Monday, 22 August 2011

ஐக்கிய நாடுகள் சபை....

உலக மனங்களின் ஒற்றுமைக்கும் நம்பிக்கைக்குமுரிய ஒரு அடையாளமே ஐக்கிய நாடுகள் சபை (United Nations ) உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு இவற்றிக்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, 1945 , ஒக்டோபர் 24 , முதல் செயல்படத் தொடங்கியது.

ஐக்கிய நாடுகள் சபை என்னும் பெயர் அமெரிக்க அதிபர் பிராங்லின் டி. ரூஸ்வெல்ட்டின் சிந்தனையில் உருவானது. ஐ. நா. தனது 18 சுதந்திர சிறப்புக் கழகங்கள், 14 பெரிய திட்டங்கள் மற்றும் நிதியமைப்பு வழி மனித குலத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒக்டோபர் 24 ஐ. நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஐ. நா சபையின் அலுவலக மொழிகள்: சீனம், அரபி,ஆங்கிலம், பிரெஞ்சு , ரஷ்யன் மற்றும் ஸ்பொனிஷ் . இதன் சின்னம் இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டமாகும். அமைதியை விரும்பும் எந்த நாடும் இதன் உறுப்பினராக முடியும். பாதுகாப்பு சபையின் சிபாரிசின்படி, பொதுக்குழு புதிய உறுப்பினர்களை அனுமதிக்கிறது. தற்போதைய நிலையில் ஐ. நா.உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 192 தானே தபால் தலைகள் வெளியிடும் தபால் நிலையம் ஐ. நா.விற்குண்டு.

தலைமையகம் - NEW YORK CITY , NEW YORK , USA
ஐ. நா.சபை ஐந்து உள்ளமைப்புக்களைக் கொண்டது. அவை: பொதுச்சபை , பாதுகாப்புச்சபை, பொருளாதார சமூக சபை , பொருப்பாண்மைக்குழு பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் செயலகம் என்பன.

பொதுச்சபை (General Assembly )
ஐ. நா.உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதி நிதிகளையும் கொண்டது. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஐந்து பிரதிநிதிகளை இச்சபைக்கு அனுப்பி வருகின்றன என்றாலும் ஒரு வாக்குரிமையே உண்டு. முக்கிய பிரச்சனைகளில் தீர்மானம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். இச்சபை குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை கூடும்.

ஐ. நா.வின் ஆண்டு வரவு செலவு திட்டத்தைக் கணக்கிடுவது: பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பது : பாதுகாப்புச்சபையோடு சேர்ந்து பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதன் பணிகளில் சில.

பாதுகாப்புச் சபை ( Security Council )
இது 15 அங்கத்தினர்களைக் கொண்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு உண்டு. ஐந்து நிரந்திர உறுப்பினர்களும்: இரண்டு ஆண்டுகளுக்கான பத்து தற்காலிக உறுப்பினர்களும் அடங்கியது. ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் அதிகாரத்தைப் (Veto Power) பெற்றுள்ளனர்.

நிரந்தர உறுப்பினர்கள் : சீனா , பிரான்ஸ் , ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா

NOTE :

ஐ. நா. பொதுச்செயலாளரான முதல் ஆசிரியர் யு.தாண்ட ( மியான்மார்)
ஐ. நா. பொதுச்செயலாளர் பதவி வகித்தபின் ஒரு நாட்டின் அதிபரானவர்: குர்ட்வான் ஹைம் பெரிஸ் (ஆஸ்திரியா)

ஐ. நா.பாத்துச் செயலாளராக பதவிவகித்தபின் ஒரு நாட்டின் பிரதமரானார்: ஜாவியர் பெரஸ் டி. கொயர் (பெரு)

ஐ. நா. பொதுச் செயலர் பதவியை இராஜினாமா செய்த முதல் நபர்: டிரைக்வோ (நோர்வே)

நோபல் பரிசு பெற்ற ஐ. நா. பொதுச்செயலாளர்கள்: டாக் ஹாமர் ஸ்கோல்ட் (1961) கோபி அனான் (2001 )

ஐ. நா. பொதுச் செயலரான முதல் ஐரோப்பியர் : டிரைக்வோ (நோர்வே)

ஐ. நா.பொதுச் செயலாளரான முதல் ஆபிரிக்கர் : பொட்ரோஜ் பொட்ரோல் காலி (எகிப்து)

பொதுச் செயலராக பதவியிலிருக்கும் போதே காலமான ஒரே பொதுச்செயலர்: டாக் ஹாமர் ஸ்கோல்ட் (சுவீடன் )

ஐ. நா.- பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் : டோக்கியோ (யப்பான்)

நியூயோர்க்கிலுள்ள ஐ. நா. நூலகத்தின் பெயர் : டாக் ஹாமர் ஸ்கோல்ட்

நியூயோர்க்கு வெளியே தலையகம் கொண்ட ஒரேயொரு ஐ. நா அமைப்பு: சர்வதேச நீதிமன்றம்

ஐ. நா விலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் நாடு தாய்வான் (1971 )
 
தொகுப்பு :- மு. அஜ்மல் கான்.

Sunday, 21 August 2011

தந்தை பெரியாரின் கட்டளைகள்....


1. .தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.

2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மன வருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய்   பிரயோகிக்கக் கூடாது.

3. போலீஸ்காரரிடம் நமக்குச் சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.

5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும்.

6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும்.  நன்றாய் அடிப்பதற்கு வசதி கொடுக்க வேண்டும்.

7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான     காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி    கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு [பாக்கியம்] நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும்   தன்மையில் இருக்க வேண்டும்.

8. போலீஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உண்ர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக்கூடாது.

9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.

10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர்களைக் குறிக்கும் வார்த்தைகள்    கண்டிப்பாய் உச்சரிக்கக் கூடாது.

11. எந்தக் காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக்கூடாது.

12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஒடலாம், ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆக வேண்டும்.

13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரியாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமை போல் க்ட்டுப்பட்டாக வேண்டும்.

14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில் உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

   இப்படிப் பட்ட பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்
                                                                                                        —–தந்தை பெரியார்

Saturday, 20 August 2011

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்

இஸ்லாமிய மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
 
 
 
ஷரியா முதலீடு...? 

ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது.

 
வேகமாக வளர்ந்து வரும் துறை!
இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத் துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளன.

லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள் ஆண்டுக்கு 15 - 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள் 2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.

உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

 
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்...!

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன் திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹராம் ஆகும்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான் தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள் ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
நிஃப்டி ஷரியா!


நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு செய்யப்படுகிறது?

தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப் பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன் நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ் அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக 'ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்' (ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில் சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!


ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள் கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.

1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி ருக்கக்கூடாது.

2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில் அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை கடைப் பிடிக்கின்றனர்.

3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும் உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க வேண்டும்.

5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும் வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும் இந்தக் குறியீடு தெரிவிக்கும்.
ஷரியா இ.டி.எஃப்.!


நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.

பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES) என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப், இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன் விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு மூலம்தான் வாங்க முடியும்.
ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!


டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட் என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58 கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது. இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில் முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட் 139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31. இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30, 2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5% -யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக் கொடுத்துள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் தவிர,நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6ஃபில்டர்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
எல். அண்ட் டி,
பார்தி ஏர்டெல்,
ஹிந்துஸ்தான்யூனிலிவர்,
ஒ.என்.ஜி.சி.,
பி.ஹெச்.இ.எல்.,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,
என்.டி.பி.சி.,
டாடா பவர்.

மேற்கண்டமுதலீடுகளுடன்,தங்கம்/வெள்ளிபோன்றவற்றிலும்,ரியல் எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!
 
நன்றி :
 

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன?
 அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்

Friday, 19 August 2011

பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ்( ஸுரையா)-ஒரு இஸ்லாமிய பார்வை ....

கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.
கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

அவர் தமது அறிக்கையில், ‘நான் இந்துக்களைப் போல என்னை – எனது பிணத்தை எரிக்க விரும்பவில்லை. இதுவே நான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதான காரணம். நானோ ஒரு கைம்பெண். எனது குழந்தைகளும் என்னோடு இல்லை. எனவே இந்த மார்க்கத்தில் நான் என்னை இணைத்து நான் எல்லோராலும் நேசிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இதோ இந்த ரமளான் மாதம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாதம்.
எனவே தான் இப்போதே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். என்னிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல புதிய தகவல்கள் உள்ளன. அது பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குகிறது. நானோ ஆதரவற்றவள். சொந்த – பந்தமில்லாத எனக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.
இந்துச் சமய மக்கள் விக்கிரகங்களைக் கடவுள்களாகக் கருதி வழிபாடு செய்கின்றனர். அவை பக்தர்களைத் தண்டிக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்வோ பாவங்களை மன்னிப்பவன். எனவே மன்னிக்கின்ற இறைவன் தான் எனக்கு வேண்டும் – என்று குறிப்பிட்ட எழுத்தாளர் கமலாதாஸ், இந்த முடிவைப் பற்றி நீண்ட காலமாக தாம் சிந்தித்து வந்ததாகவும் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுவதாவது:
இந்து மதக் கோட்பாட்டின்படி நான் இறந்து போன பின்பு அடுத்த தலைமுறையில் காகமாகவோ மற்ற விலங்காகவோ பிறப்பேன் என்றெல்லாம் எனது சந்ததிகள் கருதுவதை நான் விரும்பவில்லை. மேலும் இந்த ரமளான் மாதம்தான் நான் இஸ்லாத்தை தழுவியதைப் பிரகடனப்படுத்த வேண்டிய பொருத்தமான மாதமாகும். எனவே நான் இஸ்லாத்தை தழுவியதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருங்கள்! நான் நீண்ட காலமாக எந்த மதத்திலும் பிடிப்பில்லாமல் இருந்தேன். நான் எது வரை இவ்வாறு இலட்சியமற்றவளாக இருக்க முடியும்?
டாக்டர் கமலாதாஸ், மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து மலையாளத்தில் எழுத விரும்புகிறார். ஆங்கிலத்தில் எழுதும் போது தமது புதிய பெயரான ‘ஸுரையா’வை பயன்படுத்துகிறார்.
இவரது பெற்றோர்கள் பிரபலமானவர்கள். தந்தை எஃப்.எம்.நாயர் மலையாள தினசரியான மாதருபூமி பத்திரிக்கையில் முன்னாள் ஆசிரியராவார். தாயார் நாலபாட்டு பாலாமணி அம்மா மலையாள மொழியில் எழுத்தாளராகவும் கவிஞராகவும் பிரபலமானவர்.
உங்களைப் பற்றி மக்கள் விமர்சித்தால் உன்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு ஸுரையா பதில் கூறும் போது, ‘இது என்னுடைய சுயவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட முடிவாகும். இதில் யாருடைய தலையீட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. நான் எனது அறையிலிருந்த அனைத்து விக்ரகங்களையும் எடுத்து இந்துக்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களிடமிருந்து நான் பெற்றது வேதனைகள் மற்றும் கேவலமான விமர்சனங்களையும் தான்.
ஆனால் இப்போதோ நான் புதிதாக பிறந்தவளாக இருக்கின்றேன். குர்ஆனின் சில பாகங்களை நான் மனனம் செய்துள்ளேன். அவற்றை எனது கவிதைகளில் வடித்துள்ளேன். சில இஸ்லாமிய சிந்தனையாளர்களின் உதவியுடன் இஸ்லாத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தும் வருகின்றேன்’ என்று குறிப்பிடுகிறார்.
அவருடைய பூர்வீக ஊரான நாலபாட்டைப் பற்றி அதன் தோற்றம் வித்தியாசமாக மனதில் தோன்றுவதாக ஓர் எழுத்தாளர் கூறிய போது, ‘அங்கு எனது வீட்டுக்கருகில் ஒரு பள்ளிவாசலை நான் உருவாக்குவேன். அப்போது அங்கிருந்து வரும் முஅத்தினின் பாங்கோசையை நீர் கேட்பீர், அப்போது அந்த ஊரைப்பற்றி உமது உள்ளத்தில் உதித்த தோற்றம் மாறும்’ எனக் கூறினார் ஸுரையா.
இன்று டாக்டர் ஸுரையா, இஸ்லாமிய அழைப்பு சம்பந்தமான பிரசுரங்களிலும் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தின் தனித்துவங்களையும் பெருமைகளையும் விவரிக்கிறார்.
குறிப்பாக இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கியிருக்கும் உரிமைகள், பாதுகாப்புகள் கண்ணியங்கள் ஆகியவற்றைப் பெண்களுக்கு எடுத்துக் கூறி பெண்களை இஸ்லாத்தில் இணையச் செய்து புரட்சி செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் கமலா ஸுரையா.
(குறிப்பு: டாக்டர் கமலா ஸுரையா அவர்கள் மே 31, 2009 ஞாயிற்றுக் கிழமை சுவாசக் கோளாறு காரணமாக வஃபாத்தானார்.  அவரின் மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோமாக!)

Source: Islamiyadawa.com

Friday, 12 August 2011

கருணாநிதி குடும்பத்து சொத்து!! ஒரு சிறப்பு பார்வை...இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும்    இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை   படிக்கவேண்டாம்..                         

                     கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10   ஆகஸ்ட்   2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

                     ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 
                    'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

                 அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாஅந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!


1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு  2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு  4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு  2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு  5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு  2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -  12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு  4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -  10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு -  2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -  2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -  100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு -  10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -  2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -  20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -  5 கோடி.
18.  சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -  100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின்மதிப்பு -  50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -  108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -  48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு  30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு -  50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர்  48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில்  13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -  1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு  2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -  2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -  5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -  40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -  1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு -  2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு -  5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -  2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -  3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -  1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு -  5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு -  20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -  50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


               இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.

''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .