Sunday 11 March 2012

கடன் அட்டை(Credit Card )பற்றிய சில எச்சரிக்கைகள்...

 

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.
நான் துபாயில் வேலை செய்யும்போது முன்று  வங்கியில் கடன் அட்டையை பெற்றேன்.ஒன்று சம்பளம் அக்கௌன்ட் உள்ளது. மற்ற இரண்டு  தனியாக  பெற்றது .தங்கமும் பணமும் எடுத்து வட்டியை அதிகமாக கட்டியுள்ளேன் .அவற்றில் 
சில பாடங்களை கற்றுளேன்.

அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன்.

1.   வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்து கொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



2.    கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.



3.   உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்பு மையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.



4.  உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன் வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts ) வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.


5.  அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.


6.   கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.


7.   டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்.


8.  கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


9.   பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.


10.    டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள் கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும். உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில் தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையை கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறு பிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றவும்.



11.   நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையை இயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



12.    'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளை செய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



13.   உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டை தொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும். இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாக செய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவது முக்கியம்.




14.   உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசிய எண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லது வேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள் தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும் கூட.


15.   எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில் வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்று இலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.


16.   உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டை தொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோ அல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோ உங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment