Tuesday, 31 December 2019

NPR மூலம் NRC யை நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டம் பற்றி தயவு செய்து முழுமையாக படியுங்கள்!! பரப்புங்கள்!! விழித்தால் பிழைப்போம்..


NPR ஆல் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அடிமைகளை விட்டு அறிக்கை விடுகிறார்கள்.NCR நாடு முழுதும் செயல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை-வரும் ஏப்ரலில் NPR கணக்கெடுப்பு நாடுமுழுவதும் நடைபெறும் அமித்ஷா

Image result for national population register nprஅறிக்கை விடுகிறார்,
NPR கணக்கெடுப்பிற்கு ஆதரவு கிடையாது கேரளாமேற்குவங்கம்மஹாராஷ்ட்ரா
NPR 2010 ல் காங்ரஸ் ஆட்சியில் எடுக்கப் பட்டது தான். தமிழ்நாட்டில் ஏப்ரலில் துவக்கம் எடப்பாடிஅறிக்கை விடுகிறார்.

என்ன நடக்கிறது நாட்டில் ?
ஏன் இதை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஆபத்து என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கை முதல் உள்ளூர் எதிர்கட்சி தலைவர்கள் வரை விமர்சனம் செய்கின்றனர் ?
அரசின் NCR பற்றி நாம் அறிவோம்.
  • இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர் NCR கேம்பில் தங்கள் பெற்றோர் குறித்த எந்த ஆவணத்தையும் சமர்பிக்க தேவையில்லை.
  • 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த சான்று மட்டும் போதும்.

முஸ்லிம்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் சொத்து ஆவணங்கள் அவர்கள் வாழ்ந்த விலாசத்திற்கான ஆவணம் என ஆறுவகையான கிடைக்கபெறாத ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

இதில் ஆவணம் சமர்பிக்க தேவையில்லாத இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர்களுக்கு பிரச்சனை இல்லை.முஸ்லிம்கள் மட்டும் பெற்றோர் பிறந்த சான்றிதழை காட்ட வேண்டுமாம்.

உதாரணமாக 1976 ல் பிறந்த எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது.எனது பெற்றோருக்கு எங்கே இருக்கும் ?
எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் எனது பிள்ளைகள் தங்கள் பிறப்பு சான்றிதழை சமர்பித்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது..
(1980 க்கு முன் பிறந்த எவருக்கும் பிறப்பு சான்றிதழ் என்ற திட்டமே இந்தியாவில் கிடையாது )
இதனடிப்படையில் அஸ்ஸாமில் 40 லட்சம் பேர் குடியுரிமை இழந்து நிற்கும் அவலத்தை அறிவோம்.
நாடுமுழுவதும் ஏற்பட்ட பிரளயத்தால் இப்போது NCR கிடையாது ..வெறும் NPR மட்டும் தான் என்று கூவாத குறையாக சொல்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப் படும் குடிமக்கள் பதிவேடு எனப்படும்
காங்கிரஸ் காலத்திய NPR என்பது என்ன ?

நாட்டில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் எவ்வளவு பேர் என்பதற்கான கணக்கீடாகும்.

மாநில அரசின் அதிகாரிகள் வீடு வீடாக சென்று எடுக்கும் கணக்கில் கீழ்கண்டவைகள் கோரப்படும்.
1.நபரின் பெயர்
2.வீட்டுத் தலைவருடனான உறவு
3.தந்தையின் பெயர்
4.அம்மாவின் பெயர்
5.துணையின் பெயர் (திருமணமானால்)
6.பாலினம்
6.பிறந்த தேதி
7.திருமண நிலை
8.பிறந்த இடம்
9.வழக்கமான வசிப்பிடத்தின் முகவரி 10.தற்போதைய முகவரி
11.தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம்
12.நிரந்தர குடியிருப்பு முகவரி
13.தொழில் / செயல்பாடு
14.கல்வி தகுதி
15.தேசியம் (அறிவிக்கப்பட்டபடி)
இதை தான் நாம் முன்பு சமர்பித்தோம்.இது கடந்த காலங்களில் தொழில் நுட்ப வசதி இல்லாததால் பத்து ஆணடுகளுக்கு ஒரு முறை கோரப் பட்டது. 2010;ல் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப் பட்டு விட்டது.இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கணக்கு பதிவேடுகளும் உள்ளதால் கணக்கீடு அவசியமே இல்லை.
எனினும் கணக்கீடு செய்வதாக வைத்து கொண்டாலும் வீடு தேடி வருபவர்களிடம் மேற்கூறிய விபரங்களை சமர்பித்தால் போதும்ஃ அது தான் NPR .இதில் எந்த பாதிப்பும் இல்லை..
ஆனால் NPR மட்டும் தான் என்று கொல்லைபுறமாக NRC யை இறக்கிவிடுகிறது பாசிச அரசு.
15 விபரங்கள் கோரப்பட்ட NPR ல் கூடுதலாக 6 NCR கோரிக்கையும் இணைக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சுருங்க கூறினால் மாநில அரசு அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வந்து NPR கணக்கை எடுத்து கூடுதலாக 6 NRC விபரங்களையும் கேட்பார்கள்.
உங்கள் தந்தை தாய் பிறந்த தேதிகள்
பிறந்த இடத்திற்காய ஆவணங்கள்
வாழ்ந்த முகவரிக்கான ஆவணங்கள் என இடம்பெரும் கட்டங்களில் NO என்று நிரப்பி விட்டு சென்று விடுவார்கள் .
அதை மத்திய அரசிடம் சமர்பித்த பின் தான் NCR தொடங்கும்.மாவட்ட வாரியாக
தனி NCR கேம்ப் போடப்படும் .
NO என்று நிரப்பப் பட்ட படிவங்கள் அனைத்தும் தனியாக பிரிக்கப் பட்டு சந்தேககுடிகள் பட்டியல் தயாராகும். உங்களுக்கு ஆவணங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு வரும்.
இதில் இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கிய மக்களுக்கு பெற்றோர் பற்றிய ஆவணங்கள் தேவையில்லை. குடிமக்களாக சேர்க்கப் படுவர்.(இலங்கை அகதிகள் தவிர்த்து )
மீதமுள்ள முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்களாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில் பெற்றோர் பிறப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குடியுரிமை ரத்தாகி சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு முகாம்களில் முடங்க வேண்டும்.
எனவே NPR ஆல் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்பவர்களின் முகத்தில் காறி துப்பலாம்...
இதை ஏப்ரலுக்கு தள்ளி போட்டு விட்டதால் போராட்ட சூடு ஆறி விடும்.
எனவே  அனைவரும்  ஒண்றினைந்து போராட்டங்களை நிறுத்தாமல் NPR க்கு எதிராக மாநில அரசை எதிர்த்து போராட வேண்டும்.

2010 வரைவுபடி 15 படிவகோரல்களை மட்டும் அனுமதிக்க மாநில அரசுகளை நெருக்க வேண்டும் .

No comments:

Post a Comment