Wednesday 16 October 2019

எதனால் வாய் புற்றுநோய் ஏற்படுவது ? அறிகுறிகள் என்னென்ன?

 



வாய்புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்.சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் , உலக சுகாதார அமைப்பு மற்றும் குளோபோகான் 2018 ஆய்வு என அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவெனில் உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது.
10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.

என்ன காரணம்? எப்படி நிகழ்கிறது ?

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.



தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை உட்கொள்வதும் , சிகரெட், பீடி போன்ற தீய பழக்கங்கள்தான் முதல் காரணம்.
அடுத்ததாக ஆல்கஹால் பழக்கம், கூர்மையான பற்கள் அல்லது பொருத்தமற்ற பல்வகைகள், உணவுப் பழக்கம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, பல் துலக்குதலில் கவனக்குறைவு, பல் பராமரிப்பின்மை போன்றவையும் காரணங்களாக உள்ளன.

அறிகுறிகள் என்ன ?
வாயில் இரத்தப்போக்கு, முறையான சிகிச்சைக்கு பின்னரும் குணமடையாத வாய் புண் ,வாயில் வெண்மை அல்லது சிவப்பு தன்மை,வாய்க்குள் கட்டி அல்லது தடித்தல், பற்களில் தளர்வு , கழுத்தில் கட்டி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வாய்ப் புற்றுநோயாக இருக்கலாம்.


வாய் புற்றுநோய் சிகிச்சை 

  • கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை: புற்றுநோய் செல்கள் எல்லாவற்றையும் அகற்றுவதை உறுதி செய்வதற்காக சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களின் கட்டி மற்றும் வெட்டுக்களை அகற்ற
  • கழுத்தில் பரவும் அறுவைசிகிச்சை புற்றுநோய்: புற்றுநோய் நிண மண்டலங்கள் மற்றும் கழுத்து தொடர்பான திசுக்களை நீக்க
  • வாயை புனரமைப்பதற்கான அறுவை சிகிச்சை: பேச்சு மற்றும் சாப்பிடும் திறன் ஆகியவற்றை மீண்டும் பெற உதவும் வாய்ப்பை மீண்டும் உருவாக்க
  • கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய் செல்களை அழிக்க
  • கீமோதெரபி: புற்றுநோய் செல்களை அழிக்க

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.

• புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

• மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியைவைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

• ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவராலும் தவிர்க்க முடியும்.


தீர்வு :

மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே பல் மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை வளர விடாமலோ அல்லது முற்றிலுமாகவோ நீக்கக் கூடும்.


தேசிய, மாநில அளவில் உள்ள ஆட்சியாளர்கள் நினைத்தால், 'புகையிலைப் பொருள்களுக்குத் தடை’ என்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.


தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment