Tuesday, 19 June 2007

மைக்ரோ வேவ் சமையல்- உஷார்....

 

மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார்.
அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.

ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்
ஆவியில் --- மைக்ரோ வேவ்அவனில்

flavonoids ----------- - 11% --- 97%
sinapics ----------- -- 0% --- 74%
caffeoyl-quinic derivatives--- 8% --- 87%

மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது.

மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

"குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது."1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோ வேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள். மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.
------------------------------------------------------------------------------------

ம்ம்.. இணையத்தில் காணப்பட்ட இந்த தகவலை நம்பி அவசரத்துக்கு உதவும் அவனை(oven)த் தூக்கி பரணில் போடவும் மனமில்லை. கான்சர் அபாயம் என்று வேறு பயமுறுத்துகிறார்கள். எல்லவற்றையும் விட உயிர் தான் முக்கியம். இது பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்பட்டு விரிவான ஆராய்ச்சிகளும் நடந்தால் ந்ல்லது.சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோ வேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன்.குறிப்பாக நீர் மூலக்கூறுகளை.இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம் புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது. நான் அறிந்ததை பதிவு செய்கிறேன்.
புதிதாக மார்கட்டில் வலம் வரும் இண்டக்சன் குக்கரும் இந்த வகை தான்.*

-------------------------------------------------------------------------------------
சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாக்ப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.

மைக்ரோ அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர் ,கொழுப்பு, சர்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக் , கண்ணாடி,பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.
மேலும் அறிய: How Microwave Cooking Works?

மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும்

ஆனால் உலோகப் பாத்திரங்கள் ,அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்க்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.

மைக்ரோ வேவில் முட்டை வெடிக்குமா?

மைக்ரோ வேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும்.

மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா?
சுத்தமான தண்ணீரை மைக்ரோ வேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்கு மேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது.இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும் போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை.
மேலும் அறிய http://www.snopes.com/science/microwave.asp

மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப் கார்ன் தயாரிக்கும் போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள் , வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது.மேல் விபரம் இங்கே


update: 19-june -2009:
* Induction cooker .ன் செயல் பாடு அடிப்படையில் micro wave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. micro wave oven -ல் பாத்திரம் சூடாவதில்லை ,உணவின் நீர் மூலக்கூறு தான் சூடாகிறது.இதில் தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cooker-ல் அடுப்பு சூடாவதில்லை.ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச்செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோ வேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் ,மொபைல் போன் ஆனாலும் பார்த்து ,கேட்டு உபயோகிக்கவும்..

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம் - முக்கிய தகவல்கள்....


 "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை
 முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில்
ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி
 மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு
 நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்
கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த
 புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை இந்நேரம்.காம்
 வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய
 மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த
 இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.
<!· சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.

<!· ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

<!· அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.

<!· அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.. பெய்க் கூறியுள்ளார்.

<!· இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.

<!· சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.

<!· மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.

<!· இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.