Thursday, 15 August 2019

சுதந்திர தினம் நமக்கு சொல்ல விரும்பும் நற்செய்தி என்ன ? !!!

ஒவ்வொரு தனி மனிதனும் பெறக்கூடிய அதியுயர் கெளரவம் தனி மனித சுதந்திரமாகும். அன்றும் இன்றும் இதை பெற்றுக் கொள்வதற்கு மனித சமூகம் பல்வேறு தியாகங்களை செய்கின்றது. அந்த வகையில் 7 தசாப்தங்களுக்கு முன்னதாக இதை பெற்றுக்கொடுத்த தேசபக்தர்களை நினைவு கூறுவது நமது கடமையாகும்.
இனமத மொழி வேறுபாடின்றி நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா ?

அன்று அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான போராட்டம்....
இன்று நம் தீய எண்ணங்கள் , இனப்பகைமைகளுக்கு எதிரான போராட்டம் .
உலகமே வியந்த நம் நாடு இப்போது எப்படி எந்நிலையில் காணப்படுகின்றது?
நமது கலை கலாச்சாரத்தை உலகத்தவர்கள் விரும்பும் போது நாம் அதை புறக்கணிப்பது சரியா ?
ஒரு சிலரின் சுய இலாபங்கள் / பிரச்சினைகள் இன மத அரசியல் சாயம் பூசி சமூக பிரச்சனையாக மாற்றும்போது அதை பின்பற்றும் நமது சிந்தனையில் சுதந்திரமும் தெளிவும் வேண்டுமல்லவா...?
இந்த நாட்டில் இன ஒருமைப்பாட்டை விரும்பியவர்கள் , நமது நாட்டின் வளர்ச்சியில் அதிக பங்கெடுத்தவர்களாகவும், மற்றவர்களின் மனங்களை அதிகம் வென்றவர்களாகவும்,
மற்றவர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிநடப்பவர்களாகவும், அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபடுபவர்களாகவும் இருந்தார்கள்.
இவ்வாறான விடயங்களை நாமும் பின்பற்றுவதன் மூலம் இலங்கையை ஒரு செல்வாக்கு மிகுந்த நாடாக மாற்ற முடியும்.
இவற்றை புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகள் சிந்தித்து சக வாழ்வுக்கான வேலைத் திட்டங்களை தேசிய மட்டத்திலும் , ஊர்மட்டத்திலும் நடாத்த முன்வரவேண்டும்.
உண்மையான சுதந்திரத்தின் பலாபலன்களை அடைந்து, ஆசியாவின் அதிசயமாக  புதிய இந்தியாவாக  மாற்ற அனைவரும் இன்றைய நாளில் உறுதி கொள்வோம்.

Wednesday, 7 August 2019

ஜம்மு-காஷ்மீர் பற்றி அவசியம் படியுங்கள் ! தெளியுங்கள் ! நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் !!!


Image may contain: one or more people, table and indoor

1952 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்துடன், இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைந்த அந்த மகத்தான தருணத்தில், தில்லியில், பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரத்து சிங்கம் எனப் போற்றப்படும் ஷேக் அப்துல்லா. (கோப்பு படம்)
மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது; அதை நீக்கியது சரியானது தான் என பாஜகவினரும் அவர்களது அடிவருடிகளும், தினமலர் போன்ற ஊதுகுழல் ஏடுகளும், அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளும் பேசுகின்றன. ஆதரித்துள்ளன. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலுக்கு சிறப்பு அந்தஸ்தும், அதை வழங்கும் 370வது பிரிவும் தான் காரணம் என்றும், அதை நீக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் கண்மூடித்தனமாக இவர்கள் வாதிடுகின்றார்கள். காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் பாஜகவின் வாதம் சரிதானே என்று கூட எண்ணக்கூடும்.தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது.
நாடு விடுதலைபெற்ற போது...
இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோ டும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன.
1.ஜுனாகட் சமஸ்தானம்
2.ஹைதராபாத் சமஸ்தானம்
3.காஷ்மீர் சமஸ்தானம்
ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை. ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணுவத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார். இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13ல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து,நிஜாமின் இராணு வத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 - ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் ஹைதராபாத் நிஜாம் கையெழுத்திட்டார். ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும் பான்மையாக இந்துமக்கள் வசிப்பவையாக இருந்தன. ஆனால் மன்னர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
காஷ்மீரின் வரலாறு என்ன?
காஷ்மீர் சமஸ்தானத்தில் 90 சதவீதம் முஸ்லிம் மக்கள். ஆனால் மன்னன் இந்து. டோக்ராவம்சத்தை சேர்ந்தவர் ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவல மானது. அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் ராணுவத்தில் அவரது சதி வேலைகளுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப்பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணை போனார். பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர் கள், இழப்பீட்டுத்தொகையாக சீக்கியர்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு விட்டுத்தர வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர். 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்த தால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்ட்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார். ஹரிசிங் அதற்கு சம்மதிக்கவில்லை. மறுபக்கம், ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங்கோலாட்சிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சி
1924- முதலே தீவிரமடைந்திருந்த மக்கள் போராட்ட த்தில்,1931ல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939ல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளை யருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடிய நிலையில், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் என்ற அமைப்பு செயல்பட்டது. பிரஜாபரிஷத் என்பது வேறு எதுவுமல்ல; ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் அந்தப் பெயரில்தான் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் இடையே ஆயுதப்போரை மூட்டி விட்டார்கள். வெள்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறோம் என்ற கோஷத்துடன் நுழைந்த அவர்கள் முசாபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர். அக்டோபர் 26ல் பட்டாணியர்கள் படை காஷ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கியது. அதை எதிர்கொள்வதற்கு பதிலாக மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
மாறாக, ஸ்ரீநகரை பட்டாணியர் படை கைப்பற்றாமல் தடுக்க காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சித் தலைமையும் இந்திய இராணுவ உதவியை நாடினர். படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் எனக் கூறினார். இந்த நெருக்கடிக்குப்பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்ப மிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார். இந்திய அரசு அக்டோபர் 27 அன்று ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப்பிரிவு படையுடன், பாகிஸ்தானின் ராணுவமும் நுழைந்து, இந்திய ராணுவத்துடன் மோதியது. இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணு வத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவன்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவன். ஊடுருவல் படைகளை காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஷ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா. மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி “ஆசாத்காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம். இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத் காஷ்மீர்தான்.
பிரிட்டிஷ் - அமெரிக்க சூழ்ச்சிகள்
காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டது. ஐ.நா.சபை கமிஷன் ஒன்றை அமைத்தது. அமெரிக்காவும் - இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948ல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக்கட்சியும் நிராகரித்தன. இந்தியா, ஐ.நா. மூலமாக ஏவப்படும் அமெரிக்க சதியை நிராகரித்தபின்பு, 1950 மார்ச் 14ல் ஐ.நா பாது காப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;
1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
2.காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும். இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.
ஷேக் அப்துல்லா உறுதி
காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல்காரணம் ஷேக் அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக்கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது: “இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கைகளும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கைகளுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்”-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 1948 அக்டோபர் - 16). இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக் அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரண்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆகவும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த அன்றைய பிரதமர் நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார்.
370வது பிரிவு ஏன் வந்தது?
ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக்கூட்டம் 1951 நவம்பர் 5 ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை உருவாக்குவது.
2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
3. நிலச்சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது. இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் - நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952ல் நேரு – ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.
காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு – ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:
1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங்களைப்போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்களின் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம்தான் தீர்மானிக்கும்.
3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்கமுடியாது.இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவு
370வது பிரிவின் படுகொலை
இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர் மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே, இன்றைக்கு மோடி அரசால் ரத்து செய்யப் பட்டுள்ள 370 வது ஷரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப்பட்டது.
1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
2.ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளை காஷ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958ல் கொண்டுவரப்பட்டது.
3. மாநில அரசைக் கலைக்கும் 356,357 வது பிரிவுகள் அங்கும் பொருந்தும் என்ற நிலை 1964ல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.படிப்படியாக அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பின்னணியில்தான், 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. மேற்படி பிரிவு 370ன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுவிட்டது.
370வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்தது மூன்று விசயங்கள்தான்.
1. காஷ்மீருக்கான அரசியல் சட்ட விதிகள்.
2. காஷ்மீருக்கான தனிக்கொடி
3. வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை.
மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கூப்பாடு போட்டது காவிக்கூட்டம். இந்தியாவுடன் இணையும்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித் தவிக்கிறது. எனவே காஷ்மீர் மக்களின் பக்கம் நிற்க வேண்டியது ஒட்டு மொத்த இந்திய மக்களின் கடமை.
நன்றி : சூர்யா சேவியர்,தீக்கதிர் , 6 /08/2019.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Wednesday, 31 July 2019

தாழ்வு மனப்பான்மையை நீக்கி வாழ்வில் வெற்றி பெற சில வழிகள்(How to remove inferiority complex and get successful life)?

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,மனஅமைதியையும் தேடுங்கள்... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப் போவதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்க கூடாது. வாழ்வில் போராடி ஜெயிப்பதுதான் உண்மைமையான வெற்றி...
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான *போராட்டக் களத்திலே* வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
ஏழையாக எதோ ஒரு நினைவோட வாழ்ந்துவிட்டு போய்டலாம்,,
1.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.*
2. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்து அதில் வெற்றி பெறுங்கள்.
4. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாது.
5. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
6. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. நீங்கள் அந்த மொழியில் பயிற்சி செய்து சிறப்பான முறையில் பேசிக் காட்டுங்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். சிரித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
8. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். நம் உடம்பிற்க்கும், உயரத்திற்கும், நிறத்திற்கும் அழகிற்கும், வயதிற்க்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள். யாருடனும் யாரையும் ஒப்பிடாதீர்கள். யார் என்ன சொன்னாலும், ரசித்தாலும், வெறுத்தாலும். நாம் நன்றாகவும், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பதாக உணருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள். நீங்கள் தன்நம்பிக்கையும், மனமகிழ்ச்சியும், மாற்றத்தையும் ஒவ்வொரு முறையும் உணர்வீர்கள்.
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகையும், சிரிப்பும் ஒரு மருந்தாக இருக்கும்....
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... 
அன்பை அதிகமாகவும்,கோபங்களைகஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது...
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது நமக்கு புரிவதில்லை...
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாதது.. ஏனெனில் ...இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்...
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக் கொள்கிறோம்...ஆனால் எத்தனை வயது ஆனாலும், “*எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
 வாழ்க்கை என்னவோ நரகத்தைப் போல வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
இனி எதற்கும் " ஏன்" என கேள்வி கேட்காதீர்கள் என்று சொன்னால் ....அதற்கும் ... "ஏன்" என்று கேட்பார்கள்
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!
சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து உனை சீரழிக்கும் துரோகியை விட ... முறைத்துக் கொண்டே உன் முன்னிருக்கும் எதிரி மேலானவன்!.....
அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
பூனையை விட சிங்கம் வலிமையானது என்றுஎலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது.....
உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா " பிரச்சினைகளுக்கும் இந்த வாய் தான் காரணம்..!!!
வாழ்வோடு போராடிச் சாவதிலும் சாவோடு போராடி வாழ்வதிலுமே...வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வோம் நலமுடன் வளமுடன் என்னாளும்...
மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை மனதில் எளிதில் போக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல் 

Friday, 28 June 2019

கல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தை நோக்கி ...

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களே, கல்லூரிப் படிப்பு எப்படியானது என்பதை நீங்கள், சீனியர்களின் மூலமாக ஓரளவு அறிந்திருப்பீர்கள்.

பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரி வாழ்க்கை அதிகளவில் வித்தியாசப்படக்கூடிய ஒன்று. அதிக சுதந்திரமாக உணர்வோம் மற்றும் வாழ்க்கையில் நாமும் பெரிய ஆளாக ஆகிவிட்டோம் என்று உணர்வதோடு, ஒரு புதிய மனோபலத்தையும் பெறுகின்ற பருவமே இந்தக் கல்லூரி பருவம்.


கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பில் இல்லாத சில சவுகரியங்கள் உண்டு.

முழு ஆண்டுத்தேர்வு என்ற நெருக்கடி இல்லாமை, செமஸ்டர் சிஸ்டம், ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின்மை, விடுமுறை எடுப்பதில் சற்று சுதந்திரம், சீருடை இல்லாமை, ஒரு ஆண்டுக்கான பாடங்களில் முழுமையாக தேர்ச்சி அடையாவிட்டாலும், அடுத்த ஆண்டு படிப்பிற்கு செல்லும் நடைமுறை, ஒரு செமஸ்டரில் சற்று மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த செமஸ்டரில் அதிக மதிப்பெண்கள் பெற்று அதை ஈடுசெய்துகொள்ளும் வசதி மற்றும் பள்ளிப் படிப்பைவிட அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்லூரிப் படிப்பின் முக்கியமான சவுகரியங்கள்.

மேற்குறிப்பிட்ட பல சலுகைகளை, ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள், தவறாக பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக அல்லது கல்லூரிக்குள் நுழைந்ததும் அப்பழக்கத்திற்கு ஆட்படுபவர்களாக இருக்கிறார்கள்.

அவை என்னென்ன?


அரியர் வைத்தல்


ஒரு செமஸ்டரில் சில பாடங்களில் தவறினாலும்(fail), அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், அடுத்த செமஸ்டரை எழுதும்போது, நாம் கூடுதல் சுமையுடன் எழுத நேரிடுகிறது.

இதனால், கடந்த செமஸ்டர் பாடங்களையும் படிக்க வேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், இந்த செமஸ்டர் பாடங்களில், போதியளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து அசட்டையாக இருக்கும் மாணவர்கள், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் சில பாடங்களில் தோல்வியடைகிறார்கள்

எனவே, அவர்களின் அரியர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போய், முடிவில், அவர்கள் கல்லூரி இறுதியாண்டு வரும்போது, குறைந்தபட்சம் 10 முதல் 15 அரியர்கள் வரை வைத்திருப்பார்கள். விளைவு, அவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்படுகிறது.

இத்தகைய மாணவர்கள், அதன்பிறகான ஆண்டுகளிலும், சோம்பேறித்தனம் மற்றும் இன்னபிற வாழ்க்கைச் சூழல்களால், தங்களின் பட்டப் படிப்பை கடைசிவரை நிறைவுசெய்ய முடியாமலேயே போய்விடுகிறது. அவர்களின் கல்வித்தகுதி வெறும் பிளஸ் 2 என்பதாகவே இருக்கும்.

விடுமுறை எடுத்தல்


கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதியாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட அளவு வரை விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரியிலேயே அதற்கான அபராதத்தைக் கட்டி, ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளும் விதிமுறை இருக்கும். அந்தக் குறிப்பிட்ட அளவையும் தாண்டுகையில், அந்த கல்லூரிக்கான சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று, ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும்.

ஆனால், மேற்கண்ட இரண்டு வரைமுறைகளையும் தாண்டி, அதிகமான விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் எழுதும் வாய்ப்பையே இழக்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கையில் நுழைந்ததும், சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதுபோல் உணர்வு ஏற்படும். எனவே, இஷ்டத்திற்கு கட் அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது தன் வாலிப பருவத்தின் அடையாளமாகவோ கருதுவார்கள்.

எனவே, அளவோடு, நாம் எந்தளவிற்கு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நன்கறிந்து, அதற்கேற்ப, உங்களின் படிப்பு பாதிக்காத வகையில், விடுப்பு எடுத்து, கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவும்.

எதிர் பாலினம்


பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரியில், (அது இருபாலர் பயிலும் கல்லூரியாக இருக்கும்பட்சத்தில்), எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அத்தகைய வாய்ப்பை படிப்பு விஷயத்திற்கோ அல்லது அறிவை பெருக்கிக் கொள்வதற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான வாய்ப்புகளை பெறுவதற்கோ மட்டுமே பயன்படுத்திக் கொண்டால், இருபாலருக்குமே மிகவும் நன்று.

அதைவிடுத்து, இந்த வயதில் இதை செய்யாமல் எப்போது செய்வது என்று சினிமா தாக்கத்தில் சிந்தித்து, அதுவே வாழ்க்கை என நினைத்து, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.

இதர பழக்கங்கள்

கல்லூரி வாழ்க்கையில், மது, சிகரெட் மற்றும் பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். அவர்கள் உடன்படிக்கும் மாணவர்களாகவோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருக்கும் மாணவர்களாகவோ இருப்பார்கள்.

நம்மையும், அதையெல்லாம் பழகிக்கொள்ள சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால்தான் அவன் ஆண்பிள்ளை மற்றும் முழு மனிதன் என்பன போன்ற சிறந்த தத்துவங்களையெல்லாம் உதிர்ப்பார்கள். அதுபோன்ற தத்துவங்களை காதுகொடுத்து கேட்பது மட்டுமல்ல, ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள்.

அத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு, உங்களின் உடல்நலன், மனநலன், நன்மதிப்பு மற்றும் படிப்பு ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் முழுமனிதனாக இருக்க முடிவதோடு, உங்களின் வாழ்வையும், சரியான முறையில் அனுபவிக்க முடியும்.

வாழ்வின் சொர்க்கம்

கல்லூரி வாழ்க்கையை, ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை என்றே கூறலாம். ஆனால், அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே, நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

ஈடன் தோட்டம் எனும் சொர்க்கத்தில் ஆனந்தமாய் திரிந்த ஆதாமும், ஏவாளும், சாத்தானின் பேச்சைக் கேட்டு, தின்னக்கூடாத ஞானப்பழத்தை தின்று தங்களுடைய வாழ்வை வீணடித்து, தேவையற்ற சாபத்தை பெற்றார்கள் என்பது பைபிளில் வரும் ஒரு கதை.

உங்களின் கல்லூரி வாழ்க்கை எனும் சொர்க்கத்திலும், பல சாத்தான்கள், உங்களை தவறுசெய்ய தூண்டுவார்கள். எனவே, அவைகளின் பேச்சைக்கேட்டு, உங்களின் ஆனந்தத்தை இழப்பதோடு, எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள் மாணவர்களே!

Tuesday, 25 June 2019

வாயில் உண்டாகும் அல்சரை (வாய் புண்) குணப்படுத்த இயற்கையான வழிகள் !!!

நம்மில் பலருக்கு அடிக்கடி உதட்டின் ஓரம் அல்லது வாயினுள் சிறிய சிவப்பு நிறத்தில் குமிழ் போன்ற வட்ட வடிவில் வலியுடன் கூடிய புண் ஏற்படுகிறது.
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. இதற்கு முக்கியமான காரணம் வயிற்றினுள் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியே இந்த வாய் புண். உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். வயிற்றின் இரைப்பையில் அதிக வெப்பம், அதிகளவு அமிலம் சிறப்பு, அதிகமான கார உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் மசாலா பொருட்களை உட்கொள்வது, காலதாமதமாக உணவினை எடுத்துக் கொள்வது போன்றவையே இரைப்பையில் ஏற்படும் பாதிப்பு. இந்த பாதிப்பின் காரணமாக நம் உதடுகளில் அல்லது வாயினுள் புண் ஏற்படுகிறது.

இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 மில்லியன் மக்கள் இப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. மொத்த மக்கள் தொகையில், எப்போதும் 20சதவீதத்தினர் வாயில் புண் ஏற்பட்டு, உணவை சுவைக்க முடியாமல்அவதிப்படுகின்றனர். பெண்கள் பருவவயதை எட்டும் போது இந்த பாதிப்பைஉணர்கின்றனர். சிலருக்கு, வாழ்நாள்முழுவதும் இது தொடர்கதையாகிவிடுகிறது.சில குடும்பங்களில், இந்த பாதிப்பு பாரம்பரியமாக தொடர்கிறது. திடீரென விட்டு, விட்டு புண் வரும். 10 மி.மீ.,அளவு வரை, மூன்று புண்கள் ஏற்படுவது வாடிக்கை. வாயில்,"மியூகோசா' என்ற கொழகொழப்புசுரப்பிக்கு மிக நெருக்கமாக நரம்புகள்செல்வதால், வாயில் புண் ஏற்படும்போது வலி அதிகமாக தெரிகிறது.இரண்டு, மூன்று வாரங்களில் இந்தபுண்கள் தானாகவே ஆறிவிடுகின்றன.வடுக்களும் ஏற்படாது. வாயில் புண்ஏற்பட ஒரே காரணம் கிடையாது.படபடப்பு, ஆன்ட்டிபயாடிக்சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள்,பலவீனம் ஆகியவை காரணமாகஇருக்கலாம்.


ஹெர்ப்ஸ் வைரஸ், காக்சாக்கி, சைட்டோமெகாலோ வைரஸ், ஹெப்பாடைட்டிஸ் சி ஆகியவையால்வாயில் அடிக்கடி புண் ஏற்படும்.ஹெர்ப்ஸ் வைரஸ், வாயில் நிறையபுண்களை ஏற்படுத் தும்.குழந்தைகளிடையே இந்த பாதிப்புஅதிகம் தெரியும். பெரியவர்களிடையேநீரிழிவு நோயாளிகள், கேன்சர்நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்றுஉடையோர், நோய் எதிர்ப்பு திகுறைந்தோருக்கு இது போன்றுஏற்படலாம். "அøலோவிர்' மருந்துஉட்கொண்டால் இது சரியாகும்.

தில்ஆரம்ப நிலையில் உள்ளதனை மருத்துவர்கள் எளிதில் சிகிச்சை அளித்து சரி செய்து விடுவர். வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடியும். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட இவர்களால் சுவைக்க முடியாது. வாய்ப்புண் வர பல்வேறு காரணங்கள் உண்டு. வாயில் உண்டாகும் அல்சரை குணப்படுத்த இயற்கையான வழிகள் அவற்றில் முதன்மையான சிலவற்றை கீழே பார்க்கலாம். வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்: வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது. சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும். இத்தகையவர்களுக்கு தொடர்ந்து அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும். சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடுகின்றன.


 நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள் கண்டிப்பாக வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

சிலருக்கு, வாயின் வெளியில்உதட்டருகே, கொத்து கொத்தாக நீர் கொப்புளங்கள் ஏற்படும்.. சில நேரங்களில் வாய் முழுவதும்சிவந்து, கன்னத்தின் உள் பக்கத் தில்தயிர் போன்ற திட்டுக்கள் தோன் றும். இது தொற்றால் ஏற்படுகிறது. கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய், தொடர்ந்து ஆன்ட்டிபயாடிக் மருந்துசாப்பிடுதல், புற்றுநோய்க்கான சிகிச்சைஎடுத்து கொள்பவர்கள் ஆகியோருக்குவாயில் இது போன்று புண் ஏற்படும்.எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்களுக்கு,இந்த புண்ணை ஒரு அறிகுறியாகஎடுத்து கொள்ளலாம்.

"மியூகோசா' தொடர்ந்து பாதிக்கப்பட்டால் தான் இது போன்றுபுண்கள் ஏற்படுகின்றன. வாயில்பற்கள் தாறுமாறாகவளர்ந்துள்ளவர்களுக்கு இது போன்றுபாதிப்புகள் அதிகம் ஏற்படும். பல் மற்றும் ஈறை சுத்தமாக வைத்துகொள்ளாதவர்களும், பல் காரைபடிந்துள்ளவர்களும் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தினமும் இரண்டு வேளை பல் சுத்தம்செய்ய வேண்டும். பல் காரைபடிந்துவிட்டால், எவ்வளவு "பிரஷ்'செய்தாலும் அது போகாது.காரைகளுக்கும், பல்லுக்கும் இடையேஉள்ள இடுக்குகளில் பாக்டீரியாக்கள்வாசம் செய்ய துவங்கி, பல்லில்அடிக்கடி புண் ஏற்பட்டு வாய்துர்நாற்றம் உருவாகும்.
சிக்கன் 65, காலிபிளவர் 65 போன்றஉணவுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரமற்றதாக இருந்தால், வாயில்ஒவ்வாமையை உருவாக்கி, "மியூகோசா'வை பதம் பார்த்து புண்ஏற்படுத்தி விடும்.புகையிலை சுவைத்தல், புகைபிடித்தல், பான், குட்கா, பான் பராக்சுவைத்தல் ஆகியவை வாயின் மேற்பரப்பில் உள்ள திசுக்களை அழிக்கின்றன. இதனால் வாய்க்கு நிறம் கொடுக்கும் நிறமிகள் அழித்து, வெள்ளை படைஉருவாகும். இது, புற்றுநோயின்ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது."பயாப்சி' பரிசோதனை செய்து சிகிச்சைபெற வேண்டும்."அல்சரேட்டிவ் காலிடிஸ்' என்றவகை வாய்ப்புண், நோய் எதிர்ப்புதியை குறைத்து, தீவிரவாய்ப்புண்ணை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் பி குரூப் வகைகள் ஆகியவற்றின் குறைபாடு, வாயில்சிவப்பு திட்டுக்களை உருவாக்கி, நாக்கில் அதிக வழவழப்பை ஏற்படுத்தி, உதட்டை வீங்க செய்து விடும்.
"மியூகோசா' மிகவும் மெலிந்து விடும்.இதனால் புண் அதிகரிக்கும்.


வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம். அந்த இயற்கையான முறைகள் எவையென்று பார்ப்போம்.


1. தேங்காய்: வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சைத் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கீற்றுக்கள் தினமும் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் வாய்ப்புண் ஆறும். மேலும் தேங்காயைப் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நற்பலன்கள் கிடைக்கின்றன. தேங்காயை பால் எடுத்து அத்துடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ப்ளர் அருந்தி வந்தால் மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம்.

2. கசகசா வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கான அருமருந்து. கசகசாவை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் ஆறும். குறிப்பாக கசகசாவை பானமாக தயாரித்து அருந்தும் போது மிகப்பெரிய அளவில் உடனடி பலன்களைத் தரும்.


கசகசா பானம் தயாரிக்கும் முறையை பார்க்கலாம் தேவையான பொருட்கள்: கசகசா - 2 டீஸ்பூன் முந்திரி - 4 பருப்புகள் பாதாம் - 2 பருப்புகள் தேங்காய் - 2 பெரிய வில்லைகள் தேன் - 1 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன் பால் - 1 டம்ப்ளர் செய்முறை: முந்திரி, பாதாம், கசகசா ஆகியவற்றை 6 மணி நேரம் முன்னதாகவே இளஞ்சூடான நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பாதாமின் தோலை உரித்து விடவும். கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் இவையனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும். 1 டம்ப்ளர் பாலில் அரைத்த விழுதையும் நாட்டுச் சர்க்கரையையும் தேனையும் கலந்து பருகவும். இது குடிப்பதற்கு மிக சுவையான பானமாக இருப்பதுடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருகிறது. (குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து விடவும்).3. கொய்யா வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.4. தேன்: தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும்.


5. பால்: வாய்ப்புண் உள்ளவர்கள் தினமும் பால் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பாலில் உள்ள பி காம்ப்ளக்ஸ் உயிர்ச்சத்துக்கள் வயிற்றுப் புண்ணுடன் அதன் தொடர்புடைய வாய்ப்புண்ணுக்கும் குணமளிக்கிறது. அதே போல சோயா பாலும் பசும்பாலுக்கு மாற்றான பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்த பானமாகும்.

6. வாழைப்பழம்: கனிந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அதிலுள்ள விட்டமின் பி6 மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் சத்துக்கள் வாய்ப்புண்ணை ஆற்றுவதோடு அதற்கு காரணமான உள்ளார்ந்த வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்துகிறது.

7. வாழைப் பூ: வாழை மரத்தின் அனைத்து பாகங்களையும் உணவாகப் பயன்படுத்துவதே நமது இந்தியப் பாரம்பரியம். அதிலும் வாழைப் பூ வாய்ப்புண்ணுக்கும் வயிற்றுப் புண்களுக்கும் கை கண்ட மருத்துவமாகும். வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட்டு வர வேண்டும். மேலும் வாழைப் பூவை உரிக்கும் போது இறுதியில் எஞ்சும் சிறிய மொட்டை பச்சையாகவோ அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு விட்டால் உடனடியாக வாய்ப்புண் குணமாகும்.

8. நாவல் பழம்: நாவல் பழத்தில் ஏராளமான இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் நிறைந்துள்ளது. இது வாய்ப்புண்ணை குணமாக்குவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்ததாகும்.


9. கட்டித் தயிர்: தினமும், காலை வெறும்வயிற்றில் 60 மி.லி., அளவு தயிர்சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு திறன்குறைந்து போய் வாயில் புண்ஏற்படுபவர்கள், இது போன்று தயிர் சாப்பிட்டால் புண் ஏற்படுவதை தடுக்கலாம்நல்ல உணவுகளின் பட்டியலில் தயிருக்கு எப்போதும் முதலிடம் உண்டு. தயிரில் அடங்கியுள்ள ஏ, பி, சி கூட்டு விட்டமின்களும், ரிபோஃளோவின் மூலக்கூறுகளும் வாய்ப்புண்ணுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் சிறந்தது. தயிரில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளான அமிலத்தன்மை, வயிற்று மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றுகிறது. தயிருடன் வாழைப்பழத்தையும் தேனையும் கலந்து ஸ்மூத்தியாக பருகும் போது மிக விரைவான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

10. தக்காளி: தக்காளியை ஜுஸாக பருகினாலும் அத்துடன் கேரட்டையும் தேனையும் சேர்த்து ஜுஸ் செய்து பருகினாலும் வாய்ப்புண் நீங்குவதோடு சருமமும் பளபளப்பை பெறும். அதிக குளிர்ச்சியான உடல்வாகுடையவர்கள் இதை தவிர்த்து விடவும்.

11. மணத்தக்காளிக் கீரை: மணத்தக்காளிக் கீரையானது வயிற்றுப் புண்ணோடு அதன் விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது. மணத்தக்காளி கீரையை பாசிப் பருப்பு சேர்த்து கூட்டாக செய்தோ அல்லது சூப்பாகவோ தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நாட்பட்ட வாய்ப்புண்ணும் வயிற்றில் அல்சரும் இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக குணமாகிவிடும். மணத்தக்காளி கீரைச் செடியில் சிறிய தக்காளி வடிவமுடைய சிறுசிறு பழங்கள் காய்க்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய இந்தப் பழங்களை பச்சையாக மென்று தின்றால் வாய்ப்புண்ணுக்கு அருமருந்தாக வேலை செய்யும். 

12. சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்: சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை சம அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். சோற்றுக் கற்றாழையில் உள்ள புண்ணை ஆற்றும் மருத்துவ குணங்களும் மற்றும் நெல்லியில் செறிந்துள்ள விட்டமின் சி யும் வாய்ப்புண்ணை குணமாக்கிவிடும். 

13. அகத்திக் கீரை: அகத்திக் கீரைக்கும் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ பொறியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர மிகச் சிறந்தப் பலன்களைத் தரும். 

14. சுண்டைக்காய்: சுண்டைக்காயின் மருத்துவப் பலன்களில் மிக முக்கியமானது அதன் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை அகற்றும் தன்மையாகும். சுண்டைக்காயை மாதம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் அபரிமிதமான இரும்புச் சத்து நோயெதிர்ப்பு சக்தியை கூட்டி பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. 

15. பொன்னாங்கன்னி கீரை: பொன்னாங்கன்னியில் சீமை பொன்னாங்கன்னி நாட்டுப் பொன்னாங்கன்னி என்று இரு வகைகள் உண்டு. இரண்டுமே பெயருக்கேற்றார் போல தங்கமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கீரையையும் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் நீங்கும். 

16. வெந்தயக் கீரை: வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தாலும் வெந்தயக் கீரையை பச்சையாகவே அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் அது உள்ளார்ந்து செயல்புரிந்து வயிற்றுப் புண்களை ஆற்றி அதன் பக்க விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் அறவே ஆற்றுகிறது.


17. துளசி இலை: துளசி இலையுடன் ஒரு ஏலக்காயை சேர்த்து வாய் ழுமுவதும் படும்படி மென்று தின்று வந்தால் இதன் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். 

18. புதினா, கொத்தமல்லி டீ: சூடான நீரில் சில கொத்து கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து டீ போல தயாரித்து அத்துடன் எலுமிச்சை சாறு ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து டீயாக பருகினாலும் அந்த டீயிலேயே வாய்க் கொப்பளித்தாலும் வாய்ப்புண்ணும் ஆறும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு நோயெதிர்ப்பு ஆற்றலை கூட்டி மகத்தான பலன்களையும் தரும்.


19. வெங்காயம்: வெங்காயத்திற்கு வயிற்றுப் புண்ணையும் வாய்ப்புண்ணையும் ஆற்றும் ஆற்றல் உண்டு. வெள்ளை வெங்காயம் இன்னும் அதிகப் பலன்களைத் தரும். வெள்ளை வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். இது அற்புத பலன்களைத் தரவல்லது.


20. அத்திக்காய்: அத்திக்காயில் உள்ள பால் வயிறு தொடர்பான அனைத்து உபாதைகளையும் நீக்குவதோடு வாய்ப்புண்ணையும் குணப்படுத்துகிறது. அத்திகாயுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக தொடர்ந்து சாப்பிட்டு வர சிறந்த பலன்களைப் பெறலாம்.


21 மஞ்சள் மவுத் வாஷ்: இயற்கையான முறையில் மவுத் வாஷ் வீட்டிலேயே தயாரித்து வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெறலாம். தேவையான பொருட்கள்: தண்ணீர் - 200 மிலி கிளிசரின் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் - 2 அல்லது 3 சிட்டிகை கிராம்பு - 2 எலுமிச்சை - பாதி மூடி கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நீரில் போட்டு 200 மிலி 100 மிலி ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்கூடாக இருக்கும் போதே வாய்க் கொப்பளிக்கவும். இந்த இயற்கையான மவுத்வாஷ் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அற்றது. 500 மிலி வரை செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை வைத்திருந்து லேசாக சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.22 ஆயில் புல்லிங்: காலையில் எழுந்ததும் சுத்தமான நல்லெண்ணையை ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் நிரைத்துக் கொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் லேசாக கொப்பளித்த படி இருக்கவும். எண்ணை நீர்த்து போன பின்பு உமிழ்ந்து விடவும். பிறகு பல் துலக்கி விடலாம். இந்த முறையை பின்பற்றும் போது தீவிரமான வாய்ப்புற்றினால் ஏற்படும் வாய்ப்புண்கள் கூட குணமாவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. உடல் ஆரோக்கியத்திலும் இந்த எண்ணெய் கொப்பளிப்பால் பல வியக்கத்தக்க மாறுதல்கள் நிகழும்.23. மேலும் புண் ஏற்படாமல் தடுக்க...

a , தினமும் இரண்டு வேளை"பிரஷ்' செய்ய வேண்டும்.மவுத்வாஷ்'களைபயன்படுத்தி, வாயை சுத்தம்செய்யலாம்.
b, மேற் கூறப்பட்ட வைட்டமின், தாதுப்பொருட்கள் அடங்கிய உணவு வகைகள், பச்சைகாய்கறிகள், பழங்கள், முளைகட்டிய பயிறு கலவைகள் சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படாது.
c , மேலும் குறிப்பிட்ட வைட்டமின் சத்துகுறைபாடு உங்களுக்குஏற்பட்டுள்ளதென தெரிந்தால், அதற்கான வைட்டமின் மாத்திரை சாப்பிடலாம். ஆனால் "குளோரெக்சிடைன், போவிடோன் அயோடின் மற்றும் சிலஆன்ட்டிசெப்டிக் " மற்றும் நிறமூட்டிகள் கொண்ட உணவு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.
d, குழந்தைகளுக்கு பீடிங்பாட்டில், நிப்பிள் ஆகியவற்றைஅடிக்கடி பயன்படுத்தாதீர்கள்.
படபடப்பு குறைந்தாலே வாயில்புண் மறைந்து விடும். தினமும் 40நிமிட உடற்பயிற்சி, தியானம், யோகா செய்தால் நோய்கள் அண்டாது.
மேலும் இந்த இயற்கையான முறைகளை பின்பற்றுவதோடு தேவையற்ற தீய பழக்கங்களை விடுவதும், அதிக காரமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளையும் வெளியிடங்களில் விற்கப்படும் துரித உணவு வகைகளையும் தவிர்த்து நமது இயற்கை அன்னையின் கொடைகளான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதே நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தாரக மந்திரம் ஆகும்.


நன்றி : டாக்டர் வெங்கடாசலம், மதுரை.

தொகுப்பு : அ .
 தையுபா  அஜ்மல் .

Wednesday, 19 June 2019

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பார்வை !!


Image may contain: 1 personநீங்கள் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகப் பேசியதால் கேட்க்கிறேன்.940 கிமீ நீளக் கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்கு இத்திட்டம் ஒரு நல்ல மாற்றாக இருக்க முடியும் என்று பலர் சொல்கிறார்கள்.ஆனால் ஏன் இத்திட்ம் முழு வேகத்தில் நடக்கவில்லை...?

ஏதாவது பிரச்சினை என்றாலே பெரியபெரிய திட்டங்களைப் பற்றிப் பேசுவது நம்மூரின் சாபக்கேடுகளில் ஒன்று. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒரு மாற்றுத் திட்டம்தான். ஆனால்...வேறுவழியே இல்லாத நகரங்களுக்கானது அது. நாம் என்ன பாலைவனத்திலா இருக்கிறோம்...?சென்னையில் மட்டும் சராசரியாக 1350 மிமீ மழை பெய்கிறது.இப்படி ஒரு இடத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது தேவையற்றது.நல்ல தண்ணீர்தான் மழையாகப் பெய்து கடலில் கலக்கிறது.மழைநீரைக் கடலில் கலக்கவிட்டுவிட்டு பிறகு அதை எடுத்து நல்ல தண்ணீராக மாற்றிக்கொடுப்பது வீண் வேலையல்லவா...?கடல் நீரிலிரிலிருந்து ஒரு லிட்டர் நல்லதண்ணீர் உருவாக்க எவ்வளவு கடல்நீர் தேவைப்படும் தெரியுமா...?குறைந்த பட்சம் 30-40 லிட்டர் அதைச் சுத்தப்படுத்தி நல்ல தண்ணீர் எடுத்து விட்டால் மீதமுள்ள நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விடும் .அப்படி அதிகரித்த உப்புத் தன்மை கொண்ட நீரைக் கடலுக்குள் ஒரு கிமீ உள்ளே கொண்டு சென்று விட வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் பின்பற்றுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.கரைக்கு அருகிலேயே விட்டுவிடுவார்கள். இப்படியே தினமும் செய்து கொண்டிருந்தால் என்னாகும்...?கடல் இறந்து விடும். அதாவது கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காது.அவற்றுக்கு உப்பு நீரை உறிஞ்சி உறிஞ்சி நல்லதண்ணீரை எடுத்துக் கொண்டு உப்பை மீண்டும் கடலில் விடுவதற்க்கான சக்தி இருக்கிறது.ஆனால் கடலின் உப்புத்தன்மை அதிகரித்தால் அவற்றால் அதைச் செய்ய முடியாது.விளைவாக அவற்றால் உயிர்வாழ முடியாது.இதனால் கடற்கரைச் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் கடல் நீரைச் சுத்தப்படுத்துவதை விட கழிவு நீரை சுத்தப்படுத்துவதே சிறந்த தேர்வு.ஆயிரம் லிட்டர் கடல்நீரைச் சுத்தப்படுத்த ரூ.46 செலவாகும் என்றால்...அதே அளவு கழிவு நீரை சுத்தப்படுத்த ரூ .28 தான்.செலவாகும்.


-இன்றைய (18-6-2019) இந்துதமிழில் நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பேட்டி...

கலைஞர் செய்தார்...அரபுநாடுகளில் செய்யலையா...?சவூதி அரேபியாபை் பார்...என்று சொல்பவர்களின் கவனத்திற்க்கு....

வாய்ப்பிருந்தால் படியுங்கள். நல்ல பேட்டி.

தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

Tuesday, 18 June 2019

இன்றைய அரபுலகின் முர்ஸி முழுமையான தலைவர் கலாநிதி முஹம்மது முர்ஸி பற்றிய சிறப்பு பார்வை !!

Related imageஇஸ்லாமிய உலகில் நிலவுகின்ற வரலாற்று ரீதியிலான குரோதங்களும், கருத்து வேறுபாடுகளில் மூழ்கிப் போன சிந்தானா முகாம்களும் முஸ்லிம் உம்மத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் எதிரிகளின் காலடியில் சரணாகதியாக மண்டியிட்டு விடவே உதவும் என்பதற்கு எகிப்தின் சமகால அரசியலில் போதுமான படிப்பினைகள் இருக்கின்றன.

சர்வதேச சதிகார ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயக முகாம் இன்று யூதர்களால் முன்னகர்த்தப் படுகின்றது, குறிப்பாக மத்திய கிழக்கில் ஜனநாயகம் மாத்திரமல்ல மன்னர்களும் சர்வாதிகளும் கூட மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்கேற்பவே ஆட்டு விக்கப் படுகின்றனர்.

2012 ல் முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது.

உள்நாட்டு அரசியலைக் கையாளுவதில் ஆயிரம் நிலைப்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பல்வேறு பட்ட சிந்தனா முகாம்கள் இருந்திருக்கலாம், ஆனால் பன்னாட்டு உளவுத் தாபனங்களின் அவசரத்திற்கும் அவசியத்திற்கும் ஏற்ப காரியம் பார்க்கும் இராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் சென்றிருப்பது எகிப்திற்கு மாத்திரமல்ல முழுப் பிராந்தியத்திலுமுள்ள இஸ்லாமிய முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகும்.

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது...!மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936)

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)


என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும். தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

1.அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2.இவர் இன்றைய அரபுலகில் சாதாரண குடிமகனாக இருந்து அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

4.இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பின் முதல் அதிபராவார்.

5.பொது மக்கள் தம்மை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அனுமதியளித்த அரபுலகின் முதல் அதிபர் இவர் தான்.இதனால் 30க்கு மேற்பட்ட சேனல்கள் அவரை இரவு பகலாக விமர்சித்து வந்தன.

6.தாம் சிறைவாசம் அனுபவித்த காலங்களில் சிறை அதிகாரியாக இருந்தவரை சந்தித்து கைகுலுக்கிய உலகின் முதல் அதிபராவார்

7.அரசு அலுவலகங்களில் தமது படத்தை மாட்டி வைப்பதற்கு தடை விதித்த முதல் அரபுலகின் அதிபர் இவர்தான்.சாதாரன பொதுமக்களைப் போலவே வாடகை வீட்டில் குடியிருந்த முதல் அராபிய அதிபர் இவர் தான்.மேலும் சாதாரன எகிப்தியர்கள் பெறும் ஊதியத்தை போல இவரும் சம்பளம் சாதாரன சொற்ப சம்பளத்தையே பெற்றுக் கொண்டார்.

8.விடுமுறை காலங்களில் அரசு செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லாமல் தமது சொந்த செலவிலேயே சென்ற முதல் அதிபராவார்.

அவர் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ.. தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும்.இவரது பதவி நீக்கத்திற்கு பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருப்பதாக நம்பப்படுகிறது.40 ஆண்டுகள் எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்களின் கரங்கள் இன்னும் ரானுவத்தில் உயர்ந்து இருப்பதையே இவரது பதவி நீக்கம் உணர்த்துகிறது.இவர் பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


(நன்றி:Mohamed Ifthihar Islahi ,Al -Azhary )

டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப் பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அழுத்தமாக சொல்லியவர்.

"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"

நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்
ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் .


எகிப்தின் இராணுவ நீதிமன்றம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர், பொதுக் கண்காணிப்பாளர் கலாநிதி முஹம்மத் பதீஃ அவர்களுக்கு ஆயுட் கால சிறைத் தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

67 வயதான முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்து அவருக்கு நியாயத்தை மறுமையிலே வழங்கி அவரின் ஏனைய சேவைகளை கபூல் செய்வானாக, சுவனத்தின் ஆக உயர்ந்த அந்தஸ்தில் அவர்களை ஆக்கி அருள் புரிவானாக!!
நன்றி -உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 14 June 2019

சென்னையை ஆட்டிப்படை க்கும் தண்ணீர் பஞ்சம் !!Image may contain: one or more people, sky, text and outdoorதென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தைப் போலவே விரைவில் சென்னை பெங்களூ ரும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போ கிறது என ஏற்கென வே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நாடுமுழு வதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர் பாக நிதி ஆயோக் விரி வான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியி ட்டு எச்ச ரிக்கை மணியடித்து ள்ளது 2020-ம் ஆண்டில் சென் னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 நகரங் களில் நில த்தடிநீர் இல்லாத நிலை ஏற்ப டும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார் கள் என்கிற அறிக்கையின் விவரங்கள் அச்ச த்தை ஏற்படுத்து வதாக இருக்கின்றன. மோசமான நீர் மேலாண்மை கார ணமாக இந்திய வரலாற் றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்னை தலை தூக்கியு ள்ளது எனவும், இதனால், 2030ம் ஆண்டில் மிக மோ சமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு மட்டு மின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டி ருக்கிறது.


"இப்போது தான் பேர ழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழு மையான பேரழிவை சந்தி ப்போம்". - போங்க போய் சாவுங்க. திருத்த முடியாத முட்டாள் கூட்டம். தமிழ்நாட்டில இருக்கும் வரை அழிவு நிச்சயம். ஒருநாள் சந்தோசத்துக்காக காச வாங்கி ஓட்டுப் போடும் ஒரு கூட்டம். ரஐினி படம் வந்த பாலூத்த ஒரு கூட்டம். என்றைக்கு பகுத்தறிவு வருகுதோ அன்றைக்கு திருந்து வார்கள். இப்ப சினி மா படம் வந்த போதும். அங்கு கூட்டம் அலை மோ தும். தெளிவி ல்லாத தொலை நோக்கு திட்டமிடல் இல்லாத பொதுபணி துறை. குடி நீர் வழங்கல் துறை அதிகாரிகள், இவர்க ளின் திறமை பற்றி கொஞ்ச மும் கண்டு கொள்ளாத சுயநலமான அரசியல்வாதி கள். இதை எல்லாம் பொறு த்து கொண்டு ஆட்டு மந் தை போல மக்கள் இனிமேல் ஆவது இது நம் நாடு. இதில் தவறு நடந்தால் அது என்னையும் என் சந்ததி களை பாதிக்கும் என்று உணர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு. இல்லை நம் அனை வருக்கும் தாழ் வே. அரசு பணத்தை திருட பல வழிக ளில் ஒருவழி தண்ணீர் பஞ்சம்.


சென்னையை ஆட்டிப்படை க்கும் தண்ணீர் பஞ்சம். சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு. - சாகுங்கடா முட்டாள் பயலுகளா சென்னையா சென்னை ஓடுங்கடா வென்னைகளா இவனு களுக்கு காய்கறி, அரிசி பருப்பையும் நிறுத்த னும். விவசாயிகளின் வலியுனராத படித்த முட்டா கலவானிகள். திமுக, அதிமுக, காங்கி ரஸ், பிய் ஜே பிய் போன்ற திருட்டு பயல்களு க்கு ஓட்டு போட்டா இப்படித்தான் நடக்கும்,சென்னையின் தண்ணீர் தேவை நாள் ஒன்றுக்கு 120 கோடி லிட்டர்கள்.
அரசு தருவது 60 கோடி லிட்டர்கள்.இன்னும் 60 கோடி லிட்டர்கள் நீர் இல்லாததால் பஞ்சம்.

மறைமலை நகரில் உள்ளது போர்டு கம்பெனி. இருங்காட்டுபள்ளி, திருப்பெரும்புதூரில் உள்ளது ஹூண்டாய் கம்பெனி. இது தவிர மிட்சுபிசி, ரெனால்ட், பி.எம்.டபிள்யு என இந்த கார் கம்பனிகள் ஒரு வருடத்தில் பத்து லட்சம் கார்களை தயாரிக்கிறது. அதில் 30 சதம் ஏற்றுமதி.


ஒரு கார் தயாரிக்க குறைந்தது 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. பத்து லட்சம் கார்கள் தயாரிக்க 20 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவை.
நாள் ஒன்றுக்கு இந்த கார் கம்பெனிகள் உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.

சென்னையில் ஒரு கோடி மக்களை பஞ்சத்தில் வைப்பது 60 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை.
கார் கம்பெனிகள் நாளொன்றுக்கு உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.

தண்ணீர் பஞ்சம் தீரும்வரை கார் கம்பெனிகள் மூடினால் ஒரே நாளில் தண்ணீர் பஞ்சம் தீரும்.
சென்னையில் காணாமல் போன ஏரிகள், புதிய பட்டியலுடன்:-

1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி ,
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.ஆலப்பாக்கம் ஏரி,
33. வேப்பேரி,
34. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
37. திருவேற்காடு ஏரி
38. வட சென்னை கொடுங்கையூர் ஏரி


1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மா நகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளநிலைகள்.இதுக்கு மேலேயும் அட்டூழியம் நடக்கும். இது மாதிரி நடக்கலனாதான் ஆச்சிரியம்... மாற வேண்டியது மக்கள். நீங்க பிழைக்க ஓட்டு போடுங்க. அடுத்தவன் பிழைக்க நீங்க ஓட்டு போடாதிங்க. இல்லனா குடும்பத்தோடா சாக வேண்டியதுதான். மக்களே என்னை கோவி த்துக்கொள்ளாதீர்கள், அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுத்த 5000 ருபாயை வைத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துக்கொள்ளுங்கள், ஆட்சி முடியும் வரை. ஏரிய பூரம் ஆட்டைய போட்டு வீடுகட்டியாச்சு இப்ப தண்ணி இல்லாம சாவுங்கடா. ஏரி குளத்தை எல்லாம் கொள்ளையடித்த போது தெரியல தண்ணீ ரின் அருமை. இனி இதே நிலைமதான் இதை விடவும் மோசமாக இருக்கும்
முதல்வர் எடப்பாடிக்கு தெரிந்தால் நிச்சயம் செய்வார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தாலும் நிச்சயம் செய்வார்.

ஆனால் முதல்வருக்கும் எதிர்க் கட்சி தலைவருக்கும் தெரிய வேண்டுமானால், குடங்களோடு நிற்கும் மக்கள் கேட்க வேண்டுமல்லவா?


ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Wednesday, 12 June 2019

பத்து வருட காலங்களில் எத்தனை, எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?


No photo description available.

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?
1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...
செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...
குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...
வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...
சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...
ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...
ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...
பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.
மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...
1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...
ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி, அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...
கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...
இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.
ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...
சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...
சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...
மேகி வந்தது... பழைய சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...
ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...
ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...
வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...
ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...
ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...
வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...
ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...
தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...
இன்னும் பல...
2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.
மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...
டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.
குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...
பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...
தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...
வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...
போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

2010 லிருந்துஉங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...
நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.
வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.
ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது
இப்போதுதாவது விழித்துக் கொள்ளுங்கள் மரங்களை நட்டால் ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடுக பாசனத்திற்க்கு திறந்து விடுக. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்குக இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படுவோம். மரமே மந்திரம்... மரம் ஒன்றே ஒரே மந்திரம்...
இந்த வாசகத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இன்றைய தேதியில் ஒருவர் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேவை என்று இறங்கிவிட்டாலே அவர் முதலில் செய்ய வேண்டியதாகப் பரிந்துரைக்கப்படுவது மரம் நடும் வேலையைத்தான். அரசியல்வாதிகளும்கூட இப்போதெல்லாம் லட்சக்கணக்கான மரங்களை நட்டோம், கன்றுகளை வழங்கினோம் என்று அடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.

Wednesday, 5 June 2019

தமிழ் நாட்டில் நீட் தேர்வில் நல்ல தேர்ச்சி முன்னேற்றம் !!

Image may contain: 2 people, people smiling, people sitting and textநீட் தேர்வு முடிவுகள் இன்று (June 5) வெளிவந்துள்ளன. அகில இந்தியாவில் கடந்த ஆண்டை விட 14.52% அதிக மாணவர்கள் இந்த வருடம் தேர்வு எழுதியுள்ளனர். 55.22% பெண்கள், 44.78% ஆண்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர் இந்த ஆண்டு. இதில் reservation அல்லாதவர்கள் 35%, SC/ST/OBC மாணவர்கள் 65% நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழ் நாட்டில் மட்டும் 1,23,078 மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர், அந்த மாணவர்களில், சுமார் 60,000 (48.57%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 2018-ல் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் 39.56% ஆக இருந்தது. இது நல்ல முன்னேற்றம் என்று தான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிரா (2,06,745, 39.26% தேர்ச்சி பெற்றுள்ளனர்), உத்திர பிரதேஷ் (1,44,994, 58.61% தேர்ச்சி பெற்றுள்ளனர்) இந்த இரு மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ் நாட்டில் தான் அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியென்றால் அதற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்வார்களா எனக் கேட்பவர்கள் முதலில் ஒன்றை யோசிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளில் பலர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள். இவர்களில் பலரது பெற்றோர் பள்ளிக்கூடப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்கள். அடிப்படை வசதிகள் பல இவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இப்படிப்பட்ட சூழலில் படித்து வரும் இந்தப் பிள்ளைகள் தமிழ் வழி படித்து அதிலேயும் கூட மிகச் சிறப்பாகத் தேறியவர்கள். பல கனவுகளை மனதில் சுமந்தவர்கள்.
தற்கொலையை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கண்முன்னே நடக்கும் நிகழ்வை பார்க்காமல் அதில் உள்ள அநியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது மிகத் தவறாகும்.
கல்வி ஒன்றே தனது சந்ததியின் வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவர்கள் இந்தக் குழந்தைகள். இத்தகைய குழந்தைகளின் மூச்சும் பேச்சும் கனவும் நனவும் கல்வியும் அதனால் கிடைக்கும் மேம்பாடும் தான். அந்தக் கனவை அழிக்கும் நீட் என்ற அரக்கனின் தாக்குதல் தாங்காமல் சிலர் தன் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
தற்கொலை செய்பவர்கள் கோழைகளல்ல. நாமே முடிவு செய்து சாவது என்பது சுலபமல்ல. பலர் வாழ்வில் பல தருணங்களில் இதனை யோசித்து மீண்டவர்கள் தான். ஆக, தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் தங்கள் லட்சியத்திற்காக வாழ்ந்து மடிந்திருக்கின்றனர். இத்தகைய குழந்தைகளைக் குறை கூறுவோர் என் பார்வையில் மனிதாபிமானமற்றவர்கள். வறுமை என்றால் என்ன என்பதை அறியாதவர்கள். இக்குழந்தைகளைக் குறை கூறுவதை விட்டு வறுமையில் கல்வி கற்று மேம்பட நினைக்கும் குழந்தைகளுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வைக் குறை சொல்லுங்கள்!
-சுபா
தமிழ் நாட்டை சார்ந்த கெ.சுருதி என்ற மாணவி, இந்தியாவிலேயே முதல் 20 மாணவிகள் பட்டியலில், 685 மதிப்பெண்கள் வாங்கி, 10வது இடத்தைப் பெற்றிருக்கிறார். All-India Rank 57வது இடத்தையும் பிடித்திருக்கிறார்! இந்த பெண்ணின் ஜாதி சொல்ல நான் விரும்பவில்லை, இருந்தாலும் அவர் OBC சேர்ந்தவர் என்று இங்கே பதிவிட்டுக்கொள்கிறேன்.
முக்கியமான ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். நீட் தேர்வை நடத்தும் National Testing Agency எல்லா மாணவர்களின் தேர்வுத்தாள்களையும் பதிவு செய்து தன் இணையத்தளத்தில் வைத்திருக்கிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆகையால், எந்த ஒரு மாணவனோ மாணவியோ, இணையத்தில் அவர்களுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, challenge செய்யலாம். எங்கே தவறு செய்தோம், எப்படித் தவறு செய்தோம், எப்படி மதிப்பெண்கள் கூடின, கழிந்தன என்று மாணவர்கள் ஆய்வு செய்யமுடியும். மீண்டும் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதவும் வாய்ப்பு உண்டு.
போட்டித்தன்மை என்றும் கடுமையாகத் தான் இருக்கும் இந்தியாவில். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டவேண்டுமே தவிர, நீட் தேர்வில் தோற்றுவிட்டோம், இனி எதிர்காலம் இல்லை என்று நம்பிக்கை இழந்து, தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். அதைவிட முட்டாள்தனம், ஒரு சில மாணவர்களின் தோல்விக்காக, மத்திய அரசு நாட்டின் நலனிற்காகக் கொண்டுவரும் நீட் தேர்வு போன்ற முயற்சிகளை எதிர்ப்பது.
தேர்வு மதிப்பெண்கள் உங்கள் தகுதியை மட்டுமே குறிக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் என்றும் உள்ளது. நீட் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.