Monday, 12 March 2012

தாம்பத்திய திருப்தி என்றால் என்ன? இஸ்லாம் என்ன கூறுகிறது?செக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்றைய பகுதியில் காண்போம்.


ஒரு ஆணும், பெண்ணும் கூடிக் கலந்து குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. உடலுறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும். பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம். ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் டாக்டர் காமராஜ் (vasanth TV-இல் )சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன்.

இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்கி சாப்பிடுவதை நான் கண்டிருக்கின்றேன். இன்று நேற்றல்ல இது காலகாலமாக ஆணுக்கிருக்கின்ற பெரும் கவலை வேதனை. படுக்கையில் ஒரு பெண் தன்னை நிராகரித்து விடுவாளோ அப்படி நிராகரிக்க கூடாது என்ற ஒரு பயம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்களிடத்திலும் இருந்து கொண்டே இருக்கின்றது.

அதனால் தங்களை பெண்களிடம் நிரூபித்து காட்ட பெரும் பாடுபடுகின்றான் ஆண். ஆனால் இந்த பாடெல்லாம் தேவையில்லாத ஒன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை திருப்த்திப்படுத்த இவ்வளவு சிரமப்பட்டு அச்சப்படத்தேவையில்லை.

மனித மன அச்சத்தை மனதில் கொண்டு ஆண்களுக்கான பாலியல் தொடர்பான மருந்துகள் ஆண்குறியை நீளமாக்கும் கருவிகள் என்று சந்தையில் மில்லியன் கணக்கான டொலர்களில் பொருட்கள் வியாபாரத்திற்காக குவிந்து கிடக்கின்றன. உலகம் முழுவதும் நிலமை இதுதான். இதெல்லாம் ஆணின் அச்சத்தின் காரணமாக கொளித்த வியாபாரம் என்றால் அது நூறுவீதம் உண்மை.

ஆணுக்கு நீளமான ஆண்குறி இருந்தால் தான் ஒரு பெண்ணை திருப்த்திபடுத்த முடியும் என்று பெரும்பொய்யை பல வியாபார நிறுவனங்கள் பரப்பி ஆண்களின் பலவீனத்தை தங்களுடைய வியாபாரத்தால் பெருக்கி வருகின்றனர்.

அண்மையில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன். மாத்திரை இல்லை ஊசி இல்லை அறுவை சிகிச்சை இல்லை என்று ஆரம்பிக்கின்றது அந்த விளம்பரம் திருப்த்தியின்மை முன்கூட்டியே விந்து வெளியேறுதல் தன்னம்பிக்கை குறைவு என்று தொடர்ந்து ஆணுறுப்பை வளரச்செய்யும் பெரிதாக்கும் என்று அந்த விளம்பரம் செல்கின்றது. அது ஒருவகையான பிளாஸ்டிக் பொருள் ஆணுறுப்பில் பொருத்தி வைக்க வேண்டும். அதனால் ஆணுறுப்பு வளருமாம்.

பொய் சுத்த பொய் ஆணுறுப்பு ஒன்றும் வளருவதற்கு தலைமுடியோ அல்லது நகம் போன்றதோ அல்ல அது குழந்தையில் இருந்து வளர்ந்து பெரியவரானதும் தனது வளர்திறனை முடித்துக்கொள்ளும். ஒரு கையைப்போல காலைப்போல  அல்லது ஒருகாதைப்போல ஆணுறுப்பின் வளர்ச்சி அவ்வளவுதான்.

சிலரின் உடம்பு வாசியைப்பொறுத்து அதன் அளவு பெரிதாக அல்லது சிறிதாக இருக்கும். ஓவ்வொரு உடலுக்கும் எது பொருந்துமோ அதுதான் அளவு. இது உடலுக்கு தெரியும்  மனதுக்கும் தெரியும். ஆனால் வியாபாரிகள் தான் அதை பெரிதாக்குகின்றோம் என்று அடம்பிடிக்கின்றார்களே ஒளிய அது அளவோடுதான் இருக்கின்றது.
ஒரு ஆண் தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் புதிதாக திருமணம் முடிக்கும் ஆண்கள் தான் முதலிரவில் மனைவியை திருப்த்திப்படுத்திவிட முடியாதோ என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே மனம் உடைந்து போவதை காண்கின்றோம். முதலிரவில் அங்கு அச்சப்பட்டு அவசரப்பட எதுவுமில்லை. அன்று நீங்கள் உங்களை நீங்கள் பேசி ஆசுவாசப்படுத்தவே முடிந்துவிடும். முதலிரவு என்பது புரிந்து கொள்வதற்கான இரவே தவிர அச்சப்பட்டு வேதனைப்படுவதற்கான இரவு அல்ல என்பதை புதுமாப்பிளைமார் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சும்மா பயந்து கொண்டிருப்பது அல்லது போலியாக டாக்டர்கள் சொல்வதை அல்லது விளம்பரங்கள் சொல்வதை நம்புவது. முழு முட்டாள்தனம். ஆண் பெண் உறவு தொடர்பாக எமது முன்னோர்கள் மிகவும் முக்கியமாக ஆராய்ந்து ஜோடி சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களும் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணங்கள் நிட்சயிக்கப்பட்டன.
திருமணப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. பலருக்கு தெரியும். இது செக்ஸ் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி முன்னோர்கள் வைத்திருக்கும் ஒரு முறை. தாம்பத்திய உறவின் சுகம் திருப்த்திநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் அளவுகோல் இது. ஆண்பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாக இருக்கின்றது இது . நட்சத்திரங்கள் 13 மிருகங்களின் பெயரைக்கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது.

உத்தராட நட்சத்திரம் மட்டும் கீரி என்றும் சில நூல்கள் மலட்டு பசு என்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு . ஆண்பெண் பகை மிருகம் மட்டுமே பொருத்தமில்லை என்று சொல்வார்கள். பகை மிருகங்கள் சேராமல் பார்த்துக்கொள்வார்கள் பெரியவர்கள்.

இதில்
1.      அச்சுவினி    - ஆண் குதிரை
2.      சதயம்        - பெண் குதிரை
3.      பரணி        - ஆண் யானை
4.      ரேவதி      - பெண் யானை
5.      கார்த்திகை    - பெண் ஆடு
6.      பூசம்       - ஆண் ஆடு
7.      ரோகினி      - ஆண் பாம்பு
8.      மிருகசீரிடம்         - பெண் பாம்பு
9.      திருவாதிரை  - பெண் நாய்
10.     மூலம்        - ஆண் நாய்
11.     புனர்பூசம்   - பெண் பூனை
12.     ஆயிலயம்    - ஆண் பூனை
13.     மகம்         - ஆண் எலி
14.     பூரம்         - பெண்எலி
15.     உத்தரம்      - ஆண் மாடு
16.     உத்தரட்டாதி - பெண்மாடு(பசு)
17.     அத்தம ;      - பெண் எருமை
18.     சுவாதி        - ஆண் எருமை
19.     விசாகம்     - ஆண் புலி
20.     சித்திரை      - பெண் புலி
21.     அனுஷம்     - பெண் மான்
22.     கேட்டை      - ஆண் மான்
23.     பூராடம்              - ஆண் குரங்கு
24.     திருகோணம்  - பெண் குரங்கு
25.     உத்தராடம்    - ஆண் கீரி
26.     அவிட்டம்     - பெண் சிங்கம்
27.     பூரட்டாதி    - ஆண் சிங்கம்

ஒவ்வொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும்.
குதிரை-எருமை
யானை-சிங்கம்
ஆடு-குரங்கு
பாம்பு-எலி
பசு-புலி
யானை-எலி
கீரி-பாம்பு
மான்-நாய்
இவை சேரக்கூடாது யோனிவழி பிரிக்கப்பட்ட பகை மிருகங்கள்.
பகை மிருகங்களை சேரக்கூடாது என்கிறார்கள்.  அத்துடன் இருவரும் ஒரு யோனியாகிலும், ஆண்களுக்கு ஆண்யோனியும் பெண்களுக்கு பெண்யோனியாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம் என்றும் இருவருக்கும் ஆண் யோனியாகில் மத்திம பலன் என்றும் பெண்ணுக்கு ஆண் யோனியும் ஆணுக்கு பெண்யோனியும் பொருத்தம் வராது என்றும் ஜோதிட சாத்திரம் சொல்கிறது.
ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்கும் போது அவர்கள் மிக நீண்ட பாலியல் சுகம் அடைய வேண்டிய என்ற சிந்தனை தொன்றுதொட்டே எமது சமூக அமைப்புக்களில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.
சரி செக்ஸ் திருப்தி என்பது வெறுமனே உடலுறவில் மட்டும் அல்லது ஆணுறுப்பின் நீள அகலத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்ல. அது மனதோடும் உடலோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
செக்ஸில் உச்ச பட்ச இன்பம் தொடர்பாக இப்பொழுது சிந்திக்கின்ற சமூகம் முந்திய காலத்தில் சிந்தித்திருக்குமா? என்பது கேள்விதான். தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படங்களில் செக்ஸ் உணர்வுகளை துல்லியமான நடிப்பின்மூலம் மூலம் வெளிப்படுத்திக்காட்டுதல் எப்படியான நிலைகள் எப்படியெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியும் திரைப்படமும் வெளிப்படுத்தி காட்டி வருகின்றன.
முதல் என்றால் ஆங்கிலப்படத்தை பார்ப்பதற்கு எங்களுக்கு யாருமே அனுமதி தரமாட்டார்கள். முத்தக்காட்சி வந்துவிடும் என்ற பயம் எமது பெரியவர்களுக்கு. இப்பொழுது தொலைக்காட்சி சின்னப்பிள்ளைக்கும் வீட்டில் வைத்து சொல்லிக்கொடுத்து விடுகின்றது. ஹிந்தி திரைப்படங்களில் குறைந்தது 30 முத்தக்காட்சிகளை வைத்து விடுகின்றார்கள்.குடும்பத்துடன் தியேட்டருக்கு போனால் எப்படி முத்தக்காட்சியை ஓடவிட்டு பார்ப்பது. வீட்டில் என்றால் றிமோட்டும் கையுமாக பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் இன்ரநெற்றில் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்துவிடும்.

இப்பொழுது பெண்களுக்கும் செக்ஸ் தொடர்பான முழு இன்பத்தையும் முழுமையாக உய்த்து உணரவேண்டும் என்ற அவாவும். ஆசையும் வந்து விட்டது. அது உலக தொழில்நுட்ப  மற்றும் மானுட அறிவின் வளர்ச்சிதான். இஸ்லாம் கூறும் 
பெண்களை முழுமையாக திருப்த்திப்படுத்த என்று ஒரு ஆண் கவலையோ கஷ்டமோ படத்தேவையில்லை. பெண்ணின் ஜனன உறுப்பில் உணர்வுகளின் எல்லா முடிச்சுக்களும் ஆரம்பத்தில் உள்ள பத்து சென்டிமீட்டர் அளவில்தான் குவிந்து கிடக்கின்றன. எனவே அதனை உணர்ந்து ஒரு ஆண் தன்னை ஈடுபடுத்துவானாகில் பெண் பூரண சுகத்தை அடைந்து விடுவாள்.

உண்மையில் 10 சென்டி மீட்டர் உடைய ஆணுறுப்பே போதும் ஒரு மனித உடலுறவுக்கு இதனை ஒரு பெரிய விடயமாக மனதைபோட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை ஆண்கள். மன மகிழ்ச்சியான வாழ்வு என்பது இருவரும் புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான். செக்ஸ் உறவு தொடர்பான அதீத கவலை- நான் மனைவியை திருப்த்திப்படுத்தும் ஆம்பிளைதானா என்ற விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவன் மனைவியாக சந்தோசமாக வாழுங்கள். உலகத்தில் இப்படி எத்தனைபேர் சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் முடியும். நவமணி நிஃமத் சொன்னது சரிதானே.


தாம்பத்திய உறவை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

 தாம்பத்திய உறவில் தடுக்கப்பட்டவை:
1,மாதவிலக்குக் காலத்தில் மனைவியுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது (பார்க்க - அல்குர்ஆன், 002:222)

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்று பதிலளித்தார்கள். (தாரிமீ)

2,மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்ளக்கூடாது. மலப்பாதையில் உறவு கொள்வது ஓரினப் புணர்ச்சிக்கு ஒப்பானதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை இரண்டைத் தவிர இல்லறத்தில் ஈடுபடும் முறை பற்றி வேறு எந்தத் தடையும் இல்லை!


(1) தாம்பத்திய உறவில் ஆகுமாக்கப் பட்டவை:

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக (நற்செயல்களின் பலனை) அனுப்புவதில் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன், 002:223)

இல்லறத்தில் ஈடுபடும் தம்பதியருக்கு (1-அ)வில் தடுக்கப்பட்டவை தவிர்த்து முழுச் சுதந்திரத்தை இறைமறை வழங்குகிறது. இல்லறம் என்பது நல்ல சந்ததிகளுக்கான விளைநிலம் என்பதை மனதில் கொண்டால் போதுமானது.

(2) மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப் பட்டுள்ளது.

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்

(3) மனைவியின் மார்பைச் சுவைப்பது குறித்துத் தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை; என்றாலும் பச்சிளம் குழந்தைக்குப் பாலுட்டும் தாயாக இருப்பின் அந்தப் பாலை உங்கள் மனைவியிடம் அல்லாஹ் ஊற வைப்பது உங்களின் குழந்தைக்காக என்பதை உணர்ந்து கொள்ளவும்.
(4) குடும்பக் கட்டுப்பாடு:
தற்காலிகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அனுதித்துள்ளது. நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனைவியின் கருப்பை வலுவிழந்த நிலையில் இருந்து குழந்தை பேற்றைப் பெற்றால் அதனால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தால் நிரந்தரமாகக் குழந்தைப் பிறப்பைத் தடை செய்து கொள்ளலாம். ''எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படமாட்டாது'' (அல்குர்ஆன், 002:233. 023:062)

(5) உடலுறவுக்கு முன் செய்யும் பிரார்த்தனை:

'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது ''பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா'' என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்கு குழந்தை விதிக்கப்பட்டால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், இப்னுமாஜா)

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!
Collection by : M.Ajmal Khan.

1 comment:

  1. திருமணப் பொருத்தம் இஸ்லாத்தில் எங்கு இருக்கிறது இல்லாத விஷயத்தை இஸ்லாத்தின் பெயரால் சொல்லாதிர் நிங்களா பொருத்தம் பார்த்து சேர்த்து வைக்கின்ரீர்கள் அல்லா விலா எழும்பை சேர்த்து படைக்கின்றான் நிங்களா சேர்த்து வைக்கின்ரீர்கள்

    ReplyDelete