மதுரை விமான நிலையம் அருகே 586.86 ஏக்கரில் துணைக்கோள் நகரம் (satellitte city) அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் இன்று அவர் ஒரு அறிக்கையை அவர் வாசித்தார் அதில் கூறியுள்ளதாவது: மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையைக், கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 19,500 மனைகள் ஒதுக்கீடு இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில், 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு 586 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, எல்லைகள் பிரிக்கப்பட்டு, பிளாட் வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மையப்பகுதியில் 35-50 ஏக்கர் வரை பெரிய மைதானங்கள் அமைகின்றன. எச்.ஐ.ஜி., பிரிவில் 260 பிளாட்டுகள், எம்.ஐ.ஜி., - 1 ல் 460, எம்.ஐ.ஜி., 2ல் 1,660, எல்.ஐ.ஜி., ல் 3,325, இ.டபிள்யு.எஸ்.,ல் 5985 பிளாட்டுகள் அமைகின்றன.இந்த புதிய துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான, சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் ஆகியவைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், இங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உருவாக்கப்படும்.. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் 2015 செப்.,ல் துவங்கும் . இந்தத் துணைக்கோள் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்றார்.
IN ENGLISH..
The satellite township in the outskirts of the city, proposed by the state government a couple of months ago will take shape soon, as work on the project has commenced.
"Tenders have been invited and work has begun for constructing 448 houses to be built in an area of 23 acres in the first phase," said R Murugaiha Pandian, chairman of Tamil Nadu Housing Board (TNHB) who conducted an inspection at the site for the township in Thoppur near Madurai airport.
The satellite township was announced by chief minister J Jayalalithaa in the state assembly on April 4. The township envisages 19,500 residential plots in an area of 586.86 acres at Thoppur and Uchapatti villages, about 15 km from Madurai.
Of the total plots, 14,300 houses would be allotted to low income group families, while 2,500 houses would be allotted to middle income group and 750 houses for high income group people. In addition, 1,950 plots are earmarked for people from economically weak background.
The government had set aside Rs 120 crore for providing basic amenities like drinking water, roads, drainage, streetlights, rainwater harvesting structures and parks in the project. The state government has sanctioned Rs 69 crore as the first instalment to carry out the project through TNHB.
While the work has begun for construction of the first phase of the houses, a layout has been prepared for 1,000 more houses in an area of 50 acres and TNHB is about to get approval from the local planning authority of Madurai. Efforts are on to commence development of housing plots in the remaining land, housing board officials said.
The township was planned in the outskirts in a bid to reduce congestion in the ever-growing city. Madurai, after the expansion of the corporation limits last year, has a population of about 15 lakh. In addition to congestion for living space, the city also reels under heavy traffic chaos thanks to mounting vehicular population.

No comments:
Post a Comment