Monday, 12 March 2012

பிசினஸ் ஸ்பெஷல் ! சூப்பர் டிப்ஸ்...



சூப்பர் டிப்ஸ்...
''
அம்மாநான் படிக்கறதை நிறுத்திட்டுபிசினஸ் பண்ணி சம்பாதிக்கப் போறேன்!''
''
என்னது... படிப்பை நிறுத்தப் போறியா...? படிக்கறது நாலாங்கிளாஸ்அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப்போற?''

''
மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!''

என்ன... படித்ததுமே 'குபுக்என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதாகூடவேஇந்த 'எஸ்.எம்.எஸ்ஜோக் புறப்பட்டதன்அடிநாதம்... இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும்புரிந்திருக்குமே!
ஆம்எடுத்ததெல்லாம் பிசினஸ் என்பதாகிக் கொண்டிருக்கும் 'பிசினஸ் பெருங்காலத்தில்நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்துஇன்றைய இன்டர்நெட் வரை எதை எடுத்தாலும்பிசினஸ்தான்இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்குதோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனிபடையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!
இணையதளம்...அது உங்கள் களம்!
1. விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம்கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம்மிகப்பெரிய நிறுவனங்கள்கூடஅவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும்இதிலிருந்தே நல்லதமிழ்கற்பனை வளம்சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப்பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. 
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தைஇணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்... (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால்வேகமாக வளர்ந்து வரும் துறை இதுமுறையான பயிற்சி பெற்றால்,துணிந்து களம் இறங்கலாம்இணையவெளிக்குள்இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்டநிறுவனங்கள் உள்ளனநல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. 
வலைப்பூ... ஒரு வரப்பிரசாதம்அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டுஅது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள்ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தவல்லுநராக நீங்கள் இருந்தாலோஅல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராகஇருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூபோதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்குஉருவாகிவிட்டால்தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார்தெரியுமா... சாட்சாத் கூகுள்ஆம்தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள்கொண்டு வந்து சேர்க்கும்இதற்கு பிரதிஉபகாரமாகதன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்குவைக்கும் கூகுள்இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com 
போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள்சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின்பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம்இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத்தேர்ந்தெடுத்துநன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. 
இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலைசிறிதுநாள் இந்த 'இபேசெயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. 
வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்றுவீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையானவலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையேஇணையத்தில்இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றிஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

7. '
புரூஃப் ரீடிங்', 'எடிட்டிங்போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள்அதிலும்,வீட்டில்இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும்பத்திரிகை அலுவலகங்கள்,பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

8. 
டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம்


வீட்டில்இருந்தபடியே ஆவணங்களை கம்ப் யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும்.பெரும்பாலும் அதுதான் வேலைஇந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டுபணி தேடலாம்அதோடுநிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும்முக்கியம்.

9. 
வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்... குழந்தைகளுக்கு கம்ப் யூட்டர் பயிற்சி கொடுக்கும்தொழிலை ஆரம்பிக்கலாம்அளவான வருமானத்துக்கும்உங்களின் பொழுது போக்குக்கும் இது உத்தரவாதம்.

10. 
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான்என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோஅதிலெல்லாம் நுழையலாம்.
வீடே தொழிற்பேட்டை!
உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள்ஹேட்டல்கள்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள்பெரிய அபார்ட்மென்ட்கள்என்று இருந்தால்ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. 
வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால்பட்டன் தைத்தல்ஹெம்மிங் செய்தல்எம்ப்ராய்டரி என்றுதுணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. 
ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம்.சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவதுபாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆகதருகிறார்கள்ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. 
கடை வீதியாக இருந்தால்பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும்இதையும்கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. 
வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள்அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்துவியாபாரம் செய்யலாம்மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம்இருந்து கமிஷன் கிடைக்கும்.
15. மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கிநீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளைசெய்யலாம்வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம்தயிர்மோர்தண்ணீர்கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.வீட்டிலேயே போதுமான இடவசதிஇருந்தால்... குழந்தைகளுக்குரிய புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. 
அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்துநாமே டிரைவாஷ் செய்து தரலாம்அல்லது டிரைவாஷ் கடைகள்மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.
17. அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால்அவர்களுடைய மின்சாரம்தொலைபேசிபோன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவதுசமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்துகமிஷன் பெறலாம்.

18. 
வெட்டிங் பிளானர் என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணிதிருமணஅழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம் என்று தொடங்கிஎன்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும்வேலைதிறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. 
ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள்அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸிபோல செயல்படலாம்உதாரணமாகவீடுகளுக்கு அலாரம் அமைப்பதுகொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பதுஇப்படி சிலஇதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து,பின்னர் நிறுவனங்கள்வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. 
உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால்கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம்அக்கம்பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும்.மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.
கைகொடுக்கும் இயந்திரங்கள்!
வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள்இருக்கின்றனஅவற்றில் சில கீழே அணி வகுக்கின்றனஉங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.
21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறதுசிறியமெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம்ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின்வாங்கலாம்இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. 
சாக்பீஸ் மெஷின்இதன் விலை 15 ஆயிரம் ரூபாய்நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. 
பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய்வாஷிங் பவுடர்எண்ணெய் போன்றபொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இதுவிலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்துஇயக்கலாம்.

24. 
பாப் கார்ன் மெஷின்விலை 70 ஆயிரம் ரூபாய்மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்துவியாபாரத்தை ஆரம்பித்தால்நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. 
பேப்பர் கப் மெஷின்இதில் செமி ஆட்டோமேட்டிக்ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறதுரூ. 5லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போதுகுறிப்பிட்ட கால அளவுக்குமூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள்ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில்பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26
ஜூட் பேக் மெஷின்சணல் பைகள்சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில்தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டுஒரு மாஸ்டர், 2 வேலையாட்களைவைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. 
சுற்றுச்சூழல் பாதுகாப்புபிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிகமுக்கியத்துவம் பெற்று வருகின்றனசணல் பைகள்பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டனஇந்தவணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு 
பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. 
மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. 
பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. 
டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. 
பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம்கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்துதரும் வேலையையும் செய்யலாம்.

33. 
புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. 
இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதுநீங்கள் ஓரளவுக்கு அதில்கில்லாடி எனில்அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர்தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்கஆரம்பித்துவிடுவார்கள்.
பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. '
நேர்மறை சிந்தனைபோதுமான பேச்சுத்திறன்தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!'என்பவர்களைமனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறதுஉங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள்நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும்இனிஅதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டுசுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள்கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்,கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போதுபள்ளிகளில்இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்குஅடையாளம்ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ்குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட்பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள்நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்துவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்படி செய்யுங்கள்முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான்பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!
36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங்புரோக்ராம்களை நடத்துகின்றனமென்கலைகள்கம்யூனிகேஷன்ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள்.நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம்.தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள்மற்ற நேரங்களில்வீட்டிலேயே இருக்கலாம்.

37. 
செல்லப் பிராணிகளைக் கவனிப்பதுஅதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய்தரக்கூடிய பணிஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும்அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரிடாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. 
சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறைபிரெஞ்சுஜெர்மன்ஜப்பானிய மொழிகளில்பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும்.சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்குஆகியநிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.
ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. 
கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொருசுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிடமலிவான வாடகைக்கு கிடைக்கிறதேஎன்று மாணவர்களும்மொய்ப்பார்கள்இதில் ஆர்வமுடையவர்கள்எம்.விபுக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தகவங்கிகளை அணுகிஅவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. 
வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியைஆரம்பிக்கலாம்.

41. 
உங்கள் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் இருந்தால்... டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம்.கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லைசரியானநெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில்லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. 
ஹெல்த் இன்ஷுரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லைஆனால்தேவை இருக்கிறது. 'எந்தஹெல்த் இன்ஷுரன்ஸ்தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டதுஎன்பது போன்றதகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம்இன்ஷுரன்ஸ்கம்பெனிகள் தரும் கமிஷன்உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. 
ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்... வாகன இன்ஷுரன்ஸ்பயண இன்ஷுரன்ஸ் எனஅத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம்கூடவே... வருமான வரி திட்டமிடுதல்ஆண்டு முதலீட்டுத்திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. 
இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில்தொடர்புகளும்பேச்சுத் திறமையும்தான் முதலீடு.மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர்ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியைஇன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றனஉங்கள் ஊரிலிருக்கும் எல்..சிகிளையின் மேனேஜரை அணுகினால்வழிகாட்டுவார்கள்.

45. 
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவைபுத்தகங்கள்காபி ஷாப் உள்பட  டு இசட் சேவைகள்(மின்சார பில் கட்டுதல்டெலிபோன் பில் கட்டுதல்போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாகஇணைந்து செய்து தரலாம்விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்...வெற்றி நிச்சயம்அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. 
ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும்எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள்.இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். 'நெட்வொர்க்எவ்வளவு விரிவாக...நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.
கலையிலும் கலக்கல் வருமானம்!

47. 
அனிமேஷன் துறைபுயல் வேகத்தில் வளர்ந்து வருகிறதுஇத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரியநிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றனஉள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக்கொண்டால்முயற்சி திருவினையாக்கும்அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளனவிநாடிஅடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. 
ஸ்க்ரீன் பிரின்ட்டிங்ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லைஒன்றுஅல்லது இரண்டு வார பயிற்சி போதும்ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள்திருமண அழைப்பிதழ்கள்என்று பிசியாகவே இருக்க முடியும்ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும்கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. 
ஓவியம்கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதாபத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவிஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல்கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டுமுன்னேறலாம்.

50. '
கிளாஸ் பெயின்ட்டிங்இப்போது மிகவும் பாப்புலர்நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில்கலக்கலாம்இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. 
ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ்வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வுநேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள்இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளனநகரங்களில்இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. 
ஃபேஷன் டிசைனிங்... வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலைநல்ல கற்பனை வளமும்உலகஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம்ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. 
வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலைசிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அதுஒரு நல்ல தொழிலாகிவிடும்கொஞ்சம் டெய்லரிங்கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறையசம்பாதிக்கலாம்.

54. 
பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணிபொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்றுவீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம்அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு,தொழிலைத் தொடங்கலாம்.

55. 
ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால்நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும்காதி கிராஃப்டை அணுகுங்கள்அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள்.வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.
ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. 
அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான்கேன்டீன்ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ்காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறதுஇவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில்இறங்கினால்... கொடி கட்டலாம்ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரிவேலையாள் மூலமாக அலுவலகவாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலைவீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில்ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. 
பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலைகேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலைஅதைக்கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம்அருகிலுள்ள பேக்கரிஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. 
சமையலில் நீங்கள் கில்லாடி எனில்சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம்சமைக்கத்தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவியஆரம்பித்துவிடுவார்கள்புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. 
வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம்

இனிப்பு வகைகள்முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம்பொருள் அறிந்துசெயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. 
ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும்ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகஇருக்கவேண்டும்நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம்பிறகுஆட்கள் தேடி வருவார்கள்.

61. 
மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப்பிரட் ஆம்லெட்சாண்ட்விட்ச்சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள்நல்ல ஆள்நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. 
இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிதுகேழ்வரகு கூழ்கம்பங்கஞ்சி என்று சுத்தம்சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்.
மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!
63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும்பிள்ளையார் சுழி போடுவதற்குமுன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான்.அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளைஎழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. 
உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள்அதுவே கூடஉங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும்ஆம்பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்புஇருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போலநீங்கள் கையில்எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும்பாக்கெட்டை நிரப்ப முடியும்உதாரணத்துக்குஉங்கள் பகுதியில் பனைபொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால்உள்ளூர் சந்தையில் ஒரு விலைஇருக்கும்பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறுஇந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால்உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

65. 
மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழிகுறிப்பாக 'ஆம்வேபோன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்துபணியாற்றலாம்பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும்அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லைஉங்கள்பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால்கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட 'என் குடும்ப கஷ்டம் இந்தத்தொழிலுக்கு வந்துட்டேன்தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க...' என்று மட்டும் மூக்கை சிந்தஆரம்பித்துவிடாதீர்கள்ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச்சாத்திவிடுவார்கள்அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. 
ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள்பிறகு,அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.
67. தோல்வி குறித்த பயமின்மைசரியான தெளிவுபோதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவைமூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.
கதம்பம்!

68. 
பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலைஉங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில்இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம்இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. '
பொக்கேகொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறதுமொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால்தேவையானபூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள்அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம்முதலீடுஇருந்தால் போட்டோ பிரின்ட்டிங்ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம்தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சிபெற்றுக் கொள்ளலாம்.

70. 
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கானவழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம்ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறுஉதவிகளைச் செய்துகொடுத்துதகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. 
போட்டோ ஷாப்இன்டிஸைன்போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள்அச்சகங்கள்போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம்வீடியோவில் எடிட்டிங்செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. 
டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம்மெம்பர்ஷிப்அதிகம் கிடைத்தால்... பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.
விவசாயத்துலயும் விஷயமிருக்கு!
லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம்என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

73. 
உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கிசுத்தப்படுத்தி காயவைத்துகாய்கறி வற்றல் தயாரிக்கலாம்பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்தவியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும்கொத்தவரங்காய்கத்திரிக்காய்சுண்டக்காய்,பாகற்காய்மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. 
சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம்புளியம்பழங்களை உதிர்த்துபுளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. 
நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்திதேனில் ஊறவைத்துநிழலில்காயவையுங்கள்பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும்டவுனிலுள்ளமளிகைக் கடைகளில் கொடுக்கலாம்தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. 
உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம்உள்ளுர் சந்தையிலேயே நல்லவரவேற்பு இருக்கும்நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. 
வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கி வந்துவிற்கலாம்அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும்.உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம்செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம்,காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம்இதற்காகதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்மாநிலதோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. 
வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறதுசென்னையைப் பொறுத்தவரைகொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறதுஇங்கு மொத்தமாக வாங்கி,சில்லறையாக விற்கலாம்தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. 
காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறதுவீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்துஅக்கம்பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. 
கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறதுஅதனால்கீரையை வாங்கி சுத்தப்படுத்திஅதைக் கிள்ளிபாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.
பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. 
பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்எனவேநீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரைவைத்து விடுங்கள்அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகுமுறைப்படி பதிவுசெய்யுங்கள்பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும்விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால்,குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. '
இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க 
\
வேண்டும்இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்அலுவலகத்தைதான்வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால்அதே அலுவலகத்தில் .. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்கோட் நம்பர் வாங்கவேண்டும்இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.
83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரிஉங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன்பதிவது முதல்சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனைவசதிகளையும் அளிக்கிறது.

84. 
ஃபேஷன் ஜுவல்லரிதங்க நகைகள்டயமண்ட்ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்தியஅரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்துகொள்ளுங்கள்அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும்வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால்இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள்.அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறதுஇதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்டதொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்இணையதளம்www.gjepc.org
உஷார்... உஷார்!

85. 
பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம்உங்களுக்குஎன்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. 
உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல்பிசினஸில் முதலீடுபோடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. 
சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும்ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.
உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால்உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து,கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள்கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர்கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. 
நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதைகுறிப்பாக அதிக கூட்டமற்றஇடங்கள் மற்றும் இரவுமதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. '
முன்பணம் அனுப்புங்கள்என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவைநீங்கள் கொடுக்கும் ஒவ்வொருபைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. 
பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாகஇருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. 
பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்செய்து கொடுக்கும் விதமும் அவசியம்பொருட்களைஅழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. 
ஏற்றுமதி தொழில் என்றால்எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம்.ஏனெனில்பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகுபணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. 
நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்.கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டுகடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. 
ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில்உடனடியாக ஐக்கியமாவது முக்கியம்தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும்ஓய்வுகால வாழ்க்கைக்கும்மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.
இன்முகமே லாபம் தரும்!

96. 
பல சந்தர்ப்பங்களில் பேச்சை விடசிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும்அதனால் எந்தசந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்குஎளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம்உங்களுக்கு முக்கியம்.

97. 
தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதுஇதற்கானகுறுகியகால சான்றிதழ் பயிற்சிகள்தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளனஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து,படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. 
கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணிகுறிப்பாகஅளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றையவாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதுஉளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையானவேலைமனநல மருத்துவர்தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும்கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்ஆன்லைன் மூலமாகவும்தொலைபேசி மூலமாகவும்கூடகவுன்சிலிங் கொடுக்க முடியும்பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. 
நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறைஒரே நேரத்தில் பல வேலைகளைஒருங்கிணைக்கும் திறன்ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வதுபோன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்னநம் வீடுகளில் கல்யாணம்பண்டிகை என்றால்அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம்நிகழ்ச்சி மேலாண்மையின்முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும்ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்!இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம்அல்லது சின்னச் சின்ன கல்லூரிநிகழ்ச்சிகள்போட்டிகள் என பழகிக் கொண்டுசிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்புதேடுங்கள்.
பயிற்சி

100. 
இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும்இதில்வாஷிங் பவுடர்சோப்,பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய்ஜூஸ்ஜாம்மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்தபொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள்இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்கவழிகாட்டுவார்கள்மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.
விவரங்களுக்கு:
கே.வி.ராவ்உதவி இயக்குநர்,இந்திய அரசு வளர்ச்சி நிலையம்,
தொகுப்புஅவள் விகடன் டீம் மற்றும் மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment