Wednesday, 30 October 2019

மழைக்காலங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் !!ஒரு விழிப்புணர்வு பார்வை..


 Image result for டெங்கு காய்ச்சல்

இன்று  நம் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் டெங்கு நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கின்றது. இதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து எங்களால் உணரமுடிகின்றது.
டெங்கு காய்ச்சலானது வைரசினால் ஏற்படும் நுளம்பினால் பரப்பப்படும் நோயாகும். இது சிலவேளைகளில் உயிராபத்தையும் ஏற்படுத்தலாம். டெங்கு நோயின் தாக்கத்தின் அளவு குறையும் பொழுது எமக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வும் குறைவடைகின்றது. இச்சந்தர்ப்பத்திலேயே அதிகளவான டெங்கு நுளம்புகள் பரவி கூடுதலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
டெங்கு நுளம்பு பரவாமல் தடுக்கும் முறைகள்.
டெங்கு வைரஸுக்கான தடுப்புமருந்து இன்னும் பாவனைக்கு வராததால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இப்போது எமக்கு உள்ள ஒரே வழி. சாதாரணமாக எமது வீட்டிலும் விட்டுச் சூழலிலும் காணப்படும் நீர் தேங்கும் இடங்களிலேயே டெங்கு நுளம்பு பெருகுகின்றது.
எனவே நாம் செய்யக் கூடிய தடுப்பு முறைகளாவன.
1. வீட்டின் உள்ளே காணப்படும் நீர் சேர்த்து வைக்கக் கூடிய பாத்திரங்களை கவனமாக வைத்து பராமரித்தல் அல்லது நீரினை அடிக்கடி மாற்றி விடுதல். உதாரணமாக வீட்டினுள்ளே பூக்களை அழகுக்காக காட்சிப்படுத்தும் பாத்திரம்.
2. கூரையில் நீர் வழிந்தோட வைத்திருக்கும் பீலிகளில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல்.
3. வீட்டுச் சூழலில் நீர் தேங்கக்கூடிய இடங்களை மண்ணினால் நிரப்பி விடுதல்.
4. வீதியில் நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்தல்.
5. குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் நீர் வழிந்தோட இருக்கும் பாத்திரத்தில் அடிக்கடி நீரை மாற்றுதல்.
6. வெற்று காணிகளில் நீர் தேங்காதவாறு பராமரித்தல் அல்லது உரிமையாளருக்கு உடனடியாக தெரியப்படுத்துதல்.
7. கிணறுகளை நன்றாக நுளம்புகள் செல்லாதவாறு வலையினால் மூடி விடுதல்.
8. கிணற்றினுள் மீன்களை வளர்ப்பதன் மூலம் அவை நுளம்பின் குடம்பிகளை உட்கொள்ளும்.
9. உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைகளுக்கு செவிமடுத்தல்.
இவ்வாறான சிறு மாற்றங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யுமிடத்தில் எனது சூழலில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து எங்களையும் எங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறான அறிவுரைகள் எமக்கு காலங்காலமாக கொடுக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
• கடுமையான காய்ச்சல்
• தலைவலி
• வாந்தி
• வயிற்று வலி
• கைகால் உழைவு
• மூட்டு வலி
• கண்ணுக்கு பின்னால் ஏற்படும் வலி
காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்
• காய்ச்சல் முற்றாக விட்ட பின் உடல்நிலை மோசமடைந்தது காணப்படுதல்.
• நீராகாரத்தை அருந்த முடியாதவிடத்து.
• மிக அதிகமாக தாகம் ஏற்படும் பொழுது.
• மிக அதிகமாக வயிற்று வலி உள்ள போழுது.
• கைகால்கள் குளிர்வடையும் போழுது.
• உடம்பிலிருந்து குருதிப்போக்கு ஏற்படும் பொழுது.
• ஆறு மணித்தியாலத்திற்கு மேல் சிறுநீர் போகாத போழுது.
ஒருவருக்கு காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டியவை
• இயலுமான வரை ஓய்வெடுக்க வேண்டும்.
• காய்ச்சலுக்கு பனடோல் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக NSAIDs (அஸ்பிரின், Brufen) எனப்படும் மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது. சிலவேளைகளில் வைத்தியர்களால் இந்த வகையான மருந்துகள் வழங்கப்பட்டால் அதை சற்று விளக்கமாக கேட்டறிந்து தவிர்த்து கொள்ளவும்.
• தேவையான அளவு நீராகாரத்தை குடித்தல் வேண்டும்.
• போதுமான அளவு சிறுநீர் போவதை உறுதி செய்ய வேண்டும்.
• கண்டிப்பாக காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாம் நாளில் வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாப்போமாக!!!

Sunday, 27 October 2019

சவுதி அரேபியாவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு!!

சவுதி அரேபியாவில் வசித்து வரும் இந்தியர்களின் கவனத்திற்கு,
Image may contain: 3 people, people sitting and people standingசவுதி அரேபியாவில் உள்ள சி  று நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டு வாகன ஓட்டுனர்கள் (House Driver), வீட்டு பணிப்பெண்கள் (House maid), கஃபீல் மூலம் புகார் (ஹுரூஃப்) செய்யப்பட்டவர்கள், இக்காமா காலாவதி ஆகியும் புதுப்பிக்க முடியாதவர்கள் மற்றும் இக்காமாவே வைத்திருக்காதவர்கள் (சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்) ஆகியோர் பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய வகையில் சவுதி அரேபியாவில் தங்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அனுப்பி வைப்பதற்காக தகவல்களை இந்திய தூதரகம் சேகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 நபர்களை தர்ஹீல் அழைத்துச் சென்று அவர்களுக்கு வேறு எந்த குற்றப்பின்னணியும் இல்லாதிருந்தால் எக்ஸிட் அடித்து கொடுக்கபட்டு வருகிறது. எனவே மேற்கொண்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் உடனடியாக சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகத்தின் கம்மியூனிட்டி வெல்ஃபேர் டிவிஷனை (Community Welfare Division) அணுகி உங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு வேலை இந்தியா தூதரகம் ஈஸி அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்பிக்கவேண்டும் என்று சொன்னால் கீழ் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
1. ஈஸி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்
2. அவசர கால சான்றிதழ் அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்ப படிவங்களை இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
3. பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் கடைசி பக்கம்)
4. புகைப்படம் இரண்டு ஒயிட் பேக்கிரவுண்ட்
5. இக்காமா நகல் / விசா ஸ்டாம்பிங் நகல் (இவை இருந்தால் இணைப்பது நல்லது, கட்டாயம் இல்லை)
6. கட்டணம் ஏதும் வசூலிக்கபடமாட்டாது
7. விண்ணப்பம் அளித்த 5 முதல் 7 நாட்களில் ஈஸி பாஸ் கிடைக்கும்
8. பாஸ்போர்ட் காலவதி ஆகியிருந்தால் ஈஸி பாஸ் தேவை இல்லை
9. ஈஸி பாஸ் கிடைக்க பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட் ரத்து ஆகிவிடும். (இந்தியா சென்ற பின் புதிய பாஸ்ப்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்)
மேலும் இது தொடர்பான சந்தேங்கள் மற்றும் உதவிகளுக்கு இந்தியா தூதரங்கள் மற்றும் துணை தூதரங்களை தொடர்பு கொள்ளவும்.
இந்தியா தூதரங்கள் ரியாத் மற்றும் ஜித்தா பணி நேரங்கள் :
காலை 9:00 முதல் மாலை 5:30 வரை (Sunday to Thursday).
Riyadh Address :
B-1 Diplomatic Quarter, PO Box 94387, Riyadh 11693, Saudi Arabia, Tel No : 011-4884144 / 488469. Fax No : 011 4884750.
Jeddah Address :
Building of Mr. Mansoor Abdul Rahman Al Hueesb, Villa No 34, Behind national commercial bank, Near Al Huda Mosque, Tahlia Street, Jeddah. Tel : 012-2614093. Fax No : 012-2840238.
சட்ட விரோதமாக சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் தாயகம் திரும்ப இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுநலத்துடன் வெளியிடுவோர்,
இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத் தமிழ் பிரிவு.

Tuesday, 22 October 2019

இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள்படிக்க செவனிங் உதவித்தொகைத் திட்டம்!!!

Image result for indian students in ukஇங்கிலாந்தைத் தவிர்த்துப் பிற நாடுகளில் வசிப்பவர்கள், இங்கிலாந்தில் கல்வி பயின்றுவிட்டு, தங்கள் சொந்த நாட்டில் பணியாற்றுவதற்காக உயரிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் இங்கிலாந்து அரசால் 1983 ஆம் ஆண்டு செவனிங் உதவித்தொகைத் திட்டம் (Chevening Scholarships) தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் படிப்புதவித்தொகை (Scholarship) மற்றும் ஆய்வு உதவித்தொகை (Fellowship) எனும் இரு பிரிவுகளிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலான படிப்புகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய மாணவர்கள் செவனிங் திட்டத்தின் மூலம் இங்கிலாந்திலுள்ள 122 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள், இரண்டு அல்லது மூன்று மாத கால அளவிலான நிதி சேவைகள், இதழியல், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.

இத்திட்டத்தில் இந்தியாவிலிருந்து மொத்தம் 120 மாணவ  மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான முழுப்படிப்புதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதி

இத்திட்டத்தின் கீழான படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு விரும்புபவர்கள் இந்தியக் குடியுரிமை கொண்டவராக இருக்கவேண்டும். இங்கிலாந்தில் கல்விக்கான படிப்பை நிறைவு செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளில் சொந்த நாடு திரும்புபவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்து இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். இங்கிலாந்தில் படிப் பதற்குத் தேவையான ஆங்கில மொழித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழித் தகுதி குறித்த விவரங்கள் இந்த அமைப்பின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தில் படிக்க விரும்புபவர்கள் http://www.chevening.org/india எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, விண்ணப்பம் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது செல்லத்தக்க கடவுச்சீட்டு (Valid Passport), தேசிய அடையாள அட்டை (National ID Card), பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் (University transcripts and degree certificates) போன்றவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புகளில், அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப ஏதாவது மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நேர்காணல்

இணையதளத்தின் வழியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, 2019ஆம் ஆண்டு நவம்பர் 06 முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலத்தில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினால் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் முதல் வார காலத்திற்குள்ளாக இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரகம் / துணைத் தூதரக அலுவலகங்களில் நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு  தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர், பிப்ரவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 25.2.2020 தேதிக்குள் இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதன் பின்பு, 02.03.2020 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து மாணவர்களுக்கான நேர்காணல்கள் அந்தந்த நாடுகளிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம்/துணைத் தூதரகம்/உயர் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும். இந்திய மாணவர்களுக்கான நேர்காணல் மேற்காணும் நாட்களுக்குள் ஒன்றாக இருக்கும்.

முடிவுகள்

நேர்காணலுக்குப் பின்பான முடிவுகள் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஆரம்ப நாட்களில் வெளியிடப்படும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடற்ற அளிப்புகள் (unconditional offers) மற்றும் ஆங்கில மொழித் தேவைக்கான சந்திப்புகள் போன்றவை 16.07.2020 ஆம் நாளுக்குள் நிறைவு செய்யப்படும். செவனிங் படிப்புதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான படிப்புகள் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும்.

இத்திட்டம் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம். அத்துடன் இந்த இணையதளத்திலிருக்கும் http://www.chevening.org/apply/faqs எனும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions) பக்கத்தையும் பார்த்துத் தெளிவினைப் பெறலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5.11.2019.

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

Friday, 18 October 2019

தமிழர்க்கும், தென் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு !!!

Image may contain: one or more people, sky and outdoor
தென் அமெரிக்காவிற்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்புகள் வியக்க வைக்கிறது.
இங்கு உள்ள பழங்குடியினர் 16,000 ஆண்டுகள் முந்திய வரலாறுகள் 
உடையவர்கள்.
அவர்களின் கடவுள் பெயர்
1. வீரக்கோச்சன் (VIRAKOCHA)
2. பச்சையம்மா (PACHAIMAMA)
நம்மை போல அறுவடை திருநாள்  ஒன்றை வருடம் ஒருமுறை கொண்டாடுகின்றனர்.
Image may contain: 1 person, standing, sky and outdoor
இவர்கள் இந்திர திருவிழா கொண்டாடுகின்றனர். இன்று நாம் வணங்கும் சிவலிங்கத்தை அவர்கள் இந்திரனாக வணங்குகின்றனர்.
மலை / மக்கள் / ஊர் பெயர்கள்
1. அந்தி மலை ( Andes )
2. மொச்சை இன மக்கள் (MOCHE)
3. பாரி - PARIA,VENEZULA
4. ஊரு - URU
5. காரி - KARI,KARIPUNA,BRAZIL
6. அமரகாரி - AMARAKARI
7. ஓரி - HUARI
8. சடையவர்மன் - SAKSAIVAMAN
9. சங்கா - SANGAS
10. வங்கா - WANKAS
11. கம்சன் - KAMSA
12. யானைமமா - YANAMAMA
13. கொச்ச பம்பா - KOCHAPAMBA
14. ஊரு பம்பா - URU PAMBA
15. வில்வ பம்பா - VILCAPAMBA
16. பொலிவு -BOLIVIA
17. அமரு - AMARU
18. பள்ளா - PALLASCA
19. கொல்லா - KOLLA
20. கிள்ளி - KILLKI,KILLIWA
21. சாலினர் - SALINAR
22. தேவநாகா - TIWANAKU
23. கருப்பு
24. அடகாமன் - ATACAMA
25. யானயான மக்கள் - YANAYANA
26. குருவையா/குருவாயு - KURUAYA,BRAZIL
27. நாகுவா, மெக்ஸிகோ - NAGUVA
28. தாயினம் - THAINO
29. அரவான் - ARAWAK
30. மச்சாளா (ளும் ) - MACHALA
31. கரிய மன்கா - KARIAMANGA
33. சிப்பிவா - CHIPPIWA
34. மனோமணீ - MANOMINEE
35. அப்பச்சி - APPACHI
36. கோபி - HOPI
37. சோழா தெரு - CHOLA STREET
38. கலப்பாகா (ன்) - GALAPAGOS
39. குடும்பன்
30. பள்ளன்
31. திகழ் - THIGAL
32. கோபன் - COPAN
33. பளிங்கு - PALANQUE
34. மாயப்பன் - MAYAPAN
35. தமழின் - TAMALIN
36. மாயன் - Mayan
37. பரண் மேடுகள் - Pyramids
38. கௌமாரா மக்கள்
INCA (அங்க /எங்க ) அரச பரம்பரை மிகவும் புகழ் வாய்ந்தது. அதில் ஒரு அரசனின் பெயர் "பச்சை குட்டி"
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி !

தண்ணீரில் இருக்கும் கனிமங்கள் பற்றிய புள்ளிவிவரம் !!

Image result for total dissolved solidsதண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி. எஸ். (Total Dissolved Solids) என்பா ர்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளு க்குள் இருந்தால் மட்டு மே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவ ட்டங்க ளில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவி ட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும்லயோ லா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர் பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொ ள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண் ணீரின் வளத் தையும் வணிக நோக்கில் மனிதன் எவ் வாறு எல்லாம் சூறையாடு கிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப் பட்ட பல தகவ ல்கள் பகீர் திகீர் ரகம்.கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போ ன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத் தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச் சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவு களும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங் கள் வெளியே ற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன் கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேற வே ண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந் தைய அளவை ஒப்பிட் டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களு க்கும் இடையிலான பந்தத்தை விளக்கி னார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழி ந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக் கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோ ட்டங்களை நன்கு அறிந்தவை ஆமைகள். செயற்கை க்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொ லைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடை கின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந் தைய டைனோசருக்கு இணை யான மூதாதையரான இந்த ஆமைகள், காலம் கால மாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்க ளை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண் டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உல கில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல் லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்க ளைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவு களை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண் கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வா ங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண் டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவா ரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொ ட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது'' என்று முடித்தார்.


Image result for total dissolved solids
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல் லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லை யெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொ டங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சா யப்பட்டறைத் தொழி ற்சாலைகள் ஆற்றை விஷமா க்கி வருகின்றன. பாலாற்றங்கரை யில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியி டும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக் கும் 46 ஊர்களில் 27,800 கிணறுக ளின் தண்ணீரை உபயோகிக் கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்கு கிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலா று மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங் கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந் நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுக ளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகி ன்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடை கள் இல்லையா?. அந்த நாடுகளுக்குத் தோல் பொருட் களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப் பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்த ப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேக ரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறு வனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என் றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல் கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ கத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீ ரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடு தலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இத னால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்க ளில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக்கற் கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன் னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தா ய்ப்பான உண்மை. ''பூமி யை ஓர் உயிரினம் என்பா ர்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவது போலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செ ய்யப் பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!'

Thursday, 3 October 2019

GATE நுழைவு தேர்வை பற்றிய ஒரு தவகல் !!

இந்தியாவில்உள்ள IIT, NIT, மத்திய கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை கழகம், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.
இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரி மற்றும் படிப்பிற்க்கு ஏற்ப அரசு மாதம் ரூ.12,400 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது). இந்த தொகை மூலம் கல்வி கட்டணம், ஹாஸ்டல், உணவு, புத்தகம் என அனைத்து வகையான செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் நிறைவேற்றிகொள்ளலாம்.  
இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் பெரும்பாலோன மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. கவனத்துடன் படித்தால் எந்த தேர்வையும் வெல்லலாம்.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
இது முழுக்க முழுக்க ஆன்லை

னில் நடக்கும் தேர்வாகும். தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படும். கணினியில் தேர்வு என்பதால் , தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் ( Multiple Choice Questions) மற்றும் எண்களில் பதில் அளிக்கும் முறை (Numerical Answer) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 65 கேள்விகள் 100 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking).
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech (பொறியியல் படிப்பு) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல் ( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் (https://appsgate.iitd.ac.in/) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 24 (24-09-2019)
விண்ணப்ப கட்டணம் ரூ.1500
தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளாம்.
தேர்வுகள் 2020 பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
2020 மார்ச் 16-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
GATE - தேர்வில் தேர்சி பெற்றிருந்தால் நாம் விரும்பும் கல்லூரி/ பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்,

மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள IES (Indian Engineering Service)தேர்வு !!


Image result for upsc examமத்திய அரசின் பாதுகாப்பு துறை , தொலை தொடர்பு துறை, மின் உற்பத்தி துறை, ரயில்வே துறை போன்ற பல்வேறு அரசு துறைகளில் பொறியியல் சார்ந்த அதி உயர் பதவிகளில் சேர UPSC ஆண்டு தோறும் IES (Indian Engineering Service) என்ற தேர்வை நடத்துகின்றது. இது மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள தேர்வாகும். இதற்க்கு பொறியியல் (B.E / B.Tech) படித்த மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 15 (15-10-2019)

விண்ணப்பிக்க :
UPSC-ன் https://www.upsconline.nic.in/mainmenu2.php இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.200, தேர்வு ஜனவரி 5-ஆம் தேதி (5-01-2020) நடைபெறும், தமிழகத்தில் சென்னை, மதுரையில் தேர்வு நடைபெறும்.
வயது வரம்பு : 21-வது முதல் 30 வயது வரை
IES தேர்வை பற்றி :
தேர்வு கீழ்காணும் நான்கு பிரிவுகளில் நடைபெறும், மாணவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
1) Civil Engineering
2) Mechanical Engineering
3) Electrical Engineering
4) Electronics & Telecommunication Engineering
பொறியியலில் வேறு பிரிவு (other branch) படித்த மாணவர்கள், மேற்கண்ட 4 பிரிவுகளில் தாங்கள் படித்த பிரிவிற்க்கு நெருக்கமான ஒரு பிரிவை தேர்ந்தெடுக்கலாம்,
தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்,
1. முதல் நிலை தேர்வு (Preliminary Exam)
2. இரண்டாம் நிலை தேர்வு (Main Exam)
3. நேர்முக தேர்வு (Personality Test)
தற்போது முதல் நிலை தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்
முதல் நிலை தேர்வு (Preliminary Exam) பற்றி :
இது இரண்டு தாள்களை (Two papers) கொண்டது, ஒரே நாளில் இரண்டு தேர்வையும் எழுத வேண்டும் , கேள்விகள் Objective Type (சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக) முறையில் இருக்கும்.
முதல் தாள் பொதுபாடம் மற்றும் அடிப்படை பொறியியல் (General Studies and Engineering Aptitude) சார்ந்த கேள்விகள் 200 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்
இரண்டாம் தாளில் மாணவர் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவில் (Engineering subject) உள்ள பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் 300 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்
IES தேர்வை பற்றிய விபரங்கள் இந்த https://www.upsc.gov.in/…/default/files/Notice-ESEP-2020-En… ஃபைலில் உள்ளது

Tuesday, 1 October 2019

மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை!

Related imageபள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் காலெடுத்து வைக்கும் மாணவர்களில் பலர் பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க மத்திய/மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த உயர்கல்விக்கான உதவித்தொகை.

தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.இ., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலைப் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: இந்த உதவித்தொகை 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.

உதவித்தொகை விவரம்: இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20,000 ரூபாய் என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019 மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.