Friday, 29 January 2016

பிரதமர் நரேந்திர மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை!!

Image result for மோடியின்
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்-வேன் என்று தேர்தல் பரப்புரையின் போது மாய-ம-யக்கம் தோற்றுவித்த நரேந்திரமோடி அறு-திப் பெரும்பான்மை பெற்று பிரதமர் ஆகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டும் தொடங்கி-விட்டது.
இந்த மூன்றாண்டு ஆட்சியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட எந்த வகையிலும் சிறப்-பான முன்னேற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. அதே-நேரம் சிறுசிறு தீப்பொறிகளை காட்டுத் தீயைப் போல உருவாக்கும் வேலைகளையே பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் மாட்டுக்கறித் தீ!
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் பல்வேறு பண்பாடு, உணவுப் பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து வருகின்றனர். ஆட்டுக் கறி, கோழிக்கறி என்பதே இந்தியாவின் பெரும்பாலான அசைவ உணவுப் பிரியர்-களின் உணவாக உள்ளது. கிராமங்களில் மடை-யான், நாரை, புறா ஆகியவற்றை உண்ணும் பழக்கம் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி மாட்டுக் கறி உண்ணும் பழக்கமும் இந்தியாவில் உண்டு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அனைத்துத் தரப்பினரது உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது.
இந்த நிலையில்தான், ‘இந்துக்களின் புனித தெய்-வம் பசு, அதை வெட்டக் கூடாது’ என்று மாட்-டுக் கறி மீது திடீர் எதிர்ப்பைக் காட்ட ஆரம்-பித்-தார்கள் பா.ஜ.க.வினர் கடைக்கண் பார்வையில் இருக்கும் இந்துத்துவ அமைப்புகள். மாட்டிறைச்சி வைத்திருந்தாக சிலர் அடித்துக் கொல்லப்பட்டனர். மிகச் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாட்டின் தோலை உரித்த தலித்துகள் நிர்வாணமாக கட்டி-வைத்து அடிக்கப்பட்டனர்.
இப்படி மாட்டுக் கறிக்கு எதிராக மோடி அரசின் நிழலில் இருக்கும் சில இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலை-யில், மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதி-கரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்று-மதி-யில் இந்தியா உலகிலேயே முதல் நாடாக இருக்கிறது. இந்த நிலையில் மாட்டு இறைச்சி பற்றிய சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உண்மைகள் தெரியாம-லேயே இதில் இஸ்லாமியர்களும் சிக்க-வைக்-கப்-பட்டு அரை- வேக்க-õடுகளால் அரசியல் செய்யப்-படு-கிறார்கள்.

மாடு இந்துக்களுக்குப் புனிதமானது என்பதில் மாற்-றுக் கருத்து இல்லை. ஆனால் மாட்டுக் கறி எந்த மதத்தைச் சார்ந்த உணவும் அல்ல, எந்த சாதியைச்
சேர்ந்த உணவுமல்ல. நிலவியல், பொருளாதாரம் சார்ந்த காரணிகளால்தான் உணவுப் பழக்கமும் அமை-கிறது. அந்தவகையில் மாட்டிறைச்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ இனத்துக்கோ, சாதிக்கோ உரித்தானதல்ல.
ஆனால் இந்துத்துவ அமைப்புகள் மாட்டுக் கறி இஸ்லாமியர்களின் உணவு, தலித்துகளின் உணவு என்று அறியாமையால் நிறுவ முற்படுகின்றன. இந்தக் கொடுமையைவிட கொடுமையானது என்ன-வென்றால், தலித்துகளும், முஸ்லிம்களும் இந்துத்-துவ கும்பலின் இந்த வலையில் விழுந்து, ‘மாட்டுக் கறி தங்களுக்கானது. அதை எதிர்க்கக் கூடாது’ என்று இந்த போராட்டத்துக்கு தங்கள் அடையாளச்
சாயத்தை ஏற்றியிருக்கின்றனர்.மாட்டிறைச்சி இஸ்லாமியர்களின் உணவு அல்ல. இஸ்லாமியர்களுக்கான வாழ்வியல், உணவியல் நெறி-களில் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. சாப்பிடலாம், சாப்பிடாமலும் இருக்கலாம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை தொடங்கி, ஆந்திரா எல்லை வரை உள்ள நீண்ட தமிழகக் கடற்கரையில் ஏராளமான கிராமங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும் முன்பு சமண சமயத்தைத் தழுவியிருந்தனர். கடலோர முஸ்லிம்கள் பயன்படுத்தத் தொடங்கி இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் பயன்படுத்துகின்ற தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா போன்ற தூய தமிழ் சொற்கள் சமணர்களிடம் இருந்து கைக்கொள்ளப்பட்டவையே. மேலும் கடலோர இஸ்லாமியர்கள் கடல்வாணிபத்திலும் ஈடுபட்டனர். மரக்கலங்களின் மக்கள் என்பதுதான் மரக்-காரையர்கள் என்று இருந்து பின் மரைக்காயர்கள் என்று மருவியது. இவர்கள் எல்லாம் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். தமிழகத்தில் கடற்கரை முஸ்-லிம்கள் உள்பட பெரும்பாலான முஸ்லிம்கள் மாட்-டிறைச்சி உண்ணும் வழக்கம் அற்றவர்கள்.
ஆனால், 1980களில் தமிழக முஸ்லிம் இளை-ஞர்கள் வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்-பூர் போன்ற நாடுகளுக்கும் செல்வது அதிக-மானது. வளைகுடா நாடுகளில் கடைநிலைத் தொழி-லாளர்-களாகச் சென்ற இவர்கள் அங்கே கட்டாயத்தின் பேரில் மாட்டு இறைச்சி சாப்பிட ஆரம்பித்தனர். அந்தப் புள்ளி-யில் இருந்துதான் தமிழக முஸ்லிம்களிடத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்தது.

இன்னும் உற்று நோக்கினால் பணக்கார இஸ்லா-மி-யர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடும் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அடித்தட்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பது அதிகரித்திருக்கிறது. கூலித் தொழில் செய்து, தொழிலாளர்களாக இருக்கும் முஸ்-லிம்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களாகவும் இரு--க்-கிறார்கள். இதில் எங்கிருந்து மதம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு சோழநாடு சோறுடைத்து என போற்றப்படும் டெல்டா மாவட்டங்களிலேயே விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமை கோர தாண்டவம் ஆடியதே. நினைவிருக்கிறதா? வரப்-பெலி எனப்படும் எலிகள் விவசாயிகளுக்கு செல--வின்றி கிடைத்ததால் எலிக்கறி சாப்பிட்டனர். அதே-போலத்தான் மாட்டிறைச்சியும் குறைந்த செலவில் கிடைக்கிறது என்பதாலேயே சாப்பிடுகிறார்களே தவிர, இதில் சித்தாதந்தமும் இல்லை புண்ணாக்கும் இல்லை. வறுமைதான் இருக்கிறது. 

தமிழகம் தாண்டிப் பார்த்தால் கேரளாவில் அனைத்து சாதி, மதத்தினருக்கும் பொதுவான உண-வாக மாட்டுக் கறி உணவு இருக்கிறது. கேரளா, அஸ்-ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பா.ஜ.க. தலைமையே மாட்டுக் கறிக்கு எதி-ர--õன நிலைப்பாட்டை எதிர்க்கிறது. ஏனெனில் அவர்-களுக்கு அரசியலைத் தாண்டி மாட்டிறைச்சியின் பயன்-பாடு புரிந்திருக்கிறது. அதனால் இம்மாநில பா.ஜ.க.வினரே தலைமையோடு மாட்டிறைச்சி விவ-காரத்தில் முரண்படும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. குறிப்பிடும்படியாக காஷ்மீர் மாநில முஸ்-லிம்-களி-டத்-திலும் மாட்டிறைச்சி பயன்பாட்டில் இல்லை. 

இவ்வாறு நிலம் சார்ந்து, பணம் சார்ந்த உணவே அன்றி மாட்டிறைச்சி மதத்துக்கானதோ, சாதிக்-கானதோ இல்லை. ஆனால் இந்துத்துவர்களுக்கு இது-பற்றிய புரிதல் இல்லை. இருந்தால் கூட மாட்டு இறைச்சியை வைத்து குறிப்பிட்ட சில மக்களின் இறைச்சியைப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்கள். மகாத்மா காந்தி மாட்டிறைச்சி பற்றி குறிப்-பிட்டதை இப்போது நினைவுகூர்வது மிகச் சரியாக இருக்கும். “பசுவதையை சட்டம் போட்டு நடை-முறைப்-படுத்த இயலாது. இந்த பூமிக்கு பாரமாய் இருக்கிற விலங்குகளை பாதுகாப்பது என்பது இயலாது. பார-மாக இருந்தால் மனிதனைக் கூட பாதுகாப்பது இய-லாத காரியம்தான். பசுவைக் காப்பாற்றுவது இந்து சமயத்தில் முக்கியமானதுதான். ஆனால், பசுவைக் காப்பதற்காக இந்து அல்லாத ஒருவனிடம் வலிமையைப் பயன்படுத்துவது இந்துமதக் கோட்பாடு ஆகாது’ என்கிறார் காந்தியடிகள். ஆனால், இப்போது பசுவைக் காப்பதாகச் சொல்லி இந்துமதத்தில் இருக்கும் தலித்கள் மீதே பலப்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்துத்துவர்கள். மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் கிராமப் பொருளாதாரமும், நாட்டின் ஏற்றுமதி வணிகமும் அடங்கியுள்ளது. இதை வசதியாக மறைத்து
உணர்ச்சிக் கொந்தளிப்பு முலாம் பூசுகிறார்கள். ஊடகங்களும் கூட! இந்தியா மாட்டுச் சந்தைகளுக்கு புகழ் பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா என இந்தியாவின் பல மாநிலங்களில் கிராமங்கள் முதல் மாநகரங்களின் புறநகர் பகுதிகள் வரை மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்றவை.

விவசாயிகளும் பொதுமக்களும் பசு உள்ளிட்ட மாடுகளை வளர்க்கின்றனர். மூன்று அல்லது நான்கு கன்றுகள் ஈனும் வரைதான் பசுவுக்கு மதிப்பு. அதன்பிறகு பசு கருத்தரிப்பது கிடையாது. இதன் பின் விவசாயிகள் அந்த பசுவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போது தமிழக அரசு இலவச கறவைமாடுகளை மக்களுக்கு வழங்கி வரு-கிறது. மாடுகளால் பயன் இல்லாத நிலையில் ஆயி-ரக்-கணக்கான மாடுகளை வைத்து எப்படி விவசாயி-களால் பராமரிக்க இயலும்?

முதிர்ந்த பசுக்களை, மாடுகளை அவர்கள் அடி-மாடு என்று கூறி இறைச்சிக்கு விற்கிறார்கள். இதுவே காலங்-காலமாக கிராமங்களில் இருந்துவரும் நடை-முறை.
இன்றைக்கு அப்படி முதிர்ச்சி அடைந்த மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லவோ, விற்கவோ இயலாத சூழலை, ‘பசு பாதுகாவலர்கள்’ என
சொல்-லிக் கொள்பவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இ-த-னால் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆனால் பல-மான பாதிப்புகள் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்-பட்-டுள்ளன. மனிதனே பெற்றோரை வயதான நிலை-யில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் காலத்--தில், பயனில்லாத மாடுகளை இறைச்சிக்காக பயன்-படுத்துவதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள். இதற்கு அரசிடம் பதில் இல்லை. மாட்டிறைச்சி வைத்திருப்-பவர்-களைத் தாக்குவது என்பது இந்தியக் கிராமப் பொரு-ளாதாரத்தின் மீதான தாக்குதல்தான்.
சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளால் உண்-ணப்-படாத விலங்குகள் அழியும் விலங்குகள் பட்டிய-லில் இருக்கின்றன. ஆனால் விலங்குகளாலும், மனிதர்-களாலும் உண்ணப்படும் நிலையிலும் மாட்டினம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த இயற்கை விஞ்ஞானத்தை இந்த்துவவாதிகள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம், மாட்டிறைச்சி உற்பத்தி செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் இந்தியாவின் முக்கியத் தொழிலாக மாறி வருகிறது. பசு பாதுகாவலர்களின் அரைகுறைப் போராட்-டங்களால் இந்தத் தொழிலுக்கும் எதிர்-காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இத்தகைய போராட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்-புற விவவசாயிகள்தான். நிறுவன ரீதியாக மாட்-டிறைச்சி ஏற்றுமதி செய்பவர்களை எதிர்த்து நின்று போராட பசு பாதுகாவலர்களுக்கு தெம்பு இல்லை.
இந்த நிலையில், இந்துத்துவம் மாட்டிறைச்சியை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்கிறது என் -றால், இதை எதிர்க்கிறோம் என்று சொல்லும் கம்--யூனிஸ்-டு-களும் மாட்டிறைச்சியை குறியீடாக வைத்து எதிர் அரசியல் செய்கிறார்கள். தலித்கள், இஸ்லாமியர்களை அழைத்து மாட்டுக் கறி திருவிழா என்று நடத்துகிறார்கள் அவர்கள்.
உண்மையிலேயே மாட்டிறைச்சிக்குப் பின்னால் இருக்கும் கிராமப் பொருளாதாரம், சாதி - மதம் தாண்-டிய பொருளாதாரக் காரணிகளை மறைத்து-விட்டு
கம்-யூனிஸ்-டுகளும் மற்ற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்-பதற்கு மாட்டிறைச்சியை அரசிய-ல் குறி-யீடா-கப் பயன்படுத்துகிறார்கள். இதுவும் எவ்-விதப் பய-னற்ற உணர்ச்சிகர அரசியல் அறுவடைக்கு-த்தான்.
இஸ்லாமியர்கள் பன்றிக்கறி சாப்பிட அனுமதி இல்லை. அதேசமயத்தில் அதை சாப்பிடுபவர்களை தடுப்பதற்கும் அனுமதியில்லை. 60% இஸ்லாமியர்கள் வாழும் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொண்ட மலேசி-யா-வில் சீனர்கள் விரும்பிச் சாப்பிடுவது பன்றிக்-கறி-தான். அதை முன்னிட்டு மலேசியாவில் பன்றிகள் அறுக்கப்பட்டு பன்றி இறைச்சி விற்கப்படுகிறது. அதேசமயம் சில வளைகுடா நாடுகளிலும் பன்றிக் கறி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் அதை இஸ்லாமியர்கள் சாப்பிடுவதில்லை. இதை மாட்டிறைச்சி எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்-பாளராக போட்டியிட்ட மோடி, வளர்ச்சி, வளர்ச்சி என்பதையே தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் ஆட்சியைப் பிடித்தபிறகு வளர்ச்சி பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாததோடு பதற்றம் பதற்றம் என்பதையே குறியாக வைத்து பா.ஜ.க.வின் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
சாமானிய மக்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்-பது அனைவருக்கும் வேலை வாய்ப்பு,  சாலைப் போக்குவரத்து வசதி, மருத்துவ வசதிகள்,
எல்--லாருக்--கும் சமமான கல்வி, விலைவாசி உயர்வு கட்டுக்--குள் இருத்தல் ஆகியவைதான் கடைக்கோடி கிரா--மங்--களை மட்டுமல்ல நகரங்களைச் சேர்ந்த மக்-களும் எதிர்பார்ப்பது. இதுதான் இந்தியாவின் உண்-மை-யான வளர்ச்சியும் கூட. ஆனால் மோடியின் மந்திர -இந்தியாவில் இவையெல்லாம் இன்னும் பழைய நிலைமையில்தான் இருக்கின்றன என்பதே நிஜம். உணவுக்கே வழியில்லாமல் பல கோடி இந்தி-யர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த உணவைதான் சாப்பிடவேண்டும் என்ற குரல் ஆளுங்-கட்சி தரப்பில் இருந்து வருவது கண்டனத்துக்-குரியது. 

காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் ஊழலால் சலிப்படைந்து வெறுப்படைந்த மக்கள் வேறு வாய்ப்பு இல்லாத நிலையில்தான் மோடியை தேர்ந்-தெடுத்தனர். அதுவும் இந்தியாவில் முப்பது சத-வி-கித மக்கள்தான் மோடிக்கு வாக்களித்தனர். மோடி ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு சில்லறை விஷ-யத்-துக்-கும் மதச் சாயம் பூசி, போலி தேசியச் சாயம் பூசி சாதாரண மக்களை கடும் வெறுப்பில் ஆழ்த்தி-யிருக்-கிறார்கள் மோடியின் நிழலில் முழங்கும் இந்துத்துவ அமைப்பினர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டில் 20  சதவிகிதம் இருக்கும் இஸ்லாமியர்களையும், 20 சதவிகிதம் இருக்கும் தலித்களையும் மோடிக்கு எதிராக காங்கிரஸால் ஒருங்கிணைக்க முடிய-வில்லை. ஆனால், மோடி பதவியேற்ற பிறகான செயல்-பாடுகளால் மோடிக்கு எதிராக இந்த நாற்பது சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களும், தலித்களும் தாங்களாகவே ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி பற்றிய உண்மைகள் தெரியா-மலோ, அல்லது தெரிந்தும் மறைத்தோ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜக அதில் தோல்வி அடைந்திருக்கிறது.மற்றவர்களை பயப்பட வைக்கவேண்டும் என்று மாட்டு இறைச்சி என்ற பூதத்தை பாஜக சுவரில் வரைந்தது. இப்போது தான் வரைந்த பூதத் தைப் பார்த்து தானே பீதியில் இருக்கிறது பாஜக. இதற்-குக் காரணம் இந்துத்துவவாதிகள் உணர்ச்சிக்-குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிவுக்கும் ஆய்-வுக்-கும் கொடுக்கவில்லை. இதற்கான விலையை பாஜக விரைவில் கொடுக்க இருக்கிறது.விதவிதமாய் பதற்றத் தீயை மூட்டினாலும் இந்தியாவில் மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை என்பதே உண்மை!
நன்றி : - புதுமடம் ஜாபர் அலீ,
சமரசம் அக்டோபர் 1-15, 2016

Friday, 22 January 2016

ஐந்து வருடத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தலில் வாக்களிக்க !!

இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....

1 லிட்டர் பால் விலை ரூ 16/- (இன்றைக்கு 46/-)
1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-)
பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-)
மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-)


புது வாட் வரியால்..

மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800)
மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-)
5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட் ரூ 6000/- (இன்றைக்கு 14000/- )

தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி) சிந்திப்பீர்....
சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது. அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..!

இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...!!

விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...!!


இதற்கு எது காரணம்? யார் காரணம்?

விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?
உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் .....
சாலைகளின் தரம் இன்னும் ......?
தொழில் வாய்ப்புக்க, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது,ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....!
ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள் தானே?!
கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...

இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதை இருக்க வேண்டும்.இருந்தால் வாழ்க்கை வசப்படும்.

சிந்திப்பீர் ! செயல்படுவீர்!!

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Scientists may have just found a ninth planet and it's massive !!

This artistic rendering shows the distant view from Planet Nine back towards the sun. The planet is thought to be gaseous, similar to Uranus and Neptune. Hypothetical lightning lights up the night side. (Caltech/R. Hurt (IPAC) )
Scientists believe they may have found a giant planet in our distant solar system, possibly the long-sought after Planet X.
It is believed to have a mass about 10 times that of Earth and orbits about 20 times farther from the Sun on average than does Neptune. As a result, it would take this new planet between 10,000 and 20,000 years to make just one full orbit around the Sun.

“This would be a real ninth planet,” CalTech researcher Mike Brown, who along with his colleague Konstantin Batygin, made the discovery which they are calling Planet Nine. “There have only been two true planets discovered since ancient times, and this would be a third. It’s a pretty substantial chunk of our solar system that’s still out there to be found, which is pretty exciting.”

Already gearing up for questions over whether it’s a true planet, Brown points out that it is 5,000 times the mass of Pluto and gravitationally dominates its neighborhood of the solar system – more so than any other known planet.
It’s “the most planet-y of the planets in the whole solar system,” said Brown, who is famous for helping demote Pluto to a dwarf planet.
Related: Exoplanet hunters made key finds in 2015

Describing their work in the current issue of the Astronomical Journal, the researchers said in a statement that Planet Nine helps explain a number of mysterious features of the field of icy objects and debris beyond Neptune known as the Kuiper Belt.

“Although we were initially quite skeptical that this planet could exist, as we continued to investigate its orbit and what it would mean for the outer solar system, we become increasingly convinced that it is out there,” Batygin, an assistant professor of planetary science, said. “For the first time in over 150 years, there is solid evidence that the solar system’s planetary census is incomplete.”

Brown and his colleagues first got onto the trail of Planet Nine in 2014, when a former postdoc of Brown’s, Chad Trujillo, and his colleague Scott Shepherd published a paper noting that 13 of the most distant objects in the Kuiper Belt are similar with respect to an obscure orbital feature. They suggested the similarities hinted at the presence of a small planet.
The researchers first considered that there are enough distant Kuiper Belt objects - some of which have not yet been discovered - to exert the gravity needed to keep that subpopulation clustered together. But they quickly ruled this out when it turned out that such a scenario would require the Kuiper Belt to have about 100 times the mass it has today.

That left them with the idea of a planet.
Running a simulation in which the planet’s closest approach to the Sun, or perihelion, is 180 degrees across from the perihelion of all the other objects and known planets - the distant Kuiper Belt objects in the simulation assumed the alignment that they were observing.
The presence of Planet 9 helps explains some oddities of the Kuiper Belt, including its alignment and the mysterious orbits that some of the objects trace.

The first of those objects, dubbed Sedna, was discovered by Brown in 2003. Unlike standard-variety Kuiper Belt objects, which get gravitationally “kicked out” by Neptune and then return back to it, Sedna never gets very close to Neptune.

The researchers also found that their simulations predicted that there would be objects in the Kuiper Belt on orbits inclined perpendicularly to the plane of the planets. In the last three years, observers have identified four objects tracing orbits roughly along one perpendicular line from Neptune and one object along another.
“We plotted up the positions of those objects and their orbits, and they matched the simulations exactly,” Brown said. “When we found that, my jaw sort of hit the floor.”

“When the simulation aligned the distant Kuiper Belt objects and created objects like Sedna, we thought this is kind of awesome -- you kill two birds with one stone,” Batygin added. “But with the existence of the planet also explaining these perpendicular orbits, not only do you kill two birds, you also take down a bird that you didn’t realize was sitting in a nearby tree.”
Related: Mars will become a ringed planet when Phobos dies

Brown surmised that Planet Nine could show that there were five, not four, planetary cores that marked the beginning of the solar system. It is believed that these four cores gobbled up all the gas around them, forming the four gaseous planets of Jupiter, Saturn, Uranus, and Neptune. If Planet Nine represents this fifth core, Brown said, it could have been ejected into its distant, eccentric orbit as it got close to Jupiter or Saturn.
 Source : Fox News

Thursday, 21 January 2016

நாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்!!!


வீட்டில் ஆசையாக நாய் வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு அருகில் உள்ளோர் நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், அந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், இதை சாப்பிட்டால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடும், அதை சாப்பிட்டால் நாய் நோய்வாய்ப்படும் என்று பலர் பலவிதமாக கூறுவார்கள். இந்த உலகில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. எதிலும் ஒரு மூடநம்பிக்கையானது நிறைந்திருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது மட்டும் மூடநம்பிக்கை இல்லாமலா இருக்கும். ஆம், முதலில் நாயை வளர்க்க ஆசைப்பட்டால், நாய்களைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதை விட்டு மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று, அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் தவறு செய்தால், பின் நாய் வளர்க்கும் ஆசையை கைவிட வேண்டியது தான். பொதுவாக நாய்க்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வீட்டு உணவு மற்றொன்று ஃபார்முலா உணவு. இத்தகைய நாய்களின் உணவுகள் பற்றி சில மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அத்தகைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சரியான உணவுகளை நாய்க்கு கொடுத்து வளர்த்து வாருங்கள். * நாய்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். உண்மையில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு நம்பிக்கையாகும். ஆம், நாய்களின் செரிமான மண்டலத்திற்கும், மனிதனின் செரிமான மண்டலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே மனிதன் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. சிலர் "என் நாய்க்கு நான் அனைத்து உணவுப் பொருட்களையும் கொடுத்துள்ளேன். இதுவரை அதற்கு ஒன்று ஆனதில்லை" என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், நாய்க்கு ஏற்படும் பாதிப்பானது உடனே தெரியாது. திடீரென்று என்றாவது தேவையில்லாமல் உடல்நலம் சரியில்லாத போது தான் உணர்வீர்கள். * நாய்கள் சைவமாக இருக்க முடியாது. உண்மையில், நாய்கள் சைவமாக இருக்க முடியும். அதிலும் அதற்கு சரியான உணவுகளை கொடுத்து வந்தால். இறைச்சியில் மட்டும் தான் நாய்களுக்கு வேண்டிய சத்துக்கள் இருக்கும் என்றில்லை. அவற்றிற்கு புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள சரியான சைவ உணவுகளை தொடர்ச்சியாக கொடுத்தாலே, நாய்கள் இறைச்சி சாப்பிடாமல், சைவ நாயாக இருக்கும். * நாய்களுக்கான ஃபார்முலா உணவுகள் அனைத்தும் ஒன்று தான். மனிதர்களுக்கான அனைத்து ஃபார்முலா உணவுகளும் ஒன்றா? இல்லையெனில், நாய்களுக்கு மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். எப்போதும் நாய்களுக்கு வாங்கும் உணவுப் பொருட்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் சத்துக்கள் சரியானதாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். ஒருவேளை குறைவாக இருந்தாலும், வேறொரு உணவுப் பொருட்களை தேர்ந்துதெடுத்து வாங்கலாம். * வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் எப்போதும் நல்லது. இதுவும் ஒரு மூடநம்பிக்கை தான். உண்மையில் வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலம் மட்டும் நாய்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதற்கும் ஒருசில ஃபார்முலா உணவுகளை தினமும் கொடுத்தால் தான், நாய்க்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். 
நன்றி : பொறியாளர்  பாலாஜி.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 16 January 2016

தமிழர் மரபில் இல்லாத பழக்கம்தான் பஃபே விருந்து !!

Image result for buffet tableவிருந்துனு சொன்னாலே தலை வாழை இலை போட்டு வித‌ விதமா பரிமாறி பாத்த‌ உடனே சாப்பிட‌ தூண்டுறது தான்,
உட்கார்ந்து சாப்பிடற‌து தான் நம்ம‌ கலாச்சாரம்.அது தான் சிறந்ததும் கூட‌.
அறிவியல் படியும் உட்கார்ந்து தான் சாப்பிடனும். சில‌ வேலைகள் இப்படி தான் செய்யனும் முறை இருக்கு .

விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் பஃபே எளிதில் கிடைக்கிறது. பொதுவாக, இந்த வகை விருந்துகளில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும் என்பதால், எதில் இருந்து தொடங்குவது என்பதில் இருந்து, எதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும் என்பது வரை கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.

விருந்து இரண்டு வகை. வீட்டில் பரிமாறப்படும் விருந்து, வெளி இடங்களில் பரிமாறப்படும் விருந்து. இந்த இரண்டு விருந்துகளில் சிறந்தது, வீட்டில் பரிமாறப்படும் விருந்து பந்தி முறையே.

வீட்டில் பரிமாறப்படும் பந்தி முறை முன்பு இருந்தது, கூட்டு குடும்பமாக இருந்தபோது அனைவரையும் வரவேற்று பந்தி முறையில் உணவு பரிமாறப்பட்டது. அதில் உணவோடு சேர்ந்து அன்பும் பரிமாறப்படும். உதாரணதுக்கு மாப்பிள்ளைக்கு சாதம் போடு, கறித்துண்டு வையுங்க. மச்சானுக்கு
பாயசம் போடு, என்று உறவு முறைகளை சொல்லி பரிமாறுவோம். சாப்பிட்டதும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து வெத்தலை தாம்பூலம் போடுவது ஒரு தனி சுகம். அப்பொழுதான் என் பையன் படித்துவிட்டான் உன் பெண்ணை அவனுக்கு தருகிறயா? என்று பல கல்யாணங்கள் அந்த தருணங்களில் நிச்சயம் செய்ததும் உண்டு.


ஹெல்த்தி பஃபே

மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த பழக்கம்தான் பஃபே விருந்து. ஆனால், ஹெல்த்தியாகச் சாப்பிடுவது எப்படி என இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை.
பஃபே விருந்தில் கொஞ்சம் கொஞ்சமாக எத்தனை முறை வேண்டுமானாலும்  சாப்பிடலாம். இதுபோன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதைவிட மற்றவர்களோடு அறிமுகமாவதுதான் முக்கியம்.  அதற்காகவே, அதிக நேரம் சாப்பிடும் வகையில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

பஃபேவில் உணவு வகைகளைக் கண்டதும் ஓடிச்சென்று எல்லா உணவுகளையும் எடுப்பது தவறு. சூப், ஸ்டார்ட்டர், பிரியாணி, அசைவ உணவுகள் என எதுவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்த, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக இனிப்புச்சுவைகொண்ட கேக் முதலானவற்றைக் குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாலட்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள், நீராவியில் வேகவைத்த சிக்கன் போன்றவற்றைச் சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். குறைந்தது அரை மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை உட்கார்ந்து, நன்றாக ரசித்துச் சுவைத்து மெள்ள மெள்ள உணவை விழுங்க வேண்டும்.

விருந்துக்கு முன்
முன்பு எல்லாம், பலரும் விருந்துக்குச் செல்வதற்கு முந்தைய நாளில் இருந்தே அதற்குத் தயாராகிக்கொண்டு இருப்பார்கள். விருந்தை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலர், மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள், இது தவறு. என்னதான் அமர்க்களமான விருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற மனஉறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவையும் இரவு உணவையும் எந்தக் காரணம்கொண்டும் தவிர்க்கவே கூடாது. மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், நான்கு மணி நேரத்துக்கு முன்னர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது. இரவு விருந்துக்கு ஆரோக்கியமான இளம் வயதினர் மதிய உணவைத் தவிர்த்து, ஏதோ ஒரு ஜூஸ், பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு விருந்துக்குச் செல்வதில் தவறு இல்லை. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், எந்த வேளை உணவையும் தவிர்க்கக் கூடாது.
பிளேட்டில் கவனம்


வீட்டு விருந்துகளில் நிறைய‌ டிஷ் செஞ்சு வைச்சிருப்பாங்க‌. நானும் பபே முறைக்கே வாரேன் ஒரு தட்டில் சாதம் அனைத்து விதமான‌ கறி வகைகள் சாம்பார், தயிர், ரசம், பாயாசம், அப்பளம் அப்புறம் உங்களுக்கு பிடித்தமான வடை இதையெல்லாம் எப்படி ஒரே தட்டில் வைக்க‌ முடியும் நடுவரே. முதல்ல‌ இதையெல்லாம் நாமலே எடுத்து வைச்சி சாப்பிடுரதுக்குள்ள‌ கை வலிக்கும் அப்புறம் எங்க‌ சாப்பிடுறது நடுவரே. அப்படியே சாம்பார் முடிச்சி, தயிர் , ரசம் இப்படி ஒவ்வொன்னா நாம‌ எடுத்து சாப்பிட‌ முடியுமா நடுவரே. கூடவே குழந்தைகள் வந்திருந்தாங்கனா அவங்களுக்கும் யாருங்க‌ வச்சி தருவாங்க‌ நாமதான் வச்சி கொடுக்கனும்
பபே முறை பிரியானி, சிக்கன் இதுக்குலாம் வேனா சரியா வரும் நம்ம‌ அறுசுவை உணவுக்கு சரியா வராதுங்க‌ நடுவரே. பபே முறையிலும் உட்கார்ந்து சாப்ப்டுவதாவே இருக்கட்டும் ஒவ்வொரு தடவையும் எந்திருச்சி போய் சாப்பாடு போட்டு கொள்ள‌ முடியுமா 


பஃபே முறைல‌ எவ்ளோ கஸ்டம் இருக்கு தெரியுங்களா, கேட்டு வாங்கி சாப்பிடவே சங்கட‌மா இருக்கும் பட்சத்தில‌, தேவையானதை போயி , போயி வாங்கி சாப்பிடறது இன்னும் எவ்ளோ தர்ம‌ சங்கடமா இருக்கும் நீங்களே சொல்லுங்க‌, ஒரு டைம் போவாங்க‌, 2 டைம் போவாங்க‌ அப்புறம் யாராவது பார்ப்பாங்களானு மனசுக்கு ஒரு நெறுடல் இருக்கும்.சொல்லுங்க‌ இது தேவையா,


பஃபே போன்ற விருந்துகளில் பங்கேற்கும்போது, பிளேட்டில் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே சிறிய பிளேட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். பஃபேயில் இருக்கும் எல்லா உணவு வகைகளையும் பிளேட்டில் எடுத்துக்கொண்டு சென்று, பின்னர் அமர்ந்து சாப்பிட வேண்டாம். எந்த உணவை விரும்புகிறீர்களோ, அவற்றை மட்டும் பிளேட்டில் அளவாகவைத்து, பொறுமையாகச் சாப்பிட வேண்டும். பஃபேவில் வேகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீணாக்காமல் சாப்பிடுவதுதான் முக்கியம். எத்தனை முறை வேண்டுமானாலும் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், தட்டையும் வயிற்றையும் அளவாக நிரப்ப வேண்டும்.

தண்ணீர் அருந்துங்கள்

தண்ணீர் அருந்தினால் அதிகமாகச் சாப்பிட முடியாதோ என, பலர் தண்ணீர் அருந்துவது இல்லை, இது தவறு. எப்போது எல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது எல்லாம் அளவாக, சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பது அவசியம். தண்ணீருக்குப் பதில் கோலா பானங்கள், சோடா அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழர் விருந்து

எத்தனையோவிதமான விருந்துகள் இருந்தாலும், தமிழர் விருந்துதான் செரிமானத்துக்கு ஏற்றது. முதலில் சிறிது பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும். பின்னர் அரிசி, பருப்பு, நெய், ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். பிறகு, கலவை சாதம், மீண்டும் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் ரசம், அப்பளம், சாலட், தயிர், ஐஸ்க்ரீம் என விருந்தை முடிப்பதுதான் காய்கறிகளை மட்டும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். 


சாப்பிட வருபவர்களை வரவேற்று, பந்தியில் உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று அமரச் செய்து, அவர்கள் விரும்பி உண்பதை விசாரித்துச் சாப்பிடச் செய்வது இவற்றின் சிறப்பு

கலோரி கவனம்

பஃபே விருந்துகளில் நிறைய சாப்பிட்டால், எக்கச்சக்க கலோரி உடலில் சேர்ந்துவிடும். எனவே, அடிக்கடி பஃபேயில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பஃபே விருந்துக்கும் இன்னொரு பஃபே விருந்துக்கும் இடையில் இரண்டு வாரங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை இடைவெளி இருப்பது நல்லது. பஃபேவில் பங்கேற்கும்போது, அந்த விருந்துக்கு முந்தைய வேளையும், அந்த விருந்துக்கு அடுத்த வேளையும், வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிடுங்கள். நிறைய உணவுகளை உண்டிருந்தால், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கூடுதல் உடற்பயிற்சிகளைச் செய்து, உடலில் சேர்ந்த தேவையற்ற கலோரிகளை எரிப்பது நல்லது.

சூப் சாப்பிடலாமா?

சூப் பசியைத் தூண்டும் ஆற்றல்கொண்டது. பஃபே, விருந்துகளில் பங்கேற்கும்போது, சாப்பிடச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்னதாக சூப் பருகினால்தான் பலன் கிடைக்கும். வேகவேகமாக சூப்பைப் பருகிவிட்டு, உடனடியாக மற்ற உணவுகளையும் சாப்பிட்டால், சூப் குடிப்பதில் எந்தவிதப் பயனும் கிடையாது.


பஃபே முறைல‌ குழ‌ந்தைங்க‌, பெரியவங்க‌ யார் நம்ம‌ மேல‌ கொட்டுவாங்கனே தெரியாது,நிறையா வேஸ்ட் ஆகும், எங்க‌ தான் வேஸ்ட் ஆகாது, விருந்து அப்படினா இதெல்லாம் சகஜம்.
வேஸ்டான‌ என்னா விடுங்களேன் வாய் இல்லா ஜீவ‌ ராசிகளும் சாப்பிடட்டுமே ,அதுங்களும் வயிறார‌ சாப்பிட்டு வாழ்த்தட்டுமே.
நம்ம‌ முன்னோர்கள் எதையுமே காரணமில்லாம‌ செய்யல‌, எல்லா விசயங்களையும், முறைகளையும் அர்த்தம் இருக்கும்.

பேஷனுக்காக‌ வேணா பஃபே முறை சரி வ‌ருமே தவிர‌ , எல்லா விதமான‌ மக்களுக்கும் பொருந்த‌ கூடியது,விரும்பதக்கது பந்திமுறையே,நம்ம‌ பாரம்பரிய‌ தமிழ் கலாச்சார பந்திமுறையே விருந்துகளில் விரும்பதக்கது.

 ஆக்கம்மற்றும்தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Friday, 15 January 2016

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன்? ஜல்லிக்கட்டில் மறைந்துள்ள உலக அரசியல்!! ஒரு சமூக விழிப்புணர்வு பார்வை ..


இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding);


இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).


இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.

சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.

தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.


இப்போது புரிகிறதா? ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன்?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரைமேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது.Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு375 லட்சம் கோடிஅமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள் நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறதுஜல்லிக்கட்டு காளையை அழித்தால்அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம். இது Fwd msg.அல்ல நம் நாட்டு பசு மாடுகள் பற்றிய விழிப்புணர்வு இதை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Wednesday, 13 January 2016

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி ஏறு தழுவல் என்ற பெயரில் போட்டியை நடத்துங்கள் !!

Image result for ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், 'அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகள் மாறி, மாறி வலியுறுத்தி வருகின்றன.இதைப் பார்க்கும் போது, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராது என்பது தெளிவாகி விட்டது. 

கிராமத்தில், ஒரு பழமொழி உண்டு; 'தும்பை விட்டு, வாலை பிடிப்பது' என்பது. 2014ல், உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய மனுவை, விசாரணைக்கு கொண்டு வந்திருக்க, நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.இந்த தடை 11-07-2011 ஆம் அன்று காங்கிரஸ்-இல் மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த JAIRAM RAMESH என்ற தெலுங்கர்... அதை முதலில் சிங்கம் புலி போன்ற காட்டு விலங்குடன் இந்த வீட்டு விலங்கை பட்டியலில் இட்டதே மிகபெரிய தவறு.... இதில் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லை, ஏன் என்றால் உலகத்திலேயே எருமைகள் கூட காட்டு எருமைகள் (BISON) என்று உள்ளது???... இந்தியன் காட்டு எருமைக்கு GUAR -என்று பெயர். ஆனால் உலகத்திலேயே காட்டு மாடுகள் என்று ஒன்று கிடையவே கிடையாது???... இது தான் நமக்கு உள்ள ஒரே வாய்ப்பு.... இதை வைத்து இதனை காட்சி பட்டியலில் இருந்து இதனை நாம்மால் நீக்கி விட முடியும்???.... இதனை சட்டமாக இயற்றிவிட்டு அந்த தெலுங்கர் 12-07-2011- வரை இருந்து விட்டு 13-07-2011 ஆம் நாள் அன்று ஊரகத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்???... அன்று 2004-இல் இருந்து அன்று 11-07-2011 வரை மத்திய காங்கிரஸ் கட்சியில் திமுக -வும் அங்கம் வகித்தது???... ஆனால் திமுக வைக்கும் குற்றசாட்டு அன்று தமிழகத்தில் முதல்வராக இருந்த அம்மா அவர்கள் எதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்கள் ஆட்சியில்தான், அதானால் இதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்று???... அப்படி என்றால் அன்று ஏன் கேட்கவில்லை, இன்று ஏன் கேட்கிறார்கள் என்பது அப்புறம் இருக்கட்டும்???.... நீங்கள் மத்திய அமைச்சர் அவையில்தானே அப்பொழுது நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது கூட எனது கேள்வி இல்லை???.... அன்று 11-07-2011-ஆம் நாளன்று இந்த தடை கொண்டு வந்தது ஜனவரி 2011 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் நீங்கள் தானே ஆட்சியில் இருந்து வந்தீர்கள்???.... அப்படி என்றால் இந்த தடைக்கு யார் காரணம்???... இன்னொரு கேள்வி, அவரின் அந்த மத்திய சுற்று சூழல் அமைச்சர் பதவி 12-07-2011 அன்று முடிகிறது????... அப்படி என்றால் அந்த தெலுங்கு அமைச்சர் அந்த தடையை ஒரு நாளுக்கு முன்பு, அதாவது 11-07-2011 அன்று ஏன் அதை கொண்டு வந்தார்???.... அதில் ஏன் காளையை அதோடு சேர்த்தார்???... அதற்கு என்ன காரணம்???.... அதற்கு வேறு யாராவது தெலுங்கர்கர் துணையாக இருந்தார்களா???.... இது எல்லாம் விசாரித்தால் தெரிந்து விடும் இது பன்னாட்டு சதியா, இல்லை உள்நாட்டு சதியா என்று????..

ஐல்லிகட்டுக்குத்தானே இடைக்கால தடை, ஏறு தழுவல் போட்டியை நடத்துங்கள்!!ஜல்லிகட்டு நடத்த இடைக்கால தடை. மத்திய அரசு பட்டியிலில் உள்ள காட்டு காளைகளை வைத்து ஜல்லிகட்டு நடத்த தடை. அவ்வளவு தானே. தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றுங்கள். மாட்டு பொங்களன்று “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்துங்கள். யாரும் எந்த தடையும் செய்ய முடியாது. இப்படி செய்யலாம் என்று நீதி அரசர் மார்கண்டேய கட்ஜீ பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த மாநில அரசிற்கு அதிகாரம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அவரது கருத்தை ஒட்டி. “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்த யாரும் தடை செய்ய முடியாது. தமிழக அரசு உச்ச நீதி மன்ற உத்திரவின் படி காட்டு காளைகளை வைத்து ஜல்லிகட்டு நடத்தினால் தான் உங்களுக்கு அனுமதி மறுக்கும். வீட்டு காளைகளை வைத்து ஏறுதழுவுதல் போட்டிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அப்படி வேண்டுமென்றால் அவரகள் சட்டத்தை சரியாக இயக்கி விட்டு தடை செய்யட்டும். இது ஒட்டைச் சட்டம். அந்த காலத்தில் எம். ஆர். ராதாவின் இரத்த கண்ணீர் நாடகத்திற்கு தடை போட்டவுடன், எம்.ஆர். ராதா பெயர் மாற்றி இழந்த காதல் என்று இரத்த கண்ணீர் நாடகம் போட்டார். அதற்கும் தடை போட்டவுடன், வேறு பெயரில் அதே நாடகத்தை நடத்தினார். எனவே தமிழக மக்கள் நிம்மதியாக வீட்டு ஏறுதழுவுதல் போட்டி நடத்தலாம். காட்டு விலங்குகள் பட்டியலில் இதுவரை புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகள் இருந்தது. ஒரு அதிமேதாவி அதிகாரி சோரம் போய், காளையையும், ஜல்லிகட்டையும் இணைந்து பட்டியலில் சேர்த்து விட்டார். அதாவது காட்டில் இருக்கும் காளைதான் காட்டு விலங்கு பட்டியலில் இடம் பெறும். எனவே அதை மத்திய அரசு அதை செய்துள்ளது. எனவே தமிழக மக்கள் காட்டு காளையை ஜல்லிகட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த வரை தமிழகம் காட்டு காளையை ஜல்லிகட்டில் ஈடுபடுத்த வில்லை. எனவே உச்ச நீதி மன்றம், காட்டுவிலங்கான காட்டு காளையை ஈடுபடுத்தி ஜல்லிகட்டு நடத்த தடை விதித்திருக்கிறது என்று தான் அர்த்தம். எனவே வீட்டு காளைகளை வைத்து ஏறு தழுவதல் என்பதற்கு தடை கிடையாது, அது நீதி மன்ற உத்திரவை மீறுவதாகாது. அரசு மக்களின் மனநிலை அறியாமல் உத்திரவின் வார்த்தை ஜாலங்களால் நீதிமன்றம் தடை செய்யும் அளவுக்கு உத்திரவு போட்டால், அதே வார்த்தை ஜாலங்கள் காட்டி, அந்த தடையை தாண்டி விளையாட வேண்டியது தான். வேறு என்ன செய்ய முடியும். காவிரி தண்ணீர் பிரச்சினையில் சுப்ரீம் கோட்டின் உத்திரவை மீறி நடக்கும் கர்நாடக அரசை எத்தனை முறை சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் பண்ணியிருக்கிறது. காளையை, காட்டு விலங்கு என்ற வரிசையில் வரைமுறை படுத்தாமல், சேர்த்துயார், யார் சொல்லி சேர்த்தார்கள். முதலில் அப்படி சேர்த்தவர்களை, அறிவிலி என்று சொல்வதா, இல்லை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆசைக்காக கைகூலியாக செயல்பட்ட அறிவார்ந்த அதிகாரி என்று சொல்லுவதா. அதை அனுமதித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களை, அவர்களது கடமைகளை அறிவார்ந்து செய்ய தவறியவர்கள் என்று சொல்வதா. நம் நாட்டில் வீட்டு யானை இருக்கிறது, காட்டு யானை என்று இருக்கிறது. வீட்டு காளை என்று இருக்கிறது, காட்டு காளை என்று இருக்கிறது. பாரம்பரியமாக மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணியாக வைத்திருக்கும் காளை மாட்டை வீரியமிக்க சக்தி வாய்ந்த இனப்பெருக்கத்திற்கு தயார் செய்யும் ஜல்லிகட்டு காளையை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அதிகாரி, யாருக்கும் தெரியாமல் காட்டு விலங்கு என்ற பட்டியலில் சேர்ப்பார். அதில் காட்டு காளையா, வீட்டு காளையா என்ற வரைமுறை இல்லை. எனவே அதை நாம் காட்டு விலங்கு – அதாவது காட்டு காளை என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். தனக்கு இட்ட வேலையையே ஒழுங்காக செய்ய தெரியாத அதிகாரி, யாருக்கும் தெரியாமல் காளையை காட்டு விலங்கு என்று வரைமுறை படுத்துவாராம். நாம் அதை புரிந்து கொள்ளாமல், வீட்டில் வளர்க்கும் காளையை வைத்து விளையாடுவதற்கு அனுமதி கேட்க வேண்டுமாம். என்ன வேடிக்கை இது. காளையை காட்டு விலங்கு பட்டியலில் சேர்த்து இப்படி பட்ட குழப்பத்தை உருவாக்க காரணமான அதிகாரி, யார் சொல்லி செய்தார், ஆனால் அதை விலக்குவதற்கு மக்கள் வீதியில் இறங்கி போராடவேண்டுமாம். போராடினாலும் அதை நீக்க முடியாது என்று சொன்னால். யார் யாரை இயக்குவது என்று கேள்வி வருகிறது அல்லவா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், அதில் சட்ட சிக்கல் உள்ளது என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியுமா. எந்த ஒரு சட்டமும், தெளிவான சட்டமாக இல்லாமல், Ambiguity அதாவது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தால், அது செல்லு படியாகாது. ஒரு சாதாரண அதிகாரி செய்த தவறை சரி செய்ய கூட முடியாத அரசியல் தலைவர்களை நமக்கு எதற்கு. ஆனால் மக்கள் எல்லோரும் போராடிய பின்பு கூட,, பட்டியலில் இருந்து முழுமையாக நீக்காமல் பிராணிகள் வதைச் சட்டப்பிரிவு 3, 11 மற்றும் 22ன் படி, ஜல்லிகட்டு நடத்த உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. அதாவது, பிராணிகள் வதைச் சட்டப்பிரிவு – 3,11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல், ஆகியவற்றிற்கு தடை விதிக்கின்றன. ஜல்லிகட்டு என்பது காளைகளை துன்புறுத்துவது என்ற நோக்கத்தில் ஏற்பட்ட தல்ல. If the intention is to harm the animal, then it can be stopped. If the intention is to test, enrich the capability of the animal, how Jallikattu will fall under this purview. It cannot. எனவே 3,11ல் கூட ஜல்லிகட்டு வரவில்லை. இது வரை ஜல்லிக்கட்டில் எந்த காளையும் துன்புறுத்தப்பட்டு மடிந்த்து என்று ஏதாவது ஒரு நிகழ்வை காட்ட முடியுமா. எனவே 3,11 ம் இதற்கு பொருந்தாது. சட்டப்பிரிவு – 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில் 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு ஒரு நீர்த்த அரசு ஆணையை பிறப்பித்தது. 3 மற்றும் 11 வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும் 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் தூங்கி விட்டு, மத்திய அரசு ஜல்லிகட்டு நடத்த வேண்டிய நாள் வரும் போது, ஒப்புக்கு சப்பாக பிராணிகள் வதை சட்ட பிரிவு 22 க்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்து விட்டு, 3 மற்றும் 11 வது சட்ட பிரிவுகள் பற்றி ஒன்றுமே சொல்லாமல், ஒரு ஏமாற்று ஆணையை, மத்திய அரசு பிறப்பிக்கும் வகையில் ஒரு அதிகாரி ஏமாற்றி எழுதிய பைலை, கோர்டில் தடை கிடைக்கும் வகையில் அரசு ஆணையாக பிறப்பித்திருக்கிறது என்று சொன்னால், இங்கு மக்கள் அல்ல எஜமானர்கள், அரசை வழி நடத்தும் மறைமுக சக்திகள் தான் அதிகாரிகளுக்கு எஜமானர்கள்.

 எங்கள் கிராமங்களில் ஜல்லிகட்டு நடந்து முடிந்ததும், பசு மாடுகள் சினைக்கு தயாராக இருக்கும். எந்த காளை ஜல்லிகட்டில் வெற்றி பெறுகிறதோ, அந்த காளையை வைத்து பசு மாடுகளை சினைக்கு போடுவார்கள். பிறக்கின்ற கன்று வீரியம் மிக்கதாக, ஆரோக்கியம் மிக்க தாக இருக்கும். ஜல்லிகட்டை தடை செய்தால், வெண்மைப்புரட்சியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை கீழ் நிலைக்கு தள்ள வேண்டும் என்ற பீட்டாவின் முயற்சிக்கு, அடிபணிந்த ஒரு சில அதிகாரிகளின் நீர்த்துப்போன உத்திரவுதான் ஜல்லி கட்டு காளைகளுக்கு விலக்கு என்ற அரசியல் வாதிகளை சமாளிக்கும் உத்திரவு. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால். சந்தேகத்திற்கிடமான ஒரு அரசாணை, காளையை பட்டியலில் நாட்டு, காட்டு காளை என்று வகைப்படுத்தாமல் சேர்த்தது ஒரு தப்பு, பிராணிகள் வதைச் தடுப்பு சட்டப் பிரிவில் 3,11, 22ல் இருந்து நாட்டு காளைக்கு முழுமையாக விலக்கு அளிக்காமல் சந்தேகத்திற்கு இடமளித்து பிறப்பிக்கப்பட்ட ஆணை தப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் அறிவை பயன்படுத்தியிருந்தால், இதய சுத்தியோடு இந்த பிரச்சினையை அணுகவேண்டுமென்றால், வீட்டு மாட்டை, காட்டு மாடு என்று சொன்ன தான்தோன்றித் தனமான பட்டியிலில் இருந்து காளை மாட்டை நீக்கி இருக்க வேண்டும். அந்த பட்டியலில் காட்டு காளையை சேர்த்து, வீட்டில் வளர்க்கும் காளைக்கு இந்த தடை யில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும். இதை செய்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்திருந்தால், இனி மேல் அதிகாரிகள் விலை போக மாட்டார்கள். எனவே, இந்த சட்ட சிக்கல்களை எல்லாம் சரி பண்ணி விட்டு ஆட்சியாளர்கள் வரட்டும். அது வரை, தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றிவிட்டு மாட்டு பொங்களன்று “வீட்டுக்காளை ஏறு தழுவுதல் மாட்டுப் பொங்கல் விளையாட்டு போட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்துங்கள். யாரும் எந்த தடையும் செய்ய முடியாது.  மாற்றி  

உங்கள் அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 12 January 2016

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சி !!


பெட்ரோல் என்பது இந்தியாவின் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்து. 350 பர்சென்டேஜ் வரி போட்டுதான் ஜனாதிபதி முதல் கடைநிலை ஊழியர் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்றைக்கு 2 ரூபாய் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் அரசுகள் உடனே அந்த 2ரூபாய்க்கும் எதாவது ஒரு பெயரில் வரி கணக்கை எழுதி 350 பர்சென்டேஜை 375 ஆக மாற்றி பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைக்கின்றன.

அமெரிக்காவில், பாறை இடுக்குகளில் கிடைக்கும், 'ஷேல்' வாயுவில் இருந்து, அபரிமிதமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுபோல, எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகள், வழக்கம் போல், உற்பத்தியை தொடர்கின்றன. 13 ஆண்டு பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டுள்ள ஈரான், முழு அளவில் எண்ணெய் உற்பத்தியை துவக்கிஉள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் கச்சா எண்ணெய், சர்வதேச சந்தையில் நேற்று, 3 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய், 30.41 டாலராக வர்த்தகம் ஆனது; இது, 2003, டிசம்பரில் இருந்த குறைந்த விலை. அதன்பின், பிற்பகலில் சற்று ஏற்றம் கண்டது.
ஒரு காலத்தில், அதாவது ஜூலை 2008-இல் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 145 டாலராக வர்த்தகம் ஆனது, அன்று கடும் உச்சத்தில் இருந்தது. இன்று 30.41 டாலராக வர்த்தகம் ஆனது, கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கிறது... விலைவாசி உயர்வு என்பதே DEMAND AND SUPPLY பொறுத்தே எந்த ஒரு பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்ய படுகிறது.... அதாவது தேவை அதிகரிக்கும் பொது விலை உயருகிறது???... தேவை குறையும்போது விலை குறைகிறது???.... ஆனால், இந்த கச்சா எண்ணெய் விலை குறைவு என்பது பொருளாதார விதிகளுக்கே இன்று பொருந்தவில்லை???.... அன்று 145 டாலராக வர்த்தகம் ஆனபோது ஒரு பீப்பாய்க்கான உற்பத்தி செலவு 20 டாலர்... அப்படி என்றால் அது போக மீதி லாபம் 125 டாலர்.... இன்று 30 டாலராக வர்த்தகம் ஆகிற போது ஒரு பீப்பாய்க்கான உற்பத்தி செலவும் அதே 20 டாலர்தான் ... அப்படி என்றால் அது போக மீதி லாபம் 10 டாலர் மட்டுமே.... அப்படி என்றால் இன்று லாபம் 100 சதவிகதம் என்றால் அன்று லாபம் 1250 சதவிகிதம்...., இல்லை அன்று லாபம் 100 சதவிகிதம் என்றால் இன்று லாபம் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே.எண்ணெய் நிறுவனகளுக்கு மத்திய அரசு 1 லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் ரூ.22.58 தான் தருகிறது. டீசலுக்கு 1 லிட்டர் வெறும் ரூ.18.45 . டைம்ஸ் ஆப் இந்தியா என்று ஒரு பத்திரிகை இருக்கிறது, அதில் கடந்த வாரம் இந்த செய்தி வந்தது. அப்போ மீதி பணம்? பாதி மத்திய அரசுக்கும் மீதி மாநில அரசுக்கும் வரிகளாக மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் எல்லாமே அரசு நிறுவனங்கள் தான் (ரிலையன்ஸ் தவிர). உங்களைப் போலத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி, சுங்க வரி, கல்விச் சந்தா (educational cess), ஸ்வச் பாரத் சந்தா, துறைமுக உபயோகக் கட்டணம், ப்ரீமியம், அந்த வரி இந்த வரி என்று ஏற்க்கனவே கச்சா எண்ணெய் வாங்கும் போதே, எண்ணெய் நிறுவனங்களைப் பிழிந்து பல வரிகளை அரசுகள் வாங்குகிறார்கள். கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, LPG , பெட்ரோல் டீசல் இன்ன பிற பொருட்களாக மாற்றி விற்கும்போதும், ஏகப்பட்ட வரிகள் எண்ணெய் நிறுவனங்கள் மீது.நீங்கள் பெட்ரோலுக்கு தரும் அமவுன்ட்டில் கிட்ட தட்ட 45% மாநில மத்திய அரசுகளுக்கு வரிகளாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க்கனவே கட்டிவிட்ட்டுத் தான் பங்க்குகளில் தருகின்றனர்.2008 இல் ஒரு டாலர் இந்திய ரூபாய் 48 . இன்று ஒரு டாலர் 66 ரூபாய் நம் நாடு பண மதிப்பு . 48% குறைந்து உள்ளது காரணம் பண வீக்கம் 6% அதற்கு காரணம் வட்டி 8% . நம் நாடு வட்டி இல்லா நாடு ஆகிறதோ அன்று தான் விலை வாசி உயராது . பண மதிப்பு குறையாது .அமெரிக்கா நினைத்தால் விலையை கூட்டவோ குறைக்கவோ செய்ய முடியும் ஆனால் தற்போது செய்யமாட்டார்கள்...இறக்குமதியை குறைத்து விட்டார்கள், சந்தைக்கு அதிக வரவு விலையோ குறைவு...எண்ணை ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகளின் பொருளாதாரம் சரியும் சூழ்நிலை...இந்தியாவிற்கு விலை குறைவு நன்மையாக அமையும்..பாறை இடுக்குகளில் கிடைக்கும், 'ஷேல்' எரிவாய்வு எடுப்பதற்கும் சிலவுகள் உள்ளன அதனால் பாரல் $ 10 ற்கு வருவது சந்தேகமே..எண்ணை விலை குறைய குறைய அமேரிக்க டாலர் மதிப்பு கூடிவிட்டது...


சர்வதேச அளவில், மோசமான சூழ்நிலை காணப்படுவதால், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய், 10 டாலர் வரை வீழ்ச்சி அடையக்கூடும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கரன்சியான டாலர், நம் இந்திய ரூபாய் மதிப்பில், 66 ஆக உள்ளது.


பெரும்பாலான வாசகர்கள் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

1. பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள் அல்ல. மத்திய அரசு தான்.

2. மக்களிடம் வாங்கும் விலையில் கிட்ட தட்ட 46% மாநில மத்திய அரசுக்களுக்கு பல பேரில் வரிகளாக எண்ணெய் நிறுவனங்கள் கட்டியாக வேண்டும்.

3. இந்த வரிகளைக் கட்டிய பிறகே எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் மக்களின் மார்க்கெட்டுக்கு வருகின்றன.

4. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் வெறும் ரூ.23.48 தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசுகளால் கிடைக்கின்றன. பிற உற்பத்திப் பொருட்களிலும் இதே விகிதம் தான்

.5. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 30 டாலர் என்றாலும் எண்ணெய் நிறுவனங்கள், கப்பல் கட்டணம், நுழைவுக்கட்டணம், கப்பல் பெர்த்திங் சார்ஜ், மூரிங் சார்ஜ், கேஸ்ட் அவே சார்ஜ், இறக்குமதி வரி, துறைமுக கலால் வரி, அந்த வரி , இந்த வரி என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்ட தட்ட 45 டாலர் ஆகிறது.


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததால் மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை குறைக்கவில்லை;இதன் மூலம் 150 ரூபாவை இலாபமாக ஆக்கிக் கொண்டது அரசு .மக்களுக்கு பயனில்லை,கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் சமையல் கியாஸ் விலை குறையவில்லை. மானியம்தான் ரூ.105 குறைந்துள்ளது.

சமையல் கியாஸ்

தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் போலி இணைப்புகள். அதாவது ஒரு வீட்டுக்கு இரட்டிப்பான இணைப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட இணைப்புகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் சமையல் கியாஸ் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலக செய்தி தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:-

சிலிண்டர் விலை எவ்வளவு?

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை முன்பு ரூ.705 ஆக இருந்தது. இது மானியத்துடன் சேர்ந்த விலையாகும். இதில் கியாஸ் விலை ரூ.410. மானியம் விலை ரூ.295. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதன் காரணமாக கியாஸ் சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது. அதாவது தற்போது மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.600 ஆக விற்கப்படுகிறது. இதில் கியாஸ் விலை ரூ.410, மானியம் விலை ரூ.190 ஆகும்.

கச்சா எண்ணெய் விலை குறைப்பினால் அறிவிக்கப்பட இருந்த கியாஸ் விலை குறைப்பு, மானியத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.705-ல் இருந்து ரூ.600 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மானியம் குறைந்தது

ஆனால் வீடுகளில் சமையல் கியாஸ் மானியத்துடன் வாங்குவோர் அதே ரூ.410 கொடுத்து தான் வாங்கவேண்டி உள்ளது. ஆனால் மானியம் ரூ.105 குறைந்ததே தவிர சிலிண்டர் விலை குறையவில்லை. சமையல் கியாஸ் மானியத்தை வங்கி கணக்கில் பெறுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை கொண்டு மானியத்திற்கான அடிப்படை தொகையை வங்கி கணக்கில் பெற்றுள்ளனர்.

உலக பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று, 3 சதவீதம் சரிவை கண்ட கச்சா எண்ணெய், 12 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, 30 டாலராக குறைந்தது. 

Tuesday, 5 January 2016

சிம் கார்டு பற்றிய ஒரு சுவாரசியமான விழிப்புணர்வு தகவல்கள் !!உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.சிம் என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் தனிப்பட்ட வரிசை எண், பாதுகாப்பு அங்கீகார அம்சம், இடுதல் தகவல், உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.

தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சிப் பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.

மொபைல்போனில், 'சிம் கார்டில்' என்னென்ன இருக்கிறது?

'சிம்' கார்டு இல்லாமல் எந்த ஒரு மொபைல் போன் சேவையின் நெட்வொர்க்குடனும் தொடர்பு கொள்ள முடியாது. சிம் உள்ள போனில் எண்களை அழுத்தியதும், என்ன விதமான மொபைல், அதன் தொடர்பு எண் என்ன, யாருக்கு அழைப்பு போகிறது. அது எந்த மொபைல் சேவை, எந்த இடத்திலிருந்து அழைக்கப்படுகிறது போன்ற தகவல்களை பதிவு அறிய சிம்கார்டு உதவுகிறது. 'சிம்' கார்டுக்குள் ஒரு சிலிக்கன் சில்லு இருக்கும். அதை ஒரு கெட்டி பிளாஸ்டிக் அட்டையில் பதித்திருப்பார்கள். சில்லுடன் பதிக்கப்பட்டுள்ள உலோக, 'சர்க்யூட்' மொபைல்போனின் தொடு முனையுடன் பட்டதும் தொடர்பு ஏற்படும். 'சிம்' கார்டுகள், மினி (25 மி.மீ., நீளம், 15 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்), மைக்ரோ (15 மி.மீ., நீளம், 12 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்) மற்றும் நேனோ (12.30 மி.மீ., நீளம், 8.80 மி.மீ., அகலம், 0.67 மி.மீ., தடிமன்) ஆகிய மூன்று அளவுகளில் வருகின்றன.
சிம் கார்டில் ஐ.சி.ஐ.சி.டி., என்ற அடையாளம் காட்டும், 'சர்க்யூட்' இருக்கும். இதில் முதன்மை கணக்கு எண் என்ற 19 இலக்க எண் உள்ளது. மேலும், மொபைல்போன் சேவையைத் தரும் நிறுவனத்தின் அடையாள எண், பயன்படுத்துவோரின் அடையாள எண் ஆகியவை பதிந்திருக்கும்.இது தவிர, ஐ.எம்.எஸ்.ஐ., என்ற சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள எண்ணும் உண்டு. இந்த 19 இலக்க எண்ணில், முதல் மூன்று இலக்கங்கள், ஒரு தேசத்தை குறிக்கும், அடுத்த மூன்று இலக்கங்கள் மொபைல்போன் சேவை நெட்வொர்க்கின் எண்ணை குறிக்கும். அடுத்து சந்தாதாரரின் அடையாள எண் இருக்கும். மேலும், மொபைல்போன் நெட்வொர்க்கில் சிம்கார்டு முறையாக வாங்கப்பட்டது தான் என்பதை அடையாளம் காட்டும், 'ஆத்தென்டிகேஷன்' எண்ணும், 128 'பிட்' தகவலாக பதிவாகியிருக்கும்.தவிர, குறிப்பிட்ட அளவுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் நீங்கள் பதிந்து வைக்கும் பிறரது மொபைல்போன் எண்கள்ஆகியவையும் இதில் சேமிக்கப்படும்.    
தொகுப்பு : அ.தையுப அஜ்மல்.

Saturday, 2 January 2016

ஆதார் கார்டில் உள்ள பிழைகளை 5 நிமிடத்தில் திருத்த எளிய முறை!!! ஒரு தவகல்..

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ!!   
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
aadhar-onlineஅதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.