Friday, 16 August 2019

ஆன்லைனில் அதிகம் உள்ள சகோதிரிகளுக்கு உங்கள் சகோதரன் மு. அஜ்மல் கான் தரும் அட்வைஸ் !!

No photo description available.அன்புள்ள சகோதரிகளுக்கு!!!

இணையதளத்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்...


ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துமுழுமையாக விலகி விடலாம்.
ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.
முதல்ல பாலியல் ரீதியான பேச்சுகுள்ள போயிட்டாலே அங்கயே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்...
இந்த மாதிரி டிஸ்கஷனை ஒரு பெண் ஆண் கிட்ட மறைமுகமா நடத்துறான்னா அங்கயே அவளோட தரம் தாழ்ந்து விடுகிறது...
ஒரு ஆணுடனான பேச்சு என்பது ஒவ்வொரு பெண்ணும் தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமா நினைச்சுகிட்டா தவறான உரையாடல்களே நடைபெறாமல் போய்விடும்...

மேற்கொண்டு எந்தத் தவறும் வராமல் அதிலிருந்து மீண்டு விடலாம்...
இல்லையென்றால் வரும் ஆபத்துகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்...
நான் சொல்வது தவறே செய்யாமல் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரையாக எடுத்துக்கலாம்...

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துஎவ்வாறு விலகி விடலாம்?
இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.
முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.
கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.
யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.
இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.
உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .
முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை.
பெண்களுக்கு படிப்பறிவு இல்லை என்று சொல்லாமுடியாது. சுகாந்திராம் இல்லை என்று மறுக்க முடியாது. இது அனைத்தும் பல பெண்கள்நல்ல முறையில் பயன்படுத்துவதில்லை. இதனால் எல்லா துன்பத்தை அவர்கள் அனுபாவிக்கவேண்டி.உள்ளது முதலில் இதை போன்றபெண்கள் திருந்த வேண்டும்
அப்போது தான் குற்றங்கள் குறையும்...
நண்பன், காதலன் போன்ற உறவுகள் ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல.

புரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே !!


முகநூல் மற்றும் Whats app ,Whats app status ,Hike, viber, instragrame, Skype, போன்றவற்றை பயன்படுத்தும் என் உடன்பிறவா சகோதரிகலே தங்களின் புகைபடங்களை எதிலும் வைத்துவிட வேண்டாம். தற்போது நடைமுறையில் photo editor மிகவும் பிரபலமான முறையில் வளச்சி அடைந்துள்ளது. யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம்.
தங்களின் புகைபடங்களை Download செய்து விபசாரி களின் உடையில்ல உடம்பில் உங்கள் தலையை பழியாக்க பல கும்பல் காத்துகிடக்கிறது. எதிலுமே அறியாத தெரியாத நபர்களிடம் தங்களின் புகைபடம் நம்பர்களை அனுப்ப வேண்டாம்.தற்சமயம் முகநூலில் Fack ஐடியில் பல மகான்கள் வலம்வருகின்றன.


அவற்றை கண்டரிய பல வழிமுறைகள் உள்ளது.
1. முதலில் About ல் பார்க்கவும் அவர்கள் கூறும் வயதும் About பதிவு செய்துள்ள வயதும் சரியாக உள்ளதா என்று.

2. அவர்களின் Status மற்றும் Upload போட்டோவை பார்க்கவும்.
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் Status போடாமல் இருக்கமாட்டாங்க. Fake idல போட்டோ மட்டும் இருக்கும் Status இருக்காது

3. அவர்களின் Friends listயை பார்க்கவும்.

4. அவர்கள் Like செய்துள்ள Pageயை பார்க்கவும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் Like Pageல்மாட்டி கொள்வான்.

5.விடாமல் மெசேஜ்செய்துதொல்லை செய்பார்கள்.

6.அவர்களின் விளாசத்தை கூறாமல் உங்களின் விளாசத்தை மட்டும் கேட்டறிவார்கள்.

7.Messenger ல் விடாமல் போன்செய்பார்கள்.

8. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் நான் பையன் என்று கூறுங்கள் உங்களை உடனே blk செய்வார்கள்.


தாய்மார்கலே தயவு செய்து புதுமுகநூல் பயன்படுத்துபவர்கள் தங்களின் போன் நம்பரை முதலில் Remove செய்யுங்கள்.

அவற்றை செய்யும் முறை..

1, About ல் சென்று Contact info வை click செய்யவும்

2.சிறிது கிலே சென்று Contact info எதிர்புரம் உங்களின் போன்நம்பரும் Edit என்றும் இருக்கும்.Edit ஐ Click செய்யவும்.

3.பின்பு உங்களின் போன் நம்பரும் வரும் அதன் எதிர்புரதில் சிரிய டப்பா ஒன்று இருக்கும் அதை click செய்தால் Friends, public, onlyme என இருக்கும்.நீங்கள் பார்த்ததில்.onlyme இல்லையென்றால் More options னை Click செய்தால் அதில் Onlyme இருக்கும் அதை click செய்து கிலே சென்று Save என்ற பட்டனை Click செய்தால் உங்களின் நம்பரை நீங்கள் மட்டுமே கான முடியும்.

இது ஆண்களுக்கும் பெண்களும் தெரிந்து கொள்ளுங்கள்
தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களின் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தங்களிடன் ஒரு பெண் பேசவில்லை யென்றால் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் நம் வீட்டிலும் அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து விட வேண்டாம்.
இவ்வுளகில் ஆண் பெண் இருவரும் சமம் உறுப்புகள் மட்டுமே வேறு. இந்த பெண் இல்லையென்றால் எதோ ஒரு மூலையில் உங்களுக்காக ஒரு பெண் கண்டிப்பாக காத்திருப்பால்.

பிடிக்கவில்லையென்றால் விபசாரி யாக இருந்தாலும் தொட கூடாது என்பது பல மானிடர்களின் கொள்ளை. ஐந்து நிமிட உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணிண் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.தாய் தந்தைகள் என்னற்ற கனவுகளோடு வீட்டில் வளர்த்து வருகின்றனர்.அடுத்த பெண்ணிடம் பேசுவது சந்தோஷம் கிடையாது தன் தாய், தங்கை, தாரத்திடம் ,ஐந்து நிமிடம் பேசினால் போதும் அதை விட சந்தோஷத்தை வேற்று பெண்களால் கொடுக்க முடியாது.

மனிதனாக பிறப்பது அறிது. இன்று இருப்போம் நாளை இருப்போமா என்று நமக்கே தெரியாது மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு   : உங்கள்  சகோதரன்  மு. அஜ்மல் கான்.

Thursday, 15 August 2019

சுதந்திர தினம் நமக்கு சொல்ல விரும்பும் நற்செய்தி என்ன ? !!!

ஒவ்வொரு தனி மனிதனும் பெறக்கூடிய அதியுயர் கெளரவம் தனி மனித சுதந்திரமாகும். அன்றும் இன்றும் இதை பெற்றுக் கொள்வதற்கு மனித சமூகம் பல்வேறு தியாகங்களை செய்கின்றது. அந்த வகையில் 7 தசாப்தங்களுக்கு முன்னதாக இதை பெற்றுக்கொடுத்த தேசபக்தர்களை நினைவு கூறுவது நமது கடமையாகும்.
இனமத மொழி வேறுபாடின்றி நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா ?

அன்று அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான போராட்டம்....
இன்று நம் தீய எண்ணங்கள் , இனப்பகைமைகளுக்கு எதிரான போராட்டம் .
உலகமே வியந்த நம் நாடு இப்போது எப்படி எந்நிலையில் காணப்படுகின்றது?
நமது கலை கலாச்சாரத்தை உலகத்தவர்கள் விரும்பும் போது நாம் அதை புறக்கணிப்பது சரியா ?
ஒரு சிலரின் சுய இலாபங்கள் / பிரச்சினைகள் இன மத அரசியல் சாயம் பூசி சமூக பிரச்சனையாக மாற்றும்போது அதை பின்பற்றும் நமது சிந்தனையில் சுதந்திரமும் தெளிவும் வேண்டுமல்லவா...?
இந்த நாட்டில் இன ஒருமைப்பாட்டை விரும்பியவர்கள் , நமது நாட்டின் வளர்ச்சியில் அதிக பங்கெடுத்தவர்களாகவும், மற்றவர்களின் மனங்களை அதிகம் வென்றவர்களாகவும்,
மற்றவர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிநடப்பவர்களாகவும், அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபடுபவர்களாகவும் இருந்தார்கள்.
இவ்வாறான விடயங்களை நாமும் பின்பற்றுவதன் மூலம் இலங்கையை ஒரு செல்வாக்கு மிகுந்த நாடாக மாற்ற முடியும்.
இவற்றை புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகள் சிந்தித்து சக வாழ்வுக்கான வேலைத் திட்டங்களை தேசிய மட்டத்திலும் , ஊர்மட்டத்திலும் நடாத்த முன்வரவேண்டும்.
உண்மையான சுதந்திரத்தின் பலாபலன்களை அடைந்து, ஆசியாவின் அதிசயமாக  புதிய இந்தியாவாக  மாற்ற அனைவரும் இன்றைய நாளில் உறுதி கொள்வோம்.

Saturday, 10 August 2019

சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..


1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.
  
2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.
5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.
6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.
7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.
8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.
9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.
12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய்ஆகியவற்றைச்சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்சேர்த்து கொள்ளக்கூடாது.
14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,அதிக காரம், அதிக புளிப்பு,கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
10. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சேற்றுப் புண்:
இது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும். இது ஒரு வகையான பங்கஸ் தொற்று.
*அரைக்கப்பட்ட மருதாணி இலையை தொடர்ந்து இந்த இடங்களில் பூசி வர இது குறையும்.
*அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூளை இட்டு வர, இது குறையும்.
*அல்லது, சிறிதளவு வேப்பெண்ணெயை காய்ச்சி சேற்று புண்ணில் தடவி வர சேற்று புண் குறையும்.
* ஊமத்தன் இலைச்சாறில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலம், குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
*அல்லது, இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் இந்த கிரீம்களை வாங்கியும் தடவலாம். Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்....
ஏல‌க்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சனை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

Friday, 9 August 2019

பெண் குழந்தைகளின் பெற்றோரே...

பெண் குழந்தைகளின் பெற்றோரே...
1) உங்கள் பெண் குழந்தைகளைக் கண்காணியுங்கள். கண்காணிப்பு என்றால் திருடனைப் போலீஸ் பெண் குழந்தைகளின் பெற்றோரே கண்காணிப்பது போல் அல்ல! ஒரு தாய் விலங்கு தன் குட்டியை மற்றவர்களிடமிருந்து கண்காணிக்குமே அப்படி!
2) உங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் போது சீர் - செனத்தி- சடங்கு செய்வதில் காட்டும் அக்கறையை விட, அவளை ஒரு நல்ல டாக்டரிடம் 'அப்பாயிண்ட்மெண்ட்' பெற்று, பருவமடைதல் என்ற இந்நிலையின் முக்கியத்துவத்தை விளக்கச் செய்வதில் காட்டுங்கள்.
Related image3) காமம் என்பது எப்படி எல்லா உயிரினங்களுக்கும் இயல்பானது - அது வம்ச விருத்திக்கான கருவியாக மானுட இனத்துக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் எப்படி ஒரு தூண்டு கோலாக உள்ளது என்பதைப் பொறுமையாக விளக்குங்கள்.
4) எப்படிப் படிப்பதற்கு ஒரு வயது, உழைப்பதற்கு ஒரு வயது, பொருள் ஈட்டுவதற்கு ஒரு வயது, ஓய்வெடுக்க ஒரு வயது உள்ளதோ... அதே போல் காமம் துய்க்கவும் ஒரு வயது உள்ளது என்பதைப் புரிய வையுங்கள். மேற்கண்ட வயதுகளில் ஒன்று மாறி அமைந்தாலும் எப்படி வாழ்க்கை தடம் புரளுமோ அப்படியே காமம் துய்க்கும் வயது மாறியமைந்தாலும் வாழ்க்கை சருகாகிவிடும் என்பதை விவாதியுங்கள்.
5) இப்போது வரும் படங்கள் - ஒரு சாதாரண ஆட்டோ மெகானிக்கை, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண் காதலிப்பது, தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற 'நீதி போதனை' படங்கள், 'என்னை மாதிரிப் பசங்களைப் பார்த்தால் பிடிக்காது- பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்'-... என்னும் கழிசடைக் கதாநாயகன்கள் நடித்த படங்களை வீட்டில் முற்றிலுமாகத் தவிருங்கள்!
6) உடலியல் சார்ந்த வாழ்வியல் விளக்கங்களை ஒரு தகப்பனை விடத் தாய்தான் அணுக்கமாக நெருங்கி ஒரு பெண்ணிடம் பேச முடியும்.
7) உங்கள் பெண்ணின் நண்பிகளை கவனியுங்கள். ஒரு சில கழிசாடைப் பெண்களிடம் பழக விடாதீர்கள். ("எங்க அண்ணன் ரொம்ப நல்லா கிடார் வாசிப்பாண்டி- என் கசின் டான்ஸ் சூப்பரா ஆடுவாண்டி"). பெரும்பாலும் இப்படிப்பட்ட கழிசாடைப் பெண்கள்தான் தங்கள் அண்ணன்/ கசின்/ ஏதோ ஒரு பொறுக்கிக்காகத் தன் தோழியைக் 'கோர்த்து விடும்' வேலையைப் பார்க்கும்.
8 - 'ஆண்-பெண் சகஜ பாவம், இணக்கமான தோழமை, கள்ளமற்ற ஆண் - பெண் நட்பு'-... இவையெல்லாம் Super Ideals. ஆனால் பேப்பரில் மட்டுமே எழுதி ரசிக்க முடியும். இன்றைய சினிமா வளர்த்து விட்டுள்ள ரசனையில் ஒரு ஆண், பெண்ணின் மீது காட்டும் நட்பு , தோழமை எல்லாம் அவளுடைய கழுத்துக்குக் கீழேதான் பதிகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மரியாதையான நட்பு, கௌரவமான மனித அணுக்கம் இதற்கெல்லாம் காலமும் வயதும் நிரம்ப உள்ளது என்பதைப் புரிய வையுங்கள் உங்கள் பெண்ணுக்கு!
9) முதலில் நீங்கள் டிவி சீரியல்கள், ஆபாச அசைவுகள் கொண்ட திரை நடனங்கள், வக்கிரமான ரசனை கொண்ட சீரியல்கள் இவற்றை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
10) புத்தகம் படிப்பதில், அதிலும் காமம் என்ற உணர்வை மிகப் பக்குவமாக எடுத்துக் கூறும் புத்தக ஆசிரியர்களை பெண்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! காமம் என்பது மிகப் பெரும் சக்தி - அதை அடக்கி வைப்பதை விட மடை மாற்றம் செய்து நடனமாக, ஓவியமாக, இசையாக... ஒரு பேராற்றலாக வெளிக் கொணரப் பழக்குங்கள்.
11) 'காமமும் பசியும் மனிதனைச் சமைக்கும் நெருப்புகள் - அவற்றால் பக்குவப்படும் அதே நேரத்தில் கருகிவிடாமலும் பார்த்துக் கொள்வதில்தான் வாழ்க்கையின் போராட்டம் அடங்கி உள்ளது'- என்ற அப்துல் ரகுமான்!
விதி வசத்தால் கல்லூரி வாசலில் மழையில் காத்திருந்த போது முன் பின் தெரியாதவனோடு அவன் 'லிஃப்ட்' கொடுத்ததால் காரில் ஏறி அவனால் சீரழிக்கப்பட்ட அவளைக் காட்டிய 'அக்னிப் பிரவேசம்'- பிறகு அவளுக்குத் தலையில் தண்ணீர் ஊற்றி அவளின் தாய் தரும் உபதேசம் (ஜெயகாந்தன்),
மற்றும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'- 'மரப்பசு'- 'மோகமுள்'-... போன்று காமத்தை வெவ்வேறு பரிமாணங்களில் நுட்பமாகக் கையாண்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்துங்கள்!
12) காமம் அருவெறுக்கத் தக்க சாக்கடையும் அல்ல - அதற்காக எங்கு கிடைத்தாலும் அள்ளிப் பூசிக் கொள்ளும் சந்தனமும் அல்ல! அது உரிய நேரத்தில் உறையிலிருந்து எடுக்கப்பட வேண்டிய வாள் என்பதைப் புரிய வையுங்கள்.
13) காமம் - காதல் - குடும்பவியல் இவைகளை வெளிப்படையாக உங்கள் மகளிடம் பேசத் தயங்காதீர்கள். ("ஐயோ அவளுக்கு ஒண்ணுமே தெரியாது - Marriage ஆகிற வரைக்கும் So Innocent!) அதெல்லாம் உங்கள் தலைமுறையோடு காலாவதி ஆகி விட்ட வசனம்! இப்போது கூகிளும், ஃபேஸ்புக்கும் வீடியோக்களால் மலிந்து கிடக்கிறது.
14) இப்போது நீங்கள் காமத்தைப் பற்றி எடுத்து உரைக்கத் தவறிவிட்டால் எவனோ ஒரு ஜீன்ஸ் பேன்ட் - காதில் ஒற்றை வளையம் போட்ட கழிசடை அவளுக்குக் காமத்தை உரைத்து எடுப்பான்.
15) SO, NEVER HESITATE TO DISCUSS LOVE/LUST/LIFE WITH YOUR GROWN UP DAUGHTERS. PARENTAL DISCUSSION WILL ENRICH THEM. BOYFRIEND's DISCUSSION WILL SPOIL THEM!

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Wednesday, 7 August 2019

ஜம்மு-காஷ்மீர் பற்றி அவசியம் படியுங்கள் ! தெளியுங்கள் ! நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் !!!


Image may contain: one or more people, table and indoor

1952 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்துடன், இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைந்த அந்த மகத்தான தருணத்தில், தில்லியில், பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரத்து சிங்கம் எனப் போற்றப்படும் ஷேக் அப்துல்லா. (கோப்பு படம்)
மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது; அதை நீக்கியது சரியானது தான் என பாஜகவினரும் அவர்களது அடிவருடிகளும், தினமலர் போன்ற ஊதுகுழல் ஏடுகளும், அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளும் பேசுகின்றன. ஆதரித்துள்ளன. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலுக்கு சிறப்பு அந்தஸ்தும், அதை வழங்கும் 370வது பிரிவும் தான் காரணம் என்றும், அதை நீக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் கண்மூடித்தனமாக இவர்கள் வாதிடுகின்றார்கள். காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் பாஜகவின் வாதம் சரிதானே என்று கூட எண்ணக்கூடும்.தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது.
நாடு விடுதலைபெற்ற போது...
இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோ டும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன.
1.ஜுனாகட் சமஸ்தானம்
2.ஹைதராபாத் சமஸ்தானம்
3.காஷ்மீர் சமஸ்தானம்
ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை. ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணுவத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார். இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13ல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து,நிஜாமின் இராணு வத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 - ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் ஹைதராபாத் நிஜாம் கையெழுத்திட்டார். ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும் பான்மையாக இந்துமக்கள் வசிப்பவையாக இருந்தன. ஆனால் மன்னர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
காஷ்மீரின் வரலாறு என்ன?
காஷ்மீர் சமஸ்தானத்தில் 90 சதவீதம் முஸ்லிம் மக்கள். ஆனால் மன்னன் இந்து. டோக்ராவம்சத்தை சேர்ந்தவர் ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவல மானது. அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் ராணுவத்தில் அவரது சதி வேலைகளுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப்பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணை போனார். பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர் கள், இழப்பீட்டுத்தொகையாக சீக்கியர்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு விட்டுத்தர வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர். 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்த தால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்ட்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார். ஹரிசிங் அதற்கு சம்மதிக்கவில்லை. மறுபக்கம், ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங்கோலாட்சிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சி
1924- முதலே தீவிரமடைந்திருந்த மக்கள் போராட்ட த்தில்,1931ல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939ல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளை யருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடிய நிலையில், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் என்ற அமைப்பு செயல்பட்டது. பிரஜாபரிஷத் என்பது வேறு எதுவுமல்ல; ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் அந்தப் பெயரில்தான் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் இடையே ஆயுதப்போரை மூட்டி விட்டார்கள். வெள்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறோம் என்ற கோஷத்துடன் நுழைந்த அவர்கள் முசாபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர். அக்டோபர் 26ல் பட்டாணியர்கள் படை காஷ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கியது. அதை எதிர்கொள்வதற்கு பதிலாக மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
மாறாக, ஸ்ரீநகரை பட்டாணியர் படை கைப்பற்றாமல் தடுக்க காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சித் தலைமையும் இந்திய இராணுவ உதவியை நாடினர். படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் எனக் கூறினார். இந்த நெருக்கடிக்குப்பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்ப மிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார். இந்திய அரசு அக்டோபர் 27 அன்று ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப்பிரிவு படையுடன், பாகிஸ்தானின் ராணுவமும் நுழைந்து, இந்திய ராணுவத்துடன் மோதியது. இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணு வத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவன்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவன். ஊடுருவல் படைகளை காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஷ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா. மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி “ஆசாத்காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம். இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத் காஷ்மீர்தான்.
பிரிட்டிஷ் - அமெரிக்க சூழ்ச்சிகள்
காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டது. ஐ.நா.சபை கமிஷன் ஒன்றை அமைத்தது. அமெரிக்காவும் - இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948ல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக்கட்சியும் நிராகரித்தன. இந்தியா, ஐ.நா. மூலமாக ஏவப்படும் அமெரிக்க சதியை நிராகரித்தபின்பு, 1950 மார்ச் 14ல் ஐ.நா பாது காப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;
1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
2.காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும். இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.
ஷேக் அப்துல்லா உறுதி
காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல்காரணம் ஷேக் அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக்கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது: “இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கைகளும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கைகளுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்”-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 1948 அக்டோபர் - 16). இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக் அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரண்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆகவும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த அன்றைய பிரதமர் நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார்.
370வது பிரிவு ஏன் வந்தது?
ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக்கூட்டம் 1951 நவம்பர் 5 ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை உருவாக்குவது.
2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
3. நிலச்சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது. இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் - நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952ல் நேரு – ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.
காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு – ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:
1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங்களைப்போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்களின் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம்தான் தீர்மானிக்கும்.
3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்கமுடியாது.இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவு
370வது பிரிவின் படுகொலை
இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர் மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே, இன்றைக்கு மோடி அரசால் ரத்து செய்யப் பட்டுள்ள 370 வது ஷரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப்பட்டது.
1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
2.ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளை காஷ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958ல் கொண்டுவரப்பட்டது.
3. மாநில அரசைக் கலைக்கும் 356,357 வது பிரிவுகள் அங்கும் பொருந்தும் என்ற நிலை 1964ல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.படிப்படியாக அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பின்னணியில்தான், 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. மேற்படி பிரிவு 370ன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுவிட்டது.
370வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்தது மூன்று விசயங்கள்தான்.
1. காஷ்மீருக்கான அரசியல் சட்ட விதிகள்.
2. காஷ்மீருக்கான தனிக்கொடி
3. வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை.
மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கூப்பாடு போட்டது காவிக்கூட்டம். இந்தியாவுடன் இணையும்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித் தவிக்கிறது. எனவே காஷ்மீர் மக்களின் பக்கம் நிற்க வேண்டியது ஒட்டு மொத்த இந்திய மக்களின் கடமை.
நன்றி : சூர்யா சேவியர்,தீக்கதிர் , 6 /08/2019.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Monday, 5 August 2019

நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் !! ஒரு தவகல்..


Image may contain: one or more people
நாம் அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர்.. பண்ணவும் கூடாது .

முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.

கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்,

பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்கதீர்

.பெருமைக்கு எருமை மேய்க்காதீர் .

ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

.கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.

பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.

பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

பஸ்ஸிலும்,
ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

.பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

ஒருவர் போட்டோ பார்க்க போனை

உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள்

குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத் தாதீர்கள்.

தவறாக சொல்லி இருந்தால் என்னை
மன்னிக்கவும். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து கொள்ளவும்...

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 1 August 2019

80 வகை வாதநோய்களை குணமாக்கும் வாத எண்ணெய் பற்றிய சிறப்பு பார்வை...

வாத எண்ணெய்  இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது   என அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.


எண்பது வகை வாதங்களும் அனைத்து சூலை நோய்களும்  மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாக்கும் வாத எண்ணெய்  


௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி


௨)காடி நீர்
புளித்த காடி நீர்
(அதாவது புளித்த பழைய சோற்று நீர்நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )


௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை


௪) மருந்து சாப்பிட நாட்டுப் பசும்பால்


வாத எண்ணெய் செய்யும் முறை..


அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்.


ஆ)இந்த சூரணத்தில் நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்


இ)வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.


மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்.
நுரை அடங்கி வரும்..
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்.


இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு வாத எண்ணெய் என்று பெயர்..


ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை..


உள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து  இறக்கி  குடிக்கும்   அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது அந்தப் பாலுடன்  அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து உணவுக்குப் பின்  அரை மணி நேரம் கழித்து  காலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்,


வெளி மருந்தாக இந்த வாத எண்ணெயை  தினமும் இரவில்  கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்து  மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்
இவ்வாறு தினமும் செய்து வர எண்பது வகை வாதங்களும் அனைத்து சூலை நோய்களும்  மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்..


நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்,அனைத்து சூலை நோய்களும் குணமாகும்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்.


இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்