேன். எங்கள் பள்ளித்தோழர்களான தெய்வசீகாமணி (தமிழருவி மணியன்) கல்கி பகவன் மற்றும் எங்கள் இருவரைப் பற்றியும் எங்கள் ஆசிரியர் ஜனார்த்தனம் விசாரித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 2000ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நடந்த அந்த இரவுத் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த இரவு தொடங்கி  விடியல் வரை  நானும் சிராஜுத்தீனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இஸ்லாமியப் போதகராகவும் இருக்கும் சிராஜுத்தீன் நட்பு ரீதியாக என்னிடம் சில கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளை நினைத்துக் கொண்டே விடிந்த பிறகு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. வெறுமனே படுத்துக் கிடந்தனே தவிர சீராஜுதீன் எழுப்பிய கேள்விகள் என்னை யோசிக்க வைத்தன. இது வரை நாம் செய்து வருவது சரிதானா என்று எண்ணத் தொடங்கினேன். சிராஜுத்தீன் என்னிடம் அதிகமாக பேசவில்லை. சில கேள்விகளை மட்டுமே எழுப்பினார். மற்றபடி எங்கள் இளமை காலம் பற்றி தான் நாங்கள் அதிகம் பேசினோம்.

இறைவன் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்து வருபவன் நான். இறைவன் இல்லவே இல்லை என்றால் இதுவரை நான் செய்தது சரி. ஏனென்றால் ஒரு ஆயிரம் நபர்களையாவது நான் நாத்தீகராக மாற்றியிருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்றால் அப்போது என்னுள் பயம் ஏற்பட்டு விட்டது. இறைவன் இருக்கிறான் என்பது எவ்வாறு எனக்கு உறுதியாகவில்லையோ அது போலவே இறைவன் இல்லை என்பதும் எனக்கு உறுதியாக வில்லை. எனவே நான் எவ்வாறு ஒரு பக்கம் நிற்பது என்று பயம் வந்து விட்டது. உண்மையாகவே இதனை சொல்கிறேன். உலகம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. சிலர் பேர் பெரும் எதிர்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இறைவன் என் பக்கம் இருந்தால் எதிர்ப்பையெல்லாம் சமாளிக்கலாம் என்ற உறுதியுடன் தான் நான் இருக்கிறேன்.

இந்து மதத்தில் தேடினேன், இறைவன் அவ்விடத்தில் இல்லை. பைபிள் படித்திருக்கிறேன். கடவுளுக்கு குழந்தைகள் உண்டு என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. பவுதத்தில் உங்களுக்கு தெரியும் இறைவனைப் பற்றி பேசாதீர்கள் என்று பவுத்தர் சொல்லி விட்டார். இப்படியே நகர்ந்து நகர்ந்து வந்தேன். இந்த நிலையில் தான் ஐ.எப்.டி. (இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட்) பெரியவர் தன்னன் மூஸாவை சந்திக்க நேரிட்டது.

பெரியவர் தன்னன் மூஸா (தொண்டியைச் சேர்ந்த கவிஞர் மூஸா) தான் எழுதிய சௌந்தர்ய முத்திரை என்ற புத்தகத்தை என்னிடம் தந்து அதற்காக அணிந்துரை எழுதி தருமாறு என்னிடம் கேட்டார். இது என்னுள் திருப்பம் ஏற்பட்ட இடமாகும். நானும் அந்த நுhலுக்கு அணிந்துரை எழுதித் தந்தேன். பின்னர் அவர் ஏன் அணிந்துரையை எழுதுவதற்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று பலமுறை யோசித்தேன். பின்னர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் ஐ.எப்.டி.யை சேர்ந்த சிக்கந்தர் என்ற சகோதரை அறிமுகப்படுத்தினார். அவருடன் சில சகோதரர்கள் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை வாசித்தேன். தினமும் 5 மணி நேரம் திருக்குர்ஆனை படிப்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன். அப்போது இறைவன் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகி விட்டது. 2004 ஆம் ஆண்டில் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தை முற்றாக நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீத்   நூற்களை ரஹ்மத் பதிப்பகம் முத்துப்பேட்டை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட போது ஏழு பாகங்களின் வெளியிட்டு விழாவிற்கும்; என்னை அழைத்தார்கள். என்னை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. நாத்தீகப் பிரச்சாரத்தை கைவிட்டது அவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இந்த தேடலில் இருப்பது அவர்களுக்கு தெரியாது. ரோடு டூ மக்கா என்ற ஆங்கில நுhலையும் படித்து அதனை மக்காவை நோக்கி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டேன். இப்படியே எனது ஆய்வு தொடர்ந்தது. அப்துஸ் ஸமது, லத்தீப் (கவிக்கோ) அப்துல் ரஹ்மான், ஜவாஹிருல்லாஹ் முதலியவர்களெல்லாம் எனது நண்பர்கள் தான். அவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறேன். ஆனால் இனங்காட்டிக் கொள்ளாமல் எனது ஆய்வுகளை செய்து வந்தேன். சில பேருக்கு எனக்கு இந்த நாட்டம் உள்ளது என்பது தெரியும்.

நான் கடந்த முறை சவூதி வந்த போது முகம்மது நபி (ஸல்) வாழ்ந்த மக்கா மதீனா நகரங்களை காண ஆசைப்பட்டு நண்பர்களிடம் கூறினேன். ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது நினைத்தேன். இறைவன் இப்போது எனக்கு நாடவில்லை போலும், அடுத்த முறை எனது சொந்த செலவிலேயே காண வேண்டும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இப்போது நான் ரியாத் வந்துள்ள தருணத்தில் நண்பர்கள் சிக்கந்தர், சாதிக் ஆகியோருடன் கலிமா மொழிந்த பிறகு மக்கா செல்லவுள்ளேன். நான் இந்த முறை எனது சொந்த செலவில் வந்துள்ளேன். இந்த முறை நான் அவர்களிடம் மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று சொன்னேன். கலீமா சொன்னால் தான் போக முடியும் என்று சொன்னார்கள். சென்ற முறை நான் இதை சொன்ன போது அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் வழிகாட்டினார்கள். ரப்பாவிற்குச் சென்று நான் கலீமா சொல்லி முஸ்லிம் ஆனேன்.  நான் இஸ்லாத்தில் இணைந்துள்ளதை என் துணைவியாரிடம் தொலைப்பேசியில் கூறினேன். முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் எனது விருப்பம் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னேன். நான்  மேலும் அவர்களிடம் கியாமத் (இறுதி தீர்ப்பு) நாளில் நீயே என் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் யோசி என்று கூறினேன். பிறகு பத்து நிமிடம் கழித்து அவரே என்னுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நான் மகனிடம் பேசி விட்டு உங்களது மார்க்கத்திற்கு வர யோசிக்கிறேன் என்று கூறினார்.

மக்கா மதீனா செல்ல வேண்டும் என்று நான் விரும்பியது அங்கு சென்று பேரீச்சை பழம் வியாபாரம் செய்வதற்காக அல்ல. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டால் தான் அங்கே போக முடியும் என்பது எனக்கு தெரியும். அதை சென்ற முறை நான் கேட்ட போது நண்பர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இப்போது புரிந்துக் கொண்டார்கள்.

மக்கள் உரிமை : தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள பத்து ஆண்டு காலங்கள் ஆனது ஏன்?

டாக்டர் அப்துல்லாஹ் : கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாத்தை அறிவதற்கும், ஆழமாக கற்பதற்கும், அரபி மொழியை கற்பதற்கும் எனது நேரத்தை செலவழித்தேன். இன்னும் மார்க்கத்தை அறிய ஆவலுடன் இருந்தேன். எதை செய்தாலும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்பது என் குணம். ஆகவே இதற்கு பத்து ஆண்டுகள்  ஆகியது.

மக்கள் உரிமை : இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்தியாவில் அறிவிக்காமல் ஏன் சவூதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

டாக்டர் அப்துல்லாஹ் : புனித மண்ணில் இஸ்லாத்தில் ஏற்க வேண்டும் என்பதே  காரணம். மாறாக சவூதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற காரணத்திற்காக அல்ல. இங்கே இருக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக அறியப்பட்டவர்களே தவிர இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்பதை நான்  அறிவேன். உம்ரா முடிந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு இதனை அறிவிக்க போகிறேன்.

மக்கள் உரிமை : வெகுஜன மக்களும், அறிவு ஜீவிகளும் இஸ்லாத்தை சரியான கொள்கை என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பின்னடைவிற்கான காரணங்கள் என்ன?

டாக்டர் அப்துல்லாஹ் : இஸ்லாமியர்கள் பெண்களை பூட்டி வைப்பார்கள். பர்தாவை போட்டு மூடி வைப்பார்கள். அடுத்தவர்களுடன் பழக விட மாட்டார்கள். தானும் பழக மாட்டார்கள். மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள். புகை போடுபவர்கள். இவர்களுடன் சேர்ந்தால் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் பரப்பப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்தவன் நான். எனது 16வயது வரை நான் சென்ற ஒரே முஸ்லிம் வீடு சிராஜுத்தீன் வீடு மட்டும் தான். அந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர்களே அறியாமல் இருப்பதும், பிறர் தவறான கோட்பாட்டை சொல்லும் போது உடனே அதனை எதிர்கொண்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்க முன்வராததும் வருத்தத்திற்குரியது. இஸ்லாம் முஸ்லிம்களுக்காக மட்டும் வந்த மார;க்கம் என்று நான் விளங்கவில்லை. உங்களுக்கே தெரியும் இஸ்லாம் அனைத்து மக்களுக்காவும் இறைவனால் தனது இறுதி நபி மூலம் இறுதி வேதத்துடன் அருளப்பட்டதாகும்.

இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது. அதில் மற்றவர்களை அழைக்காமல் இஸ்லாத்தை மூடி மறைத்த இஸ்லாமியர்களும் உண்டு. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்ப்பவர்களும் உண்டு. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள், கடத்தல்காரர்கள், மோடிமஸ்தான் வேலைப் பார்ப்பவர்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து (மன்னிக்க வேண்டும்) எச்சில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் என்று எண்ணுபவர்கள் உண்டு. இந்த தவறான சித்தரிப்புகளை நீக்க் எத்தனை இஸ்லாமியர்கள் தகுந்த பதில் தந்தார்கள். பதில் சொல்வது நமது கடமையில்லையா? எல்லோருக்குமான அழைப்பு திருக்குர்ஆனில் உள்ளது. அதனை சரியான முறையில் மக்களிடம் நம்மவர்கள் சொல்வதில்லை.

ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

முருகன் கொலை செய்தால் முருகன் கொலை செய்தான் என்றும் நெல்சன் கொள்ளை அடித்தால் நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும்
இதையே முகம்மது செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி செய்து விட்டான் என்று சித்தரிக்கிறார்கள். நான் இப்போது களத்தில் இறங்கியதற்கும் இதுவே காரணம். இன்ஷா அல்லாஹ் என்னுடைய பிரச்சாரம் இதற்கு பயன்பெறும்.

மக்கள் உரிமை : இஸ்லாத்தை தெரிந்து கொள்ள கூடியவர்கள், பிற மதத்தை சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆராய்பவர்களுக்கு தாங்கள் கூறும் சுருக்கமான செய்தி?

டாக்டர் அப்துல்லாஹ் : மிக சுருக்கமான சேதி இது தான். உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார;த்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.

1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்.

மக்கள் உரிமை : உங்கள் எதிர்கால செயல்திட்டம் எவ்வாறு இருக்கும்?

டாக்டர் அப்துல்லாஹ் : இறைவன் நாடுகின்ற வழியில் எல்லாம் இருக்கம்; என்பதே எனது சுருக்கமான பதில்.

எனக்காகவும், இறைவனுக்காகவும் இஸ்லாத்தில் விதித்துள்ள ஐந்து கடமைகளை செய்யப் போகிறேன்.

சமுதாயத்திற்காக என்றால் வழி தவறி சென்று கொண்டிருப்பவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்கு எனது வாக்கு வண்மையை பயன்படுத்துவேன்.

மக்கள் உரிமை : இஸ்லாத்திற்கு எதிராக பரப்பி வரும் வெகுஜன ஊடகங்கள் விஷயத்தில் முஸ்லிம்களின்; நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்----?

டாக்டர் அப்துல்லாஹ் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா-? என்று கேட்டதற்கு சண்டை இல்லாத போர் ஒன்று உள்ளது. அதனை நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். முதலில் சண்டை இல்லாத ஜிஹாத் செய்வோம். இறைவன் நாடினால் என்னை எதற்காகவும் தயார;படுத்திக் கொள்வேன்.

 டாக்டர் அப்துல்லாஹ் மரணம் ...

இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று நுரையீரல் புற்றுநோயால்  மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் மரணமடைந்தார்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.


குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்கு தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.


அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்து பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகையாக நடந்தது.


இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாகஇவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.


வெளிநாட்டுவாழ் நண்பர்கள் கவனத்திற்கு!

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை சமாளிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து Flat டிவி (LCD,LED and Plasma) கொண்டு வந்தால் 36.05 சதவீதம் இறக்குமதி வரி கட்டவேண்டும். மத்திய அரசு அறிவிப்பு!

ஒரு நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்தும் அன்னியச் செலவாணியை அதிகப்படுத்துவதில் இன்று முன்னிற்ப்பது, வளைகுடா வாழ் உழைப்பாளர்களே! அவர்களுக்கு இதுவரை அரசு எந்த சலுகையிம் அழைத்ததில்லை ஆனால் அடி மடியில் கைவைக்காமல் இருந்ததில்லை... அது பிளைட் டிக்கட் ஆனாலும் சரி கஷ்டம்ஸ் கஷ்டங்கங்களானலும் சரி.

கொள்ளையடிச்சு, வரி ஏய்ப்பு செய்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் சிலர் உலக வங்கியில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டுவர வக்கில்லை...

ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?

தப்புத் தப்ப சுயநலத்தோட யோசிக்கிறீங்க! ஆக மொத்தம் நீங்க அரசியல் நடத்த...

ஊரில் சிலர் உண்டு கொளூத்து வாழ.. வாழ்வாதாரம் இழந்து வாடும் வளைகுடா தொழிலாளர்கள்தான் கிடைத்தார்களா..?

பாவம்! குடும்பம் இழந்து, குட்டிகள் இழந்து வியர்வை சிந்தி, கடும் குளிரிலும், கொல்லும் வெப்பத்திலும் உழைத்து, கிடைத்த இடை வேளைகளில் கிடைக்கும் நிழலில் கீழே கிடந்து உறங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து கஷ்டப்படும் (lcd LED கொண்டுவரும் வெளிநாட்டினர் வளைகுடா காரர்களே) வெளிநாட்டினர்தான் கிடைத்தார்கள? படுபாவீங்களா?

இந்த விசயம் சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்கு எட்டுமா? எட்டச் செய்வீர்களா?

தயவு செய்து இதற்க்கு யாரும் “LIKE" போடாதீர்கள்... இது வாழ்நாளில் பெரும் பகுதியை தன் தாய்நாட்டில் வாழமுடியாமல், வெளிநாட்டில் தொலைத்து இறுதியில் நோய்வாய்பட்டு ஊர் திரும்பும் வளைகுடா தியாகிகளின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் தன் மகளுக்கு, மகனுக்கும், மனைவிக்கு என்று வாங்கிக் கொண்டு போகும் பொருள்களுக்கு அநியாய வரி விதித்து, அவன் ஆசையில் மண் அள்ளிப் போடும் செயல். இது கண்டிக்கத்தக்கது என்பதை உண்ர்ந்து இதனை உங்கள் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..


Source..
http://www.emirates247.com/news/emirates/nri-alert-india-bans-duty-free-import-of-tvs-2013-08-20-1.518174
http://www.thehindu.com/business/Economy/3605-duty-on-import-of-highend-tv-sets/article5038815.ece

Saturday, 17 August 2013

பூண்டு ஒரு சிறந்த உணவா, மருந்தா, வாசனைப் பொருளா, அழகு சாதனப் பொருளா ? ஒரு சிறப்பு பார்வை ...

undefinedநமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.

து ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.வெள்ளைப் பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்....

உடலுக்கு பூண்டு மிகவும் சிறறந்தது. அது உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது.
உடம்பிலுள்ள சிறு கட்டிகள், முகப்பருக்கள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.
அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது. பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவு படுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும் ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே வாய்ப்பில்லை.
மேலும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுவதால், எந்தவித நோயும் வராது.
பொதுவாக, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு இரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்காக பூண்டை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே இரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.
காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம். பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
பூண்டில் பலவிதமான சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கல்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. பூச்சிக்கடி, உள்ள இடத்தில் வைத்து தேய்த்து விடலாம.
பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள் சளி நீங்கும்.

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும். இரவில் படுக்க போகும் முன் பூண்டு விதைகளைப் போட்டுக் காய்ச்சி பூண்டையும், பாலையும் சாப்பிட்டால் விடாது இருமல் வருவது நிற்கும். அலர்ஜியால் ஏற்படும் இருமல் உடனடியாக நிற்கும். இரத்தக்காயம் ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும், சம அளவு அரைத்து காயத்தில் வைத்துக் கட்டினால் ஒட்டிக்கொள்ளும், காயம் ஆறின பின் தானாகவே அது விழுந்துவிடும்.

பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.

பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.

இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.

பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

பூண்டுரசம் கபத்தை நீக்கும்.

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.

பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.

பூண்டை அரைத்துக்  கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில்  தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.

பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.

பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம்  வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.


குறிப்பு:
 பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எ¡¢ச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.


இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணாதிசயத்தைதன்னகத்தே கொண்டுள்ள பூண்டை நாமும் பல்வேறுபயன்படுத்தி நோய் நோயின்றியும் வாழ்வோம்...

தொகுப்பு :  .தையுபா அஜ்மல்.