பொதுவாக பெண்கள் தமது கற்பகாலத்தில் எவ்வாறான உணவு உட்கொள்ளவேண்டும் என்பதை தெரியாமல் சில உணவுகளை தவிர்த்து விடுகின்றார்கள். ஆகவே கர்ப்பிணிப் பெண்களுக்கான சில மருத்துவக் குறிப்புக்கள்.
கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழைப்பழம் விதவிதமாக இருக்கும்.
கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம்.
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இரும்பு சத்து..
குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
நச்சாகும் இரும்பு சத்து...
சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
காய்கறிகள் கீரைகள்...
சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.
முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது
கருப்பு திராட்சை...
கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த அச்சம் வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குங்குமப்பூ...
கர்ப்பகாலத்தில் பாலில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது இதுவும் உண்மையில்லையாம். குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு, ஜீன்களே முக்கிய காரணம்.அதேசமயம் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும். ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.
மேலும் குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
நெல்லிக்காய், ரோஜா இத்ழ்கள், தேன், கல்கண்டு, சேர்த்து குல்கந்து செய்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்.
குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடைய புரதச்சத்து மிகவும் ஆவசியம். ஆகையால் உணவில் அதிகமாக பால், முட்டை, சீஸ், பயறு சேர்க்கவும்.
இருப்புச்சத்து நிறைந்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை 5வது மாதத்தில் இருந்து எடுக்கவும்.
அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.
மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்லவும்.
மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சில சுரப்பிகள் சரியாக செய்யல்படாமல் போய்விடும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு எடை கம்மியாக பிறக்க வாய்ப்பிருக்கு. ஆகையால் எப்போதும் கலகலப்பாக இருங்கள்.
தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.
முடிந்த வரை நிறைய நேரம் ஓய்வெடுங்கள்.
வயிற்றை காய போடாமல் 2 மணினேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.
கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு
தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
துத்தநாகம்..
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச்சத்து சரியான அளவில் இருக்கவேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றது. எனவேதான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லிகிராம் புரதச்சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்துகின்றனர்.
போலிக் அமிலம்...
போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவேதான் தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இது பச்சைகாய்கறிகளிலும், இலைக்காய்கறிகளிலும் காணப்படுகிறது.
மெக்னீசியம்..
கர்ப்பகாலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினசரி 200 மில்லிகிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தானியங்கள், பருப்புகள், இலைக்காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் கர்ப்பகாலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பி வைட்டமின்கள்...
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின்களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 1500 மில்லிகிராம் வரை கால்சியம் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
இரும்பு சத்து...
கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்புசத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. எனவே தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இல்லையெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகிவிடும். எனவே கர்ப்பகாலத்தில் உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருகவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பகாலத்தில் புகைப்பதையோ, மது அருந்துவதையோ தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வதையோ, 102 டிகிரிக்கு மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !!!
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே. ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்தில் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். கர்ப்ப காலத்தில், அனேகமாக அப்படி அனைத்து பெண்கள் சந்திக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை தான், மென்மையாக மாறும் மார்பக காம்பு.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்.
பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.
கர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா?
வசதியான ப்ராவை அணியுங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான ப்ராவை (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த பிராவை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். காம்புகளின் மீது சோப்பு கூடாது மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும். அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது. மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது

காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வழியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். ஐஸ் பேட் பயன்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும். கர்ப்பமாக காலத்தில், மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் பின்பற்றுங்கள். மார்பக பேட் மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்துங்கள். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திடுங்கள். மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் மறந்து விடாதீர்க
பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு.
இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
தைராய்டு, சுகர் போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
குழந்தைகள் உணவில் மாச் சத்துக்களே அதிகமிருப்பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
ஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
|
Very useful
ReplyDeleteBackground color is irritating .