Thursday 6 February 2014

உலகம் முழுவதும் வாழ்கிற காதலர்களால்ஒரு வாரம் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை !!

Image result for ரோஸ் டேஉலகில் பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினமானது உலகம் முழுவதும் வாழ்கிற காதலர்களால் ஒரு பண்டிகை போன்று ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிமாறிக் கொள்ளும் பரிசுப் பொருட்களில் இதய வடிவம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கும் கீ செயின்களுக்கும் தனித்த இடம் உண்டு. அனைத்தையும் தாண்டி தனித்த இடம் ரோஜாவுக்கு.

Related imageகாதலைச் சொல்ல தகுந்த மலர் ரோஜா. பண்டைய கிரேக்க மரபின்படி காதல் தெய்வத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘இரோஸ்’ (Eros). இவரால்தான் காதல் மலருக்கு ரோஸ் என்கிற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். காதல் தூதுவனாக இருப்பதால்தான் இந்த ரோஜாவுக்கு காதலில் ஏக மரியாதை. காதலர் தினத்துக்காக ஸ்பெஷலாக ஓசூர் பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 1 கோடிக்கும் அதிகமான ரோஜா மலர்கள் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய், சீனா, தாய்லாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

சின்னச் சின்ன பரிசுகளும் பூக்களுமே அன்பைப் பலப்படுத்துகின்றது. அந்த அன்புக்கு மேலும் உறுதியாக விட்டுக் கொடுக்கும் மனமும் புரிந்துகொண்டு அனுசரித்துச் செல்லும் குணமும் அவசியம். அப்படி வாழும் ஜோடிகளுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினமே! வெளிநாடுகளில் காதலர் தின கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே துவங்கி விடுகிறது

  
Image result for ரோஸ் டே


பிப்ரவரி 7: ரோஸ் டே -
காதலை வெளிப்படுத்த உகந்த சிவப்பு ரோஜாவைக் கொடுத்து மகிழும் நாள்.


Image result for ரோஸ் டே

பிப்ரவரி 8: ப்ரபோஸ் டே - காதலை எதிர்பாராத வகையில் வித்தியாசமாக வெளிப்படுத்தும் நாள்.






Image result for ரோஸ் டே
 பிப்ரவரி 9: சாக்லெட் டே - தன் ஜோடிக்கு அவர்கள் விரும்பும் சாக்லெட்டை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாள்.




Image result for ரோஸ் டே  பிப்ரவரி 10: டெடி டே - பெண்களுக்கு டெடி பியர் பிடிக்கும் என்பதால் தன் அன்புக் காதலிக்கு அழகிய பெரிய காதல் சின்னம் பதித்த டெடி பியர் பொம்மையை வழங்கி மகிழ வைக்கும் நாள்.




Related imageபிப்ரவரி 11: ப்ராமிஸ் டே - தன் காதலன் அல்லது காதலிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் காதலை உறுதி செய்யும் நாள்.


  
  


Image result for ரோஸ் டேபிப்ரவரி 12: ஹக் டே - உன் மீது அன்போடும் அக்கறையோடும்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் அணைப்புக்கான நாள்.






Related image



 
 பிப்ரவரி 13: கிஸ் டே - தன் மனப்பூர்வமான அன்பை முத்தத்தால் வெளிப்படுத்தும் நாள்.



  
Image result for ரோஸ் டே
பிப்ரவரி 14: வாலன்டைன்ஸ் டே - அன்புப் பரிசுகள் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தி மகிழும் இனிய நாள்.





தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment