Wednesday, 29 February 2012

மினரல் வாட்டரை வீட்டிலேயே தயாரிக்கலாம்!!-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் குடிநீரை காசு கொடுத்து வாங்கியாக வேண்டும் என்று யாரேனும் சொல்லியிருந்தால் நாம் வாய்விட்டுச் சிரித்திருப்போம். ஆனால்,  இன்று நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே காசு கொடுத்து ‘கேன் வாட்டர்’ வாங்குகிறோம். ஒரு கேன் சில நூறுகளை செலவழித்து வாங்க வேண்டியிருக்கிறது. ஆயினும் அந்த கேனில் வரும் நீர் எப்படி தயாரிக்கப்பட்டது, எத்தனை நாளாக கேனில் அடைத்து வைக்கப்பட்டது என்பதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. அதைவிட இது நிச்சயமாக பாதுகாக்கப்பட்டகுடிநீர்தானா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.


சோடிஸ் என்பது ....


சூரிய ஒளி மூலம் தண்ணீரை சுத்திகரிக்கும் எளியமுறைகளை தான் சோடிஸ்(SODIS – Solar Water disinfection) என்கிறோம்.  சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த நீரியல் ஆய்வு நிறுவனமான ஏவாக், இந்த முறையை கண்டறிந்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் ஏழை மக்களுக்கு சோடிஸ் ஒரு வரப்பிரசாதம். நீரில் உருவாகும் உடல்நலத்துக்கு எதிரான நுண்கிருமிகளை இம்முறை பெரும்பாலும் அழித்துவிடுகிறது என்று பல்வேறு அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO),யூனிசெஃப் மற்றும் ரெட் க்ராஸ் நிறுவனங்கள் இம்முறையை மக்களுக்கு பரிந்துரைக்கின்றன.


எப்படி தயாரிப்பது?

சோடிஸ் முறை மிகவும் சுலபமானது. பெட் (PET) பாட்டில்கள் இதற்குப் போதுமானது. கண்ணாடி பாட்டில்களும் பயன்படுத்தலாம். ஆனால், சூரிய ஒளியை கண்ணாடி பாட்டில்களைவிட பெட் பாட்டில்கள் எளிமையாக கடத்தும். குளிர்பானங்கள் கூட பெட் பாட்டில்களில்தான் இப்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.  தரமான பெட் (PET) பாட்டில்கள் குறைந்த விலைக்கே கடைகளில் கிடைகின்றன. அதிகபட்சம் மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட் பாட்டில்கள்தான் இம்முறைக்கு ஏற்றவை. வண்ணங்களில் கிடைக்கும் பெட் பாட்டில்கள்சூரிய ஒளி ஊடுருவ தடையாக இருக்கும். எனவே, வண்ணமற்ற பாட்டில்தான் சிறந்தது.

சோப்பு கொண்டு நன்கு கழுவப்பட்ட பெட் பாட்டிலில் குடிநீரை நிரப்பி, குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் நேரடியாக சூரிய ஒளி படும்படி வைத்துவிட்டால் போதும். சூரியக் கதிரில் வெளிப்படும் அல்ட்ரா வயலட்(Ultra Violet) கதிர்கள் செய்யும் மாயத்தால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ரெடி. நீங்கள் காசு கொடுத்து கேன் வாட்டர் வாங்குபவராக இருந்தாலும், சோடிஸ் முறையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது.


மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் அடுத்தடுத்த நாட்களில் பாட்டிலை வெயிலில் காயவைக்க வேண்டும். தொடர்ச்சியாக மழை பொழியும் மழை நாட்களில் சோடிஸ் முறையை செயல்படுத்த முடியாது. அப்போது வானில் இருந்து பொழியும் நேரடி மழைநீரை சேகரித்து அருந்துவதே பாதுகாப்பானது.

சோடிஸ் முறை வீடுகளுக்கு மட்டுமே ஏதுவானது. அதிகளவிலான குடிநீரைப் பயன்படுத்தும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்களில் செயல்படுத்துவது கடினம். ஆனாலும் இங்கே புழங்கும் தனி மனிதர்கள் தமக்கென்று பிரத்யேகமாகபாதுகாக்கப்பட்ட குடிநீரை தயாரித்துக் கொள்ளமுடியும்.


நன்றி: புதிய தலைமுறை

Sitll are you single?


Being single does not mean that you are weak, it's mean you are strong enough to wait for what you really deserve. If you are happy and confident, you are more likely to attract the right person into your life in the first place. And most importantly when Allah (God) knows you’re ready for the responsibility of commitment, He will reveal the right person under the right circumstances. You are not going to displease Allah if you’re single (by Qadar). But you may displease Allah by your lack of thankfulness and weakness in your reliance (tawakul) in Him and giving up on life altogether. Wait patiently and be optimistic.


Some people are single but they are mentally committed to someone. That’s not very healthy for your faith.
It’s all upto Allah. The All-Wise, The Master who knows the secrets of your hearts even if you don’t mention them, The One who knows his weaknesses and your weaknesses and how this combination would destroy your and his life, He wouldn't let us suffer like that. You need to be patient and have faith that He will provide for you. He will give you better. He will make you happy again. He will do that because He is so Merciful. You need to trust Him. 

Single? Well I don't even care about my status cause I know Allah is saving me for someone special.
You need to put your faith in the One who created you. Don’t waste your time searching and wishing. One day someone's gonna walk into your life and make you realize why it never worked out with anyone else! Grow, be patient and be ready, you’ll see Allah will give you a love story far better than you could ever dream of.

Single and upset?
You might be not married to any man, like Maryam [Mary] (Allah Be Pleased With Her) and Allah can make your rank higher than any women on the Earth. Know your priorities. Love and trust is with Allah first.
Yes it is fact that there are many advantages to being in a relationship or marriage, but do not worry or fret if you are still single. Not everything is within our control and sometimes we do have to accept fate. So, why worry unnecessarily over something that we do not have control over? 
Do not let being single thought traped you, make you a slave to the idea of finding someone, deprive you of your ability to enjoy life and cause desperation, depression, and fear. Don’t forget that your life does not end if certain things don’t come your way. Did Allah say anywhere in the Quran and Sunnah that you are worthless if you don’t get married? Being single is not a death sentence, it has own charm you enjoy life in your own way, you get more time to be with yourself, to do a variety of things, indeed you have relationship with freedom. You have lots to do, you have yourself, your friends, your family, and you have Allah. Get out of your mental cage, make your life’s vehicle move on. 

You are still single because it’s all up to Allah (God), our future partners have or have not been already determined 50,000 years ago before this world existed. It’s because of His wisdom that you’re still single. So don’t think you care for yourself more than Allah cares for you! Appreciate His wisdom.
Don’t worry too much, to have a positive attitude and enjoy your single life. Whether you are in a relationship or not, you want to be happy. If you aren't happy single, then you won't be happy taken. Happiness comes from within not from anybody else. Research shows that the number one ingredient for happiness, by far, is optimism, so change your approach learn to have more fun be happy and enjoy your life either your are single or not.
Read a related article here--> Single And Upset?

Do You Want to Develop You Relationship With Your Circle ?

Three-Word Phrases, can be tools to help develop every relationship. 
There are many things that you can do to strengthen your relationships. Often the most effective thing you can do involves saying just three words. When spoken sincerely, these statements often have the power to develop new friendships, deepen old ones and even bring healing to relationships that have soured.
The following three-word phrases can be tools to help develop every relationship.


Can I Help?
Good friends see a need and then try to fill it. When they see a hurt they do what they can to heal it. Without being asked, they jump in and help out.


I understand you.
People become closer and enjoy each other more when the other person accepts and understands them. Letting your spouse know - in so many little ways - that you understand them, is one of the most powerful tools for healing your relationship. And this can apply to any relationship.

 I respect you.
Respect is another way of showing love. Respect demonstrates that another person is a true equal. If you talk to your children as if they were adults you will strengthen the bonds and become closer friends. This applies to all interpersonal relationships.


 I miss you.


Perhaps more marriages could be saved and strengthened if couples simply and sincerely said to each other “I miss you.” This powerful affirmation tells partners they are wanted, needed, desired and loved. Consider how important you would feel, if you received an unexpected phone call from your spouse in the middle of your workday, just to say “I miss you.”


                                  Maybe you’re right.
This phrase is very effective in diffusing an argument. The implication when you say “maybe you’re right” is the humility of admitting, “maybe I’m wrong”. Let’s face it. When you have an argument with someone, all you normally do is solidify the other person’s point of view. They, or you, will not likely change their position and you run the risk of seriously damaging the relationship between you. Saying “maybe you’re right” can open the door to explore the subject more. You may then have the opportunity to express your view in a way that is understandable to the other person. 

 Please forgive me.
Many broken relationships could be restored and healed if people would admit their mistakes and ask for forgiveness. All of us are vulnerable to faults, foibles and failures. A man should never be ashamed to own up that he has been in the wrong, which is saying, in other words, that he is wiser today than he was yesterday.

I thank you.
Gratitude is an exquisite form of courtesy. People who enjoy the companionship of good, close friends are those who don’t take daily courtesies for granted. They are quick to thank their friends for their many expressions of kindness. On the other hand, people whose circle of friends is severely constricted often do not have the attitude of gratitude.

Count on me.
A friend is one who walks in when others walk out. Loyalty is an essential ingredient for true friendship. It is the emotional glue that bonds people. Those that are rich in their relationships tend to be steady and true friends. When troubles come, a good friend is there indicating “you can count on me.”
I’ll be there.If you have ever had to call a friend in the middle of the night, to take a sick child to hospital, or when your car has broken down some miles from home, you will know how good it feels to hear the phrase “I’ll be there.” Being there for another person is the greatest gift we can give. When we are truly present for other people, important things happen to them and us. 
We are renewed in love and friendship. We are restored emotionally and spiritually. Being there is at the very core of civility.Go for it.
We are all unique individuals. Don’t try to get your friends to conform to your ideals. Support them in pursuing their interests, no matter how far out they seem to you. God has given everyone dreams, dreams that are unique to that person only. Support and encourage your friends to follow their dreams. Tell them to “go for it.”
I love you.
Perhaps the most important three words that you can say. Telling someone that you truly love them satisfies a person’s deepest emotional needs. The need to belong, to feel appreciated and to be wanted. Your spouse, your children, your friends and you, all need to hear those three little words: “I love you.” Love is a choice. You can love even when the feeling is gone.

When you love someone with it comes trust. Saying words of trust in any relationship will strengthens the bond. 'I trust you' is such simple statement but gives the wonderful feeling of being trusted.
Prepared & Collection by M.Ajmal Khan.

Monday, 27 February 2012

ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது எப்படி?

ந்த உலகத்திலேயே மிகவும் பொறுப்பு மிக்க பணி எது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதா பிரதம மந்திரியாக இருப்பதா? அல்லது இராணுவத்தின் தலைமை பொறுப்பபை வகிப்பதா? இதில் எதுவுமே இல்லை ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது தான் சிறப்புமிக்க சிரமமிக்க பணியாகும்

சூரியன் உதிக்கவில்லை என்றால் உலகத்தில் எதுவுமே நடக்காது காற்று வீசாது கடலில் அலையடிக்காது பசும்புல் வெளியெல்லாம் காய்ந்து போய்விடும் ஜீவராசிகள் அனைத்தும் பூண்டற்று போய்விடும் உலகத்தின் உயிர் துடிப்பிற்கு சூரியன் எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் உலக சமூகமானது அமைதியாக வாழ்வாங்கு வாழ நல்ல பெற்றோர்களாக மனிதர்கள் இருக்கவேண்டும் என்பது

இன்று இல்லற வாசிகளாக வாழுகின்ற பலருக்கு குடும்பம் நடத்துவது என்றால் உழைப்பது உண்பது உறங்குவது சமயம் கிடைத்தால் ஆடிபாடி களிப்பது என்பது மட்டும்தான் தெரிகிறது ஆனால் இல்லறம் என்பது இவைமட்டுமல்ல தனி நலத்தையும் தாண்டி மிகப்பெரும் பொதுநலம் இல்லறம் என்ற சோலைக்குள் புதையல் பூவாக மலர்ந்து மறைந்து கிடக்கிறது கணவன் மனைவி மட்டும் இன்புற்று வாழ்வதல்ல இல்லறம் நல்ல குழந்தைகளை இந்த நாட்டிற்கு அல்ல அல்ல உலகத்திற்கு வழங்குவதே இல்லறவாசிகளின் தலையாய பணியாகும்


நான் பிள்ளை பெற்றால் அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகி சம்பாதித்து என்னை காப்பாற்ற வேண்டும் ஒருவேளை அவன் என்னை கைவிட்டாலும் எனது மூதாதையரின் பிரநிதியாக இன்னாரின் வாரிசு என்று ஊரார் புகழ வாழவேண்டும் அதுவுமில்லை என்றால் அவன் மட்டுமாவது சந்தோசமாக இருக்க வேண்டும் இதுதான் ஓவ்வொரு தாய்தகப்பனின் எண்ணமும் பேச்சுமாகும் இதிலெங்கே பொதுநலம் இருக்கிறது என்று சிலர் எண்ணக்கூடும்

என்மகனை வெறும் சுயநலத்தோடு நான் வளர்க்க விரும்பினால் அவனது விருப்பத்திற்கு மட்டுமே ஆசைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன் குடிக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறானா மதுவை கிண்ணத்தில் ஊத்தி கொடுக்க எனது கை தயங்காது மங்கையர்களோடு கூடி களிக்க ஆசைபடுகிறானா விலைமகளிரின் இல்லத்திற்கு அழைத்து செல்வதில் நானே பெருமையடைவேன் போதை பொருட்களையும் பாதைமாரும் உபதேசங்களையும் அவனுக்கு நானே கொடுப்பேன்

ஆனால் உலகத்தில் இதுவரை எந்த பெற்றோரும் இந்த விபரீதத்தை செய்ததுமில்லை செய்ய நினைப்பதுமில்லை நான்தான் கெட்டு போய்விட்டேன் காய்ந்து போன ஒலைமட்டையாக கரிந்து போய்விட்டேன் என் பிள்ளை அப்படி இருக்க கூடாது அவன் வீதிலே நடந்துபோனால் மகராசன் போகிறான் பாரென்று நாலுபேர் கையெடுத்து வணங்க வேண்டும் ஐயோ இவனா படுபாதகன் இவனன்றோ என்று காறித்துப்ப கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்


அதனால் தான் இந்த் மனித சமூகம் இன்றும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது உலகில் எதோ ஒரு மூலையிலாவது சன்மார்க்கத்தின் மங்களகரமான கொடி பறந்துகொண்டிருக்கிறது மனிதன் தெரிந்தோ தெரியாமலோ தான் ஏற்றிருக்கும் தாய் தகப்பன் என்ற பொறுப்பை மிக கவனத்துடன் கடைப்பிடித்து வருகிறான்

ஆனாலும் சில பெற்றோர்கள் தங்களது பொறுப்பை மறந்துவிடுகிறார்கள் அல்லது இன்னதென்று தெரியாமல் கைநழுவ விட்டுவிடுகிறார்கள் ஒரு குழந்தையின் சந்தோசம் அவன் கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் விரும்பியதெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் இருக்கிறதென்று தவறான கணக்கை தடுமாற்றத்தோடு போட்டு தன்னையும் கெடுத்து தனது பிள்ளையையும் கெடுத்து சமூதாயத்தில் அழிக்கவே முடியாத விபரீத காயங்களை உருவாக்கி கொள்கிறார்கள்

சமீபத்தில் ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது ஒரு சிறு பிள்ளையின் சிதைந்து போன மனதை காட்டவில்லை சீரழிந்து போன பொறுப்பற்று போன ஒரு பெற்றோரின் அவலத்தை தான் நமக்கு காட்டுகிறது பிள்ளையின் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவழிக்க தெரிந்த அவர்களுக்கு பிள்ளையின் உடல் வளர்ச்சிக்காக விதவிதமான உணவுகளை கொடுக்க தெரிந்த அவர்களுக்கு அவனின் மன வளர்ச்சிக்கான ஒழுக்க வளர்ச்சிக்கான பண்பாட்டு போதனையை கொடுக்க தெரியவில்லை


பிள்ளை பெறுவது குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி செல்வது தான் என்றாலும் அந்த குழந்தைக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எல்லாவற்றிக்கும் மேலாக சகலரையும் நேசிக்க கற்றுகொடுக்கவில்லை என்றால் குடும்பம் என்பது காற்றில் அகப்பட்ட சிலந்தி கூடுபோல கலைந்து போய்விடும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும் ஒரு குழந்தை பள்ளியில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் அவனது வாழ்நாள் முழுவதும் கூடவருவதில்லை அது வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் வழிநடத்துவதில்லை வீட்டில் அம்மா அப்பாவிடம் கற்றுக்கொள்வது தான் சுடுகாட்டுக்கு செல்லும்வரை கூடவரும்

பள்ளிபடிப்பு அறிவை மட்டும் தான் தரும் தாய் தந்தையரின் அரவணைப்பு அறிவோடு கூடிய அன்பையும் தரும் இதை மறந்தால் நம் ஒவ்வொருவரின் வாரிசுகளும் அந்த கொலை செய்த சிறுவனை போல தான் உருவாவார்கள் அதனால் பிள்ளை பெறுவது பிள்ளையை வளர்ப்பது விளையாட்டல்ல அது ஒரு தவம் அது ஒரு யோகம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும்

நான் என் தகப்பனிடம் கற்றுக்கொள்ளாத எந்த ஒழுக்கத்தையும் வேறு எவரிடமும் கற்றுக்கொள்ள முடியாது எனது தாய் தராத அன்பு வேறுயார் தந்தாலும் எனக்கு புரியாது எனவே பெற்றோராக இருபவர்களும் பெற்றோராக போகிறவர்களும் மீண்டும் ஒருமுறை நிதானமாக யோசனை செய்யுங்கள் பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் சம்பாதித்து கொள்ளலாம் நல்ல குழந்தையை இளம்வயதில் மட்டுமே சம்பாதிக்க முடியும் எனவே தம்பதிகளின் சண்டைகளை விட்டுவிட்டு நல்ல பெற்றோராக வாழ முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் உங்கள் குழந்தை வருங்கலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாழ வேண்டிய அவல நிலையை நீங்களே கொடுத்தவர் ஆவிர்கள்.

தமிழில் குரான்(Holy Quran in Tamil Software)அருமையான இலவசமென்பொருள்

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.

யோகாசனம் ஏன்செய்யவேண்டும்? யோகா செய்வது எப்படி?


வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 

 • உட்காசனம்
 • பத்மாசனம்
 • வீராசனம்
 • யோகமுத்ரா
 • உத்தீதபத்மாசனம்
 • சானுசீரானம்
 • பஸ்திமோத்தாசனம்
 • உத்தானபாத ஆசனம்
 • நவாசனம்
 • விபரீதகரணி
 • சர்வாங்காசனம்
 • ஹலாசனம்
 • மச்சாசனம்
 • சப்தவசீராசனம்
 • புசங்காசனம்
 • சலபாசனம்
 • தணுராசனம்
 • வச்சிராசனம்
 • மயூராசனம்
 • உசர்ட்டாசனம்
 • மகாமுத்ரா
 • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
 • சிரசாசனம்
 • சவாசனம்
 • மயுராசனம்
 • உசர்ட்டாசனம்
 • அர்த்த மத்ச்யோந்திராசனம்
 • அர்த்த சிரசானம்
 • சிரசாசனம்
 • நின்ற பாத ஆசனம்
 • பிறையாசனம்
 • பாதாசுத்தானம்
 • திருகோணசனம்
 • கோணாசனம்
 • உட்டியானா
 • நெளலி
 • சக்கராசனம்
 • சவாசனம்/சாந்தியாசனம்
 • பவனமுத்தாசனம்
 • கந்தபீடாசனம்
 • கோரசா ஆசனம்
 • மிருகாசனம்
 • நடராசா ஆசனம்
 • ஊர்த்துவ பதமாசனம்
 • பிரானாசனம்
 • சம்பூரண சபீடாசனம்
 • சதுரகோனோசனம்
 • ஆகர்சன தனூராசனம்
 • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
 • உருக்காசனம்
 • ஏக அத்த புசங்காசனம்
 • யோகா நித்திரை
 • சாக்கோராசனம்
 • கலா பைரப ஆசனம்
 • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
 • கவையாசனம்
 • பூர்ண நவாசனம்
 • முக்த அகத்த சிரசாசனம்
 • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
 •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
 • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
 • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
 • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
 • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம் 

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்  

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 

விபரீதகரணி 

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   

புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
 
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 

You Tube மூலம் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம்...

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.

இதற்க்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.


 
இந்த தளத்திற்கு செல்ல - youtube.com/boxoffice

உங்கள்மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம்...

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.


தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
         
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.தளத்திற்க்கு செல்ல சுட்டி


           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்..

 

Saturday, 25 February 2012

முல்லை பெரியாறு வரலாறு-ஒரு பார்வை ..

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.


அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.


தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.


உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.


2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.


1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.


எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.


ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.


இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.


அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.


தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.


நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.


முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.


பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.


அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.


கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.


இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.


அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.


காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.


பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.


புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.


தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.


பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?


மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.


புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் .
தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.


ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.


பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.


இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். 

பென்னி குக்  


பென்னி குக்
             பென்னி குக், முல்லைப் பெரியாறு அணையின் நாயகன். ஆங்கிலேயரான இவர் 1841 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள், தமிழர்களின் திருநாளான பொங்கல் தினத்தன்று மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிறந்தவர். இவரது தந்தை பிரிகேடியர் ஜெனரல் ஜான் பென்னி குக் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்தான் பென்னி குக். இலண்டனில் பொறியியல் படித்து முடித்தவுடன் 1858 இல் இந்தியாவில் கால் பதித்தார்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு உயர் கல்வி கற்பதற்காகத் தாயகம் திரும்பினார். 1862 இல் மீண்டும் இந்தியா திரும்பி மாவட்ட உயர் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
     அபிசீனியாவில் போர் மூளவே, ஆங்கிலேய இராணுவத்தில் இணைந்து போர்முனைக்குச் சென்றவர், மீண்டும் 1867 இல் இந்தியா திரும்பினார். ஆங்கிலேயராக இருந்த போதிலும் இந்தியா இவரை வா, வா என்று அழைத்துக் கொண்டேயிருந்தது, இந்தியாவின் மீதும், குறிப்பாகத் தமிழர்களின் மீதும் மாறா பாசம் கொண்டவர் பென்னி குக். இந்தியா திரும்பிய பென்னி குக் அவர்களிடம், அன்றைய ஆங்கிலேய அரசால், பெரியாறு அணை சர்வே திட்ட அலுவலர் பொறுப்பு வழங்கப் பெற்றது.
முல்லை பெரியாறு பருந்துப் பார்வை
பெரியாறு அணையினை எங்கே கட்டினால் சரியாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரும் பணியினை மகிழ்வுடன் ஏற்றார். காடு மேடு என மெய்வருத்தம் பாராமல் அலைந்து, பெரியாறு அனணக்கான இடத்தினைத் தேர்வு செய்து, அணையின் உயரம், தேங்கும் தண்ணீரின் அளவு, அணையின் வரைபடம், திட்ட மதிப்பீடு முதலான பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்நிலையில் 1869 இல் மீண்டும் இலண்டனிலிருந்து அழைப்பு வரவே இலண்டன் பயணமானார்.
     மீண்டும் 1872 இல் இந்தியா திரும்பினார். இம்முறை தென் ஆற்காடு மாவட்ட பொறியாளர் பொறுப்பு இவருக்காகக் காத்திருந்தது. மேலும் இரண்டாண்டுகளில் முல்லைப் பெரியாறு பொறுப்பும் வந்து சேர்ந்தது.
     அணையின் கட்டுமானப் பணிக்கான அனைத்துக் கோப்புகளுக்கும் அனுமதி வழங்கப் பட்ட நிலையில்,1876 மற்றும் 1877 ஆம் ஆண்டுகளில் இந்தியவே மாபெரும், கொடிய கோரப் பஞ்சத்தின் பிடிகளில் சிக்கித் தினறிப் போனது. பஞ்சத்தினைப் போக்க அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதால் அணை கட்டும் பணி தள்ளிப் போடப் பட்டது. இதனால் ஆறு ஆண்டுகள் அணை கட்டும் பணியாணது எழுத்து வடிவத்தில், தாட்களிலேயே முடங்கிப் போனது.
     1882 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் முல்லைப் பெரியாறு தொடர்பான கோப்புகள் மீண்டும் பென்னி குக்கிடம் ஒப்படைக்கப் பட்டன.
     1886 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் , திருவாங்கூர் மகாராசாவுடன் 999 ஆண்டுகாலக் குத்தகைக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் பணியினைத் துவக்க அனுமதி அளிக்கவே பென்னி குக், தனது கனவுத் திட்டத்திற்கு உருவம் கொடுக்கும் செயலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினார்.அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
     1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பெய்த மழையினை, சாதாரணமாக மழை என்று கூறக் கூடாது, பேய் மழை என்றே கூறலாம். ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல், நான்கு மணிநேரம் மழை ஆடிய கோரத் தாண்டவத்தின் விளைவாக வேரோடு அடித்துச் செல்லப் பட்ட பல மரங்களுடன் சேர்ந்து,  அனணயின் இரண்டு நீர் போக்கிகளும் அடித்துச் செல்லப் பட்டன.சற்றும் மனம் தளராத பென்னி குக், எப்பாடு பட்டாகினும் அணையினைக் கட்டியேத் தீர்வது என்னும் உறுதியான நிலைப் பாட்டில். பணியினை மீண்டும் தொடங்கினார்.
    1894 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணைக் கட்டுப் பகுதியில் பரவிய காலரா நோயானது, ஆங்கிலேயப் பொறியாளர்கள் உட்பட, சுமார் 45 பணியாளர்களைப் பலிவாங்கியது. கட்டுமானப் பணியின் போது இறந்தவர்களின் கல்லறைகள் இன்றும் அங்கே, தியாகச் சின்னங்களாய் நிலைத்து நிற்கின்றன.
     1890 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பேய் மழையானது தனது கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியது. இதன் விளைவாக தடுப்புக்காக வைக்கப்பெற்றிருந்த மணல் மூட்டைகள் அத்தனையும் சிதறியதோடு, அணையின் தரைத் தளமுமம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
     பென்னி குக் பல ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து உழைத்த உழைப்பு ஒரே நாளில் வீணானது.
     முல்லைப் பெரியாறு என்பது பென்னி குக்கைப் பொறுத்தவரையில், கட்டிடமல்ல, தண்ணீரைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்குமல்லை,அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். பல ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலங்களில், தென்றலாய் தவழ்ந்து, பயிராய் எழுந்து, உணவாய் உருப்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கக் கூடிய அட்சய பாத்திரம். பென்னிக் குக் வாய்விட்டுக் கதறினார். அனலிடைப் புழுவாய்த் தவித்தார். இயற்கையே ஏன் இவ்வாறு செய்தாய்? நல்ல நோக்கத்திற்காகச் செய்யும் செயலுக்கு இவ்வளவு தடைகளை ஏன் உருவாக்குகிறாய்? எனக் கொதித்தார்.

            
ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்ட பென்னிக் குக், அணையின் கட்டுமானப் பணியினை மீண்டும்  தொடங்குவதற்காக ஆங்கிலேயே அரசுக்கு கடிதம் எழுதி, பண உதவி கோரினார். ஆனால் ஆங்கிலேயே அரசாங்கமோ எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்து இனியும் செலவு செய்ய தயாராக இல்லை என இரு கைகளையும் விரித்து விட்டது.
                    தேடிச் சோறுநிதந்  தின்று - பல
                          சின்னஞ்  சிறுகதைகள் பேசி மனம்
                     வாடித்  துன்பமிக  வுழன்று - பிறர்
                         வாடப்  பல செயல்கள்  செய்து - நரை
                    கூடிக்  கிழப்பருவ  மெய்தி  - கொடுங்
                         கூற்றுக்  கிரையெனப்  பின்மாயும் - பல
                    வேடிக்கை  மனிதரைப்  போலே - நான்
                        வீழ்வே  னென்றுநினைத்  தாயோ?
நான் வீழ மாட்டேன், சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பெற்று எழும் பீனிக்ஸ் பறவை போல, மீண்டு எழுவேன், தொடங்கிய செயலினை முடிக்காமல் கண் துஞ்ச மாட்டேன் என்று வீறு கொண்டு எழுந்தார் பென்னி குக்.
      தொடங்கிய வேலையினை முடிக்காமல் இங்கிருந்து நகரக்கூடாது, எத்துனையோ தடைகளைத் தகர்த்தெறிந்துத விட்டோம், இத் தடையையும் கடக்க வேண்டும், நிச்சயம் இதுவும் கடந்து போகும். ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கப் போகும் அணை இது, கேவலம் பணம் இல்லை என்பதால் இத்திட்டத்தைக் கைவிடுவதா? பணத்தினை அரசு தராவிட்டால் என்ன? மக்கள் இருக்கிறார்கள், மக்களோடு இணைந்து இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீருவது என்று தீர்க்கமாய் முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
      செல்வந்தர்கள் பலரை அணுகி நிதியுதவி செய்யுமாறு வேண்டினார்.சுருளியாறும், கொட்டக்குடி ஆறும் சந்திக்கும் தேனி என்னும் கூட்டுரோடு பகுதிக்கு அருகே வசித்து வந்த பழனிச் செட்டி என்னும் ஒரு தமிழர் முதல் உதவிக் கரத்தை நீட்டினார். ஏலச் சாகுபடி செய்து வந்த பழனிச் செட்டி அவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டாயிரம் வெள்ளி நாணயங்களை தனது அன்பளிப்பாக பென்னி குக்கிடம் வழங்கினார். மெய் சிலிர்த்துப் போனார் பென்னி குக். பின்னாளில் பழனிச் செட்டிப் பட்டி என்னும் ஊருக்கு தடுப்பு அணை ஒன்றினை கட்டி, அதற்கு காலவாய் ஏற்படுத்தி, அந்தக் காலவாய் மூலம், பழனிச் செட்டி வசித்த இடத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் பாசனம் பெற எற்பாடு செய்தார். தடுப்பு அணையினைப் பராமரிக்கும் உரிமையினை பழநியப்பச் செட்டிக்கே வழங்கினார். இன்றும் கூட பழனியப்ப பாசன பரிபாலன சபை என்னும் பெயரில் வளர்ந்து நிற்கின்றது அந்த அணை.
       நிதியுதவி கிடைக்கக் கிடைக்க முல்லைப் பெரியாறு அணையும் உயர்ந்தது. நிதி கிடைக்காதபோது பணி நிறுத்திவைக்கப் பட்டது. நிதி கிடைத்தால் பணி செய்வதும், மற்ற நேரங்களில்  நிதி திரட்ட அலைவதுமாக பென்னி குக்கின் நேரம் கழிந்தது.ஒரு நாள் பென்னி குக்கின் மனதில், மின்னலாய் ஒரு எண்ணம் பளிச்சென உதயமாயிற்று. இப்படி ஓடி, ஓடி நிதி திரட்டினால் அணையின் கட்டுமானப் பணியானது தனது ஆயுட்காலத்தில் நிறைவேறாது என்பது புரிந்தது. உடனே இலண்டன் சென்றார். தனது அத்தனைச் சொத்துக்ளையும் விற்று, பணம் திரட்டிக் கொண்டு வந்து, அணையின் கட்டுமானப் பணியினைத் தொடர்ந்தார்.
பாலார் பட்டியில் பென்னி குக் பொங்கல்(நன்றி- குமுதம்)
     அரசாங்கம் செய்திட வேண்டியப் பணியினைத் தனியொரு ஆளாக, தன் தோளில் சுமந்து, தனது சொந்த நிதியினைக் கொண்டு அணையினைக் கட்டி முடித்தார்.
      இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, பென்னி குக்கின் உதிரத்தாலும், வேர்வையாலும் கட்டப் பெற்ற அணையாகும்.அப்பகுதி மக்களின் வேர்வையும், உழைப்பும், செல்வமும், உயிரும் முல்லைப் பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு மணல் துகளிலும் கலந்திருக்கின்றது.
 ( நன்றி குமுதம் , 11,1,2012)
     
    தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற பெயர் பென்னி குக். இன்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பென்னி குக் என்று பெயரிடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையினால், தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததை எண்ணி, இன்றும், பாலார் பட்டி மற்றும் ஏனைய கிராம மக்கள் பென்னி குக் பிறந்த
நாளான, சனவரி 15 ஆம் தேதியினை, பொங்கல் விழாவிற்குப் பதிலாக, பென்னி குக் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கல் வைத்து படையலிட்டு மகிழ்கின்றார்கள். கேட்டால் இதுதான் தமிழர் திருநாள் என்கிறார்கள்.
(நன்றி -குமுதம் 11.1.2012)
       ஆம் ஒரு ஆங்கிலேயர், தமிழராக போற்றப் படும், தெய்வமாக வணங்கப்படும்  மாபெரும் வரலாற்று நிகழ்வு என்றே இதனைக் கூறலாம்.
     விவசாயிகரளுக்காகக் கட்டப்பெற்ற அணை முல்லைப் பெரியாறு. எந்தவொரு  அரசாங்கத்திற்காகவும் அது கட்டப் படவில்லை. மக்கள் நீர் வளம் பெற்று வாழ வேண்டும் என்பதே பென்னி குக்கின் கனவு. அக் கனவை நிறைவேற்றத்தான் தன் சொத்துக்களை விற்று அணையை உருவாக்கினார்.
                        
                        இப்புவியில்
                        நான் வந்த செல்வது
                        ஒரு முறைதான்
                        எனவே
                        நான் இங்கே
                        ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
                        இதனை
                        தள்ளி வைப்பதற்கோ
                        அல்லது
                        தவிர்ப்பதற்கோ இடமில்லை
                        ஏனெனில்
                        மீண்டும் ஒரு முறை
                        நான்
                        இப்புவியில் வரப் போவதில்லை
பென்னி குக்கின் இக் கவிதை வரிகளைப் பாருங்கள், உதடுகளால் உச்சரித்துப் பாருங்கள்,முல்லைப் பெரியாறு அணையின் நீர்போல மனதில் தேக்கிப் பாருங்கள், ஒரு நற்செயலை தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை என்று எண்ணி, பென்னி குக் செயலில் சாதித்துக் காட்டிய அணையினைப் பாருங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணை
       கேரளாவில் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள் பாம்பார்,பவானி, கபினி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. மீதமுள்ள 41 ஆறுகளும் மேற்கு நோக்கிப் பயணித்து அரபிக் கடலிலோ அல்லது ஏரிகளிலோ தங்கள் பயணத்தை முடிக்கின்றன.
     தமிழகத்தின் சிவகிரி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1830 மீட்டர் உயரத்தில் தோற்றம் பெறுவது பெரியாறு நதியாகும். பெரியாறு நதி பயணிக்கும் மொத்த தொலைவு சுமார் 300  கி.மீ., ஆகும். தமிழகத்தில் 56 கி.மீ, தொலைவிற்கும், கேரளாவில் 244 கி.மீ., தொலைவிற்கும் பயணிக்கும் பெரியாறு, இரண்டாகப் பிரிந்து அரபிக் கடலிலும், கொச்சியின் வேம்பநாடு ஏரியிலும் கலக்கின்றது.
     44 ஆறுகள் பாயும் கேரளாவில் 18 அணைகள் உள்ளன. இவற்றுள் மழம்புழா அனணயானது, நமது தமிழக அரசால் கட்டப்பெற்ற அணை என்பது பலருக்கு வியப்பைத் தரலாம் அல்லது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
      கேரளாவின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு போற்றப் படுகிறது. இதற்குக் காரணம் மழம்புழா அணையாகும். இந்த அணையானது இன்று கேரளாவின் மாபெரும் சுற்றுலாத் தலமாகவும், சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிற்கு பாசனத்திற்கும் உதவி நெற்களஞ்சியம் என்னும் பெயரினை பாலக்காட்டிற்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.
    அன்றைய சென்னை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே பாலக்காடு விளங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை அரசாங்கத்தின் பொதுப் பணித்துறை அமைச்சரும், பின்னாளைய தமிழக முதல்வருமாகிய கே.பக்தவசலம் அவர்களால் மழம்புழா அணைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆறே ஆண்டுகளில் அணையின் கட்டுமாணப் பணி நிறைவுற்றது. 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் மழம்புழா அணையின் திறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த அணையினைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? அவர் வேறுயாருமல்ல, அன்றைய தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராசர் அவர்கள்தான்.
      தமிழகத்தின் இத்தகுப் பெருந்தன்மைக்கு கேரளம் காட்டும் நன்றியுணர்வைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 44 ஆறுகள் ஓடியும், 18 அணைகள் இருந்தும், இத்தண்ணீரின் வெறும் 8 சதவீ நீரைத்தான் கேரளம் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றது. இது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள 92 சதவீத நீரும் அரபிக் கடலுக்குள் தஞ்சம் புகுகின்றது.
     கேரளத்தவர் தாங்கள் உண்ணும் சோற்றுக்கும் குழம்புக்கும், காய்கறிகளுக்கும், தின்னும் பழங்களுக்கும், பூஜைக்குப் பூவிற்கும், சமையலுக்கு கறிவேப்பிலைக்கும் கூட தமிழகத்தை நம்பித்தான் இருக்கின்றார்கள். எனவே கேரளத்தவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, தேவையில்லாத இந்த முல்லை பெரியாறு அணை பிரச்சினையினைக் கைவிடல் வேண்டும்.
                     யாதும் ஊரே யாவரும் கேளிர்

                  தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற அமுத மொழிகளை உலகிற்கு வழங்கிய தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற, தமிழின் சேய் மொழி மலையாளம். அவ்வகையில் கேரளத்தவர்கள் யாவரையும், நம் உடன் சகோதரர்களாய் இதுவரை நாம் போற்றி வந்திருக்கின்றோம். அதுபோல் அவர்களும் நம்மை அவர்களது சகோதரர்களாய் போற்றாவிடினும், அன்னியர்போல் கருதாமலாவது இருத்தல் இருவருக்கும் நலம் பயக்கும்.
      தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பெற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தும் தனது மெருகு குலையாமல் கம்பீரமாய் காட்சியளிப்பதைப் பாருங்கள். கரிகாலச் சோழனால் கட்டப் பெற்ற கல்லணையின் வயது ஆண்டுகள் இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது, இருந்தும் கல்லணை என்ன தண்ணீரில் கரைந்தா போய்விட்டது?.
       தமிழனுக்காகக் கட்டப் பெற்ற அணை முல்லைப் பெரியாறு. பல நூறு தமிழர்கள் தம் இன்னுயிரை இழந்து, தங்களின் சமாதிகளின் மேல், தங்களின் சந்ததியினருக்காக, நமக்காகக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு. ஒரு ஆங்கிலேயரின் முயற்சியினால், உதிரத்தால், பல நூறு தமிழர்களின் வியர்வையை, உதிரத்தை, சுண்ணாம்புக் கலவையோடு கலவையாய் சேர்த்து கலந்து உருவாக்கிய அணை முல்லைப் பெரியாறு.இக்காலத் தமிழர்களான நம்மால் ஒரு அணையினைக் கட்டத்தான் முடியவில்லை, ஒரு ஆங்கிலேயன் நமக்காகக் கட்டிய அணையினைப் பாதுகாக்கக் கூடவா நம்மால் முடியாது?
கல்லணை
      நாம் நமது சாதி, மத, இன, அரசியல், பொருளாதார பிரிவினைகளைக் கடந்து தமிழன் என்ற ஒரே உணர்வுடன், வீறு கொண்டு எழுந்து, நமது ஒன்றுமையினை, நமது ஒற்றுமையின் வலிமையினை, இவ்வுலகிற்குப் பறைசாற்ற வேண்டிய கால கட்டம் இது.
1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப் பெரிய கோயில்
     அகிம்சையினை உலகிற்கே போதித்த காந்திய தேசம் இது. ஒத்துழையாமையே, அணுகுண்டினைவிட மிகப் பெரிய ஆயுதம் என்று உலகிற்குக் உணர்த்திய தேசம் இது வன்முறைத் தவிர்ப்போம், காந்திய வழியில் கரம் கோர்த்து ஒன்றிணைவோம். நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்பதை உணர்த்தினாலே போதும், முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு நொடியில் தீரும். நாம் நமது ஒற்றுமையினை, ஒற்றுமையின் வல்லன்மையினை கேரளாவிற்கு மட்டுமல்ல் உலகிற்கே உணர்த்துவோம். ஓரணியில் திரள்வோம்.
                       வீழ்ச்சியுறு  தமிழகத்தில்  எழுச்சி  வேண்டும்
                              விசைஒடிந்த  தேகத்தில்  வன்மை  வேண்டும்
                       சூழ்ச்சிதனை  வஞ்சகத்தைப்  பொறாமை  தன்னைத்
                             தொகையாக  எதிர்நிறுத்தித்  தூள்தூ   ளாக்கும்
                       காழ்சிந்தை,  மறச்செயல்கள் மிகவும்  வேண்டும்
                                                            - பாரதிதாசன

பென்னி  குக் மணிமண்டபம்
முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில், பென்னி குக் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்பெறும் என்றும், அம் மணிமண்டபத்தில் பென்னி குக் சிலையினை அமைத்து, பென்னி குக் பெயரனால் அந்த நினைவு மண்டபம் திறப்பு விழா நடைபெறும் என அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.


தொகுப்பு: மு.அஜ்மல் கான்.