Friday, 15 November 2019

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் பாத்திமா லத்தீஃப் நிறுவன படுகொலை !!!!


பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்...


1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?
2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?
3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.
4.மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணிவி.? 1மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.
Image may contain: 1 person, smiling, text5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்த்து.
6.எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்
7.தினமும் இரவு 8மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில் அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?
8.எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?
9.சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கிறோம் போது 9:30வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.
10. எனது மகள் மரணத்து இதுவரை ஐஐடி யின் அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..??
ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு...
"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.
முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.
பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?
என் கருத்து : ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.
இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..
IIT மாணவி பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு காரணமான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நெருக்கமானவனாக இருக்கிறான்.
ஆர்.எஸ்.எஸ் நடத்துகிற NGO-வான Infinity Foundation சார்பாக "Modern Hinduphobia and Dravidian Movement" என்ற பெயரில் இந்துத்துவ மதவெறியை நியாயப்படுத்தியும், திராவிட இயக்கத்தினை குற்றம் சாட்டியும் IITக்குள் கருத்தரங்கத்தை முன்னின்று நடத்தியிருக்கிறான்.
இவனை வழக்கிலிருந்து தப்பிக்கவைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் மொத்தமும் வேலை செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-பார்ப்பனிய தீவிரவாத கும்பலின் மதவெறிக் கூடமாக ஐஐடி கல்வி நிலையங்கள் நீடித்து வருகின்றன. இதனால்தான் IIT-க்குள் பயில செல்கிற SC/ST, OBC, இசுலாமிய மற்றும் சிறுபான்மை மாணவர்கள் பலர் ஆண்டுதோறும் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவின் நவீன கல்வி நிலையம் என்று பெருமை பேசக் கூடிய ஐஐடி இந்த பிற்போக்குவாத மதவெறி பார்ப்பனிய கும்பலின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. நம் மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஐஐடி மதவெறி-சாதிவெறிக் கூடாரமாக காவி கும்பலால் மாற்றப்படுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
பாத்திமாவை மதரீதியான பாகுபாட்டுக்கு உள்படுத்தி தற்கொலைக்கு தள்ளிய இந்த சுதர்சன் பத்மநாபன் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
Infinity Foundation உட்பட ஆர்.எஸ்.எஸ்-ன் எந்த கிளை அமைப்புகளும் IIT வளாகத்தில் செயல்பட முடியாதபடி தடை செய்யப்பட வேண்டும்.
நவீன அக்ரகாரத்தைப் போல மாறிக் கொண்டிருக்கும் ஐஐடி-யை கேள்விக்குள்ளாக்க இதுவே சமயம்..

Sunday, 10 November 2019

நாட்டின் ஒற்றுமைக்காக முஸ்லீம்கள் செய்த மேலும் ஓர் தியாகமே பாபர் மசூதி !!


Image result for பாபர் மசூதி"
சுதந்திரத்திற்காக அன்று எத்தனையோ தியாகங்கள் செய்த முஸ்லீம்கள்,இன்று நாட்டின் ஒற்றுமைக்காக செய்த மேலும் ஓர் தியாகமே பாபர்மசூதி.

இப்ப வந்து இருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்று பிழை பின் விளைவுகள் ஏராளம் தனிமனிதருக்கு முதல் எல்லா மத வழிபாட்டிற்கும் பாதகமாக அமையும் காலம் தெளிவாக சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எது தேவை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் உயிர் சேதங்கள் பொருட்சேதங்கள் ஏற்பட கூடாது என்றுதான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது ,இதில் வெற்றியோ தோல்வியோ யாருக்கும் இல்லை ,இந்த தீர்ப்பு மூலம் பெரும் துன்ப நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது.அமைதிகாத்த மக்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் ,வரலாற்றை பார்க்காமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாருங்கள் ,கற்பழிச்சவனுக்கே பெண்னை கல்யாணம் செய்து வைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்தாரை போன்று!!!

இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற ஒரு இதிகாச சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்!!!இந்த தீர்ப்பு எப்படி இருக்குனா திருடுவது தப்புதான் ஆனால் திருடிய பொருள் திருடனுக்கு தான் சொந்தம் என்று சொல்லுவது போல் உள்ளது.

இந்த தீர்ப்பை கொடுத்த பிறகு மீண்டும் எந்த வம்பும் இழுக்க மாட்டோம் என்று ஹிந்து அமைப்புகளிடம் நீதிமன்றம் உத்தரவாதம் கேட்டுப் பெற வேண்டும்.
ஹிந்து வாக்கு வங்கிகள் குறையும் போது மீண்டும் இதேபோன்ற வம்புகளை கண்டிப்பாக இழுப்பார்கள்.
அந்தச் சூழ்நிலைகளை நீதிமன்றம் தடுக்க வேண்டும்.
இந்திய மக்களிடத்தில் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.
இனி நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
ஆனாலும் கடந்த மூன்று மாதங்களில் ஒரு கோடி வேலைகள் பறி கொடுத்து விட்டார்கள் மக்கள்.
ஆகவே கோவில்களைப் பற்றியும் பள்ளிவாசல்களையும் பற்றி பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்போம்.
கடவுள் இருக்கான் குமாரு

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே நம்பிக்கையின் அடிப்படையில் வரலாறு எழுதப்படும்!

ராமர் கோவில் இடித்து பாபர் மசூதி கட்டபடவில்லை ஆனால் பாபர் மசூதி இடித்துதான் ராமருக்கு கோவில் கட்டினார்கள் என்பது இன்று முதல் வரலாறு !


நீண்ட நேரம் ஆலோசித்த பிறகு நீதிமன்றத்திற்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற முடிவிற்க்கு வந்துள்ளேன்..


காரணம், ஒவ்வொன்றாக பார்ப்போம்..தீர்ப்பின் படி,

* ராமர் கோவிலை இடித்து தான் மசூதி கட்டினார்கள் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூதியின் கீழே இருந்ததாக சொல்லப்படும் கட்டிடம் கோவில் இல்லை.
* ராமர் அயோதியில் தான் பிறந்தார் என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை ஆனால் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூக்குள் சிலையை வைத்தது சட்ட விரோதம்.
* மசூதியை இடித்தது சட்ட விரோதம்.
சர்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்குத்தான் சொந்தம் என்று உணர்ந்த போதிலும் கடங்கார பாவிகளாகிய நம் சங்கி மங்கி தீவிரவாதிகள் பிரியானி அண்டாவை திருட புறப்பட்டு விடுவார்களோ, cell phone கடைகளை சூரையாட புறப்பட்டுவிடுவார்களோ, லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் இல்லா நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தால் மசூதியை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்பெழுத நிபந்த்திக்கப்பட்டுள்ளோம் மன்னித்து விடுங்கள்.

குறிப்பு: தீர்ப்பு முஸ்லீம்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் இன்நேரம் இந்தியா பத்தி எரிந்திருக்கும், முஸ்லீம்களின் உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் அநியாயமாக பறிபோயிருக்கும், பொது சொத்துக்கள் சேத்ப்படுத்தப்பட்டிருக்கும், மனங்கள் உடைந்ததால் பஸ்களின் கண்ணாடிகள் உடைகிறதென்றும் வயிறு பத்தி எரிவதால் கடைகள் பத்தி எரிகிறது என்ற வீர முழக்கங்கள் ஒலித்திருக்கும்.
இப்படி பட்ட அசம்பாவிதங்களை தவிற்க்கும் விதமாக தீர்பளித்த நீதிமன்றத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்

ராமர் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று சஙபரிவார தீவிரவாதிகளால் செய்யப்பட்ட பொய் பிரச்சாரம் பொய் என்று நிருபணமான நாள் இன்று.

பாபர் மசூதி தீர்ப்பு எப்படி வரும் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான் !!!

Image result for பாபர் மசூதி"
நான் பாபர் மசூதி இடித்த விசயத்தை நினைவூட்ட விரும்பவில்லை.

ஆனால் இடித்த சமயத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புறேன்.!

கிட்டத்தட்ட இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் மசூதி இடிப்பு தொடர்பாக ஏதேனும் ஒரு இஸ்லாமியனின் உயிரோ, இந்துவின் உயிரோ செத்துக் கொண்டு இருந்த சமயத்தில் "பெரியாரின்" தமிழகத்தில் மட்டும் எந்தக் கலவரமும் இல்லை..
உயிர் சேதமும் இல்லை..!!

மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழகத்தில் கூட்டம் கூட்டமாக கண்டன ஊர்வலம் போனார்கள், போனவர்கள் முஸ்லீம்கள் அல்ல, இந்து சகோதரர்கள்..!!

இடித்த போது எவர் கண்டன ஊர்வலம் போனார்களோ அந்த பங்காளிகளின், அந்த மாமன் மச்சான் கைகளில் இந்த  தீர்ப்பை ஒப்படைத்து விட்டு நாம் நம் வேலையைப் பார்ப்போம்...என் தாய்திரு நாட்டில், திருடியவனுக்கே பொருள் சொந்தம் எனும்
உன்னத தீர்ப்பை வழங்கி பெருமை பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்..

இறந்த சடலத்திற்க்கு மீண்டும்,மீண்டும்,பிணகூறு ஆய்வு செய்திட எனக்கு விரும்பமில்லை, ஆயினும் இராமனுக்காக கோவில் கட்டி அவன் பிறப்பிட பெருமை காக்க துடிக்கும் சொந்தங்களே!


நீங்கள் உண்மையிலேயே இராமனை படித்திருந்தால், பக்தி கொண்டிருந்தால்,

எழுதி முடிக்கபட்ட தீர்ப்பும் உங்கள் நெஞ்சை உருத்தியிருக்கும்..

களவெடுத்தவனுக்கே களவெடுத்த பொருள் சொந்தமென இராமன் எண்ணியிருந்தால்..


சேனைகளை கட்டமைத்து சீதையை மீட்டிருக்க மாட்டான்..
வனவாசம் சென்றயிடத்திலேயே தன் வாசம் அமைத்திருப்பான்.கள்ளமிட்ட தனக்கே சீதை சொந்தமென இராவணவன் நினைத்திருந்தால்...


சீதையை,சீதையாகவே வைத்து பார்த்திருக்க மாட்டான்...எழுதபட்ட மஹாபாரதத்தில் நீதியோடு தான் நடந்து கொண்டார்கள்...

ஹீரோவாக போற்றபடும் இராமனும,
வில்லனாக சித்தரிக்கபடும் இராவணனும் பாவம்..

நாங்கள் இராமனின் பக்தாள்கள் என்று சொல்லகூடிய நவீன சேனைகள் தான்.. இராமன் போதித்த நீதிக்கு..

பாபரின் பள்ளியில்...

ஒன்றையிழந்தால்,ஒன்றை பெறவேண்டுமென்பது இயற்கையின் நியதி,

அவ்வகையில் பள்ளியை இழந்தோம்.

அனைத்து தளத்திலும் சமுதாய வழி காட்டிகள் ன்ற, பாசாங்கு தலைமைகளை இனம் கண்டு கொண்டோம்.

போகட்டும்,சாவின் விழிம்பில் துடித்த போதும் தன் கவசகுண்டலத்தை தாரைவார்த்து தர்மத்தை கடைபிடித்த கர்ணனை போல்.என் தேசத்திற்க்காக,எம் முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்களை விதைத்து சென்றுள்ளார்கள்..

இறுதியாக எங்களிடம் முன்னோர்களின் பெருமையை தவிர இழப்பதற்க்கு வேறொன்றுமில்லை..

எடுத்து செல்லுங்கள் இராமனுக்கான விலாசமாய் பாபரை...

என் சமுதாயமுன்னோடிகள் சமூகநல்லிணக்கம் ஜனநாயகமென்று வெறும் அறிக்கைகளாக தருபவர்களல்ல..

நாளை..
இராமனின் கோவிலுக்கு மூலவர் சிலையை கூட எம் மூத்தவர்கள் பெற்று தருவார்கள்..

மகிழ்வோடு பெற்று செல்லுங்கள்.வேண்டுகோள் வேறொன்றுமில்லை ஒன்றை தவிர...

எழுப்பபடும் இராமனின் கோவிலிருந்தாவது தொடங்கட்டும் சாதிய ஒழிப்பும்  சாதிய பாகுபாடும்...

இராமனின் முன்பாவாவது,சாதிகள்,பேதங்களற்ற இந்துவாய் இணைந்து நில்லுங்கள்.

இதோ.தொழுகை நேரம் வந்து விட்டது,வெறும் கட்டிடத்தை தேடவில்லை கண்கள்,தூய்மையான கட்டாந்தரையை தான் தேடுகிறது.இது தான் இஸ்லாம் கற்று தரும் இறை வழிபாடு...

எங்களின் துயருக்காக உங்களின் மகிழ்ச்சிகள் தடைபட வேண்டாம்.
உங்களின் மகிழ்ச்சிக்காக இனியும் எங்களை துன்புறுத்த வேண்டாம்...

அதே சகோதரதுவத்தோடும்,இறைவன்ஒருவனே எனும் நம்பிக்கையோடு..

உங்கள்  சகோதரன்  மு,அஜ்மல் கான்.

Thursday, 7 November 2019

மதுரையில் நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் !!

Related image 
அணைத்து பெண்களும் கட்டாயம் படிங்க

 பெங்களூரில்  IT  நிறுவனத்தில்  வேலை செய்யும் ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு தன் மாமியார் ஊரான மதுரையில்  உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்,

"நேரம் நெருங்கிவிட்டது,பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்..ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்..
இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,அன்று இரவே கணவன் தன் மனைவியின்வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்,

"என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, மகளோ என் கையில்... என்கிறான்,
அதை கேட்க மனைவி எனக்கு ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல,
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் வேண்டும் என்று கணவன் சொல்ல ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,

படுக்கையில் தன் கணவன் அருகில் நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்,

தூக்கத்தில் இருந்த கணவன் விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
 "என்னவென்று தெரியவில்லை இதயம் படபடவென துடிக்கிறது,
எனக்கு தூக்கமே வரவில்லைபயமாக இருக்கிறது", என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.

உடனே இழுத்து தன் மார்போடு மனைவியை அனைத்தவன் அவள் கண்ணீரை துடைத்துஅவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.

அவள் நினைத்தால் போல் திடீரென பிரசவ வலி வந்தது. பயத்திலும் கடுமையான இடுப்பு வலியிலும் கட்டிலேயே துடித்து அழ ஆரம்பித்தாள்,

என்ன செய்வது என தெரியாது முழித்த கணவன் அவள் துடிப்பதை காண இயலாமல் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு காரில் சிட்டுக் குருவியை போல் பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
இரவு நேரம் என்பதால் உடனே தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்,

ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்கஅவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது,

இரு கைகளையும் பிசைந்து கொண்டு பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.
"அம்மா! அம்மா ..!" என்றுமனைவி வலியில் துடிக்கஅழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.
"ஆண்டவா என் மனைவியின் முதல் பிரசவம் இது,
தாய்கும் பிள்ளைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது"
என்று  கடவுளிடம் வேண்டினான்.
நேரம் ஆக ஆக அவனுக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது,
பிரசவ வலியில் தன் மனைவி துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.
சற்று நேரத்தில் திடீரென மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என மிகவும் பயந்துபோனான்,

மீண்டும் ஒரு அலரல்...
அதை கேட்ட கணவன் ஆண்டவா என் மனைவிக்கு இவ்வளவு சித்திரவதையா?
என தலையில் கை வைத்தவாறு இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்துகூணி கூறுகிப்போனான்,
அப்போது ஒரு நர்ஸ் மட்டும் வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம் பயப்படும்படி ஒன்றுமில்லை,
தாராளமாக உள்ளே சென்று பாருங்கள் என்றார்.

காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன் முதலில் தன் மனைவியை பார்க்கிறான், அவள் இன்னும் கண் திறக்காமல் மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க அடுத்து எங்கே என் குழந்தை எனஅவன் கண்கள் ஒரு வழியாக தேடி தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத  அந்த  ஆண் சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக கோதிவிடுகிறான்.
இந்த தந்தையின் கை விரல் பட்டவுடன் அந்த  ஆண் சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
யார் சொன்னது பெண்கள் மட்டும்தான் உயிரை சுமக்கின்றனர் என்று.

ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் "இதயத்தை"
தொட்டுப் பாருங்கள், அவன் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் நினைவுகளையும் குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும் உன்னதமான படைப்பு தான் ஆண்கள்....


உங்கள் தோழி  அ.தையுபா அஜ்மல்.

Wednesday, 30 October 2019

மழைக்காலங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் !!ஒரு விழிப்புணர்வு பார்வை..


 Image result for டெங்கு காய்ச்சல்

இன்று  நம் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் டெங்கு நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கின்றது. இதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து எங்களால் உணரமுடிகின்றது.
டெங்கு காய்ச்சலானது வைரசினால் ஏற்படும் நுளம்பினால் பரப்பப்படும் நோயாகும். இது சிலவேளைகளில் உயிராபத்தையும் ஏற்படுத்தலாம். டெங்கு நோயின் தாக்கத்தின் அளவு குறையும் பொழுது எமக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வும் குறைவடைகின்றது. இச்சந்தர்ப்பத்திலேயே அதிகளவான டெங்கு நுளம்புகள் பரவி கூடுதலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
டெங்கு நுளம்பு பரவாமல் தடுக்கும் முறைகள்.
டெங்கு வைரஸுக்கான தடுப்புமருந்து இன்னும் பாவனைக்கு வராததால் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இப்போது எமக்கு உள்ள ஒரே வழி. சாதாரணமாக எமது வீட்டிலும் விட்டுச் சூழலிலும் காணப்படும் நீர் தேங்கும் இடங்களிலேயே டெங்கு நுளம்பு பெருகுகின்றது.
எனவே நாம் செய்யக் கூடிய தடுப்பு முறைகளாவன.
1. வீட்டின் உள்ளே காணப்படும் நீர் சேர்த்து வைக்கக் கூடிய பாத்திரங்களை கவனமாக வைத்து பராமரித்தல் அல்லது நீரினை அடிக்கடி மாற்றி விடுதல். உதாரணமாக வீட்டினுள்ளே பூக்களை அழகுக்காக காட்சிப்படுத்தும் பாத்திரம்.
2. கூரையில் நீர் வழிந்தோட வைத்திருக்கும் பீலிகளில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல்.
3. வீட்டுச் சூழலில் நீர் தேங்கக்கூடிய இடங்களை மண்ணினால் நிரப்பி விடுதல்.
4. வீதியில் நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்தல்.
5. குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் நீர் வழிந்தோட இருக்கும் பாத்திரத்தில் அடிக்கடி நீரை மாற்றுதல்.
6. வெற்று காணிகளில் நீர் தேங்காதவாறு பராமரித்தல் அல்லது உரிமையாளருக்கு உடனடியாக தெரியப்படுத்துதல்.
7. கிணறுகளை நன்றாக நுளம்புகள் செல்லாதவாறு வலையினால் மூடி விடுதல்.
8. கிணற்றினுள் மீன்களை வளர்ப்பதன் மூலம் அவை நுளம்பின் குடம்பிகளை உட்கொள்ளும்.
9. உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைகளுக்கு செவிமடுத்தல்.
இவ்வாறான சிறு மாற்றங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யுமிடத்தில் எனது சூழலில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து எங்களையும் எங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறான அறிவுரைகள் எமக்கு காலங்காலமாக கொடுக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
• கடுமையான காய்ச்சல்
• தலைவலி
• வாந்தி
• வயிற்று வலி
• கைகால் உழைவு
• மூட்டு வலி
• கண்ணுக்கு பின்னால் ஏற்படும் வலி
காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்
• காய்ச்சல் முற்றாக விட்ட பின் உடல்நிலை மோசமடைந்தது காணப்படுதல்.
• நீராகாரத்தை அருந்த முடியாதவிடத்து.
• மிக அதிகமாக தாகம் ஏற்படும் பொழுது.
• மிக அதிகமாக வயிற்று வலி உள்ள போழுது.
• கைகால்கள் குளிர்வடையும் போழுது.
• உடம்பிலிருந்து குருதிப்போக்கு ஏற்படும் பொழுது.
• ஆறு மணித்தியாலத்திற்கு மேல் சிறுநீர் போகாத போழுது.
ஒருவருக்கு காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டியவை
• இயலுமான வரை ஓய்வெடுக்க வேண்டும்.
• காய்ச்சலுக்கு பனடோல் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக NSAIDs (அஸ்பிரின், Brufen) எனப்படும் மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது. சிலவேளைகளில் வைத்தியர்களால் இந்த வகையான மருந்துகள் வழங்கப்பட்டால் அதை சற்று விளக்கமாக கேட்டறிந்து தவிர்த்து கொள்ளவும்.
• தேவையான அளவு நீராகாரத்தை குடித்தல் வேண்டும்.
• போதுமான அளவு சிறுநீர் போவதை உறுதி செய்ய வேண்டும்.
• கண்டிப்பாக காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாம் நாளில் வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாப்போமாக!!!

Friday, 18 October 2019

தமிழர்க்கும், தென் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு !!!

Image may contain: one or more people, sky and outdoor
தென் அமெரிக்காவிற்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்புகள் வியக்க வைக்கிறது.
இங்கு உள்ள பழங்குடியினர் 16,000 ஆண்டுகள் முந்திய வரலாறுகள் 
உடையவர்கள்.
அவர்களின் கடவுள் பெயர்
1. வீரக்கோச்சன் (VIRAKOCHA)
2. பச்சையம்மா (PACHAIMAMA)
நம்மை போல அறுவடை திருநாள்  ஒன்றை வருடம் ஒருமுறை கொண்டாடுகின்றனர்.
Image may contain: 1 person, standing, sky and outdoor
இவர்கள் இந்திர திருவிழா கொண்டாடுகின்றனர். இன்று நாம் வணங்கும் சிவலிங்கத்தை அவர்கள் இந்திரனாக வணங்குகின்றனர்.
மலை / மக்கள் / ஊர் பெயர்கள்
1. அந்தி மலை ( Andes )
2. மொச்சை இன மக்கள் (MOCHE)
3. பாரி - PARIA,VENEZULA
4. ஊரு - URU
5. காரி - KARI,KARIPUNA,BRAZIL
6. அமரகாரி - AMARAKARI
7. ஓரி - HUARI
8. சடையவர்மன் - SAKSAIVAMAN
9. சங்கா - SANGAS
10. வங்கா - WANKAS
11. கம்சன் - KAMSA
12. யானைமமா - YANAMAMA
13. கொச்ச பம்பா - KOCHAPAMBA
14. ஊரு பம்பா - URU PAMBA
15. வில்வ பம்பா - VILCAPAMBA
16. பொலிவு -BOLIVIA
17. அமரு - AMARU
18. பள்ளா - PALLASCA
19. கொல்லா - KOLLA
20. கிள்ளி - KILLKI,KILLIWA
21. சாலினர் - SALINAR
22. தேவநாகா - TIWANAKU
23. கருப்பு
24. அடகாமன் - ATACAMA
25. யானயான மக்கள் - YANAYANA
26. குருவையா/குருவாயு - KURUAYA,BRAZIL
27. நாகுவா, மெக்ஸிகோ - NAGUVA
28. தாயினம் - THAINO
29. அரவான் - ARAWAK
30. மச்சாளா (ளும் ) - MACHALA
31. கரிய மன்கா - KARIAMANGA
33. சிப்பிவா - CHIPPIWA
34. மனோமணீ - MANOMINEE
35. அப்பச்சி - APPACHI
36. கோபி - HOPI
37. சோழா தெரு - CHOLA STREET
38. கலப்பாகா (ன்) - GALAPAGOS
39. குடும்பன்
30. பள்ளன்
31. திகழ் - THIGAL
32. கோபன் - COPAN
33. பளிங்கு - PALANQUE
34. மாயப்பன் - MAYAPAN
35. தமழின் - TAMALIN
36. மாயன் - Mayan
37. பரண் மேடுகள் - Pyramids
38. கௌமாரா மக்கள்
INCA (அங்க /எங்க ) அரச பரம்பரை மிகவும் புகழ் வாய்ந்தது. அதில் ஒரு அரசனின் பெயர் "பச்சை குட்டி"
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி !

தண்ணீரில் இருக்கும் கனிமங்கள் பற்றிய புள்ளிவிவரம் !!

Image result for total dissolved solidsதண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி. எஸ். (Total Dissolved Solids) என்பா ர்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளு க்குள் இருந்தால் மட்டு மே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவ ட்டங்க ளில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவி ட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும்லயோ லா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர் பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொ ள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண் ணீரின் வளத் தையும் வணிக நோக்கில் மனிதன் எவ் வாறு எல்லாம் சூறையாடு கிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப் பட்ட பல தகவ ல்கள் பகீர் திகீர் ரகம்.கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போ ன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத் தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச் சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவு களும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங் கள் வெளியே ற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன் கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேற வே ண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந் தைய அளவை ஒப்பிட் டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களு க்கும் இடையிலான பந்தத்தை விளக்கி னார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழி ந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக் கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோ ட்டங்களை நன்கு அறிந்தவை ஆமைகள். செயற்கை க்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொ லைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடை கின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந் தைய டைனோசருக்கு இணை யான மூதாதையரான இந்த ஆமைகள், காலம் கால மாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்க ளை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண் டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உல கில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல் லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்க ளைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவு களை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண் கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வா ங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண் டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவா ரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொ ட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது'' என்று முடித்தார்.


Image result for total dissolved solids
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல் லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லை யெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொ டங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சா யப்பட்டறைத் தொழி ற்சாலைகள் ஆற்றை விஷமா க்கி வருகின்றன. பாலாற்றங்கரை யில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியி டும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக் கும் 46 ஊர்களில் 27,800 கிணறுக ளின் தண்ணீரை உபயோகிக் கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்கு கிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலா று மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங் கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந் நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுக ளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகி ன்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடை கள் இல்லையா?. அந்த நாடுகளுக்குத் தோல் பொருட் களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப் பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்த ப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேக ரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறு வனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என் றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல் கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ கத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீ ரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடு தலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இத னால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்க ளில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக்கற் கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன் னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தா ய்ப்பான உண்மை. ''பூமி யை ஓர் உயிரினம் என்பா ர்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவது போலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செ ய்யப் பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!'

Friday, 16 August 2019

ஆன்லைனில் அதிகம் உள்ள சகோதிரிகளுக்கு உங்கள் சகோதரன் மு. அஜ்மல் கான் தரும் அட்வைஸ் !!

No photo description available.அன்புள்ள சகோதரிகளுக்கு!!!

இணையதளத்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்...


ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துமுழுமையாக விலகி விடலாம்.
ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.
முதல்ல பாலியல் ரீதியான பேச்சுகுள்ள போயிட்டாலே அங்கயே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்...
இந்த மாதிரி டிஸ்கஷனை ஒரு பெண் ஆண் கிட்ட மறைமுகமா நடத்துறான்னா அங்கயே அவளோட தரம் தாழ்ந்து விடுகிறது...
ஒரு ஆணுடனான பேச்சு என்பது ஒவ்வொரு பெண்ணும் தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமா நினைச்சுகிட்டா தவறான உரையாடல்களே நடைபெறாமல் போய்விடும்...

மேற்கொண்டு எந்தத் தவறும் வராமல் அதிலிருந்து மீண்டு விடலாம்...
இல்லையென்றால் வரும் ஆபத்துகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்...
நான் சொல்வது தவறே செய்யாமல் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரையாக எடுத்துக்கலாம்...

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துஎவ்வாறு விலகி விடலாம்?
இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.
முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.
கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.
யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.
இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.
உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .
முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை.
பெண்களுக்கு படிப்பறிவு இல்லை என்று சொல்லாமுடியாது. சுகாந்திராம் இல்லை என்று மறுக்க முடியாது. இது அனைத்தும் பல பெண்கள்நல்ல முறையில் பயன்படுத்துவதில்லை. இதனால் எல்லா துன்பத்தை அவர்கள் அனுபாவிக்கவேண்டி.உள்ளது முதலில் இதை போன்றபெண்கள் திருந்த வேண்டும்
அப்போது தான் குற்றங்கள் குறையும்...
நண்பன், காதலன் போன்ற உறவுகள் ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல.

புரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே !!


முகநூல் மற்றும் Whats app ,Whats app status ,Hike, viber, instragrame, Skype, போன்றவற்றை பயன்படுத்தும் என் உடன்பிறவா சகோதரிகலே தங்களின் புகைபடங்களை எதிலும் வைத்துவிட வேண்டாம். தற்போது நடைமுறையில் photo editor மிகவும் பிரபலமான முறையில் வளச்சி அடைந்துள்ளது. யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம்.
தங்களின் புகைபடங்களை Download செய்து விபசாரி களின் உடையில்ல உடம்பில் உங்கள் தலையை பழியாக்க பல கும்பல் காத்துகிடக்கிறது. எதிலுமே அறியாத தெரியாத நபர்களிடம் தங்களின் புகைபடம் நம்பர்களை அனுப்ப வேண்டாம்.தற்சமயம் முகநூலில் Fack ஐடியில் பல மகான்கள் வலம்வருகின்றன.


அவற்றை கண்டரிய பல வழிமுறைகள் உள்ளது.
1. முதலில் About ல் பார்க்கவும் அவர்கள் கூறும் வயதும் About பதிவு செய்துள்ள வயதும் சரியாக உள்ளதா என்று.

2. அவர்களின் Status மற்றும் Upload போட்டோவை பார்க்கவும்.
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் Status போடாமல் இருக்கமாட்டாங்க. Fake idல போட்டோ மட்டும் இருக்கும் Status இருக்காது

3. அவர்களின் Friends listயை பார்க்கவும்.

4. அவர்கள் Like செய்துள்ள Pageயை பார்க்கவும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் Like Pageல்மாட்டி கொள்வான்.

5.விடாமல் மெசேஜ்செய்துதொல்லை செய்பார்கள்.

6.அவர்களின் விளாசத்தை கூறாமல் உங்களின் விளாசத்தை மட்டும் கேட்டறிவார்கள்.

7.Messenger ல் விடாமல் போன்செய்பார்கள்.

8. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் நான் பையன் என்று கூறுங்கள் உங்களை உடனே blk செய்வார்கள்.


தாய்மார்கலே தயவு செய்து புதுமுகநூல் பயன்படுத்துபவர்கள் தங்களின் போன் நம்பரை முதலில் Remove செய்யுங்கள்.

அவற்றை செய்யும் முறை..

1, About ல் சென்று Contact info வை click செய்யவும்

2.சிறிது கிலே சென்று Contact info எதிர்புரம் உங்களின் போன்நம்பரும் Edit என்றும் இருக்கும்.Edit ஐ Click செய்யவும்.

3.பின்பு உங்களின் போன் நம்பரும் வரும் அதன் எதிர்புரதில் சிரிய டப்பா ஒன்று இருக்கும் அதை click செய்தால் Friends, public, onlyme என இருக்கும்.நீங்கள் பார்த்ததில்.onlyme இல்லையென்றால் More options னை Click செய்தால் அதில் Onlyme இருக்கும் அதை click செய்து கிலே சென்று Save என்ற பட்டனை Click செய்தால் உங்களின் நம்பரை நீங்கள் மட்டுமே கான முடியும்.

இது ஆண்களுக்கும் பெண்களும் தெரிந்து கொள்ளுங்கள்
தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களின் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தங்களிடன் ஒரு பெண் பேசவில்லை யென்றால் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் நம் வீட்டிலும் அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து விட வேண்டாம்.
இவ்வுளகில் ஆண் பெண் இருவரும் சமம் உறுப்புகள் மட்டுமே வேறு. இந்த பெண் இல்லையென்றால் எதோ ஒரு மூலையில் உங்களுக்காக ஒரு பெண் கண்டிப்பாக காத்திருப்பால்.

பிடிக்கவில்லையென்றால் விபசாரி யாக இருந்தாலும் தொட கூடாது என்பது பல மானிடர்களின் கொள்ளை. ஐந்து நிமிட உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணிண் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.தாய் தந்தைகள் என்னற்ற கனவுகளோடு வீட்டில் வளர்த்து வருகின்றனர்.அடுத்த பெண்ணிடம் பேசுவது சந்தோஷம் கிடையாது தன் தாய், தங்கை, தாரத்திடம் ,ஐந்து நிமிடம் பேசினால் போதும் அதை விட சந்தோஷத்தை வேற்று பெண்களால் கொடுக்க முடியாது.

மனிதனாக பிறப்பது அறிது. இன்று இருப்போம் நாளை இருப்போமா என்று நமக்கே தெரியாது மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு   : உங்கள்  சகோதரன்  மு. அஜ்மல் கான்.

Thursday, 15 August 2019

சுதந்திர தினம் நமக்கு சொல்ல விரும்பும் நற்செய்தி என்ன ? !!!

ஒவ்வொரு தனி மனிதனும் பெறக்கூடிய அதியுயர் கெளரவம் தனி மனித சுதந்திரமாகும். அன்றும் இன்றும் இதை பெற்றுக் கொள்வதற்கு மனித சமூகம் பல்வேறு தியாகங்களை செய்கின்றது. அந்த வகையில் 7 தசாப்தங்களுக்கு முன்னதாக இதை பெற்றுக்கொடுத்த தேசபக்தர்களை நினைவு கூறுவது நமது கடமையாகும்.
இனமத மொழி வேறுபாடின்றி நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா ?

அன்று அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான போராட்டம்....
இன்று நம் தீய எண்ணங்கள் , இனப்பகைமைகளுக்கு எதிரான போராட்டம் .
உலகமே வியந்த நம் நாடு இப்போது எப்படி எந்நிலையில் காணப்படுகின்றது?
நமது கலை கலாச்சாரத்தை உலகத்தவர்கள் விரும்பும் போது நாம் அதை புறக்கணிப்பது சரியா ?
ஒரு சிலரின் சுய இலாபங்கள் / பிரச்சினைகள் இன மத அரசியல் சாயம் பூசி சமூக பிரச்சனையாக மாற்றும்போது அதை பின்பற்றும் நமது சிந்தனையில் சுதந்திரமும் தெளிவும் வேண்டுமல்லவா...?
இந்த நாட்டில் இன ஒருமைப்பாட்டை விரும்பியவர்கள் , நமது நாட்டின் வளர்ச்சியில் அதிக பங்கெடுத்தவர்களாகவும், மற்றவர்களின் மனங்களை அதிகம் வென்றவர்களாகவும்,
மற்றவர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிநடப்பவர்களாகவும், அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஈடுபடுபவர்களாகவும் இருந்தார்கள்.
இவ்வாறான விடயங்களை நாமும் பின்பற்றுவதன் மூலம் இலங்கையை ஒரு செல்வாக்கு மிகுந்த நாடாக மாற்ற முடியும்.
இவற்றை புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகள் சிந்தித்து சக வாழ்வுக்கான வேலைத் திட்டங்களை தேசிய மட்டத்திலும் , ஊர்மட்டத்திலும் நடாத்த முன்வரவேண்டும்.
உண்மையான சுதந்திரத்தின் பலாபலன்களை அடைந்து, ஆசியாவின் அதிசயமாக  புதிய இந்தியாவாக  மாற்ற அனைவரும் இன்றைய நாளில் உறுதி கொள்வோம்.

Saturday, 10 August 2019

சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..


1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.
  
2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.
5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.
6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.
7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.
8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.
9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.
12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய்ஆகியவற்றைச்சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்சேர்த்து கொள்ளக்கூடாது.
14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,அதிக காரம், அதிக புளிப்பு,கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
10. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சேற்றுப் புண்:
இது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும். இது ஒரு வகையான பங்கஸ் தொற்று.
*அரைக்கப்பட்ட மருதாணி இலையை தொடர்ந்து இந்த இடங்களில் பூசி வர இது குறையும்.
*அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூளை இட்டு வர, இது குறையும்.
*அல்லது, சிறிதளவு வேப்பெண்ணெயை காய்ச்சி சேற்று புண்ணில் தடவி வர சேற்று புண் குறையும்.
* ஊமத்தன் இலைச்சாறில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலம், குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
*அல்லது, இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் இந்த கிரீம்களை வாங்கியும் தடவலாம். Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்....
ஏல‌க்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சனை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.
சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

Friday, 9 August 2019

பெண் குழந்தைகளின் பெற்றோரே...

பெண் குழந்தைகளின் பெற்றோரே...
1) உங்கள் பெண் குழந்தைகளைக் கண்காணியுங்கள். கண்காணிப்பு என்றால் திருடனைப் போலீஸ் பெண் குழந்தைகளின் பெற்றோரே கண்காணிப்பது போல் அல்ல! ஒரு தாய் விலங்கு தன் குட்டியை மற்றவர்களிடமிருந்து கண்காணிக்குமே அப்படி!
2) உங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் போது சீர் - செனத்தி- சடங்கு செய்வதில் காட்டும் அக்கறையை விட, அவளை ஒரு நல்ல டாக்டரிடம் 'அப்பாயிண்ட்மெண்ட்' பெற்று, பருவமடைதல் என்ற இந்நிலையின் முக்கியத்துவத்தை விளக்கச் செய்வதில் காட்டுங்கள்.
Related image3) காமம் என்பது எப்படி எல்லா உயிரினங்களுக்கும் இயல்பானது - அது வம்ச விருத்திக்கான கருவியாக மானுட இனத்துக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் எப்படி ஒரு தூண்டு கோலாக உள்ளது என்பதைப் பொறுமையாக விளக்குங்கள்.
4) எப்படிப் படிப்பதற்கு ஒரு வயது, உழைப்பதற்கு ஒரு வயது, பொருள் ஈட்டுவதற்கு ஒரு வயது, ஓய்வெடுக்க ஒரு வயது உள்ளதோ... அதே போல் காமம் துய்க்கவும் ஒரு வயது உள்ளது என்பதைப் புரிய வையுங்கள். மேற்கண்ட வயதுகளில் ஒன்று மாறி அமைந்தாலும் எப்படி வாழ்க்கை தடம் புரளுமோ அப்படியே காமம் துய்க்கும் வயது மாறியமைந்தாலும் வாழ்க்கை சருகாகிவிடும் என்பதை விவாதியுங்கள்.
5) இப்போது வரும் படங்கள் - ஒரு சாதாரண ஆட்டோ மெகானிக்கை, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண் காதலிப்பது, தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற 'நீதி போதனை' படங்கள், 'என்னை மாதிரிப் பசங்களைப் பார்த்தால் பிடிக்காது- பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்'-... என்னும் கழிசடைக் கதாநாயகன்கள் நடித்த படங்களை வீட்டில் முற்றிலுமாகத் தவிருங்கள்!
6) உடலியல் சார்ந்த வாழ்வியல் விளக்கங்களை ஒரு தகப்பனை விடத் தாய்தான் அணுக்கமாக நெருங்கி ஒரு பெண்ணிடம் பேச முடியும்.
7) உங்கள் பெண்ணின் நண்பிகளை கவனியுங்கள். ஒரு சில கழிசாடைப் பெண்களிடம் பழக விடாதீர்கள். ("எங்க அண்ணன் ரொம்ப நல்லா கிடார் வாசிப்பாண்டி- என் கசின் டான்ஸ் சூப்பரா ஆடுவாண்டி"). பெரும்பாலும் இப்படிப்பட்ட கழிசாடைப் பெண்கள்தான் தங்கள் அண்ணன்/ கசின்/ ஏதோ ஒரு பொறுக்கிக்காகத் தன் தோழியைக் 'கோர்த்து விடும்' வேலையைப் பார்க்கும்.
8 - 'ஆண்-பெண் சகஜ பாவம், இணக்கமான தோழமை, கள்ளமற்ற ஆண் - பெண் நட்பு'-... இவையெல்லாம் Super Ideals. ஆனால் பேப்பரில் மட்டுமே எழுதி ரசிக்க முடியும். இன்றைய சினிமா வளர்த்து விட்டுள்ள ரசனையில் ஒரு ஆண், பெண்ணின் மீது காட்டும் நட்பு , தோழமை எல்லாம் அவளுடைய கழுத்துக்குக் கீழேதான் பதிகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மரியாதையான நட்பு, கௌரவமான மனித அணுக்கம் இதற்கெல்லாம் காலமும் வயதும் நிரம்ப உள்ளது என்பதைப் புரிய வையுங்கள் உங்கள் பெண்ணுக்கு!
9) முதலில் நீங்கள் டிவி சீரியல்கள், ஆபாச அசைவுகள் கொண்ட திரை நடனங்கள், வக்கிரமான ரசனை கொண்ட சீரியல்கள் இவற்றை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
10) புத்தகம் படிப்பதில், அதிலும் காமம் என்ற உணர்வை மிகப் பக்குவமாக எடுத்துக் கூறும் புத்தக ஆசிரியர்களை பெண்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! காமம் என்பது மிகப் பெரும் சக்தி - அதை அடக்கி வைப்பதை விட மடை மாற்றம் செய்து நடனமாக, ஓவியமாக, இசையாக... ஒரு பேராற்றலாக வெளிக் கொணரப் பழக்குங்கள்.
11) 'காமமும் பசியும் மனிதனைச் சமைக்கும் நெருப்புகள் - அவற்றால் பக்குவப்படும் அதே நேரத்தில் கருகிவிடாமலும் பார்த்துக் கொள்வதில்தான் வாழ்க்கையின் போராட்டம் அடங்கி உள்ளது'- என்ற அப்துல் ரகுமான்!
விதி வசத்தால் கல்லூரி வாசலில் மழையில் காத்திருந்த போது முன் பின் தெரியாதவனோடு அவன் 'லிஃப்ட்' கொடுத்ததால் காரில் ஏறி அவனால் சீரழிக்கப்பட்ட அவளைக் காட்டிய 'அக்னிப் பிரவேசம்'- பிறகு அவளுக்குத் தலையில் தண்ணீர் ஊற்றி அவளின் தாய் தரும் உபதேசம் (ஜெயகாந்தன்),
மற்றும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'- 'மரப்பசு'- 'மோகமுள்'-... போன்று காமத்தை வெவ்வேறு பரிமாணங்களில் நுட்பமாகக் கையாண்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்துங்கள்!
12) காமம் அருவெறுக்கத் தக்க சாக்கடையும் அல்ல - அதற்காக எங்கு கிடைத்தாலும் அள்ளிப் பூசிக் கொள்ளும் சந்தனமும் அல்ல! அது உரிய நேரத்தில் உறையிலிருந்து எடுக்கப்பட வேண்டிய வாள் என்பதைப் புரிய வையுங்கள்.
13) காமம் - காதல் - குடும்பவியல் இவைகளை வெளிப்படையாக உங்கள் மகளிடம் பேசத் தயங்காதீர்கள். ("ஐயோ அவளுக்கு ஒண்ணுமே தெரியாது - Marriage ஆகிற வரைக்கும் So Innocent!) அதெல்லாம் உங்கள் தலைமுறையோடு காலாவதி ஆகி விட்ட வசனம்! இப்போது கூகிளும், ஃபேஸ்புக்கும் வீடியோக்களால் மலிந்து கிடக்கிறது.
14) இப்போது நீங்கள் காமத்தைப் பற்றி எடுத்து உரைக்கத் தவறிவிட்டால் எவனோ ஒரு ஜீன்ஸ் பேன்ட் - காதில் ஒற்றை வளையம் போட்ட கழிசடை அவளுக்குக் காமத்தை உரைத்து எடுப்பான்.
15) SO, NEVER HESITATE TO DISCUSS LOVE/LUST/LIFE WITH YOUR GROWN UP DAUGHTERS. PARENTAL DISCUSSION WILL ENRICH THEM. BOYFRIEND's DISCUSSION WILL SPOIL THEM!

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Wednesday, 7 August 2019

ஜம்மு-காஷ்மீர் பற்றி அவசியம் படியுங்கள் ! தெளியுங்கள் ! நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் !!!


Image may contain: one or more people, table and indoor

1952 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்துடன், இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைந்த அந்த மகத்தான தருணத்தில், தில்லியில், பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரத்து சிங்கம் எனப் போற்றப்படும் ஷேக் அப்துல்லா. (கோப்பு படம்)
மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படாத சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் வழங்கப்பட்டது; அதை நீக்கியது சரியானது தான் என பாஜகவினரும் அவர்களது அடிவருடிகளும், தினமலர் போன்ற ஊதுகுழல் ஏடுகளும், அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளும் பேசுகின்றன. ஆதரித்துள்ளன. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலுக்கு சிறப்பு அந்தஸ்தும், அதை வழங்கும் 370வது பிரிவும் தான் காரணம் என்றும், அதை நீக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் கண்மூடித்தனமாக இவர்கள் வாதிடுகின்றார்கள். காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியை அறியாதவர்கள் பாஜகவின் வாதம் சரிதானே என்று கூட எண்ணக்கூடும்.தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது.
நாடு விடுதலைபெற்ற போது...
இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோ டும்,49 சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன.
1.ஜுனாகட் சமஸ்தானம்
2.ஹைதராபாத் சமஸ்தானம்
3.காஷ்மீர் சமஸ்தானம்
ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை. ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணுவத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார். இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13ல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து,நிஜாமின் இராணு வத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 - ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் ஹைதராபாத் நிஜாம் கையெழுத்திட்டார். ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும் பான்மையாக இந்துமக்கள் வசிப்பவையாக இருந்தன. ஆனால் மன்னர்கள் முஸ்லிம்களாக இருந்தனர்.
காஷ்மீரின் வரலாறு என்ன?
காஷ்மீர் சமஸ்தானத்தில் 90 சதவீதம் முஸ்லிம் மக்கள். ஆனால் மன்னன் இந்து. டோக்ராவம்சத்தை சேர்ந்தவர் ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவல மானது. அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் ராணுவத்தில் அவரது சதி வேலைகளுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப்பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணை போனார். பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர் கள், இழப்பீட்டுத்தொகையாக சீக்கியர்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு விட்டுத்தர வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர். 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்த தால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்ட்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார். ஹரிசிங் அதற்கு சம்மதிக்கவில்லை. மறுபக்கம், ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங்கோலாட்சிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சி
1924- முதலே தீவிரமடைந்திருந்த மக்கள் போராட்ட த்தில்,1931ல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939ல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளை யருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடிய நிலையில், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் என்ற அமைப்பு செயல்பட்டது. பிரஜாபரிஷத் என்பது வேறு எதுவுமல்ல; ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் அந்தப் பெயரில்தான் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் இடையே ஆயுதப்போரை மூட்டி விட்டார்கள். வெள்ளையர்களால் தூண்டிவிடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறோம் என்ற கோஷத்துடன் நுழைந்த அவர்கள் முசாபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர். அக்டோபர் 26ல் பட்டாணியர்கள் படை காஷ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கியது. அதை எதிர்கொள்வதற்கு பதிலாக மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
மாறாக, ஸ்ரீநகரை பட்டாணியர் படை கைப்பற்றாமல் தடுக்க காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சித் தலைமையும் இந்திய இராணுவ உதவியை நாடினர். படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் எனக் கூறினார். இந்த நெருக்கடிக்குப்பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்ப மிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார். இந்திய அரசு அக்டோபர் 27 அன்று ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப்பிரிவு படையுடன், பாகிஸ்தானின் ராணுவமும் நுழைந்து, இந்திய ராணுவத்துடன் மோதியது. இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணு வத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவன்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவன். ஊடுருவல் படைகளை காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஷ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா. மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி “ஆசாத்காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம். இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத் காஷ்மீர்தான்.
பிரிட்டிஷ் - அமெரிக்க சூழ்ச்சிகள்
காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டது. ஐ.நா.சபை கமிஷன் ஒன்றை அமைத்தது. அமெரிக்காவும் - இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948ல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக்கட்சியும் நிராகரித்தன. இந்தியா, ஐ.நா. மூலமாக ஏவப்படும் அமெரிக்க சதியை நிராகரித்தபின்பு, 1950 மார்ச் 14ல் ஐ.நா பாது காப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;
1.காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக்கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
2.காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும். இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனைகளையும் இந்தியா ஒட்டுமொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.
ஷேக் அப்துல்லா உறுதி
காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்தான். ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல்காரணம் ஷேக் அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக்கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது: “இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கைகளும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கைகளுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்”-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 1948 அக்டோபர் - 16). இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக் அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரண்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆகவும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த அன்றைய பிரதமர் நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார்.
370வது பிரிவு ஏன் வந்தது?
ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக்கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக்கூட்டம் 1951 நவம்பர் 5 ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை உருவாக்குவது.
2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
3. நிலச்சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது. இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் - நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952ல் நேரு – ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.
காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு – ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:
1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங்களைப்போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்களின் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம்தான் தீர்மானிக்கும்.
3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்கமுடியாது.இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவு
370வது பிரிவின் படுகொலை
இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர் மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே, இன்றைக்கு மோடி அரசால் ரத்து செய்யப் பட்டுள்ள 370 வது ஷரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப்பட்டது.
1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
2.ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளை காஷ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958ல் கொண்டுவரப்பட்டது.
3. மாநில அரசைக் கலைக்கும் 356,357 வது பிரிவுகள் அங்கும் பொருந்தும் என்ற நிலை 1964ல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.படிப்படியாக அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பின்னணியில்தான், 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. மேற்படி பிரிவு 370ன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுவிட்டது.
370வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்தது மூன்று விசயங்கள்தான்.
1. காஷ்மீருக்கான அரசியல் சட்ட விதிகள்.
2. காஷ்மீருக்கான தனிக்கொடி
3. வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை.
மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கூப்பாடு போட்டது காவிக்கூட்டம். இந்தியாவுடன் இணையும்போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித் தவிக்கிறது. எனவே காஷ்மீர் மக்களின் பக்கம் நிற்க வேண்டியது ஒட்டு மொத்த இந்திய மக்களின் கடமை.
நன்றி : சூர்யா சேவியர்,தீக்கதிர் , 6 /08/2019.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.