Sunday, 28 September 2008

உலகின் 3வது மிகப்பெரிய பிரம்மாண்டமான மசூதி !! (Sheikh Zayed Grand Mosque in Abu Dhabi)

Sheikh Zayed Grand Mosque in Abu Dhabi, UAE
உலகின் 3வது பிரம்மாண்டமான 
மிகப்பெரிய மசூதி அபுதாபியில் உள்ள ஷேக் சையதுமசூதி ஆகும் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைநகரான 
அபுதாபியில் உள்ள இந்த மசூதி உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.

கட்டிடக் கலையின் பாரம்பரிய பெருமை பேசும் இந்த பிரம்மாண்ட மசூதி, காண்போரை வியப்பில் ஆழ்த்தும். 

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள மசூதிகளில் மிகவும் பெரிய மசூதி இதுவேயாகும். மொத்த பரப்பளவு 30 ஏக்கர். 

இதில் மசூதி கட்டிடம் 12 ஹெக்டேரில் அமைந்துள்ளது. கட்டிட வளாகம் 960 அடி நீளமும், 1380 அடி அகலமும் கொண்டது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகையின் போது ஒரே நேரத்தில் 46 ஆயிரம் பேர் கூடுவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்கு விசாலமான இடம் உள்ளது. நூலகம், வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அறிவியல், நாகரீகம் இஸ்லாமிய பண்பாடு கலாச்சாரம், நாணயங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன் முக்கிய அரிய வகை புத்தகங்கள் இங்கு இருப்பது தனிச்சிறப்பு.

மசூதியில் தொழுகை மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தரை விரிப்பு அதாவது கம்பளம் உலகில் மிகமிக நீளமான கம்பளமாகும். ஈரான் நாட்டின் கார்ப்பெட் கம்பெனி வடிவமைத்து ( கைவினைக் கலைஞர் அலி சாலிக்) கண்கவர் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 35 டன். முழுக்க முழுக்க கம்பளியால் தயாரான தரை விரிப்பு இது.
ஜெர்மன் நாட்டின் மூனிச் நகரிலிருந்து பிரபல பாஸ்டிக் நிறுவனத்திடமிருந்து ராட்சத சாண்டிலியர்களை (சரவிளக்கு) இறக்குமதி செய்து பொருத்தியுள்ளனர்.

33 அடி விட்டமும், 49 அடி உயரமும் கொண்ட சாண்ட்லியர்கள் இவை. தொழுகை நடைபெறும் மண்டபத்தில் மொத்தம் 96 ராட்சத தூண்கள் உள்ளன. இவை சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டவை. 

 தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


In English ..
As you cross the bridge onto the island of Abu Dhabi, the Sheikh Zayed Grand Mosque greets you with a shock of white marble, domes, and minarets. It is an incredible structure that, even after seeing it daily on my morning commute for over two years, still continues to amaze me.  My Cousin & Friends  recently visited the mosque for the fifth time and still felt enamored by the architecture, beauty, and tranquil atmosphere. No trip to Abu Dhabi would be complete without a visit to the Grand Mosque.
The Sheikh Zayed Grand Mosque has many special and unique elements..
The green carpet is made of tons of fine cotton, superior silk and soft wool, and is a reflection of the roof mosaics and chandeliers. The carpet’s design was created by a sophisticated computer system and was handmade by around 1,200-1,300 carpet knotters and includes 25 natural colors. The raw material of these colors comes from the roots, the peels and the branches of different kinds of trees and plants. Two different kinds of fine wool, brought from New Zealand and Iran, were used in the manufacturing of the carpet.
One of the unique features is the subtlety of the prayers’ lines knotted into the carpet itself. The indication lines do not detract from the design, although when the prayers commence, worshippers can easily identify the lines in which to stand. The size of the carpet is 5,700 square meters and it was manufactured in approximately 20 months.

Approx. 30 tons of wool and 15 tons of cotton were used in manufacturing the carpet. 5,000,000,000 knots!

The mosque has seven chandeliers imported from Germany that incorporate millions of Swarovski crystals, the largest has a 10 m diameter and a 15 m height and weighs over 9 tonnes .

The pools along the arcades reflect the Mosque’s spectacular columns, which become even more glorious at night. The unique lightning system was designed by lightning architects Jonathon Speirs and and are designed to reflect the phases of the moon. Beautiful bluish gray clouds are projected in lights onto the external walls and get brighter and darker according to the phase of the moon. When the moons crescent is small the clouds are darker and gradually becomes lighter as the moon becomes full

The 96 columns in the main prayer hall are clad with marble and inlaid with mother of pearl, one of the few places in the world where you will see this craftsmanship. The 99 names (qualities or attributes) of Allah (God) are featured on the Qibla wall in traditional Kufi calligraphy, The Qibla wall also features subtle fibre-optic lighting, which is integrated as part of the organic design
.
Sheikh Zayed Grand Mosque – Key Facts
 • constructed using 100,000+ tons of pure white Greek and Macedonian marble
 • home to one of the world’s largest marble mosaic
 • roof features 80+ marble domes 
 • main dome is the largest mosque dome in the world sitting at 85 metres high with a diameter of 32.8 metres
 • houses the world’s largest hand-knotted carpet
 • burial place of the late Sheikh Zayed bin Sultan Al Nahyan, first President of the UAE, is located beside the mosque.
 • Opening Times (for tourists): 
  Sat – Thurs: 9am to 10pm & Friday's: 4:30 pm till 10pm (Last entry is 9.30pm
If you are not Muslim, visiting a mosque (especially this mosque) may be a bit intimidating. Upon arrival there is a clear sense that there are rules to follow. However, if you’ve never visited a mosque, the rules themselves might be a mystery. Here’s what you need to know:

Before You Go..

 • Check your camera batteries. I know, I couldn’t give you more basic advice but the truth is it’s happened to me. I took my sister to visit the mosque and as soon as we alighted the steps, my camera died and hers was close behind. Truly, the mosque is gorgeous and you’re going to want photographs.
  Sheikh Zayed Grand Mosque floor
 • Dress accordingly. Mosques have strict dress codes. It’s a sign of respect if you arrive prepared.
 • For the gentlemen: No tank tops and no shorts. Pretty easy.
 • For the ladies: You will be provided with an abaya (loose fitting robe) and shaila (headscarf) near the entrance but you should still enter the grounds dressed respectfully. Only wear loose clothing that covers your arms and your knees (to the ankles is even better). Here’s a little tip: Wearing your hair in a high bun or ponytail will help keep your slippery shaila on your head and covering your hair.
  Sheikh Zayed Grand Mosque windows
 • For everyone: Shoes must be removed before entering the mosque so slip ons are recommended.

While You’re There..

 • Join a tour. Tours are 60 minutes long and run several times a day except Friday. A tour is essential to your visit to the mosque. How else will you learn about the world’s largest chandelier (in a mosque) and the world’s largest hand-knotted carpet? The architecture, décor, and building materials of the mosque were chosen very deliberately. Your tour guide will be able to tell you all about it.
 • Ask questions. Really. This is your chance. The tour guides welcome and encourage all respectful questions about Islam or the Emirati culture. Emiratis make up less than 17% of the total population in the UAE. This might be the only time during your visit that you meet a local.
 • Remain respectful. Inside the mosque women must keep their hair covered. This is why you have a shaila. But as I mentioned before, shaila’s are slippery. You might want to ask a friend to be on hair patrol for you. Also, refrain from any displays of affection between men and women. This means no touching. Even when posing for photographs.
 • Hands off. Do not touch the Quran. I repeat. Do not touch the Quran.

As You Exit..

 • Slip on shoes. Don’t worry. They’ll still be there.
 • Return borrowed clothing. Bins are available to deposit worn shailas and abayas.
Visiting the Sheikh Zayed Grand Mosque is truly a cultural and educational experience. Each time  visit, I learn something new about the mosque, Islam, or the Emirati culture. I hope that if you come to the Emirates you’ll schedule a little time in your itinerary for the Grand Mosque and arrive feeling not intimidated but prepared and able to enjoy this incredible monument.

Prepared & Collection by M.Ajmal Khan.

Monday, 22 September 2008

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

ஆக்கம் & தொகுப்பு : .தையுபா அஜ்மல்.

Friday, 19 September 2008

தண்ணீர் மரு(க)த்துவம்

நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான் என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு குறையும் போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் பறந்து விடுமாம்.
நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்ல 82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.
தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய தேவையான தண்ணீர் அருந்தி வருவது தான் குணமடையும் வழி
தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு காரணம். pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர் அதிகம் அருந்தினால் மூட்டு வலி குணமாகும்
தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத் தொகுதியில் உடலின் எடையைத் தாங்குவதில் தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி ஏற்படுகிறது.சரியான அளவு தண்ணீர் அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்

தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம் மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறையே angina எனும் நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர் அருந்துவது. இன்நோயைக் குணமாக்குகிறது.
தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது:
மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி உண்டாகிறது
தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில் தண்ணீர் வரண்டு போகும்போது செரிக்கப்பட்ட உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது. அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன் தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல் புற்று போன்றவை.போதுமான தண்ணீர் அருந்துவது மட்டுமே இதனை குணமாக்கும்
தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம். உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல் காற்றுப் பாதைகளில் உடல் தடை ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன் எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி கிடைக்கச்செய்யும்
தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்
நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:
---------------------------------------------------------------------------------------------------
தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை
 1. காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
 3. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
 4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
 5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் நலம்பெறுவது உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் அல்லது தணியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
 2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
 3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
 4. மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
 5. புற்றுநோய் - 180 நாட்கள்
 6. காச நோய் - 90 நாட்கள்.
 7. ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ?

கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

மேலும் விபரங்களுக்கு:
www.shirleys-wellness-cafe.com
www.watercure.com/wondersofwater

Sunday, 14 September 2008

நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை !! ஒரு சிறப்பு பார்வை

Image result for காவிரி பிரச்சனைதேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது. 
இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.
நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.
நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,
**
விடைபெறும் முன்
அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல் .

காவேரியும் தமிழக விவசாயமும் !! ஒரு தவகல்..

Image result for காவிரி பிரச்சனைகாவிரி நடுவர் மன்றத்தை மாறியமைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையின் விளைவாக, காவிரி பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பு இன்னும் இரண்டொரு மாதங்களில் வருகிற நிலையில் கர்நாடக அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கை தமிழக விவசாயிகளையும், கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.காவிரி பிரச்சனை இன்றுநேற்றல்ல… பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை…
அதற்கு முன்பு காவிரி பற்றியும் அதை சுற்றி நடந்த நிகழ்வுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்…மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மலைகளும், காடுகளும் நிறைந்தது இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.
மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும்தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல… அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.
அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.தமிழக, கர்நாடக நீர்வளம்தமிழகம் முழுவதும்ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.
தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.
இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் தமிழக கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிருக்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயல்கிறது. தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறுகின்றன. காவிரி: தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள்நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு ‘நடுவர்மன்றம்’ என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் – டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகிறது. தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது கூட காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள், அரசியல்யர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இதை உணர்ந்து தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைப்பாகி காவிரியை மீட்க முயல்வதோடு தென்னக நதிநீர் இணைப்பை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியானது மத்தியரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துமேயானால் காவிரி தீர்விற்கு அதுவே அச்சாரமாக அமையும். 
நன்றி: ஆறாம்திணை.காம்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி ஏன் !! ஒரு அறிவியல் பார்வை..

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!  


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Saturday, 6 September 2008

ஐ.க்யூ ( Intelligence Quotient) எவ்வளவுன்னு பாத்துட்டீங்களா?


Image result for Iqtestஇந்த நுண்ணறிவுத் திறன் ஒவ்வொரு தனியாளுக்கும் மாறுபடும். நுண்ணறிவைத் தெரிந்து கொள்ள பலவிதமான சோதனைகள் இருக்கின்றன. இந்தச் சோதனைகள் பெரும்பாலும் வயதின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. 

பெரும்பாலானவர்களின் நுண்ணறிவு சராசரி நிலையிலும் (90 - 110), சராசரியைவிட சற்று உயர்வானநிலையிலும் (111 - 120) இருக்கிறது. மிகவும் உயர்வான நிலையில் (120 - 130) நுண்ணறிவை உடையவர்கள் மிகவும் குறைவு. 

நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ள நமது உளவியலாளர்கள் குறிப்பிடும் சில நுண்ணறிவு சார்ந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும். 

இந்த நுண்ணறிவு விஷயத்தை ஸ்பியர்மேன் என்பவர் இரண்டு வகையாகப் பிரிக்கிறார். (மற்ற உளவியலாளர்கள் இன்னும் பல வகைகளாகப் பிரிக்கின்றனர்) 

1. பொதுவான திறன் 
2. சிறப்புத் திறன் 


அவர் சொன்னதைக் கொஞ்சம் எளிமையா சொல்லமுடியும். 

முதலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எல்லோரிடமும் பெரும்பாலும் காணப்படும் பொதுவான திறன்கள். இது ஒரு பெரிய லிஸ்ட். இதனைக் கொண்டுதான் நம்ம உளவியலாளர்கள் நுண்ணறிவுச் சோதனை நடத்துகின்றனர். 

பொதுவான திறன்கள் ஒவ்வொரு தனிநபரிடமும் மாறுபடுகிறது. எந்த அளவுக்கு இந்த பொதுத்திறன்கள் ஒருவரிடம் அமைந்துள்ளனவோ அதைப் பொறுத்தே அந்த நபர் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். 

இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் சிறப்புத் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் மட்டும் அல்லது சூழ்நிலையில் மட்டும் செயல்படுத்தப்படுவது. இந்த சிறப்புத் திறன் என்பது ஒருவரால் தன்னுடைய வாழ்நாளில் கற்றுக் கொள்ளப்படுவது. 

சரி, இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதே? அதுதான் முக்கியமான விஷயம். 

இந்த பொதுவான திறன்களை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக நீங்கள் செய்யும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது. அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் பொதுவான திறன்களைச் செலுத்தும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது. 

நுண்ணறிவுக்கு பொதுவான திறன்கள்தான் அடிப்படை. இந்த நுண்ணறிவு, இளைய பருவத்தில் இருக்கும் ஒருவரின் ஊக்கத்தினைப் பொறுத்து மாறுபடும். இலக்கினை அடையும் ஊக்கத்தைப் பொறுத்து நுண்ணறிவில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படுகின்றன. 

இந்த பொதுவான திறன்கள் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது. 

சரி, இந்த பொதுவான திறன்கள் பற்றி நிறையவே சொல்லியாகிவிட்டது. பொதுவான திறன் அப்படின்னா என்ன? இதோ உங்களுக்காக அந்தப் பட்டியல். 

1. சிந்திக்கிற திறன்
 2. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன்
 3. பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் திறன் 
4. காரண காரியங்களை ஆராயும் திறன்
5. மிக விரைவாக கற்றுக் கொள்ளும் திறன்
6. கற்றதை நினைவில் வைத்திருக்கும் திறன் மற்றும் நினைவு கூறும் திறன் 
7. தக அமைத்துக் கொள்ளும் திறன்
8. அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளும் திறன். 
9. தனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலையும், குறிப்புகளையும் புரிந்து கொண்டு செயல்படும் திறன். 
10. செய்திகளையும் விஷயங்களையும் அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தும் திறன் 

சரி, இதெல்லாம் நுண்ணறிவுச் சோதனைகளில் இருக்கக்கூடிய பொதுவான உளத்திறன்கள். இதெல்லாம் எல்லோரிடமும் இருக்கக்கூடியது. ஆனால், நுண்ணறிவை எப்படி வளர்த்துக் கொள்வது? 

அதற்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமான சில திறன்களைக் கொண்டே இந்த நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதில் முக்கியமான சில: 

1. கவனம் 
2. ஊக்கம் உங்கள் செயல்திறனுக்கு இந்த வாரம் ஒரு விஷயம்: ரொம்ப சிம்பிள் 

அலாரம் அடித்ததும் பதறியடித்து எழுந்திருப்பீர்கள் இல்லையா? சரி, அலாரத்தை நிறுத்திவிட்டு உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையிலிருந்து எப்போது எழுந்தாலும் வேகமாக எழுந்திருக்காதீர்கள். கண் விழித்தவுடன் வேகமாக எழுந்திருக்காதீர்கள். அலாரத்தை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்து படுக்கையிலேயே உட்காந்து கொள்ளுங்கள். கண்களை மட்டும் மூடிவிடாதீர்கள். மறுபடியும் தூங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. 

படுக்கையில் உட்கார்ந்தபடியே அன்று முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக மனதில் கொண்டு வாருங்கள். காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான வேலைகளை ஒவ்வொன்றாக யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒன்று, இரண்டு என்று கணக்கு வைத்துக் கொள்ளூங்கள். முதலில் செய்ய வேண்டிய வேலை, அடுத்ததாக செய்ய வேண்டிய வேலை என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அன்றைய நாளில் அதே வரிசையில் வேலைகளைச் செய்யுங்கள்.

உங்களை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய வேலைகளை மட்டுமே இப்படி மனதில் வரிசைப்படுத்துங்கள். அடுத்தவரை நம்பி செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் வரிசைப்படுத்த வேண்டாம். அது உங்களுடைய அடுத்த வேலைகளை பாதிக்கும். 

அடுத்தவரை நம்பி செய்யவேண்டிய வேலையாக இருப்பின் அதற்கு ஒரு நேரம் குறித்துக் கொள்ளுங்கள். இன்று மதியம் மூன்று மணிக்குள் நண்பரிடமிருந்து இந்த வேலையைச் செய்து வாங்கிவிட வேண்டும். அப்படி வாங்க முடியாமல் போகும்படியானால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள். 

பத்து நிமிடத்திற்குள் இப்படி வரிசைப்படுத்திவிட்டு அன்றைய வேலைகளைத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் இப்படி திட்டமிட்டு ஆரம்பிப்பதால் நாளடைவில் திட்டமிடுவதும், திட்டமிட்டதை செயல்படுத்துவதும் உங்கள் செயல்திறனை அதிகப்படுத்தும். நாளடைவில் உங்களுக்கு அலாரமே தேவையிருக்காது. 

ஆனால், இந்த தகவல் அலாரத்தை அழுத்திவிட்டு மறுபடியும் தூங்கச் செல்பவர்களுக்காக அல்ல.

உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு  உள்ள தளங்கள்..


உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும்  உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன.http://www.iqtest.com/
INTELLIGENCE TEST: இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். http://www.intelligencetest.com/
FREE IQ TEST: இது ஓர் புதிர் தளமாகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60 வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும்.
http://www.seemypersonality.com/IQ-Test

http://www.funeducation.com/Tests/IQTest/IQ-Testing-A.aspx

http://www.iq-test.cc/

http://www.free-iqtest.net/

 உங்க ஐக்யூ எவ்வளவுன்னு பாத்துட்டீங்களா? அதுக்கான விளக்கத்தைத் தெரிஞ்சுகிட்டீங்களா? இப்ப உங்களைப் பத்தி நீங்களே தெரிஞ்சுகிட்டிருப்பீங்க. 


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Friday, 5 September 2008

விமானம் எப்படி பறக்குது என்பது பற்றிய ஒரு சிறப்பு அறிவியல் பார்வை !!

airplane-forces.gifஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது...
இந்த விடயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டுA ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி... பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விடயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாகவிமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விடயம் உள்ளது
airplane-pressure.gifகாற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
சரி எப்படி குறைந்த காற்றழுத்தம் இறக்கையின் மேலே உருவாகுது எனப்புரியாதவர்களுக்கு, இந்த படத்தை பார்த்தால் எல்லாம் புரியும்
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு சுட்டுப்போட்டாலும் வராது :) )இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறத.

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது.

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது (சந்திரனில் கூட பறப்பதற்கு இறக்கை உபயோகப்படாது).
அடுத்த முறை விமானத்தில் பயனம் செய்யும்போது மேற்கூறிய அத்தனையும் உங்கள் நியாபகத்திற்கு வரும்தானே. சும்மா ஏர் ஓஸ்டஸ்ஸை பார்ப்பதை விட்டுவிட்டு இந்த விஞாண பிண்ணணியை நினைத்து களியுங்கள் !!

தொகுப்பு : மு அஜ்மல் கான்.